இன்னம்பூரான்
நெட்டில் வந்த பிட்டு
"கருணைக்கிழங்கிலே நந்தலாலா
உந்தன் கருணையே கண்டேன் நந்தலாலா
ரசம் பிரம்மன் என்று பறை சாத்துகிறது வேதம்
ரசத்திலே உந்தன் சுவையே கண்டேன் நந்தலாலா
வெற்றிலையிலே உலகம் வெறும் மாயை
என்று நீ கீதையில் போதித்த தத்துவத்தையே
நன்கு உணர்ந்து கொண்டேன் நந்தலாலா
கத்தரிக்காயிலே பற்றை கத்தரிக்க வேண்டும்
என்ற தத்துவத்தையே கண்டேன் நந்தலாலா
தயிரிலே உந்தன் மன வெண்மையே கண்டேன் நந்தலாலா
கறியிலே உந்தன் உடலைக்காக்கும் ஆர்வத்தையே
நன்கு கண்டேன் நந்தலாலா
பாயசத்திலே உந்தன் இனிமையே கண்டேன் நந்தலாலா
சமையல் அறையே உந்தன் கோவில்
என்றே காண்கிறேன் நந்தலாலா,
பிறர்க்கு பரிமாறும் காரியம்
உனக்கு நான் செய்யும் சேவை என்றே
நான் என்றும் உணர்ந்தே உன்னை
அனவரதம் வழிபடுகிறேன் நந்தலாலா
உன் பொற்பாதங்களே எனக்கு
என்றும் தஞ்சம் தர வேண்டும்
முருகா சரணம், முருகா சரணம்.
----S.Balasubramanian
ARajagopalan
No comments:
Post a Comment