Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 25 ‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே! லாவண்யீ புருஷனே!’

GmailInnamburan Innamburan

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 25 ‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே! லாவண்யீ புருஷனே!’
5 messages

Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 6:28 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 25
‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே! லாவண்யீ புருஷனே!’

சில நேரங்களில் சில மனிதர்கள். இன்று எழுதப்படுபவனை,வாசகருக்கு தெரிந்த அரசியல் தலையுடன் ஒப்புமை செய்தால், அது அவரது படைப்பாற்றல். நான் பொறுப்பல்ல. ஆம். இவனுடைய அரசியல் வளர்ச்சி, அந்த ரகம். இவனுக்கு பிறந்த நாள் விழாவும் கிடையாது. அஞ்சலி தினமும் கிடையாது. ஒரு நாட்டின் அரசு தன்னுடைய அதிகார பூர்வமான வரலாற்றில், கரும்புள்ளி குத்தி, வியாகூலத்துடன் அவமதித்த அதிபர், ஃபெர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் என்ற சாபக்கேடு. ஒரு நிம்மதியான மாபெரும் மக்கள் புரட்சியால் ஃபெப்ரவரி 25, 1986 அன்று தூக்கி எறியபட்ட ஜனாதிபதி, இவன். இருபது ஆண்டுகளுக்கு மேல், முறையாகவும், முறைகேடாகவும், ஜனாதிபதியாக யதேச்சாதிகாரம் செய்தவன். இவனால் நாடு கடத்தப்பட்டாலும், இவனுடன் தேர்தலில் போட்டியிட, துணிவுடன் நாடு திரும்பிய அக்வினோ என்ற எதிர்க்கட்சி தலைவரை, ஆகஸ்ட் 21, 1983 அன்று, அவர் விமானத்திலிருந்து இறங்கும்போதே சுட்டுக்கொன்றனர், இவனுடைய அடியாட்கள்.
இவன் பள்ளியில் சூடிகை. நல்ல பேச்சாளன். வழக்கறிஞர். இவன் பதவியில் இருந்தவரை மூடி மெழுகிவைத்த விஷயங்கள். 1933ல் நடந்த கொலை ஒன்றில் 1939ல்  இவன் தான் குற்றவாளி என்ற தீர்வானது. அது பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம். ஜப்பானுடன் கெரில்லா சண்டையிட்டவன் என்ற இவனுடைய தரப்பு பிரச்சார முழக்கங்கள் ஆதாரமற்றது என்கின்றன, அமெரிக்க அரசின் ஆவணங்கள். அமெரிக்காவில் கோடிக்கணக்கான பணத்தை ஒளித்து வைத்திருந்த அயோக்கியத்தனம்.  
1965ல், கட்சி மாறி, தன் தலைவனுக்கே உலை வைத்து, ஆளுமையை கைப்பற்றிய மார்கோஸ், 1969ல் மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்றது ஆச்சிரியமல்ல. அந்த காலகட்டத்தில் வேளாண்மை, தொழிற்வளர்ச்சி, கல்வி ஆகிய துறைகளில், இவனுடைய உந்துதலால், முன்னேற்றம் இருந்ததும் உண்மை. ஆனால், மக்கள் எதிர்ப்பு இருந்து கொண்டதே வந்தது, கண, கண என்று, நீறு பூத்த நெருப்பாக. ஸெப்டம்பர் 21, 1972 அன்று, மார்க்கோஸ் அடக்குமுறை பிரகடனம் செய்தான். எதிர்க்கட்சியினரை கைது செய்தான். ராணுவத்தை கைக்குள் போட்டுக்கொண்டான். மனித உரிமைகளை பறித்தான். சட்டம் கேலிக்கூத்தானது. எதிர்ப்பு வலுத்தது. ஜனவரி 17, 1981 அன்று உளவாங்காட்டிக்கு (உதட்டளவில்) அடக்குமுறை ரத்து செய்து, ஜூன் மாதம் மறுபடியும் அதிபரானான், ஒரு கேலிக்கூத்து தேர்தலில்.
