Friday, March 1, 2013

[MinTamil] அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.




[MinTamil] அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.
7 messages

Geetha SambasivamSat, Feb 11, 2012 at 11:09 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ் , தமிழ் வாசல்
Cc: தமிழ் சிறகுகள்
மின் தமிழ் நண்பர்களுக்கு,

வணக்கம். நான் மெம்பிஸ் வரப் போகும் செய்தி தெரிந்ததில் இருந்தே திரு இன்னம்புரார் என்னை இங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்த்து எழுதச் சொல்லி வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் சில தவிர்க்க முடியாத சொந்தக் காரணங்களால் என்னால் எங்கும் செல்ல முடியாமல் போனதோடு நாளை ஹூஸ்டனும் திரும்புகிறேன். ஆகவே என்னால் மார்ட்டின் லூதர் கிங்கைக்கொன்ற இடத்துக்கோ, லிங்கனைக் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கோ செல்ல முடியவில்லை.  என்றாலும் இன்றைய பிப்ரவரி 12அன்றொரு நாள் தொடருக்கான விஷயத்துக்கு லிங்கனின் பிறந்த நாள் என்பதால் என்னை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ரொம்பத் தயங்கினேன்.  அவரைப் போல என்னால் ஜீவன் ததும்படியான எழுத்துக்களில் எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்குத் தொகுத்துள்ளேன்.  இதைத் தொடர்ந்து அவரின் அனுபந்தமும் வரும்.  நாளை தான் இங்கே பிப்ரவரி 12 என்றாலும் நாளை முழுதும் பயணத்தில் இருப்பதால் இன்றே போடுகிறேன்.   இந்தியாவில் பிப்ரவரி 12 வந்திருக்குமே.  அதிக நீளமான பதிவுக்கு மன்னிக்கவும். 
**************************************************************************************************************************************************************************


இந்தப் பையன் எப்போப் பார்த்தாலும் படிச்சுட்டே இருக்கான்;  இவன் எங்கே உருப்படப்போறான்?” தந்தை கரித்துக் கொட்டினார். ஆனால் தாய்க்கு நம்பிக்கை இருந்தது.  “இல்லை; இவன் பெரிய ஆளாக வரப் போகிறான்.” என்று நம்பிக்கையுடன் மகன் தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள், “மகனே, பள்ளிக்குச்  செல்!’ என அனுப்பி வைத்தாள்.  இத்தனைக்கும் மாற்றாந்தாய் அவள். சொந்தப் பிள்ளை இல்லை.  மூத்தாள் பிள்ளை.  பள்ளிக்குப் போகையிலேயே பிள்ளைக்குப் பதினொரு வயசு.  சில நாட்கள் போவான்; பல நாட்கள் போக முடியாது.

தந்தைக்கு மகன் ஏதேனும் ஒரு பண்ணையில் வேலைக்குப் போனான் எனில் வரும் ஒரு சில சென்ட்களே பிரதானமாக இருந்தது.  கஷ்டப்பட்ட குடும்பம்.  முதலில் கென்டுகியில் இருந்தனர்.  முதல் மனைவி நான்சி இருந்தாள் அப்போது.  பின்னர் இன்டியானா வந்தனர்.  அங்கே தான் நான்சி இறக்க நேரிட்டது.  பின்னர் தந்தையான தாமஸ் லிங்கன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆபே என அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாந்தாய் அருமையானவளாக அமைந்தாள்.  இருந்தும் தந்தை மாதா மாதம் கிடைக்கப் போகும் எட்டு டாலருக்காக ஆயிரம் மைல் தள்ளி இருக்கும் நியூ ஆர்லியன்ஸுக்கு மகனை வேலைக்கு அனுப்பி வைத்தார்.  அங்கேதான் முதல் மாற்றம் லிங்கனின் மனதில் ஏற்பட்டது.  அடிமைகள் அங்கே சந்தையில் விற்கப்படுவதைக்கண்டு மனம் வருந்தினார் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினார்.  பின்னர் நியூ ஆர்லியன்ஸ் திரும்பி வந்த ஆபேக்கு 21 வயசும் ஆகிவிடத் தன்னந்தனியாகத் தன் சுய சம்பாத்தியத்தில் வாழத் தொடங்கினார்.

