Google+ Followers

Saturday, April 26, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 6 ஆசிய ஜோதி


Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 6 ஆசிய ஜோதி

This is the Sixth instalment of a new series on creative writing of recent origin in Tamil. 

இறைவன் இந்த பூவுலகத்தை தடம் பிறழ்ந்த மனிதர்களிடமிருந்து காப்பாற்ற திருவுளம் கொள்கிறார். ஆறு கதிரோன் ஒளி வீச, பல சுபசூசகங்களுடன், நன்நிமித்தங்களுடன் வலம் வந்து மாயாதேவியின் மகவாக அவதரிக்கிறார். சான்றோர்களும், பிரமுகர்களும் குழந்தையை தொழுது வணங்க, ஊரும் உலகமும் கொண்டாட, விழாக்கோலம்.
அடுத்து வருவது
ஒரு நிகழ்வு. அவருக்கு லோகாயதம் படிப்பித்த அன்னப்பறவை, காதல் திருமணம், தேவகீதம்.Your preference is ours. All suggestions and criticisms will be attended to.Mail to innamburan@gmail.com

‘பாய்சன் லெட்டர் பத்து’
பச்சண்ணா சந்தில் நவசீலம்!

பாய்சன் லெட்டர் பத்து’

Inline image 1

பாய்சன் கிங் எலமனூர்’, ‘பாய்சன் கிங் எலமனூர்’ என்று அந்தக்காலத்தில் பிராபல்யம். அவர் எலமனூர் ஸ்டேஷன் மாஸ்டர். நல்ல பாம்பு அல்லது எந்த விஷஜந்து கடித்து விட்டால், அவருக்கு தந்தி கொடுத்தால் போதும். அவர் மந்திரித்து விஷத்தை முறியடித்து விடுவாராம். வெள்ளைக்காரன் ரயில்வே கம்பெனி எந்த ஸ்டேஷனிலிருந்தும் அவருக்கு இலவசமாக தந்தி அனுப்ப வசதி செய்து கொடுத்தது. இதெல்லாம் சின்ன வயசிலே துண்டுப்பிரசுரத்தில் படித்தது. அந்த அளவுக்கு நம்ம பச்சாண்ண சந்து ‘பாய்சன் லெட்டர் பத்து’ என்ற பத்மன் என்ற பத்மநாபனுக்கு அபகீர்த்தி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

பச்சண்ணா சந்து ஒரு தனி உலகம். அமீன் பிச்சுமணி கூச்சல் ரகம். டெய்லர் ராவுஜி மெளனராகம். சூட்டிகை கமலம் தான் உயிர்நாடி. மூணாவது கட்டு அண்ணாசாமி ஐயங்கார் செத்தாலும் செத்தார், அவருடைய சீமந்த புத்திரன் பத்துவுக்கு காவல் இல்லாமல் போய்விட்டது. அவனும் தன்னிஷ்டப்படி மடல்கூத்து நடத்திக்கொண்டிருந்தான். நாலாங்கிளாஸ் படிக்கும்போதே, மதுரம் டீச்சருக்கும் தாமஸ் சாருக்கும் தகாத உறவு என்று கழிவறையில் கிறுக்கின பிஸ்தா அவன்.  எஸ்.எஸ்.எல்.சி. கோட்டு அடிச்சாலும், அவன் ஜேபில் அஞ்சு மசி பேனாக்கள் இருக்கும். எப்போதும் அழுக்குக் கோட்டு ஒண்ணு. அதில் கடந்த காலத்து ஸ்டாம்ப் பேப்பர் வச்சுருப்பான். உயிலை மாற்றி எழுத, போலி கிரயப்பத்திரம் எழுத, பொய்க்கணக்கு எழுத ஆகி வரும். அற்புதமாக ஆங்கிலம் எழுதுவான். தப்பும் தவறும் இயல்பாகவே அமையும். படிக்கிறவா நம்பறமாதிரி இருக்கும். உலகமே அவனுக்கு சத்ரு. இப்டித்தான், இவன் கனம் கோர்ட்டாருக்கு ஒரு லெட்டர் போட்டான், ‘இந்த பிச்சுமணி துரைத்தனத்தாருக்கு உண்மையான அமீன் இல்லை. மஞ்சக்கடுதாசி கடங்காரன் கிட்ட பச்சை நோட்டு இரண்டு வாங்கிவிட்டான்.’ என்று. வில்ஸன் துரை வீட்டுக்கே வந்துட்டான். மாட்டிக்கொண்ட பிச்சுமணி உதறிப்போய்ட்டார். வில்ஸன் அண்ணாசாமி ஐயங்காரை விட்னெஸ்ஸா கூப்பிட்டான். அவருக்கு மயக்கம் வரும்போல ஆயிடுத்து, அந்த லெட்டரை பார்த்தவுடன். பிள்ளையாண்டான் கையெழுத்து ஸ்பஷ்டமா இருந்தது. எப்படியோ சமாளிச்சார்னு வச்சுக்கோங்கோ. அவனை ஒருவாறு அடக்கி வச்சிருந்தார். அவரும் போய்ட்டார். தறுதலைக்கும் விடுதலை.

ஜோஷிக்கடைக்கு ஒரு லிகிதம். ‘உன் கடையிலிருந்து ஒன்பது கஜம் சீட்டி எடுத்து ராவுஜி கமலத்துக்கு சித்தாடை தைச்சுக்கொடுத்தார்.’ ஜோஷி குஜராத்திக்காரனா? ராவுஜி கிட்ட நேரிடையா சொல்றான், ‘ராவுஜி! நீங்க அப்படியெல்லாம் செய்யற ஆளு இல்லை. இருந்தாலும் அந்த பத்மன் பாயி கிட்ட ஜாக்கிரதையாக இரும்.’ என்று. அவர் சக்குபாயிடம் மட்டும் தான் புலம்பினார். அவள் கமலத்திடம் சொல்ல, அவள் பத்மனை நார் நாரா கிழிச்சுப்போட்டாள். இதற்கெல்லாம் அடங்கறவனா, அவன். கறுவிக்கொண்டே இருந்தான்.

