அன்றொரு நாள்: டிசம்பர் 26
பிரளயம்
பிரளயம் கோர்த்தது இன்றைய தினம் அதிகாலை: 00:58:53 UTC on Sunday, December 26, 2004. சென்னையில் இருந்தால், அத்தருணம் எலியட் கடற்கரையில் நடை பயின்றிருப்பேன்; ஜலசமாதி ஆகியிருப்பேன். இங்கிலாந்தில் இருந்ததால், பிழைத்தேன். உடனடி செய்தி வந்தது. மீனவர் குடியிருப்புக்களில் திருவல்லிக்கேணி தன்னார்வக்குழு ஒன்று அன்னதானம் செய்ய உதவ முடிந்தது. ஒரு பன்னிரண்டு திருமண் அணிந்த கோயில் அர்ச்சகர் சேரிகளுக்கு பறந்து, பறந்து, அன்னம் அளித்தார். பிற்காலம், ஒரு மீனவர் குடியிருப்பில் விஷ்ணு கோயில் ஒன்று கட்டப்பட்டது, ஒரு வைணவ சான்றோனின் உபயமாக. ஒரு ஓய்வு பெற்ற மானேஜர் அர்ச்சனை செய்கிறார். கல்பாக்கத்தில் ஓடோடி குடும்பங்களை காப்பாற்றிய ஏழை வீரப்பெண் ஒருவருக்கு பரிசில் அளிக்க முடிந்தது. எங்கள் மக்கள் ஆலோசனை மன்றத்தின் நண்பர்கள் அளித்த லக்ஷம் ரூபாய்க்கு மேலான தொகையை தக்கதொரு மையத்தின் மூலமாக கொடுத்து உதவமுடிந்தது. நான் செய்தது அணில் மாதிரி. அநேக பிரிட்டீஷ் ஆர்வலர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள் உடனுக்குடன் புறப்பட்டு, தொண்டு செய்ய சென்று விட்டனர். ஆனால், விஞ்ஞான ரீதியாக, ஓரளவாவது முன்னெச்சரிக்கையுடன் இருந்திருக்கமுடியும் என்பதை, ஆராய்ந்து அறிந்தும், என்னால் அதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த நோக்கத்துடன் நான் எழுதிய கடிதத்தை ஹிந்து இதழ் உதறிவிட்டது. அதற்கு பிறகு வரலாம். நடந்தது என்ன?
அன்றைய பீ.பீ.சி. செய்தியில், கடலூர் ஜயந்தி லக்ஷ்மி(70) கதறினார்: “என் பையனும், அவனுடைய இரட்டைக்குழந்தைகளும் இறந்தனர். நான் போயிருக்கக்கூடாதா? என் மருமகளின் வலியை பார்க்க முடியவில்லையே.” இம்மாதிரி ஆயிரம் சோகக்கதைகள். வேளாங்கண்ணியில், சென்னையில், மாமல்லபுரத்தில். எத்தனையோ.வடக்கு இந்தோனேஷ்யாவில் ஒரு கடும் பூகம்பம் (8.9). அதனால் கடலின் அடித்தளம் 33 அடிகள் உயரத்துக்குத் தடுமாறியது. சமுத்ரராஜன் கொந்தளிப்பு, பல்லாயிரம் மைல்களுக்கு, 800 கிலோமீட்டர் வேகத்தில். இம்மாதிரி கண்டதில்லை. 13 நாடுகளில் 200,000 மக்கள் இறந்தனர். பாதிக்கு மேல், இந்தோனேஷ்யாவில். உலகமே 12 பிலியன் டாலர்களை திரட்டிக்கொண்டு நிவாரணம் அளிக்க வந்தது.
சரி. நான் ஹிந்து இதழுக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சம்:
‘ஓரளவுக்கு ‘வருமுன் காப்போன்’ எச்சிரிக்கை/நடவடிக்கைகள் இயலாது என்று அமைச்சர் கபில் சிபல் சொன்னது சரியல்ல. ஏனெனில், நிலநடுக்க அசைவுகள். கடல் கொந்தளிப்பை விட வேகமாக சஞ்சரிப்பதால்,, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்க எச்சரிக்கையை முதல் நாளே (Bulletin 001 at 0315 PM HST 25 DEC 2004) கொடுத்து, சுனாமி எச்சரிக்கையையும், உடனுக்குடனே (Bulletin Number 002 at 0204Z 26 DEC 2004) கொடுத்ததாலும், 20 நிமிட சாவகாசமாவது கிடைத்திருக்கும். ‘கடல் உள்வாங்கினால், சுனாமி வருகிறது என்று ஊருக்குள்ளே ஓடி விடுங்கள்.’ என்று வலியுறுத்திருக்கலாம்.’
நான் உகந்த ஆதாரம் சுட்டியிருந்தேன் என்பதை தெரிவிக்க, அந்த கடிதத்தை இணைத்துள்ளேன். எனக்கு ஒரு சம்சயம். இந்தியா, அந்த எச்சரிக்கைகளை பார்க்காமல் உறங்கிக்கிடந்ததோ? அமைச்சர் அதனால் தான் நைச்சியம் செய்தாரோ? ஆண்டவா!
Sir,
The tsunami calamity is horrendous. You have rightly drawn attention to the fact there was enough time to clear the most vulnerable areas,the beaches, in your Editorial, Death From The Sea (Dec 27, 2004). Let us look at the warnings.
Pacific Tsunami Warning Center logged the earthquake off west coast of northern Sumatera Bulletin 001 at 0315 PM HST 25 DEC 2004 in its and warned of a possibility of a tsunami near the epicenter, in its Bulletin Number 002 AT 0204Z 26 DEC 2004.
Writing on ‘Disaster puts focus on lack of Indian Ocean warning system’, in Financial Times, London (December, 26, 2004), Fiona Harvey, its Environment Correspondent quotes Brian Baptie, a seismologist at the British Geological Survey, ‘A seismic monitoring system should have been able to detect Sunday's quake and could have given warning to the areas likely to be worst affected’. This is because, she points out, seismic waves travel through the earth faster than tsunamis travel through the sea. She adds that Geoscience Australia, the Australian government agency, warned in September that the lack of a warning system in the Indian Ocean could result in devastation. As Baptie put it, a 20 minutes' headstart in getting away is feasible by popularising a simple advice: if the sea suddenly starts to withdraw far from the shore at a rapid pace, they should evacuate the area, as it is probably a sign of an approaching tsunami.
Minister Kapil Sibal is credited with the statement that such a monitoring is not possible, world-wide. If so, he is wrong.
Yours sincerely,
S.Soundararajan
இன்னம்பூரான்
26 12 2011
உசாத்துணை
No comments:
Post a Comment