MONDAY APRIL 15TH 2013
MONDAY APRIL 15TH 201Monday April 15, 201Monday April 15th 2013
பசி தீர உணவும், தாகம் அடங்க சுத்த நீரும், உடுத்த ஆடையும் பெறவேண்டி ஊதியம் நாடி, அதற்காக பற்பல ஊழியம் செய்து, அன்றாட வாழ்க்கையை ஓட்டுகிறோம். சிந்திக்க நேரமில்லை என்கிறோம். அறுசுவை நாடி, தேறல் சுவைக்க, ஆடம்பரமும், அலங்காரமும் அழைக்க, ஊதியம் கூட வேண்டும் என்று, கடுமையாக உழைக்கிறோம்; சிலர் வாய்மை என்ற கற்பையும் இழக்கிறார்கள். சிந்திப்பதாவது! அவசர உணவும், அஜீர்ணமும், தேறலின் கிறக்கமும், ஆடை உடை பாவனைகளும், இயல்பான வாழ்க்கையை கூட பாதித்து விடுகின்றன. இப்படி அடுக்கிக்கொண்டே போய், அப்ரஹாம் மாஸ்லோவின், கார்ள் ரோஜர்ஸ்ஸின் நான்காவது உளவியல் துறைக்கும் போகலாம், தக்கதொரு தருணம் கிட்டினால். வணக்கத்துக்குரிய தலை லாமா அவர்கள் சொன்ன மாதிரி, நாம் திரவியம் தேடுவதில் உடல் நலம் பேணுவதில்லை; பின்னர் நோயற்ற வாழ்வு நாடி, சேகரித்த திரவியத்தை இழக்கிறோம். ‘வாலு போச்சு! கத்தி வரலை!’
இன்று பேசப்படுவது தத்துவத்தின் ஆணி வேர்.
“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
ஒலி, சொல், பொருள், கருத்து, கற்பனை வளம், விசாரணை, விமர்சனம், மீள்பார்வை, சிந்தனைகள், அவற்றை சிலாகிப்பது, நிந்திப்பது, அலசி தீர்வுகள் காண்பது போன்ற மேதாவிலாசம், மனித இனத்துக்கு வரப்பிரசாதம். விலங்கினம் ஒரு படி கீழ் தான். மற்றபடி, எல்லா ஜீவிதங்களும் ஒன்று தான். மனித இனத்தில், பெரும்பாலோரிடம் இந்த மேதாவிலாசம் புலப்படுவது இல்லை என்பது தான் வரலாறு கூறும் செய்தி. மனித இனம் தோன்றியபின் அவதரித்தக் கோடானுகோடி மக்களில், தன் சுயசிந்தனையால் உலகின் போக்கை மாற்றியவர்கள் மிகக்குறைவு. இத்தனைக்கும், ஆதி மனிதனின் இயற்கையின் ஊடே, இடியிலும், மின்னலிலும், அடைமழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கரும்பின் இனிப்பிலும், அரவத்தின் நச்சிலும், வேட்டையிலும், வேளாண்மையிலும் கண்டது வியப்பும், திகைப்பும் தான்.
சற்றே நிதானித்து அவதானம் செய்தோமானால், அந்த வியப்பும், திகைப்பும் குறைய, குறைய, சிந்தனாசக்தியையும், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக, நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது. அதுவும், அவசரயுகமான கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரும்பாலோர் சிந்தனையில் ஆழ்வதில்லை என்றும், கல்வித்துறை ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறதோ!’ என்ற வியாகூலமும் எழுகிறது.