பள்ளிப்படிப்பே இல்லாமல், கிடைத்த புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்ட லிங்கன் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பல ஊர்களில் பல வேலைகள் செய்து நியூ சலேம் என்னும் ஊருக்கு வந்து அந்த ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுப் பின் ஒரு தேர்ந்த வக்கீலாக ஆனது தனிக்கதை. பார்க்க இங்கே.
1847- ஆம் ஆண்டு தன் மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்ற லிங்கனுக்கு வாஷிங்டனிலேயே அடிமைச்சந்தையைக் காணவும் மனம் கொந்தளித்தது.  மாநிலங்களின் சட்டத்தை மாற்றியமைக்க முடியாவிட்டாலும்,  மத்தியில் நிர்வாகம் செய்து கொண்டு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அதிபர் இந்த அடிமைகளை ஒழிக்க ஏதேனும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்க லிங்கனை எவருமே ஆதரிக்கவில்லை.   ஐக்கிய அமெரிக்கா அப்போது மெக்சிகோவுடனான சண்டையில் முழு மனதோடு ஈடுபட்டிருந்தது.  அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த லிங்கன் பின்னர் கான்சாஸ்-நெப்ராஸ்கா பிரதேசத்தில் 1854- ஆம் ஆண்டு மக்கள் அடிமைகளை ஆதரித்து ஓட்டளித்தால் அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் போடப்பட்டதைக் கண்டு மனம் கொதித்தார்.

1858-ல் செனடர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றாலும் 1860-ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால்!!! பெருமளவுக்கு அடிமைகளை வைத்திருந்த  பதினைந்து தென் மாநிலங்களில் முதலில் ஏழும், பின்னர் நான்கும் யூனியனில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தன.  லிங்கனை அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்தன.  ஜெஃபர்சன் டேவிஸ் என்பவரை அதிபராக நியமித்தார்கள். வெடித்தது உள்நாட்டுப் போர். பார்க்க:

ஏன் போர் என்பதைக் குறித்த அவர் பேச்சு மிகவும் பிரபலம் ஆனது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
 imagesgettysburg.jpg


போரில் லிங்கன் ஜெயித்து மறுமுறைக்கான அதிபர் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். imageslincoln.jpgஆனால் இன்றளவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லிங்கனை மறக்கவே மாட்டார்கள்.  மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர். 

The Slave singing at Midnight
from Poems on Slavery
by Henry Wadsworth Longfellow
(1807-1882)

Loud he sang the psalm of David!
He, a Negro and enslaved,
Sang of Israel's victory,
Sang of Zion, bright and free.

In that hour, when night is calmest,
Sang he from the Hebrew Psalmist,
In a voice so sweet and clear
That I could not choose but hear,

Songs of triumph, and ascriptions,
Such as reached the swart Egyptians,
When upon the Red Sea coast
Perished Pharaoh and his host.

And the voice of his devotion
Filled my soul with strange emotion;
For its tones by turns were glad,
Sweetly solemn, wildly sad.

Paul and Silas, in their prison,
Sang of Christ, the Lord arisen,
And an earthquake's arm of might
Broke their dungeon-gates at night.

But, alas! what holy angel
Brings the Slave this glad evangel?
And what earthquake's arm of might
Breaks his dungeon-gates at night?




-

Innamburan Innamburan Sun, Feb 12, 2012 at 8:33 AM
To: mintamil@googlegroups.com
அனுபந்தம்
இன்று, ‘அன்றொரு நாள்’ புது பொலிவுடன்.

திருமதி.கீதா சாம்பசிவம், அப்ரஹாம் லிங்கனை பற்றிய ஜன்மதின அஞ்சலியை அழகாக அமைத்துத் தந்திருக்கிறார். நன்றி பல. கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு மேலாக அன்றாடம் இந்த தொடரை எழுதி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக ஆய்வு செய்து எழுத வேண்டியிருக்கிறது.  அவ்வப்பொழுது சில மின் தமிழர்கள் நற்கருத்துக்களும், கூடுதல் தகவல்களும் தெரிவித்தாலும், நாகராஜன் ஃபில்ம் காட்டி, சுவை கூட்டினாலும், யாரும் படிக்க வில்லையோ என்று நான் அலுத்துக்கொண்டது உண்டு. எனக்கு இடைவிடாமல் ஊக்கம் அளித்து வருபவர், கீதா. அவரும், மற்றவர்களும் எழுதத்தொடங்கினால், இவ்விழை மேன்மேலும் சிறக்கும்.

