Thursday, July 13, 2017

கோப்புக்கூட்டல் [4]




கோப்புக்கூட்டல் [4]

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [4]

இன்னம்பூரான்
ஜூலை 12, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=78193

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக, நவீன பெண்ணியம் தடபுடலாக முன்னேறி, அய்யப்பன் கோயிலுக்கு போய் சாஸ்தா ப்ரீதி செய்வதில் ஏன் எங்களுக்கு பங்களிக்கவில்லை என்று ஆக்ரோஷமாக இருமுடி பக்தர்களை கலவரப்படுத்தும் தற்காலத்தில், 

ஆண்களுக்கு மட்டும் ஏன் வலது பக்கம்? மாற்றி மாற்றி எங்களையும் சமானமாக நடத்தக்கூடாதா?  என்று வினா-அம்பு விடுவிக்கும் தற்காலத்தில், 

எங்களுக்கு பரிவட்டம் கட்ட ஏன் பெண் பூசாரிகளை அமர்த்தவில்லை என்று உரிமைக்குரல் கொடுக்கும் தற்காலத்தில், 

அம்பிகையை அலங்கரிக்க பார்ப்பான் எதற்கு?; எங்களில் ஒருவர் அம்பிகைக்கு நேர் வகிடு எடுத்து, தலை சாமாம் சூடி, காதுகளில் லோலாக்கு மாட்டி, கன்னத்தில் ரொஜ் பூசி, நெற்றியில் திலகமிட்டு, பெருமாளுக்கும் சங்கு சக்ர கதாபாணே, கத்தி, கபடா, செண்டு எல்லாவற்றாலும் அலங்காரம் செய்வது எங்களால் முடியுமே? என்று சவால் விடும் தற்காலத்தில் கூட

ஆணாதிக்கம் கொடி கட்டி, வால் பிடித்து, தலையாட்டி பறக்குது பாரீர், பாருக்குள்ளே தம்மாத்தூண்டு நாடு ஒன்றில்:

அங்கொரு ஒகினொஷிமா என்ற அழகிய தீவு ஒன்றில் பெண்ணரசிகளுக்கு நுழைய அனுமதி இல்லை, கல் தோன்றி, மண் தோன்றா காலத்திலிருந்து!

ஆனானப்பட்ட ஆம்பளை பசங்க கூட சமுத்திரத்தில் அம்மணமாக ஸ்நானம் செய்த பின் அந்த தீவின் மஹாராணியான தேவதை கோவிலுக்கு (17 வது நூற்றாண்டு)  செல்லலாம். இந்த தீவை பழமை வாய்ந்த சர்வதேச கலாச்சார மையமாக, யுனெஸ்கோ அறிவித்து உளது.
வாழ்க பெண்ணியம். ஆணியமும் தான். அதை த்ராட்லெ விடலாமோ!
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com