Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 4 அமெரிக்கா! அமேரிக்கா!




அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 4 அமெரிக்கா! அமேரிக்கா!
15 messages

Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 6:20 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 4
அமெரிக்கா! அமேரிக்கா!

இன்றைய தினம், பல துறைகளில் உலகின் முதன்மை ஸ்தானம் வகிக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் (பொதுவாக ‘அமெரிக்கா’ எனப்படுவது) வரலாற்றில், பொன் எழுத்துக்களால் போற்றப்படவேண்டிய திருநாள். அந்த நாட்டின் தனிப்பெருமையே, பல நாடுகளிலிருந்து திரவியம் தேடி இந்த ஜூனியர் நாட்டில் புகலடைந்த மனித இனம் சீரும், செனப்புமாக வாழ்வதுடன், அமெரிக்க தேசாபிமானத்தை வளர்த்துக்கொள்வதும், இனபேதங்களை அறவே ஒதுக்கி விடுவதும், தான தருமங்களுக்கு மதிப்பு இருப்பதும், கல்வியின் உன்னதம், தகுதிக்கு அரியாசனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். குறைகள் இல்லாமல் இல்லை. முரண்கள் தலை தூக்காமல் இல்லை. அவற்றை பற்றி எழுத வேண்டிய இடம் இது இல்லை. அமெரிக்க பழங்குடிகளின் கெளரதை, தன்மானம், பண்பு ஆகியவை பற்றியும், இங்கிலாந்திலிருந்து ‘ஓட்டையில்லாத’ ‘மேஃப்ளவர்’ கப்பலில், சமய புத்துணர்ச்சியுடன் யாத்ரீகர்கள் வந்திறங்கியதும், கலோனிய மனப்பான்மை பிறந்த மண்ணிலிருந்து தூசிப்படலமாக வீசியதும், பாஸ்டன் தேயிலை கவிழ்ப்பு ஒரு புரட்சியின் சின்னமாக தலையெடுத்ததும், அமெரிக்க வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள் தான். என்றோ ஒரு நாள், நான் எழுத இயலவில்லை என்றாலும்,மற்றவர் யாராவது எழுதட்டுமே. இன்று அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தூண்கள் அமைந்த விதத்தில், ஒரு சிறிய பகுதி மட்டும் இடம் பெறுகிறது. 

ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களால், ஒரு மனதாக, ஏகோபித்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியும், அமெரிக்க அரசியலில் போட்டியின்றி ஆதரிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதியும் ஆன ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்க்டன் அவர்கள் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினம், ஃபெப்ரவ்ரி 4, 1789. 1797 வரை அந்த பதவியில் செயலாற்றினார். 1792லிலும் அவருக்கு சதவிகித ஆதரவு. இங்கிலாந்தை வென்று வாகை சூடிய ராணுவத்தலவர், அவரே. 1787ல் அமெரிக்காவின் அரசியல் சாஸனத்தை எழுதிய குழுவின் அரசியல் தலைவரும், அவரே. உறுதி படைத்த, கஜானா நிரம்பிய தேசீய அரசை அமைத்தார். ஐரோப்பிய போர்களில் சிக்கிக்கொள்ளாமல் நடு நிலை வகித்து, ராஜ தந்திரம் பேணினார். ஆங்காங்கே தலையெடுத்த சில்லரை உள்குத்துக்களை அடக்கினார்.நிர்வாக சீர்திருத்தங்களை, மக்கள் நலம் நாடி, ஏற்புடைய வகையில் நிலை நிறுவி, எல்லா தரப்பு மக்களாலும் போற்றப்பட்டார். இவர் தான் அமெரிக்க தேசபிதா என்ற ஒருமித்த கருத்து நாடெங்கும் நிலவுகிறது. அதா அன்று. நாடாளுமன்றம் உவகையுடன் அளித்த $ 25,000/- சம்பளம் பெற மறுத்தார். ஆனால், செல்வமற்றவர்கள் அப்பதவியை நாடுவதில் சிக்கல் அளிக்கும் மரபுகள் வேண்டா என்று அதை ஏற்றுக்கொண்டார். ராஜாங்க ஹோதாக்களை தவிர்த்து, எளிய ஜனநாயக மரபுகளை ஆதரித்தார். அவர் திறன் மிகுந்த நிர்வாகி. வேலை பங்கீடு, பொறுப்பு அளிப்பது, வேலை வாங்குவது, பேசி, கருத்துக்கேட்டு இயங்குவது, கட்டுக்கோப்பான, தெளிவான ஆணைகள் பிறப்பிப்பது ஆகியவகையில் நிகரற்றவராக இருந்தார். அவர் இரண்டாவது முறை பதவி ஏற்றதே, தயக்கத்துடன். மூன்றாவது முறை தேர்தலில் நிற்க மறுத்து விட்டார். 1792லிம், 1796லிம், பதவி மோகம் பற்றிய அவருடைய சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அவர். அமெரிக்காவும், உலகும், ஏன், இன்றைய இந்தியாவும், கிளிப்பிள்ளைப் போல, படித்து, படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய ஆவணம், அது. அந்தக்காலத்தில், நீட்டி, முழக்கி, வக்கணையாக மடலிடுவது வழக்கம். அது 22 பக்கங்கள் கொண்ட நீண்ட ஆவணம்.தேசாபிமானம், ஒற்றுமை, அரசியல் சாஸனத்தின் அருமை, சட்டத்தின் மேலாண்மை, அரசியல் கட்சிகள் செய்யக்கூடிய தவறுகள், மக்களாட்சியின் இலக்கணம் ஆகியவற்றை பளிங்கு நீர் தெளிவுடம் ஆராய்ந்த அந்த திறந்த கடிதத்திலிருந்து, இரு மேற்கோள்கள்:
1.தார்மீகம் தான் மக்களாட்சியின் அமுதசுரபி;
2. அரசு கையாளும் நிதி மக்களுடையது; சிக்கனமும், கணக்கு சொல்வதும் முக்யம்.

முடிந்தால், சில நாட்களில், இதன் தொடராக, அந்த திறந்த கடிதத்தின் சாராம்சம் அளிக்கும் கட்டுரை ஒன்று எழுத வாய்ப்பு கிட்டலாமோ, என்னமோ?
இன்னம்பூரான்
04 02 2012
stock-photo-1426371-vintage-george-washington-stamp-two-cents.jpg

உசாத்துணை:

கி.காளைராசன் Fri, Feb 3, 2012 at 6:56 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
அமெரிக்கா, இப்போது ஆவ்சம் அமெரிக்காவாக மாறிவிட்டது.  அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவரல்லவா? 

2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியும், அமெரிக்க அரசியலில் போட்டியின்றி ஆதரிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதியும் ஆன ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்க்டன் அவர்கள் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினம், ஃபெப்ரவ்ரி 4,
இந்த இனிய நாள் பிறக்கும் இவ்வேலையிலேயே இந்த இழையைக் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது.






Subashini Tremmel Fri, Feb 3, 2012 at 7:30 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 4
அமெரிக்கா! அமேரிக்கா!

இன்றைய தினம், பல துறைகளில் உலகின் முதன்மை ஸ்தானம் வகிக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் (பொதுவாக ‘அமெரிக்கா’ எனப்படுவது) வரலாற்றில், பொன் எழுத்துக்களால் போற்றப்படவேண்டிய திருநாள். அந்த நாட்டின் தனிப்பெருமையே, பல நாடுகளிலிருந்து திரவியம் தேடி இந்த ஜூனியர் நாட்டில் புகலடைந்த மனித இனம் சீரும், செனப்புமாக வாழ்வதுடன்,

செனப்புமாக என்பது பேச்சு வழக்கா..? நான் கேள்விப்பட்டதில்லை.

