Wednesday, April 10, 2013

நோபெல் திருவிழா பகுதி-5




நோபெல் திருவிழா பகுதி-5
1 message

Innamburan S.Soundararajan Wed, Apr 10, 2013 at 10:18 AM
To: Innamburan Innamburan
நோபெல் திருவிழா
பகுதி-5
இன்னம்பூரான்
12 10 2012 
Inline image 1
தனிக்குடித்தனம் கூட்டுக்குடித்தனத்திலிருந்து முற்றிலும் விலகி வாழ்வதில்லை. கூட்டுக்குடித்தனம் தாயாதிகள் எனப்படும் சுற்றத்தை/தூரத்து உறவை பகைத்துக்கொள்வதில்லை, அவ்வப்பொழுது புகை மண்டினாலும். அண்டை வீட்டுக்காரர்கள் அடித்துக்கொள்வது உலகபிரசித்தம் என்றாலும், அவர்கள் ஒரேயடியாக ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதும் இல்லை. ஊருடன் ஒத்துவாழ் என்கிறது பழமொழி. தேசாபிமானத்தை மேற்படி சூழலில் ஆடி, அசைந்து, பிழைத்து வரும் தனிக்குடித்தனத்தின் சுயேச்சையுடன் ஒப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை.
இந்திய தேசாபிமானம் உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக திகழக்கூடும். நூற்றுக்கணக்கான குட்டி ராஜ்யபாரங்களும் (ஒவ்வொன்றும் ஒரு பிருகிருதி!), ஆங்கில கலோனிய வழிப்பறி அரசின் துணுக்குகளும், விரிப்புகளும், கோவா, புதுவை போன்ற மற்ற கலாச்சார வாரிசுகளும் ஒரு தேசாபிமானமாக இயங்கவில்லையா? அதில் உள்ளடங்கிய புதுவையில் ஃப்ரென்ச் வாசனை அடிக்கவில்லையா? அல்லது மதுரை தமிழும், கோவை தமிழும் வித்தியாசப்படவில்லையா?
ஐரோப்பா கண்டத்தின் சுயேச்சை பிராந்தியங்கள் (சரி, நாடுகள்) இந்திய மாநிலங்களை விட சிறியவை. அவற்றின் கலாச்சார தனித்துவங்கள், மொழிக்காதல், நாகரீகம், பண்பு ஆகியவற்றை, இந்தியாவில் நிலவி வரும், (உதாரணத்திற்கு, அமிருதசரஸ் சர்தார்ஜியையும், உடுப்பி பார்ப்பனரையும் ஒப்பிட்டால்,) கலாச்சார தனித்துவங்கள், மொழிக்காதல், நாகரீகம், பண்பு ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், அவை ஒரே தேசாபிமானமாக இயங்கக்கூடும் என்பது உண்மை தான். ஐரோப்பிய யூனியன் ஒருவாறு, பிரச்னைகளுக்கு நடுவே, சில சண்டை சச்சரவுகளுக்கு இடையே இயங்கி வருவது நல்லது தான். நாளாவட்டத்தில் அது இயல்பாக மாறக்கூடும் என்பதும் சாத்தியமே. இந்த பின்னணியில், சில நிமிடங்களுக்கு முன் 2012 வருடத்து நோபெல் பரிசு அளிக்கப்பட்டது, வரவேற்கப்படவேண்டியதே.
சுருங்கச்சொல்லின், நோபல் பரிசு கோஷம் பரிந்துரைத்தது:
ஐரோப்பாவில் சமாதானம், சமத்துவம், சமரசம், நிம்மதி, கூடி வாழ்வது, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றுக்கு, அறுபது ஆண்டுகளாக, அடிகோலிருக்கிறது. இரண்டாவது உலக யுத்தத்தின் போது பட்ட துன்பங்கள், ஒரு புதுமை ஐரோப்பியாவின் தேவையைஉணர்த்தின. அக்காலம் 70 வருடங்களுக்கு முன் மும்முறை போரிட்ட ஃப்ரான்சும், ஜெர்மனியும், இனி அப்படி போரிடுவார்கள் என்று கனவிலும் நினைக்க முடியாது. கிரீஸ், ஸ்பெய்ன், போர்ச்சுகள் ஆகிய நாடுகள், ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தான் ஐரோப்பிய யூனியனில் அனுமதிக்கப்பட்டன. ஐரோப்பிய கண்டத்தின் அடிமட்ட நாடுகள், பெர்லின் சுவர் வீழ்ந்த பின், ஐரோப்பிய யூனியனில் சேர