Google+ Followers

Thursday, November 6, 2014

என்னத்தைச் சொல்ல?! ~6: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [2]

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [2]
I am figuring out a way for simultaneous English/Tamil versions. Please bear with me till then. This is about the empty coffers in many a secret accout abroad.

என்னத்தைச் சொல்ல?! ~6
‘நாய் விற்ற பணம் குரைக்குமா?’ என்று அசட்டையுடன் அசட்டுத்தனமாக கேட்டே, பல கோடி ரூபாய்களை இழந்த ‘மகா கனம்’ஜனம், லாயத்தை விட்டு குதிரை ஓடி பற்பல மாமாங்கங்கள் ஆன பிறகு தான் அடுத்த வீட்டுக்காரன் வீட்டு லாயத்தை நோட்டம் விட்றேன் பேர்வழி என்று சால்ஜாப்புகளை அள்ளி வழங்கியது, பிற்கால அரசின் செயல்பாடாக. தற்கால அரசும் வீராப்புடன் தேர்தலுக்கு முன்னால் சவால் விட்டது. சமாளிப்போம் என்றது. ஆனால், இப்போது உச்சநீதிமன்றத்திலேயே, கை கட்டி, வாய் புதைத்து, தெனாலி ராமன் குதிரை மாதிரி ஜகா வாங்கியது. பட்டியல் கொடுத்தால் போதுமா? காசுல்ல திரும்பி வரணும். எதற்கும் பிரதமர் ‘நான் விடாப்பிடி’ என்கிறார். நல்லதே நடக்கட்டும்.

ஆனால், அப்டேட் உதைக்கிறதே. ஸ்பெஷல் டீம் [Special Investigation Team (SIT)] போட்டாங்க இல்லை. கசியும் தகவல் யாதெனின்:

  1. 600 அக்கவுண்ட்லெ காசில்லை, பணமில்லை, சில்லறை கூட இல்லை. பணம் படைத்து, அதை ஒளித்த பணமூட்டைகள் ரகசியமா எடுத்து வேறு எங்கேயே ஒளித்து வைத்துக்கொண்டார்கள் போல.
  2. 200 பெயர்கள், பாதிக்கு பாதி ரிபீட், இரண்டு தலை மண்ணுளி பாம்பா என்ன? எல்லாரும் எஸ்கேப்? இது ஒரு சிக்கல்.
  3. HSBC வங்கி தான் இந்த சந்தேஹோபஸ்த ஆசாமிகளை கையாண்டது. 289 கேஸ்களில் கஜானா காலி.122 கேஸ்களில் ரிபீட் மஹாத்மியம்.
  4. வருமானவரி துறை 628 கேஸ்களில், பாதிக்கும் குறைவாக 300 கேஸ்களில் மட்டுமே தாவா பண்ண போறாங்களாம்!
  5. ஒரு கேஸிலாவது அவர்கள் காசை கையாண்ட முறை பற்றிய தகவல் இல்லை.
  6. இருந்தாலும், இன்றைய நிலைமையில் ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்த்தான்’ என்ற வகையில், பழைய ‘இரண்டும் கெட்டான்’ உடன்படிக்கைகளை மாற்றப்போறாங்களாம்.

இன்னம்பூரான்
நவம்பர் 6, 2014சித்திரத்துக்கு நன்றிஇன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, November 5, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் ~II [1]

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் ~II [1]

I mail this input after much hesitation with much reluctance as it is about a recognition unto me and is in adulatory terms. Mr.Rao had been telling me for some time that a certain self-location by new entrants into this elite community is the right thing to do. The accompanying piece is from a different world, a vibrant and global Tamil community; all about me in this input. I share it with you, with all humility. Those amongst you desirous of joining our Tamil communities can have glimpses here and I shall gladly assist further passage. In case some one amongst you would rather read an English version, I can ask them for a precis. 
Warm regards,
Innamburan
நவம்பர் 3, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  ‘திரு. இன்னம்பூரான்’ அவர்கள்


சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டு, கடந்த மாதம் அக்டோபர் 2014 இல், சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் , நடத்திய சிட்னியின் சங்கத் தமிழ் மாநாட்டில் “சங்கத்தமிழ் மூன்றும் தா !” என்ற கட்டுரையை வழங்கிய, ‘திரு. இன்னம்பூரான்‘ என்று அன்புடன் அழைக்கப்பெறும் மூத்த இளைஞரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா என்ற இவர், இன்னம்பூரான் என்ற புனைப்பெயரில் எழுதி வருபவர். இவர் வல்லமை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. வல்லமை இதழின் நலம் விரும்பியாக, வல்லமை இதழின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவராகப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். வல்லமையாளர் விருது தேர்வுகள் செய்து வந்த திரு. திவாகர் அப்பணியில் இருந்து விடுப்பு பெற்ற காலங்களில் தற்காலிகமாக அப்பொறுப்பை ஏற்று விருது வழங்குதலை தொய்வின்றி நடத்திச் சென்று, வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சற்றொப்ப 150 பதிவுகளை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ அளித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த கட்டுரைத் தொடர்கள் சில: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ககன சாரிகை, நீயும் நானும் விஞ்ஞானமும், என்னத்தைச் சொல்ல! போன்றவையாகும்.
பெரும்பான்மையான இவர் கட்டுரைகளின் பின்னணி அரசின் நடவடிக்கைகளை ஆராய்வதாகவும், குறை கண்ட இடத்து விமர்சிப்பதாகவும் அமைவதற்கு அவராற்றிய அரசுப்பணியின் பின்புலமே காரணம். திரு. இன்னம்பூரான் இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில் அரசின் தணிக்கைத்துறையின் நடவடிக்கைகள், ஊழல் கண்டவிடத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணி, அவற்றையொட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஆராய்வதாகவும், அரசு மேற்கொள்ளும் மெத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிப்பது, அரசு நிதியறிக்கைகளை ஆக்கபூர்வமாக அலசுவதாகவும் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
வல்லமையில் மட்டுமின்றி தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில், “உயிர் பெறுமா நீதியின் குரல்” என்ற கட்டுரையையும், தமிழ் வெப்துனியா செய்தித் தளத்தின் “கருத்துக்களம்” பகுதியிலும் எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவர் திரு. இன்னம்பூரான்.

தமிழின் மீது தணியாத  ஆர்வம் கொண்டவர். இவரது தமிழார்வத்தின் காரணமாகதமிழிற்கான  மிக முக்கியப் பணிகளாக இவர் கருதி இன்றும் தொடர்வது, அரிய பழந்தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து அவற்றை அடுத்த தலைமுறையினரும் பயனுற சேமிப்பதும், இளைய தலைமுறையினரின் கல்விக்காக இணையவழி கல்வித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும். வல்லமையில் மாணவர் தளம்: தமிழார்வம் என்றும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து நூல் மின்னாக்கங்கள் செய்வதையும், “அன்றொரு நாள்” என்ற வரலாற்று நிகழ்வின் தொகுப்புகளை எழுதுவதையும் தொடர்ந்து வருகிறார். அத்துடன், தனது வலைப்பூவிலும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.
ஓய்வு பெற்றபின் நிர்வாக மேல்நிலைக் கல்வி மையங்களில் பணி செய்வதும், அரசு தொடர்பான ஆலோசனைகளில் பங்கு பெறுவதும் எனப் மற்ற பிற பொதுத்தொண்டுகள் ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் மத்திய அரசின் பணி தேர்வாணையத்தின் ‘இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி’ (ஐ.ஏ.எஸ்.) தேர்வுகளின் இறுதிநிலை நேர்காணல் குழுவின் அங்கத்தினராக பணியாற்றி அந்த அனுபவமும் பெற்றவர். இவர் நேர்காணல் பயிற்சி அளித்த மாணவர் சிலர் ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அழகப்பா பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி தேர்வு பற்றி அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், இத்தகவல்கள் மாணவர்களுக்கு பயன் தரும் என்ற நோக்கில், “ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இது ஐ. ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் நோக்கில் தகவல்கள் வழங்கும் ஒரு கையேடு.​​
​​​​
எண்பது வயதைக் கடந்தாலும் இன்றும் கற்பதிலும், தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வம்காரணமாக  திரு. இன்னம்பூரான் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்து, முதுகலை பட்ட மேற்படிப்பு, தமிழில் முனைவர் பட்டம் என்ற இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். “சங்கத்தமிழ் மூன்றும் தா ” என்ற கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்க இவர் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் மூலம் மனதிற்கு வயது இல்லை என்று நிரூபித்துள்ளார். உற்சாகத்துடன் செயலாற்றி இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாகத் திகழும் திரு. இன்னம்பூரான் அவர்களை வல்லமையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுத்துப் பராட்டுவதன் மூலம் வல்லமை விருதும், வல்லமை இதழும் பெருமை அடைகிறது.


