Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 17 யாரோ? இவர் யாரோ?

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 17 யாரோ? இவர் யாரோ?
23 messages


Innamburan Innamburan Thu, Feb 16, 2012 at 6:34 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 17
யாரோ? இவர் யாரோ?
1986ம் வருடம் ஃபெப்ரவரி 17 அன்று ஜே.கே. அவர்களின் மறைவு கருதி மனம் வருந்தியது நினைவில் இருக்கிறது. அதற்கு சில வருடங்கள் முன்னால், மும்பையில், சிறுமியான என் மகளை கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய், அவருடைய உரையை கேட்டது, அதற்கு முன்னால், வஸந்த விஹாருக்கு என் மகனை அழைத்து சென்று அவருடைய உரையை கேட்டது, 1953/54ல் ராமமூர்த்தியுடன், சைக்கிளில் வஸந்த விஹாருக்கு நாள் தோறும் சென்று, ஆழம் தெரியாமல், அவரை குறுக்குக்கேள்வி கேட்டு, சபையோரின் கோபத்துக்கு ஆளானது, பண்பின் சிகரமாக இருந்து அவர் எனக்கு பேட்டி அளித்தது, அத்தருணம், தனக்கு அமானுஷ்ய அனுபவங்கள் இருந்திருக்கின்றன என்று அவர் சொன்னதை சிரத்தையுடன் கேட்டுக்கொள்ளாதது, அதற்கு பொருத்தமான விளக்கத்தை ரோஹித் மேஹ்தா என்ற தியாஸஃபிஸ்ட் ஐம்பது வருடங்களுக்கு பின் அளித்தது, என் மகளுக்கு ஜே.கே. யின் சிந்தனையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, 1990ல் அவளை திருமதி. புபுல் ஜயகரிடம் அழைத்து சென்றது,வஸந்தவிகாரில் ரெட்ரீட் இருந்தது, எல்லாம் ஒரு தொடர்சித்திரமாக என் கண் முன் ஓடுகிறது. என்னது இது? அவரை பற்றி எழுதமால், சுயபுராணம் என்றா கேட்கிறீர்கள்? கேள்வி நியாயம் தான். தர்மம் அல்ல. 
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை, படங்கள், ஒலி/ஒளி நாடாக்கள், வரலாற்று ஆவணங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு காப்புரிமையில் இருப்பதால், தப்புத்தவறிக்கூட அவருடைய பெயரில் இயங்கும் ஸ்தாபனங்களுடன் பிரச்னையை நான் விரும்பவில்லை. மேலும், சர்ச்சைகளுக்கு வித்திட விரும்பவில்லை. என் ஆத்மார்த்த அனுபவத்திற்கு காப்புரிமை இல்லை. அதான். அத்துடன் அது நிற்க.
என்னை ஜே.கே. ஆகர்ஷித்ததிற்குக் காரணம் அவர், சிந்தனாசக்திக்கு முதலிடம் கொடுத்தது. His being so graceful as not to parade himself as a Godman. கரை கடந்த பொறுமை. எதையும் உதறாத நற்குணம். சிக்கலான விஷயங்களை விளக்கும் போது, பாலபாடம் நடத்துவது போல, கையை பிடித்து செல்லும் லாகவம். ஒரு விதத்தில் அவரை சாக்ரட்டீஸ் போல என்று சொல்லலாம். தன்னை பற்றி அலட்டிக்கொள்ளாத ஸ்வபாவம். ஜே.கே. போன்றவர்களை பற்றி சுருக்கி எழுதுவது கூட சரியல்ல. கடல் அலையை கோப்பையில் அளக்க முடியுமா?என்ன? ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும் சில வார்த்தைகள். அதை பற்றிய முழு விவரம் உசாத்துணையில். நிதானமாக படித்துக்கொள்ளுங்கள். அவரை சம்ரக்ஷித்த அன்னிபெசண்ட் அம்மையார், ஜே.கே. ஒரு ஜகத்ரக்ஷகன் என்று ஊகித்தார்; பிரகடனம் செய்தார். அந்த கருத்தை பரப்ப,1911ல் ‘கிழக்கு வானில் ஒரு நக்ஷத்ரம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் நடு நாயகமான ஜே.கே.,அந்த அமைப்பை, ஆகஸ்ட் 3, 1929 அன்று கலைத்தார், காரணங்கள் பல கூறி. அந்த உரையின் முதல் கதை மட்டும் இங்கே. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மொழியாக்கத்துக்கு பொறுப்பு எனது.
“...சாத்தானும், அதனுடைய நண்பரும் தெருவில் நடக்கிறார்கள். முன்னால் செல்லும் மனிதன் தெருவில் பொறுக்கிய வஸ்துவை பத்திரப்படுத்திக்கொள்கிறான். அது என்ன என்று கேட்ட நண்பரிடம் சாத்தான், அது வாய்மையின் ஒரு பாகம் என்றது. ‘அடடா! அதனால் உனக்கு தீங்கு விளையுமே’ என்றான் நண்பன். ‘எனக்கும் நன்மை. நான் அவனை வாய்மையை நிறுவனப்படுத்த வைத்துவிடுவேன்’ என்றது, சாத்தான்...” என்று கதையை முகாந்திரமாக வைத்து ஜே.கே. பகர்ந்தது, “...வாய்மை நோக்கி பயணிக்க பாதை கிடையாது ~சமயம், மதம், சமயங்களின் கிளைகள். எல்லையில்லா, நிபந்தனையற்ற, பாதையில்லா வாய்மையை எப்படி நிறுவனப்படுத்தமுடியும்? அதாவது நம்பிக்கைக்கோட்டை என்பது மாயை. தனித்துவம் தான் நம்பிக்கையின் அடித்தளம். அதை நிறுவனம் செய்தால், அது சாதியும் சமயமுமாக உளுத்துப்போய்விடும்...உண்மையை இறக்கியா வைக்கமுடியும்? நாமல்லவோ மலையேறவேண்டும்!...எனக்கு ஒரே ஒரு இலக்கு: மனிதனுக்கு பூரண விடுதலை. கூண்டும் வேண்டாம்; இற்செறிப்பும் வேண்டாம்; சமயம், சாத்திரங்கள், அச்சம், அதிகாரம், கோயில் ~ஒன்றும் வேண்டாம். எனக்கு சிஷ்யர்களும் வேண்டாம்...உண்மை உறைவது உன்னிடம்; அது தொலைவிலும் இல்லை; அருகிலும் இல்லை; அது நிரந்தரமாக அங்கே இருக்கிறது. அமைப்புகளும், நிறுவனங்களும் உன்னை விடுவிக்கமாட்டா.”
இன்னம்பூரான்
17 02 2012
Inline image 1

