Google+ Followers

Saturday, March 16, 2013

நவம்பர் 3 ஜனோபகாரம்
அன்றொரு நாள்: நவம்பர் 3 ஜனோபகாரம்
1 message

Innamburan Innamburan Thu, Nov 3, 2011 at 3:59 PM
To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: Muruga poopathi
அன்றொரு நாள்: நவம்பர் 3
ஜனோபகாரம்
ராஜ்யபாரம் வகிப்போர் பொது ஜன அபிப்ராயத்தை மதித்து இயங்கவேண்டும் என்ற கோட்பாட்டை ராமராஜ்யமும் மதிக்கும்; ஜனநாயகமும் மதிக்கும். முகமூடி யாதாயினும், கொடுங்கோலாட்சி அதை உதைக்கும். முன்னதற்கு செய்தியும் வேண்டும்; செய்தி விமர்சனமும் நல்வரவு. பின்னதற்கு செய்தி ஒரு கருவி; விமர்சனம் பிரச்சாரத்துக்கு ஒரு உபகரணம்; மட்டுறுத்தல் ஒரு ஆயுதம். கூடன்பெர்க் என்ற ஜெர்மானியரின் அச்சு இயந்திரம் வந்த பிறகு தான், இதழ்களுக்கு நல்ல காலம் பிறந்தது. அச்சுத்திறன் கூட, கூட, இதழியலும் செழித்தது. தற்காலம் இணைய தளத்தில் அவை பீடுநடை போடுகின்றன. 
நவம்பர் 3, 1838 ம் தேதி ஜனித்தது, உலக அளவில் அதிக விற்பனையாகும் Times of India என்ற புகழ் வாய்ந்த இந்திய நாளிதழின் பூர்வாசிரமம் ஆன The Bombay Times and Journal of Commerce. உலகின் முதல் நாளிதழ் The Daily Courant 1702 ல் இங்கிலாந்தில் வந்தது. அதற்கும் முன்னால் அமெரிக்காவில் 1690 ல் வந்த Publick Occurrences both Foreighn and Domestick ஒரு நாள் தான் வாழ்ந்தது எனினும், ஒரு துணிச்சலான வழியில் வாசகர்களின் கருத்துக்களுக்கு அடி கோலியது. வாசகர்கள் தன் கருத்தை எழுதி, மற்றவர்களுக்கு அனுப்ப வழி. அப்போதே லைசன்ஸ் பிரச்னை. மூடு விழா. இந்தியாவில் ஒரு கல்கத்தா இதழாசிரியருக்கு நடந்தது போல, பிரிட்டீஷ் துரைத்தனத்தாரை கடுமையாகக் குறை கூறியதற்காக, 1735ல் ந்யூ யார்க்கில், பீட்டர் ஸெங்கர் கைது செய்யப்பட்டார். தான் எழுதியது உண்மை என்று நிரூபணம் செய்து, அவர் விடுதலை பெற்றார். அன்று தான் பேச்சுரிமை பெற்ற இதழிலக்கியம் ஈன்றெடுக்கப்பட்டது எனலாம். (தற்காலம் ‘காசுரிமை’ இதழிலக்கியம் கோவாவில் பேசப்படுகிறது!). The Bombay Times and Journal of Commerce பிறந்து 13 வருடங்களுக்கு பிறகே, 1851ல் இதழியலின் உச்சஸ்தானத்தில் இருக்கும் ந்யூ யார்க் டைம்ஸ் பிறந்தது. இனி, ஊர் சுற்ற வேண்டாம். மும்பைக்கு வருவோம். 
வாரம் இருமுறை என்று தொடங்கிய இந்த இதழ் 1850ல் நாளிதழாக மாறியது. 1861ல் தற்கால நாமம் பூண்டது. நிறுவனரும், முதல் ஆசிரியருமான ராபர்ட் நைட் 1857 வருட ‘சிப்பாய் கலகத்திற்கு’, பிரிட்டீஷ் ராணுவத்தை குறை கூறினார். அத்துடன் நிற்காமல், பிரிட்டீஷாரின் நிர்வாஹத்திறனின்மை, பேராசை, நாடு பிடிப்பு, வரிப்பளு, இந்திய மரபை மீறிய கல்விக்கொள்கை இவற்றையெல்லாம் சாடினார். அவர் இதழியல் உரிமை மறுக்கப்படுவது, அச்சுறுத்தல், அரசும், வணிகமும், மற்ற சக்திகளும் இதழியலை ஏறி மிதிப்பது ஆகியவற்றை எதிர்த்தார் என்று அந்த இதழின் இணைய தளம் கூறுகிறது. அது, தற்காலம் 70 லக்ஷம் மக்கள் அவ்விதழை படிப்பதாகவும், இணைய தளத்திலும் அது சக்கை போடு பாடுவதாக, சான்றுகள் அளிக்கிறது. தொலை & தொல்லைக்காட்சிகளிலும் இது பிச்சு உதறுவதை பார்க்கிறோம். இப்போதெல்லாம், ஒவ்வாரு இதழாயலயமும் லாயமாக (stable) கருதப்படுகின்றன.
இதோ டைம்ஸ் ஆஃப் இந்தியா லாயம்;
http://www.timesofindia.com (The Times of India)
http://www.economictimes.com (Economic Times)
http://www.syndication.indiatimes.com (Times Syndication Service)
http://www.educationtimes.com (Education Times – A comprehensive education portal)
http://www.timesascent.in (Times Ascent – A HR community portal)
http://www.timesjobs.com (Times Jobs.com – A job portal)
http://www.simplymarry.com (Simply Marry.com – A matrimonial portal)
http://www.magicbricks.com (Margi Bricks – A real estate portal)

