Thursday, April 11, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 12: மோக்ஷகுண்டம்




அன்றொரு நாள்: ஏப்ரல் 12: மோக்ஷகுண்டம்
8 messages

Innamburan Innamburan Thu, Apr 12, 2012 at 12:01 AM

அன்றொரு நாள்: ஏப்ரல் 12:
மோக்ஷகுண்டம்
ஸெப்டம்பர் 14/2010 அன்றைய மின் தமிழ் பதிவுகள்:
1.இன்னம்பூரான்: ‘நாம் பொறியலாளர் தினமாகக் கொண்டாடும் தினம்; பாரதரத்னா ஸர்.எம் விஸ்வேஸ்வரையா ஸீ.ஐ.இ என்ற சான்றோனின் ஜன்மதினம். ஆயுள் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) கழகம், விதிகளை தளர்த்தி, ஒருவர் காலம் ஆனப்பிறகு தரவேண்டிய தொகையை, வீடு தேடி வந்து, இவருக்கு தந்து பெருமை தேடிக்கொண்டது. ஏனெனின், இவர் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, இறுதி (102) வரை மும்முரமாகப் பணி புரிந்தவர்.  பொறியல் துறையின் தந்தை ஆகிய இவர் தான் கிருஷ்ணசாகர் ஸாகர் அணைக்கட்டு கட்டியவர். அவர் கட்டிய அணைக்கட்டுகள் பல; அவை இன்றும் பலத்துடன் இயங்குகின்றன. நாணயமான அரசியலுக்கு மைசூர் ராஜ்யத்தில், திவானாகவும் தொண்டு புரிந்து, வித்திட்டவர். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும், சொந்த வங்கிக்கணக்கைத் தவிர. எளிய வாழ்க்கை. உன்னத நெறி. இவரின் வயது, சில இடங்களில் தவறாக பதிவாகி இருக்கிறது!
  1. திரு. திவாகர்:திரு விஸ்வேஸ்வரய்யாவில் 150 ஆவது பிறந்த தினம் என்று இன்றைய ‘தி ஹிண்டு பேப்பர் பெரிய பெரிய கட்டத்தில் கட்டுரைளெல்லாம் எழுதித் தள்ளுகிறது..(இவர்களையெல்லாம் ‘தி ஹிண்டு’ பத்திரிகை ஞாபகம் வைத்திருப்பதே பெரியவிஷயம்தான்).பாரதரத்னா வை நேரு கையால் வாங்கியவர். அவரது சிறு பால்யத்தில் மிக ஒல்லியாக இருத்தலைப் பார்த்து, இந்தப் பையன் 30 வயசு தாங்காது என ஒரு சமுஸ்க்ருத ஆசிரியர் சொல்லிவைத்தாராம். ஆனால் தனது நூற்றாண்டு விழாவைத்தானே காணும் வாய்ப்பைப் பெற்றதாக இன்றைய நாளிதழ் கூறுகிறது. (1955 இல் போட்டோவில் கூட (95 வயது) ஒல்லிதான். எப்படித்தான் அந்த உடம்பு அந்த கனமான சட்டை மற்றும் கோட்டையும், இதையும் விட கனமான தலைப்பாகையையும் தாங்கியதோ.. இஞ்சினீயர் மூளை என்பதால் இதற்கும் ஏதாவது சூட்சுமம் வைத்திருப்பாரோ என்னவோ..வணக்கம்.
 3.திரு. வினை தீர்த்தான்:அவருடைய சூட்சமம் 'TO DO LIST' என்று ஒரு கட்டுரையில் படித்தேன். அவர் எதனையும் தலையில் சுமப்பதில்லையாம். ஒரு தாளில் குறித்து அவற்றை PRIORTISE செய்துகொண்டு அதன்படி நடப்பாராம். இதுவே அவரது வெற்றியின் காரணம் எனக்குறித்துள்ளார்.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்14 09 2010
*
இன்று இங்கே பிறந்து, ஆங்காங்கே வளர்ந்து, காலாவட்டத்தில் மறைந்தார் என்று எழுதாமல், அவருடைய வாழ்க்கை நெறியை உணர்த்தும் சில நிகழ்வுகளை மட்டும் பட்டியலிடுகிறேன். மூலம்: உசாத்துணை:

  1. அவரால் மிகவும் மதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் தன் பதவி உயர்வுக்கு, இவரை அணுகினார். அதன் மூலம் அவருக்கு மாதம் 50 ரூபாய் அதிகம் கிடைக்கும். அது கணிசமான தொகை. சிபாரிசு செய்ய மென்மையாக மறுத்த மோக்ஷகுண்டம் அவர்கள், அந்த உறவினரின் ஆயுசுபரியந்தம், மாதாமாதம் 100 ரூபாய் அனுப்பி வந்தார். (இது போல தான், தன்னால் தவறி சுடப்பட்ட மனிதரை ஆயுசு பரியந்தம் ராஜாஜி பராமரித்தார்.)
  2. திவான் மோக்ஷகுண்டம் அவர்களுக்கு அரசு கொடுத்த காரை அரசு பணிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்தினார். சொந்த உபயோகத்திற்கு, சொந்த கார்.
  3. என்றென்றுமே ஐயா டிப் டாப். சிறிதும் கசங்காத மடிப்புகள் - தலைப்பாகையிலிருந்து காலணிகள் வரை. அவரது உடை பண்பு உலகெங்கும் மெச்சப்பட்டது.
  4. அவர் தினந்தோறும் காலை 7 மணிக்கு ஆபீஸ் அலுவல்களுக்கு தயார். மதியம் மணி 1 வரை இடைவிடாத பணி. மறுபடியும் 3 மணியிலிருந்து 8 மணி வரை.
  5. எல்லாம் திட்டமிட்டபடி. ஒழுங்காக, அவசரபடாமல், நிதானமாக, ஆனால், சுறுசுறுப்பாக எல்லாம் நடக்கும்.
  6. அவரை பார்க்க, முன்கூட்டி அனுமதி வாங்கவேண்டும். லேட் லத்தீபுகளுக்கு நோ பேட்டி. யாரும் அவரது நேரத்தை வீணாக்க விடமாட்டார்.
  7. திவான் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள, சுற்று பிரயாணம் செய்ய வேண்டும். மோக்ஷகுண்டம் அவர்களின் பாணியே தனி. முதலில் வினாக்கள் பல எழுப்புவார், நூற்றுக்கணக்கில். பாசனம் எப்படி? கண்மாய்கள் எத்தனை? ஆஸ்பத்திரி, பள்ளிகள் எத்தனை? எத்தனை ஏக்கர் சாகுபடி? இத்யாதி. தேவைகளை பட்டியலிடவேண்டும். நியாயப்படுத்த வேண்டும். பிறகு, அந்த ஜில்லாவுக்கு சென்று கண்காணிப்பார். நிர்வாகமுறையில் தணிக்கை செய்வார். கலந்தாலோசிப்பார். முடிவுகள் எடுப்பார். தலைநகருக்குத் திரும்பியபின், அந்தந்த உத்யோகஸ்தர்களுக்கு தெளிவான கடிதங்கள் பறக்கும். யாரும் சால்ஜாப்பு சொல்ல முடியாது.
  8. அவரது லக்ஷியம் தெளிவு: பதவி பணி புரியவே. தன் உயர்வுக்கு அன்று.
  9. கல்வியின் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். கல்வி வாழ்வியலின் தரத்தை உயர்த்தும் என்றார். அவர் திவான் ஆனபோது (1912) இருந்த 4,500 பள்ளிகள், அவர் காலத்தில், 11,000 பள்ளிகளாக அதிகரித்தன. 1912ல் 1,40,000 மாணவ மானவிகள். 1918ல் 3,66,000.
  10. பெண்களுக்கு கல்லூரி கிடையாது. இவர் தான் மஹாராணி கல்லூரியை ஸ்தாபித்தார்.
  11. அவர்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதியையும் ஏற்படுத்தினார்.
  12. மதராஸ் பல்கலைக்கழகத்தின் கீழே இருந்த மைசூர் ராஜ்யத்து கல்லூரிகளுக்காக, மைசூர் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இந்திய சமஸ்தானங்களில் அது தான் முதல் பல்கலைக்கழகம்.
  13. வேலையில்லாதத் திண்டாட்டத்தைத் தணிக்க பல நூதன முறைகளை கையாண்டார்.
  14. அவற்றில் கல்விக்கு, தொழில் கல்விக்கு முதலிடம். ஏழைகளுக்கு உபகாரப்பணம்.
  15. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்தார். அவர் துவக்கிய தொழில் மையங்கள் எல்லாம் வெற்றி பெற்றன.
  16. அவருடைய தொடர் சிந்தனை ~ கல்வி, தொழில், வணிகம், வங்கி, ஹோட்டல்,ரயில், ரோடு ~ அவருடைய இன்ஃப்ராஸ்ட் ரக்ச்சர் சிந்தனை அபாரம். லஞ்சம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.
  17. அறுபது வருடங்களில் செய்யக்கூடியதை ஆறு வருடங்களில் செய்து காட்டினார். அதையும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் செய்தார். (மிகையல்ல. ஒரு நாளைக்கு 11 மணி உழைப்பு.)