உசாத்துணை:
All Rights Reserved Copyright ©1980 Krishnamurti Foundation America

Subashini Tremmel Thu, Feb 16, 2012 at 7:15 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com2012/2/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
..
“...சாத்தானும், அதனுடைய நண்பரும் தெருவில் நடக்கிறார்கள். முன்னால் செல்லும் மனிதன் தெருவில் பொறுக்கிய வஸ்துவை பத்திரப்படுத்திக்கொள்கிறான். அது என்ன என்று கேட்ட நண்பரிடம் சாத்தான், அது வாய்மையின் ஒரு பாகம் என்றது. ‘அடடா! அதனால் உனக்கு தீங்கு விளையுமே’ என்றான் நண்பன். ‘எனக்கும் நன்மை. நான் அவனை வாய்மையை நிறுவனப்படுத்த வைத்துவிடுவேன்’ என்றது, சாத்தான்...” என்று கதையை முகாந்திரமாக வைத்து ஜே.கே. பகர்ந்தது, “...வாய்மை நோக்கி பயணிக்க பாதை கிடையாது ~சமயம், மதம், சமயங்களின் கிளைகள். எல்லையில்லா, நிபந்தனையற்ற, பாதையில்லா வாய்மையை எப்படி நிறுவனப்படுத்தமுடியும்? அதாவது நம்பிக்கைக்கோட்டை என்பது மாயை. தனித்துவம் தான் நம்பிக்கையின் அடித்தளம். அதை நிறுவனம் செய்தால், அது சாதியும் சமயமுமாக உளுத்துப்போய்விடும்...உண்மையை இறக்கியா வைக்கமுடியும்? நாமல்லவோ மலையேறவேண்டும்!...எனக்கு ஒரே ஒரு இலக்கு: மனிதனுக்கு பூரண விடுதலை. கூண்டும் வேண்டாம்; இற்செறிப்பும் வேண்டாம்; சமயம், சாத்திரங்கள், அச்சம், அதிகாரம், கோயில் ~ஒன்றும் வேண்டாம். எனக்கு சிஷ்யர்களும் வேண்டாம்...உண்மை உறைவது உன்னிடம்; அது தொலைவிலும் இல்லை; அருகிலும் இல்லை; அது நிரந்தரமாக அங்கே இருக்கிறது. அமைப்புகளும், நிறுவனங்களும் உன்னை விடுவிக்கமாட்டா.”
வாசிக்கும் போதே மனதை லேசாக்கும் வரிகள். இன்றுதான் ஜே.கேயின் நினைவு நாள் என்பதை நினைவு படுத்தியதற்கும் மீண்டும் நினைக்க வைத்தத்கற்கும் நன்றி.