கொஞ்சம் போர் அடிக்கிறது இல்லை. விஷயம் அப்படி. அதான், ஹால்ட் போட்டுட்டேனே.
இன்னம்பூரான்
03 11 0211

Times--I-B--V-8078-40_b.jpg

உசாத்துணை:

அன்றொருநாள்: மார்ச் 16 பிழிந்தெடுத்த மொழி
அன்றொருநாள்: மார்ச் 16 பிழிந்தெடுத்த மொழி
4 messages

Innamburan Innamburan Thu, Mar 15, 2012 at 6:31 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 16
பிழிந்தெடுத்த மொழி
எனக்கென்னெமோ தெருவில் நம்ம வீட்டு முகப்பு தான் கம்பீரமாக படுகிறது. அடுத்த வீட்டு இஸ்மாயிலும் தன் வீட்டை பற்றி இப்படி தான் அருமை சாற்றுகிறான். அன்னையின் கூறைப்புடவையை (திருமணப்புடவை) அருமை மகள் போற்றி பாதுகாப்பது போல், தாய்மொழியை போற்றுபவர்கள் அதனுடைய எழுத்துருவை பேணுவது இயல்பே. உடனே கிரந்தம், தேவநாகரி, தமிழ் எழுத்து என்று நான் கோதாவில் இறங்கப்போவதாக நினைத்து, கத்தி தீட்டவேண்டாம். மூன்று எழுத்துரு தளங்களையும் போற்றுபவன் நான். நான் சொல்ல வரும் விஷயம், லிதுவேனியாவில் ‘புத்தகங்களை கள்ளக்கடத்தல் தினம்‘ என்று மார்ச் 16ம் தேதியன்று விழா எடுப்பதின் ‘பிழிந்தெடுத்த மொழி‘ பின்னணி.   
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21:தாய்மொழி’ என்ற இழையில், லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டது பற்றி பேசப்பட்டது.  தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும் என்ற கருத்தும் வரலாற்றுப்பாடமாகக் கூறப்பட்டது.
ரஷ்யாவின் மேலாண்மைக்குட்பட்ட சுற்றுவட்டாரங்களில் ஒன்றாகிய லிதுவேனியா, அந்த ஆதிக்கத்தை எதிர்த்து 1863ல் முரண்டு பிடித்தது, மக்களின் தேசாபிமானத்தின் தாக்கத்தினால்.  ஆணிவேரான மரபை கழித்து, கட்டி காக்கும் ரோமன் கத்தோலிக்க சமயத்தை இழித்து, லிதுவேனியாவை அடக்கி ஆள, ரஷ்யா ஒரு உத்தியை கையாண்டது. அதாவது, 1866 ஆண்டு ஒரு மட்டமான சட்டம் போட்டது: ‘லத்தீன் எழுத்து தடை செய்யப்பட்டுள்ளது. இனி லத்தீன் எழுத்து செல்லுபடி ஆகாது. ரஷ்யா விரும்பும் சிரிலிக் எழுத்துக்களில் தான், இனி லித்துவேனிய மொழி வழங்கும்.’ ஜார் மன்னனின் வாய்மொழி ஆணை: இனி லத்தீன் எழுத்தில் எழுதக்கூடாது. இது சட்டரீதியான தடை இல்லாவிடினும் 1904 வரை, தடை இருந்தது. அதை மீற ஒரே வழி: கள்ளக்கடத்தல். லத்தீன் எழுத்துருவில் லிதுவேனிய மொழியில் எழுதப்பட்ட நூல்களை அவ்வாறு கடத்தி வருபவர்களுக்கு அபராதம், நாடு கடத்தல். ஸைபீரியாவில் கடுங்காவல் எல்லாம் உண்டு. சுட்டுக்கொலையும் நடந்திருக்கிறது. 
