Friday, November 11, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [1]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[1]

இன்னம்பூரான்
12 11 2016
சில நாட்களாக ஊடகங்களும் பூடகங்களும் மத்திய அரசு ரூ. 1000/- & ரூ. 500/- கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை பிறப்பித்த பின், ஓயாமல் செய்திகள்/ கருத்துக்கள்/ அபிப்ராயங்கள்/ சிக்கல்கள்/ தீர்வுகள் ஆகியவை பற்றி பறை சாற்றி வருகின்றன. நேற்று பிறந்த குழந்தை கூட குறை கூறுகிறது என்ற மிகையை யதார்த்தமாகக் கூறலாம்.

இந்த கனஜோர் நடவடிக்கையை வரவேற்கும் நான், சில தகவல் துணுக்குகளை மட்டும் ஓரோரு வரியில் இந்த மையத்தில் தருகிறேன்.

எல்லாம் பொது மன்றத்தில் வந்தவை தான் என்று உறுதி அளிக்கிறேன். தனித்தனியாக உசாத்துணை கொடுக்க இயலாது.

  1. 21/2 லக்ஷம் பொறும் போலி நோட்டுகளை கேந்திரபாராவிலிருந்து குர்தா ரோடு வந்த சுமித் குமார் துடு என்ற வாலிபன் வங்கியில் செலுத்தும்போது பிடிபட்டான். அவன் ஒரு தேசத்துரோகி கும்பலை சார்ந்தவன் என்று சொல்லவும் வேண்டுமா?
  2. மும்பையிலும், டில்லியிலும், வருமான வரி அதிகாரிகள் 12 ஹவாலா துரோகிகளையும், உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த ஆபரண வியாபாரிகளையும் துளைத்து எடுத்தார்கள் - ஏன்? அவர்கள் சட்டவிரோதமாக செல்லா நோட்டுகளை திரவியமாக்கினர்.
  3. கோவாப்பரேட்டிவ் வங்கிகளில் விதிகள் மீறப்பட்டன. அவர்கள் தலையிலும் கை.
  4. ஹவாலா திவாலானதால் வெளி நாட்டிலிருந்து வரி செலுத்தாமல், வங்கிக்கட்டணம் கட்டாமல் தாய்நாட்டுக்கு பல வருடங்களாக துரோகம் செய்த பாவிகள், தேள் கொட்டிய திருடர்கள் போல் தவிக்கின்றனர்
  5. அவர்களிடம் பெற்ற பணத்தை என் செய்வது என்று தெரியாமல், அரசியலர் ஆதரவுடன் பல வருடங்களாக மக்களை ஏமாற்றியவர்கள் சிக்கி வருகிறார்கள்.
  6. ஏழு வருடங்களாக தி.மு.க. ‘அற’ கட்டளை சொத்து வரி கட்டவில்லை. இன்றைய பாக்கி ரூ.72 லக்ஷம். வாத்தியார் நின்று கொண்டு.....
  7. டாஸ்மாக் கடைகளில் விற்பனை கடும் சரிவு. மது மயக்கம் நாடுவோர் மால்களில் க்ரெடிட் கார்டு கொடுத்து வாங்கி சரியலாம்.
  8. வாட்ஸ் அப்: திருவான்மியூர் குப்பை தொட்டியில் நோட்டுகள்! ~இது வதந்தியாம்.
  9. ஹிந்தி நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க கடன் வாங்க நேரிட்டதால், ‘கொதிப்பு’ ~ செய்தி 
  10. திருமலை ஒம்மாச்சி சார்பில் அந்த கோயில் ‘அறங்காவலர்கள்’ செல்லா நோட்டுகளையும் உண்டியலில் பெற்றுக்கொள்கிறார்கள். யாத்திரீகர்களை என்றும் கவனிக்கும் அவர்கள் கனிவுடன் இரண்டாவது உண்டியல் பெட்டியையும் வைத்துள்ளார்கள். மோடி என்ன சொல்வார்? ஒம்மாச்சி என்ன நினைப்பார்?

அடக்கத்துடன்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: 
http://indianexpresstv.com/vvtimages/news-images/thumbs/tiger-information-center-is-across-the-country-நாடெங்கும்-அமைகிறது-புலிகள்-தகவல்-மையம்-07-08-16.jpg















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 8, 2016

துட்டும் நோட்டும்


துட்டும் நோட்டும்


ஆயிரம் ரூபாய்/ ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. அது நல்லது என்பது என் கருத்து.

