Google+ Followers

Saturday, June 29, 2013

அன்றொரு நாள்: ஜூன் 30

அன்றொரு நாள்: ஜூன் 30
சித்திரத்துக்கு நன்றி:
http://www.dailygalaxy.com/photos/uncategorized/2008/03/13/meteorite_3.jpg

Innamburan Innamburan Wed, Jun 29, 2011 at 9:22 PM

அன்றொரு நாள்: ஜூன் 30

ஒவ்வொரு தினமும் முக்கிய, சுவையான நிகழ்வுகள் சிக்குவதில்லை. வரலாறு எல்லா முக்கிய, சுவையான நிகழ்வுகளையும், நாட்காட்டியில் துல்லியமாக பதிவு செய்வதும் இல்லை. எனவே, தலைப்பை ஒரு பிரமேயமாக வைத்துக்கொண்டு, லோகாபிராமமாக எழுதினால், ஆக்ஷேபனை உதயமாகாது என்று நினைக்கிறேன்.

தெரிந்தவரை, சில நிகழ்வுகள்:

1.என்ன ஆச்சு? ஜூன் 30, 1908: காலை 7:17:
குலை நடுங்கவைக்கும் ஒரு பயங்கர வெடி சப்தம், நிலநடுக்கம், கனல் வீசும் சூறாவளி, கறுத்தநிறத்தில் மாரி பெய்தது, 70 மைல்கள் விட்டமுள்ள வட்டத்தில் உள்ள கானகம் காலி, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு வீசிய பிரகாசம், சப்த நாடியும் ஒடுங்கற மாதிரி => மத்திய சைபீரியாவின் டுங்குஸ்கா பகுதியில். அது மட்டுமா? 400 மைல்களுக்கு அப்பால் இருந்த குதிரைகள் குப்புற வீழ்ந்தன. ரயில்வே தண்டவாளம் பிறழியது. கலைமான்கள் வீழ்ந்தன. தொலைவில் இருந்த வீடுகளில், வெள்ளி பாத்திரங்கள் உருகி ஓடின. இங்கிலாந்தில் கூட காற்று அழுத்தம் மாறியது? வால் நக்ஷத்ரம்? வேறுலக வாசியின் வரவு? அணுசக்தி பிரச்னை? இன்று வரை மர்மம் தான். பெரிய எரிநக்ஷத்ரம் வீழ்ந்தது என்பது பெரும்பாலோரின் கருத்து.
2.புரிகிறதோ? ஜூன் 30, 1905: 
முந்திய செய்தி பின்பு வருகிறது. உலகப்புகழ் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் இன்றைய தினம் ‘சிறப்பு சார்பியல் கோட்பாடு’ என்பதை அறிவித்து புகழாரம் சூட்டிக்கொண்டார். அது பற்றிய ஆங்கில சுருக்கத்திற்கு கூகில் மொழிபெயர்ப்பு வரவழைத்தேன். இன்னும் தலை சுற்றுகிறது. இதை சேச்சுவிடம் விட்டு விட்டு ஜகா வாங்கிக்கொள்கிறேன்.
ஆங்கில சுருக்கம் இங்கே: [‘... Special relativity (SR, also known as the special theory of relativity or STR) is the physical theory of measurement in inertial frames of reference proposed in 1905 by Albert Einstein (after the considerable and independent contributions of Hendrik Lorentz, Henri Poincaré[citation needed] and others) in the paper "On the Electrodynamics of Moving Bodies". It generalizes Galileo's principle of relativity—that all uniform motion is relative, and that there is no absolute and well-defined state of rest (no privileged reference frames)—from mechanics to all the laws of physics, including both the laws of mechanics and of electrodynamics, whatever they may be. Special relativity incorporates the principle that the speed of light is the same for all inertial observers regardless of the state of motion of the source.
This theory has a wide range of consequences which have been experimentally verified, including counter-intuitive ones such as length contraction, time dilation and relativity of simultaneity, contradicting the classical notion that the duration of the time interval between two events is equal for all observers. (On the other hand, it introduces the space-time interval, which is invariant.) Combined with other laws of physics, the two postulates of special relativity predict the equivalence of matter and energy, as expressed in the mass–energy equivalence formula E = mc2, where c is the speed of light in a vacuum. The predictions of special relativity agree well with Newtonian mechanics in their common realm of applicability, specifically in experiments in which all velocities are small compared with the speed of light. Special relativity reveals that c is not just the velocity of a certain phenomenon—namely the propagation of electromagnetic radiation (light)—but rather a fundamental feature of the way space and time are unified as spacetime. One of the consequences of the theory is that it is impossible for any particle that has rest mass to be accelerated to the speed of light...
3. கடவுளை அடைவது எப்படி? ஜூன் 30, 1968: 
இந்த நுட்பமான விஷயத்தை பற்றி, ஒரு முக்கியமான பிரகடனம். வினை தீர்த்தான் ஐயா கேட்டால் பாத்துக்கலாம், என்று இப்போதைக்கு மேலும் பேசவில்லை. தயக்கம். பெரிய இடத்து சமாச்சாரம்.
4.லோகாபிராமமாக...: 
வரலாற்றின் மடல்களை புரட்ட, புரட்ட, அருமையான செய்திகள் கிடைக்கின்றன. நினைவலைகள் கரையை முத்தமிட்ட வண்ணம். அவற்றை பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் பெருக, பெருக, பகிர்ந்ததின் பயனை அறிய அவா கூடுகிறது. எனக்கு என்று நான் அமைத்துக்கொண்ட இலக்கு: மினு மஸானி எழுதிய ‘என் இந்தியா’; நானி பால்கிவாலா எழுதிய, ‘மக்களாகிய நாம்.’; திரு.வி.க. அவர்களின் தமிழார்வம், மஹாகவி பாரதியின் தேசாபிமானம் இத்யாதி. அவற்றில் பிரபஞ்சம் பிரதக்ஷிணம் செய்யும்; உலகு உலவி வரும்; இந்தியன் பீடு நடை போடுவான். தமிழன் தலை நிமிர்ந்து நடப்பான். அங்குமிங்குமாக இன்னம்பூர் முத்திரையும் இருக்கலாம். யார் வேண்டுமானாலும் குறுக்கே பேசலாம். வினா எழுப்பினால், விடை கிடைக்கும். கருத்துக்கள் நன்றியுடன் வரவேற்கப்படும். ஒரு விண்ணப்பம். யாரையும் கடுமையாக விமரிசக்காதீர்கள். தாக்குதல்கள் வேண்டாம். தாக்குப் பிடிக்க முடியாது, என் மென்மையான அணுகுமுறையால். மின் தமிழின்/ தமிழ் வாசலின் மரபு போற்றவும். எல்லாரும்ே தாராளமாக பேசவேண்டும்.பேச்சுரிமைக்கு மதிப்பு உண்டு. அப்போது தான் இழை களை கட்டும். பயன் கூடும். 
ஜூலை 1ம்தேதியிலிருந்து, இந்த இழையின் அமைப்பை சற்றே மாற்றி அமைப்பதாக உத்தேசம். வசதி எப்படி?
இன்னம்பூரான்
30 06 2011

செல்வன் 
தொடருங்கள்...ஒவ்வொரு நாளும் நடந்ததை எழுதுவதை விட வரலாற்றில் உங்களுக்கு முக்கியமாக படும் சம்பவங்களை எழுதினால் சுவாரசியம் மிகும். இந்த பார்மேட் படி ரஜினி பிறந்த நாளை டிசம்பர் 12ல் தான் எழுதுவீர்கள்.அதுவரை வெயிட் செய்ய முடியுமா?:-)
_________________________________________________
செல்வன் சொல்வது நியாயம் தான். என்னால் முடிந்தது இதுமட்டுமே, ஒவ்வோரு நாளும்.
இன்னம்பூரான்
30 06 2013

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~2
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~2

Innamburan S.Soundararajan Sat, Jun 29, 2013 at 3:33 PM


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - 2

பசுமரத்தாணி என்ற இந்த கட்டுரையை ஏதோ ஒரு வேகத்தில் ஃபெப்ரவரி 27, 2012 அன்று நேசம் என்ற அமைப்புக்கு அனுப்பினேன். 

அவர்கள் தொடர்பு கொள்ளாததால், மறந்தும் விட்டேன். இன்று தற்செயலாக அது கண்ணில் தென்பட்டது. 

ரூ.1000/- உள்ள நூல்கள் பரிசு என்று சொல்லப்பட்டது. 

இன்னம்பூரான்

29 06 2013

*********************************************************

MONDAY, 27 FEBRUARY 2012

பசுமரத்தாணி - நேசம் -யுடான்ஸ் கட்டுரை போட்டி‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி போல்  நினைவில்நிலைத்து நிற்கிறது. தெளிவான கருத்து. மரபு அணுவிலிருந்து சுற்றுப்புற சூழல் வரை, பல காரணிகளால், நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வைத்தியரிடம் போவதற்கு முன்னால், நோய் நம்மை அண்டவிடாமல் தடுத்தாட்கொள்வது சாலவும் நன்று. அத்தகைய ‘வருமுன் காப்போன்’ செயல்பாடுகளுக்கு, விழிப்புணர்வு பெரிதும் உதவும். இந்த சிறிய கட்டுரை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், சிகிச்சை, தொடர் சிகிச்சை, வாழ்வியல் உத்திகள், அனுபவம் மற்றும் சமுதாய கோட்பாடு ஆகியவைபற்றி மட்டும் ஒரு அறிமுகம் தருகிறது.

விழிப்புணர்வு:
தொட்டதெல்லாம் ஒட்டிக்கொள்வதில்லை. புற்றுநோய் தொத்துவியாதி அல்ல. அதற்கு நிவாரணமே இல்லை என்று நிலவும் கருத்தும் தவறு. எதிர்பாராத வகையில், அதனுடைய தாக்கம் ஏற்படலாம் என்பதையும் மறுக்க இயலாது. இந்த கட்டுரையின் அடித்தளம்: அனுபவம், தன்னார்வப்பணி, ஆய்வு தளங்கள்.
சில புற்றுநோய் எச்சரிக்கைகள் யாவருக்கும் புரியும்; பெரிதும் உதவும். அவரவர்கள் கவனித்துக்கொள்ள இயலும். அவற்றை பற்றிய விழிப்புணர்வு இன்றியமையாதது. அவையாவன:
 1. ஓயாத இருமல்/ கம்மிய குரல்;
 2. நீண்டகாலமாக ஆறாத புண்கள்;
 3. உடலில் இனம் புரியாத வீக்கம்/தடிப்பு/கட்டி
 4. புது மச்சம்/ இருக்கும் மச்சத்தில் மாற்றங்கள்;
 5. நெடுநாள் அஜீரணம்/ விழுங்குவதில் இன்னல்;
 6. மலம்/சிறுநீர் கழிப்பதில் புதிய இன்னல்கள்;
 7. உடல் எடையில் திடீர் மாற்றம்;
 8. அதிகப்படி உதிரப்போக்கு/கசிவு;
 9. வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத வலி.
மருத்துவரை அணுக, இந்த எச்சரிக்கைகள் உதவும். குறிப்பு வைத்துக்கொள்வது நலம். மேலும், சில தகவல்கள் நம் யாவருக்கும் தெரிய வேண்டும். புற்றுநோய் என்பது ஒரே ஒரு வியாதி அல்ல. அதற்கு, வயது ஒரு பொருட்டல்ல. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு: உடலில் எந்த பாகத்திலும் ~ மூளையிலிருந்து உள்ளங்கால் வரை~பாதிப்பு ஏற்படலாம். காரணிகள் பல. சுருங்கச்சொல்லின், வாழ்நாள் முழுதும், நமது உடலில் கோடிக்கணக்கான கலங்கள் (cells) பிறந்தும், மறைந்த வண்ணமாக இருக்கின்றன. அதற்கு திறன் மிகுந்த இயற்கை கட்டுப்பாடு உண்டு. தவறி, அந்த செயல் தாறுமாறாக இயங்கி கலங்கள் விகாரமாக பிரிந்தால், புற்றுநோய் வரும் அபாயமும், விகாரம் விரைவில் தீவரமாவதும் கவலை தரும் விளைவுகள். மருத்துவரிடம் சென்று, தேவையான சோதனைகளை செய்து கொள்வது நலம். அதற்கு முன்னால், தடுப்பதை பற்றி ஒரு பார்வை.
தடுப்புமுறைகள்:
புற்றுநோய் மட்டுமல்ல, இருதயநோய், நுரையீரல் நோய், ரத்த அழுத்தம் போன்ற பற்பல நோய்களை தவிர்க்க, சில வாழ்வியல் நடைமுறைகள் என்றும் உதவும். அவை: புகையிலை விலக்குதல், உகந்த உடற்பயிற்சி, திட்டமிட்ட உணவு முறை. சமுதாயம் செய்யவேண்டிய ‘வருமுன் காப்போன்’, ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய் கண்டறிதல் சோதனை.  சமுதாய ‘புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறையும், கோட்பாடும், செயல்முறைகளும்’ இன்றியமையாதவை. கட்டுரை முடிவில் அவற்றை பற்றி பேசப்படும். 
சிகிச்சை:
பரிசோதனைகளுக்கு, புற்றுநோய் சிகிச்சையில் முக்கியத்துவம் அதிகம். இரத்த சோதனைகளுக்கு முதலிடம். கலங்களின் ஆரோக்கியத்தை அறியவும், புற்றுநோய் அறிகுறிகளை தனிமைப்படுத்தி, இனம் காணவும், இவை தேவை. மேலும், சதை, தசை, எலும்பு போன்றவற்றை பரிசோதிக்க வேண்டியிருக்கலாம். கதிர் (எக்ஸ்ரே), வருடி (சீ.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பி.ஈ.டி. ஸ்கேன்), குழாய் மூலம் சிறுகுடல் போன்ற உள்ளுறுப்புகளை படம் பிடித்து சோதிப்பது (எண்டோஸ்கோபி) என்று பல வகை சோதனைகள் உண்டு, அவை எல்லாவற்றையும் அடிக்கடி செய்ய நேரிடும் என்ற அளவுக்கு மட்டும், அறிமுகம் இங்கே. அவற்றால் விளையும் வலி, இன்னல், செலவு எல்லாம் தவிர்க்கமுடியாதவை. சிகிச்சையே, பரிசோதனைகளை பொறுத்து அமைகிறது. என் செய்வது?
பொதுவாக சிகிச்சையின் நான்கு பிரிவுகளை அறிமுகப்படுத்தலாம். 
 1. அறுவை சிகிச்சை: விகாரமான கலங்கள் மேலும் பரவாமல் இருக்க, அந்தந்த உறுப்புகள் களையப்படவேண்டும். 
 2. கதிர் இயக்க சிகிச்சை, அதி முக்யமாக கோபால்ட் இயக்க சிகிச்சை: க்யீரி அம்மையாருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவருடைய கண்டுபிடிப்பால், பிழைத்தவர்களின் எண்ணிக்கை, கணக்கில் அடங்கா. இந்த கதிர்களால் விகாரப்பட்டுப்போன கலங்களை, குறி வைத்து, சுட்டழித்து விடுகிறார்கள்.
 3. வேதி மருத்துவம்: பல வருடங்கள் சிகிச்சை அனுபவமும், இடை விடாத ஆய்வு முடிபுகளும் தான் வேதி மருத்துவத்திற்கு அடித்தளம். உதாரணமாக மார்பக புற்றுநோய் மருந்தாக மூன்று நச்சு மருந்துகளின் கலவை (melphalan, sodium metatroxide & 5FU) பயன்பட்டது. இம்மாதிரி பல கலவைகள் உண்டு. அவை யாவற்றிற்கும் தீவிரமான பக்கவிளைவுகள் உண்டு. மருத்துவர் அறிவுரையை அறவே கடைபிடிக்கவேண்டும் என்பது தான், முக்கிய அறிமுகம்.
இவை மூன்றும் கலந்தும், தனித்தும் அளிக்கப்படலாம். அடிக்கடி அவற்றின் முறை (protocol) மாற்றப்படலாம்.
 1. புற்றுநோய் திரும்பி வரக்கூடியது என்பதால், ஆண்/பெண்பாலாருக்கு இயல்பாகவே உள்ள ஹார்மோன் சுரப்பிகளின் திறனை சற்றே மாற்றியமைத்து, வருமுன் காப்போனாக இயங்கும் இந்த சிகிச்சை முறை, மருத்துவ ஆலோசனையை பொறுத்து, உதவும்.
தொடர் சிகிச்சை:
கலங்களின் விகாரம் தான் புற்றுநோயின் அடிப்படைக்காரணம் என்பதால், அந்த நோயை அறவே ஒழித்ததாக என்றுமே சொல்ல இயலாது. தொடர் சிகிச்சை ஒன்று தான் வழி. ஒரு காலகட்டத்திற்கு, வாழ்நாள் முழுதும், வருடம் ஒரு முறை தவறாமல் மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வது விவேகம்.
வாழ்வியல் உத்திகள்:
அச்சம் தவிர். கவலையற்க. பணிகளை தொடருக. மற்றவருடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, விழிப்புணர்வு அளிப்பது, நமக்கே டானிக் கொடுத்த மாதிரி. உடற்பயிற்சி, ஆகார நியமங்கள், அன்றாட வாழ்க்கையில் ஆர்வம், தியானம் ஆகியவை உதவும். புற்றுநோய் நண்பர்கள் என்று குழுக்கள் ஆக்கப்பூர்வமாக இயங்குகின்றன.
அனுபவம் பேசுவது: 
ஒரு மார்பக புற்று நோயாளி முற்றும் குணமடைந்தார். அறிகுறி ஐயம் ஏற்பட்டவுடனே சிகிச்சையும், முப்பது வருட தொடர் சிகிச்சையும் உதவியது. காலபோக்கில் பல முன்னேற்றங்கள். தற்செயலாக, தாடையில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டவர் ஒருவருக்கு, வேதி மருத்துவம் உடனுக்குடன் கை கொடுத்தது. ஒரு நோயாளி மிகவும் கவலைக்குட்படுத்தப்பட்டார், ஒரு பணத்தாசை பிடித்த மருத்துவரால். ஒரு பிரபல புற்றுநோய் தர்ம ஆஸ்பத்திரி, அவருக்கு புற்று நோய் இல்லை என்று நிரூபித்து விட்டது! மருத்துவரை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது!
சமுதாய புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறையும், கோட்பாடும், செயல்முறைகளும்:
புற்றுநோய் உயிர் பறிக்கும் வலிமை உடையது. தனிமனிதர்களால் தாக்குப்பிடிப்பது கடினம். செலவு அபரிமிதம். எனவே, சமுதாயமும், அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதன் கொடுமையை தணிக்கவேண்டும். வள்ளல்களின் நன்கொடை பெரிதும் உதவும். காப்பீடு திட்டங்கள் அவசியம் வேண்டும். அரசு பெரிய அளவில் மேற்பார்வை செய்வதுடன், ஸ்க்ரீனிங்க் திட்டங்களை, தேவையை பொறுத்து, செயல் படுத்தவேண்டும். பெண்பாலாருக்கு மார்பக ஸ்க்ரீனிங்க் நன்மை தரும். அந்த அளவுக்கு, வயது முதிர்ந்த ஆண்களுக்கு சிறுநீர் தடை ஸ்க்ரீனிங்க் தேவை இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிட முடியும்..
சுட்டிகள், ஆதாரங்கள் விவரம்:
இந்த கட்டுரையின் ஆதாரம், சுய அனுபவமும். கீழே சுட்டியுள்ள இரு இணைய தளங்களும். அதற்கெல்லாம் மேலாக, 28 01 2012 அன்று, மாக்மில்லன் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையத்தின் சுவரொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட தன்னார்வ படிப்பினைகள்.
உசாத்துணை:


குறிப்பு : இந்தக்கட்டுரை திரு.இன்னம்பூரான் அவர்களுடையது. 
0likes

Friday, June 28, 2013

தட் தடா...அப்டேட்

அப்டேட் 2:(3)

அப்டேட் 1:(1) & (2)
இன்னம்பூரான்
30 6 2013

தட் தடா...

Innamburan S.Soundararajan Fri, Jun 28, 2013 at 7:33 PM


தட் தடா...
Inline image 1
(1)
‘என் பிராணநாதருக்கு,
கல்யாணம் ஆன பிறகு தலை தீபாவளிக்கு வந்தீர்கள். அப்றம் வரவேயில்லை. இரண்டு வருஷமாயிடுத்து. எல்லாரும் ஒரு மாதிரியா பேசறா. அப்பா குனிஞ்ச தலை நிமிரல்லே. அம்மா அழறா. என்னை தூத்தறா. சுப்புணி உங்கள் ஜாடை, அப்டியே. அப்பா எங்கேன்னு கேக்றான். எனக்கு பிராணனை விட்றுணும் போல இருக்கு.
தந்தி போல் பாவித்து, உடனே பதில் போடுங்கோ. வாங்கோ.
உங்கள் பாதாரவிந்தங்களில் விழுந்து சேவிக்கும்,
அடியாள்
Thaiyoo
தேதி: 15 ஜூலை 1923
(2)
கணக்குப்பிள்ளை கொல்லை (.) அரசு புறம்போக்கு மரம் வெட்டி (.) என்கொயர் ப்ளீஸ்.
[சப்-கலைக்டருக்கு ‘ப்ரோ போனோ பப்ளிக்கோ’ அனுப்பிய எக்ஸ்ப்ரெஸ் தந்தி.]
தேதி: 15 ஜூலை 1933
(3)
உடனே தந்தி மணியார்டரில் நூறு ரூபாய் அனுப்புங்கோ, அப்பா. ஏழு நாளா பட்னி.
தேதி: 15 ஜூலை 1943
(4) 
எஸ்.எஸ். எல்.சி. பாஸ் பண்ணிட்டே. பொண் பார்க்க வா. நோ சால்ஜாப்பு
அப்பா ரகுவுக்கு.
தேதி: 15 ஜூலை 1953
(5)
யூ ஹேவ் பீன் அல்லாட்டட் டு ஐ ஏ ஏ எஸ்.
தப்பு விலாசத்துக்குத் துரைத்தனத்தார் தந்தி. அதுவும் எட்டுமாசத்து சிசுவைப்போல, அவசரக்குடுக்கையாக.
[தேதி எதுக்கு சார்?]
(6)
‘திரு. வேலாயுதம்’ போலி காங்கிரஸ். டிஸ்மிஸ் ஹிம். 
387 கத்திரிக்காய் பேட்டை வாசிகள், பிரதமருக்கு/நகல்: முதல்வர்.
தேதி: 15 ஜூலை 1963
(7) யூ ஹேவ் பீன் ட்ரான்ஸ்ஃபெர்ர்ட் டு கடலூர். நோ ஜாயினிங் டைம்.
அரசாணை
தேதி: 15 ஜூலை 1973 
(8) எட்டி ஃபாய், சினிமா நடிகர் காலி.
ராய்ட்டர் தந்தி
தேதி: 15 ஜூலை 1983
(9)
இன்னாசி பத்து லக்ஷம் லஞ்சம் வாங்கினான்.
பன்னாடை ஜனாதிபதிக்குத் தந்தி: நகல்: தலைமை நீதிபதி, உச்ச நீதி மன்றம், ஆடிட்டர் ஜெனெரல்.
தேதி: 15 ஜூலை 1993
(10) மேட்டூர் அணை திறக்கவும். (.) திறக்காவிட்டால், தண்ணி இல்லாவிட்டால் கூட(.) நீர்த்தேக்கத்தில் குதித்து செத்துப்போவோம் (.)
15873 விவசாயிகள்
தேதி: 15 ஜூலை 2003
(11) பீ எம் ஜீ கடைசி தந்தி அனுப்பி விட்டார். இனிமேல் நோ சர்வீஸ்.
அன்பார்ந்த நேயர்களே,
இந்தியாவில் தந்தி அனுப்புவது ஜூலை 15லிருந்து நின்றுவிடும். எப்படியும் காலையில் எனக்கே நான் தந்தி அனுப்பி ஆவணப்படுத்துவேன். அதற்காக இந்தியா போகிறேன்.
மேற்படி தந்திகள் நிசம். முதல் ஐட்டெம் கடுதாசு.
யாராவது கேட்டால், பொழிப்புரை தரப்படும். 15 ஜூலை வரை கெடு..
Innamburan to Networking friends. 
Ask (.) More on wire (.) Not ask (.) Less on letters also.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

------------------------------------------------------------------------------

பிராணனை வாங்கிய பிராணநாதனுக்கு இப்பெண்ணின் அழும் குரல் கேட்டதோ இல்லையோ.. எழுத்திலேயே வாசிப்போர் உள்ளம் கலங்கி விடுகின்றது.

சுபா
Innamburan S.Soundararajan 
9:44 PM (21 hours ago)


to mintamilSubashinime, bcc: innamburan88
பிராணனை வாங்கிய பிராணநாதனுக்கு இப்பெண்ணின் அழும் குரல் கேட்டதோ இல்லையோ.. எழுத்திலேயே வாசிப்போர் உள்ளம் கலங்கி விடுகின்றது.

சுபா
*
நம்பினால் நம்புங்கோ. இல்லையெனில் வேண்டாம். ஒரு நிமிட கற்பனையில் எழுதியிருந்தாலும், மனம் குமைந்தது. ஏனெனில் பல நிஜமான  தையூக்கள் உள்ளுறை. மஹா கனம் பொருந்திய வீ.எஸ். ஶ்ரீனிவாச சாஸ்திரிகளின் இராமயண பிரவசனங்கள் புகழ் பெற்றவை. அவருடைய ஆங்கில உச்சரிப்பு இங்கிலாந்து பிரதமர் க்ளேட்ஸன் போல என்பார்கள். அவர் எழுதிய கதை ஒன்றில் தட்டானுடன் ஓடி போய்விடுகிறாள், தையூ. அங்கிருந்து பெயர் மட்டும் இரவல். பிராமண சமூகங்களில் விதவைக்குக் கிடைக்கும் மரியாதை கூட வாழாவெட்டி க்கு(புருஷனால் தள்ளிவைக்கப்பட்டவள்) கிடைக்காது. தையூ என்ற பெயரை இருக்கட்டும். என் சிறு வயதில் ஒரு வாழாவெட்டியை (30 வயது இருக்கலாம்.) எனக்குத் தெரியும். அவளுடைய குடிகார மண்ணாங்கட்டி புருஷனையும் தெரியும். அவன் திருமணத்துக்கு முன்னும், பின்னும்,மற்றொரு பெண்ணுடன் வேறு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். சமுதாயம் அவனை ஒதுக்கி வைக்கவில்லை. தையூவை அவமதித்தினர். ஒதுக்கினர். அலர் பரப்பினர். அவள் அண்ணன் வீட்டில் அடைந்து கிடப்பாள். அங்கு வேறு ஏச்சு/பேச்சு. என் கையில் காலணா தான் இருந்தது. ஒரு கார்டு வாங்கிகொடுக்கக்கூடிய ஐவேஜு. அந்த கடிதத்தை ( அவள் எழுதியது எல்லாம் சொல்லமாட்டேன்.) போஸ்ட் கார்டில் பென்சிலால் எழுதி, நான் தபால் பெட்டியில் போட்டேன். என்னை வாசிக்கச்சொன்னாள். ஏன் தெரியுமா? ‘சுப்புணி உங்கள் ஜாடை’ என்பதால் அவனுக்கு கோபம் வருமா என்று ஒரு சிறுவனை கேட்கிறாள்! பிராணனை வாங்கிய பிராணநாதனுக்கு இப்பெண்ணின் அழும் குரல் கேட்கவில்லை.

ஆள் மாறாட்டம் செய்வதால், 1941 நிகழ்வை 1958க்குக் கொண்டு போகிறேன். இந்த தையூவின் கணவனும், இரண்டாவது மனைவியும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அவள் தான் முதலில் என்னிடம் குட்டை உடைத்தாள். எவ்வளவு சொல்லியும் இருவரும் நெருக்கத்தைத் தவிர்க்க வில்லை.  இது மூன்றாவது தையூ. அவள் கிராமத்துப்பெண். வெள்ளந்தி. ஏழை. அவன் மத்திய வர்க்கம்.  ஒரு நாள் அவனிடன் ‘ஊருக்கு போனாயே. தையூவுடன் உறவு கொண்டாயா? என்று கேட்டேன். அந்த கழுதை சொல்லுது,‘அவள் தான் வாழாவெட்டியாச்சே. நான் என்ன செய்தாலும் கேட்டுத்தானே ஆகவேண்டும்.’ அவளுடைய பிரார்த்தனைகளை உதறி தள்ளிய அவன், அவற்றை என்னிடம் சொன்னான்.  அவளும் அல்பாயுசில் மாண்டாள். இது என் மனதை பாதித்ததை தெரிந்துகொள்ளாமல், அதை மாற்றி  எழுதியிருக்கிறேன். நான் உபயோகப்படுத்த நினைத்தது, ‘தந்தி போல் பாவித்து’ மட்டும். இது அக்கால கடிதங்களில் வழக்கமான வசனம். ஆனால், தையூ வந்தது வியப்பு தான். இதற்கு மேல் எழுதுவது நியாயமில்லை. இது வரை எழுதியதும் தப்பு இல்லை.
இன்னம்பூரான்
29 06 2013
K R A Narasiah
2:20 AM (16 hours ago)


to mintamil
Original in thinking. Truthful in depicting. As it happened. Yes In my life I have heard about such real life situations!
Narasiah


2013/6/30 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Innamburan S.Soundararajan 
12:36 PM (6 hours ago)


to mintamil
நன்றி, சுபாஷிணி, திரு.நரசய்யா.


(2)

கணக்குப்பிள்ளை கொல்லை (.) அரசு புறம்போக்கு மரம் வெட்டி (.) என்கொயர் ப்ளீஸ்.

[சப்-கலைக்டருக்கு ‘ப்ரோ போனோ பப்ளிக்கோ’ அனுப்பிய எக்ஸ்ப்ரெஸ் தந்தி.]

தேதி: 15 ஜூலை 1933
*
இது நிஜம். கும்பகோணம் சப் கலைக்டர் பிற்காலம் யூபீஎஸ்சி தலைவராக இருந்த வி.எஸ். ஹெஜ்மாடி. கன்னடத்துக்காரர். என் தாத்தா (ஒரிஜினல் இன்னம்பூரான்) பட்டாமணியம். வச்சது சட்டம். தொழில் முறையில் அவருக்கும் கணக்குப்பிள்ளைக்கும் கீரி-சர்ப்பம் உறவு. 'தட் தடா' வென்று மோட்டார் சைகிளில் வந்து இறங்கினார். ஹெஜ்மாடி. மரத்தை காணும்! தந்தி குமாஸ்தா கணக்குப்பிள்ளையிடம் சொல்லி விட, அவர் சமாதான புறாவுடன் தாத்தாவை சரிக்கட்டினார். ஏமாந்தது சப்.கலைக்டர். விசாரணையில் தந்தி அடித்தது என் தாத்தா என்று தெரிந்த போது, ஹெஜ்மாடி சிரித்துக்கொண்டாராம்.
இன்னம்பூரான்
30 06 2013

(3)
உடனே தந்தி மணியார்டரில் நூறு ரூபாய் அனுப்புங்கோ, அப்பா. ஏழு நாளா பட்னி.
தேதி: 15 ஜூலை 1943
***
இது நான் என் அப்பாவுக்கு அனுப்ப நினைத்து அனுப்பாத தந்தி. ஆம். அவரும் ஒரு வேளை பட்டினி. நானும் ஒருவேளை பட்டினி. 'படிப்பு தான் முக்கியம்' குடும்பம். வேறு யாரோ சொல்லி, அப்பா ஒரு முறை ரூபாய் 100/ இன்ஷ்யூர்ட் கவரில் அனுப்பினார். அந்த கவரை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறேன். அக்காலம் தந்தி மூலம் பணம் அனுப்பலாம்.

இன்னம்பூரான்
01 07 2013


அன்றொரு நாள்: ஜூலை 1

UPDATE: 01 07 2013: A Tribute on his Birth Day & Remembrance day.
At the end of the article.
01 07 2013

அன்றொரு நாள்: ஜூலை 1


விஞ்ஞான உலகிலே சில அவிழ்க்கப்படாத புதிர்கள்: தொலை பேசியை கண்டு பிடித்தது தாமஸ் ஆல்வா எடிஸனா? அல்லது அலெக்ஸாண்டர் பெல்? கம்பியில்லாத்தந்தியின் தந்தை மார்க்கோனியா? அல்லது ஸர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களா? உயிரனங்களின் தோற்றம் (பரிணாம உயிரியல்) பற்றிய புகழ் வாய்ந்த ஆய்வு செய்தது சார்லஸ் டார்வினா? ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலெஸ்ஸா? ஒரே காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தனித்தனியான ஆய்வுகள் மூலம் ஒரே கூற்றை நிரூபித்ததை நாம் வியந்தாலும், இருவரும் சேர்ந்து அத்துறை மன்றமாகிய லீனியன் சொஸைட்டியின் (ஸ்தாபனம்:1788) முன் வைத்த பண்பு, (ஜூலை 1,1858) மேலும் வியப்பு அளிக்கிறது. அந்த மன்றம் டார்வின் - வாலெஸ் மெடல் ஒன்றை 50 வருடத்திற்கு ஒரு முறை (2010லிருந்து வருடம் ஒரு முறை) அளித்தது. 1908 வது வருட தங்கமெடல் வாலெஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்டது, தனிச்சிறப்பு. வெள்ளி மெடல் பெற்றவர்களில் இருவரை பற்றி - எர்னெஸ்ட் ஹெக்கெல், ஜே.பீ.எஸ். ஹால்டேன் - ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எல்லாருமே தலை சிறந்த விஞ்ஞானிகள். இது நிற்க.
--
இந்தியாவில் ஜூலை முதல் தேதியை ‘டாக்டர் தினமாக’ கொண்டாடுகிறோம். அது ஒரு நன்றிக்கடன், பாரத ரத்னா டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களுக்கு: ஜென்மதினம் ஜூலை 1,1882; மறைந்த தினம்: அதே தினம்: 1962. கல்கொத்தா இந்தியாவிலேயே பெரிய நகரம். அங்கு டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த மலர் வளையங்களை உருவாக்க, புஷ்பங்கள் கிடைப்பது அரிது ஆகிவிட்டது என்று நாளிதழ்களில் செய்தி. ஏன் தெரியுமா? அன்று அதிகாலையே அன்னாருக்கு பூமாலைகள் சூட்ட எல்லா புஷ்பங்களும் வாங்கப்பட்டனவாம்! அன்று படித்த அந்த செய்தி இன்றும் நினைவுக்கு வரும்போது நெஞ்சு நிமிர்ந்து, இந்தியா ‘awesome’ மட்டுமல்ல; அது ‘பாருக்குள்ளே நல்ல நாடு; பட்டொளி வீசு பறக்குது பாரீர்’ என்று பண்ணிசைக்கத் தோன்றுகிறது, அம்மா! காளிகாட் வாழும் காளி மாதாவே! பகவன் ராமகிருஷ்ணரின் இஷ்டதேவதையே! உன் தவப்புதல்வன் பிதான் சந்திராவின் மேன்மையை பார். அவனுடைய மருத்துவ, சமுதாய, அரசியல் பணிகளை பார். எண்பது வருடங்கள் அவனை வாழவைத்து, எங்களையும் எக்காலமும் வாழவைக்கிறாயே! ஆம். அவருடைய பெயரில் வருடம்தோறும் வழங்கப்படும் டாக்டர்.பி.சி.ராய் பரிசில், மருத்துவ உலகில் மிகவும் பிரசித்தம். வங்காளத்தின் முதல்வராக (1948லிருந்து 1962 வரை) அரசியலில் வைர, வைடூர்யமாக, மருத்துவர்களில் மாணிக்கமாக, மானிடர்களில் ரத்னமாக திகழ்ந்த அவரது அமரகாவியத்தை என்றென்றும் பாடுவோம். 1961ல் அவருடன் அருகில் இருந்து அளவளாவும் பாக்கியத்தை எனக்கு அருளினாயே, என் அன்னையே! உன் பாதாரவிந்தங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், அம்மா!