1867லியே, சமோகிதியாவின் பிஷப் மோடிஜெஸ் வாலான்ஷியஸ் அவர்கள் தான் இந்த சட்டவிரோத இயக்கத்தின் தூண்.1900ம் ஆண்டு காலகட்டத்தில் வருடம் தோறும் முப்பது/நாற்பது ஆயிரம் நூல்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டன. நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும், அவை காணப்பட்டன. எங்கெங்கும் தன்னார்வக்குழுக்கள். லத்தீன் மொழி தடை உதவாக்கறை சட்டம் என்பதை புரிந்து கொண்ட ரஷ்யா, சாக்கு போக்குச் சொல்லி, அதை நீக்கியது, 1904ம் வருடம். அடுத்த வருடமே, ஜுவோஜாஸ் மஸியுலிஸ் ஒரு புத்தகக்கடையை திறந்தார். நூறு வருடங்களுக்கு மேலாக அந்தக்கடை, இன்றும் இயங்கிவருவதாக, விக்கிப்பீடியா கூறுகிறது. 
இந்த மாதிரியான சுதந்திர போர்கள் ஸோவியத் ரஷ்யாவுக்கு பிடிக்குமா? அவர்கள் இந்த வரலாற்றை மூடி மறைத்தனர். ஸோவியத் ரஷ்யாவின் மரணத்துக்குப் பிறகு, மார்ச் 16, 1846 அன்று பிறந்த புத்தக கள்ளக்கடத்துனர் ஜுர்கிஸ் பியலினிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக, ஒவ்வொரு வருடமும், மார்ச் 16ம் தேதி ‘புத்தகங்களை கள்ளக்கடத்தல் தினம்‘(Knygnešio diena) கொண்டாடப்படுகிறது.
அது சரி. லிதுவேனியாவின் ‘பிழிந்தெடுத்த மொழி’ தகவலால், நமக்கு என்ன ஆதாயம் என்று சிலர் கேட்கலாம். மக்கள் சக்தியை பிரதிபலிக்கும் வரலாறுகளை இந்தியாவின் வருங்கால தலைவர்களாவது அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசாபாசம் தான். வேறு என்ன?
இந்த இழைக்காக ஆய்வு தொடங்கும்போது, மின் தமிழில், திரு, தேவ், சில மொழிகளின் எழு(டு)த்துக்காட்டுக்களை (கல்யாண்ஜி சொல்றமாதிரி) பதிவு செய்தார். அவருக்கு நன்றி கூறி, அவற்றை, இங்கு இணைக்கிறேன். பேராசிரியர், தமிழ் லிபி ப்ராம்மி/இண்டஸ் லிபிகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார். .
தேவ நாகரி லிபி:
क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
श्रीमण्टपस्य मध्यभागे नातिमहतः पर्यङ्कस्योपाश्रये
धवलोपधानन्यस्तभुजलतावष्टम्भेनावस्थितां
सर्वरमणीयकानानामेकनिवासभूतां कादम्बरीं ददर्श।

போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
மைதிலி, மார்வாடி, பிலி, நேவாரி,  போன்ற மொழிகளும்
தேவ நாகரியைக் கையாள்கின்றன;

