Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்




அன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்
9 messages

Innamburan Innamburan Sat, Dec 10, 2011 at 5:28 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan


அன்றொரு நாள்: டிசம்பர் 10
காசும் கடவளும்
சடங்கும் சம்பிரதாயமும் சமய வழிபாட்டில் புகுந்து சங்கடம் செய்வது எளிதில் புலப்படாது. அதற்கான விலையை கொடுப்பதில், லெளகிக கண்ணோட்டத்தில், அநேகருக்கு தயக்கமும் ஏற்படுவதில்லை. பொற்றாமரையும், தங்க விதானமும், வைர முடியும், அர்ச்சனை தட்டும் இறையில்லத்தின் அழகை கூட்டலாம். மெருகேற்றலாம். அற்ப மானிடனுக்கு பக்தியை நாட உதவலாம். இறையாண்மையை கூட்டும் தன்மையற்றவை, இவை. இறையாண்மையின் திருவருள் நமக்குக் கிட்டுவதை நீர்க்கும் தன்மை உடையவை, இவை. நாம் இதையெல்லாம் பெரிது படுத்துவது இல்லை. கோயிலுக்கு போனால் நான் நிச்சயமாக அர்ச்சனை செய்வேன். உண்டியலில் காசு போடுவேன். வேண்டுதல்களை பூர்த்தி செய்வேன். அற்ப மானிடனல்லவா! சந்தியாவனம் செய்வது, ஜபதபம், அபிஷேகம், தியானம், யஞ்ஞம் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு சடங்கு, சம்பிரதாயம் என்று அவதானிக்க முடியாது. நமக்கு தெரியாத விஷயங்கள் பல.  பீடிகை முற்றிற்று.

“ உண்டியலில் போட்ட காசு குலுங்கும்போதே, இறந்தவரின் ஆவி நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கு பறந்தோடி விடும்.” ~ ஜோஹான் டெட்செல்: கத்தோலிக்க மதகுரு.

“ உலக செல்வந்தர்களில் முதன்மை வகிக்கும் போப்பாண்டவர் புனித பீட்டர் தேவாலயம் கட்ட தன் பணத்தை செலவழிக்காமல், ஏழை விசுவாசிகளிடம் நன்கொடை கேட்பதேன்?”
~ மார்ட்டின் லூதர்: சமய புரட்சி செய்த ஜெர்மானிய மதகுரு

