Friday, April 12, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 2: 'நேருவின் பயணச்செலவு'


தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 2: 'நேருவின் பயணச்செலவு'
1 message


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/4/10
 
to mintamil
 
தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 2: 'நேருவின் பயணச்செலவு'

சிம்லாவில் தடபுடலாக ட்ரைய்னிங் முடித்த 1956ல், சென்னை யில் ட்ரைய்னிங்க் என்ற பெயரில் வேலை செய்ய ஆரம்பித்தோம். ஏதோ பாவ்லா செய்கிறோம் என்று மற்றவர்களின் கருத்து. தற்காலம் சென்னையில் வசிக்கும் என் சக உத்யோகஸ்தர் பத்மாவும், நானும், அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பேசிக்கொள்ள, ஒரு ஆவணம் உதவியது. அக்காலம், ஜீ.ஓ எனப்படும் அரசாணைகளை ஊன்றிப்படிக்கவேண்டும் என்று ஏ.ஜி. சொன்னதை வேதவாக்காக மதித்து, ஒரு ஜீ.ஓ.வை அலசினோம். அது கூறிய செய்தி: குறிப்பிட்ட தினங்களில் பிரதமர் பயணித்த பிரத்யேக ரயில் வண்டிச்சத்தத்தை சென்னை மாகாண அரசு கொடுக்கும். ரூபாய் 3000+ என்று நினைக்கிறேன். அந்த பயணமோ கேரளாவில். தேர்தல் சமயம். கொஞ்சம் பழைய ஹிந்து பேப்பரைத்தேடிப்பிடித்த விஷயம்: இது அவர் தேர்தலுக்கு சென்ற பயணமே! விடலாமோ!
 
அந்த ஆவணைத்தை ஏ.ஜி. யிடம் எடுத்துச்சென்றோம். ஏ.கல்யாணராமன் என்ற அவர் கண்டிப்பான பேர்வழி. [வெளியில் சொல்லவேண்டாம்: நாங்கள் அவருக்கு வைத்த செல்லப்பெயர், 'அக்ரமன்'!] அரசு கோப்புகளை தணிக்கைத்துறை வாங்கிப்பார்க்கலாம். ஆனால், ஏ.ஜீ. கேட்டால் தான் கொடுப்பார்கள். அவரும், சற்று சிந்தித்த பிறகு, முதன்மைக்காரியதரிசிக்கு ஃபோன் போட, அவரும், சபித்திக்கொண்டே[?], அதை அனுப்பிவைத்தார். ஆஹா! என்னே நோட்டிங்ஸ்! உயர் அதிகாரிகளின் கருத்துக்களே, எங்களுக்கு 'டானிக்' மாதிரி இருந்தத்து!
 
(தொடரும்)
இன்னம்பூரான்
Geetha Sambasivam 
1/4/10
 
to mintamil
 
அது அந்தக்காலம்! இப்போ????
Tthamizth Tthenee 
1/4/10
 
to mintamil
 
என் டீ  திவாரி  போன்றவர்கள்தான் அதிகம் இப்போ\


அன்புடன்
தமிழ்த்தேனீ
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/4/10
 
to mintamil
 
(...உயர் அதிகாரிகளின் கருத்துக்களே, எங்களுக்கு 'டானிக்' மாதிரி இருந்தது..)...பெரும்தலைகள் (ஐ.சீ.எஸ் பகர்ந்த அறிவுரை,என்று.  நினைவு)  " இனி நேருவை அகில இந்திய காங்கிரஸின் அக்ராசணர் என இந்த கோப்பில் கூறவேண்டாம்; பிரதமர் என்போம்; இல்லாட்டா, ஆடிட்க்காரன் பிடித்து உயிரை வாங்குவான்.." என்று. ஆஹா! என்று ரசித்தோம். அச்சமயம், பி.ஸீ.பாதி என்ற டிபுடி ஆடிட்டர் ஜெனெரல் சென்னை வந்திருந்தார். கண்டிப்புச்சக்ரவர்த்தி என அபகீர்த்திப் பெற்றிருந்த அவருக்கு என் மேல் தனிப்பரிவு.! ஈ.வீ.சரோஜா விசிறி, அவர்! மினர்வாவில் அவர் நடித்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, ஓதிவிட்டேன், அவர் காதில்.
ஆஃபீஸ் வந்த பிறகு, அந்த கோப்பை எடுத்துக்கொண்டு, டில்லிக்குப்பறந்து விட்டார்; ஆடிட்டர்ஜெனெரல் ஏ.கே.சந்தா அவர்களிடமும் கொடுத்து விட்டார். அவரும், கனகாரியமாக, நேரு அவர்களிடம் காண்பித்து, தவறை சுட்டிக்காட்டி விட்டார்.