2003ம் ஆண்டு ஒரு பயணத்தின் போது ஜே.கேயின் ஒரு நூலை வாசித்துச் சென்றதும் அப்போது என் மனதில் தோன்றிய பல சிந்தனைகளையும் 10 பதிவுகளாக என் வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். 

விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம்.


அன்புடன்
சுபா


 
இன்னம்பூரான்
17 02 2012 
 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan Thu, Feb 16, 2012 at 7:19 PM
To: mintamil@googlegroups.com
நன்றி. நான் அவற்றை வாசிக்கிறேன். ஜே.கே. யின் சிந்தனைகள் நம்மை சுற்றி வந்தபடியே.
இன்னம்பூரான்
2012/2/16 Subashini Tremmel <ksubashini@gmail.com>
[Quoted text hidden]

s.bala subramani B+ve Fri, Feb 17, 2012 at 2:25 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கடல் அலையை கோப்பையில் அளக்க முடியுமா?
[Quoted text hidden]
>>> murti.org/about-krishnamurti/dissolution-speech.php<http://www.jkrishnamurti.org/about-krishnamurti/dissolution-speech.php>
[Quoted text hidden]
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/
[Quoted text hidden]

DEV RAJ Fri, Feb 17, 2012 at 6:35 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
>>> உண்மை உறைவது உன்னிடம்; அது தொலைவிலும் இல்லை;
அருகிலும் இல்லை; அது நிரந்தரமாக அங்கே இருக்கிறது <<<
ஜே கே ஜீ ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும்
உபநிஷத் சொல்வதும் அதையே, தொடுவானத்தைப்போல  --

"தத் தூ³ராத் ஸுதூ³ரே இஹ அந்திகே ச"தேவ்


On Feb 16, 12:34 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 17, 2012 at 6:39 AM
To: mintamil@googlegroups.com
என்னே அருமையான மேற்கோள்! ஒரு சின்ன விளக்கமும், எந்த உபனிஷத் என்பதும் மெலும் உதவும், தேவ். குறிப்பாக, 'இஹ அந்திகே ச'
இன்னம்பூரான்
2012/2/17 DEV RAJDEV RAJ Fri, Feb 17, 2012 at 6:46 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
முண்டக உபநிஷத் , உங்களுக்குத் தோதாக
ஹிந்தியில் விளக்கம் -

http://www.wattpad.com/163868?p=84


தேவ்

On Feb 17, 12:39 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> என்னே அருமையான மேற்கோள்! ஒரு சின்ன விளக்கமும், எந்த உபனிஷத் என்பதும் மெலும்
> உதவும், தேவ். குறிப்பாக, 'இஹ அந்திகே ச'
> இன்னம்பூரான்
>
> 2012/2/17 DEV RAJ
>
> > >>> உண்மை உறைவது உன்னிடம்; அது தொலைவிலும் இல்லை;
> > அருகிலும் இல்லை; அது நிரந்தரமாக அங்கே இருக்கிறது <<<
>
> > ஜே கே ஜீ ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும்
> > உபநிஷத் சொல்வதும் அதையே, தொடுவானத்தைப்போல  --
>
> > "தத் தூ³ராத் ஸுதூ³ரே இஹ அந்திகே ச"
>
> > தேவ்
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 17, 2012 at 6:59 AM
To: mintamil@googlegroups.com
மிக்க நன்றி. வசனாமிருத் அமுதமாகவே இருக்கிறது.
[Quoted text hidden]

