Showing posts with label Swami Vivekananda. Show all posts
Showing posts with label Swami Vivekananda. Show all posts

Monday, April 22, 2013

தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]


தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]


Innamburan S.Soundararajan Mon, Apr 22, 2013 at 9:23 AM

To: Innamburan Innamburan
Bcc: Innamburan Innamburan

தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
12/5/10

தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை! [2]

அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து
எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.
‘தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.

ஸ்வாமி விவேகானந்தர் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு
வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட
அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர்
அவர்கள். சமீபத்தில் சாரதா ஶ்ரீசக்ரம்மாவை பற்றி எழுதிய இடுகையில்
குறிப்பிடப்பட்ட டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ் அவர்களும், ரங்கனார் ஒரு
இடுகையில் குறிப்பிட்ட யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரும், அக்குழுவில்
உள்ளனர். ஸ்வாமிஜியை சென்னைக்கு முதலில் கொணர்ந்த அக்கவுண்டண்ட் ஜெனெரல்
மன்மதநாத் பட்டாச்சார்யாவையும் காண்கிறோம். இது நிற்க.

மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் யார் என்று
விசாரிப்போம். சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களை
பணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய
ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து
கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா.
நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ
தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்து
விருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர்
என்றால் மிகையாகாது. இந்திய திரு நாட்டின் தலை விதியை நிர்ணயித்த
மஹான்களில் ஒருவர். சுத்தமாக அவரை மறந்து விட்டது, தமிழகம்.

மதுரை முனிசிபல் கமிஷனர், மீனாக்ஷியம்மன் கோயில் அறங்காவலர், அரசு
வக்கீல் [1888] சட்டசபை உறுப்பினர் [1884] சென்னை மாகாணத்தில் முதல்
இந்திய   முதன்மை ஹைக்கோர்ட் ஜட்ஜ் [1899, 1903 and 1906] அதற்கு முன்,
தொடக்கத்திற்கு முன்பே, இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர்.
திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே, ஆங்கிலேய அரசின் மேல் தனக்கு உள்ள செல்வாக்கை,
ஆக்ஷேபணைகளை புறக்கணித்து, நாட்டுப்பற்றுக்கு வித்திட்ட சான்றோன், இவர்.
அரசு, இவர் சொல்லுக்கு மதிப்பு வைத்தது யாவரும் அறிந்ததே.  இவரின்
மஹாத்மியத்தின் ரகசியம், வெறும் தேசபக்தி மட்டுமல்ல. பகவத் கீதை வழி
நடந்த வாழ்க்கை நெறி. வேதாந்தி என்று தான் அவர் அறியப்பட்டார். ‘’
ஸ்வாமிஜியின் போதனையார் ஈர்க்கப்பட்டவர் இவர்” என்று ஒரு குறிப்பு
கூறுகிறது.

இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.

(தொடரும்)

இன்னம்பூரான்

05 12 2010
Mohanarangan V Srirangam
12/5/10

2010/12/5 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை! [2]

அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து
எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.
‘தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.

யூ டர்ன் எல்லாம் இல்லை சார். பல ஆர்வங்கள் போயிண்டு இருக்கும். நீங்க சொல்லுங்கோ. 

உங்களுக்குப் பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எப்படி அப்பீல் ஆனார்? உங்கள் நெடிய வாழ்வனுபவத்தில் அவர் கூறிய கருத்துகளை நீங்கள் உரசிப்பார்த்துக் கண்ட முடிவுகள் என்ன இவை பற்றியும் அவவ்ப்பொழுது கூறுங்கள். 

உம்மை நடைக்கு என்ன...ஜிலு ஜிலு நடை... 
:-)) 
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
12/15/10

அன்று சொன்னது: 'இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.

(தொடரும்)

இன்னம்பூரான்

05 12 2010


இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகள்:

  1. நீதியரசராக நீடிக்க வாய்ப்பு இருந்தும், கண்ணொளி மங்கிவிட்டதனால், பணியின் நிறைவு குறைந்து விடலாம் என்று அப்பணியில் இருந்து ஓய்வு நாடிய ஐயர் அவர்கள், அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் லீக்கின் கெளரவ தலைவராக பொறுப்பேற்றது முதல் திருப்பணி;
  2. ஓங்கி வானளாவ வளர்ந்து விட்ட ஆலமரத்தை காண்போருக்கு,  நுண்மையான ஆலவித்து தென்படாது. அடையாறு பிரும்மஞான சபையில் இருக்கும் ஆலமரத்தை பாருங்கள். புரியும். அங்கு தான் டிசெம்பர் 1884ல் 17 அங்கத்தினர்கள் கொண்ட குழு ஒன்று அகில இந்திய காங்கிரஸுக்கு வித்திட்டது. கலந்து கொண்டவர்களில் முக்யமானர்கள் : ஹோம் ரூல் கெளரவத்தலைவரான ஐயர் அவர்கள், திரு.அனந்தாசார்லு, திரு. வீரராகவாச்சாரியார், திரு.ராவ், திரு. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். அனைவரும் பிரும்மஞான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள். ஒரு வருடம் கழிந்த பின் தான் அகில இந்திய காங்கிரஸின் முதல் கூட்டம் நடந்தது. திரு ஐயர் அவர்களிம் திருப்பணியால், சென்னைக்கு இந்த வரலாற்றில் ஒரு சிறப்பிடம் கிடைத்து விட்டது.
  3. அந்தக்காலத்தில் மின்னலஞ்சல்கள் கிடையா. கடித போக்குவரத்தே மாதங்கள் பிடிக்கும். அதுவும், அரசுக்குத் தெரியாமல் இயங்குவது மெத்த கடினம். அன்னி பெஸண்ட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஐயர் அவர்கள் ஜூலை 24, 1917 அன்று, அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்கு ஒரு கடிதம் எழுதினார். வில்சனுக்கு மனித உரிமையின் நண்பர் என்ற நற்பெயர் உண்டு. அரசு பறிமுதல் செய்து விடும் என்பதால், ஹென்ரி ஹாட்ச்னர் என்ற பிரும்மஞான வாதி அதை எடுத்து சென்றார். அங்கு பிரபலம் அடைந்த அந்த கடிதம் இங்கிலாந்துக்கு வந்து பிராபல்யமான டைம்ஸ் இதழில் பிரசுரிக்கப்பட்டு, அங்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் இந்திய ஆளுமைக்கு, உலகெங்கும் கண்டனம் வரவழைத்தது. சினம் பொங்கிய அரசு, ஐயர் அவர்களை அவமதிக்க முனைந்தது. அவரோ ‘ஸர்’ விருதை தூக்கி எறிந்து விட்டார். ஆனால், தொடைநடுங்கி இதழ்கள் மெளனித்தன. 
  4. தேசபக்தன் இதழில் ஜூலை 21, 1918 அன்று திரு.வி.க. அவர்கள் ‘மயிலை முனீந்திரர்’ என்ற தலையங்கத்தில், விவரம் முழுதும் அளித்து விட்டார். ஐயர் அவர்களே, இந்த இதழின் துணிவை பாராட்டினாராம். அதற்கும் எதிர்வினை இல்லாமல் போகவில்லை. தேசபக்தன் ஃபெப்ரவரி 28, 1919 அன்று தடை செய்யப்பட்டது. திரு.வி.க. அவர்களும் ஆசிரியர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது.

ஸ்வாமிஜியை பற்றிய இதழில் திரு. ஐயர் அவர்களை பற்றி விவரமாக எழுத காரணம்: அவர் தான் ஸ்வாமிஜியை வரவேற்ற கமிட்டியின் தலைவர். ஹோம் ரூல் கெளரவதலைவர். வரலாறு முழுமையாக பதிக்கப்பட்டால், அகில இந்திய காங்கிரஸ்ஸின் தூண்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. 
இன்னம்பூரான்
15 12 2010
பி.கு. பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எனக்கு அப்பீல் ஆனது அவரிடைய நிர்விகல்பஸமாதியை பற்றி படித்தது, 10 வயதில். உசிலம்பட்டியில் எனக்கு நல்ல நூல்கள் கிடைக்கும், அப்பாவின் தயவால். அவர் கூறிய கருத்துகளை உரசிப்பார்த்தது பற்றி, பிறகு பார்க்கலாம். நான் இன்றும் அவரது அடிப்பொடி. இருந்தாலும் சாக்ரட்டீஸ் மாதிரி எனக்கு தாக்கம் அளித்தவர்கள் யாருமில்லை.
coral shree  
12/16/10

மிக அழகாக, ஒரே சீராக சென்று கொண்டிருக்கிறது ஐயா, தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம் தங்களை. நன்றி.


kanniappan 
12/17/10

தொடருங்கள் ஐயா!. நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

16 டிசம்பர், 2010 3:53 pm அன்று, coral shree <coraled@gmail.com> எழுதியது:

*



நண்பர் ஆர்.எஸ். ஆர். அவர்கள் இந்த கட்டுரையை அனுபவித்துப்படித்து நியாயமான கேள்வி ஒன்று எழுப்பினார். ‘மயிலை முனீந்திரர்’  சித்திரம் அனுப்பி அதை போடாலாமே என்றார். அதை செய்து விட்டேன். நன்றி, திரு.ஆர்.எஸ். ஆர். & http://www.ts-adyar.org/sites/default/files/images/Eminent%20Theosophists/Subramaniya%20Iyer/Sir%20Subramaniya%20Iyer.gif

இன்னம்பூரான்
22 04 2013

Saturday, April 20, 2013

புனர் தரிசனம்




புனர் தரிசனம்

Innamburan S.Soundararajan Sat, Apr 20, 2013 at 5:27 PM

புனர் தரிசனம்
Inline image 1

இன்றைய விகடனில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், பொள்ளாச்சியிலிருந்து, கு,மணியரசன் என்பர் ''இளைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை?'' என்று வினவிய வினாவுக்கு அளித்த பதில்:

“1894-ம் வருடம் நவம்பர் 30-ம் தேதியன்று நியூயார்க் நகரத்திலிருந்து, சென்னையில் இருந்த தனது தொண்டர் அளசிங்கப் பெருமாளுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் இருக்கும் இந்த அறிவுரைகளைக் காட்டிலும் இளைஞர்களுக்கு நான் பெரிதாகச் சொல்ல ஏதும் இல்லை!''

அது:
''என் வீர இளைஞர்களே...
அன்பு, நேர்மை, பொறுமை - இவை மூன்றும் இருந்தால்போதும். வேறு எதுவும் தேவையில்லை. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே. பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. என் குழந்தைகளே... உணர்ச்சிகொள்ளுங்கள். உணர்ச்சிகொள்ளுங்கள். ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம். இந்தியாவை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு உணவு தர வேண்டும். கல்வியைப் பரப்ப வேண்டும். புரோகிதத்துவத்தின் கொடுமைகளை அகற்ற வேண்டும். இவற்றைச் சாதிக்க உன்னில் ஊக்கத் தீ பற்றட்டும். பிறகு, அதை எல்லா இடங்களிலும் பரப்பு. வழி நடத்திச் செல்லும்போது பணியாளனாகவே இரு. சுயநலமற்றவனாகவே இரு. ஒரு நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்காதே. எல்லையற்ற பொறுமை யுடன் இரு. உனக்கு வெற்றி நிச்சயம்!”

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது.

இன்னம்பூரான்
20 04 2013
சித்திரத்துக்கு நன்றி; http://www.belurmath.org/index/sw_150.jpg