வழக்கம் போல, கமலம் சரோஜா மாமியை பார்க்கப்போனாள். மாமி அவளுக்கு பாட்டுக் கிளாஸ் எடுக்கிறாள். இரண்டு பேரும் அன்யோன்யம். கமலம் போல சமத்தும் கிடையாது. சரோஜா மாதிரி யாருக்கும் பரிவும் கிடையாது. இது பொறுக்குமோ, ‘பாய்சன் லெட்டர் பத்துவுக்கு’? மேல ராஜவீதி வக்கீல் ராகவாச்சாரியாருக்கு தஞ்சாவூர் கோர்ட்டில் மட்டுமில்லை, மதராஸ் ஹை கோர்ட்டில் கூட ரொம்ப மரியாதை என்று பேசிக்கொள்வார்கள். ஜட்ஜ் ஓல்ட்ஃபீல்ட் சாயரக்ஷையில் வந்து அவரிடம் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். அதுக்காகவே, இவர் மாசாமாசம் மதராஸ் போறார்னு பேசிப்பா. எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. அவர் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். ரொம்ப அமரிக்கையாக இருப்பார். பெரிய ஹாலில் ஜே ஜேன்னு கட்சிக்காரர்கள் கூட்டம் இருந்தாலும், எல்லாரிடமும் கனிவாக பேசுவார். தீர விசாரித்துத் தான் கேஸை எடுத்துக்கொள்வார். கிரிமினல் சைடு செல்வம் ஈட்டும் என்றாலும், அவருக்கு அதில் ஆர்வம் கிடையாது. அவரை பற்றி, யாராவது கேட்டால், இன்னொரு நாள் தான் எழுதணும். 

சரோஜாவிடம் பாட்டு கற்றுக்கொண்ட கமலம் வீட்டுக்குத் திரும்பும்போது லேசாக இருட்டி விட்டது, அன்று. வாசலில் பராக் பார்த்துக்கொண்டு நின்ற பத்மன், ‘ஏண்டி கமலம் இத்தனை லேட்டு?’ என்றான். தேவையா? அவளுக்கு ஒரே எரிச்சல். ‘என்ன நச்சுக்கடுதாசி! நீங்க யாரு என்னை கேட்கறத்துக்கு?’ என்றாள். ‘அப்படி கேளும்மா, கமலம்.’ என்று தூபம் போட்டார் அமீன் பிச்சுமணி. அவமானம் தாங்காமல் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தால், ஆம்படையாள் ஜானம்மா ‘அந்தக் குட்டிக்கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.’ என்று தோளில் முகத்தை உரசிக்கொண்டு அழகு காண்பித்தாள். பத்மனுக்கு கோபம் கொப்பளித்தது. ஏனென்றால், அன்று இரவு காயப்போட்டுவிடுவாள். வாசல் திண்னை தான் மஞ்சம். 

அந்த ஆத்திரத்தில் பேனாவை எடுத்தான். கன்னா பின்னான்னு ராகவாச்சாரியாரையும் கமலத்தையும் பற்றி அவதூறுகளை அரைகுறை பிட்ஜின் இங்க்லீஷில் எழுதி, கவரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜரிகை டர்பன் கோபாலாச்சாரியின் விலாசம் எழுதி விட்டு, தூங்கிப்போய் விட்டான். காலையில் எழுந்தவன், அதை மறந்து, சீட்டு விளையாடப்போய்விட்டான். ஜானம்மா, பாவம், அப்பாவி. நிரக்ஷரக்குக்ஷி. கமலம் ஸ்கூலுக்குக் கிளம்பச்ச்ச, அவளிடம் அதைக் கொடுத்து தபாலில் போடச்சொன்னாள். விலாசத்தைப்பார்த்துத் திகைத்துப்போன கமலம், நேராகப்போய் அதை கோபாலாச்சாரியிடமே சேர்த்து விட்டாள். அவரும் கொஞ்சம் ஓய்வில் இருந்ததால், சாவதானமாக, அதை பிரித்துப்படித்தார். முகம் கறுத்தது.  அவர் அண்ணாசாமி ஐயங்காருக்குப் பத்து நாள் தாயாதி. இரண்டு குடும்பத்துக்கும் ஜன்மப்பகை புகைந்து கொண்டு இருந்தது. கமலத்திடம் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அவள் முகம் சிவந்ததையும், அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டதையும், போலீஸ்ஸோல்லியோ, உன்னிப்பாக கவனித்தார். ஆதியோடந்தமாக, கேட்டு, எல்லாவற்றையும் எழுதி வாங்கிண்டார்.
வழக்கு பதிவு செய்து விட்டார். பச்சண்ணா சந்து என்ன? மேலராஜவீதியே அதிர்ந்தது. 
மாஜிஸ்ட்ரேட் மாசிலாமணி ஜெயில் தண்டனை கொடுத்து விட்டார். இத்தனைக்கும் வக்கீல் ராகாவாச்சாரியார் பிராது ஒன்றும் கொடுக்கவில்லை.
நாலு மாதம் கழித்து:
ஜானம்மா: என்னமோடியம்மா. கூழும், களியும் தான் என்று அழறார். ஆனா கொழு கொழுன்னு தான் இருக்கார். பேனா கேட்டார். விநாசகாலே விபரீத புத்தி! தரமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.
அடுத்து வருவது கமலம்.
இன்னம்பூரான்
19 11 2012

தமிழர் யார்


தமிழர் யார்?