ஆங்கிலத்தில் ஃபிலாஸஃபி என்பதை, இங்குத் தத்துவம் என்ற சொல் குறிக்கிறது. தத்துவம் பன்முகமுடையது. வாழ்வாதாரம் பொருட்டு இயங்கும் எல்லா துறைகளிலும் அதனுடைய பாவும், இழையும் ஓடும். அரசியல் என்று எடுத்துக்கொண்டால், ‘சுதந்திரம்’, ‘சமுதாய நீதி’, ‘சமத்துவம்’, ‘உரிமை’, ‘மக்களாட்சி’ வகையறா சொற்களும், அவற்றின் பொருட்களும், கருத்துக்களும் சிந்தனைக்கும், கருத்துபரிமாற்றத்துக்கும் உகந்தவையே. சர்ச்சைகளும், விவாதங்களும், ஏன்? விதண்டாவாதங்களும் அடுத்த கட்டங்கள். அதே மாதிரி, சட்டமும், நீதியும், சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டால், ‘தர்மம்’, ‘நியாயம்’, ‘குற்றத்தின் பின்?’, ‘சட்டம்’, ‘சட்ட நிர்வாகம்’ என்றெல்லாம் கேள்விகள் எழும். மருத்துவம் என்று பார்த்தோமானால், ‘எது பூரண ஆரோக்கியம்?’ என்ற வினாவே சிக்கலானது. டாக்டர்கள் ‘நோய் தடுப்பு/நிவாரணம்/ பக்க விளைவுகள்/ செலவு/ சமுதாய ஒத்துழைப்பு/ ஆய்வு/ பல மருத்துவ சாத்திரங்கள் ஆகியவற்றை பற்றி அன்றாட தீர்மானங்கள் எடுக்கும்போது, தார்மீக சிந்தனைகளும், அறம் சார்ந்த சிக்கல்களும் குறுக்கிடுவது சகஜம். எந்த அளவுக்கு மருத்துவ உலகம் அவற்றை விளக்கும் தத்துவ ரீதியில் இயங்குகிறார்கள் என்பதே, பெரிய கேள்விக்குறி.
வித்யாதானம் என்று சான்றோர்கள் சொல்லிவிட்டார்களே தவிர, கல்வித்துறையை போன்ற சிக்கலான துறையே இல்லை எனலாம். ஒரு பக்கம் பணம் விளையாடுகிறது. மற்றொரு பக்கம் ‘ஏட்டுச்சுரைக்காய் கவைக்கு உதவாமல்’ வியர்த்தமாகி விடுகிறது. அடிப்படை கல்வி உரிமை, விடுதலை பெற்ற சுதந்திர இந்தியா மணிவிழா கண்டபின்பும், பகற்கனவாயிற்று. மேற்படிப்புத்துறைகளில் உன்னதமும் உண்டு; மட்டரகமும் உண்டு. இன்றைய காலகட்டத்தில், உலகளாவிய முறையில் தேடினால், கல்வி சார்ந்த சிந்தனைகளும், தத்துவ விசாரணைகளும் நன்முத்துக்குவியல்களை போல நம் முன்னே கொட்டி கிடக்கின்றன. நாம் ஏன் அவற்றின் பயனை, இலவசமாகக் கிடைக்கும் பயனை மக்களுக்கு அளிக்க முடியவில்லை?
இவ்வாறாக, நாம் எந்தத் துறையின் பக்கம் சென்றாலும், அவற்றின் தத்துவ ஆணி வேர்களும், விழுதுகளும் நம்மை கூவி அழைக்கின்றன. தத்துவத்தின் இலக்கணம் சுளுவானது. அடிப்படை கருத்துக்கள், கோட்பாடுகள், வழிமுறைகள் என்று வகுத்துக்கொள்வது சராசரி மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்டதல்ல. அவற்றின் பட்டியல் வகுப்பது முதல் கட்டம். லோயர் கே.ஜி. அவற்றை அலசுவதும், வினா எழுப்பி விடை காண்பதும், திறந்த மனதுடன், காழ்ப்புணர்வை ஒழித்து, கருத்து பரிமாற்றம் செய்து தீர்வுகள் காண்பது தான் முக்கியம். அதற்கு, நாம் காரணம் தேடும் கலையை கற்கவேண்டும். சிந்தனையின் பிரதிபலித்தலை (ரெஃப்ளெக்ஷன்) இனம் கண்டு, அதை செயல்களில் இயக்குவதை கற்றுக்கொள்ள வேண்டும்.
