Friday, September 27, 2013

எம்டன்




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 10:56 AM

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22
பாராசாரி குதிரை என்றால், ராஜா தேசிங்கு வருவார், நினைவில். எம்டன் கப்பல் என்றால், கேப்டன் வான் முல்லர் வருவார். இது எல்லாம் இணை பிரியா உறவுகள். இனி எம்டன் மிதவை புராணம். என்னே சாகசம்! கடல் புராணங்களில் எம்டன் உபகதை மறக்கமுடியாதது. இரண்டே மாதங்களில் (செப்டம்பர் 10 ~ நவம்பர் 9, 1914) உலக கடல் வாணிகத்தை பாடாய் படுத்தி, 24 கப்பல்களை முழுகடித்து, பத்து மிலியன் டாலர் சொத்தைப் பறித்து, சும்மாவாணும் ஸெப்டம்பர் 21, 1914 அன்று மதராஸ் பட்டினத்தின் மேல் குண்டு வீசி, பெரிய மனுஷாள் எல்லாரும், அரக்க பரக்க, ஊரை விட்டு ஓடி, நிலம், நீச்சு க்ரையமெல்லாம் அடி மட்டத்துக்கு போயி... ஏன் கேட்கிறீர்கள் போங்க.
*
ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் நம்ம் ஃப்ரெண்ட் தியோடார் பாஸ்கரன் ‘எம்டனை’ பற்றி பேசுவார் என்று அழைப்பிதழ் வரதும், திவாகர் சென்னை விஜயம் பிரகடனம் ஆனதும் ஒரே சமயமா? அங்கு போய் தியோடரிடம், திவாகர் எங்கே என்றதும், அவர் முழித்தார். பிறகு எம்டன் நிஜகீர்த்தி பாடினார். வரலாற்றை பிட்டு, பிட்டு வைத்தார். எம்டனில் திரு. செண்பகராமன் பிள்ளை பயணித்தாக சான்றுகள் இல்லை என்றார். மறு நாள் திவாகரை பார்த்த போது தான் தெரிந்தது: ‘Divakar "SMS எம்டன் 22-09-1914" Published by Palaniappa Brothers, Madras 600014, India. A Tamil novel written in the background of SMS Emden's bombing of Madras Harbour in 1914 என்று. பி.கு. திவாகர் அளிப்பாராக. 
*
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
ஆகஸ்ட் 2, 1914: சைனாவருகில் எம்டன் மிதக்கையில் முதல் உலகப்போர் பிரகடனம். எம்டன் ரெடி ஃபார் ஆக்ஷன். எம்டனின் தனிச்சிறப்பு: கெளரதை, தலைவரின் மகிமை, மாலுமிகள்/வீரர்கள் எவெரெடி.’ பீரங்கிகள் ரெடி’ ‘நீர்மூழ்கி குண்டுகள் ரெடி’ எஞ்சின் ரெடி, சங்கேதங்கள் ரெடி’ எல்லாம் ரெடி’. புறமுதுகு காட்டி ஓடுது ஒரு கப்பல். இவுக துரத்தறாக. அது ரேஜஸான் என்ற ரஷ்யகப்பல். புலி மாதிரி பாஞ்சு கடிச்சு குதறி, அடிமை கப்பலாக்கி, ஜெர்மன் கொடி ஏத்தியாச்சு. சிங்க்டோ துறைமுகத்துக்கு ‘கூம்’ கூம்’ னு சங்கு ஊதிண்டு போயாச்சு. அங்குள்ள ஜெர்மன் கப்பல் படையுடன் சேர்ந்தாச்சு. இனி திக் விஜயம் தான். ஒரு பூனைக்கு ஒன்பது தடவை உயிர் காப்பாற்றப்படுமாம். அந்த மாதிரி வந்த ஆபத்துக்கள், பனி போல் விலகின, எம்டனுக்கு. மறு நாள், ஒரு பயணிகள் கப்பல் அகப்பட்டுக்கொண்டது. இப்போது, இங்கிலாந்தும் எதிரி என்ற பிரகடனம். உடனுக்குடனே, ஜப்பானும். கேப்டன் முல்லர் ஜெர்மன் அட்மிரலின் கப்பலுக்குப்போய், எம்டனின் தனி ஆவர்த்தனத்துக்கு அனுமதி வாங்கி வந்தார். மத்ராஸ் நோக்கி விட்டோம் சவாரி! உள்ளூர எல்லாருக்கும் தெரியும். இது தான் இறுதி யாத்திரை என்று. பிரச்னை! எங்களுக்கு மூன்று சிம்ணி. பிரிட்டீஷ் கப்பல்களுக்கு இரண்டு/ நாலு. நாங்கள் மிதப்பதோ எதிரியின் பிராந்தியம். பார்த்தார் கேப்டன். நாலாவது சிம்ணி (டம்மி) அமைத்துக்கொண்டோம். பாத்தா அச்சு பிரிட்டீஷ் யார்மெளத் கப்பல்! 
வங்காள விரிகுடாவில் வந்து அடைஞ்சாச்சு. ஒரு பிரிட்டீஷ் போர்கப்பல் நிழல் மாதிரி வரது. கிட்ட வரல்லையே. அஞ்சாறு நாட்களுக்கு பிறகு சிக்கிய கப்பலை மடக்கினோம். போயும் போயும் அது இந்தியாவிலிருந்து மட்டரக நிலக்கரி சுமந்த கிரேக்கக்கப்பல். அடுத்த பலி ஒரு ஏமாந்த சோணகிரி. எம்மை பிரிட்டீஷ் கப்பல் என்று நினைத்த போக்குவரத்துக்கப்பல். பல கப்பல்கள். நிறுத்துவோம். பத்து பேர் ஏறுவோம். அடிமை அல்லது ஆழம். நாங்கள் கைது செய்த பிரிட்டீஷ்காரர்கள் மதி இழக்கவில்லை. அவர்கள் விஸ்கியை பாதுகாத்ததை சிலாகித்தோம்! விரோதம் யாதும் இல்லை.
ஒரு கேப்டன் ஜாலி. நாலு கடல்-மைல் வேகத்தில் ஒரு மணல் வாரி கப்பலை இங்கிலாந்திலிருந்து ஆஸ்ட் ரேலியாவுக்கு! படு போரடிச்சதாம். மகிழ்ச்சியுடன் சரணடைந்தார். கூலி முழுதும் அச்சாரமாக வாங்கிவிட்டார், வேறே. ஸெப்டம்பர் 18, 1914 சென்னை துறைமுகம் வந்தோம். எம்டன் காலி என்ற வதந்தியை நம்பி க்ளப்பில் கொண்டாட்டம். ‘தொப்’!  சூப்லெ குண்டு! பிரிட்டீஷ்காரனுக்கு டின்னர்னா உசிறு. தெரிஞ்சிருந்தா, அன்று தாக்கி இருக்கமாட்டோம்! இந்திய அரசுக்கு நன்றி பல. ஊர் பூரா வெளிச்சம். எண்ணை கிடங்குகளை கொளுத்திப்பிட்டோம், கொளுத்தி. அடடா! நிலக்கரி தீந்து போச்சே! இந்திய நிலக்கரி ரொம்ப புகை விடுமே. அதிருஷ்டம். ஒரு பிரிட்டீஷ் கப்பல், தரமான நிலக்கரியோட சிக்கியது. அந்த கேப்டனும் ஜாலி. ‘பிரிட்டானியா வாழ்க’ என்று பாடிக்கொண்டே எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்.
இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள் கவலை படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா! ஒரு ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு அன்பு வலையில் சிக்கினோம்.  ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து. லெஃப்டினண்ட் ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு மிருக காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு பன்றி, ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி வந்தது தெரியவில்லை.
தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
pastedGraphic.pdf
pastedGraphic_1.pdf
oil-tanks shelled at Madras
உசாத்துணை:

dhivakar Thu, Sep 22, 2011 at 11:53 AM


>>>இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து
கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள்
கவலை
படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா!
ஒரு
ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு
அன்பு
வலையில் சிக்கினோம்.  ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து.
லெஃப்டினண்ட்
ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு
மிருக
காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு
பன்றி,
ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி
வந்தது
தெரியவில்லை. <<<

Hats off to your 'I' sir! You gave cats' visit to Emden. Yes, that was
well mentioned by Capt. Mukke in his biography.

Compared to today's warship technology, those days, with a heavy rush
of mariners (more than 300) then and there in a small capacity vessel,
my God! how they must have worked hard and at the same time enjoyed
also.

I have visited as a visitor journalist at INS VIRAAT, Air carrier too,
three years back. I think this is the largest and biggest vessel in
Indian Navy with more than 1500 mariners.

I myself enjoyed the writing of this novel wherever mentioning Emden
ship and travelled with her too.

The Emden actual show of strength was shown in Penang, but not in
Chennai. The Penang success of Emden was a jewel in her crown.

Dhivakar



On Sep 22, 10:26 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

[

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 12:14 PM

நன்றி பல, திவாகர். எம்டன் என்ற உமது நூலை பற்றி எழுத நினைத்தேன். அந்த கடமையை பவளசங்கரி செய்யப்போவது தெரியாது. நல்லதே நடந்தது. நான் எம்டன் மிதவை புராணத்தில் ஆழ்ந்து விட்டேன். பெனாங்க் சாகசம் பற்றி எழுதும் வினாடியில், you and PavaLa Sankari forced my hands. கொஞ்சம் விவரமாக எழுதி, சற்றே சுருக்கியும் இன்று மாலை வரவேண்டிய இடுகையை 'தொடரும்' உத்தியில், காலையிலேயே, உள்ளது உள்ளபடி, பதித்துவிட்டேன். எல்லாம் திவாகர நிவாரணம் தான்.
[Quoted text hidden]

meena muthuThu, Sep 22, 2011 at 12:26 PM


வழக்கம்போல உங்கள் அட்டகாசமான நடையில்!ம்ம்.. 
பவளாவினது ஒருபுறம்! இங்கே மறுபுறம் நீங்கள்!
சும்மா தூள் கிளப்புறீங்க எம்டன் மாதிரி :)))


2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Sep 22, 2011 at 3:50 PM


எம்டன் குண்டு போட்டதை சென்னை உயர்நீதிமன்றத்தின் கல்வெட்டில் முதல்முதல் பெரியப்பா காட்டினார்.  வங்கிப் பரிக்ஷை எழுதச் சென்னை வந்திருந்த போது நான் கேட்டதன் பேரில் அழைத்துச் சென்று காட்டினார்.  அதைத் தொட்டுத்தடவி..... பெரியப்பாவுக்குச் சிரிப்பு!  அதே போல் தான் அன்றே சாந்தோம் சர்ச்சிற்கும் விஜயம். அங்கே வரைந்திருந்த படங்களைச் சுட்டிக்காட்டி எனக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார்.  முழுக்க முழுக்க  கான்வெண்ட்டில் படித்திருந்த எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சி எனலாம். அதன் பின்னர் பல புத்தகங்கள் தேடிப்படிக்க வாய்ப்புக் கிடைத்தது. எம்டனோடு எனக்கு ஏற்பட்ட இணைப்பு இப்படித் தான்.

அதன் பின்னர் தமிழ் மரபு அறக்கட்டளை விழாவில் எம்டன் எழுதிய எம்டனையே முதன் முதல் சந்தித்தேன்.  புத்தகமும் கிடைத்தது.  இப்போதும் எடுத்துப் படித்துக்கொள்வேன்.


திரு இன்னம்புரார் எம்டனில் தாம் மட்டுமல்லாமல் நம்மையும் பயணிக்க வைத்துவிட்டார்.  இந்த ஆழ்ந்த உணர்வுக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>


தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
pastedGraphic.pdf
pastedGraphic_1.pdf
oil-tanks shelled at Madras
உசாத்துணை:



shylaja Thu, Sep 22, 2011 at 4:08 PM

அப்பாடி இவ்வளவு நடந்திருக்கா அன்னிக்கு! எம்டன் கீர்த்தி பிரமிப்பாக உள்ளது இ சார் எழுத்தில் அந்த நாளுக்கே போயிட்டமாதிரி இருக்கு..எங்கே திவாகர்  அந்த எம்டன் எனக்கும் ஒண்ணு ப்ளீஸ்...
2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>



Dhivakar Thu, Sep 22, 2011 at 5:02 PM


ஷைலஜா


நம் சுபாவின் விமர்சனத்தைக் கேட்கலாம்!!

திவாகர்
[Quoted text hidden]
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 5:58 PM
To: mintamil@googlegroups.com
very very low volume, whatever I do.
i
[Quoted text hidden]

shylaja <Thu, Sep 22, 2011 at 6:16 PM


கேட்டுட்டு வரேன் திவாகர்
[Quoted text hidden]

K R A Narasiah Thu, Sep 22, 2011 at 10:06 PM


எம்டன் நினைவு நாளான இன்று அமைதியாக அ மர்ந்து, சுபாவின் விமர்சனத்தைக் கேட்டேன். அவரது அழகான உச்சரிப்பும், கோர்வையாக் மொழியும் திறனும் கவரும் படி உள்ளது.நானும் இந்த நாவலைப் படித்து ஆச்சர்யமடைந்தவன் தான். ஆனாலும் அதைத் திறம்பட வருணிக்கையில் வேறோர் பொருளும் தெரிகிறது. அதைத் திவாகரின் கைவண்ணம் எனலாமா அல்லது சுபாவின் சொல்வண்ணம் எனலாமா என்று நிர்ணயிக்க இயலவில்லை.
ஆனாலும், திவாகரின் ஆழ்ந்த ஆய்வு ஒளிரும் இந்த புதினத்தை  அங்கங்களாகப்பிரித்து சுபா அளித்திருக்கும் விமர்சனம் போற்றுதலுக்குரியது.
நரசய்யா
[Quoted text hidden]

Subashini Tremmel Thu, Sep 22, 2011 at 10:45 PM


ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி..:-)

கட்டுரையாகவும் எனது வலைப்பூவில் உள்ளது. இங்கே ..!

சுபா


Subashini Tremmel Thu, Sep 22, 2011 at 10:49 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
மிக மகிழ்ச்சி. இந்தப் பாராட்டுதல் பெற நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நன்றி. 
அருமையான நாவல் அது. என்னை இந்த நாவல் மிகப் பாதித்தது. மிகப் பிடித்துப் போனது. அதனால் இப்படி ஒரு விமர்சனம்.. மனதில் வந்ததை அப்படியே எழுதி விட்டேன்..
சுபா
[Quoted text hidden]
--
Suba Tremmel

Wednesday, September 25, 2013

அண்ணல் காந்தியின் சாயலும், விபரீத விளைவுகளும். [3வது பகுதி]

அண்ணல் காந்தியின் சாயலும், விபரீத விளைவுகளும். [3வது பகுதி]