முடிந்தது. இது ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியது. ஜனநாயகம் வலுக்கிறது. இனவெறி தணிந்தது. துருக்கி நாட்டில் ஜனநாயகும், மனித உரிமைகளும் தலை தூக்க, ஐரோப்பிய யூனியனில் சேர விழையும் அந்த நாட்டின் ஆர்வம் ஹேதுவாயிற்று. க்ரோஷியா, மாண்டெனெக்ரோ, ஸெர்பியா ஆகிய தேசாபிமானங்கள் அடுத்த வருடம் ஐரோப்பிய யூனியனில் அனுமதிக்கப்படுவதால், பால்கன் பிராந்தியத்தில் சமரசம் நிலவும். தற்காலம், ஐரோப்பிய யூனியனில்  பொருளியல் சிக்கலும், சமுதாய நிம்மதியின்மையும் நிலவுவதை அறிவோம். சமாதானம், சமரசம், ஜனநாயகம், மனித உரிமை ஆகிவற்றுக்காக நடந்தேறிய நடப்புகளில் வெற்றி பெற்றதற்காக, நோபெல் கமிட்டி, ஐரோப்பிய யூனியனை வாழ்த்தி, இந்த பரிசை அளிக்கிறது. ஐரோப்பிய கண்டத்தின் யுத்தகாண்டத்திற்கு இனி வேலையில்லை. முத்தாய்ப்பாக, 1895ல் தன்னுடைய உயிலில் நோபெல் அவர்கள் குறிப்பிட்ட ‘ சமாதான காங்கிரஸ்ஸுகளில்’ ஐரோப்பிய யூனியன் இடம் பெறுகிறது.’ என்றார்கள்.
ததாஸ்து. ஆனால், என் வருத்தம் யாதெனில், ‘ஐரோப்பிய யூனியனின் தந்தை’ என்றுப் போற்றப்படும் ராபெட் ஷுமன் என்ற அகில உலகமும் மறக்கமுடியாத தீர்க்கதரிசியை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை என்பதே. அவர் பல கலாச்சாரங்களில் உறுப்பினர். 1837ல் பிறப்பால் லக் ஷெம்பர்க்/ப்ரென்ச் குடிமகன். அப்பிராந்தியம் 1871ல் ஜெர்மானியர் கையில் செல்லவே, ஜெர்மானியர் ஆனார். பிறந்த வாசனையோ ப்ரென்ச். வக்கீலுக்குப் படித்ததெல்லாம் ஜெர்மனியில். நாஜியை எதிர்த்து சிறை வாசம். ஒரு வழக்கறிஞர் ஆதரவினால் தப்பிச்சென்று நாஜியை எதிர்த்த ஃப்ரென்ச்காரர்களுடன் சங்காத்தம். ஆனால் பாருங்கள். அந்த இக்கட்டான சமயத்திலும் ஃப்ரான்ஸும், ஜெர்மனியும் இணைந்து வாழவேண்டும் என்று பேசி வந்தார். 1947-48 களில் ஃப்ரான்ஸ் நாட்டின் பிரதமராக திகழ்ந்து அரிய பணி புரிந்த காலகட்டத்தில் தான் அவர் ஐரோப்பிய  ஆலோசனை மன்றம் ஒன்றை துவக்கி, ஐரோப்பிய யூனியனுக்கு வித்திட்டார்.
மே 16, 1949 அன்று அவர் ஆற்றிய ஸ்ட்றாஸ்பக் உரையிலிருந்து:
‘...நம் கண் முன்னே ‘தேசீயங்களும்’. தேசாபிமானங்களும்’ முட்டிக்கொண்டு படைத்த நாசகார வேலைகள் பல. இனி, அந்த அநாகரீகத்தைத் தவிர்த்து, ஒரு ‘தேசீயங்களை விட உயர்ந்த கூட்டுறவை’ (supranational association.) நிறுவ வேண்டும். ஒரு நாட்டின் பிராந்தியங்கள் எப்படி அந்த நாட்டு தேசீயத்தை குலைக்காமல் வாழ முடிகிறதோ, அம்மாதிரியே, இந்த கூட்டுறவின் அங்கத்தின தேசீயங்கள் இயங்கமுடியும்...’.
நோபெல் கமிட்டி சன்மார்க்கிகளே! 1895ல் நோபெல் அவர்கள் சொன்னதை பசுமரத்தாணி போல் பதிக்கும் நீங்கள், 1949ல் ராபெர்ட் ஷுமென் இட்ட வித்தை மறக்காலாகுமா?
(தொடரும்)
பி.கு. நன்றி, திரு.ஐய்யப்பன். ஒருவர் கூட படிக்கவில்லையோ என்று நினைத்தேன். நீங்களாவது அரியர் படித்து வருகிறீர்கள். லாபம், அது வரைக்கு. நேரத்தை ஜவ்வுமிட்டாயாக இழுத்து, இழுத்து, இந்தியா உலக அளவில் அபகீர்த்தி பெற்று, முன்னேற முடியவில்லை. சென்னையில் நம் தமிழன்பர்கள் இந்த விஷயத்தில் எனக்கு டார்ச்சர் பல செய்தனர்.




