‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 3
‘பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!’
மஹாகவி பாரதியாரின் பொன்மொழிகளை மட்டும் எடுத்தோதினால் போதும். பாரதமாதாவை வணங்குவது அன்றாட வழக்கமாகிவிடும்;பாரத தேசமென்று பெயர் சொல்வது, அஷ்டோத்தரமாகவும், சஹஸ்ர நாமாவளியாகவும், லக்ஷார்ச்சனையாகவும், பல்லாயிரம், பல்லாயிரம், பலகோடி நூறாயிரமாகவும் மனனமாகிவிடும். அவருடைய தொலைநோக்கின் பரிமாணத்தைச் சொல்லி மாளாது. தேசாபிமானம், செந்தமிழ், பட்டொளி என்றெல்லாம் தீவகமாக ஒளி பரப்பிய அந்த தேசபக்தர் பாரத சமுதாயத்தை வாழ்த்திய பாடலில் இருக்கும் உருக்கமும், கருத்துச்செறிவும், சிந்தனை அலைகளும், நம்மை ஆலிங்கனம் செய்து கொள்ளும் கனிவும், இன்றைய பாரதசமுதாயத்துக்கு வழித்துணை என்க. அதை பற்றி விரிவாக இன்று எழுதாதற்கு நான்கு காரணங்கள் உளன.
- இந்த இழை மடலாடும் இழை; interactive thread. திசை மாற்றாமல் எழுதப்படும் கருத்துக்கள் யாவையும் வரவேற்கும் இழை. ‘...மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை...’ என்றவர் வித்யாதானம் என்று வந்தவுடன்,
‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
என்றல்லவா விண்ணப்பம் செய்துகொண்டார், நம்மிடம்.
- இந்தியா இன்று இக்கட்டில் இருக்கிறது. ஜனநாயகம் பட்டுப்போய்விடுமோ என்ற அச்சமும், அரசியல் சாஸனம் அடிப்பட்டுப்போகுமோ என்ற கவலையும், பாரதியாரின் கண்ணீரிலே நனைந்த, ‘... தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால்காத்தோம்...’ என்ற அழுகையும் ( அன்று அவர் நிஜமாகவே அழுதார்.) இந்த இழையின் எல்லைகளை வரையறைத்து, எச்சரிக்கை விடுகிறது. ‘படிப்புத்தான் முக்கியம்’ என் தாத்தா சொன்ன மாதிரி. எனவே நம் வருங்கால தலைமுறைகளுக்குக் கல்வி என்பதைப் பற்றி கலந்தாலோசிப்போம். முதல் காரியமாக. சரியா?
- தலைப்பு மஹாகவியின் அருளாசி; மகத்தானது. விசாலமானது. கோடானுகோடி மக்கள் பங்கு கொள்ள வேண்டிய சமாச்சாரம். நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். அதற்கு நாம் யாவரும் இணைந்து திட்டமிடுவோம்.
- முதற்கண்ணாக, கருத்து அளித்தவர்களுக்கு பதில் சொல்லவேண்டும்.
பொது:
பாரத சமுதாயத்தில், இந்த இழையில் மடலாடி, அதன் பயனாக தன்னார்வப்பணியில் இறங்குபவர்கள், ஒரு உன்னத சமுதாயமே. எல்லரும் வாருங்கள். எந்த மொழியிலும் எழுதுங்கள்.
தேமொழி:
‘பிரதம்’ என்ற தன்னார்வகுழு கல்வியை பற்றி பொறுப்பான ஆய்வுகளை தருகிறது. அதன் ஆய்வுப்படி, தமிழகத்தில் கல்வி செழிப்பாக இல்லை. என் அனுபவமும் அது தான். படித்து வேlai தகுதி வேறு. வித்யா எனப்படும் கல்வி அதை விட பன்மடங்கு மேன்மையானது. அது வேண்டும். மனித மனம்/ நாட்டுப்பற்று/சமூக சேவை எல்லாமே சுருங்கினால் செத்து விடும். உங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதில் ஐயமே இலை. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு வித்யா தானம் செய்யவேண்டும். உங்கள் ஆசிரியர் வகுப்பறை நடத்தியது போல. கட்டுரை நீண்டு விட்டது. இணையத்தில் இலவசமாக கல்வி போதனை மும்முரம். நேற்றுக்கூட புதிய மாடல்கள் வந்துள்ளன. அடுத்த கட்டுரையில் அது பற்றி எழுதுகிறேன்.
காளைராஜன்:
நீங்கள் எனக்கு அளித்த கொடை இது வாழ்க. என்றும் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன். 1942ல் ஆங்கிலேயர் ஆட்சியில், உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள், அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் அரிக்கேன் லைட்டு வச்சு பாடம் எடுப்பார்கள். அரசு ஆதரவு அபரிமிதம்.
எஸ்.கே.நடராஜன்:
உமது ஊழியம் பெருமிதத்துக்கு உரியது. மேற்படி, தன்னார்வப்பணியாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
ஷைலஜா:
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
ஓடு! ஓடு! இன்னம்பூர் எழுத்தறிவுநாதரின் ஆணை என்று ஒரு ஏழையை படிக்கவை.
கீதா சாம்பசிவம்:
நல்ல காரியம் செய்கிறீர்கள், பண உதவி மூலம். வாழ்த்துக்கள். ஆன்மீகம் நல்லது தான். மூளைச்சலவையாளர்களும், போலிகளும் நிறைந்திருக்கும் பிராந்தியம். அது தான் என் கவலை. உங்கள் பதிவுகள் போன்றவை நன்மை பயக்கும். நீங்கள் சொன்ன நூலுக்கு ஒரு விமர்சனம் இங்கு எழுதுங்களேன். அவசரமில்லை.
பிறபின்னர்
27 03 2013
What i do not understood is actually how you're nnot really much more neatly-appreciated
ReplyDeletethan you may bbe right now. You are verey intelligent.
Yoou realize thus significantly when it comes to this topic, produced
me individually imagine it from so many various angles.
Its like women and men are not fascinated until it is something to do with Girll gaga!
Your individual stuffs outstanding.All the time handle it up!
Thank You, very much. Due to sheer aging, 87, I shall go for Utube hereafter. Please offer your advices,
Delete