புருஷனுக்கேற்ற பெண்டாட்டி, ‘ செருப்பு புகழ் அழகி’ இமெல்டா. இருவரையும் 99% லஞ்சன் & லஞ்சிணி என்றால் மிகையாகாது. முதல் காரியமாக, சொந்த பந்தங்களை மட்டும் பசையான பதவிகளில் வைத்தாள், இமெல்டா. மணிலா கவர்னரும் நானே, மக்கள் வாழ்வு அமைச்சரும் நானே என்றாள். இருவரும் லஞ்சத்தில் மிதந்தார்கள். நாட்டில் ஏழைகள் அதிகரித்தனர். செல்வந்தர்கள் கொழுத்தனர். மக்களிடையே இவர்கள் மீது பகை வளர்ந்தது. கம்யூனிஸ்ட் புரட்சி ஓங்கியது. 1986ல் தேர்தலில் பேத்துமாத்து செய்து, கொல்லப்பட்ட அக்வினோவின் மனைவி கொராஸான் அக்வினோவை தோற்கடித்தான். அது நடந்தது ஃபெப்ரவரி 7, 1986. பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? ராணுவம் உடைந்தது. கொராஸான் அக்வினோவை ஒரு சாரார் ஆதரித்தனர். இது வரை அவனை ஆதரித்த அமேரிக்கா, அவனை நாட்டை விட்டு ஓடச்சொன்னார்கள். ஃபெப்ரவரி 25, 1986 அன்று ஃபெர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ்ஸும், இமெல்டாவும், அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்தனர். கோடிக்கணக்கான டாலர்களை மக்களிடமிருந்து இருவரும், சுற்றமும் கொள்ளையடித்தது அம்பலத்துக்கு வந்தது.
புரிகிறது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் கொஞ்சநஞ்சமிலா லஞ்சனை பற்றியும் லாவண்யீ புருஷனை பற்றியும் இங்கு என்ன பேச்சு என்று கண்டனம் எழுவது காதில் விழுகிறது. ‘லேட்டா வந்தாலும்   லேட்டஸ்ட்டா  வரது’ என்ற ஆணையையும் ஒப்பேற்ற வேண்டும். பாருங்கோ! சுசேதா தலால் என்ற பிரபல இதழாளர் சொல்கிறார், இரண்டே தினங்கள் முன்னால். சாராம்சம் இங்கே. ஒரிஜினல், உசாத்துணையில். 
சாராம்சம்: கறுப்புப்பணம், லக்ஷமும், கோடியுமாக அதை லபக்கினவர்கள் பற்றி, பத்தி பத்தியாக ஊகங்களும், ஆய்வுகளும் வந்தபடி உள்ளன. அவ்வப்பொழுது அரசு ‘உள்ளதை சொன்னால், மன்னித்து அருளுவோம்’ திட்டங்களை அறிவிக்கும். நாணயமிழந்தவர்களுக்கு அது ஒரு கேடயம். அவ்வகை திட்டம் ஒன்று தயாராகி வருதாம்! ஆனால், ஒரு இடைஞ்சல். 1996ம் வருடம், இனி இம்மாதிரியான ‘ சால்ஜாப்பு தருக. மாப்பு தருகிறோம்’ திட்டங்கள் அறிவிக்கமாட்டோம் என்று, காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்திடம் வாக்கு அளித்திருக்கிறது. அமெரிக்கா/இங்கிலாந்தில் இம்மாதிரி திட்டங்களில், அபரிமிதமான அபராதம் விதிக்கபடும். ஆனால், 1997ல், பார்லிமெண்ட் சீட்டை பரிசலாக பெற்ற நாணயமற்ற அதிகாரிகள், லக்ஷமும், கோடியுமாக லபக்கினவர்களின் பொய்யையும், புனைசுருட்டையும் தப்பிக்கவிட்டனர். தணிக்கத்துறை அந்த திட்டத்தை ‘நியாயமாக வரி செலுத்துபவர்களை வஞ்சனை செய்த திட்டம்’ என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியது. ஹஜார் என்றால் ஹிந்தியில் ஆயிரம். அன்னா ஹஜாரே ஆயிரம் கேள்விகள் கேட்கிறார். ஆயிரமாயிரம் ஹஜாரேக்கள் மக்கள். அவர்கள் பல்லாயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். இந்த அழகில் கறுப்புப்பணம் திரும்புமா? திரும்பாதா? 
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
பேசும் சித்திரம்.
உசாத்துணை: 

Geetha SambasivamFri, Feb 24, 2012 at 7:35 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
வாசகருக்குத் தெரிந்த பல அரசியல் தலைமையோடு ஒப்பிட்டாலும் இங்கே அதிகமாய்த் தெரியுது எல்லாமுமே.  கறுப்புப் பணம் திரும்பாட்டியும் பரவாயில்லை;  நம்ம ஆளுங்க மாட்டிக்கக் கூடாதுனு இங்கே உள்ள தலைமைகள் தீர்மானிக்கலாம். யார் என்னத்தைக் கண்டது?  எந்தப் புத்தில் எந்தப் பாம்போ? :((((((

On Fri, Feb 24, 2012 at 12:28 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 25
‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே! லாவண்யீ புருஷனே!’

