Saturday, April 5, 2014

வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 1


வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 1

இன்னம்பூரான்
05 04 2014

தேசிய தேர்தல் 2014 காலகட்டத்தில் இந்தியாவில் இருக்க விரும்பினேன், ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கும் யான். இனம் காணமுடியாத வியாதிக்கு காய்ச்சல் அறிகுறி என்பது போல, தேர்தல் கணகணப்பும் ஜனநாயகத்தின் நோய் நொடிகளில் அறிகுறியே. இங்கு வந்த பின் பாமரதரிசனமும், சொற்மாரி இந்திய பிரஜையின் அலசல் தூறல்களும், ஊடகங்களின் ஊகங்களும், அரசியல் வாதிகளின் மாய்மாலமும், கசமுசாக்களும், கட்டித்தழுவி முதுகில் குத்தும் முரணாசைகளும், endangered species ஆன பிரதிநிதித்துவ ஜனநாயகமும், காசு வாங்கி மெய்கீர்த்தி பாடும் ஊடகக்குஞ்சுகள் முதல் காசு கொடுத்து ஓட்டுக் கேக்கும் கேடிகள் வரை மக்களுக்கு துரோகம் செய்வதும், முதல் தேர்தலில் ஓட்டுப்போட்ட என்னை வாட்டி வதைக்கின்றன. ‘புலி வருது...’ தொடரை படித்த வெளிநாட்டு நண்பர்கள், ‘நுட்பம் கூறுக’ என்கிறார்கள். தொடருக்கு கட்டியம் கூறியாகிவிட்டது.

இலக்கணம்: எல்லாவற்றையும் பற்றி எழுத இயலாது. பருவமழை போல் கொட்டும் தேர்தல் தகவல்கள் பொது மன்றத்தில் இருப்பதால், நானும் எழுதி உங்கள் ‘இருடியமான’ நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்னை கவர்ந்த/ பெரும்பாலோர் தவறக்கூடிய விஷயங்களை மட்டும், என்னால் முடிந்தவரை பட்டியலிட்டுக் கூறுகிறேன். நீங்கள் முக்கியமென்று கருதுவதை பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கு ஹேதுவாக, அடிக்கடி தனி இழையில், இதே தலைப்பில் வரும்.
நான் ஆதரிக்கும் கட்சி இன்னும் பிறக்கவில்லை: ‘மக்கள் நலம்’. ஆகவே, கட்சி சார்பு இல்லை. எனினும், ஒரு வேட்பாளருக்கு நான் பிரசாரத்தில் இறங்கக்கூடும். இனி சுற்றி வளைத்துப் பேசவேண்டாம்.

ஜாபிதா:
  1. திரு. பி.எஸ். ராகவன் (ஐஏஸ் ஓய்வு) அவர்களை திரு. பத்ரி சேஷாத்ரி பேட்டி எடுத்து 26 03 2014 அன்று ஜி+ (நல்ல வேளை ஒரே ஒரு ஜி !)ல் செய்த விழியம். இருவருக்கும் நன்றிக்கடன். அதை விட நடுநிலை அலசல் ஒன்றை நான் இது வரை பார்க்கவில்லை. பாருங்கள்.

  1. என்னிடம் தேர்தல் முடிவு பற்றி கலாய்த்த ( ‘விரைசாக சைனாவுக்கு ஒரு நடை...’) இண்டோ-ஜெர்மன் நண்பரின் ஆர்வம், பதவியில் இருப்பவர்களை இறக்குவது; மோடி ஆதரவு.
  2. நேற்று தக்கர் பாபா வித்யாலயத்துக்கு என்னை அழைத்தச்சென்ற 5வது வகுப்பு வரை படித்திருந்த வாகனமோட்டியின் அருமையான பாமர அலசல். சுருங்கச்சொல்லின், லஞ்சத்தை ஒழிக்க முடியாது,மக்கள் அதை முதலீட்டாகக் கருதுவதால். கல்வி அளிப்பதை மறைமுகமாக தவிர்த்து தான், அயோக்ய அரசியல்வாதிகளின் திட்டமிட்ட முதலீடு. இருப்பதில் சிறந்த வேட்பாளர்: நோட்டா. தமிழ்நாட்டு அரசியலை அலசிய அவர், இந்தியா பற்றி மிகவும் தெரிந்து வைத்திருந்தார். அவர் மறுபடியும் வருவார்.
  3. அஸ்ஸாமில் ஏப்ரல் 7 அன்று தேர்தல் துவக்கம். பிரசாரம் நேற்றுடன் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டது. தடை செய்ய்ப்பட்ட உல்ஃபா அமைப்பின் இரு பிரிவுகளும், 30 வருடங்களாக தேர்தலை புறக்கணித்தன. இந்த தடவை அவை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை. நன்நிமித்தம்? மேலும் ஒரு செய்தி நாளை வரும்.
  4. மும்பாய் மாநகரத்தில் ஸோனாகச்சி என்ற இடத்தில் வாழும் ஆயிரக்கணக்கான விலைமாதுகள், தேர்தலை புறக்கணிக்கப்போகிறார்கள். அவர்கள் விழையும் சில சமத்துவ/மனித உரிமை வேண்டுகோள்களை எல்லா கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. [‘Their key demands are that sex workers be given the status of workers so that they can get government benefits available to workers of unorganised sectors, government recognition for their self regulatory board and revoking the Immoral Traffic ( Prevention) Act, 1956, which results in police harassment.’- ஹிந்து இதழ் 04 04 2014.]