ஒரு சுரங்கத்தொழிலாளிக்கு நவம்பர் 10, 1483 பிறந்த மார்ட்டின் லூதர் சமயநெறியில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அகஸ்டினியன் மடத்தில் 1505ல் சேர்ந்து, 1507ல் தீக்ஷை பெற்று, 1512 ல் சமயநெறி என்ற துறையில் பண்டாரகர் விருது பெற்றார். அதற்கு முன் 1510ல் ரோமாபுரிக்கு சென்ற போது கத்தோலிக்கத் தலை நகரமான வாடிகனில் இருக்கும் ஊழல் கண்டு திகைத்துப் போனார். ஊழலின் ஊற்று: காசு கொடுத்தால் பாவமன்னிப்பு. இறந்தவருக்கும் கிடைக்கும். இருப்பவருக்கும் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷத்துக்கு பசுமாட்டை தானம் கொடுக்கும் பரிகாரம் போல. (ஹிந்து மதத்தினர் கருமாதி செய்யும்போது ‘கோதானம்’ என்று காசு தானம் செய்வது நடப்பு.) அதற்கும் ஜோஹான் டெட்செல் அவர்களின் பட்டியல் வேறு. கிட்டத்தட்ட, ‘வருங்கால பாபிகளே! அஞ்சேல். இனி செய்யப்போகும் அட்டூழியங்களுக்கு அச்சாரம் கட்டினால், பாவமன்னிப்பு உத்தரவாதம்’! என்பது போல. தாங்கொண்ணா சினம் எழ, மார்ட்டின் லூதர், இந்த அவலங்களை கண்டித்து ’95 ஆக்ஷேபணைகள்’ என்ற நூலை 1517ல் எழுதினார். கிருத்துவர்களை காப்பாற்றுவது தெய்வநம்பிக்கை மட்டுமே என்பதில் உறுதியாக இருந்த மார்ட்டின் லூதர், பல நூல்களை எழுத, அச்சு இயந்திரம் வந்து விட்டதால், அவை பிரபலமாகி விட, போப்பாண்டவரின் சினம் தலை தூக்கியது. போப்பாண்டவரின் மடல்களுக்கு ‘புல்’ (Bull) என்று பெயர். அத்தகைய ‘புல்’ ஒன்றில் மார்ட்டின் லூதர் தன் கொள்கைகளில் 41 கொள்கைகளை கைவிடவேண்டும் என்று கட்டளையிட்டு, விதித்த கெடு முடிந்த தினம், டிசம்பர் 10, 1520. மார்ட்டின் லுதரும், ‘ஆண்டவனின் வாய்மையை குலைத்தாய் நீ ( போப்); இன்று அவரு உன்னை குலைக்கிறார்’ என்று மந்திரமோதி, அந்த மடலை அக்னி தேவனுக்கு ‘ஸ்வாஹாஹா’ செய்து விட்டார். 1521ல், போப் லியோ~10 மார்டின் லூதரை வெளியேற்றினார். இவரும் அவர்களின் சொல்லை மதிக்கவில்லை. மன்னன் சார்லஸ் ~5 இவரை நாத்திகன் என்று பிரகடனப்படுத்தி நாடு கடந்து ஓடி ஒளிய வைத்தான். 1522 ல் திரும்பிவந்து ஒரு கன்யா ஸ்திரியை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தினார்.
ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா!குடியானவர்கள் ஒரு கிளர்ச்சி செய்தார்கள். அதன் தலைவர்கள் இவருடைய வாதங்களை திறனுடன் முன்வைத்து கிளர்ச்சியை நியாயப்படுத்தினர். இவரோ ப்ளேட்டை மாற்றி வாசித்தார். அவர்களை ஆதரிக்கவும் இல்லை. அரசாங்கம் கிளர்ச்சியை நசுக்குவதை ஆதரித்தார். அதன் விளைவாக, இவருக்கு ஆதரவு குறைந்தது. போதாக்குறையாக, நியாயமின்றி யூத சமுதாயத்தைத் தாக்கத் தொடங்கினார், தன் இறுதி நாட்களில்.
என்ன தான் இருந்தாலும், அவருடைய இறை நம்பிக்கை, ஊழலெதிர்ப்பு, விவிலியத்தை ஜெர்மானிய மொழியில் எளிமை நடையில் எழுதி, பாமரமக்களின் இறை நம்பிக்கையை வளர்த்தது, ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன், உலக அளவில் சிந்தனையை தூண்டிய கம்பீரம் ஆகியவற்றை போற்றத்தான் வேண்டும்.
இவருடைய சமய புரட்சி ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றின் தடத்தை மாற்றியது.
இன்னம்பூரான்
10 12 2011


Scott2065.jpg
உசாத்துணை:

Geetha Sambasivam Sat, Dec 10, 2011 at 6:37 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், :)))))

2011/12/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>


அன்றொரு நாள்: டிசம்பர் 10
காசும் கடவளும்

இவருடைய சமய புரட்சி ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றின் தடத்தை மாற்றியது.
இன்னம்பூரான்
10 12 2011



Subashini Tremmel Sat, Dec 10, 2011 at 7:11 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மார்ட்டின் லூதர் செய்த புரட்சியில் மகத்தான ஒன்று மக்கள் பேசும் மொழியிலேயே புனித நூல்களும் இருக்க வேண்டும் என்று நினைத்து அதனை சாதித்தது. மார்ட்டினுக்கு முன்னரே வேறு சிலர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்திருந்தாலும் சிறப்பான வகையில் மக்களைச் சென்றடையும் வகையில் இந்த நூலை ஜெர்மானிய மொழியில் வடித்தவர் என்ற பெருமை இவரைச் சேரும். புனித நூலை ஜெர்மன் மொழியிலேயே பாமரர்களும் படித்து தெரிந்து கொண்டமையால் மக்கள் சிந்தனையில் அதீத மாற்றங்கள் உருவெடுத்தன. போப் என்ற சாம்ராஜ்ஜியத்தின் மேல் இருந்த பயம் ஜெர்மானிய மக்கள் மத்தியில் குறைந்தது. திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் இருந்தவாறு இறை பணி செய்யலாம் என்ற சிந்தனை லூதரேனியன் சிந்தனையில் நிஜப்படுத்தப்பட்டது. பல மூட நம்பிக்கைகள் களைந்தெடுக்கப்பட்டன. 

ஜெர்மன் மொழியின் சீரமைப்பிலும் மார்ட்டின் லூதரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல வழக்குகளைக் கொண்ட கடின மொழி ஜெர்மன் மொழி. அதனை சாக்ஸன் வகை வழக்கின் அடிப்படையில் எழுத்து மொழியாக சீர்படுத்திய பெருமை இவரைச் சாரும்.

