Friday, March 4, 2016

இன்னம்பூரான் பக்கம்: 4: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

இன்னம்பூரான் பக்கம்: 4:
கனம் கோர்ட்டார் அவர்களே![26]
இன்னம்பூரான்
05 03 2016

இது இன்றைய செய்தி -05  03 2016.

ராஜாவுக்கு கோபம் வந்தால் சிரச்சேதம் செய்து விடுவான். சற்றே கொடூரபுத்தி இருந்தால் யானையை மிதிக்கச்சொல்லி வேடிக்கை பார்ப்பான். தற்காலம் என்ன தான் தவறு செய்தாலும், தூக்கிலிடலோமோ என்று சர்ச்சை நடக்கிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் அத்தகைய தண்டனைகள் கிடையா.

16 வருடங்களுக்கு முன்னால் செல்வி ஜெயலலிதாவை கைது செய்ததை எதிர்த்து நடந்த தர்மபுரி கலவரத்தின் போது பஸ்ஸை எரித்து  அப்பாவியான மூன்று மாணவிகள் கொல்லப்பட்டனர். மதுரையின் அழகு தெரிந்ததே. தினகரன் இதழ்  அலுவலகம் தீயூட்டப்பட்டது. அப்பாவி மனிதர்கள் வெந்து இறந்தனர்.

உச்ச நீதி மன்றத்தில் தர்மபுரி குற்றவாளிகள் தங்களை தூக்கிலிடக்கூடாது என்று மனு செய்துள்ளனர்.

ஹிந்து பத்திகையில் வந்த செய்தி கீழே. மக்கள் மன்றங்கள் என்ன சொல்கின்றன?
இன்னம்பூரான்
மார்ச் 5, 2016
*******
Dharmapuri bus burning case: Convicts want death penalty reversed



The Hindu
The ill-fated Tamil Nadu Agriculture University bus, in which three girl students were burnt alive during a mob violence in Dharmapuri on February 02, 2000, was taken to Coimbatore from the Salem court complex on April 25, 2008. Photo: P. Goutham


Sixteen years after they torched a bus and burnt to death three college girls while protesting the arrest of AIADMK general secretary Jayalalithaa, the convicts in the Dharmapuri bus burning case told the Supreme Court on Friday to revoke their death penalty, saying murder committed during mob frenzy is not pre-meditated.
Arguing their review petition before a tri-judge Bench led by Justice Ranjan Gogoi, senior advocate L. Nageshwar Rao said mobs go berserk and possess a demented sight of what is around them.
Referring to the riots after the killing of former Prime Minister Indira Gandhi, Mr. Rao used the defence of "diminished responsibility" to argue that the accused, who were part of a rampaging mob, cannot be held fully criminally liable for the crime as their mental capacity were impaired at the time.
To buttress the point, one of the defence counsel, senior advocate Sushil Kumar, said “in the south people worship their leaders and on their death even kill themselves".
“Mobs go berserk. Reason does not enter their minds. After the judgment at 10.30 am, the agitations had started. There was absolutely no pre-meditation. There was a workshop nearby, they took petrol from there and started sprinkling it on the buses,” Mr. Rao recounted the fateful day.
Mr. Kumar said the accused were only “looking for some government property to destroy and were not targeting human lives”.
Mr. Rao argued that death was too harsh a punishment, as the convicts had no personal animosity towards their victims and were themselves the victims of “mob psychology”.
“Your Lordships may be knowing that communal riots are committed by mostly illiterate persons, who are indoctrinated...” Mr. Rao explained.
He said there was nothing to show that the accused cannot be “reformed”.
At one point, Justice Gogoi tested the waters by asking whether life would mean “life sentence without remission for 25 to 30 years”.
To this, Mr. Kumar said the Supreme Court should only say sentence reduced to “life and put a full stop” leaving the rest, including the power of remission, in the hands of the State administration.
The review petition of the three death row convicts - Nedunchezhian, Ravindran and Muniappan – is being heard after a Constitution Bench of the Supreme Court ordered limited, open court hearing before a three-judge Bench in case of death penalty reviews.
The Dharmapuri case relates to the death of three students – Kokilavani, Gayathri and Hemalatha – of the Tamil Nadu Agricultural University, Coimbatore, when the bus they were travelling in along with 44 other students and two teachers were torched by the three convicts on February 2, 2000, after the conviction of Ms. Jayalalithaa in a criminal case.


© The Hindu

Thursday, March 3, 2016

இன்னம்பூரான் பக்கம்: 5: “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?”