தமிழர் என்றால் யார். அவர் கொண்டிருந்த பண்பு நலன்கள் என்பன பற்றி முதலில் ஒரு டெஃபினிஷன் தந்து அதனோடு இத்தகைய கேள்வியை வைத்தால் இந்த தேடல் சரியான வகையில் செல்லும் என்பது என் எண்ணம்.
~ மின் தமிழ் நண்பர்

~ இது பற்றி துறையூர் சொற்பொழிவில்,'தமிழர் யார்?' என்ற தலைப்பில் திரு.விக. சில கருத்துக்களை கூறினார். அவையாவன:
1. தமிழ் தொன்மை வாய்த்தது. தமிழரின் வாய்மையை ஒரு எல்லைக்குள் அடக்குவது இயலாத காரியம்;
2. நந்தமிழின் மெல்லோசை வெளிப்படை. மொழியோசையின் வளர்ச்சியிம் பால பருவமிது; தமிழ்மொழியின் தொன்மைக்கு அதன் இயலும், இதுவும் சான்றுகள்;
3. மூவாயிரம் ஆண்டுகளுக்கு தொன்மையான தொல்காப்பியம் பல திறக்கருத்துக்களை உள்ளடக்கியது. அது வேதகாலத்துக்கும் முந்தியது என்று நச்சினார்க்கினியாரின் கூற்று. அது, தனக்கும் முந்திய படைப்புகளை குறிப்பிடுகிறது;
4. தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும், ஒலிநுட்பம், ஒலி திரிந்து எழுத்தாதல், அளபடை, திணை, ஆகுபெயர், அன்மொழித்தொகை, அகம், புறம், அவற்றுக்குள்ள தொடர்பு, அரசு, போர்முறை, காதல் நுட்பம், உள் நிகழ்ச்சி, மெய்ப்பாடு, இறைச்சி, கூர்தல் முதலியவை கையாளும் திறன் வியக்கத்தக்கது. அது தொன்மையை சுட்டுகிறது; தமிழன் கை குறி, ஒலிக்குறி முதலியவற்றை புரிந்து கொண்டு, எழுத்து, சொல், பொருள் என்று மொழியை செப்பனிட்டு வளம் படுத்தியதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கலாம். தமிழனின் தொன்மைக்கு வேறு விரிவுரை தேவையில்லை;
5. தூய தமிழ் என்பது ஒரு மாயை (அய்யா மறைமலை அடிகளாரின் மாணாக்கர்.). இனக்கலப்பு என்பது இயற்கை வரலாறு குடி புகந்து நிலைத்தவர்களை தமிழினத்தில் இணைத்துக்கொண்டதும், அவர்கள் இணைந்து கொண்டதையும் கூறுகிறது. எனவே,அவர்களின் பழக்க வழக்கங்களையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. உலகில் எவ்வினமும் கலப்பற்றதாக இல்லை என்பது கருதற்பாலது. கலப்பால் வளர்ச்சியே உண்டு;
6. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும், குடி புகந்து நிலைத்தவர்களும், அவர்களின் இனம், மதம், யாதாயினும், தமிழரே. தமிழ்நாட்டாரின் சமய கொள்கைகளின் வேற்றுமை இதற்கு ஒரு பொருட்டல்ல;
7. ஆரியர்/தமிழர் பிரிவு விதண்டாவாதம். தூய ஆரியராதல், தூய தமிழாரதல் தற்காலம் இல்லை என்று வற்புறுத்தும் அய்யா அவர்கள் இந்த பிரிவினை வாதத்தையும், அதன் பகைமையையும் கண்டிக்கிறார்கள்;
8. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பூசல், வடமொழி தென்மொழி பிணக்கு எல்லாம் திருவிளையாடல். வடமொழி பாரத நாட்டுக்கு பொது மொழி; தமிழ் நாட்டு பார்ப்பனர்களின் தமிழ் தொண்டு போற்றத்தக்கது;
9. தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும், தமிழராகப்பார்க்கும் நெஞ்சம் அரும்பி மலர்வதாக, என்று அய்யா அவர்கள் 1932 ல் அறிவுரை அளித்தார். எண்பது வருடங்கள் கழித்து விடை தேடிக்கொண்டிருக்கிறோம்!
அன்புடன்,
இன்னம்பூரான்
26 04 2014
Image Credit: http://nerudal.com/images/2009/10/worldtamilsangam.JPG

Friday, April 25, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 5. ஆசிய ஜோதி


Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 5.
This is the Fifth instalment of a new series on creative writing of recent origin in Tamil. 
ஆசிய ஜோதி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Asia Jothi: Kavimani Desika Vinayakam Pillai
We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours. All suggestions and criticisms will be attended to.
Mail to innamburan@gmail.com

எலெக்க்ஷன் சில்லரை -1

எலெக்க்ஷன் சில்லரை -1

இன்னம்பூரான்
25 04 2014
தேர்தல் முடிவு வரும் வரை தாக்குப்பிடிக்கணுமே. ஆனாலும் பணம், காசு என்று ஆலாய் பறக்கலாகாது. அதனால் சில்லரைக்கு வந்தேன். குலுக்கலாம். குலுங்கும். பண்பு குலையாது. எப்போதுமே சர்தார்ஜிகளையும், தாய்க்குலத்தையும் கேலி செய்வது ஆணுக்கு அழகு ? நான் நேரில் கேட்டு மகிழ்ந்த நிகழ்வு. தருமமிகு சென்னையின் ஆர்யபவனாகிய மைலாப்பூரில் ரானடே நூலகமும், ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலும், இந்த பிரமுகர்களைப்போல இல்லாமல், ஒரே இடத்தில் வாசம். அருகில் உள்ள வக்கீல் மாமாஸ் வாசஸ்தலமாகிய மைலாப்பூர் கிளப்பிலிருந்து மசால் தோசை நறுமணம் தூக்கியடிக்கும். சமயத்தில், ‘ஆடுதனை இறக்குடா!’ போன்ற நற்றொலிகள் ( தமிழ் ரைட்டா, தேவ்?) எதிரொலிக்கும். கீர்த்தனாரம்பம் இப்படியெல்லாம் இருக்கும்போது, முதல் தேசீய தேர்தல் 1952 பற்றி ஒரு சான்றோர் சபை ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலில் கூடியது. பிற்கால கவர்னர் கோபால் ரெட்டிகாரு தலைமை. பேச்சாளர்களில் ஒருவர் திருமதி.நல்லமுத்து ராமமூர்த்தி. ராணி மேரிக்கல்லூரி முதல்வர்.  அவர் நன்முத்தே. அவருடைய கொயட் கணவர் டி.வி.ராமமூர்த்தி இந்தியாவின் முதல் ஆக்சுவரி. நமக்கு ஏற்கனவே அறிமுகமான, உன்னதமாக உரையாற்றுவாராகிய டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி அவர்களின் சத்புத்திரன்.  ஆனால் கொஞ்சம் (கொஞ்சம் என்ன? ஜாஸ்தி) கர்நாடகம். டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிக்கு பிராமணரல்லாத மருமகளை வரவேற்க விருப்பமில்லையாம். பிள்ளையை கூட தள்ளி வைக்க நினைத்தார் என்று பேச்சு அடிபடும். டி.வி.ராமமூர்த்தி செவி சாய்க்கவில்லையாம். அவர் தான் நல்லமுத்துப்பக்கம் சாஞ்சுட்டாரே. டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி வழிக்கு வந்துட்டார் என்று கேள்வி. இதெல்லாம் எதுக்கு சொல்றே என்று கேப்பேள். பின்னே சில்லரையை எப்டி குலுக்கறது. சொல்லும் ஓய் !