உசாத்துணை: 
--

Subashini Tremmel Fri, Feb 24, 2012 at 9:14 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 25

புருஷனுக்கேற்ற பெண்டாட்டி, ‘ செருப்பு புகழ் அழகி’ இமெல்டா. இருவரையும் 99% லஞ்சன் & லஞ்சிணி என்றால் மிகையாகாது. முதல் காரியமாக, சொந்த பந்தங்களை மட்டும் பசையான பதவிகளில் வைத்தாள், இமெல்டா. மணிலா கவர்னரும் நானே, மக்கள் வாழ்வு அமைச்சரும் நானே என்றாள்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமையம் இந்த செய்தியெல்லாம் மலேசிய பத்திரிக்கைகளில் அப்போது மிகப் பிரபலம். இமெல்டாவின் செருப்புக்களின் எண்ணிக்கையைக் கேட்டு வியந்து எத்தனை முறை பேசியிருப்போம் என்று தெரியவில்லை. இமெல்டாவும் மார்க்கோஸுக்கும் பின்னராவது பிலிப்பன்ஸ் மக்களுக்குக் கொஞ்சம் விடிவு காலம் வந்தது என்று கொஞ்சம் நம்பலாம்.

உங்கள் லஞ்சன் லஞ்சனி ப்ரயோகம்.. ப்ராமாதம் :-)

சுபா

இருவரும் லஞ்சத்தில் மிதந்தார்கள். நாட்டில் ஏழைகள் அதிகரித்தனர். செல்வந்தர்கள் கொழுத்தனர். மக்களிடையே இவர்கள் மீது பகை வளர்ந்தது. கம்யூனிஸ்ட் புரட்சி ஓங்கியது. 1986ல் தேர்தலில் பேத்துமாத்து செய்து, கொல்லப்பட்ட அக்வினோவின் மனைவி கொராஸான் அக்வினோவை தோற்கடித்தான். அது நடந்தது ஃபெப்ரவரி 7, 1986. பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? ராணுவம் உடைந்தது. கொராஸான் அக்வினோவை ஒரு சாரார் ஆதரித்தனர். இது வரை அவனை ஆதரித்த அமேரிக்கா, அவனை நாட்டை விட்டு ஓடச்சொன்னார்கள். ஃபெப்ரவரி 25, 1986 அன்று ஃபெர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ்ஸும், இமெல்டாவும், அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்தனர். கோடிக்கணக்கான டாலர்களை மக்களிடமிருந்து இருவரும், சுற்றமும் கொள்ளையடித்தது அம்பலத்துக்கு வந்தது.
புரிகிறது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் கொஞ்சநஞ்சமிலா லஞ்சனை பற்றியும் லாவண்யீ புருஷனை பற்றியும் இங்கு என்ன பேச்சு என்று கண்டனம் எழுவது காதில் விழுகிறது. ‘லேட்டா வந்தாலும்   லேட்டஸ்ட்டா  வரது’ என்ற ஆணையையும் ஒப்பேற்ற வேண்டும். பாருங்கோ! சுசேதா தலால் என்ற பிரபல இதழாளர் சொல்கிறார், இரண்டே தினங்கள் முன்னால். சாராம்சம் இங்கே. ஒரிஜினல், உசாத்துணையில். 
சாராம்சம்: கறுப்புப்பணம், லக்ஷமும், கோடியுமாக அதை லபக்கினவர்கள் பற்றி, பத்தி பத்தியாக ஊகங்களும், ஆய்வுகளும் வந்தபடி உள்ளன. அவ்வப்பொழுது அரசு ‘உள்ளதை சொன்னால், மன்னித்து அருளுவோம்’ திட்டங்களை அறிவிக்கும். நாணயமிழந்தவர்களுக்கு அது ஒரு கேடயம். அவ்வகை திட்டம் ஒன்று தயாராகி வருதாம்! ஆனால், ஒரு இடைஞ்சல். 1996ம் வருடம், இனி இம்மாதிரியான ‘ சால்ஜாப்பு தருக. மாப்பு தருகிறோம்’ திட்டங்கள் அறிவிக்கமாட்டோம் என்று, காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்திடம் வாக்கு அளித்திருக்கிறது. அமெரிக்கா/இங்கிலாந்தில் இம்மாதிரி திட்டங்களில், அபரிமிதமான அபராதம் விதிக்கபடும். ஆனால், 1997ல், பார்லிமெண்ட் சீட்டை பரிசலாக பெற்ற நாணயமற்ற அதிகாரிகள், லக்ஷமும், கோடியுமாக லபக்கினவர்களின் பொய்யையும், புனைசுருட்டையும் தப்பிக்கவிட்டனர். தணிக்கத்துறை அந்த திட்டத்தை ‘நியாயமாக வரி செலுத்துபவர்களை வஞ்சனை செய்த திட்டம்’ என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியது. ஹஜார் என்றால் ஹிந்தியில் ஆயிரம். அன்னா ஹஜாரே ஆயிரம் கேள்விகள் கேட்கிறார். ஆயிரமாயிரம் ஹஜாரேக்கள் மக்கள். அவர்கள் பல்லாயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். இந்த அழகில் கறுப்புப்பணம் திரும்புமா? திரும்பாதா? 
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
பேசும் சித்திரம்.
உசாத்துணை: 

