Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: கரிநாள்
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: கரிநாள்
5 messages

Innamburan Innamburan Tue, Feb 7, 2012 at 7:38 AM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7:
கரிநாள்
ஆற்காட்டு நவாபுக்குக் கடன் கொடுத்தே, அந்த கிராக்கியில், கிஸ்தி பிடிக்கிறேன் பேர்வழி என்று கட்டபொம்மனின் உயிரை பறித்தனர், கிழக்கிந்திய கும்பினியின் (கம்பெனி) கொடுங்கோலர்கள். ஶ்ரீராமன் ஆண்ட அயோத்தியை அவர்கள் அபேஸ் செய்த விவகாரம், அதை விட பெரிய அட்டூழியம். பல வருடங்களாகவே, அவத் நவாப்புகளை இஸ்பேட் ராஜாவாக வைத்திருந்த கும்பினி, நம் நாட்டுக்கே கரிநாளாகிய ஃபெப்ரவரி 7, 1856 அன்று அவத் நவாப் வஜீத் அலி ஷா அவர்களை, அரியணையிலிருந்து இறக்கி, கொல்க்கொத்தா அருகில் மெத்தியாப்ருஸ் என்ற முகல்லாவில் சிறை வைத்தது.
இங்கிலாந்தில் இந்தியா ஆஃபீஸ் ஆவணங்களில், Mss Eur C849 எனப்படுவது, விக்டோரியா மஹாராணிக்கு தனது பூமியை கும்பினி பறித்துக்கொண்டதைப் பற்றி நவாப், ஜனவரி 7, 1857 அன்று,அவர் எழுதிய புகார். தன் மேல் சாற்றப்பட்ட அபாண்டங்களை மறுத்துள்ளார். இரு வருடங்களுக்கு பிறகு மஹாராணியின் சாங்கோபாங்கமான நவம்பர் 1, 1858 பிரகடனத்தில். ‘மஹாராணிக்கு நாடு பிடிப்பதில் ஆர்வம் இல்லை...’ என்று ஒரு பொருளற்ற வசனம். அதற்கு அவத் மஹாராணி பீகம் ஹஸ்ரத் மஹாலின் சவால்: ‘...இதெல்லாம் பழங்கதை. உடன்படிக்கைகள், பிரமாணங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்து, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து, நிர்வாகக்கேடு என்று பொய் சொல்லி, நாட்டை பறித்துக்கொண்டார்கள். எமது முன்னாள் நவாப் வாஜீத் அலி ஷா காலத்தில் மக்களுக்கு அதிருப்தி இருந்ததா? என்ன? உங்களுக்கு நாடு பிடிப்பதில் ஆர்வம் இல்லை என்றால், ஏன் எங்கள் நாட்டை திருப்பவில்லை?...’. இது ஒரு புறம் இருக்க...
தப்பா நினைத்துக்கொள்ளாதீர்கள். உத்தர பிரதேசத்தில், அலஹாபாத், லக்னெள, அயோத்தியா (ஃபைஸாபாத்), வாரணாசி போன்ற இடங்களில் காணாத வரலாற்றை எங்கே காண்பீர்கள்? அலஹாபாத்தில் என்னுடைய அலுவலகம் இருந்த இடத்தில் 1857ம் வருட முதல் சுதந்திரப்போராட்டம். கண்ணை மூடினால், காட்சிகள் உலா வரும். சாரநாத்தில், தேசீய முத்திரையான அசோகரின் தூண். அயோத்தியில் சரயூ, ராமராஜ்யம், அவத் நவாப்புகளின் செழித்து வளர்ந்த ராஜாங்கம், கலைக்கூடங்கள். லக்னெள நகரோ அகில இந்திய கலாச்சாரம், கலையுணர்வு, பண்பு, மரபு, நுட்பமான ரசிகத்தன்மை எல்லாவற்றின் சிகரம். ஒரு ஜோக்: லக்னெளவில் இரட்டை குழந்தைகள் ஜனிக்கப்போகின்றன. ஆனால், தாமதம். டாக்டரம்மா உற்றுக்கேட்டு விட்டு சொன்னாளாம். இரண்டும் ‘பஹ்லே ஆப்’ (உனக்கு முதலுரிமை) என்று மரியாதை பேச்சில் இருக்கின்றன. ஒன்றையொன்று முந்தாது. சிசேரியன் செய்து விடுகிறேன் என்றாளாம். அது போகட்டும். உம்ராவ் ஜான் சினிமா பார்த்தவர்களுக்கு அமரிக்கையாக இயங்கும் லக்னவி பண்பின் மென்மை புரியும். 
