அன்றொரு நாள்: டிசம்பர் 7
டோரா! டோரா! டோரா!
அலை அலையா வந்தோமா!
மலை மலையா சாச்சோமா!
குலை குலையா அறுத்தோமா!
கொலை கொலையா செஞ்சோமா!
~இது ஜப்பான்
மின்னலும் இடியுமா வந்துட்டானே!
பின்னி பின்னி அடிச்சுட்டானே!
சின்னப்பய கொளுத்திட்டானே!
கின்னஸ் சாதனை படைச்சுட்டானே!
~இது அமெரிக்கா
டிசம்பர் 7, 1941 காலை 7.55: ஓஹு என்ற பசிஃபிக் தீவில் பவளத்துறைமுகம் (பெர்ள் ஹார்பர்) பறந்து வந்தான் ஜப்பான்காரன். ஐந்து போர்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 16 போர்கப்பல்களுக்கு பலத்த அடி. 188 விமானங்கள் நொறுக்கப்பட்டன. நூறு ஜப்பானியர் காலி. அமெரிக்கர் 2,400 இறந்தனர். 1,178 பேருக்கு காயம். மணி காலை 10. மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தப்பின. எப்படி? வேறு இடத்திற்கு சவாரி போனதால். அது என்ன ‘டோரா! டோரா! டோரா!’ ஜப்பான் தளபதி கொக்கரிக்கிறாரு, ‘அதிரதில்லை!’ என்று மும்முறை.
வரலாற்றை சுருக்கி குப்பியில் அடைத்தால்: அதிர்ச்சி வைத்யம் எனெனினும் பல வருடங்களாக ஊறிய விரோதம். விளைவு ஹராகிரி. ஜப்பானியமொழியில் ஹராகிரி என்றால் வீர தற்கொலை. பின்னி பின்னி அடிச்சாலும், ஒரு ஜப்பான் தளபதி சொன்னமாதிரி அமெரிக்க கும்பகர்ணன் சிலிர்த்துக்கொண்டு எழுந்து விட்டான். ஜப்பானை ஒடுக்கி விட்டான். இரண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டறேன். ஜப்பானுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி உயிர்நாடி. அதற்கான 1911 ஒப்பந்தத்தை 1940ல் ரத்து செய்து, மரண அடியாக இரும்பு தாது, கச்சா எண்ணைய் தரமாட்டோம் என்றவுடன், ஜப்பான் ஜெர்மனியுடனும், இத்தாலியுடனும் உறவு கொண்டாடியது. அடுத்த விஷயம், அமெரிக்காவில் உளவு துறை கோட்டை விட்டது. அதுவும் பெரியகதை.
பயாஸ்கோப் பாரு! பயாஸ்கோப் பாரு! சொன்னா ஏறாது. பாத்தா மனசுலெ பதியும். அதான் பயாஸ்கோப் (ஸ்லைட் ஷோ + யூட்யூப் +படம்)
இன்னம்பூரான்
07 12 2011
இது நவம்பர் மாத செய்தி!
உசாத்துணை:
|
No comments:
Post a Comment