--

Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 9:37 PM
To: mintamil@googlegroups.com
'...இமெல்டாவும் மார்க்கோஸுக்கும் பின்னராவது பிலிப்பன்ஸ் மக்களுக்குக் கொஞ்சம் விடிவு காலம் வந்தது என்று கொஞ்சம் நம்பலாம்...'
=> ஆம். 1989ல் அலஹாபாத்தில் ஒரு அகில உலக தணிக்கை திரிவேணி ஒன்று நடத்தும் தருணம் கிடைத்தது. ஃபிலிப்பன்ஸ் பிரதிநிதிகளாக வந்திருந்த இரு பெண்மணிகள் வஸந்தாவுக்கு நண்பர்கள் ஆகினர். நம் வீட்டிலேயே டேரா. அவர்களுடன், மனம் விட்டு, உரையாடல்கள் நடந்தன. அப்போது. நீங்கள் சொன்ன மாதிரி தான் தோன்றியது.
இன்னம்பூரான் 
2012/2/24 Subashini Tremmel

2012/2/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 25

புருஷனுக்கேற்ற பெண்டாட்டி, ‘ செருப்பு புகழ் அழகி’ இமெல்டா. இருவரையும் 99% லஞ்சன் & லஞ்சிணி என்றால் மிகையாகாது. முதல் காரியமாக, சொந்த பந்தங்களை மட்டும் பசையான பதவிகளில் வைத்தாள், இமெல்டா. மணிலா கவர்னரும் நானே, மக்கள் வாழ்வு அமைச்சரும் நானே என்றாள்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமையம் இந்த செய்தியெல்லாம் மலேசிய பத்திரிக்கைகளில் அப்போது மிகப் பிரபலம். இமெல்டாவின் செருப்புக்களின் எண்ணிக்கையைக் கேட்டு வியந்து எத்தனை முறை பேசியிருப்போம் என்று தெரியவில்லை. இமெல்டாவும் மார்க்கோஸுக்கும் பின்னராவது பிலிப்பன்ஸ் மக்களுக்குக் கொஞ்சம் விடிவு காலம் வந்தது என்று கொஞ்சம் நம்பலாம்.

உங்கள் லஞ்சன் லஞ்சனி ப்ரயோகம்.. ப்ராமாதம் :-)

சுபா

coral shree Sat, Feb 25, 2012 at 2:29 AM
To: Innamburan Innamburan
அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி ஐயா.... உங்களுடைய புதிய வார்த்தைகள் கண்டுபிடிப்புகள் சுவாரசியம்... லஞ்சன் - லஞ்சனி... சூப்பர். ..சுவை கூடிக்கொண்டே போகும் நையாண்டி எழுத்து நடை... நன்றி ஐயா.

அன்புடன்

பவளா.

No comments:

Post a Comment