தலைமை காரு தாய்க்குலத்தின் மீது ஒரு ஜோக் அடிச்சார். இஸ்லாமிய புர்க்கா அணிந்த ஒரு பெண்மணி, ஒரு ராவுத்தரின் மனைவியாக வந்து வாக்களித்து விட்டு, மறுபடியும் மற்றொருவரின் மனைவியாக வந்த் வாக்கு அளித்தார் என்று அளந்து விட்டார்கள்; ‘கொல்’ என்று சிரித்து தன் ஜோக்கை மெச்சினார். கரவொலி தணிந்த பின், திருமதி.நல்லமுத்து ராமமூர்த்தி வினவினார், ‘புர்க்கா ஆசாமி ஆம்பிளையில்லை என்று உமக்கு எப்படித்தெரியும்?’. கொழு கொழு கன்றே! கன்றின் தாயே என்று அழகிய வதன கோபால் ரெட்டிகாரு முகத்தில் ஈயாடவில்லை. கரவொலி மைலாப்பூர் கிளப்பில் கூட கேட்டதா சொல்லுவா.
வர்ரேன்.

சித்திரத்துக்கு நன்றி: http://news.bbcimg.co.uk/media/images/65645000/gif/_65645962_3_burka_290-1.gif

Thursday, April 24, 2014

அமைதிச்சாரல் : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருக்கிடிச்சு ! : 13

அமைதிச்சாரல் : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருக்கிடிச்சு ! : 13இன்னம்பூரான்
24 4 2014

தமிழ்நாட்டில் இன்று நடந்து முடிந்த தேர்தல், அசம்பாவிதம் ஒன்றும் இல்லாமல் நடந்தேறியதாக செய்தி. ஆனால் மதியம் மூன்று மணி வரை 60% மட்டுமே. (update: @ 5pm: 70%) வங்காளத்தில் 80%, மத்ய பிரதேசத்தில் 59%, ராஜஸ்தானில் 56%, ஆனானப்பட்ட உத்தர பிரதேசத்தில் 55%, மாலை ஐந்து மணி வரை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மதியத்திற்கு மேல் மந்த கதி என்று கேள்வி. கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை போன்ற சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சற்றே மக்கார் செய்தன. மொத்தத்தில் தேர்தல் கமிஷனின் ஆளுமை, மேலாண்மை, பாரபக்ஷமின்மை, திறன், நடைமுறை சிக்கலவிழ்ப்பது பற்றி பெரும்பாலோர் சிலாகித்தனர். இன்று சினிமா தியேட்டர்கள் கூட மூடப்பட்டன. ஷரத்து 144 போட்டது நலனே. கள்ளுக்கடையை மூடியதும் நலனே. இதில் உள்ள படிப்பினையை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. 550 லக்ஷம் வாக்காளர்கள் உள்ள் 61,000 வாக்குச்சாவடிகளில், 9000 சாவடிகளுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்ற கணிப்பு. ஆயினும், சராசரி பாமரர்கள் ஆன அரசு ஊழியர்கள் செவ்வனே அவரவரது கடமைகளை செய்ததற்கு நன்றி கூறுபவர்கள் தென்படவில்லை. 
தேர்தல் கமிஷனின் அரசாங்கத்தை மெச்சத்தான் வேண்டும். சில சமயம், தேர்தல் கமிஷனையே மக்கள் பிரதிநிதியாக பாவித்து, குடியரசை அவர்கள் கையில் ஒப்படைக்கலாம் என்ற நப்பாசை கூட எழுகிறது என்ற பேச்சு அடிப்பட்டது. புதிய பாராளுமன்றமும், சட்டசபைகளும் தேர்தல் ஊழியர்களுக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அத்தகைய பேச்சு அடிபட்டாலும், எடுபடாது என்பது தெரியும். அண்டைக்காலம் வரை தேர்தலில் வாகை சூடிய மக்கள் மன்னர்-பிரதிநிதிகளில், மக்கள் நலனுக்கு பாதகம் விளைவித்தவ்ர்களை இனம் கண்டு கொண்டாலும், சாதி அடிப்படை தான் ஆணிவேர் என்றாலும், மக்கள் அவர்களுக்கு வாக்கு அளிப்பது கண்கூடு. வாக்களிப்பில் நேர்மை இருக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் புகழக்கூடிய வகையில் அமைந்திருந்தாலும், காசு பணம் புரண்டது, ஆங்காங்கே என்பதும் உண்மை. பறிமுதல் புள்ளி விவரங்களை பார்த்தால், எல்லா கட்சிகளும் காசே தான் கடவுளடா என்று செயல்பட்டதாகத் தெரிகிறது. கூட்டணிகள் கேலிக்குரியவை. கீரிப்பிள்ளை பாம்பை வாழ்த்துகிறது; பாம்பு கீரிப்பிள்ளையை வாழ்த்துகிறது. சகோதர போர்க்களம் தாய்க்கட்சியை குலைத்து விடும் என்று அஞ்சுகிறார்கள். ஆளும் கட்சி தனித்து நின்று போட்டியிடுகிறது. காங்கிரஸ்ஸும் அப்டியே!  ஆனால், நிர்க்கதி பொருட்டு. பி ஜே பியும் ஆம் ஆத்மியும் இறக்குமதிகள். ஆனாலும் மோடி, மஸ்தானாகத்தான் உலவினார். நீங்கள் எந்தக்கட்சியின் பிரகடனங்களை படித்தாலும், குழம்பிப் போவீர்கள். கொள்கைகள் தென்படவில்லை. தூஷணைகள் பறந்த வண்ணம்.