Sunday, April 14, 2013

‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4




‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4

Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 8:47 AM
To: Innamburan Innamburan
‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4
Inline image 2
தேசமுன்னேற்றத்துக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும், தனிமனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் கல்வி தான் அடித்தளம் என்பது கண்கூடு. மற்றும் பல பண்புகளும் அத்தியாவசியம் என்பதிலும் ஐயமில்லை. அவை யாவற்றையும், ஒன்றன் பின் ஒன்றாக நாம் கலந்தாலோசிப்போம். கல்வியை பற்றி சில சிந்தனைகள்:
  1. கல்வி ஒரு மகரந்தம். அது பரவுவதற்கு எல்லை இல்லை.
  2. ஆரம்பக்கல்வி கட்டாயமாக இருக்கவேண்டும்; இலவசமாக இருக்க வேண்டும். அரிச்சுவடி பாடங்கள் பிறப்புரிமை. அரசு தன் கடமையை செய்ய வேண்டும். சமுதாயம் அதை வற்புறுத்தவேண்டும். தனி மனிதர்கள் அதற்காக போராட வேண்டும்.
  3. சிறார்களுக்கும், வயது வந்தோர்களுக்கும் எண்ணையும், எழுத்தையும் ( இன்றைய கால கட்டத்தில் கணினி பயன்பாடும்) சொல்லிக்கொடுக்க கொழுத்த முதலீடும், மாட மாளிகைகளும், புலவர்களும் அமைவதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. நம்மில் பெரும்பாலோர் தன்னார்வ பள்ளிகள் நடத்த முடியும். பள்ளி செல்லும் மாணவர்களுக்குக்கூட திட்டமிட்டு பேருதவி செய்யமுடியும். நாம் ஏன் அவ்வாறு செய்யாமல் தயங்குகிறோம்? வாரத்தில் எட்டு மணி நேரம் தந்தால், அது பேருதவி. கிராமம் தோறும், பேட்டை தோறும் இதை செய்ய முடியும். 
  4. ஆதாரக்கல்வி முதல் நிலை. மாணவர்களிடையே, பள்ளிப்பாடத்துடன் நிற்காமல், ஒரு விகசித்த அணுகுமுறையை பயிற்றுவைக்க வேண்டும். அதற்கு நூலகங்களும், அன்றாட அறிவுரையும் தேவை. படித்து பயன் பெற்றவர்கள், இதை ஏன் செய்யக்கூடாது?
  5. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், சிந்தனா சக்தியும், அறிவு தாகமும் திட்டமிட்டு புகலமுடியும். பள்ளி நிறுவனங்களும், பெற்றோர்களும் ஏன் இணைந்து பணி செய்யக்கூடாது?
திரு. சந்திரமோஹன்:
வாணிபம் செய்பவர்கள் விலை போகும் சரக்கைக் கையாள்வார்கள். கல்வி விலைபோகும் சரக்கு.  அருமையாக சொன்னீர்கள்: ‘...Speak the real value every where. Identify valuable personalities who are still remaining uncorrupt and back them.  Continue sponsoring poor students. Show them gentle and noble  gestures and direct them to a right guru. This is the need of the hour...’. நீங்கள் நாள்தோறும் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வகையில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 
சுபாஷிணி:
உமது கேள்வி நியாயமானது. எனக்கு உடன்பாடு தான். விடுதலை வீரர்களின் வரலாறு பரவ வேண்டும். அது தேசாபிமானம், சமுதாய மறுமலர்ச்சி ஆகியவற்றை உந்தவேண்டும் என்பது என் கருத்து. சிலைகள் தேவையில்லை. ஆனால், சந்ததி வறுமையை பற்றி சில வரிகள்:
  • ‘...இன்பதுன்பங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்ற கவியின் உபதேசப்படி, நான் வாழ்நாளைக் கழித்து வந்திருப்பதால், வறுமை என்னை வென்று விடாது...’ [செல்லம்மா பாரதி: 30 04 45: கல்கி இதழுக்கு: cited: http://s-pasupathy.blogspot.co.uk/2012/09/3_12.html]
  • செக்கிழுத்த வ.உ.சி. அவர்கள் தியாக செம்மல். அவர் தன் மகன் வேலைக்கு சிபாரிசு தேடினார். நாட்டுக்காகத் தன் செல்வத்தைத் தொலைத்த பக்தனின் வறுமை; அதன் கொடுமை.
  • தமிழுக்கு தான் செய்த பணியை சொல்லி, நோயும், வறுமையும், பசிக்கொடுமையும் வாட்டிய போது, யாசகம் செய்தார், புதுமைப்பித்தன். தமிழன் கண்டு கொள்ளவில்லை.
  • சமீபத்தில் தி.ஜ.ர. அவர்களின் வாரிசு வாடுவதாக செய்தி வந்த போது, பெரிதும் பேசப்பட்டது. அத்துடன் சரி. நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சிகள் வீண். இத்தனைக்கும், அவரது படைப்புகளில் சில நாட்டுடமை செய்யப்பட்டன. அந்த நிதி வரவு என்ன ஆச்சு? தெரியவில்லை.
  • தமிழ் படைப்புகள் நாட்டுடமை ஆனதில் அரசியல் விளையாடியது. பிரசுரகர்த்தாக்கள் செல்வம் தீட்டினர்.
சுருங்கச்சொல்லி, சுபாஷிணி, ஒவ்வொருவரின் நிலைமையும் வேறு, வேறு. தாரதம்யம் தேவை. 
தியாக உள்ளம் படைத்தவர்கள் பிற்காலமும் இருந்தனர்: எஸ்.ஆர்.சங்கரன் ஐஏஎஸ் போன்ற சிலர். விரல் விட்டு எண்ணி விடலாம். 1947க்கு முன்னால் கணக்கில் அடங்காத தேசாபிமானிகள். சமுதாய நலன் ‘சிறுதுளி பெருவெள்ளத்திற்கு’ சரியான உதாரணம். நம்மில் யாவரும் கடுகளாவது சமுதாய நலனுக்கு உழைக்க முடியும். அது போதும். ஒரு ராஜாராம் மோஹன் ராய், ஒரு திரு.வி.க., ஒரு மஹாத்மா பூலே; 
பிற பின்னர்.
இன்னம்பூரான்
28 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://eluthu.com/images/poemimages/k/106995.gif