**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
*

ஒவ்வொரு வாரமும் முதல் நபராக வல்லமையாளர்களை வாழ்த்த விழையும் நான், இந்த வாரம் வசமாக பற்பல அலுவல்களில் மாட்டிக்கொண்டதால், தாமதமாக, அதுவும் தற்செயலாக, என் தேர்வை பற்றி அறிந்து வியப்பில் ஆழ்ந்தேன். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அமுதமொழி. மிக்க மகிழ்ச்சி. தேமொழி மிகவும் உழைத்துத் தான் என்னை பற்றிய செய்திகளை தேடிப்பிடித்து, அவற்றின் அணிவகுப்பை நேர்வரிசையில் செய்து, என்னை பற்றி மிகைப்படுத்தாமல், ஆனால் குறை யாதுமில்லாமல், பதிவு செய்ததால், என் மகிழ்ச்சி இரட்டிப்பு. நன்றி மூன்று மடங்கு. 

கிட்டிய தருணத்தை விடலாமோ? என் விமர்சனங்களுக்கு என் அரசுப்பணி பின்புலம் என்பதில் ஐயம் யாதுமில்லை என்றாலும், மூன்று விளக்கங்கள் தருவது என் கடமை. என் அரசுப்பணி பின்புலம் அத்தகைய ஆய்வு/அலசல்களை செய்யும் திறன் அளித்தது. ஆனால், ஆறு வருடங்கள் இங்கிலாந்தில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் செய்த தன்னார்வப்பணியும், நான் அதற்காக ஸ்டாஃப்போர்ட் ஷையர் பல்கலை மன்றத்தின் ஆக்கப்பூர்வ சமூகவியல் துறையில் படித்த பட்டப்படிப்பும் தான் அரசுப்பணி திறனுக்கு மெருகு ஏற்றி அன்றாட விழிப்புணர்ச்சி களத்தில் இறக்கின. அடுத்தபடி, சுபாஷிணியுடன் ஒரு உரையாடல். அது என்னை என் தமிழுலகுக்கு அழைத்து வந்தது. என் கட்டுரைகளில் பாதிக்கு மேல் இலக்கியம், வரலாறு, நாட்டுப்பற்று,அறிவு, கல்வி என்று அமைந்தன, ‘அன்றொரு நாள்’ தொடரில் இருந்தது போல்.

ஒரு கல்லில் இரண்டு மாங்கனி. நான் டேரா போட்டிருக்கும் இடம் ஒரு குட்டி மின் நிகர் உலகு. ஆங்கிலம் தளர்நடை மொழி. சிலர் தமிழ் அறிவர். அங்குள்ள அருமை நண்பரொருவரின் வினாவிற்கெல்லாம் விடை இங்கு இருப்பதால், அவ்வுலகுக்கு ஃபார்வேடட்.
அதே கல்லின் மூன்றாவது மாங்கனி. அவர்களுக்கு மின் தமிழ் வல்லமை அறிமுகம் செய்ய இது ஒரு வாய்ப்பு. ஆகவே பின்னூட்டம் இட்ட முன்னோடிகளின் அறிமுகமும், அவர்களுக்கு பதிலும் கீழே. பின்னூட்டமிடா தமிழ்த்தேனீ போன்ற மின்னர்களை அறிமுகம் செய்யவில்லையே என்ற குறை உளது. யான் என் செய்ய இயலும்?
அன்புடன்,
இன்னம்பூரான் 
நவம்பர் 5, 2014