mayakunar 
10/11/12
 
to mintamil
 
Thanks for the pains taken to activate my grey cells, "I",Sir
Gopalan 


On Wednesday, 10 October 2012 04:44:28 UTC-7, இன்னம்பூரான் wrote:
Well! I am actually typing just now the input on today's chemistry awards, which is ,in a sense for quantum chemistry.

I shall post fantastic inputs on quantum physics. You will be happy to begin with Schrödinger's Cat - Sixty Symbols
It is an eight minute video.  Schrödinger wrote this thought-experiment book in 1935 and we were enthralled by it twnety years later. My copy of the book 
has vanished kike the Cheshire cat's grin! I have my pet notion on CONSCIOUSNESS. I wait for the right time.
Thanks for the opportunity to comment.
Regards,
Innamburan 
On Wed, Oct 10, 2012 at 5:13 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:
2012/10/10 mayakunar <gopal...@gmail.com>
YouTube - Videos from this email
mayakunar 
10/11/12
 
to mintamil
 
கண்ணன் அய்யா,
"இ" சாரின் கூற்று !
“இங்கு தான் நேற்றைய பெளதிகம் பத்தாம் பசலியாக போய்விட்டது. அதனுடைய விதிகள் இங்கு செல்லாது”
பௌதிகத்தை பொறுத்தவரை நான் பத்தாம் பசலியே . புது விதிகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை அறியவே புத்தக விவரம் கேட்டேன் .

கோபாலன்


On Wednesday, 10 October 2012 03:13:08 UTC-7, NaKa wrote:
2012/10/10 mayakunar <gopal...@gmail.com>
Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/12/12
 