இன்னம்பூரான் பக்கம்: 5: “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?”
இன்னம்பூரான்
03 03 2016
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=66814

நவம்பர் 14, 2009 அன்று மின் தமிழில் ‘தாவீது பாக்கியமுத்து நன்றாகத் தமிழில் எழுதுவார். அவர் எழுதிய “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?” என்ற கட்டுரையை படித்திருக்கிறேன்.’என்று ஒரு 1941வது வருட நிகழ்வை (அதாவது 75 வருடங்களுக்கு முன்னால்) பற்றி எழுதியிருந்ததை என் கண் முன்னால் வந்து வைத்தது: மாது சிரோன்மணி பத்ம பூஷண் எம். சாரதா மேனன் (டாக்டர்) அவர்களுக்கு தமிழ் நாட்டு அரசு அவ்வையார் விருது கொடுத்து, தன்னை கெளரவித்துக்கொண்ட இன்றைய தகவல்.
அவரை பற்றி ஹிந்து நாளிதழில் அக்டோபர் 31, 2011 அன்று வந்த கட்டுரை வரவழைத்த பின்னூட்டங்களின் சுருக்கம்:

Kurt Waschnig: ஆம். டாக்டர் சாரதா மேனன் சொல்வது சரி தான். கருணையை நாம் தான் வரவழைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு மனமும் மூளையும் துணை புரியவேண்டும்…‘டாக்டர்’ தலையெடுத்த காலகட்டத்தில், மனம் நலம் குன்றியோர் ஒதுக்கப்பட்டனர், பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டன்ர். அதனால் அவர்கள் சீறியெழுந்ததும் உண்டு. தன் மருத்துவ அனுபவத்தினால்,அதை உணர்ந்த ‘டாக்டர்’ SCARF அமைப்பை நிறுவினார்…அது வசிக்க இடம், மேன்மையான மனோநல ஆலோசனை, சிகிச்சை,பயிற்சி, வேலை வாய்ப்பு, நடமாடும் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி, விழிப்புணர்ச்சி எல்லாவற்றிலும் தலைமை தாங்குகிறது…இது ஒரு பிரமாதமான வெற்றி. ஒரு பெண்ணரசியின் கருணை, கருணையின் புரிதல் சாதித்த சாதனை இது

K.P. safarulla: இவர் ஒரு தேவதை.

kothandaraman:புகழ்வாய்ந்த இந்த 88 வயது மன நல மருத்துவருக்கு பாரதரத்னா கொடுக்கவும்,நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கவும், தமிழ் நாட்டு அரசு பரிந்துரைக்கவேண்டும். ( இது சொல்லி ஐந்து வருடங்களுக்குப் பின் அவ்வையார் விருது.)

கட்டுரைச் சுருக்கம்:

டாக்டரின் ஆலோசனை அறைக்கு விலாசம் போடப்படவில்லை. மனோ நல வைத்தியர் என்ற சொல்லைக் கேட்டாலே கொதித்து எழும் schizophrenia patients பல வாரங்களுக்குப் பின் நன்றி கூற வருகிறார்கள். மனித நேயத்தின் மறு உருவான டாக்டர் திட்ட வட்டமாக
“மனம் தான் செயலை தீர்மானிக்கிறது. கனிவும், அன்பும் மனம் விரும்பினால் தான் இயங்குபவை. மூளையின் முன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடவாது.” என்று கூறுகிறார்.
அவருக்கு மங்கலான ஒரு நினைவு: 1947ல் அவர் மனோநலம் படிக்க விரும்பினார். 65 வருடங்களாக அதே தவம். எதிர் நீச்சல்: எட்டாவது மகவான அவர் ஏழாவது பெண். பெற்றோருக்கு ஏமாற்றம்.
பால பருவத்தில் கடுஞ்சொல் வீசும் ஒரு கன்யாஸ்திரீயின் விவகாரத்தினால், இரண்டாம் வகுப்பு படித்த டாக்டர் ஒன்றாம் வகுப்பில் அமர்கிறார். தலைமை ஆசிரியை கேட்டதற்கு ‘என் சிக்கலை நானே தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.’என்கிறார். இது மறைந்த என் தம்பி பார்த்த சாரதியை நினைவூட்டுகிறது. ஒரு கன்யாஸ்திரீ அவன் தலையில் ஸ்கேலால் அடிக்கிறார். இவன் அந்த பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டான். மதர் ஸுபீரியர் வீட்டுக்கு வந்து மன்றாடினர். தந்தை ஒத்துப்பாடினார். அவன் தன் பிரச்னையை நானே தீர்த்துக்கொள்கிறேன் என்று திரு ரசலையா அவர்களிடம் பேசி வேறு பள்ளிக்குப் போகத்தொடங்கினான். இந்த மனோபாவம் போற்றத்தக்கது.