ஸாந்தலி, ஸிந்தி,டோக்ரி, ஷெர்பா
மொழிகளையும் சிலர் தேவநாகரியில் எழுதுவர்.
காச்மீரத்தின் ஹிந்துக்கள் காச்மீரத்தை
தேவ நாகரியில் எழுதுவர்.
*
குஜராதி (ஷராஃபி) லிபி:
મારૉ નામ દેવરાજ છે
કોઈ કાળે કેટ્લાક કલાપી કલા કરતા કુદાકુદ કરે કુદાકુદ કરી કેકારવ કરતા
કોઇ કલાપી ના કપાયેલાં કલગી
કલાપ કાગડે કયાંકથી કબ્જે કર્યા. કપાયેલા કલગી કલાપથી કાયાને કલાત્મક કરી
કાગડ કાવ્યસભમા કુચ કરી .
કાવ્યસભામા કોયલના કર્ણમધુર કુંજનની કાબર , કબુતર ,કુંજડે કદર કરી.કલાપી
એ કળા કરી કલાન્રુત્ય કર્યુ.
કલાપીની કલાથી કોયલે કલ્લોલથી કલશોર કર્યો.કલાપીની કેળા કેરીથી કદર કરી.
કેવળ કુદાકુદ કરતા
કલાપીની કદરથી કાફર કાગડો કોચવાયો.

சிறுபான்மையராகிய பார்ஸிகளின் பேசும்‘அவெஸ்தன்’
மொழியும் குஜராதி லிபியில்தான் எழுதப்படுகிறது;
10ம் நூற்றாண்டில் முகமதியர் தாக்குதலுக்கு
அஞ்சி ஈரானிலிருந்து கப்பலேறி வந்த இவர்களுக்கு
குஜராத் அடைக்கலம் அளித்தது.


சாரதா லிபி -
ப்ராமிலிபியிலிருந்து தோன்றியது;
இந்த லிபி குர்முகி தோன்றுவதற்கு வழிவகுத்தது.
*
குருமுகி (அ) குர்முகி லிபி:
ਤਿੱਖੇ ਪੰਜੇ ਦੀ ਪਾਮੇਂ ਰਕਾਬੀ
ਤੁਰਦੀ ਨਾਲ ਮਿਜਾਜਾਂ
ਲੜ ਕੁੜ੍ਹਤੀ ਦੇ ਬਾਂਹ ਨਾਲ ਉੱਡਦੇ
ਨੰਗੀਆਂ ਹੋ ਗੀਆਂ ਢਾਕਾਂ
ਪੰਜ ਸੱਤ ਕਰਮਾਂ ਭਰਗੀ ਖੁਸ਼ੀ ਵਿੱਚ
ਮਗਰੋਂ ਪੈਂਦੀਆਂ ਹਾਕਾਂ
ਕਰਾਂ ਅਰਜੋਈਆਂ ਮਿਲਜਾ ਪਟੋਲਿਆ
ਗੁਜ਼ਰ ਗਈਆਂ ਬਰਸਾਤਾਂ
ਨੀ ਦਿਲ ਮਿਲ ਗਿਆਂ ਤੋਂ
ਕਾਹਨੂੰ ਪਰਖਦੀ ਜਾਤਾਂ

ஷாமுகி லிபி
کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں

குருமுகி - குருமொழி
ஷாமுகி - அரசமொழி


*

வர்ரட்டா?
இன்னம்பூரான்
16 03 2012
Inline image 1
உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Mar 16, 2012 at 8:05 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

வர்ரட்டா?
இன்னம்பூரான்//

தினம் தினம் வந்து இது போன்ற அரிய தகவல்களைத் தரவேண்டும்.

On Fri, Mar 16, 2012 at 12:01 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 16
பிழிந்தெடுத்த மொழி

கி.காளைராசன் Fri, Mar 16, 2012 at 3:44 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம் 

2012/3/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நூறு வருடங்களுக்கு மேலாக அந்தக்கடை, இன்றும் இயங்கிவருவதாக, விக்கிப்பீடியா கூறுகிறது. 
மொழிகள் பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து வரும் இந்நேரத்தில் அரியதொரு வரலாற்றுத் தகவலை வழங்கியதற்கு நன்றி ஐயா.
இதெல்லாம் நீங்கள் சொல்லித்தான் அறிந்து கொள்கிறோம்.