சுருங்கச்சொல்லின், சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும் ( மேற்கத்திய உலகில் எல்லாத் துறைகளிலும் பிரதிபலித்தலின் செயலாற்றல் அதிகரித்து வருகிறது.) நமக்கு உறுதுணை. மற்றதெல்லாம் இரண்டாம் பக்ஷம். பீடிகை முற்றிற்று, இப்போதைக்கு.
(தொடரும்)
*
Innamburan S.Soundararajan
|
|
| |
|
to mintamil, me, bcc: innamburan88
|
|
நன்றி, சுபாஷிணி, என்னை மேலும் சிந்திக்கவைத்ததற்கு. இந்த பீடிகையும், சிந்தனா சக்தியின் விவரணையும், நாம் அதை இழந்து வருவதின் பின்னணியும், மீட்புப்பணியை பற்றிய கருத்துகளையும், முதுசொம் கல்வி மேடையில் (THF Study Circle) நான்காவது அலகு ஆக வைக்க விழைந்தேன். அங்கு எல்லாம் ‘கிணற்றில் போட்ட கல்’ மாதிரி இருப்பதால் இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடுகிறேன். தருணம் கிட்டட்டும். தொடருவோம்.
நீங்கள் சிந்தித்துத் தொடுத்த அளித்தக் கருத்துக்களை அணுகும் முன்:
சிந்தனாசக்தியின் ஆதிகால வருகையான உபநிஷதங்கள், தொல்காப்பியம், கிரேக்க/ரோமானிய கருவூலங்கள் ஆகியவற்றுக்கு இணை தற்காலம் தென்படுவது இல்லை. எனினும், ஜான் ட்யூவி, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், எம்.என் ஶ்ரீனிவாஸ், புதுமை பித்தன் போன்றோர் தற்காலத்தில் சிந்தனை விளக்கின் திரியை தூண்டியவர்கள். சிந்தனையியலில் என்னை முதலில் ஆழ்த்தியது R. H Thouless: Straight and Crooked Thinking (in 1952). Thereafter, RD Laing, Edward de Bono, Donald Schon, Jacques Derrida, Foucoult et al சிந்தனையியலில் ஆர்வத்தைக் கூட்டினர். அது எல்லாம் சிந்தனா சக்தியின் விவரணைக்கு உதவும். இதற்கெல்லாம் காலம் தழைக்கவேண்டும். பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்கள்:
சமூகத்தின் நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் பொதுவாக இருப்பதாக அங்கீகாரம் செய்யப்பட்ட விஷயங்களை ஏற்று அதன் அடிப்படையில் செல்வதற்கு சிந்தனை அவ்வளவாகத் தேவையில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது என்பது மட்டுமே இங்கு நிகழ்கின்றது.
~ சரியாக சொன்னீர்கள். ஆனால், ‘பொது அங்கீகாரமே’ ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. அதனால் தான் இப்படி.
இருப்பதைப் பார்த்து, அது நமக்கு பொருந்துகின்றதா, இக்காலகட்டத்துக்கு பொருந்துகின்றதா, மாறி வரும் சூழலுக்குப் பொருந்துகின்றதா என சிந்திக்க விளையும் மனங்களுக்குத் தான் சிந்தனா சக்தி தேவைப்படுகின்றது;
~ ஆம்.
புதிய கோணங்களில் விஷயங்களைப் பார்க்க விளையும் போது சிந்தனை தேவைப்படுகின்றது.
~ ஆம்.
காரண காரியங்களை கண்டுகொள்ள விரும்பும் மனங்களுக்கும் சிந்தனை தேவைப்படுகின்றது.
~ ஆம்.
இது அற்ற நிலையில் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு அது தானாகவே வாழ முற்படும் போது சிந்தனைக்கு இடமற்று போய்விடுகின்றது என நினைக்கின்றேன்.
~ ஆம். இழப்பு வாழ்வியலுக்கு; சிக்கல் தனிமனிதருக்கு; பிரச்னை: சமுதாயத்துக்கு.
நன்றி, வணக்கம்,
15 04 2013
|
No comments:
Post a Comment