கி.காளைராசன் Fri, Feb 17, 2012 at 7:07 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

ஜி.கே. யின் புத்தகம் ஒன்றே ஒன்று என்னிடம் உள்ளது. அதை முழுவதும் படித்துப் பொருள் உணர்ந்து கொள்ள வேண்டியவனாகவே இன்றும் உள்ளேன்.
தங்களைப் போன்றோர் விளக்கம் கூறினால்தான் அவரை என்னால் உணர்ந்து கொள்ள முடியும்.

எனவே,
2012/2/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அவரை குறுக்குக்கேள்வி கேட்டு, சபையோரின் கோபத்துக்கு ஆளானது, பண்பின் சிகரமாக இருந்து அவர் எனக்கு பேட்டி அளித்தது, அத்தருணம், தனக்கு அமானுஷ்ய அனுபவங்கள் இருந்திருக்கின்றன என்று அவர் சொன்னதை சிரத்தையுடன் கேட்டுக்கொள்ளாதது, அதற்கு பொருத்தமான விளக்கத்தை ரோஹித் மேஹ்தா என்ற தியாஸஃபிஸ்ட் ஐம்பது வருடங்களுக்கு பின் அளித்தது,
குறித்தும் தாங்கள் நேரம் கிடைக்கும்போது விளக்கிட வேண்டுகிறேன்.
தட்டச்சு செய்யாமல் ஒலிப்பதிவாக வழங்கினாலும் நலமே.

-- 
அன்பன்
கி.காளைராசன்


Innamburan Innamburan Fri, Feb 17, 2012 at 7:20 AM
To: "கி.காளைராசன்"
ஒலிப்பதிவு செய்ய பார்க்கிறேன், காளைராஜன்,


2012/2/17 கி.காளைராசன்கி.காளைராசன் Fri, Feb 17, 2012 at 7:36 AM
To: Innamburan Innamburan
வணக்கம் ஐயா,

2012/2/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஒலிப்பதிவு செய்ய பார்க்கிறேன்,

நன்றி ஐயா,

தட்டச்சு செய்தலின் பேச்சே தங்களுக்கு நலம்,
கற்றலின் கேட்டலே (எனக்கு) நன்று,
 
அன்பன்
கி.காளைராசன்


DEV RAJ Fri, Feb 17, 2012 at 9:11 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
>>> அமைப்புகளும், நிறுவனங்களும் உன்னை விடுவிக்கமாட்டா <<<
The yogin practices  and at the height of his practice there is
neither object nor subject in his experience. J K ji explains things
in his own way denying conventional systems.

Why da need for an institution in his name ?


dev


On Feb 16, 12:34 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
murti.org/about-krishnamurti/dissolution-speech.php<http://www.jkrishnamurti.org/about-krishnamurti/dissolution-speech.php>
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Feb 17, 2012 at 3:26 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி.  ஆனால் சந்தேகம் என்னவெனில்

ஒன்றும் வேண்டாம். எனக்கு சிஷ்யர்களும் வேண்டாம்...உண்மை உறைவது உன்னிடம்; அது தொலைவிலும் இல்லை; அருகிலும் இல்லை; அது நிரந்தரமாக அங்கே இருக்கிறது. அமைப்புகளும், நிறுவனங்களும் உன்னை விடுவிக்கமாட்டா.” இப்படிச் சொன்ன மனிதருக்கு 


ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை, படங்கள், ஒலி/ஒளி நாடாக்கள், வரலாற்று ஆவணங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு காப்புரிமையில் இருப்பதால், தப்புத்தவறிக்கூட அவருடைய பெயரில் இயங்கும் ஸ்தாபனங்களுடன்  

ஸ்தாபனங்கள் இருப்பது கூட ஒரு முரணாகத் தெரிகிறதே. சீடர்களும் இருக்கிறார்கள்.  அவர் ஒரு யோகி என்பதை நன்கறிவேன். ஆகவே ஜே.கே.யைப் பற்றிக் குறை கூறவில்லை.  விவாதம் செய்வதற்கும் கேட்கவில்லை. எனக்கு உள்ள சந்தேகத்தைத் தெளிய வைத்துக்கொள்ளவே கேட்கிறேன்.  நன்றி.  அதனால் தான் முதலில் பின்னூட்டமும் கொடுக்கவில்லை.