..போற்றப்பட்டார். இவர் தான் அமெரிக்க தேசபிதா என்ற ஒருமித்த கருத்து நாடெங்கும் நிலவுகிறது. அதா அன்று. நாடாளுமன்றம் உவகையுடன் அளித்த $ 25,000/- சம்பளம் பெற மறுத்தார்.

சரி .. இப்போது அமெரிக்க ஜனாதிபதியின் மாத சம்பளம் என்ன?

கொசுறு செய்தி.. ஜெர்மனியில் கான்ஸலர் (ஜனாதிபதி அல்ல) வருடம் 261,000 யூரோ சம்பளம் பெறுவதாக ஒரு பத்திரிக்கை கூறுகிறது. 

சுபா
 

--

Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 7:35 PM
To: mintamil@googlegroups.com


2012/2/3 Subashini Tremmel


2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 4
அமெரிக்கா! அமேரிக்கா!

இன்றைய தினம், பல துறைகளில் உலகின் முதன்மை ஸ்தானம் வகிக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் (பொதுவாக ‘அமெரிக்கா’ எனப்படுவது) வரலாற்றில், பொன் எழுத்துக்களால் போற்றப்படவேண்டிய திருநாள். அந்த நாட்டின் தனிப்பெருமையே, பல நாடுகளிலிருந்து திரவியம் தேடி இந்த ஜூனியர் நாட்டில் புகலடைந்த மனித இனம் சீரும், செனப்புமாக வாழ்வதுடன்,

செனப்புமாக என்பது பேச்சு வழக்கா..? நான் கேள்விப்பட்டதில்லை.

..போற்றப்பட்டார். இவர் தான் அமெரிக்க தேசபிதா என்ற ஒருமித்த கருத்து நாடெங்கும் நிலவுகிறது. அதா அன்று. நாடாளுமன்றம் உவகையுடன் அளித்த $ 25,000/- சம்பளம் பெற மறுத்தார்.