லக்னெளவில் 1857ம் வருட போராட்டத்தை ஒலியும் ஒளியுமாக காட்டுகிறார்கள். அருமை. அதன் தலம் படே இமாம்பாரா என்ற நவாபின் கல்லறை, மாடமாளிகைகள், குல்குலியா என்ற கேளிக்கை சந்து பொந்துகள் நிறைந்த இடம். என் மனம் கலங்கிக்கிடந்தது, வரலாற்றின் புதைமணலில் அகப்பட்டுக்கொண்டு. என் அகக்கண் என்றோ நடந்த நிகழ்வை, அதுவும் ஒரு கற்பனைக்காட்சியை, நினைத்து கலங்கியது. ஒரு தனிமொழி ஒலி-ஒளியாக காட்சி தந்து என்னை அழ வைத்தது. அழைத்துச்சென்ற நண்பர் கேட்டார். சொன்னேன். அவரும் கலங்கினார். லக்னெளக்காரரல்லவா!. அவருக்கு புரிந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ? 
அந்த காட்சி: வாஜித் அலிகான் ஒரு கலையரசன். ‘கதக்’ என்ற நடன இலக்கணத்தை வகுத்தவர். இசையையும், நடனத்தையும் போஷித்தவர். தன்னால் இயற்றப்பட்ட பாடல்களும், கவிதைகளும், மக்களை கவர்ந்தது பற்றி அவருக்கு மிக சந்தோஷம். கும்பினிக்காரர்கள் ஆட்சியை பறிக்கும் தருணத்தில், திவான் குரல் உடைந்து அழுகிறார். நவாப் அமரிக்கையாக சொல்கிறார்: सिर्फ शायरी और म़ौज़िकी ही मर्द की आँख़ो में आँस़ू ला सकते हैं| ~இது உருது. ஹிந்தி அல்ல. பொருள் மிகவும் மென்மையானது. உருதுவில் முடிந்த அளவு, ஹிந்தியில் நுட்பங்கள் உரைப்பது கடினம், எனக்கு முடிந்த வரை மொழியாக்கம்: ‘ஐயா! நீருண்ட மேகங்கள் போல (கண்ணதாசன் உபயம்) கண்ணீர் மல்க, கவிதை வேண்டும்; இசை வேண்டுமையா, மனிதகுலத்துக்கு...’
சத்யஜித் ராய் அவர்களால் மட்டுமே (சத்ராஞ் கே கிலாடி) இந்த காட்சியை உருவாக்கமுடியும். தன் படைப்பை விமரிசனம் செய்கையில் (THE ILLUSTRATED WEEKLY OF INDIA, DECEMBER 31, 1978: VOL XCIX DECEMBER 31, 1978 - JANUARY 6, 1979) என்னுடைய வாஜீத் ஆண்மை குலைந்தவன் அல்ல; பெண் சுபாவம் உடையவன் அல்ல, என்று கூறினார். அவருக்கும் ராஜ்பன்ஸ் கன்னாவுக்கும் அவ்விதழில் நடந்த விவாதம், வரலாற்று நுணுக்கங்களை புரிந்து கொள்ள மிகவும் உதவும். அவத் ராஜ்ய அபகரிப்புக்கும் 1857ம் வருட போராட்டத்துக்கும் உள்ள தொடர்பை அறிய பாமர கீர்த்திகளையும் படிக்க வேண்டும். நாகராஜன் ஃபில்ம் காட்டட்டும். அது பற்றி எழுதினால் படிக்க ஆள் இருக்குமானால், எழுதலாம்.
வரலாற்றை நாலு வரியில் மட்டும் சொல்லி விட்டு இடத்தை காலி பண்ணாமல், இந்த கட்டுரையின் தடம் மாறுகிறது. வாஜீத் நவாபை பற்றி சொல்ல நிறைய விஷயம் உளது. அன்றைய அவத் நாட்டின் துரதிர்ஷ்டம், மொகாலாய சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம், மேற்கத்திய நாடுகளின் கலோனிய பகல் கொள்ளை, உலக நடப்பு எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிய நிகழ்வுகளின் சங்கிலித்தொடரே. சில முடிச்சுக்கள் புலப்படுவதில்லை. தெரிந்ததை சொன்னாலே, ஐம்பது பக்கம் ரெடி. படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது? கட்டுரையை வளர்த்தாமல், ஒரு மேற்கோளுடன், விடை பெறுகிறேன். இனி கட்டுரைகளின் அமைப்பே மாறலாம். யார் கண்டது?
ஆக்லண்ட் பிரபு கலோனிய அரசின் தூண்;கவர்னர் ஜெனெரல்: எமிலியும் ஃபேனியும் அவருடைய சகோதரிகள். இருவரும் 1837ல், நவாப் முகம்முது அலி ஷாவின் காலத்தில் லக்னெள வருகிறார்கள். ஃபேனி எழுதி வைத்த விசனக்குறிப்பு: 
”...துட்டு பண்ணும் அற்பபுத்தியுடன் நம்மை போன்ற ஐரோப்பியர்கள் வருவதற்கு முன், இந்த ஜனங்கள் மிகவும் உன்னத நிலையில் சீரும், செழிப்புமாக வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களை வளரவிடாமல்,மட்டம் தட்டி வைத்திருப்பது நாம் தான். அவர்கள் கட்டிக் காப்பாற்றிய பெருமைகளை நாசம் செய்து விட்டோமே...”
இன்னம்பூரான்
07 02 2012
banni2.jpg
A book on Kathak Dance by Wajid Ali Shah
உசாத்துணை:

திவாஜிTue, Feb 7, 2012 at 10:15 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நல்ல ஜோக்!
:-)))

//...ஜோக்: லக்னெளவில் இரட்டை குழந்தைகள் ஜனிக்கப்போகின்றன. ஆனால், தாமதம். டாக்டரம்மா உற்றுக்கேட்டு விட்டு சொன்னாளாம். இரண்டும் ‘பஹ்லே ஆப்’ (உனக்கு முதலுரிமை) என்று மரியாதை பேச்சில் இருக்கின்றன. ஒன்றையொன்று முந்தாது. சிசேரியன் செய்து விடுகிறேன் என்றாளாம்.
//anantha narayanan nagarajanTue, Feb 7, 2012 at 12:45 PM
To: Innamburan Innamburan
மிகவும் சிறப்பான செய்திப் பகிர்தல். ஆம் இந்தத் தலைமுறைக்கு எத்தனையோ தெரியாதது உண்டு.
தொடருங்கள்.
அன்புடன்,
அரவக்கோன்
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Feb 7, 2012 at 1:00 PM
To: 
உங்களுக்கு எழுத நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். என்னுடை உரைநடை வேறு வகையில் பயின்றி வருவதாகக்குறிப்பிட்டு இருந்தீர்கள், ஒரு முறை.I wish to have a'no holds barred' critical appraisal of these inputs. I request you, Krishangini and your daughter to spare some time, read say ten or fifteen of these items and give me suggestions for improvement.All of them, nearly 250, are compiled in http://www.heritagewiki.org/index.php?title=பகுப்பு:அன்றொரு_நாள்
Regards,
Innamburan
[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Feb 7, 2012 at 8:09 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அது போகட்டும். உம்ராவ் ஜான் சினிமா பார்த்தவர்களுக்கு அமரிக்கையாக இயங்கும் லக்னவி பண்பின் மென்மை புரியும்.  //

ஆஹா, ரேகா நடிச்சதா? ஐஸ்வர்யா நடிச்சதா?  ரெண்டும் பார்த்தேன்.  ரேகாவுக்கே முழு மதிப்பெண்கள்.  கூடவே லக்நவி பண்பிற்கும். நல்லாவே புரியும்.