கருத்து & நன்றி நவிலல்:
அண்ணா கண்ணன் [நிறுவனர்: வல்லமை]
அருமையான மனிதர், அசாதாரண உழைப்பு, அமர்க்களமான தேர்வு.
ஒவ்வொரு கட்டுரையிலும் பின்னூட்டத்திலும், அவரது சிரத்தையும் கூர்மையும் வெளிப்படும். வல்லமையின் ஆலோசகராக அவர் திகழ்வது, நமக்குப் பெருமை.
வல்லமையாளர் இன்னம்பூரான் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தேமொழிக்கு நன்றி.
இன்னம் இன்னம் எழுதுக இன்னம்பூரான். 
வண்ணம் மின்னும் அவரது எண்ணம்பூரா.
**
அமுத சுரபியின் ஆசிரியராக இருந்த உமது ‘அ’அடுக்கு மொழி எம்மை கவர்ந்தது. இன்னம் இன்னம் எழுதுகிறேன். அன்புடன், இன்னம்பூரான்


அமீர் [இவர் வல்லமை இதழில் கருத்துப் பதிவு செய்தவர்] wrote on 3 November, 2014, 15:37
வல்லமையாளராக தேர்வு செய்யப்பட்ட ஐயா இன்னம்பூரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
குறிப்பிட்ட இலகா அரசு அதிகாரிகளின் செயல்பாடும், அதில் அரசின் போக்கும் இவரின் கட்டுரையில் காணலாம். அதை கண்டிப்பது மட்டுமில்லாமல் அது தீர  அதற்கான வழி வகையும் அவர் எழுதுவது மிச்சிறந்த திறமையான அதிகாரி என்பதற்கு அவைகள் சான்று. தொடரட்டும் அவரின் எழுத்துப்பணி.

~ மிக்க நன்றி, அமீர். நீங்கள் என் கட்டுரைகளை படிப்பது பற்றி மகிழ்ச்சி. உங்கள் ஆவலுக்கேற்ப எழுதுவதை தொடர்கிறேன். அன்புடன், இன்னம்பூரான்

*
வணங்கி வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான் [சமூக அக்கறை கொண்ட நெடுநாள் நண்பர்]
அன்பின் சொ.வி. நன்றி. உங்கள் கல்வி சேவையை மெச்சுகிறேன். அன்புடன், இன்னம்பூரான்
*
Congrats Sri Innampran!
Narasiah [‘கடலோடி’ நரசய்யா அவர்கள் புகழ்பெற்ற நூலாசிரியர், புத்தக விமர்சகர். அருமை நண்பர்]
*
Dear Mr. Narasiah, Thank you so much. Your congratulations is an honor unto me.  அன்புடன், இன்னம்பூரான்
*
நல்லவர் வல்லவர் வெல்லப்பாகாய் வல்லபாய்படேல் பற்றி அண்மையில் எழுதியவர் அன்னவருக்கு  ஆழ்வார்பெருமான்  அருளிய  சௌந்தர்ராஜப்பெருமாள் பாசுரம் சமர்ப்பணம்

வாழியரோ இவர் வண்ண மெண்ணில்
மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா

கூடவே  பெருமாள் ப்ரசாதம்  
பல்லாண்டு   உடல் நலமுடன் வாழ பரந்தாமனைப்பிரார்த்திக்கிறேன் இசார்.
அன்புடன்
ஷைலஜா [இவருடைய மைசூர்பா உலகபிரசித்தம். அவ்வப்பொழுது பெங்களூரிடமிருந்து வந்து எனக்கு விழா எடுத்து அசத்துவார். பாட்டுப்பாடி அவர் அனுப்பிய பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.] அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 
[Quoted text hidden]Soundarraja perumaal prasadham
104K

அன்பின் ஷைலஜா, நீ அனுப்பிய பிரசாதத்தை எல்லாருடன் பகிர்ந்து கொண்டேன். உன்னுடைய அருமையான பாசுரத்தை அவ்வப்பொழுது பாடிக்கொள்கிறேன். களைப்பு ஓடி விடுகிறது. அன்புடன், இன்னம்பூரான்
*
எப்போதும் வல்லமை கொண்டார் இப்போது வல்லமையின் விருது வென்றார்!...விருதுக்குப் பெருமை சேர்த்த வியத்தகு இளைஞர் இவரை வணங்கி வாழ்த்துதல் யான் பெற்ற பேறு!.. பல்லாண்டு வாழ்க ஐயா!.. இன்னும் பல விருதுகள் தங்களை அடைந்து பெருமையடையட்டும்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன். [சிறந்த எழுத்தாளர். பண்பின் சிகரம்.]