சரி .. இப்போது அமெரிக்க ஜனாதிபதியின் மாத சம்பளம் என்ன?

~~~The most recent salary increase, to $400,000/year from $200,000/year, took effect when George W. Bush became President. The President also receives a $50,000 non-taxable expense account. The compensation of the President is controlled by law, specifically 3 USC 102 ("Compensation of the President", Title 3, Section 102, of the US Code). 

கொசுறு செய்தி.. ஜெர்மனியில் கான்ஸலர் (ஜனாதிபதி அல்ல) வருடம் 261,000 யூரோ சம்பளம் பெறுவதாக ஒரு பத்திரிக்கை கூறுகிறது. 

சுபா
 


Tthamizth Tthenee Sat, Feb 4, 2012 at 3:26 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சீரும் செனப்புமாக
 
சீர்  செனத்தி  செய்வது
 
 
திருமணத்துக்கு பெண் வீட்டார்  மாப்பிள்ளைக்கு   செய்யும் பரிசுகளை
 
சீர் செனத்தி  என்று  அழைப்பது  வழக்கம்
 
இது பேச்சு வழக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

செல்வன் Sat, Feb 4, 2012 at 4:27 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
தேசதந்தை ஜார்ஜ் வாஷிங்டன் பற்றிய பதிவுக்கு நன்றி இ சார். உலக வரலாற்றில் மிக சிறந்த தலைவராக இவரையும், லிங்கனையும், காந்தியையும் கருதுகிறேன்.

விருப்பு, வெறுப்பு இன்றி நடந்ததை சீர்தூக்கி எழுதும் உங்களிடமிருந்து இப்படி நடுநிலையான பதிவுகள் வருவதில் வியப்பு எதுவுமில்லை. தராசு என புனைபெயரில் நீங்கள் எழுதலாம்:-)
[Quoted text hidden]
--
செல்வன்

ஆணா பொறந்தா எல்லோரும் பெண்ணை
அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்லை
வேறென்ன சொல்ல வேணும்?





Geetha Sambasivam Tue, Feb 7, 2012 at 1:26 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மிக்க நன்றி. பாஸ்டன் தேயிலைக் கவிழ்ப்புப் பற்றியும் பாஸ்டன் பிராமின்ஸ் பற்றியும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல் இங்குள்ள முரண்கள் குறித்தும் தனி இழையாகத் துவக்கி எழுதினால் நன்று.

2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 4
அமெரிக்கா! அமேரிக்கா!

இன்றைய தினம், பல துறைகளில் உலகின் முதன்மை ஸ்தானம் வகிக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் (பொதுவாக ‘அமெரிக்கா’ எனப்படுவது) வரலாற்றில், பொன் எழுத்துக்களால் போற்றப்படவேண்டிய திருநாள். அந்த நாட்டின் தனிப்பெருமையே, பல நாடுகளிலிருந்து திரவியம் தேடி இந்த ஜூனியர் நாட்டில் புகலடைந்த மனித இனம் சீரும், செனப்புமாக வாழ்வதுடன், அமெரிக்க தேசாபிமானத்தை வளர்த்துக்கொள்வதும், இனபேதங்களை அறவே ஒதுக்கி விடுவதும், தான தருமங்களுக்கு மதிப்பு இருப்பதும், கல்வியின் உன்னதம், தகுதிக்கு அரியாசனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். குறைகள் இல்லாமல் இல்லை. முரண்கள் தலை தூக்காமல் இல்லை. அவற்றை பற்றி எழுத வேண்டிய இடம் இது இல்லை


Innamburan Innamburan Tue, Feb 7, 2012 at 1:49 PM
To:  mintamil

நல்லதொரு ஆலோசனை. அவை மனதில் உளன. ரோஸா பார்க்ஸ், மார்ட்டின் லூதர் கிங் தொடர்கள் மறுபக்கமாக அமைந்து விட்டன அல்லவா.  பாஸ்டன் தேயிலைக் கவிழ்ப்புப் பற்றியும் பாஸ்டன் பிராமின்ஸ், பழங்குடிகள், சில தலைவர்களின் முரண் எல்லாம் எழுதத் தருணம் கிடைக்கும் என நினைக்கிறேன். 
இப்போதைக்கு சொட்டு மருந்து: ஜனதிபதி ஜான் கென்னடியின் தந்தை ஜோஸஃப் கென்னடி பாஸ்டன் பிராமணோத்தமன்.
கள்ளச்சாராயம் விற்றே கோடானுகோடி சம்பாதித்தார். பெரிய் ஆளு. ஆனால், அந்த குடும்பத்திற்கு சாபக்கேடுகள் அதிகம். நான் மிகவும் மதித்த கென்னடி, சமீபத்தில் மறைந்த எட்வர்ட் கென்னடி.
இன்னம்பூரான்
2012/2/7 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
