அன்றொரு நாள்: ஏப்ரல் 19
விர்ரென...!
அமெரிக்காவுக்கும், ஸோவியத் ரஷ்யாவுக்கும் கடும் போட்டி. செயற்கைக்கோள் விண்கலம் (சாட்டிலைட்) முதலில் செலுத்தி, ஜன்மசாபல்யம் பெறப்போவது யாரு என்று. 1957ல் முதலில் விர்ரெனெ... பறந்து ரஷ்யா அந்த புகழை வாங்கிக்கொண்டது. அக்காலம், விடுதலை பெற்று பத்து வருடங்கள் கூட ஆகாத நிலையில், இந்தியா பின் தங்கிய நாடாகத்தான் இருந்தது. ஏப்ரல் 19, 1975 அன்று, அருமை நண்பர் ரஷ்யாவின் அரவணைப்பில், 358 கிலோ எடையுள்ள ‘ஆர்யபட்டா’ என்ற செயற்கைக்கோளை, ரஷ்யாவிலிருந்து, விர்ரென ஏவி விட்டு, தன்னுடைய கீர்த்தியை கொடி நாட்டியது. அக்காலம், இதையெல்லாம் கேலி செய்த ஈஸி-சேர் (என்னது?) அறிவுஜீவிகளை தெரியும். அந்த ‘கன்னி முயற்சி’ (தனித்தமிழ் சரியா?)யில் மூன்று விஞ்ஞான ஆய்வுகள் திட்டமிடப்பட்டன. நமது விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அதிகரித்தனர். ஆனா! பாருங்கோ! மின் வெட்டு/ மின் தட்டுப்பாடு வந்து தொந்தரவு செய்ய, மூன்று ஆய்வும் அரோஹரா. மற்றபடி, ஆடியோ ஓட்டம், சீதோஷ்ண விவர விவரணை, இரண்டும், நடந்தன, பர்த்தியாக. ஶ்ரீஹரிக்கோட்டாவில் ஒரு தளம் அமைத்தது, அப்போது தான். ஒரு வாரம் பொறுக்கக்கூடாதோ? பிறந்த நாள் கொண்டாடி இருக்கலாம். ஏப்ரல் 11, 1981 அன்று இது காலாவதியாயிற்று. வீடியோ இணைக்கப்பட்டுளது. கண்டு களிக்கவும்.
இன்னம்பூரான்
19 04 2012
உசாத்துணை
*
|
No comments:
Post a Comment