1/4/10
 

Venkatachalam Subramanian 
1/4/10
 
to mintamil
 
ஓம்.
அரசுத் துறையில் தணிக்கை செய்யும் அங்கீகாரம், பெற்றது நடுவண் அரசு அலுவலகம் ” அக்கவுண்டெண்ட் ஜெனெரல் ” அலுவலகம்.

எந்தத் துறை அலுவலகமாக இருந்தாலும் ஏ.ஜி.யின் ஆண்டிறுதித் தணிக்கை கண்டிப்பாக இருக்கும். தணிக்கையின் பொருட்டு கேட்கப்படும் அனைத்து  ஆவணங்களையும் தணிக்கைக் குழுவிடம் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டதோடு எழுப்பப்படும் ”தணிக்கைத் தடைகள்” ஆடிட் அப்ஜெக்‌ஷன் ஒவ்வொன்றுக்கும் தக்க முகாந்திரம் தரவேண்டிய கடமை துறைசார்ந்த உயர்அலுவலருடைய பொறுப்பு ஆகும்.
தீர்வுகாணமுடியாத குறைபாடுகளுக்கு அதாவது அரசாணையில் விளக்கிய விதிகள் சற்றேனும் நடைமுறை விலகியிருந்தால் அங்கே தணிக்கைத் தடை எழுப்பப்படும். சரியான முகாந்திரம் கொடுக்கப்பட்டால் தடை தவிர்க்கப்படும்/அகற்றப்படும்.
இதற்கென தமிழக அரசு ஏ.ஜீ யை புறந்தள்ளி ஏய்த்துக் கட்ட  துறை களினின்றும் சிலவற்றைப் பிரித்து வாரியங்கள் எனப் பெயரிட்டு அழைத்து போர்ட்-ஆஃப்-டைரக்டர்கள் தீர்மானம் இயற்றினால் யானையைக் கையில் எடுத்து ஒரு கையினால் இறுக்கி உதிர்த்து ரசமாக அருந்திவிட் முடியும்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக பொதுப்பணம் தேய்ந்து மறையும்.
கூட்டுறவுத் துறை ஒரு தனிப்பட்ட தன்மையுடையது. பெருச்சாளிகள் கண்மூடித்தனமாகத் தின்று தீர்த்துவிட்ட பிறகு எதை எவ்வளவு தின்று தீர்த்தனர்? எவ்வளவு தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது என்ற நீண்ட அறிக்கை சமர்ப்பிக்கும்.
ஓடிப்போனவனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குத் தான் திறமை மிகவும் வேண்டும்.
ஓம்.
வெ.சுப்பிரமணியன்
Geetha Sambasivam 
1/4/10
 
to mintamil
 
தொடருங்க. மர்மக்கதையை விடவும் நல்லாவே இருக்கு.
Tirumurti Vasudevan 
1/4/10
 
to mintamil
 
ஆமாம், ஆய்வெல்லாம் நடத்தி ஏ.ஜீ ஆபீஸ் வருஷா வருஷம் அறிக்கை வெளிடுமே? அதனால் என்ன பயன்?
திவாஜி
Tthamizth Tthenee <
1/4/10
 
to mintamil
 
ஈ.வீ.சரோஜா விசிறி, அவர்! மினர்வாவில் அவர் நடித்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, ஓதிவிட்டேன், அவர் காதில்.