சித்திரத்துக்கு நன்றி: http://eci.nic.in/eci_main1/dj_images/ecistamp.jpg

Thursday, April 3, 2014

லபோ திபோ; II.2 அல்லது விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....

விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....
அல்லது
லபோ திபோ; II.2



ஈஷ்வரன் லீவுல்லே போயிட்டாரோ? எப்படி சென்னை வந்தோம்னு கேட்கிறீர்களா?
(தொடரும்)...

நானும் சைனீஸ் பேச, மூக்கால் முணமுணக்க, மெல்லின உயிர்மெய் வாய்பாடு தொடங்கினவுடன், தட்தடதடா என்று விமானம் தரை தட்டுவதற்கு ஆயத்தம் செய்தது. பிரிவுபசாரம் அளித்த பெண்மணி மென்மையாக பேசியது ஆண்களை மட்டும் தான் குறி வைத்த மாதிரி இருந்தது. ஆமாம்: ‘கொம்மன், டாங்க, ஃப்ராகன், ஃவெர்போட்டான் அது இது என்று ஆண்பால் பக்கம் பேசினாள், கரடுமுரடாக. பிஸினஸ் க்ளாஸ் என்ற இனபேதம் பைலட் சொற்கள் மூலம் இளித்தது. ஒளஃப் வீடர் ஸேஹன் என்றார் பாருங்கள், எனக்கு மூச்சு வந்தது. என் பெண்ணிடம் சொன்னேன், லுஃப்தான்ஸோ இல்லையா? சைனா போனாலும் தாய்மொழிபற்று, இந்த தந்தை வழி நாட்டுக்கு என்றேன். அவள் சும்மா இரு என்றாள். 

சும்மா சொல்லக்கூடாது. நமக்கு ஊருக்கு போய்ச்சேர ஆசை. அவங்களுக்கு நம்மை கழட்டி விட ஆசை. இல்லை என்றால் செல்வன் மாதிரி நம்பள்க்கு விருந்து படைக்கணும், மூன்று நாட்களுக்கு! இறங்கினவுடன், ஒருவர் நம்மை அழைத்து, ‘மோடிக்கு ஜே! பிரதமர் மோடிக்கு ஜே! என்று ஆரவாரித்த பின், ‘சென்னை விமானம் பறந்தோடி விட்டது. ‘உங்களுக்கு பெங்களூரு வழி ரிபுக்ட். அங்கிருந்து ஜெட் ஏர்வேய்ஸ். ராத்திரி பூரா வைட்டிங்கு. என்ஷூல்டிகன் ஸீ’ என்றார். நானும் அவருடைய சட்டையின் அட்டையை பார்த்து, ‘கேம்! மஜா மேன் சே?’ என்றேன். அவர் தான் சைனா மர்மத்தை அவிழ்த்தார். அடிக்கடி சிஸ்டம் ஃபைலியர் ஆயிடறது. லண்டன்லேயிருந்து மாஸ்கோ போற விமானத்தில், அது திண்டுக்கல்லில் இறங்கப்போவதாக சொல்லிச்சு. அப்றம், பைலட் கூகிள் மேப்ஸ் வச்சுக்கிணு மாஸ்கோ போனார் என்றார். அடுத்த அரை மணி நேரம் சுறுசுறுப்பாக இயங்கின அவர் பேசியவை: மலேசியா விமானம் இஸ்ரேலில் இருக்கு என்று குஜராத்தி ஜோசியர் ஜோஷி சொன்னார்: இவர் மோடிக்கு ஓட்டுப்போடப்போவதில்லை. ஜெர்மன் சிடிஸன் ஆச்சே. டிப்ஸ் கொடுக்கும் உத்திகள்.ஆகமொத்தம் தக்ஷிணை பத்து பவுண்டு. 

அந்த விமானம் மாடி பஸ். எல்லாமே பிரமாதம். ஜெர்மன் திட்டோலக்கணம். அப்பத்தான் கொஞ்சம் உறங்கினோம். அப்டி, இப்டினு பெங்களுரு வந்தவுடன், இந்திய லக்ஷணங்கள் ‘பளிச்’ என்று தெரிந்தன. மேல்வகுப்பு இளைப்பாறும் அறை, வெளியில் இருந்தது. போனால், சென்னை விமானம் பிடிக்க நடுத்தெருவில் நான்கு மணி நேரம் நிக்கணும். அதனால் இடங்கழி வாசம். ஜெட் ஏர்வேஸ், பிஸினெஸ் க்ளாஸ் சலுகைகளை அறவே மறுத்து விட்டார்கள். கூடவந்த மதுரை மாமா மூலம் பினாமி சமர் புரிந்தோம். ஜெயிச்சோம். சென்னை வந்தோம். சம்பந்தி விருந்து.சவுடாலுக்கு ஃபோனினேன். பிஸி டோன். நான் சைனாவுக்கு சிஸ்டம் அனுசரித்து, மானசீக யாத்திரை செய்தது என்னமோ உண்மை. 
வர்ரேன்...
சித்திரத்துக்கு நன்றி: http://www.nanditaarts.com/wp-content/uploads/2013/03/ModernArtMentalJourney1.jpg