..துட்டு பண்ணும் அற்பபுத்தியுடன் நம்மை போன்ற ஐரோப்பியர்கள் வருவதற்கு முன், இந்த ஜனங்கள் மிகவும் உன்னத நிலையில் சீரும், செழிப்புமாக வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களை வளரவிடாமல்,மட்டம் தட்டி வைத்திருப்பது நாம் தான். அவர்கள் கட்டிக் காப்பாற்றிய பெருமைகளை நாசம் செய்து விட்டோமே...”//

ரொம்பச் சரிதான்.  ஆனால் இப்போ வந்து பார்க்கச் சொல்லுங்க;  மாத்திப்பாங்க.  நம்ம ஜனங்கள் கலாசாரச் சீரழிவின் எல்லையில் நிற்பதைப் பார்த்துவிட்டு இந்த நாட்டிலா உயர்ந்ததொரு கலாசாரம் இருந்திருக்கிறதுனு வியப்பாக் கேட்பாங்க. :((((((((

லக்னெளவில் இரட்டை குழந்தைகள் ஜனிக்கப்போகின்றன. ஆனால், தாமதம். டாக்டரம்மா உற்றுக்கேட்டு விட்டு சொன்னாளாம். இரண்டும் ‘பஹ்லே ஆப்’ (உனக்கு முதலுரிமை) என்று மரியாதை பேச்சில் இருக்கின்றன. ஒன்றையொன்று முந்தாது. சிசேரியன் செய்து விடுகிறேன் என்றாளாம். //

ஹிஹிஹிஹி


सिर्फ शायरी और म़ौज़िकी ही मर्द की आँख़ो में आँस़ू ला सकते हैं| ~ //

वाहरे वाह 
என்ன இருந்தாலும் நம்ம இந்திய வரலாற்றில் உள்ள சுவை மற்ற நாட்டு வரலாறுகளில் எனக்குத் தெரிவதில்லை. 

ஆற்காட்டு நவாபுக்குக் கடன் கொடுத்தே, அந்த கிராக்கியில், கிஸ்தி பிடிக்கிறேன் பேர்வழி என்று கட்டபொம்மனின் உயிரை பறித்தனர், கிழக்கிந்திய கும்பினியின் (கம்பெனி) கொடுங்கோலர்கள். //

ஹிஹிஹி, கட்டபொம்மன்!!!!!!!!!!!!!!!!!!

2012/2/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7:
கரிநாள்
ஆற்காட்டு நவாபுக்குக் கடன் கொடுத்தே, அந்த கிராக்கியில், கிஸ்தி பிடிக்கிறேன் பேர்வழி என்று கட்டபொம்மனின் உயிரை பறித்தனர், கிழக்கிந்திய கும்பினியின் (கம்பெனி) கொடுங்கோலர்கள். ஶ்ரீராமன் ஆண்ட அயோத்தியை அவர்கள் அபேஸ் செய்த விவகாரம், அதை விட பெரிய அட்டூழியம். பல வருடங்களாகவே, அவத் நவாப்புகளை இஸ்பேட் ராஜாவாக வைத்திருந்த கும்பினி, நம் நாட்டுக்கே கரிநாளாகிய ஃபெப்ரவரி 7, 1856 அன்று அவத் நவாப் வஜீத் அலி ஷா அவர்களை, அரியணையிலிருந்து இறக்கி, கொல்க்கொத்தா அருகில் மெத்தியாப்ருஸ் என்ற முகல்லாவில் சிறை வைத்தது.

”...துட்டு பண்ணும் அற்பபுத்தியுடன் நம்மை போன்ற ஐரோப்பியர்கள் வருவதற்கு முன், இந்த ஜனங்கள் மிகவும் உன்னத நிலையில் சீரும், செழிப்புமாக வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களை வளரவிடாமல்,மட்டம் தட்டி வைத்திருப்பது நாம் தான். அவர்கள் கட்டிக் காப்பாற்றிய பெருமைகளை நாசம் செய்து விட்டோமே...”
இன்னம்பூரான்
07 02 2012

A book on Kathak Dance by Wajid Ali Shah
உசாத்துணை: