11~11~11~11
இன்று லக்ஷக்கணக்கான பிரிட்டானியர்கள், நவம்பர் 11, 1918 அன்று காலை 11 மணிக்கு முதல் உலக யுத்தம் முடிவடைந்ததின் நினைவாகவும், அந்த யுத்தத்திலும், இரண்டாவது உலக யுத்தத்திலும், 385 வீரர்களை பலி வாங்கிய ஆஃப்கனிஸ்தான் சண்டைகள் உள்பட, பல போர்களில் மாண்ட பிரிட்டீஷ் துருப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 11 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மெளனம் காத்தனர். லண்டனில் வீரர்களின் ட் ரஃபால்கர் நினைவு மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வு நடந்தது. அந்த கட்டிட அமைப்புப்படி காலை 11 மணிக்கு சூரிய வெளிச்சம், அன்று மட்டும், ஞாபாகர்த்த சிலையில் மீது படியும். ராணுவ தளபதிகளுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நெதர்லாந்தை சேர்ந்த அட் ரியன் கீஸ் (85 வயது: 1944~49 கடற்படையில் பணி புரிந்தவர்), ‘எங்கள் நாட்டை உய்விக்க வந்த பிரிட்டீஷ் ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க வந்தேன்’ என்றார். ஆஃப்கனிஸ்தானில் பாஸ்டியன் முகாம் என்ற இடத்தில் நடந்த நிகழ்வில் ராணுவ அமைச்சர் கலந்து கொண்டு, வீர வணக்கம் செலுத்தினார். நாடெங்கும் இந்த நிகழ்வு நடந்தது. இங்கு ‘பாப்பி அப்பீல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. எல்லாரும் ‘பாப்பி’ மலர் போன்ற காகிதப்பூவை, மாஜி ராணுவர் நிதிக்கு நன்கொடை கொடுத்து, வாங்கி அணிந்து கொள்வர். அவற்றை நினைவு மண்டபத்தில் சமர்பிப்பர். சிறுவர்கள் பங்கேற்கும் படம் ஒன்று மட்டும் இங்கே.
Picture Attached
Children placed poppies in one of the fountains at Trafalgar Square after the two minute silence
ஒரு வரலாற்று பதிவு. முதல் வருட நிகழ்வு நவம்பர் 11, 1919 அன்று. மான்செஸ்டர் கார்டியன் 12 11 1919 இதழில், “...11 மணி அடித்ததும், மாயாஜாலம் போல. ட் ராம் வண்டிகள், மோட்டர் வண்டிகள், குதிரை வண்டிகள் எல்லாம் இருந்த இடத்தில் உறைந்த வண்ணம். ஒருவர் குல்லாயை எடுக்க, யாவரும் தலை குனிந்து வீரவணக்கம் செய்தார்கள். ஒரு மூலையில் ஒரு கிழவர், மாஜி ராணுவ வீரர், அட்டென்ஷனில் நின்றார். ஒரு கிழவி அழுதாள். மயான அமைதி...........”
ஏதோ ஆங்கில மோகத்தில் நான் இதை எழுதவில்லை. இன்றைய நிகழ்வு. வரலாறு பேசுகிறது. மேலும், தேசாபிமான விழிப்புணர்ச்சி ஏற்பட, இத்தகைய நிகழ்வுகள் உதவும். ஜனவரி 30ம் தேதி இது போன்ற இந்திய நிகழ்வை பெரும்பாலோர் கண்டு கொள்வதில்லை. அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.
இன்னம்பூரான்
11 11 11
பி.கு.
இன்று தேசபக்தர் மெளலானா அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்த நாள். அவரை பற்றி எழுத தொடங்கும் போது, ‘Resisting Colonialism & Communal Politics: Maulana Azad and the Making of the Indian Nation’ என்ற சமீப காலத்து நூல் ஒன்றை பற்றி படித்தேன். இது வரை கூறப்பட்ட வரலாற்றின் சில பகுதிகள் மீள்பார்வைக்கு உட்படவேண்டியிருக்கும். எனவே ஆய்வு காலம் எடுக்கும், அதனால், பிறகு தான் அவரை பற்றி எழுதவேண்டும்.
உசாத்துணை:
No comments:
Post a Comment