அன்பன்
கி. காளைராசன்


DEV RAJ Fri, Mar 16, 2012 at 5:01 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
இன்னம்பர் ஐயா இண்டு இடுக்குகளில்
நுழைந்து செய்தி திரட்டுகிறார்;
உலகில் 7,358 மொழிகள் தற்போது உள்ளதாகவும்
அவற்றில் 90%, 2050க்குள் அழிந்து விடும்
என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
யூதர்கள் பரிசிரமப்பட்டுத்  தம்
தாயகத்தையும், தாய் மொழியையும்
மீட்டுப் பேணுகின்றனர்


தேவ்

On Mar 15, 11:31 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
> கள்ளக்கடத்தல் தினம்‘(*Knygnešio diena*) கொண்டாடப்படுகிறது.
>

Friday, March 15, 2013

பாதாளக்கரண்டி


பாதாளக்கரண்டி
Published January 10, 2012 | page1image1504By இன்னம்பூரான்
page1image1736 page1image1904
இன்னம்பூரான்
page1image2512
அம்புலு மாமி ஊரிலேய பெரிய பிஸினஸ் புள்ளி. அம்பானியும், பிர்லாவும், டாடாவும் அவளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது அக்ரஹாரத்து ஆண்களின் அைசயா கருத்து. உள்ளூரக் குைமஞ்சாலும், அவாளுக்கு அதில் ஒரு திருப்தியும் உண்டு. ஆனா பின்ன இல்ைலயா? ெபரிய பண்ைண கனகசைபயிடேம கறாராகக் கந்து வட்டி வாங்கியவளாச்ேச. அவர் கருவிண்ேட போனார். என்ன ெசய்ய முடிஞ்சது? துட்டு போட்டு புரட்டறா. சரி. அெதன்ன பால் வியாபாரம் ேவேற? பத்து எருைம கறக்கறது. ஏழு சீைமப்பசு ேவேற. இவ இன்னும் ஆட்ைட கறக்கேல, ஒட்டகத்ைத கறக்கெல என்று ைகயாலாகாத ைதயூ கூட முணமுணப்பாள். ‘நீ போய் அவ கிட்ட புலிப்பால் ேகளுஎன்று சொல்லி விட்டு, ஏதோ என்.எஸ்.கிருஷ்ணன் ஜோக் அடிச்சுட்ட மாதிரி, கிளு கிளுன்னு சிரிச்ச புருஷன்காரன் சீமாச்சுைவ பாத்து அவ ஒரு முைறப்பு முறச்சாப்பாருங்கோ, அது பிள்ைளப்பூச்சி மாதிரி திைகச்சு நின்னுடுத்து. அன்னண்ைட, இன்னண்ைட நகரல்ைல. பின்ன என்ன நீங்கேள சொல்லுங்கோ. யாராவது மண்ைடெய போட்டாத்தான் அந்தச் சவுண்டி பிராமணனுக்கு நாலு காசு கிைடக்கும். அைதயும் மூணு சீட்டி விைளயாடித் தொலச்சுட்டு வந்து நிக்கும், ேபஸ்து அடிச்சாப் போல. அவன் மூஞ்சிேல அடிச்ச மாதிரி, இத்தைன மாட்ைட எப்படி இந்த அம்புலு மாமி ஒண்டிக்கட்ைடயா ேமய்க்கிறாள்? அைதக் ேகளும். சொல்ேறன்.
ேமலத்ெதரு பழனி இருக்காேன. அவன் ஒரு சண்டியர், மினி ரவுடி. அவன் கிட்ட ஒரு நோஞ்சான் பசு இருக்கு. ேவளாேவைளக்குக் கறக்கேலன்னா துடிச்சுப் போய்டும். அப்படி ஒரு அமுதசுரபி மடி! கனத்துப் போய்டும். பிச்ைசக்கோனார் அங்ேக கூட, என்ன சொன்னாலும், ேநரத்துக்கு போக மாட்டார். ரொம்ப ேபசினா, ‘கூவாேத, பழனிஎன்பதோடு சரி. அடங்கிப் போய்டுவான். அப்படி ஒரு ெபர்சனாலிட்டி! ஆனால், அம்புலு மாமி கிட்ேட தொைட நடுக்கம். பதிேனழு மாட்ைடயும் கறக்கறது மட்டுமில்லாமல், தீனி போடறது, சிைன மாட்ைடப் பராமரிக்கிறது, தொழுவத்ைதச் சுத்தம் பண்ணி, ேமய்ச்சலுக்குக் கூட்டிண்டு போய், ஹோட்டலுக்கு பால் சப்ைள எல்லாம் ஸப்ஜாடா பண்றாேர, ேவளா ேவைளக்குப், பசங்கைளயும் கூட்டீண்டு வந்து. விடிகாைலயில் காராம்பசுைவ கோயிலுக்கு ஓட்டிண்டு போறது, அவருைடய நாலாவது பிள்ைள, வாண்டு
கோவாலு. இத்தைனக்கும் மாமி கிட்ட அப்பப்ப அர்ச்சைன கிைடக்கும். அம்புலு மாமி ைக தாராளம் தான். ஆனா வாய் அதுக்கு ேமேல. ஆறு வருஷமா நடக்கறது. அவா இரண்டு ேபருக்கும் தொழில் உடன்பாடு வந்த விதம் ேகளுங்கோ. ேசர்ந்த புதுசிேல, ஒழுங்கா சொல்லிட்டு, காலம்பற மாடு எல்லாத்ைதயும் ஓட்டிண்டு போன பிச்ைச, கொல்ைலப்பக்கத் தட்டிக்கதைவ ஆட்டிப்பிட்டு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது!’ அப்டீன்னு சொல்லிட்டு, நைடையக் கட்டிப்பிட்டான், சாயரைக்ஷயில். மாமி தான், ேமல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க, பதிேனைழயும் தொழுவத்திேல கட்டிப்பிட்டு, தண்ணி காமிச்சுட்டு, வந்தா. மறு நாள் காைலயில் வந்தால், எல்லா மாடும் குளிச்சுட்டு நிக்கறதுகள். பால் கறந்தாச்சு. மாமி சொன்னைத கோனார் எங்கிட்ட சொன்னார். இல்லாட்டா, எனக்கு எப்படி ெதரியும்?
பிச்ைச! ேகட்டுக்கோ. நீ காணாமப் போய்ட்ேட, சரி, ஒரு ேபச்சுக்கு சொல்ேறன், ெசத்துப் போய்ட்ேட. சூரியன் அஸ்தமிச்சுடாது. அம்புலுவொட தொழுவமும் அழிஞ்சுடாது. நீ யாருடா என்ைன பாப்பாத்திங்கறது? மரியாைத கொடுத்து நீங்கன்னு தாேன கூப்டேறன். அது உன்னோைட தொழிைல மதிச்சு. அது கிருஷ்ண பகவானோட தொழில். ஆமாம். இரண்டாம் தடைவ சொல்ல மாட்ேடன். மாட்ைட எல்லாம் தொழுவத்திேல கட்டி, தண்ணி காமிச்சுட்டுத்தான் போகணும். இஷ்டமில்ெலன்னா, இப்பேவ கணக்கு தீத்துப்பிடலாம்.’ இதுக்ெகல்லாம் பின்னாேல ஒரு சூக்ஷ்மம் இருக்கு. அப்றம் சொல்ேறன்.
சீட்டுப் பிடிக்கறா பாருங்கோ. இந்த முகம்மது யூனஸ் இவ கிட்ட மாேனஜ்ெமண்ட் பிச்ைச வாங்கணும், ஸ்வாமி! இதுவும் அஞ்சு வருஷமா நடக்கறது. இன்னிக்கி ரிஸர்வ் வங்கிைய வந்து சர்ப்ைரஸ் ஆடிட் பண்ணச்சொல்லுங்கோ. சர்ப்ைரஸ் என்ன சர்ப்ைரஸ்? ப்ைரஸ் கொடுத்துருவா.
நாணயம்னா அது தான் அம்புலு மாமி. ைக சுத்தம், வாய் சுத்தம். மனசு சுத்தம். அைதச் சொல்லுங்கோ. பூங்குடி ெபண்ணினேம அவளுைடய கண்ணைசவுக்கு அடிைம. அவர்களுக்கு ஜீவித நிர்மாதா மாமி தான். ைதயூ கூட, மனசு விட்டு அம்புலு மாமி புகழ் பாடுவாள். அப்படி ஒரு ஆபத்பாந்தவி, மாமி. கவைலப்படாமல் கடன் கொடுப்பாள். சீட்டு விதிகளுக்கு உட்பட்ட வட்டி, கமிஷன். வசூல் நூத்துக்கு நூறு. ரகஸ்யம் ெதரியுமா? அம்புலுனா ராஜாங்கம் தான். வச்சுது சட்டம். ஆனால். சீட்டு நிர்வாகத்துக்கு ஒரு கமிட்டி. எல்லாம் பொண்டுகள். ேசமிப்பு, கடன், வட்டி, வசூல் எல்லாம் கமிட்டியின் பொறுப்பு. மாமி ெவறும் ஆலோசகர். அதான் ரகஸ்யம். சொரைண இருக்கோல்யோ பொண்டுகளுக்கு. நோ மிஷ்ேடக்!
page3image544
காசு பணம் கொடுக்கும் சமய சஞ்சீவி மட்டுமில்ைல. பூங்குடியின் கைல ஆர்வத்துக்கு அம்புலு மாமி கொடுத்த புத்துயிர் பற்றி ேபசணும். சின்ன பசங்க எல்லாம் அத்தைன அழகாக் கூைட பின்னும். பனங்காடோல்லியோ! ஓைலக்குப் பஞ்சமா? கல்யாணம் மாமாவோட பிள்ைள பஞ்சு அெமரிக்காவில் ஏதோ ேவைல. லீவுக்கு வந்த போது, மாமிைய பாத்துட்டு வந்தான். அவன் கிட்ட ஒரு வார்த்ைத போட்டு ைவத்தாள். இதுக்ெகல்லாம் அங்ேக கிராக்கி இருக்கா என்று விசாரி என்று. டிைசய்ன்லாம் அனுப்பு என்று அன்புக் கட்டைள ேவறு. அவனும் மதிச்சு பண்ணாேன. லோக்கல் ஸ்கூல் ட்ராயிங்க் மாஸ்டைர வச்சுண்டு, ஒரு ைகத்தொழில் கலாசாைலேய ஆரம்பிச்சுட்டா. நாலு வருஷத்துெல பூத்துக் குலுங்கறது, பூங்குடி. கமலப்பொண்ணின் உண்டியலும் தான். பூங்குடி முள்ளுத் ேதன்குழல் உலகபிரசித்தம். அம்பாசமுத்ரத்திேல சொல்றாளாம்: அது பூங்குடி அக்ரஹாரம் இல்ைல. முள்ளுத்ேதன்குழல் அக்ரஹாரம் என்று. அந்த அளவுக்குப் ெபண்களுக்கு விடுதைல.
எங்ேக சத்து இருக்கோ அைதச் சொல்லத்தான் ேவண்டும். அம்புலு மாமி ஒரு இன்ஸ்டிட்யூஷன். அவைள, ‘என்ைன வந்து பாருஎன்று சொல்லும் உரிைம கல்யாணம் மாமாவுக்குத்தான் இருக்கு. ஒரு நாள்: ‘என்ைன கூப்பிட்ேடளாேம, அண்ணாஎன்று போய் நின்றாள். ஒரு தட்டு நிைறய பழங்கள். விதரைண என்றால், மாமி மாமி தான். ஏதோ லோகாபிராமமாக கொஞ்சம் ேபசிக்கொண்டார்கள். ஒரு ெவள்ளிக் கூஜா நிைறய டிகிரி காஃபியுடன், சொஜ்ஜியும் பஜ்ஜியுமா எடுத்துண்டு, பார்வதி மாமியும் கலந்து கொண்டாள். ேபச்சு போற தோரைணையப் பாருங்கோ.
பார்வதி: ஏதோ இந்த பூங்குடி பரேமஸ்வரன் கிருைபயில் நன்னா இருக்ேக. அன்னிக்கு அந்தக் கடங்காரன் ராகவன் உன் சொத்ெதல்லாம் பிடுங்கிண்டு உன்ைன வீட்ைட விட்டு விரட்டின போது, இந்தப் பரேமஸ்வரைன, ‘நீ ெதய்வமா?’ என்று ேகட்ேடன். அவன் தான் உன்ைன ரக்ஷித்தான். இவாளுக்கு என்னமோ புதுசாத் தோண்றதாம். நான் தான் அம்புலுைவக் ேகளுங்கோ என்று சொன்ேனன்.
அம்புலு: அன்னிக்கு அண்ணாவும் நீங்களும் தான் எனக்கு ெபருந்ெதய்வம். அண்ணா சொன்னா எனக்கு ஆஞ்ைஞ.
கல்யாணம் மாமா, அவருக்ேக உரிய ெமன்ைமயுடன்: ஆமாம். ராகவனோட பிள்ைள சீனுவுக்கு நீ தான் ஃபீஸ் கட்றாயாேம. உனக்குத் தாராள மனசு. ஆனா, அந்த கனகசைப வந்து எங்கிட்ட ஒரு குரல் அழுதுட்டுப்போனார்.