to mintamil
 
எனது ஆருயிர் நண்பன் செல்வன் 'நோபல் கோமாளிகள்' என்ற இடுகையில் நான் அளித்த பின்னூட்டம் இது. 
*
1. நோபெல் பரிசு பற்றி தீர்மானம் செய்பவர்கள் மனிதர்களே; அதனால் விவகாரம்;
2. மஹாத்மா காந்திக்கு இந்த பரிசு அளிக்கப்படவில்லை. பரிந்துரை இல்லாமல் போகவில்லை.
இது பற்பல வருடங்களுக்குப் பின் விவகாரம் ஆனது. நோபெலரே வருத்தம் தெரிவித்தனர்.
3. இந்த வருட சமாதானம் பரிசுக்கு ஐரோப்பிய யூனியனை ஓட்டுப்போட்டுத்தேர்ந்தெடுக்கவில்லை. ஒருமனதாக, ஐவரும் செயல்பட்டனர்.
4. கண்டனங்கள், எதிர்ப்பு, வியப்பு எல்லாம் எதிர்பார்த்தது தான். அதனால், நடுவு நிலைமையில் அமர்ந்து, நீண்ட கால வரலாற்றை ஆராய்ந்து, இன்றைய  'நோபெல் திருவிழா' கட்டுரையை முன்னதாகவே எழுதியுள்ளேன். 
5. நோபெல் அணுகுமுறை வேறு. ஆஸ்கர் அணுகுமுறை வேறு. 
இன்னம்பூரான்
12 10 2012


செல்வன் 
10/12/12
 
to mintamil
 
நோபல் பரிசு அதன் மதிப்பை இழந்து பல வருடங்கள் ஆகிறது.

காந்தி ஒன்றல்ல, இரண்டல்ல 12 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டார். 12 முறையும் அவருக்கு நோபல் பரிசு மறுக்கபட்டது. அதை கூட ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் என மன்னித்துவிடலாம். ஆனால் பராக் ஒபாமா என்ன சாதனை செய்தார் என அவர் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் நோபல் பரிசை கொடுத்தார்கள்? பதவி ஏற்ர ஒரே மாதத்தில் அவர் உலக சமாதானத்துக்கு என்ன செய்துவிட்டார்? அவருக்கே தனக்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது என்பது இதுவரை தெரியாது.

இப்படி அடிக்கடி கோமாளிகூத்து நடத்தும் நோபல் கமிட்டியின் இந்த வருட கோமாளித்தனம் இது.  ஐரோப்பிய யூனியன் கட்டமைப்பே விரைவில் மரிக்கவிருக்கும் நிலையில் அதற்கு இறுதி அஞ்சலியாக வைக்கபட்ட மலர்வளையம் இது என வைத்துகொள்ளலாம்.

--

 செல்வன்


Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/12/12
 
to mintamil
 
நீங்கள் எல்லா நோபெல் பரிசுகளையும் சொல்கிறீர்களா? அல்லது சமாதான பரிசுகளை மட்டும் சொல்கிறீர்களா? 2011 வருட சமாதான பரிசு உகந்ததா இல்லையா? நோபல் பரிசு அதன் மதிப்பை இழந்து எத்தனை வருடங்கள் ஆயின, உங்கள் கணிப்பில்?
செல்வன் 
10/12/12
 
to mintamil
 
காந்திக்கும், போப் ஜான் பாலுக்கும், ஐரினா சாண்ட்லருக்கும் பரிசு கொடுக்க மறுத்தபோதே அதன் மதிப்பை அது இழந்துவிட்டது. உலக சமாதானத்தின் சின்னமே காந்திதான். அவருக்கே இல்லை என ஆனபின் அதை யாருக்கு கொடுத்தால் என்ன, கொடுக்கலைன்னா என்ன?

அவ்வப்போது சில அப்பிராணிகளுக்கு நோபல் பரிசை கொடுத்து (உதாரணம் ஆங் சான் சூகி, வாங்கரி மாதாய்) மற்ற வருடங்களில் அதை வைத்து பாலிடிக்ஸ் செய்து (உதா: அல் கோர், ஒபாமா) அந்த விருதின் முக்கியத்துவத்தையே அழித்துவிட்டார்கள்.