பெண்ணீயத்துக்குத் துணை போனது, அக்காலத்து கலோனிய அரசு. அவர்களுக்கு மருத்துவப்படிப்பு இலவசம். இன்றும் ஐ ஏ எஸ் எழுதுவது பெண்ணரசிகளுக்கு இலவசம். [தனி மொழி: அந்தக்காலத்தில் நான் மருத்துவம் படிக்க ஆசை கொண்டேன். பிராமணர்களை ஒடுக்க வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஒரு தடை. வறுமை மற்றொரு தடை. இன்று கூட ‘பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?’ என்று அங்கலாய்க்கிறேன்.]

டாக்டர் மொழிப்பிரச்னையை கூட எளிதாக தீர்த்தார். தெலுங்கில் Bacteriology படித்து பாஸ் செய்தார்! 1961ல் சென்னை மனோ நல ஆஸ்பத்திரியின் தலைமை. பிரமாதமான புரட்சிகரமான சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொணர்ந்தார். 1978ல் அவர் ஓய்வு (இன்றும் ஓய்வில்லை, 93 வயதில்) பெற்ற போது மனோ நலத்துறை திடம் பெற்று இருந்தது. அதுவே பெரிய சாதனை.

நான் அதிகம் பேச என்ன இருக்கிறது?

அவரே பேசுவதை கேட்டுத் தெளிந்து செயல் படுங்கள்

இன்னம்பூரான் 
சித்திரத்துக்கு நன்றி:



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Attachments area

Tuesday, March 1, 2016

‘இன்னம்பூரான் பக்கம்’.4 சமுதாயமும், நீயும்,நானும், அவரும். கட்னா ~ போஹ்ரா




‘இன்னம்பூரான் பக்கம்’.4 
சமுதாயமும், நீயும்,நானும், அவரும். கட்னா ~ போஹ்ரா

Wednesday, March 2, 2016, 5:38

பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=66769

இன்னம்பூரான்
FGM (FEMALE GENITAL MUTILATION)

‘ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்…’ என்று அவசரத்தில் எழுதிவிட்டேன் போலும்! கட்னா எனப்படும் சிறுமிகளின் பிறப்புறுப்பை குத்திக்கிளறிக் குலைப்பது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில், இந்தியா உள்பட, நாட்தோறும் நடந்து வருகிறது.

எல்லா நாடுகளிலிருந்தும் அகதிகளின்/வந்தேறிகளை பெற்றுள்ள இங்கிலாந்து நாட்டின் பதிவு ஒன்றை நோக்குக.
இங்கிலாந்தில் கட்னா சட்டவிரோதம். அதனால் பிறந்த நாட்டுக்குக் கொண்டு போய் கிட்டத்தட்ட 1.37 லக்ஷம் பெண்மணிகள் இவ்வாறு குலைக்கப்பட்டதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது ஒரு ஊகமே. இந்த அவலங்கள் மர்மாகவே உளன என்பதால், உண்மை மேலும் படுமோசமாக இருக்கலாம். இங்கிலாந்திலேயே [London, Cardiff, Manchester, Sheffield, Northampton, Birmingham, Oxford, Crawley, Reading, Slough and Milton Keynes.] இந்த அறுவை நடந்திருக்கலாம் என்று அந்த நாட்டு அரசின் ஆய்வு கூறுகிறது. பூப்படைவதற்கு முன். பெண் குழந்தைகளும், சிறுமிகளும் இந்த அவஸ்தைக்கு, வாசனைக்குக்கூட மருத்துவம் அறியாத தாதிகளால், கையில் கிடைத்த கத்தி, கத்திரி, பிளேடு ஆகியவற்றால், மயக்கமருந்தும், பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில், உட்படுத்தப்படுகிறார்கள், கட்டி வைத்து. அப்பனும், ஆத்தாளும் தான் உள்கை. கட்னா எனப்படும் இந்த டார்ச்சரில் நான்கு வகை உண்டு: clitoridectomy, excision, infibulation, pricking, piercing, cutting, scraping and burning the area. இந்த கசுமாலங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அதை காமாந்தகாரச்செயல் என்று சால்ஜாப்பு அணிகள் குற்றம் சாற்றுவார்கள். விழிப்புணர்ச்சி கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கட்னாவினால் பயன் ஒன்றுமில்லை. அதீதமான வலியும், திக்கிட்டுப்போவதும், ரத்தப்போக்கும், சிறுநீர் கழிப்பதில் இன்னல்களும், அவயவங்களின் அலங்கோலமும், இன்ஃபெக்ஷனும் தான் பாக்கி. மாதவிலக்கு தடைபடும். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பிள்ளைப்பேறு கடினமாகும். உடலுறவு பாதிக்கப்படும். அது சாத்தியமில்லாமல் கூட ஆகிவிடலாம், உளவியல் பார்வையில், பாதிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுதும் நிம்மதி இழப்பார்கள். தந்தையும் தாயும் தனக்குத் துரோகம் செய்ததை நினைத்து மருகிப்போவார்கள். இங்கிலாந்தில் இந்த சட்டவிரோதமான செயலுக்கு 14 வருட சிறைத்தண்டனையும், பலத்த அபராதமும் விதிப்பார்கள். இந்த சின்னாபின்னத்தை ஓரளவு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
இவ்வாறு தன்னுடைய மகள்களையே சின்னாபின்னப்படுத்தும் சமுதாயங்கள், இது தான் பெண்களை ஆளாக்கி, திருமணம் செய்ய தகுந்த வழிமுறை என்கிறார்கள். பெண்கள் அதற்கு முன் உடலுறவில் நாட்டம் காட்டக்கூடாது, எப்படியும் அவர்களுக்கு காம வேட்கை இருக்கக்கூடாது என்று விரும்பி, இப்படி சிதைக்கிறார்கள்.

இங்கிலாந்தில் இந்த அருவருக்கும் தீயச்செயலை வந்தேறிகளில் சில இனங்கள் மட்டுமே செய்கின்றன. ஆனாலும் அரசின் Health and Social Care Information Centre (HSCIC) என்ற அமைப்பு இதை ஒழிக்க பாடுபடுகிறது. உருது முதல் பலமொழிகளில் விழிப்புணர்ச்சி ஊட்டுகிறது.

More about FGM – English version (PDF, 248Kb)
Mwy o wybodaeth am FGM – Welsh version (PDF, 175Kb)
ስለ ኤፍ ጂ ኤም ተጨማሪ መረጃ – Amharic version (PDF, 1.09Mb)
مزيد من المعلومات حول ختان الإناث – Arabic version (PDF, 177Kb
FGM اطلاعات بیشتر درباره – Farsi version (PDF,221Kb)
Renseignements complémentaires sur les MGF – French version (PDF, 182Kb)
FGM زانیاری زیاتر دەربارەی – Kurdish Sorani version (PDF, 246Kb)
Macluumaad dheeraad ah ee ku saabsan FGM – Somali version (PDF, 196Kb)
Habari zaidi kuhusu ukeketaji wa wanawake – Swahili version (PDF, 176Kb)
ብዛዕባ ኤፍ ጂ ኤም ተወሳኺ ሓበሬታ – Tigrinya version (PDF, 766Kb)
ایف جی ایم کے بارے میں مزید معلومات – Urdu version (PD, )

இந்தியாவில் நடப்பதை கவனிப்போம். போஹ்ரா என்ற சமுதாய பிரிவில் தலைவர்கள் வைத்தது தான் சட்டம். திரு. இஞ்சினீயர் என்ற சமூக ஊழியர், பல அடிதடிகளின் மத்தியில், இதை எதிர்த்துப் போராடி வந்தார், செத்தும் போனார். அந்த காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்தேன். அந்த சமூகத்தில் கட்னா செய்ய்ப்படாத பெண்கள் அசுத்தம்; கற்பிழந்தவர்கள். பெண்கள் கட்னாவை பற்றி பேசக்கூடாது. அது குடும்ப அவமானம். அதற்கு மேல் அச்சம். மத குருமார்களும், குடும்பமும், தாய்தந்தையர் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது. அச்சம், பயம், பீதி இவை எல்லாம் வினோதமான களம் எனலாம். காலில் ஆணி விழுவதைப் போல் நமநமத்து பெண்களை வழிக்கு கொண்டு வரும் என்கிறார்கள்.

அந்த சமூகத்தை சேர்ந்த சில பெண்மணிகள் இந்த சனியனை உரத்துக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். மஸூமா ரனல்வி சொல்வதை கேளுங்கள்.
The experience of just penning down in detail the suppressed memory of a dark and sordid ritual was cat
#Bohra community #female genital mutilation #genital mutilation #Speak out on FGM

அவருடைய பேச்சில் தென்படும் துணிவை பாராட்டுகிறேன். அவர்களின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்ததை கவனியுங்கள்.
இந்த விண்ணப்பத்தை நோக்குங்கள்.


At the age of seven, I was subjected to Female Genital Mutilation (FGM) in Mumbai, in a most unhygienic and clandestine manner. The shock and trauma of that day are still with me.
Like me, there are thousands of my Dawoodi Bohra sisters who have been subjected to genital cutting as children and even today thousands of Bohra girls are being subjected to this practice, since it has been ordained by the clergy of our community.
A few months ago, women like me got together under the forum – ‘Speak out on FGM’ – to begin a conversation on this extremely secretive ritual which has caused physical and psychological damage to each of us in some way or the other.
We the undersigned women, who have been subjected to Female Genital Mutilation (FGM) also known as ‘Khatna’ belong to the Dawoodi Bohra community which has its major adherents in India.
The practice of FGM is done surreptiously and in a clandestine manner to all the girl children in our community, without any consent whatsoever. The alleged reason for this tradition is to curb the sexual drive of women and control them.
The Dawoodi Bohras are amongst the most educated in India, yet we are also the only Muslim community in India to practice FGM. The practice has nothing to do with religion and is more of a cultural practice.
Most of us are too scared to speak out publicly. We fear ostracization, social boycott and exclusion of our families from the rest of the community by our religious clergy if we object to the continuation of this practice.
FGM has no health benefits, in fact it harms girls and women in many ways. It involves removing and damaging healthy and normal female genital tissue, and interferes with the natural functions of girls’ and women’s bodies. FGM is often done without anaesthesia, without medical supervision and sometimes the procedure goes horribly wrong.
It often leads to pain, shock, tetanus, genital sores, excessive bleeding, etc. It also has long-lasting psychological impact on the victims, ranging from sexual disorders, fear of sexual intimacy, nightmares and post traumatic stress disorder.
In December 2012, the UN General Assembly adopted a unanimous resolution on the elimination of FGM. Across the world FGM is being outlawed in many countries. Nigeria and Gambia recently made FGM illegal after women came together, campaigned and raised their voice. FGM is banned in over 20 countries in Africa itself.
The World Health Organisation (WHO) classifies FGM as a violation of the human rights of girls and women. According to WHO, FGM reflects deep-rooted inequality between the sexes, and constitutes an extreme form of discrimination against women. It is nearly always carried out on minors and is a violation of the rights of children.
In Australia, three Dawoodi Bohras were held guilty of FGM recently by the Supreme Court of New Wales, Australia. The case was closely watched by the Dawoodi Bohra community in India.
We urge the Government to pass a law banning this practice in India, such that anyone found involved in aiding, abetting and perpetrating this practice should be punished. Pressure of this law and fear of punishment will be the best way to put a stop to this cruel practice.
I along with my Dawoodi Bohra sisters want to raise our voice against FGM in India and put an end to this. You can support us by signing this petition.
Sign our petition and ask the government of India to act against Female Genital Mutilation!
Masooma Ranalvi, Aarefa Johari, Insia Dariwala, Shabnum Poonawala, Nafisa Pardawala, Farida Ali, Tasneema Ranalvi, Hanan Adarkar, Shaheeda Kirtane, Tanvee Vasudevan, Ummul Ranalvi, Zainub Poonawala, Sana Vaidya, Zehra Patwa, Farzana Doctor, Fiza Jha, Zarine Hashim
On Behalf of SPEAK OUT ON FGM
VIEW

நானும் நமது குழுமங்களில் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். பெண்ணியம் பெண்ணியம் என்று முழங்கும்/ கர்ஜிக்கும் தாய்க்குலம் கருநாகமென நஞ்சு கக்கும் இந்த அவலத்தை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விழிப்புணர்ச்சிக்கு பாடுபடுவதில்லை? இந்த அவலம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று உறுதி அளிக்க முடியுமா? அது முடியும் என்றால், தமிழ்நாட்டு எல்லை கடந்த அவலங்களை கண்டிக்கக்கூடாதா?

சமுதாயம் தான் சமுதாயத்தின் விரோதி.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://cdn.youthkiawaaz.com/wp-content/uploads/2013/06/mutilation-tools.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இன்னம்பூரான் பக்கம்: 3: கனம் கோர்ட்டார் அவர்களே![27


இன்னம்பூரான் பக்கம்: 3: 
கனம் கோர்ட்டார் அவர்களே![27]
Tuesday, March 1, 2016, 22:07
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=66755&cpage=1#comment-14356
இன்னம்பூரான்
27 02 2016
இது இன்றைய செய்தி -27 02 2016.

சட்டம் சட்டத்துக்குள்; நியாயம் நீதிபதி வழங்கும் தீர்வில் சட்டத்தின் உட்பொருள் காண்பது; தர்மம் தலைகாக்கும்.

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் 
கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான் “

என்ற காதல்மொழி உரைத்த ஆண்டாளின் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்தராயிருப்பு என்ற ஊரில் [அர்ச்சானாபுரம்] தொழப்படும் நல்லதங்காள் என்ற தெய்வம் ஒரு மனுஷியை பற்றியது. அவள் வறுமை தாங்காமல், மன உளைச்சலின் காரணமாக தனது ஒன்பது குழந்தைகளை கிணற்றில் போட்டு கொன்றது கர்ணபரம்பரை.நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. [விக்கிப்பீடியா].

அவளுக்கு [மறுமலர்ச்சி கண்ட தற்கால நல்லதங்காள்.] காவேரி என்ற புனைப்பெயர் சூட்டுவோம். அவள் தன் வாழ்க்கையின் மறுமலர்ச்சி நோக்கி பயணிக்கும் போது, அதற்கு தர்மமிகு கோர்ட்டார் வழி வகுத்தப்போது , நாம் அவரை வெட்ட வெளியில் உண்மை பெயர் சொல்லி விமர்சனம் செய்வது கொடுமை. தற்காலம் குழுமங்களில் என்னவென்னமோ எல்லாம் பேசுகிறார்கள். ‘காவேரியை’ அந்த துன்பக்கேணியில் இறக்க எனக்கு விருப்பமில்லை.

அவர் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. அவர் கருவிலே இருக்குபோதே, குடும்பத்தைத் தவிக்க விட்டு, தந்தை ஓடிப்போனார். ஒரு வயது நிரம்பும் வேளையில் தாயும் அவரை கைவிட்டாள். சில குடும்பங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது உண்டு. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ,கனடாவோ, அந்த மாதிரி மேல்நாடுகளில், அரசும், சமுதாயமும், இம்மாதிரியான அனாதைகளை உய்விக்க முன் வருவார்கள். Foster-children is a well-known civilised concept in the western world. ஒரு நாள் போர்ட்ஸ்மத் நூலகம் திறக்க வேண்டி காத்திருந்த போது , ஒரு முதிய பெண்மணியுடன் பேச்சுக்கொடுத்தேன். உலக யுத்தத்தின் போது தாயும் தந்தையும் நாட்டுப்பணியில். குழந்தைகள் கிராமத்து பெரியோர் குடும்பங்களில். தான் அப்படி வளர்ந்தவள் என்று கூறிய அவர், தத்து எடுத்துவர்களின் அன்பை பாராட்டி கண்ணீர் உகுத்தார், 70 ஆண்டுகளுக்குப் பிறகு. அமெரிக்காவில் அரசு மான்யத்தைப் பெற்று ஏழைகள் தான் சக ஏழைகளின் அனாதை குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

இங்கோ, இவரை வளர்த்து வந்த பாட்டியினால், வறுமையின் பொருட்டு, இவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. சமுதாயம் வேடிக்கை பார்த்தது. காலம் கழிந்து வந்தது. இவரும் கண்ணன் என்ற தினக்கூலியை மணந்தார், மூன்று ஆண் குழந்தைகள். இல்லாமையில் தத்தளிப்பு. கணவன் வேலை தேடி கேரளா செல்கிறார். ஒரு சச்சரவினால், பாட்டி விலகி விடுகிறார்.
செப்டம்பர் 2008: பசியின் கொடுமை தாங்காமல், குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் குதிக்கிறார். ஆழம் இல்லாத கேணி. இவர் பிழைத்து விடுகிறார். இந்த அவலங்களை படித்த Centre for Protection of Civil Liberties (CPCL) அவருக்கு உதவ முன் வருகிறது. பேசக்கூட முடியாத அளவு சோகத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு ஆறுதல் கூற, கண்ணனை வரவைழைத்தார்கள். இவருக்கும் ஜாமீன் கிடைத்தது. கஷ்டப்பட்டு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார்கள். இருவரும் ஒருபாடாக ஆறுதல் அடைந்து குடித்தனம் நடத்தினார்கள். ஒரு ஆண் குழந்தை உபயம்.

இந்த காலகட்டத்தில் சட்டம் குறுக்கிட்டது. இந்தியன் பீனல் கோடு 302ம் ஷரத்துப்படி, கொலைக்குற்றத்துக்கு ஆக அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் நிலை குலைந்து போனார். குழந்தையையும் எடுத்துக்கொண்டு சிறையில் 11 மாதங்கள் கழித்தார்.

CPCL ஒரு விடாக்கொண்டன். உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார்கள். சேலத்தின் மனோநிலை பேராசிரியர் டாக்டர் மீனாக்ஷி .

‘Kaveri was suffering from ‘psycho motor activity retardation’ (slowing of motor activity and cognitive function which are manifestations of severe depression). The doctor explained that a person suffering from it would have depression, loss of trust in life and urge to commit suicide. 

என்று சாக்ஷியம் அளித்தார். உச்ச நீதிமன்றம் அதை மதித்தது. அவளை விடுதலை செய்ய உத்திரவிட்டது. நீதிபதிகள் எம்.ஜயசந்திரனும், எஸ்.நாகமுத்துவும், அவர் மேல் சாட்டப்பெற்ற குற்றம் சட்டப்படி செல்லாது என்றார்கள். மேலும், அவளிடம் தடாலடியாக பெறப்பட்ட வாக்குமூலம் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல என்றார்கள். நீங்கள், போலீஸின் தகாத செயல், கீழ்க்கோர்ட்டின் அசமஞ்ச தீர்ப்பு ஆகியவற்றையும், அவற்றினால் நடந்த வாழ்க்கைக்கொலையையும் கண்டு கொள்ள வேண்டும்.
காவேரியின் முதல் மகன் ஆறாம் வகுப்பில். அடுத்த பையன் ஐந்து மாத குழந்தை. சீர்மையாக, அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது.கடந்த இழப்புகளை நினைத்து வருந்தும் காவேரி நாட்தோறும் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார். வாழ்க! வாழ்க! காவேரியின் குடும்பம்.

முனைவர் செல்வகுமார் CPCL ஐ இந்த/அடுத்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என என் பரிந்துரை.
பெண்ணியம் போற்றும் நமது அங்கத்தினர்கள் இதையெல்லாம் கவனிக்காமல், பழைய 78 ஆர்.பி.எம். கிராமஃபோன் தட்டுக்களைப் போல் சொன்னதையே சொல்லி தன்னை மகிழ்வித்துக்கொள்ளலாகாது என்பது என் தாழ்மையான கருத்து.

சித்திரத்துக்கு நன்றி:http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-56/Kallu_Paanai-1.jpg

Monday, February 29, 2016

வீர சவர்க்கார்

Friend Srirangam Mohanarangam , one of our valued serious writers, wrote as under 11 hours ago. I replied to him as under and start a new thread in Min Tamil for inculcating historical perspectives.

Innamburan

March 1, 2016


My deep apologies to Mr Innamburan for my negligence in not noting this post which has come even in 2012 itself.

It is well written and evinces your true spirit.

Casually while searching in the Google I landed here and your article was nice and informative. Of course you have your own style, no doubt.

And your citations of references were helpful.

Once again sorry for not being prompt.

***


Dear Srirangam Mohanarangan,

I am so very happy that you brought this again to my attention.
Academia, patriots and those interested in true perspectives will read history in a frame of mind, which expels pet prejudices and mischievous interpretations.
To my mind, all patriots will welcome this input today.
Thanks to you, I am republishing it today.
Warm regards, 
Innamburan
March 1, 2016


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர் - innamburan@gmail.com - Gmail

