ஓம்.
பெயர் சொல்லவிரும்பாத ஒரு ஆசிரியர் அவர்
.
தன்னுடைய சேமநல நிதியிலிருந்து கடன் விண்ணப்பித்திருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நடையாக நடந்தும் கடன் பெற இயலவில்லை.
நேரில் வந்து தொடர்புடைய அலுவலர்களிடம் பேசிய போதெல்லாம் ஏதாவது ஒரு குறையினைச் சுட்டி எழுதி திருப்பிவிடுவார்கள். குறை சுட்டப்பட்ட அளவில் மீளவும் பதில் எழுதி சம்ர்ப்பிப்பார். இவ்வாறு பத்து முறைகளுக்கு மேல் திரும்ப வந்த கடன் விண்ணப்பத்துடன் அந்த ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் வந்தார். ஆணையர் தனியாக உட்கர்ந்து கோப்புகளைப் படித்துக் கொண்டிருந்தார்.
ஆசிரியர் உள்ளே வர எத்தனிக்கையில் ஒரு ஊழியர் அனுமதி பெற்ற பின்னர் உள்ளே செல்லமுடியும் என்று கூறினர். அவரை அசட்ட்டை செய்து ஆசிரியர் உள்ளே நுழைந்து ஆணையருக்கு வணக்கம் சொன்னார்.
குனிந்த தலை நிமிராமல் ஆணையர் ‘எங்கோ மழை! எங்கோ இடி!’ என்றாற்போல் தன் வேலையில் இன்னமும் தீவிரமாக ஈடுபட்டார். ’டமார் ‘ என்று ஓர் ஓசை!
ஆசிரியரின் கையில் வைத்திருந்த அரிவாள் ஆணையரின் அகலமான மேஜையின் மீது இறங்கி, உள் நுழைந்து, கைபிடி மட்டும் ஆசிரியரின் கையில் இருந்தது.
ஓசையின் விளைவாய் தியானம் கலைந்த ஆணையர் தன் முன்னால் நிகழ்ந்த சம்பவத்தை முதல் முறையாகத் திரும்பிப் பார்த்தார்.
என்ன! என்ன! என்று கேட்டுக்கொண்டே ஆசிரியரின் முகத்தை அப்போதுதான் பார்த்தார். ஒருவாராக ஆயுதம் ஒன்று மேஜையைத் தாக்கியிருக்கிறது என்பதையும், ஏதோ ஒரு கோரிக்கையினை முன்வைத்து ஏதோ குறை களைய வந்திருக்கிறார் என்பதையும் அனுமானித்தார் ஆணையர்.
ஆசிரியர் இடது கையில் வைத்திருந்த கடன் மனுவை ஆணையரின் முன் வைத்தார்.
நிலைமை எனவென்பதைப் புரிந்து கொண்டார் ஆணையர்.
“கூல் டௌண்! நாளை வாருங்கள் கடன் மனுவை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் ஆணையர்.
“இது வரை நடந்து நடந்து ஓய்ந்துவிட்டேன். இனியும் பொறுக்கமுடியாது. இன்றே வேண்டும்;இப்பவே வேண்டும்! என் ஊதியத்தில் நான் சேகரித்த சேமநல நிதி. அதில் ஒரு சிறிது விதிகளுக்கு உட்பட்டு கடன் பெற வாய்ப்பில்லை. நிர்வாகத்தின் மேல் பழிசொல்ல விரும்பவில்லை. நியாயம் வேண்டும்” ஆசிரியர் கூறினார். ” மேலும்ஒழுங்கு நடவைக்கை! என்று வியாக்கியானம் எதுவும் இதன் மேல் இருக்கக் கூடாது. அப்படித் தொடர்வதாக நிங்கள் விரும்பினால் நான் சிறைக்குச் செல்லவும் தயாராகிவிட்டேன்” இந்த கடன் விண்ணப்பத்தின் நகல் பல வைத்துள்ளேன். அரசுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பவிருக்கிறேன்.”
மேசையின் மீது இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். டவாலி உள்ளே நுழையவில்லை. அவன் பிள்ளை குட்டிக் காரனாம். வெளியில் நின்றுகொண்டு முகத்தை மட்டும் காட்டினான் அந்த ஊழியன். ”
பி.எஃப். கிளார்க்கை வரச்சொல்”.
ஒரு கோப்புடன் வந்தார் எழுத்தர். உள்ளே வாங்க! இந்த கடன் மனுவில் அவர் கோரியுள்ள தொகையை அனுமதித்துவிட்டேன். ஏன் இத்தனை கேள்விகள் இந்த மனுவின் மீது ? உங்களுடை குறிப்புகள் முழுவதும் படித்தேன். சிறுபிள்ளைத்தனமான் குறிப்புகள். உங்களுடைய முகாந்திரம் கேட்டிருகிறேன். இன்னும் அரைமணி நேரத்தில் உங்கள் பதில் வேண்டும். ஆசிரியரிடம் உடன் தொகையை அளித்துவிட்டு நேரில் உங்கள் முகாந்திரத்தை கொடுக்கவேண்டும்.
தொகையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார் எழுத்தர். ஸ்டாம்ப் ஒட்டிய பதிவேட்டை நீட்டினார். ஆசிரியர் பணத்தைப் பெற்றுக்கொண்டு ,”அய்யா! மேஜை சீர்செய்ய ஆகும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
அவசியம் இல்லை. நீங்கள் செல்லலாம். கடமையில் கண்ணாக இருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
No comments:
Post a Comment