அன்பின் பார்வதி,
வல்லமை கொண்டார் என்றாய். எல்லாம் நீங்கள் கொடுக்கும் டானிக் தான். மிக்க நன்றி. அன்புடன், இன்னம்பூரான்

*
இந்த வார வல்லமையாளர் நம்ம 'இ' ஸார்! மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதிய பல கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். எனக்கு ரொம்பவும் பிடித்தவை 'அன்றொரு நாள்' தொடர்கள். எத்தனை எத்தனை விஷயங்கள், ஒவ்வொருவரைப்பற்றியும். இவரது அனுபவங்கள் எல்லாமே தொகுக்கப்பட்டு பொக்கிஷமாகக் காப்பாற்றபட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வேண்டுகோள் எல்லாம். 

இன்னும் பல பல எழுதி, பல்லாண்டுகள் ஆரோக்கியமாக வாழ பெருமாளையும், தாயாரையும் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
ரஞ்சனி [இல்லறம் பேணுதல், சமூக அக்கறை, இலக்கியம் படைத்தல்,பெண்ணியம் எல்லாம் +]
*
அன்பின் ரஞ்சனி,
மறுபடியும் ‘அன்றொரு நாள்’ போன்ற தொடர் ஒன்று ஆரம்பிக்கலாமா என்று நினைத்த போது, உமது ஊக்கமளிக்கும் கருத்துக் கிடைத்தது. ககன சாரிகையும் மீண்டும் எழும்.மற்றவையும் தொடங்கும். அன்புடன், இன்னம்பூரான்

------

வல்லமைமிகு இன்னம்பூர் இளைஞர், அரசியல், இலக்கியம் எனப் பல்துறை ஈடுபாடு கொண்டவர். எதனையும் ’நச்’சென்று சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது இவர் பாணி. ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்ற நுணுக்கம் அறிந்த அறிஞர். தணிக்கைத் துறையில் வேலை பார்த்தவராயினும் தமிழ் மீது தணியாத காதல் கொண்டவர்; அதனாலன்றோ ’சங்கத் தமிழ் மூன்றும் தா!’ என்று அவ்வையிடம் வரம் வேண்டுகின்றார். :-)

கால்பதிக்கும் துறைகளிலெல்லாம் முத்திரை பதிக்கும் வித்தகரான எங்கள் ‘இ’ ஐயா வல்லமையாளர் விருது பெற்றிருப்பது அறிந்து மனமகிழ்கின்றேன். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! விரைவில் தமிழில் முனைவர் பட்டம் பெற முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதையும் என் அன்பு வேண்டுகோளாக இத்தருணத்தில் முன்வைக்கிறேன்.  :-)

 (பி.கு: ஆஸ்திரேலிய மாநாட்டு மலரில் வெளிவந்துள்ள உங்களுடைய ’சங்கத் தமிழ் மூன்றும் தா!’ கட்டுரை மிக அருமை. கருத்துச் செறிவோடும், சுவையான தகவல்களோடும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை மாநாட்டு மலரில் நறுமணம் பரப்புகின்றது.) 

அன்புடன்,
மேகலா [தமிழ் வித்துவானின் மகள். அமெரிக்காவில் அண்மையில் எங்களூரில் நடந்த தமிழ் மாநாட்டில் அருமையான உரையாற்றினார். அவருடன் ஸ்கைப்பும்போது அவருடைய தமிழார்வம் புரிந்தது, எனக்கு.]
*
அன்பின் மேகலா,
மிக்க நன்றி. முனைப்புடன் படித்து வருகிறேன். ஆனால் மறதி அதிகம் இப்போதெல்லாம். என் செய்யலாம்?  உங்களுடைய பாராட்டு எனக்கு டானிக் மாதிரி. தந்தையிடம் என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.
அன்புடன், இன்னம்பூரான்
*
மிகச் சிறப்பான தேர்வு தேமொழி. [இவர் தான் வல்லமையாளரை தேர்தெடுக்கும் பணியை திறமுடனும், உழைத்து எழுதிய ஆய்வுடனும் பதிவு செய்பவர். சில சமயம் நான் இவரை அமுதமொழி என்று அழைப்பது உண்டு. அவருடன் ஸ்கைப்பும்போது தான், இவர இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர் என்று அறிந்தேன். I admire her indefatigable search capabilities. She is our Queenpin.]  