தேவ் அவர்களைப் போலவே எனக்கும் சந்தேகம்.  ஏற்கெனவே தமிழ்வாசலில் பார்த்திருப்பீர்கள்.  இது தேவையா?
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 17, 2012 at 4:12 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88
சில நுட்பங்களை நான் விவரிக்கவில்லை. நான் சர்ச்சை விரும்பவில்லை.மேலும், சுருங்கக்கூற வேண்டியிருந்தது. பிரம்மஞானசபையின் Esoteric School, the fringe of which I had seen, is mythologically abstruse and is most mysterious and unbelievable, to say the least. அன்னி பெஸண்ட், ஜே.கே. யை எடுத்து வளர்த்ததும், ஜகத் ரக்ஷகனாக அறிவித்ததும், is mythologically abstruse and is most mysterious  to say the least. 18 வருடங்கள் கழித்து அந்த 'நிறுவனத்தை' கலைத்தபோது, அவர் சொன்னதெல்லாம் புரிகிறது. இத்தனை அழுத்தமும், திருத்தமும் தேவையாக இருந்தன. என்னுடைய அறிமுகத்தின் அழுத்தம் அதன் மீது தான். கடைசி வரை அவர் அதையே சொல்லி வந்தார். இருந்தாலும், நிழலாகத் தொடர்ந்த காப்புரிமை நிறுவனங்களை நிராகரிக்கவில்லை. அவை இல்லையெனில், அவருக்கு ஆள் பலம் இருந்திருக்காது. வரலாறு மீண்டும், மீண்டும், நிறுவன நங்கூரங்களை பற்றி, பல சூழ்நிலைகளில் கூறுகிறது; அதே தருணம், அவற்றில் சில சேவை செய்வதையும் காண்கிறோம், எந்த சிந்தமையாளரை எடுத்துக்கொண்டாலும். சான்றாக, நாத்திகம் படும் பாட்டை பாருங்கள். 

'...நூற்றுக்கு நூறு காப்புரிமையில் இருப்பதால், தப்புத்தவறிக்கூட அவருடைய பெயரில் இயங்கும் ஸ்தாபனங்களுடன்  ...' என்ற சொற்றொடரில், மேற்படி விளக்கம் அடக்கம். மேலும் ஒரு பிரச்னை உண்டு. அவரது செய்கை ஒன்று நிந்தனைக்கு ஆளானது. என்னுடைய ஃபோகஸ்ஸுக்கு, அதை, தேவையில்லை, என்று ஒதுக்கினேன்.
முக்கியமாக ஒரு விஷயம் தெளிவு படுத்த வேண்டும், என்னுடைய ஒப்புதல் அணுகுமுறையை கூற. அதற்கு தேவ் தான் உதவி செய்ய வேண்டும், யான் கேட்ட விளக்கத்தை அளித்து. 
காளை ராஜன் கேள்விக்கு, பிறகு பதில்.
நன்றி,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Feb 18, 2012 at 1:02 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
இற்செறிப்பும் வேண்டாம்; சமயம், சாத்திரங்கள், அச்சம், அதிகாரம், கோயில் ~ஒன்றும் வேண்டாம். //

இன்னிக்கு மத்தியானம் பரமஹம்ச யோகானந்தர் குறித்துப் படிக்கையில், தாரகேஸ்வரர் கோயிலில் முதலில் அவர் விழுந்து வணங்காமல் சென்றுவிடுவதையும், பின்னர் ராம் கோபால் மஜும்தாரைச் சந்தித்ததும் அவர் கேட்ட கேள்வியில் தூக்கிவாரிப் போட்ட பரமஹம்சருக்குக் கோயில்கள் குறித்து மஜும்தார் அளித்த விளக்கத்தைப் படிக்கையில் ஜேகேயைக் குறித்து நீங்கள் எழுதிய மேற்கண்ட வரிகள் நினைவில் வந்தன.

