தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும், ஓய்வூதியமும் : 9
'மெளனம் சர்வார்த்த சாதகம்’ என்ற ஸுபாஷிதத்திற்கேற்ப, ஸ்திதபிரதிஞ்னன் ஆகிய யான், உங்கள் எல்லாரின் அனுமதியுடன், ஆர்வத்துடன், இச்சையுடன், ஈகையுடன், உரிமையுடன், ஊக்கத்துடன், எண்ணம் பிறழாமல்,ஏற்புடைய வகையில், ஒரு ஓட்டமும் நடையுமான நிகழ்வை உள்ளது உள்ளபடி பகிர்ந்த்து கொள்கிறேன்.
டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் ஒரு சான்றோன். புகழ் வாய்ந்த, மனிதநேயம் மிக்க மருத்துவர். என் தந்தைக்காக, அவரிடம் சிகிச்சைக்குப்போனபோது அவர் எனக்கு கொடுத்த பணி, ' ‘ஜெனெரல் ஆஸ்பத்திரியில் ஒரு ஓய்வு பெற்ற எஞ்சினீயர் நினைவிழந்து இருக்கிறார். அவரது ஆயுள் என்றும் முடியலாம். கொஞ்சம் நினைவு வந்தால், பென்ஷன் வந்ததா? என்று கேட்டுவிட்டு, இல்லையென்றால், ஆயாசத்துடன், மறுபடியும் கோமா நிலை. நீ அவருக்கு பென்ஷன் வாங்கிக்கொடு'.
சரி என்று சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட இலாக்காவில் விசாரித்தால், பொதுப்பணித்துறையிலிருந்து ஒரு வருடமாக, அவரது பென்ஷன் ஆவணங்கள் வரவில்லை. அது ஆமையை விட மெதுவாக பயணிக்கும் துறை. ஓட்டமும், நடையுமாக, ஏ.ஜீ.யிடம் ஓடினேன். இதில் உனக்கு என்ன இன்டெரெஸ்ட் என்று கேட்ட அவர், விவரம் அறிந்தவுடன், மின்னல் வேகத்தில் இயங்கினார்.
பென்ஷன் தாமதம் ஆனால், தோரயமாக, ஒரு பென்ஷன் தற்காலிகமாகக் கொடுக்க ஏ.ஜீ.க்கு மட்டும் அதிகாரம் உண்டு. அதை 'அரிது அரிது' என பயன் படுத்தும்போது, அதிகப்படி 90% கொடுக்கலாம். நானோ 100%கொடுக்கவேண்டும் என்று தலைகீழாக நின்றேன். ஏனென்றால், அந்த எஞ்சினீயருக்கு எது மறந்தாலும்,பென்ஷன் தொகை மறக்காது. அதற்கும் தயாளன் ஆகிய ஏ.ஜீ. ஒத்துக்கொண்டார். ஆணையும் பிறப்பித்தார். இருந்தும் சிக்கல். பென்ஷனர் கையொப்பம் வேணுமே, வங்கிக்கணக்கு திறந்து, அதில் பென்ஷனைப் போட. மத்றாஸ்ஸில் அதை அமல் படுத்த பே & அகவுண்ட்ஸ் ஆஃபீஸ் என்ற மாகாண அரசின் ஆஃபீஸை அணுகவேன்டும்.எனது வேண்டுகோளை மதித்து, அங்குள்ள அதிகாரி, டி.பார்த்தசாரதி அவர்கள், ஆஸ்பத்திரிக்குப்போய்,பென்ஷனர் கையொப்பம் இடமுடியாது என்று சான்று அளித்து, அவரின் மனைவி பேரில் வரவு வைக்க ஏற்பாடு செய்து விட்டு வந்தார்.
அந்த எஞ்சினீயரருக்கு நினைவு வந்தபோது இந்த நற்செய்தி கூறப்பட்டது. அவரது முகம் மலர்ந்தது. சில நாட்களில், அவர் இறந்து விட்டார்.
படிப்பினைகள்;
1. நாங்கள் பொதுப்பணித்துறையை அணுகவில்லை; அது கல்மனது என்று தெரியும்.
2. கறாராக விதிகளை கடைப்பிடித்திருந்தால், தவறு இல்லை; ம்கா மட்டம் என்பதை தவிர.
3. எல்லாரும், ஒரு மைல் அதிகப்படி நடந்து உதவினார்கள். மனிதநேயம் அப்படி.
4.எங்களில் ஒருவரும் நல்ல பெயர் தேடவில்லை. இன்று தான் நிகழ்வு வெளி வருகிறது.
மரம் வைச்சவன் தண்ணீர் ஊத்துவான் என்பது எங்கள் காலத்து வசனம்.
ReplyDeleteஅந்த தண்ணீரை யார் கொண்டு வந்து ஊத்தணும் என்பதும்
அந்த மரம் வைச்சவன் தீர்மானிச்சு இருக்கற விஷயம்.
இந்த காலத்திலே இதே போல் ஒன்று நடக்க....
சுத்தமா சான்ஸே இல்லை.
ரத்னவேல் மாதிரி ஒரு வைத்தியரும் இல்லை.
இன்னம்பூர் மாதிரி ஒரு அன்புள்ளமும் இல்லை.
சுப்பு தாத்தா.
மிக்க நன்றி, ஐயா. நான் ஒன்று சொல்வேன். அவர் மாதிரியான தற்கால டாக்டர் ஒருவரை எனக்குத் தெரியும். அன்புள்ளத்தின் அடிப்படை நேயம். மனித நேயமட்டுமல்ல. சிருஷ்டியுடன் நேசம். அதை இன்று கூட பார்க்கிறேன். நாம் தான் வருங்கால தலைமுறைகளை வழி நடத்த வேண்டும். நான் ஒரு சிறு துளி. ஒன்று பார்த்தீர்களா. டாக்டர் -நான் - ஏஜி - சக ஊழியர் எல்லாருமே நல்லுள்ளம்.
ReplyDeleteஇன்னம்பூரான்