திரு.இன்னம்பூரான் அவர்களின் அரசு சேவை, பரந்த அனுபவம் என்பனவற்றை சிறிதும் குறைத்து மதிப்பிட முடியாது. தனது அனுபவங்களை மக்களுக்குச் சொல்லி அதனால் பலர் மேம்பாடு காண உதவ முயற்சிக்கும் இவரை அப்பணிகளுக்காவும் வாழ்த்த வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகள் பழக்கத்தில் எனது தந்தை போன்ற அன்பினை தனிப்பட்ட வகையில் இவரிடத்தில் காண்பதனால் மட்டும் சொல்லவில்லை. திரு.இன்னம்பூரான் போன்றோர் பல இளம் சமூகத்தினருக்கு நல்ல உதாரணம். வயதாகி விட்டதே என உடல் தளர்ச்சியை மட்டும் மனதில் எண்ணிக் கொண்டிராமல், பல முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவராற்றும் சேவை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நலம் விரும்பி மட்டுமல்ல.. இணைந்து உழைக்கும் சேவையாளர் இவர்..
இவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

சுபா எனப்படும் சுபாஷிணி: [தமிழ் மரபு அறக்கட்டளையின் சாவிக்கொத்து, அவர் கையில். இவரது மின் தமிழ் ‘கார்வார்’ நிர்வாகம் உலக பிரசித்தம்.(திருவாவடுதுறை மடத்தின் ‘தெளிதேனும் கஷாயமும்’ கலந்த மென்மையாக கண்டிப்பான நிர்வாகத்தை உ.வே.சா. இவ்வாறு குறிப்பிடுவார். சுபாஷிணிக்கு உ. வே.சா. கண்கண்ட தெய்வம்.] சுபாஷிணி எனக்கு மகளாக இருப்பது என் கொடுப்பினை.

அன்பின் ஸுபாஷிணி,
என்றோ ஒரு நாள் உமது அழைப்பு என்னை தமிழுலகுக்குக் கொணர்ந்தது நேற்றைய நிகழ்வு போல் மலரும் நினைவு. ஆறு வருடங்களுக்கு மேல் பல வகைகளில் தமிழ் பணியில் இணைந்து செயல் படுகிறோம். மகள் சொல்வதை தந்தை செய்வது இங்கு கண்கூடு. உமது மனம்  இசைத்த வாழ்த்துக்களும், கனிவான போற்றுதலும் என் மனதை நெகிழ வைக்கின்றன. நீண்ட நாட்கள் தமிழ்த்தொண்டு செய்ய ஆசை. அன்புடன், இன்னம்பூரான் 
*
I am coming. சற்றே பொறுத்தாள்க. பசிக்கிறது. சாப்பிட போகணும்.
‘இ’ நான் தான். இன்னம்பூரான்!
****
அன்பினிய திரு இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கு,

வணக்கம். இந்த வார வல்லமையாளராகத் தாங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதில் இந்த விருது பெரும் பேறு பெறுகிறது என்றே சொல்ல வேண்டும். அதற்கான அறிவிப்பு இதோ இங்கு http://www.vallamai.com/?p=52062 உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.

அன்புடன்
பவளா [ இவர் வல்லமையின் ஆசிரியர். பல நூல்கள் எழுதியுள்ளார். வல்லமை தொடர்பை க்ளிக்கிப்பார்க்கவும்.]

அன்பின் பவளா: எல்லாமே டீம் ஒர்க். கூடிய சீக்கிரம் வல்லமையொலும் எழுதுகிறேன்.
அன்புடன்,
இன்னம்பூரான்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com