Holy Shrines In Tarakeswar and elsewthere are rightly venerated as nucleara centres of spiritual power. 
மஜும்தாருடனான சந்திப்பு முடிந்து திரும்பிப் போகையில் தாரகேஸ்வரருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிவிட்டுச் சென்றதாகப் பரமஹம்சர் குறிப்பிட்டிருக்கிறார்.  


2012/2/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 17
யாரோ? இவர் யாரோ?
1986ம் வருடம் ஃபெப்ரவரி 17 அன்று ஜே.கே. அவர்களின் மறைவு கருதி மனம் வருந்தியது நினைவில் இருக்கிறது. அதற்கு சில வருடங்கள் முன்னால், மும்பையில், சிறுமியான என் மகளை கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய், அவருடைய உரையை கேட்டது, அதற்கு முன்னால், வஸந்த விஹாருக்கு என் மகனை அழைத்து சென்று அவருடைய உரையை கேட்டது, 1953/54ல் ராமமூர்த்தியுடன், சைக்கிளில் வஸந்த விஹாருக்கு நாள் தோறும் சென்று, ஆழம் தெரியாமல், அவரை குறுக்குக்கேள்வி கேட்டு, சபையோரின் கோபத்துக்கு ஆளானது, பண்பின் சிகரமாக இருந்து அவர் எனக்கு பேட்டி அளித்தது, அத்தருணம், தனக்கு அமானுஷ்ய அனுபவங்கள் இருந்திருக்கின்றன என்று அவர் சொன்னதை சிரத்தையுடன் கேட்டுக்கொள்ளாதது, அதற்கு பொருத்தமான விளக்கத்தை ரோஹித் மேஹ்தா என்ற தியாஸஃபிஸ்ட் ஐம்பது வருடங்களுக்கு பின் அளித்தது, என் மகளுக்கு ஜே.கே. யின் சிந்தனையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, 1990ல் அவளை திருமதி. புபுல் ஜயகரிடம் அழைத்து சென்றது,வஸந்தவிகாரில் ரெட்ரீட் இருந்தது, எல்லாம் ஒரு தொடர்சித்திரமாக என் கண் முன் ஓடுகிறது. என்னது இது? அவரை பற்றி எழுதமால், சுயபுராணம் என்றா கேட்கிறீர்கள்? கேள்வி நியாயம் தான். தர்மம் அல்ல. Innamburan Innamburan Sat, Feb 18, 2012 at 7:14 AM
, mintamil , thamizhvaasal

மிகவும் பொருத்தமான குறிப்பு. பரமஹம்ச யோகானந்தர் அமைதியின் உருவகம். அவருடைய சுய சரிதை மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கோயில்களை ஆன்மீக தளங்கள் என்பதும் சரி தான். ஆனால், மனிதனின்... ! ஸ்வாமி விவேகானந்தரை தக்ஷிணேஸ்வர் கோயிலில் நுழைய அனுமதிக்கவில்லையே, அவர் சமுதாய முன்னேற்றம் பற்றி பேசிய பின். நீங்கள் படித்த செய்தி இணைய தளத்தில் இருந்தால், எனக்கு அனுப்புங்கள். படிக்க ஆவலாக இருக்கிறது.
இன்னம்பூரான்
2012/2/18 Geetha Sambasivam
இற்செறிப்பும் வேண்டாம்; சமயம், சாத்திரங்கள், அச்சம், அதிகாரம், கோயில் ~ஒன்றும் வேண்டாம். //Innamburan Innamburan Sat, Feb 18, 2012 at 7:52 AM
To: Geetha Sambasivam , mintamil , thamizhvaasal
இன்றைய ஹிந்து இதழில்:
இன்னம்பூரான்
18 02 2012
****
As the electronic surveillance system at the sorting and counting centre at Sabarimala faltered, a substantial chunk of cash, gold, and other offerings made by the pilgrims during the previous Mandalam and Makaravilakku festivals had been embezzled, says an interim audit report of the Local Fund Audit Department...since only one CCTV functioned, only one visual could be seen at a time... Moreover, the visuals were not recorded for further scrutiny...The police had caught a board employee at the centre from Pamba on November 29 with Rs.47,400 in cash.. The board had spent huge amounts for hiring security equipment, but it could have instead bought sophisticated scanners to prevent the smuggling of money and gold...As early as 2003, the auditors had cautioned the board against the attempts made by the counting staff to smuggle gold coins by slipping them under the tongue and hiding currency, especially dollars and pounds, in private parts... If the present system were to continue, misappropriation of money and valuables would continue, it was pointed out.
***
[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Feb 18, 2012 at 1:21 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்
2012/2/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>
காளை ராஜன் கேள்விக்கு, பிறகு பதில்.

ஐயா,
ஜி.கே,யைத் தங்கள் வழி அறிந்து கொள்ள அன்புடன் காத்திருக்கிறேன்.

--
அன்பன்
கி.காளைராசன்


Geetha Sambasivam Sat, Feb 18, 2012 at 2:09 PM
To: Innamburan Innamburan
Cc: mintamil , thamizhvaasal
Autography of a Yogi இணையத்திலே கூகிள் புத்தகம், அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கலாம்.  நான் பார்க்கவில்லை. :( எனக்குப் புத்தகம் ஒருவரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.  படிக்க ஆரம்பித்த போது பல்வேறுவிதமான தடங்கல்கள் ஏற்பட்டன. நடுவில் எந்தப் புத்தகமுமே படிக்க முடியாமல் இருந்தது.  இப்போது தான் மறுபடி படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  அதிலிருந்து தான் மேற்சொன்ன வரிகளைக் குறிப்பிட்டேன். 

பற்பல கருத்துக்களும் அருமையாக உள்ளன.  குறித்து வைத்திருக்கிறேன்.  தக்க சமயத்தில் பகிர்ந்து கொள்வேன். 
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Feb 18, 2012 at 2:38 PM
To: 
கூடன்பர்கில் இருக்கிறது. என்னிடமும் ஒரு அச்சுப்பிரதி இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறேன். 
நன்றி,
[Quoted text hidden]

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sun, Feb 19, 2012 at 7:38 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அன்புள்ள இ சார்

இந்த நூலை கவிஞர் புவியரசு மொழிபெயர்த்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. பல பதிப்புகள் கண்ட மொழிபெயர்ப்பு நூல் இது.  1987ல் என்னுடைய மருமகன் அவனுடைய அமெரிக்க விஜயத்தின் போது அங்கிருந்து வாங்கி வந்து எனக்குத் தந்தான்.

லாஹிரி மஹாஸாயா, பாபாஜி (ரஜினி சினிமாவில் சீரழிந்த மஹான்) ஆகியோர் பற்றிய குறிப்புக்கள் அந்த வயதில் எனக்குப் பெரும் பரவசம் அளித்தன.  தமிழிலும் நன்றாகவே மொழி பெயர்த்து இருக்கிறார் புவியரசு.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

2012/2/18 Geetha Sambasivam 

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sun, Feb 19, 2012 at 7:39 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஒரு சிறிய குழப்பம்.

மொழிபெயர்ப்பு தொண்ணூறுகளின் இறுதியில் வந்தது.  மருமகன் வாங்கி வந்தது ஆங்கில நூல்.  சரியாக கவனித்து எழுதவில்லை என்றால் இப்படி சொதப்ப வாய்ப்புக்கள் நிறைய.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------2012/2/19 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Sun, Feb 19, 2012 at 9:42 AM
To: thamizhvaasal@googlegroups.com
நன்றி, பென். மொழி பெயர்ப்பு ஒரு கலை, ஆர்வம், திட்டம், மொழித்திறன். அந்த தமிழாக்கத்தை வாங்கிப்பார்க்கிறேன். ஒன்று தெளிவு. விவேகானந்தர், யோகானந்தர் போன்றவர்களின் குருநாதர்கள் உள்ளுறைந்து வாழ்ந்த புருஷோத்தமர்கள். சேஷாத்ரி சுவாமிகளையும், ஜட்ஜ் ஸ்வாமிகளையும் நினைத்துப் பாருங்கள்.
இன்னம்பூரான்
2012/2/19 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>