இறை துணை வேண்டும்.
அடுத்த இடுகை, நாடு முழுவதற்கும் தலை விதி அறிவிக்கப்பட்ட பின்.
சித்திரத்துக்கு நன்றி:http://nandhavanam.files.wordpress.com/2010/09/innocent-baby-boy-sleeping.jpgWednesday, April 23, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 4


Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 4

This is the Fourth installment of a new series on creative writing of recent origin in Tamil. 

ஆசிய ஜோதி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Asia Jothi: Kavimani Desika Vinayakam Pillai

We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours.

All suggestions, criticisms & questions will be attended to.
இன்று ஏப்ரல் 24, 2014.

We had a glimpse of the Lord God’s determination to come down to Mother Earth to rescue Mankind from the self-created Downfall, the Divine whisper of the Coming of the Lord, in Kavimani’s words. I recite snatches of Sir Edwin Arnold’s epic poem for the very same glad tidings conveyed in tranquil poetic language by a Westerner as early ad 1879. 

Hereafter, we shall go at a faster pace, with occasional glimpses at both the epics, as we have to cover an extensive ground. Please bear with me. Both the epic poems are available over the Internet and I shall, with humility, pass on the links, who desire the same.

{Readings:...}


*

As ’t were high noon; down to the farthest hells
Passed the Queen’s joy, as when warm sunshine thrills Wood-glooms to gold, and into all the deeps
A tender whisper pierced. 
“Oh ye,” it said,
“The dead that are to live, the live who die,
Uprise, and hear, and hope! Buddha is come!”
… And when the morning dawned, and this was told,
The grey dream-readers said 

“The dream is good!
The Crab is in conjunction with the Sun;
The Queen shall bear a boy, a holy child
Of wondrous wisdom, profiting all flesh,
Who shall deliver men from ignorance,
Or rule the world, if he will deign to rule.”…
i.e. he will either become a Buddha or an Universal Monarch.

நீங்கள் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும், ஹிந்து சனாதனமதம் சார்ந்த புராணங்களில் தெய்வத்தின் வருகை பற்றிய செய்திகளை படித்தாலும், ஏசு பிரான் மாட்டுத்தொழுவத்தில் immaculate conception அவதாரத்தை நோக்கினாலும், கிழக்கே இருந்து சான்றோர்கள் வந்து குழந்தை ஏசுவை தொழுததை படித்தாலும், நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட இறையருளை உணர்ந்தாலும், புத்தரின் அவதாரம் பற்றி ஐயா கவிமணி அவர்களின் ஆசிய ஜோதி படித்தாலும்,
இறைவன் அங்கு வந்து நிற்பான் என்பதில் ஐயமில்லை. 

அதன் பொருட்டு, இப்போது சங்கத்தமிழ் பரிபாடலின் ஒரு செய்யுளுக்குப் போகிறோம்.  பொருள் என்ன? Attributes of the Almighty God.

தீயுனுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலும் நீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும் நீஅனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ (பரி.3: 63-68) 

ஆங்கிலத்தில் சொன்னால்: You are the Almighty, You are Omniscient, You are Omnipotent.
For emphasis, his OmniPresence was extolled in exquisite  poetry.

It comes as no surprise that Sir Edwin and Kavi mani went into raptures about Buddha’s Incarnation.Tuesday, April 22, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 3.


*
Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 3.
This is the IIIrd instalment of a new series on creative writing of recent origin in Tamil. 
ஆசிய ஜோதி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Asia Jothi: Kavimani Desika Vinayakam Pillai
We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours. All suggestions and criticisms will be attended to.
Mail to innamburan@gmail.com
*
இன்று ஏப்ரல் 20, 2014.
Reciting the next few stanzas along with related stanzas from Sir Edwin Arnold’s Light of Asia, tie original epic that inspired Asia Jothi. 
இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும்
பாதல மீறாப் படர்ந்து சென்றது;
"பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்!
எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்!
புத்த பெருமான் புவியில் உதித்தனன்;
அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்;
அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்;
நலமுறு மெனவே நம்பி நாடுமின்;
உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்;
உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்;
என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும்
மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர்.
அதனால்,
அமைதி நிலவி, அன்பு தழைத்துக்
குவலய முழுதும் குதுகல முற்றது.
கடலும் மலையும், காடும் மேடும்,
பூவுல கறியாப் புதுமணம் கமழ,
இனிய தென்றல் எழுந்து வீசியது.
மறுநாட் காலை மகிழ்ச்சி மிகவே
கற்ற பெரியோர் கனவின் பயனைக்
கொற்றவன் அறியக் கூறியது இதுவாம்;
13
सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
*
அம்மா சொல்படி ராஜூ 34
அற்புதம்!அற்புதம்! அற்புதமே!:அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009
ஸ்ரீ:
எல்லாம் அவன் செயல்
கதை சுருக்கம்
எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள்.அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்ரு அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும்.

வேறு

1458

"பாரரசி கண்டகனா நற்கனாவாம்;
பானுவுமே கற்கடக மனையில் நின்றான்;
சீரமையும் ஆண்மகனைப் பெறுவாள்; அந்தச்
செல்வமகன் தெய்வீக மகனே யாவான்
ஓருமுயர் ஞானகுரு வாகி எங்கும்
உண்மையுப தேசங்கள் செய்வான்; வேண்டின்
வாரிதிசூழ் புவிமுழுதும் ஆள்வான்; அன்னோன்

மகிமையெலாம் எடுத்துரைப்பது எளிதோ? ஐயா!

அப்டியா ! 2

அப்டியா ! 2


“ பிரதமர் அலுவலகத்தில் நடந்த எல்லாவற்றையும், முழுமையாக, நான் அறியேன். உண்மையின் பன்முகங்களை நான் அறியேன். சொல்லப்போனால், இங்கு உண்மைக்கு எத்தனை முகங்கள் உண்டு என்பதையும் நான் அறியேன்.”                                    - திரு. சாரதா பிரசாத்.
எதுவுமே நாம் நினைத்தபடி நடப்பதில்லை. சிந்தனைகள் கூட திசை மாறி விடுகின்றன. வாசகர்களால் பெரிதும் பேசப்படும் திரு. சஞ்சய் பாருவின் தற்போதைய பிரதமர் டாக்டர் மன் மோஹன் சிங் அவர்களை பற்றிய நூலின் ஒரு பகுதியை பகிர்ந்து கொண்டபோது, மற்றதையும் எடுத்து, தவணை முறையில், சுவைபட அளிப்பதாகத்தான் எண்ணம் இருந்தது. மதிப்புக்குரிய நண்பர் வெ.சா. அவர்களின் ஆதங்கமும், திருமதி கீதா சாம்பசிவத்தின் ஆர்வமும், நேற்று (21 04 2014) சில நண்பர்களுடன் பல மணி நேரம் பல விஷயங்களை பற்றி மனம் திறந்து அரட்டை அடித்ததும், மேலும் ஒரு ‘தூறல் உபயமும்’, என் சிந்தனையை புதியதொரு பாட்டையில் திருப்பின.
சுதந்திரம் வந்தபின் இந்தியாவின் பன்முக நிர்வாக களங்களில் பணி புரிந்த நபர்களில் டாக்டர் மன் மோஹன் சிங்கும் ஒருவர். கடைக்குட்டி கிழவர். நம் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த பட்ஜெட்டை, நிதி அமைச்சராக, அவர் வழங்கிய போது, அவரை போற்றாதவர் இல்லை; தற்காலம் தூற்றாதவர் இல்லை. அவருடைய பயோ-டேட்டா மெச்சத்தக்கதாக இருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சியே அவரை துச்சமாக பார்க்கிறது.  காரியம் ஆகிவிட்டது; கழுத்தைப் பிடிக்கிறார்கள். அந்த குணாதிசயம்  ஒரு நூற்றாண்டுக்கு மேல், அந்த கட்சியின் லாகவம். கடந்த சில வருடங்களில் நிகழ்ந்து விட்ட அவருடைய இறக்கம் நாட்டையும் அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. தன்னுடைய சகபாடிகளின்/ ஊழியர்களின் திருவிளையாடல்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற அவரது நிலைப்பாடு ‘நேர்மையானவன் செய்யும் காரியமா?’ என்று வெ.சா. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ஆம்/இல்லை’ என்று சுளுவாக பதில் கூற இயலாது. மேலும், திரு. சஞ்சய் பாருவுக்கு ஆவணங்களை பார்வையிடும் வசதி இருந்திருக்கவில்லை. ஆனாலும், எல்லா பேச்சு வார்த்தைகளும் அவருடைய பார்வையில் சிக்கின. டாக்டர் மன் மோஹன் சிங் அவர்களின் நிறைகுறைகளை,/ சூழ்நிலையை/ பின்னணியை சீர்தூக்கி ஆராய, இந்த நூல் மட்டும் போதாது. நாம் குடைந்து, குடைந்து பார்க்கவேண்டிய செயல்கள்/முறைகேடுகள் எண்ணில் அடங்கா. அவருடைய ஆட்சிகாலத்தில் நடந்த ஊழல்களை பற்றிய அலசல்கள் பொது மன்றத்தில் இருந்தாலும், நிழல் யுத்தங்களை பற்றி மக்கள் அறியாதவை பல. பொய்யுரைப்பவர்களை நம்பும் பலர் வாக்களிக்கப்போகிறார்கள்.
ஆகவே, குறிப்பாக வருங்கால படிப்பினைகளுக்கு, பிந்திய வரலாற்றையும், நடுவு நிலையில் நின்று, முன்னிறுத்தி ஆராய்ந்தால் தான் அது நமக்கு விடிவுகாலம் வர ஏதுவாக  அமையும். எனக்கு தெரிந்த வரையில் தமிழில் அத்தகைய நூல் ஒன்றும் வெளிவரவில்லை. அதனாலும் திசை மாறியது, சிந்தனை. என் அணுகுமுறையை ஊக்குவித்த பழுத்த அனுபவம் பெற்ற நண்பர் ஒருவர் என்னை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று பணித்தார். அந்த மொழியறியேன் என்றதற்கு, உனக்கு தமிழும் தெரியாது என்று கேலி செய்தார்.  இது நிற்க.
நான் தேடிய நுட்ப அணி குறிப்பு, திரு. சஞ்சய் பாருவின் நூல் சமர்ப்பணத்திலேயே எனக்குக் கிடைத்தது. அவர் திரு. ஹெச். ஒய். சாரதா பிரசாத் அவர்களுக்கும், திரு. கே.சுப்ரமணியம் அவர்களுக்கும் தன்னுடைய நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். அதில் முன்னவர், இந்திரா காந்தியின் அணுக்கத்தொண்டராகிய 16 வருடங்கள் பணி புரிந்த திரு. ஹெச். ஒய். சாரதா பிரசாத். ஒரு அற்புதமான மனிதர். தன்னை எக்காலமும் முன்னிறுத்திக்கொள்ளாத மனிதர். தனக்கு சிறிதளவும் ஆதாயம் தேடிக்கொள்ளாத மனிதர். பகையறியாத மனிதர். அடுத்தவரான திரு. கே.சுப்ரமணியம், பாதுகாப்புத்துறையின் தத்துவ விசாரணை, புள்ளி விவரங்கள், ஆய்வுகள், தீர்க்க தரிசனம் ஆகியவற்றை தொகுத்து அளிக்கும் புதிய துறையின் தந்தை. சில காலம் அவரின் கீழ் பணி புரிந்திருக்கிறேன். மூடி மறைக்காமல் எதையும் பட்டவர்த்தனமாக கூறுவது, அவருடைய இயல்பு. எனவே நூலின் சமர்ப்பணமும், மேலே கூறப்பட்ட மேற்கோளும் தான் புதியதொரு பாட்டையில் பயணிக்க இருக்கும் என் சிந்தனைக்கு அடித்தளம்.
இந்த இழையில் நான் கூறுவது எல்லாம் வெறும் முகாந்திரமே. வாசகர்களின் கருத்துக்கள் மிகவும் உதவும்,  இதே அலை வரிசையில் இருந்தால். தலைப்பைக்கூட மாற்றுவதாக உத்தேசம். எனி சஜெஷ்ஷன்ஸ்?
இன்னம்பூரான்
22 04 2014
சித்திரத்துக்கு நன்றி: http://outsourcemagazine.co.uk/wp-content/uploads/2013/08/Amici-Aug-2013-1.jpg

Monday, April 21, 2014

நம்ம காட்டில் மழை !

நம்ம காட்டில் மழை !
http://www.clickypix.com/wp-content/uploads/2014/01/Martin-Luther-King-Jr-Quotes-1008.jpg

பனையூர் கிராமிய வாழ்க்கையை தொடங்கிய பிறகு, தருமமிகு சென்னைக்கு மூன்றாவது விசிட் அடித்தேன். ‘வான்நின்று உலகம் வழங்கி...’ என்பதற்கிணங்க நம்ம காட்டில் மழை, ‘சோ’என்று. 
On behalf of President and Executive Committee Members of 
Indo American Association-Chennai, 
cordially invite you for the
Martin Luther King Jr Oration Programme
to be held on Monday the 21st April, 2014 at 4 pm at

The Auditorium, No.101, Ground Floor
Department of Management Studies, I I T Madras, Chennai-600036

என்ற அழைப்பிதழ் தான் அந்த ‘அமிழ்தத்தை. எனக்கு அளித்தது. அந்த சொற்பொழிவை ஆற்றியவர், அமெரிக்க காந்தியான சாக்ஷாத் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களே.  ஒரு பிரபல அமெரிக்க கார்ட்டூனிஸ்ட், அண்ணல் காந்தி அவரிடம், ‘உன்னை கொன்றதாக அவர்கள் நினைத்துக்கொள்வது ஒரு மாயை.‘ என்று சொல்வதாக வடித்த கேலிச்சித்திரம் விளக்கிய
உண்மை,ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் இறவாவரம் பெற்று அமரத்துவம் அடைந்து விட்டார் என்பதே. அவர் என்னமோ வேறு ஒருவர் மூலமாகத்தான் பேசினார். அந்த நபரின் பெயர்:    திரு. நரசய்யா. நான் மிகைப்படுத்தி பேசுபவன் அல்ல. ஒரு மேலோர் சபையில், அமெரிக்கன் கான்சல்-ஜெனெரல் தலைமை வகிக்க, பழைய நண்பர் டாக்டர்.ஜி.சுந்தரம் ஐ ஏ எஸ் (ஓய்வு) வரவேற்புரை அளிக்க, ஒரு மணி நேரத்துக்கு, தனக்கே உரிய பாணியில், நவீன சாதனங்களை அலாக்காக பயன்படுத்தி, திரு.நரசய்யா அவர்கள் கடந்த/நிகழ்/வருங்காலம் எல்லாவற்றையும் ஒரு காலச்சக்கிரமாக சுழற்றி, ரோஸா பார்க் பிடிவாதமாக அமர்ந்திருந்த பஸ்ஸிலிருந்து, ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களின் கல்லறை வரை பார்க்கும் சித்திரங்களையும், ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியரின் ‘கனாக்கண்டேன், நேசமானவர்களே!’  வரை கேட்கும் சித்திரங்களாகவும் நம் முன் வைத்தார், திரு.நரசய்யா. குரல் அவரது; ஆளுமை ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களது. மஹாத்மா காந்தியும், நேருவும், கிருபளானியும், பாரதமாதாவும் வந்தனர். ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களது விசிறியான எனக்கு, ஞானோபதேச வருகை, ஒரு கொடுப்பினை. திரு.நரசய்யாவின் அணுகுமுறை ஒரு படிப்பினை. அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை பற்றி பேசவில்லை. அமரத்துவம் பெற்ற அவரது ‘கனாக்கண்டேன், நேசமானவர்களே!’ சொற்பொழிவின் பின்னணியையும், வரலாற்றையும் ஆராய்ந்து கூறியது, புதுமை தான்.

தூறல் உபயங்கள்:

 • தூக்கிய காலர் ! : அறிமுகம் இல்லாத இடத்துக்கு செல்கிறோம் என்ற தயங்கிய என்னை, ‘You may not know me; I know you very well.’ என்று முகமன் கூறிய பழைய நண்பர்கள் பலர்.
 • என்னை வீட்டுக்கு அழைத்து சென்ற பழைய நண்பர் ஆர். நடராஜன் ஐ.ஏ. எஸ் (ஓய்வு) உடன் கதா காலக்ஷேபம். 
 • சென்னை-மும்பாய் விமான வண்டிச்சத்தத்தை விட பனையூர்-அடையார் மோட்டார் வண்டிச்சத்தம் அதிகம், விகிதாச்சாரப்படி. தேர்தலில் நிற்கும் எல்லா கட்சிகளிடமும் பனையூர் விமானத்தளம் அர்ஜெண்டு என்று சொல்லி விட்டேன். 

சித்திரத்துக்கு நன்றி: http://www.clickypix.com/wp-content/uploads/2014/01/Martin-Luther-King-Jr-Quotes-1008.jpg

இன்னம்பூரான்

21 04 2014

Sunday, April 20, 2014

வோட்டு சுரைக்காய்! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12

வோட்டு சுரைக்காய்! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12இன்னம்பூரான்
20/21 4 2014

‘வோட்டு சுரைக்காய் சபைக்கு உதவாது’ என்று நான் முரண்கருத்து ஒன்றை முன்வைக்கும்போது, தந்தி டி.வி.யில் திரு. ஞானி அவர்கள் ‘காசு வாங்குவது குறைந்து வருவதற்கு தேர்தல் கமிஷனின் கறார் தான்’ என்று சொல்கிறார். உண்மை தான்.

தற்பொழுது தொலைக்காட்சியில் எலெக்க்ஷன் நீக்கமற நிறைந்து இருப்பதால், அது ஒரு நிழல் கடவுளாக நடமாடுகிறது. சற்று முன், தலைமுறை தலைமுறையாக, அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் உழலும் சில பெண்களின் பேட்டி ஒன்றை கண்டு விட்டு, அவர்கள் காசு வாங்கினால், அதை புதுமை பித்தனின் ‘அம்மாளு’ வின் பிரதிபிம்பமாகக் காண்கிறேன். அவர்களை குறை காண தயங்குகிறேன். இது முரண்கருத்து என்பதில் ஐயமில்லை. ஆனாலும் எத்தனை நாட்கள் தான் சால்ஜாப்புக்களுக்கும், ‘பொலிடிக்கலி கரெக்ட்’ தர்ம அடிகளை பொறுத்துக்கொள்ள முடியும்? சென்னை வந்ததற்கு, எல்லா வேடிக்கைக்களையும், கேளிக்கைக்களையும், பாமர தமிழனின் கணிப்புக்களையும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆதங்கமும் ஒன்று.

நான் எழுப்பும் சில வினாக்களுக்கு, உங்கள் மனசாக்ஷியை கலந்து பதில் அளியுங்கள்.

 1. அரசு ஆதரிக்கும் சாராயம், நம் கண்முன், சில தலைமுறைகளாக, பெண்களை கொடுமை படுத்துகிறது. ராஜாஜி அவர்களின் கெஞ்சலை புறக்கணித்ததின் விளைவு, ஏழை வயிற்றில் தீ. என்ன தைரியத்தில் அவர்களின் வாக்குக் கேட்கிறார்கள்? அதான் காசு நடமாட்டம். மாற்றுப்புடவை வாங்கி மானம் காத்துக்கொள்ளலாம். குழந்தைக்கு ஊதல் வாங்கிக்கொடுக்கலாம். குடிகார புருஷனுக்கு பணியாரம் சுடலாம்.

 1. பொருளியல் மான்யத்தை ஒதுக்கவில்லை. ஆனால் எல்லா கட்சிகளும் மான்யத்தை துஷ்பிரயோகம் செய்தன. துணை போயின. 1947லிருந்து இன்று வரை மான்ய கபளீகரம் பற்றி யாரும் குரல் எழுப்பவில்லை. எல்லாரும் உள்கை. தணிக்கை ரிப்போர்ட்கள் அலக்ஷ்யம் செய்யப்பட்டன. அந்த தவறுக்கு, பொது மக்கள் துணை. மான்யங்கள் ஏழைகளை அணுகவில்லை. ரேஷன் ஒரு பணங்காய்ச்சி மரம். 
 2. இலவசங்கள் லஞ்சமே. தொலைக்காட்சிப்பெட்டியும், மடிக்கணினியும், தங்கத்தாலியும், தெருவில் வாழும் பெண்களுக்கு ஒரு வேளை சோறு போடாது. எனினும், அம்மாக்கடை இட்லியை என்னால் குறை சொல்லமுடியவில்லை. உயிர் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்னைக்கு அது ஒரு ஆறுதல். அதை உண்டு பார்க்க எனக்கு ஆசை உண்டு. எனக்கு அதற்கான ஏழ்மை தகுதி இல்லாததால், ஆசையை அடக்கி வைத்துள்ளேன். திருமங்கல அமங்கலத்தை விட அது யோக்யமானது.
 3. என் கண் முன்னால் ஒரு பெண் அழுகிறாள். இலவசக்கல்வி தான் அவரை உயிர் வாழ வைக்கிறதாம். அந்த கல்வியை, பேருக்கு ஆதரித்து, நடைமுறையில் மறுத்து வரும் ஆட்சிகள் எல்லாவற்றையும், அரசியல் சாஸனம் உள்பட, கல்வித்தந்தைகள் உள்பட, கண்டு என் மனம் பதைபதைக்கிறது.
 4. விபத்தில் யாராவது அடிப்பட்டால்/செத்தால், அரசு கொடையளிக்கிறது, வரிப்பணத்திலிருந்து. இந்த ‘கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதை’ கட்டுப்படுத்தி, விபத்துக்குக்காரணமானவர்களின் சொத்தை ஜப்தி செய்து, டார்ட் சட்டப்படி கொடுக்காமல் இருப்பது, மான்ய துஷ்பிரயோகமே. விபத்துக்குக்காரணமானவர்களுக்கு அளித்த மான்யம் என்பதால்.
 5. வோட்டுக்கு துட்டு கொடுப்பதை எல்லாக்கட்சிகளும் செய்வதாகத்தான், தென்படுகிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மக்களுக்கு பிரதிகூலமாகத்தான் செயல்படுவார்கள்; அது தான் நமது வரலாறு என்பதில் என்ன ஐயம் இருக்கிறது?
 6. ஈற்றடி: பிரதிகூலமாக செயல்படும் மக்கள் துரோகிகளை இனம் கண்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பும் சக்தி மக்களுக்கு வரும் வரை, ஜனநாயகம் என்ற அமிர்தத்தில், பிரதிகூலம் என்ற சொட்டு நச்சு உளது.

என்னுடைய வியாகூலம் கிஞ்சித்தேனும் குறைய வில்லை.நெட்லெ வந்த டிப்பு! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12

ெட்லெ வந்த டிப்பு! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12
இன்னம்பூரான்
20 4 2014


 1. மோடி ஃபார் விஷன்! 
 2. ராஹுல் ஃபார் டிவிஷன்!
 3. அர்விந்த் ஃபார் டெலிவிஷன்!
 4. மூணாமணி ஃபார் கன்ஃயூஷன்.
 5. கேஜ்ரிவால் குலாப்ஜாமுன் ரகஸ்யம்: அதில் குலாப்பும் இல்லை ஜாமுனும் இல்லை.
 6. பேட்டி எப்டி இருந்தது, பையா? என்று ஸோனியா கேட்க, எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் என்றாராம், ராஹுல்.
 7. பேச்சு மூச்சு இல்லாமல் கால் வந்துச்சா?கவலை வேண்டாம். அது பிரதமரின் பிரச்சாரம்.
 8. எல்.கே. அத்வானி வைரஸ் வந்து வந்து குதிக்குதா? தப்பிக்க, 108 தடவை ஜய் சீதாராம் என்று எழுதுக.


சித்திரத்துக்கு நன்றி: www.digitalsherpa.com