சில நாட்கள் முன்னால் புதுச்சேரியில் ஒரு திரைப்படம் காண நேர்ந்தது. எனக்கு அது ஒரு அதிர்ச்சி வைத்யமாகத்தான் தென்பட்டது. தாங்கொண்ணா விசனத்துடன் தான் அந்த தலைகீழ் தலைப்பு தன்னை அமைத்துக்கொண்டது. அதை மாற்றியமைத்துவிட்டேன்.
பாரதநாட்டின் தந்தை மஹாத்மா காந்தியின் சாயல் ஒருவருக்கு. அவர் பெயர் ராவுஜி என்போம். அவரொரு அரசு ஊழியர். கருமமே கண் அவருக்கு. மற்ற எல்லாம் அவருக்கு தள்ளுபடி, குடும்பம் உள்பட. தருமத்துக்கும், நியமத்திற்கும் கட்டுப்பட்ட அவரை, காந்திஜியாக நடிக்க அழைக்கிறார், ஒரு சினிமா டைரக்டர். இவர் மறுத்துவிடுகிறார். ஆனால், அவருடைய மகனும், மருமகளும், பேரனின் மேல்படிப்புக்கு சினிமா வருமானம் உதவும் என்று அவரை தொணத்தொணக்கிறார்கள். ராவுஜியும், நம்முடைய ஸ்பெஷல் ட் ராஃபிக் ராமசாமி, ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவால், அவரது குருநாதர், யோகா டீச்சர் ஆகியோர் போல, தகவல் உருவும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தட்டிக்கேட்கும் மனப்பான்மையுடையவர். இந்த நடிப்பினால் கிடைத்த கீர்த்தி, ராவுஜியை ஊரறிந்த சில்லறை காந்தியாக ஆக்கி, அவரை பஞ்சாயத்து வீரர் ஆக்குகிறது. அந்த லாகிரியில் அவர் மிதக்கும்போது, ஒரு சில்லறைக்கடைக்காரர், அதிகாரி லைசன்ஸ் தரமறுக்கிறார் என்று அவரிடம் புகாரித்தார். இலை மறைவு காய் மறைவாக, அதிகாரி மீது லஞ்சக்குற்றம் சொல்வது போல சொல்லாமல் சொன்னார். நம் 'அண்ணல்' காந்தியும் விரைந்து சென்று அதிகாரியை தட்டிக்கேட்க, அவர் சமாதானமாக, 'பள்ளிக்கூடம் அருகே புகையிலை விற்பது சட்ட விரோதம்' என்றார். நம்மடவர் பலமாகவே தட்டிக்கேட்கவே, பயந்த அதிகாரி உரிமத்தைக் கொடுத்து விட்டார். இவரை வீட்டில் கொண்டு வந்த கடைக்காரர், கை குவித்து நன்றி கூறி பழங்களும், மிட்டாயும் நிறைந்தக் கூடையை, வலுக்கட்டாயமாகக்கொடுத்தார், ஆவலுடன் பழங்களை அடுக்கி வைத்த மருமகள் கையில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது; உள்ளே சலவை நோட்டு ரூபாய் 500/-. புளகாங்கிதம் அடைந்த அவள் புடவை வாங்க ரூபாய் 300 ஐ ரவிக்கைக்குள் நுழைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கிக்கொள்ள சகதர்மிஷ்டனிடம் ரூபாய் 200 கொடுத்து, பையனிடன் பத்து ரூபாய் கொடுத்தாள், மிட்டாய் வாங்க. அதற்குள் வந்த மிட்டாய்களை அவன் ஸ்வாஹா பண்ணி விட்டான். அவளும் மாமனாருக்கு கும்பகோணம் டிகிரி காஃபி கொடுத்து பலமாகவே அவரை உபசரித்தாள். இரவு வேளையா! அவர் பாயை விரித்துப்படுத்தார். உறக்கம் வருமோ? அவரோ கடமையே கண்ணாயினார் ஆவர். வாய்மையின் சுபுத்திரன். அந்த வீட்டில் அசுப ஜெனனம் மூன்று, அன்று ~ 
லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும். 
அமுதத்தை ஒரு துளி நச்சு கெடுப்பதைப் போல, ராவுஜியின் குடும்பம் பணத்தாசை கண்டது. அந்த ரூபாய் தாளிலிருந்து அண்ணல் காந்தி புன்னகைத்தார், ஆண்டவனைப்போல. இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் ஊற்று, இது தான். ராவுஜி, நல்ல மனிதராகையால், அவ்வப்பொழுது போலி நடிப்பில் ஈடுபடாமல், முரண்டு பிடிக்கிறார். குடும்பமோ செழிப்புடன் இருப்பதால், வீடு கட்டுவது போன்ற மேலும் பல வம்சபேராசையில் மூழ்கிவிட்டதால், அவரை படாதபாடு படுத்துகிறார்கள். சவுக்கடி சாந்தாவாகவே மாறிவிட்டாள், சமத்து மருமகள். வளர்த்த கடாவோ மார்பில் பாய்கிறது. இது தான் மக்களின் சீரழிவுக்கு அடிக்கல்.
படிப்பினை: 
சராசரி மனிதர்கள் தான் இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் காரணகர்த்தாக்கள். அரசியல் வாதிகள் அல்ல. சேவல் கோழியை வளர்ப்பது போல், கிஸ்தியை குறைக்க, பட்டா கொடுக்க, பத்திரம் பதிவு செய்ய, ஓட்டுனர் உரிமம் பெற, ரயில் டிக்கெட் வாங்க, சினிமா டிக்கெட்டை ப்ளேக்கில் வாங்க, மாமூல் கொடுத்துக் கெடுத்து, லஞ்சலாவண்ய நடைமுறையை அமல்படுத்தியது நாம் தான். இது முதல் கட்டம். அதன் பைசாச வளர்ச்சியில், விரல் சூப்பியவர்கள், பின்னர் புறங்கை நக்கினர்; பின்னர், கலசத்திலிருந்து தேன் குடித்தனர். பின்னர் தேன்கூடுகளில் தீ மூட்டினர். லஞ்சலாவண்ய நடைமுறையில் குறை காண்பவர்கள் மறைந்து போயினர். இப்போது சொல்லுங்கள், அண்ணல் காந்தியை கொன்றது யார் என்று.
திரைப்படத்தின் பெயர் கூர்மாவதாரம்.எடுத்துவர் பிரபல கன்னடடைரக்டர் கிரீஷ் கஸரவல்லி.
இன்னம்பூரான்
26 09 2013