நீங்கள் குறிப்பிடுவது போல பிற்காலத்தில் இவர் யூதர்களுக்கு எதிர்ப்பாக நடந்து கொண்டவை மனித நேயத்திற்கு எதிர்ப்பான ஒன்றே. அதனை மறுக்க முடியாது.

சுபா

2011/12/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Subashini Tremmel Sat, Dec 10, 2011 at 7:37 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மார்ட்டின் லூதரின் 95 தீஸிஸ் - லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இதனை இவர் விட்டன்பர்க் தேவாலயத்தின் (Castle Church in Wittenberg) முன் பக்கக் கதவில்  மாட்டி வைத்தார் என்பது பலர் அறிந்த விஷயம். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த தேவாலயத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் ( 7 ஆண்டு போரில் பெரும் சேதம் அடைந்தது இந்த தேவாலயம்) இந்த முன் பக்க கதவை செம்பில் உருவாக்கி அக்கதவிலேயே இந்த 95 வாசகங்களையும் வடித்திருக்கின்றனர்.

Castle+Church.jpg


இந்த காசல் தேவாலயத்தைப் பார்க்கவும் இதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இங்கே செல்க. இங்கே தான் மார்ட்டின் லூதரின் சமாதியும் உள்ளது.

xti_8226p.jpg


ஜெர்மனிக்கு விஜயம் செய்பவர்கள் பார்க்க வேண்டியவற்றில் இந்த தேவாலயம் முக்கியம் வாய்ந்த ஒன்று.

சுபா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Dec 10, 2011 at 7:44 PM
To: mintamil@googlegroups.com
இருவருக்கும் நன்றி. சுருக்கி, சுருக்கி, எழுதுவதால், மார்ட்டின் லூதர் அவர்கள் ஜெர்மானிய மொழிக்குச் செய்த சேவையை,'...ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன்...' என்றதுடன் நிறுத்தி விட்டேன். கீதா சொல்கிற படி இன்னும் எழுதியிருக்கலாம். உரிய தருணத்தில் Fill up the blanks செய்கிறேன். அன்றன்று சுடச்சுட எழுதுவதாலும், பதிவு செய்ய வேண்டிய கெடு நெருங்கும் வரை ஆய்வு செய்வதாலும், இப்படி. கொஞ்சம் ஓய்வும் தேவை. படிக்கறதே இல்லை.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Dec 10, 2011 at 7:48 PM
To: mintamil@googlegroups.com
மிக்க நன்றி, ஸுபாஷிணி. நான் கொடுத்த உசாத்துணையில் இவருடைய 'இறை நம்பிக்கை' பற்றிய கட்டுரை உளது. எல்லா சமயத்தினரும் உடன்பாடு காண்பார்கள்.
[Quoted text hidden]

Subashini Tremmel Sat, Dec 10, 2011 at 7:52 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/12/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இருவருக்கும் நன்றி. சுருக்கி, சுருக்கி, எழுதுவதால், மார்ட்டின் லூதர் அவர்கள் ஜெர்மானிய மொழிக்குச் செய்த சேவையை,'...ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன்...' என்றதுடன் நிறுத்தி விட்டேன். கீதா சொல்கிற படி இன்னும் எழுதியிருக்கலாம். உரிய தருணத்தில் Fill up the blanks செய்கிறேன். அன்றன்று சுடச்சுட எழுதுவதாலும், பதிவு செய்ய வேண்டிய கெடு நெருங்கும் வரை ஆய்வு செய்வதாலும், இப்படி. கொஞ்சம் ஓய்வும் தேவை. படிக்கறதே இல்லை.
சுருக்கி சுருக்கி சொன்னாலும் அன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவிஷயத்தை கொஞ்சம் நினைத்துப் பார்க்க முடிகிறதே. நீங்கள் இப்படி தொடருங்கள். ஏனையோர் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தகவல் வளமடையும் இல்லையா?

சுபா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Dec 10, 2011 at 8:02 PM
To: mintamil@googlegroups.com
Exactly. அது தான் என் இலக்கு. நாளை பிரசுரிக்க நேர்ந்தால், உரிய முறையில் நன்றி செலுத்த வேண்டும் என்று விழைகிறேன். இப்பவே 500/600 பக்கங்கள் தாண்டியாகி விட்டது. எடிட் செய்ய துவங்கவும் வேண்டும். நன்றி, இன்னம்பூரான்
[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Dec 11, 2011 at 10:03 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நல்ல சுறுசுறுப்பு.
[Quoted text hidden]

No comments:

Post a Comment