அறுவை சிகிச்சை தேவையாகும்போது, களிம்பு உதவாது. ஓரிரு நாட்கள் பொது ஜனத்துக்கு சின்ன கஷ்டங்கள். என்னிடம் வாடகை வண்டிக்கு பணம் இல்லை, இன்று தமிழ் சந்திப்புக்கு செல்ல. அதை பெரிது படுத்தலாமா? பொடி நடையா போனால் போச்சு. நடப்பில் பாகிஸ்தான் கள்ளப்பணம் இருப்பது உமக்கு தெரியுமா? தென்னிந்தியர்களுக்கு போர் என்ன என்று தெரியாது. சொகுசு வாழ்க்கை. அதான் முணுமுணுப்பு.
அன்புடன்,
இன்னம்பூரான்
http://www.noolulagam.com/book_images/27804.jpg

Monday, November 7, 2016

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan Mon, Nov 7, 2016 at 10:32 PM


உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

நாத்திகம் உட்பட எம்மதமும் சம்மதமே என்பதே எல்லா மதாபிமானங்களின், நாத்திகம் உட்பட, உள்ளுறை. அதாவது, நமது நம்பிக்கை பாட்டைகள் எத்தனை முரண் தெரிவித்தாலும், மனிதநேயம் அடி வாங்காது, காளை. இங்கிலாந்தில் பெரும்பாலாக மதாபிமானம் ( நாத்திகம் உட்பட) அன்றாட வாழ்க்கையில் இடம் பெறுவதில்லை. அதனால், மாதாகோயில்கள் விற்கப்படுவதை காணலாம். கோயில்களோ, மசூதிகளோ, மாதா கோயில்களோ மனிதர்கள் வீடு போல் வாழ உகந்தவை அல்ல. தெய்வங்கள் அங்கு வாழலாம். சில இடங்களில் சினிமா தியேட்டர் கட்டலாம். எனவே, யாதொரு விதமான பிரச்னைகள் இல்லாமல் அவை மசூதியாக/ குருத்வாராவாக, கிருஷ்ணன் கோயில்களாக மாறி விடுகின்றன. இதில் குற்றமே இல்லை. எனினும், குற்றம் இழைத்தன் விளைவாக ஒம்மாச்சிகள் எல்லா மதங்களிலும், நாத்திகத்திலும் ஓங்கி வள்ர்கின்றன. ஃபைஸாபாத்தில், ஒரு மசூதி அவ்வாறு கட்டப்பட்டது. இராமபிரான் வாயை திறக்கவில்லை. மசூதி  இந்து மத தீவிர அபிமானிகளால் இடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் இராமர். ஆனாலும் அங்கு மனிதநேயம் மறையவில்லை. அந்த ஊரில் ஒரு கனவின் நல்வரவாக ஒரு தென்னிந்திய ராமர் கோயில் உள்ளது. கனவை பற்றி சொன்னால்,இவ்விடம் 'பிலு பிலு' என்று சண்டை போடுபவர்கள் உளர். அவர்களை கண்டாலே, ஏன் காணாமல் கூட, எனக்கு அப்படி ஒரு அச்சம்!. மதவாத பிரச்னைக்கு பயந்து ஒரு வருடம் ராம நவமி உத்ஸவத்தை ரத்து செய்ய நினைத்தார்கள். ஆண்டாண்டு தோறும் புஷ்பம் கொண்டு தரும் இஸ்லாமிய நண்பர்கள், 'கவலையற்க' என்று ஆதரவும், பாதுகாப்பும் அளித்தனர். உத்ஸவமும் 'ஜாம் ஜாம்' என்று நடந்தது. 

ஆனாலும் அதருமமிகு சென்னையில் ஒரு நடுத்தெரு ராமசாமி கோயில் இருக்கிறது. திறந்தவெளி சிலை, சில அனுமார் கோயில்கள் மாதிரி. நேர்த்திக்கடன், ஜபம், தபம், யாகம், யஞ்கம், விளக்கு பூசை, மண்தரை சாப்பாடு, மொட்டை, பார்ப்பனர் கோயிலில் பார்ப்பன பூசாரியை வைத்து வடமொழி அர்ச்சனை என்றெல்லாம் இயங்கும் ராமசாமி பக்தர்கள், அந்த சிலாரூபத்தின் கல்வெட்டில் இருக்கும் 'கடவுளை நம்புவோன் முட்டாள்' என்ற வாசகத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்களோ அல்லது உள்ளுறை பொருட்டு அதை விட்டு வைத்திருக்கிறார்களோ? என்னவோ! நான் இரண்டாவது நிலைப்பாட்டை நம்புகிறேன். திரு. கருணாநிதியின் மகளிர் அவருக்காக, கோயிலுக்கு போனது கேட்டு, எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக்கொண்டேன்.