மிக்க நன்றி. பாஸ்டன் தேயிலைக் கவிழ்ப்புப் பற்றியும் பாஸ்டன் பிராமின்ஸ் பற்றியும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல் இங்குள்ள முரண்கள் குறித்தும் தனி இழையாகத் துவக்கி எழுதினால் நன்று.

2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 4
அமெரிக்கா! அமேரிக்கா!



Geetha Sambasivam Tue, Feb 7, 2012 at 1:52 PM
To: Innamburan Innamburan
Cc: mintamil
kennedy family story  ஓரளவுக்குத் தெரியும், ஆனால் அவர் பாஸ்டன் பிராமணோத்தமர் என்ற செய்தி புதுசு. தகவலுக்கு நன்றி. நானும் ஓரளவுக்குத் தேடிப்பார்க்கிறேன். 
[Quoted text hidden]

செல்வன்Wed, Feb 8, 2012 at 5:48 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நான் மிகவும் மதித்த கென்னடி, சமீபத்தில் மறைந்த எட்வர்ட் கென்னடி.

மேரி ஜோ கோபெனேவை உங்களுக்கு பிடிக்குமா?

http://en.wikipedia.org/wiki/Chappaquiddick_incident


--
செல்வன்

பெத்து வளர்த்து எடுத்த பிள்ளைதான்
சொத்தை இல்லைதான் 
என கேட்கும் போதும் 
துன்பம் இங்கே கொள்ளைதான்




Innamburan Innamburan Wed, Feb 8, 2012 at 5:59 AM
To: mintamil@googlegroups.com
அந்தக்காலத்திலேயே படித்துக்கரைத்த செய்தி தான். அந்த நிகழ்வு. ஒரு கரும்புள்ளி. தீயது செய்தவர்கள் சான்றோர்களாக மாறலாம். உங்களுக்கு ஜான் ப்ரொஃபூயோமோ தெரியுமோ? நேற்று சார்லாஸ் டிக்கென்ஸ் பற்றி எழுதினேன். அவர் மனைவியை கொடுமைப்படுத்தினேன். யார் மேல் தான் பழி சுமத்த முடியாது? நான் மஞ்சள் பத்திரிகை அல்ல.இன்னம்பூரான்
08 02 2012

2012/2/8 செல்வன்


2012/2/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நான் மிகவும் மதித்த கென்னடி, சமீபத்தில் மறைந்த எட்வர்ட் கென்னடி.

மேரி ஜோ கோபெனேவை உங்களுக்கு பிடிக்குமா?

http://en.wikipedia.org/wiki/Chappaquiddick_incident


செல்வன் Wed, Feb 8, 2012 at 6:24 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அந்தக்காலத்திலேயே படித்துக்கரைத்த செய்தி தான். அந்த நிகழ்வு. ஒரு கரும்புள்ளி. தீயது செய்தவர்கள் சான்றோர்களாக மாறலாம்.
ஆமாம் ஐயா..பெரிய மனிதர்கள் தப்பு செய்தால் பெருமாள் செய்த மாதிரி. ஏதோ தெரியாமல் செய்துவிட்டார். அப்புறம் சான்றோராகவும் மாறிவிட்டார்.  செத்தது கேள்வி கேட்பார் இல்லாத சிறுபெண். அவள் உயிரை விட நமக்கு இம்மாதிரி சான்றோர்கள் தான் முக்கியம்.
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 8, 2012 at 8:46 AM
To: mintamil@googlegroups.com
என் வாக்கியம்: "...நான் மிகவும் மதித்த கென்னடி, சமீபத்தில் மறைந்த எட்வர்ட் கென்னடி..."
இதற்கு இல்லாத அர்த்தம் காணலாகாது, செல்வன். முடிந்தவரை, நான் அளந்து பேசுபவன். 
அளக்கவேண்டிய தருணங்களில் அளப்பது வேறு விஷய்ம்.
இன்னம்பூரான்
2012/2/8 செல்வன் <holyape@gmail.com>


2012/2/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அந்தக்காலத்திலேயே படித்துக்கரைத்த செய்தி தான். அந்த நிகழ்வு. ஒரு கரும்புள்ளி. தீயது செய்தவர்கள் சான்றோர்களாக மாறலாம்.
ஆமாம் ஐயா..பெரிய மனிதர்கள் தப்பு செய்தால் பெருமாள் செய்த மாதிரி. ஏதோ தெரியாமல் செய்துவிட்டார். அப்புறம் சான்றோராகவும் மாறிவிட்டார்.  செத்தது கேள்வி கேட்பார் இல்லாத சிறுபெண். அவள் உயிரை விட நமக்கு இம்மாதிரி சான்றோர்கள் தான் முக்கியம்.


செல்வன் Wed, Feb 8, 2012 at 6:30 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>
என் வாக்கியம்: "...நான் மிகவும் மதித்த கென்னடி, சமீபத்தில் மறைந்த எட்வர்ட் கென்னடி..."
இதற்கு இல்லாத அர்த்தம் காணலாகாது, செல்வன்.

அப்படி எல்லாம் இல்லை ஐயா.கென்னடி பற்றிய என் கருத்தையும் பகிர்ந்துகொண்டேன் அவ்வளவே.
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 8, 2012 at 6:32 PM
To: mintamil@googlegroups.com
OK, Selvan


2012/2/8 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]

No comments:

Post a Comment