திவாஜி!
ஏ.ஜீ ஆஃபீஸ் மர்மங்களைப்பற்றி தலப்புராணத்தின் முதல் பகுதி தனி இழையாக வந்து விட்டது. இத்துடன் மெர்ஜ் பண்ணுவது எப்டி? ஒரு குட்டிக்கதை:
அரசு மடலாடும் முறை வினோதமானது. ரொம்ப பெரியவா அனஃபஷியல் என்று எழுதினால், அந்த கோப்பு முக்யம். டெமி அஃப்பீஷியல் (அரைகுறை) என்றால் உடனே பதில் போடணும் என்று அர்த்தம். அப்படியாக, என்னுடன் மடலாடிய சிதம்பரம் பீ.டி.ஓ ஒருவர், அங்கு நடந்த என் மனைவியின் சீமந்தத்திற்கு, என் தந்தையின் அழைப்பின் மேல் வந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு, பென்ஷன் விஷயமாக எழுதிய கடிதத்தில் ' குழந்தை பிறந்தாகி விட்டதா' என்றும் எழுதி விட்டார். அந்த மடல், ராமனாதன் என்ற ஆஃபீசரிடம் போகவேண்டும், சும்மா இல்லாமல், நான் அடியில் கிறுக்கியது, 'என்ன? கஜகர்ப்பம் என்று நினைத்தாரோ? '
தொலைந்தது. ஆஃபீஸ் பூரா வலம் வந்த அந்த மடல், அவருக்கு பென்ஷன் பற்றி பதில் போட மறந்து விட்டது.
|
No comments:
Post a Comment