அம்புலு: அப்பா பண்ண தப்புக்குப் பிள்ைள பிைணயா? வரச்ச, போகச்ச, சீனு முள்ளுத் ேதன்குழல் அள்ளிண்டு போறான். சூடிைகயான பிள்ைள. (சிரிக்கிறாள்.)
கல்யாணம் மாமா: அதான் சொல்ல வந்ேதன். வயக்காட்டு ேவைல இல்லாத போது, நம்ம பசங்க எல்லாரும் ஆடு புலியாட்டம் ஆடிண்டு. சோம்ேபறியா இருக்காங்க. வீட்டில் ேவறு, உன் தயவால் ெபண் விடுதைல. ஒரு வழி சொல்ேலன். ஊேர உருப்படும். ‘பூங்குடி ஆண்கள் விடுதைல இயக்கம்ஒண்ணு ஆரம்பிக்கணும். (சிரிக்கிறார்.)
அம்புலு: நாேன நிைனச்ேசன். அசரீரி மாதிரி சொல்ேறள். ஊேர நந்தவனம். எங்க பாத்தாலும் பூ குலுங்கறது. வருஷம் பூரா வருமானம். நவ திருப்பதி கோயில்களுக்கு அனுப்பிச்சாேல போதும். நீங்க சொன்னா எல்லாரும் ேகட்பார்கள். எங்க சீட்டு வங்கியில் நூறு ெபர்ெசண்ட் போனஸ் கொடுக்கப் போறோம். கைலக்டர் வருவார். முதலுக்குப் பணமும் ஆச்சு. கவர்ன்ெமண்டும் ஆதரிக்கும். உங்களுக்கும் இந்த கோயில் நிர்வாஹம் ெதரிஞ்சவா. அப்படிேய நுங்கு பதனப்படுத்தி, ஒரு வியாபாரம்.
பார்வதி (சிரிச்சிண்ேட) டீல்!
இந்தச் சமயம் பார்த்து, சீனு வரான், ‘ெபரியம்மா! கிணத்திெல தோண்டி விழுந்துடுத்து. உங்காத்திேல போய் பாதாளக் கரண்டி எடுத்துக்கவா? ஏதாவது பாத்திரத்ைத பர்த்தியா வச்சுட்டு எடுத்துண்டு போ.’ ( இது கிராம வழக்கம். பாதாளக் கரண்டி சில வீடுகளில் தான் இருக்கும். கிணற்றில் விழுந்த சாமான்கைள எடுத் தபின், திருப்பிக் கொடுக்க மறக்கக் கூடாது என்பதற்கு இந்த ஏற்பாடு.)
page4image11112
கல்யாணம் மாமா: ஒரு ஆண்பிள்ைளயால் இப்படி கறார் பண்ண முடியாது. நீ தான் பிசினஸ் ெசய்ய லாயக்கு.
கதை முடியப் போறது. கொஞ்சம் முன் கதை. அம்புலுக்கும் மணவாளனுக்கும் பதிைனந்து வருஷம் முன்னாெல கல்யாணம். ஆறு வருஷம் முன்னாேல அஞ்சு நாள் ஜுரத்திெல மணவாளன் போய்ட்டான். குஞ்சு குளவான் இல்ைல. அவனுைடய தம்பி ராகவன் சொத்ெதல்லாம் பிடுங்கிண்டு அவைள விரட்டி விட்டான். கல்யாணம் மாமா தான் கொஞ்சம் ஜீவனாம்சத்துக்கு ஏற்பாடு பண்ணினார். அப்றம், ‘சவாேல சமாளி தான்’. இரண்டு வருஷம் முன்னாேல ஏதோ வழக்கு. ராகவன் பூண்டியாகி, ஒடிந்து, நொடித்துப் போய்விட்டார். போக்கு வரத்து அவ்வளவாக இல்லாட்டாலும், சீனு தூது போய் வருவான்.
இந்தப் பாதாளகரண்டி சம்பவம் ஊர்ெலேய ேபச்சாயிடுத்து. எல்லாம் பிச்ைசக்கோனார் உபயம்.
கைலக்டர் வந்த தினம், நன்றி நவிலல், அவரது பொறுப்பு. அத்தைன ஜனநாயகம்! அவர் ஜாலியாக குட்ைடப் போட்டு உைடக்க, ஒேர சிரிப்பு. கைலக்டர் சொன்னாராம். மாமி எெலக்க்ஷனுக்கு நின்னா போட்டி இருக்காது என்று.
*
பிரசுரம்: வல்லைம பொங்கல் சிறப்பிதழ் 2012 http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1268/
page5image7296