வரலாறு, நம்முடன் உலவி வரும் நிகழ்ந்த காலம். கற்கும் கல்வி எத்துறையை சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றை அறிவது நன்மை பயக்கும். ‘இத்தினம் அது நடந்தது’ என்ற வகையில் பல வரலாறுகளை அறிய இயலும். நான் தினந்தோறும் பல விஷயங்கள் கற்று வருகிறேன்.

அப்ரஹாம் லிங்கன் மாபெரும் மனிதர். அவரை பற்றி பல விமர்சனங்களை படித்திருக்கிறேன். குற்றம் காணமுடியலாம். நாம் பொருட்படுத்த வேண்டிய விஷயங்கள் வேறு. அனுபந்தம் நீண்டுவிடாமல் இருக்க, சிறு வயதிலிருந்தே என்னுடைய கலங்கரை விளக்காக ஒளி வீசிய லிங்கனின் பொன்வாக்கு ஒன்றை கூறி, விடை பெறுகிறேன்.

“ சிந்தையிலும், உள்ளத்திலும் மலரொன்று வளருமானால், அவ்விடத்தே, முள்ளை பறித்து, மலரை நடுவதே என் வாழ்க்கையின் இலக்கு.”

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
12 02 2012
[Quoted text hidden]

s.bala subramani B+veSun, Feb 12, 2012 at 8:38 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அவ்வப்பொழுது சில மின் தமிழர்கள் நற்கருத்துக்களும், கூடுதல் தகவல்களும் தெரிவித்தாலும், நாகராஜன் ஃபில்ம் காட்டி, சுவை கூட்டினாலும், யாரும் படிக்க வில்லையோ என்று நான் அலுத்துக்கொண்டது உண்டு. எனக்கு இடைவிடாமல் ஊக்கம் அளித்து வருபவர், கீதா. அவரும், மற்றவர்களும் எழுதத்தொடங்கினால், இவ்விழை மேன்மேலும் சிறக்கும்.



நான்  தொடர்ந்து  படித்து  வருகிறேன் 

முக நூலில்  உள்ளது போல் நாமும் 
 லைக் என்று சொல்வது போல் ஏற்படுத்தலாம் 

என் தொழில் பற்றி உங்களுக்கு தெரியும் 
அலைவது மட்டுமே 
அதன் மத்தியில் உங்கள் எழுத்தக்களை மிகவும் விரும்பி படிக்கிறேன் 

பாலு 
[Quoted text hidden]

Subashini Tremmel Sun, Feb 12, 2012 at 9:24 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
உங்கள் இருவரின் இந்த கூட்டு முயற்சிக்கு நன்றி.

ஆப்ரஹாம் லிங்கன் உலகம் போற்றும் ஒரு உன்னத மனிதர். அவர் பிறந்த தினத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவாகவும் படங்களுடனும் கூடுதல் குறிப்புக்களுடனும் நினைவு கூர வைத்த திருமதி.கீதாவுக்கு பாராட்டுக்கள். அருமை.

சுபா

2012/2/12 Geetha Sambasivam 
 
 
 
[Quoted text hidden]

Innamburan Innamburan Sun, Feb 12, 2012 at 10:54 AM
To: coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan
Bcc: innamburan88
பவளா! இதையும் மரபுவிக்கியில் சேர்த்து விடவும்.
[Quoted text hidden]

Geetha Sambasivam>Tue, Feb 14, 2012 at 2:35 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: தமிழ் வாசல்
நன்றி ஐயா.  வழக்கம்போல் இந்த அன்றொரு நாளும் எவரும் கவனிக்காமல்!   ஆனால் என் வலைப்பக்கத்தில் பரவாயில்லை. 


[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Feb 14, 2012 at 6:27 AM
To: mintamil@googlegroups.com
I am also seriously thinking, 'what is the best thing to do.' I do have a blog and is trying to work on my new website: http://olitamizh.com  
I do not get the time or energy to upload them, by the time I finish the day's andorunal. I wish to have your suggestions, when you can. For the present, I am thinking putting in Andorunal, only when I can ( by sparing only one hour a day). say that for 17th coming on 20th, that for 20th on 27th, but for each day. Parkkalaam. It has become a habit,
Regards,
I
[Quoted text hidden]

No comments:

Post a Comment