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26
 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.
நமது மெத்தனங்களில் ஒன்று, ஆளுமை ஒதுக்கினால், நாமும் ஒதுக்குவது. கண்டால் தான் காமாட்சி நாயக்கன்! யதா ராஜா! ததா கூஜா! இதை விட அநாகரீகமான அடிமைத்தளை வேறு ஒன்றுமில்லை. மனம் விட்டு பேசுகிறேன், வலி பொறுக்காமல். சர்தார் படேலுக்கு உதட்டளவில் மரியாதை. ஒரு படி கீழே நேதாஜிக்கு. ராஜாஜி என்றால் தள்ளுபடியே. ஏன்? இந்திரா காந்தி தலையெடுத்தபின் அத்தை விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இருட்டடிப்பு. இந்த அழகில், வினாயக தாமோதர் சாவர்க்கரை ( 28 May 1883 - 26 February 1966) , அவரது அஞ்சலி தினமாகிய இன்று நினைவு கூர்ந்தால், யார் யார் கண்டனக்குரல் எழுப்புவார்களோ, யான் அறியேன். பொருட்படுத்தவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே, என் மனசாக்ஷியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு. காங்கிரஸ் கட்சியை சார்ந்தது எங்கள் குடும்பம். இருந்தும், சிறுவனான என்னை, என் தந்தை வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களை தரிசிக்க, மதுரை ஹிந்து மஹா சபையின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றார். அவருடன், டாக்டர் மூஞ்சேயையும், மற்றொரு தலைவரையும் (ஷியாம்பிரசாத் முக்கர்ஜி?)  அருகிலிருந்து கண்டோம். பாரிசவாயுவினால் நலம் குன்றியிருந்தார், சாவர்க்கர், என்று ஞாபகம். 1966ல் சல்லேஹனம் இருந்து (உணவு, நீர், மருந்து எல்லாவற்றையும், சக்கரவர்த்தி சந்திரகுப்த மெளரியர் மாதிரி உயிரை பரித்யாகம் செய்து விடுவது) ஆத்மஹத்தி செய்து கொண்டார். அவரை பற்றி சில வார்த்தைகள்.
இங்கிலாந்தில், இந்திய விடுதலை புரட்சியாளன் என்று 1910ல் கைது செய்யப்பட்டார்; 50 வருட தீவாந்திர சிக்ஷை வழங்கப்பட்டது. தப்பித்து மார்ஸேல்ஸ் என்ற ஃப்ரென்ச் நகருக்கு ஓடிவிட்டார். பிடிப்பட்டு, இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்தமானில் சிறை வைக்கப்பட்டார். அங்கு தான் ஹிந்துத்துவ தேசாபிமானம் என்ற கருத்தை, சிந்தித்து, சிந்தித்து, கோட்பாடாக வகுத்தார். சிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.
அவருடைய ஹிந்துத்துவ தேசாபிமானம் சமய சின்னத்துக்குள் அடங்க வில்லை; அந்த எல்லைக்குள் வளைய வரவில்லை. ஹிந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கிய மதம் எல்லாம் அவருடைய அகண்ட பாரதத்தில் ஒன்று சேர்ந்து இயங்கின. தன்னை வெளிப்படையாகவே நாத்திகன் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். இஸ்லாமிய பிரிவினைக் கொள்கைகளும், அந்த சமயமும், கிருத்துவமும் நாட்டின் எல்லை தாண்டிய விசுவாசம் வைத்திருந்ததை அவர் ஆதரிக்கவில்லை. சாதி வெறியையும், தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார். ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை திரும்பவும் கொணர முயன்றார். ஹிந்து மஹாசபையின் அக்ராசனராக 1937லிருந்து 1943 வரை பணி புரிந்த சாவர்க்கர், முஸ்லீம் லீக் உடனும், கம்யூனிஸ்ட்களுடனும் சேர்ந்து இரண்டாவது உலக யுத்தத்தில் இங்கிலாந்தை ஆதரித்தார்.ஹிந்துக்களை ராணுவத்தில் சேர தூண்டினார். 1947க்கு பிறகு ஹிந்து மஹா சபையில் பிளவுகள் தோன்றின. ஷியாம் பிரசாத் முக்கர்ஜி, கருத்து வேற்றுமையினால் உப அக்ராசனர் பதவியிலிருந்து விலகினார்.
1947ல் சுதந்திரம் வந்தாலும் வந்தது; 1905லியே சுதந்திர யக்ஞத்தில் ஈடுபட்ட சாவர்க்கர் இருட்டடிப்பு செய்யப்பட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரள் திரளாக கலந்து கொண்டாலும், அவருடைய ராணுவ நோக்கை மரியாதை செய்யும் வகையில் ராணுவ வண்டி கொடுங்கள் என்ற (அநாவசிய) வேண்டுகோளை, பாதுகாப்பு அமைச்சர் சவான் நிராகரித்தார். மஹாராஷ்ட்டிர மாநில சார்பில் ஒரு அமைச்சர் கூட மயானத்துக்கு வரவில்லை. நாடாளுமன்ற மரியாதை தர, அவைத்தலைவர் மறுத்தார். சவானோ, மொரார்ஜி தேசாயோ அந்தமான் சென்ற போது, இவர் இருந்த சிறையின் குச்சு அறையை பார்வையிட மறுத்தனர்.
சாவர்க்காரின் தீவிர ஹிந்துத்வ சிந்தனைகள், பாரபக்ஷமற்ற, மதவெறி தணித்த இந்திய ஜனநாயகத்தின் ஒற்றுமை பண்பாட்டை குலைக்கும் என்று ஒரு கட்சி; ஜனநாயக மரபை குலைக்காமல், மக்களின் அபிலாஷையை தான் அவரது சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன என்பது எதிர் கட்சி. காமன் எரிந்த கட்சி/எரியாத கட்சி விதண்டாவாதம் போல் இது இருக்கிறது. அவருடைய படைப்புகளிலிருந்து சிந்தனைகளை நடுநிலையில் வைத்து ஆராய்வது தான் நியாயம் என்ற ஆய்வு ஒன்றை, ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தந்துள்ளார். இரு சாராரும், சாவர்க்காரின் தத்துவம், சிந்தனை, கருத்துக்கிட்டங்கி ஆகியவற்றை மேலெழுந்தவாரியாகத்தான், அவரவரது பிரசார பீரங்கிகளுக்கு பயன் படுத்தினர். அது நியாயமில்லை என்கிறார். அந்த ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி  தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இரு காரணங்கள்: 1. ஆய்வுகட்டுரையே சுருக்கி அமைக்கப்பட்டிருப்பது. 2. இந்தியாவில், ஆய்வின்மையால், வரலாறு நடுநிலை பிறழ்ந்து இருப்பது. இன்று ராமச்சந்திர குஹா, கோபால்கிருஷ்ண காந்தி போன்றோரின் படைப்புகள் போன்ற ஆய்வுகள் பெருகவேண்டும். உதாரணத்திற்கு, சில வினாக்கள்.
  1. சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன?
  2. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது?
  3. ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்? ஏன்?
  4. சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை? ஏன்?
சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:
  1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.
  2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது. 
  3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
  4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
உசாத்துணை:

Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 from https://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com