விக்கிப்பீடியா அவரின் ஜன்மதினம் ஸெப்டம்பர் 15, 1861 என்கிறது. உசாத்துணை அந்த தினம் ஆகஸ்ட் 22, 1860 என்கிறது. அது ஆதாரமான கட்டுரையாக தோன்றுகிறது.  அவர் மறைந்த தினம் ஏப்ரல் 12, 1962. விக்கிப்பீடியா அதை 14ம்தேதி என்கிறது. நான் இன்று அவருக்கு சிரம் தாழ்த்தி, அஞ்சலி செலுத்துகிறேன். உடன் வருக. அவருடைய நன்னெறியை பின்பற்றுக.
இன்னம்பூரான்
12 04 2012
Inline image 1
உசாத்துணை:

Geetha Sambasivam Thu, Apr 12, 2012 at 12:27 AM

ஆஹா,பல தெரிந்த தகவல்களோடு தெரியாத புதுத்தகவல்களும் கூட. பெண்களூர் நகர் நிர்மாணமும் இவர் கை/மூளை வண்ணம் என்பார்கள். அவர் இருந்த கால கட்டத்தில் சில ஆண்டுகள் வாழும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். நன்றி.

On Thu, Apr 12, 2012 at 4:31 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொரு நாள்: ஏப்ரல் 12:
மோக்ஷகுண்டம்

விக்கிப்பீடியா அவரின் ஜன்மதினம் ஸெப்டம்பர் 15, 1861 என்கிறது. உசாத்துணை அந்த தினம் ஆகஸ்ட் 22, 1860 என்கிறது. அது ஆதாரமான கட்டுரையாக தோன்றுகிறது.  அவர் மறைந்த தினம் ஏப்ரல் 12, 1962. விக்கிப்பீடியா அதை 14ம்தேதி என்கிறது. நான் இன்று அவருக்கு சிரம் தாழ்த்தி, அஞ்சலி செலுத்துகிறேன். உடன் வருக. அவருடைய நன்னெறியை பின்பற்றுக.
இன்னம்பூரான்
12 04 2012

Innamburan Innamburan Thu, Apr 12, 2012 at 1:38 AM
To: 
கெம்ப கெளடா காலத்தில், அவருடைய கை வண்ணம் அதிகம் என்று கேள்வி. சரி பார்க்க வேண்டும். தனி மடல் அனுப்பியதற்குக் காரணம்: ஏப்ரல் 14 புதுவருடம் பிறக்கிறது அல்லவா. அன்றொரு நாள் இழையில் அன்று உங்களுக்கு இஷ்டப்பட்ட வகையில் -மணமான வருடக்கொண்டாட்டம், பழைய நினைவுகள், சம்பிரதாயங்கள், வாஸ்து புருஷன், வருடார பலன்கள். இப்படியாக எழுத வேண்டுகிறேன். நான் மெளனம். ஓய்வு. எப்படி?
அன்புடன்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

shylaja 
விஸ்வேஸ்வரய்யா அவர்களைப்பற்றிய  அருமையான பதிவு.  அவர் பெயரில் இங்கு கஸ்தூரிபாய் சாலையில் உள்ள ம்யூசியம் பார்க்கப்பார்க்க பிரமிப்பானது.  
மோக்ஷகுண்டம்..இந்த சொல்லே  வித்தியாசமாய் இருக்கிறது  என்ன அர்த்தம் வரும் இ சார்  இதுக்கு


Innamburan Innamburan Thu, Apr 12, 2012 at 2:57 AM
To: mintamil
அவர்களின் குடும்பப்பெயர். பிறகு விவரமாக எழுதுகிறேன்.


கி.காளைராசன் Thu, Apr 12, 2012 at 3:24 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஒல்லிதான். எப்படித்தான் அந்த உடம்பு அந்த கனமான சட்டை மற்றும் கோட்டையும், இதையும் விட கனமான தலைப்பாகையையும் தாங்கியதோ.. இஞ்சினீயர் மூளை என்பதால் இதற்கும் ஏதாவது சூட்சுமம் வைத்திருப்பாரோ என்னவோ..வணக்கம்.
அவரது நற்பண்புகள் எனக்கும் அமையவேண்டும் என அவரது  ஆன்மா என்னை வாழ்த்த வேண்டுகிறேன்.

--
அன்பன்
கி.காளைராசன்



No comments:

Post a Comment