இம்மாதிரி விருதுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இவற்றை வாங்காததால் காந்திக்கோ, போப் ஜான்பாலுக்கோ, ஐரினா சான்ட்லருக்கோ எந்த இழப்பும் இல்லை. வாங்கியதால் ஆங்க்சாங் சூகிக்கும், தலாய் லாமாவுக்கும் புதிதாக எந்த பெருமையும் சேரபோவது இல்லை. இந்த பரிசு இடதுசாரிகள் வசம்போய் பல பத்தாண்டுகள் ஆகிறது. கம்யூனிசத்தை எதிர்த்ததற்காக ஐன்ஸிட்டினுக்கு ஒப்பான மேதையான எட்வர்ட்ட் டெல்லருக்கு கிடைத்திருக்க வேன்டிய அறிவியலுக்கான நோபல் பரிசை கூட கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/12/12
 
to mintamil
 
For your kind attention please, Dear Selvan. This one supports you to the hilt. There are opposite opinions also. You generalize, when you better particularize. You particularize, when you should take the broad spectrum into account.
Innamburan
*
The EU and the Nobel Peace Prize
Hmmm
Oct 12th 2012, 11:27 by Charlemagne

WHEN the Nobel committee awarded its peace prize to Barack Obama in 2009, many wondered why it had been given to a man who, still at the start of his presidency, had not yet achieved anything. Today many might ask themselves why the it has been awarded to an institution whose most ambitious project, the euro, is failing so badly. As one wag put it on Twitter, “Note that the EU does NOT win the Nobel Economics Prize.”
The crisis may yet destroy the euro and, with it, much of the European integration project. It is creating economic pain in the most troubled countries. The unemployment rate in Greece and Spain has passed 25%. Resentment is growing between creditor and debtor countries. Protesters in Greece this week greeted Angela Merkel dressed in Nazi uniform.
Across the EU, popular support for the European project is falling. Britain is openly talking of loosening its ties with the union. Mario Monti, Italy's prime minister, wants to convene a summit to combat falling support for European integration. In Norway, where the prize announcement was made, a spokesman for the Nobel committee admitted public support for joining the EU was at an all-time low.
So the Nobel committee's prize is really meant as a reminder of what the EU has achieved in helping to transform Europe “from a continent of war to a continent of peace”. And it is meant as a warning not to let it be swept away in the face of the “emergence of extremism and nationalism”.
The Nobel committee gave a potted history of the EU's achievements, from its origins in the Coal and Steel Community, designed, in the words of the-then French foreign minister, Robert Schuman, to “make it plain that any war between France and Germany becomes not merely unthinkable, but materially impossible”. By taking in Spain, Portugal and Greece it helped consolidate democracy in countries emerging from dictatorship. And after the fall of the Berlin Wall in 1989 the EU helped bring about the transition of central and eastern European countries from communism. Today, said the Nobel committee, the word of spreading peace and democracy is focusing on the Balkans.
But this is an incomplete reading of history. Surely NATO and the presence of American forces has been an equally, if not more important factor in keeping the peace in Europe through the decades of the cold war. And it was intervention by America more than Europe, be it as the EU or individual countries, that eventually put a stop to the bloodletting in the ex-Yugoslavia. Still, the prize is a fillip for a European project that has been valuable in consolidating peace, but had lost its way in the crisis.
As always in the cacophony of the EU, the many “presidents” rushed to rejoice over the news. There were statements from Jose Manuel Barroso (president of the European Commission, the EU's civil service), Herman Van Rompuy (president of the European Council, representing leaders) and Martin Schulz (president of the European Parliament).
Mr Barroso said: “I have to say that when I woke up this morning, I did not expect it to be such a good day....The award today by the Nobel Committee shows that in these difficult times the European Union remains an inspiration for countries and people all over the world and that the international community needs a strong European Union.”
The question is Brussels was which (or how many) of the leaders of the many-headed EU would travel to Oslo to collect the prize. The Nobel committee wisely said the decision was for the EU to take.
From the European Parliament, British politicians fell over each other to mock the announcement. Nigel Farage, leader of the UK Independence Party, declared: “This goes to show that the Norwegians really do have a sense of humour. The EU may be getting the booby prize for peace because it sure hasn't created prosperity. The EU has created poverty and unemployment for millions.”
Martin Callanan, the British Conservative frontman who scarcely sounds different to UKIP, chimed in: “The Nobel committee is a little late for an April fools joke. 20 years ago this prize would have been sycophantic but maybe more justified. Today it is downright out of touch...The Nobel Peace Prize was devalued when it was given to newly-elected Barack Obama. By giving the prize to the EU the Nobel committee has undermined the excellent work of the other deserving winners of this prize.” A final irony, perhaps, from leaders of parties that increasingly want Britain's relations with the EU to be more like Norway's.
Retrieved with thanks on 12 10 2012 from:
செல்வன்