இருந்தாலும்   உமக்கு முன் யோசனை  அதிகம்


அன்புடன்
தமிழ்த்தேனீ

4-1-10 அன்று, Innamburan Innamburan <innamburan@googlemail.com> எழுதினார்:
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/4/10
 

நன்கு கூறினார் ஓம் ஐயா, 'தமிழக அரசு ஏ.ஜீ யை புறந்தள்ளி ஏய்த்துக் கட்ட... ' என்று. அந்த வாரியங்களுக்கு எங்கள் செல்லப்பெயர், 'வாரிக்கொண்டு ஓடுபவர்கள்.'  
ஆனால், 'போர்ட்-ஆஃப்-டைரக்டர்கள் தீர்மானங்களையும்' அலசுவோம். தப்புதல் எளிதல்ல. திவாஜியின் வினா பொருத்தமானதே. அந்த 'வருஷா வருஷம் அறிக்கை'யை அசெம்ளியின் பப்ளிக் அகவுண்ட்ஸ் கமிட்டி ஆராயவேண்டும். அக்காலத்தில், நிதி அமைச்சர் என்ற தகுதியில், மாண்புமிகு (அவருக்கு
 பொருந்தும்,) திரு.சி.சுபரமண்யம் அவர்கள் வருவார். பொறுப்புணர்ச்சியுடன் நடவடிக்கை உண்டு. பிற்காலம், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, பல மாநிலங்களில் ஆகிவிட்டது. இருந்தும் நாங்கள் கூக்குரல்  எழுப்புவதால், கொஞ்சம் அச்சம், லஜ்ஜை அரிதாக இருக்கலாம்.  அதுவும் ஆடிட்காரனுக்கு தமிழ்த்தேனி மெச்சும் முன்யோசனை தேவை.
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/4/10
 
to mintamil
 
(...அவரும், கனகாரியமாக, நேரு அவர்களிடம் காண்பித்து, தவறை சுட்டிக்காட்டி விட்டார்.. .)கொதித்தெழுந்தார் ஜவஹர்லால் நேரு. பாணங்கள்  பறந்தன. அவருடைய காரியதரிசி மத்தாய்  , சென்னை முத்ன்மைக்காரியதரிசிக்கு காரசாரமாக, ' பிரதமரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் எடுத்த அவர் சம்பந்தமான இந்த முடிவு பண்பற்றது. சினம் மிகுந்து அவரே ரயில்வே இலாக்காவுக்கு இந்த பணத்தை கட்டி விட்டார். உங்கள் பணத்தை பெற்ற்க்கொள்ளுங்கள்'   என்று. ஏ.ஜிக்கு நகல், 'The Prime Minister is grateful to the ever vigilant Accountant General Madras for bringing this to his notice.'
ஒருவாறு இந்த கந்தரகூளம் கழிய ,   ஆசிர்யர்களின் ஓய்வூதியம் பார்க்கலாமோ? 

Tirumurti Vasudevan 
1/4/10
 
to mintamil
 
ஹும்! தன் கட்சி மாநாட்டுக்கு ஃப்ரீயா ரயில் விடற காலம் இது!
அந்த நாளும் வந்திடாதோ!
திவாஜி
Tthamizth Tthenee 
1/4/10
 
to mintamil
 
அப்படியெல்லாம்  உணமையச் சொன்னால்  இப்போது   எல்லா  அதிகாரிகளையும்  மாற்றிவிடுவார்கள்

அதை விடுங்கள்

இப்போது  அதுபோன்ற  அதிகாரிகளே  இல்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ

PENNESWARAN KRISHNA RAO <penneswaran@gmail.com>
1/4/10
 
to mintamil
 
நான் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியபோது மிகவும் அறுவையான என்னுடைய மேலதிகாரி ஒருவர் சொன்ன மிகவும் சுவாரசியமான கதை.
நேரு ஒருநாள் தன்னுடைய அலுவலகம் இயங்கிய சவுத் பிளாக் உள்ளே நுழைகிறார்.  வாசலில் காவலுக்கு இருந்த காவல் பணியாள் நேருவைத் தடுத்து நிறுத்துகிறார்.  அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்.
உடன் வந்த அதிகாரிகள் இவரையே அடையாள அட்டை கேட்கிறாயா? என்று அந்தக் காவல் பணியாளரிடம் பதறுகிறார்கள்.  அந்தக் காவல் பணியாள் பதற்றம் எதுவும் இல்லாமல் எனக்கு இவர் யார் என்று நன்றாகத் தெரியும்.  இவர்தான் எல்லோரும் அடையாள அட்டையை அலுவலகத்துக்கு எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று ஆணையிட்டவரும் இவர்தான் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
நேரு பதட்டமே அடையாமல் தன்னுடைய உதவியாளரை வீட்டுக்கு அனுப்பித் தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து வரச்சொல்கிறார்.  அட்டை வரும்வரை வாசலில் காத்து இருக்கிறார்.
மாலை அந்தக் காவல் பணியாளருக்கு பிரதமரிடமிருந்து அழைப்பு வருகிறது.  அந்தக் காவல் பணியாளருக்கு நூறு ரூபாய் இனாம் கொடுத்து ஒரு பாராட்டுக் கடிதமும் கொடுக்கிறார்.
இது என்னுடைய மேலதிகாரி எனக்குச் சொன்ன சம்பவம்.
இப்போது நார்த் பிளாக்கிலோ சௌத் பிளாக்கிலோ யாராவது ஒரு இணையமைச்சர் அல்லது சோட்டா அமைச்சரின் வேலைக்காரனுடைய மச்சானை வாசலில் நிறுத்திப் பார்க்கட்டும்.
என்ன நடக்கிறது என்று.
அன்புடன்
பென்னேஸ்வரன்
இன்னம்பூரான் ஐயா - இடையூறுக்கு மன்னிக்க வேண்டும்.  அதி அற்புதமாக இருக்கிறது உங்கள் இழை.  மேளதாளத்துடன் தொடரட்டும். நேருவைப் பற்றி இருந்ததால் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.  இனி இடையூறு இருக்காது.

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/4/10
 
to mintamil
 
இதல்லாம் இடையூறு அல்ல, பென்னேஸ்வரன். எனக்கு டானிக். நானும் சவுத் பிளாக்கில் ஊழியம் செய்ததால், அடிக்கடி நேரு அவர்களைப்பார்த்த்ருக்கிறேன். ஒரு தடவை நகைச்சுவையுடன் அவர் பதித்தது, 'Who are these Soundararajans ?.' ஒரு கோப்பில், நான் கையொப்பமிட , அதை மற்றொரு சௌந்தரராஜன் அங்கிகரிக்க, மற்றொரு கே.எஸ். சுந்தரராஜன் நிதி அங்கீகாரம் அளிக்க, அந்த கோப்பு அவரிடம் சென்றது. அந்த கோப்புக்கள் இரகச்யமானவை என்பதால், நகல் கூட எடுத்துக்கொள்ள முடியாது.
இன்னம்புரான்
  ,   
--
Venkatachalam Subramanian 
1/4/10
 
to mintamil
 
ஓம்
நேருஜியை மடக்கியவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஒரு போலீஸ் அலுவலர். நேருஜி அவரைப் பாராட்டினாரே தவிர  ‘தக்க நடவடிக்கை’ மெற்கொள்ளவில்லை.
ஓம்.
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/4/10
 
to mintamil
 
இரு விஷயங்கள்: நேருவை அனுமதிச்சீட்டுக்காக மடக்கி, பாராட்டு பெற்றது: துர்காபாய் தேஷ்முக். காங்கிரஸ் மாநாடு ஒன்றில். ஆதாரமுள்ள தகவல்.
இரண்டாவது: நேருஜியின் கார்  புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நுசியி தடை செய்யப்பெட்டது. அந்த உத்தரவை மீறிய நேருஜி நடந்து ஊரைக்கடந்தார். அப்போது அந்த அதிகாரி சமயோசிதமாக செயலாற்றி பாராட்டுப்பெர்றார் என நினைக்கிறேன்.  

இன்னம்புரான்
*
Picture Credits: http://blog.kace.com/wp-content/uploads/2013/03/training-program.jpg

No comments:

Post a Comment