ஐயா

20ம் நூற்றாண்டின் மிக பெரிய தீமைகள் நாஜிசம், கம்யூனிசம் மற்றும் ஐரோப்பிய காலனி ஆதிக்கம். ஆனால் நோபல் பரிசு வாங்கியவர்கள் பட்டியலை எடுத்து பார்த்தால் ஹிட்லர், ப்ரிட்டிஷ் காலனி ஆதிக்க அரசு மற்றும் கம்யூனிசத்துக்கு எதிராக போராடிய ஒருவர் பெயரும் அந்த பட்டியலில் இருக்காது. காந்தி இருந்தவரை அவருக்கு நோபல் பரிசு தரவில்லை. நெல்சன் மண்டேலா 27 வருடமாக ஜெயிலில் இருந்தவரை அவரை திரும்பி கூட பார்க்காமல் இனவாதம் ஒழிந்து அவர் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஆன பின்னர் நோபல் பரிசு கொடுத்தது மன்னிக்க முடியாத குற்றம்.

ஹிட்லரை எதிர்த்து போராடி ஐரோப்பாவிலும், உலகிலும் அமைதியை ஏற்படுத்திய நபர் ஒருவர் கூடவா நோபல் பரிசுக்கு தகுதி பெறவில்லை? தன் உயிரை கொடுத்து பல்லாயிரம் யூதர்களை காப்பாற்றிய ஆஸ்கார் ஷின்ட்லருக்கு நோபல் பரிசு மறுக்கபட்டது. காரணம் சோவியத் அரசுக்கு மனசங்கடம் ஏற்படும் என்பதால்...

சர்வாதிகாரம் ஆள்கையில் அதற்கு அடிபணிவதும் சர்வாதிகாரம் வீழ்ந்தபின்னர் நோபல் பரிசுகளை கொடுப்பதும் வாடிக்கை. நோபல் அமைதி பரிசு முழுக்க சார்புடையதாக மாறிவிட்டது.
Nagarajan Vadivel 
10/13/12
 
to mintamil
 
பரிசுகுக்கென விதி முறைகள் உண்டு.  பணம் கொடுத்தவன் இப்படிச் செய்யுங்கள்
என்று எழுதிவைத்துவிட்டால அதை அப்படியே செய்வதும் அதில் கொஞ்சம்
விளையாடுவதும் இயல்புதானே

நோபல் பரிசு சரியாகச் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி பல  அல்டர்னேட்
நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன

நோபல் பரிசு சரியான நேரத்தில் சரியானவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை
என்ற குற்றச் சாட்டு உண்டு

நாம் ஆண்டுதோறும் எப்படிப் பரிந்துரைகள உருவாகின்றன என்று
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்

குறை ஒன்றூம் இல்லை செல்வா என்று பாட முடியாது ஆனாலும் இது அடுக்குமா
என்றூ ஒரேயடியாகப் புலம்பவும் கூடாது

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ

குறையில்லாத நோபல் போன்ற இன்னொன்று ஏன் உருவாகவில்லை

நாகராசன்

2012/10/13 செல்வன் 

No comments:

Post a Comment