அவர் மாணவனாக இருந்த போது மருத்துவர் என்றாலே, பாமரமக்களுக்கு ஒரு கிலி. அதை போக்க, மருத்துவம் படித்தார். வரலாறு காணாத வகையில் மருத்துவ லெஜெண்ட் ஆக திகழ்ந்தார். உலகபுகழ் விருதுகள் அவரை தேடி வந்தன. பாமரமக்கள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்யமாக இருந்தால் தான், சுயராஜ்யம் பயன் தரும் என்று இயங்கினார். தன் வீட்டை மருத்துவத்துறைக்கு நன்கொடையாக அளித்தார். 1928ல் இந்திய மருத்துவ நிறுவனத்தை அமைத்து நிர்வஹித்தார். அதனுடைய மேல்தளமாகிய மருத்துவ ஆலோசனை மன்றத்தை 1939ல் அமைத்து 1945 வரை அதை வழி நடத்தினார். எத்தனை ஆஸ்பத்திரிகளுக்கு அவர் மருத்துவச்சி!: இந்திய உளவியல் மன்றம், தொற்றுநோய் ஆஸ்பத்திரி, முதுநிலை மருத்துவக்கல்லூரி, மருத்துவ பேராசிரியர். 1931ல் கல்கொத்தா மேயர். அரசியல் பதவியை மக்கள் சேவைக்கு உரிய கருவி என்று இயங்கிய மாமனிதன், அவர்.  புகழ் பெற்ற டாக்டர் பிதான் தா. நாடு பரவிய கீர்த்தி. காங்கிரஸ் பிரமுகர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், இவர் உடனே ஆஜர். காந்திஜி உண்ணாவிரதம் என்றால், ஐயா தான் டாக்டர். காந்திஜியை விரட்டுவார். தன் இறுதி நாள் வரை, முதல்வர் மட்டுமல்ல, மருத்துவரும் தான். பிஸி ப்ரக்ட்டீஸ்; ஏழைகளுக்கு, இத்தனைக்குக்கும் 1948லியே முதல்வர் ஆகிவிட்டார். கல்யாணி, சால்ட் லேக் சிடி என்ற நகரங்களை படைத்தார். 1947ல் அவர் வங்காள முதல்வர் ஆகவேண்டும் என்ற காந்திஜியின் கருத்தை அவர் ஏற்கவில்லை. ஒரு வருடம் பிடித்தது அவரை ஒத்துக்கொள்ள வைக்க. பிதான் தா விடம் எல்லாரும் கரிசனமாக இருந்தார்கள், காந்திஜி உள்பட. நேருவை, ‘ஹே! ஜவஹர்!’ என்று தான் விளிப்பார். அவர் மீது அப்படி ஒரு பாசம். அவர் எதிர்பாராத விதமாக இறந்த போது, ஜனாதிபதியும், கவர்னரும் ஓடோடி வந்தனர்.
ஆம். நம்ம கதை:  அவர் மிஹிஜாம் (சித்தரஞ்சன்) ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் மின் ரயில்வே எஞ்சின் உற்பத்தியை தொடக்க, நேருஜியுடன் வந்திருந்தார். அறிமுகம் ஃபார்மல். எனக்குத் தோள் மூட்டு பிசகியிருந்ததால், ஒதுங்கியிருந்தேன். ஜெனெரல் மானேஜர் ‘இவன் தான் ஆடிட்டர்’ என்றவுடன், பிதான் தா (வங்காளத்தில் இப்படி விளிப்பது பண்பு),‘அதற்காக அவன் கையை உடைப்பானேன்!’ என்றார். எங்கள் ஜெனெரல் மானேஜர் ‘ஜமால்பூர் பாய்’ கிருஷ்ணசாமி அவர்கள், ‘அவன் காலை உடைத்தான்; நான் கையை உடைத்தேன்’ என்று கேலி செய்தார். சொல்ல நிறைய இருக்கிறது. ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ மூடிக்கிடைக்கிறதே! அது போகட்டும். தேனீர் விருந்தின் போது நேரு என் பையருடன் விளையாடி, இளைப்பாறினார். இரவு டின்னரின் போது, பாபு ஜகஜீவன்ஜியை நேரு கேலி செய்த வண்ணம். சின்ன வயதில் பெரியவர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். தற்காலம் போல கெடுபிடிகள் கிடையாது. பிரமுகர்கள் சரளமாக பழகுவார்கள். நேரு வஸந்தாவிடம் இயல்பாகப் பேசினார், நீண்ட நேரம். அவள் அகமகிழ்ந்து போனாள். அவர் எனக்கு மாமன் தான் என்றாள். பிதான் தா ஆஜானுபாகு. உருவத்திலும், கீர்த்தியிலும் பெரியவர். ஆணழகன் 80 வயதில்.  நாமாகவே அடங்கியிருப்போம். அப்படியொரு பெர்ஸனாலிட்டி. என் தோள் மூட்டுப்பற்றி, அன்புடன் பேசினார். இதற்கு அசடு மாதிரி ஆபரேஷன் செய்து திண்டாடாதே  என்றார்.  கவனமாக இரு. ஆடிட் குறிப்பெல்லாம் குப்பையில் போடுவார்கள் என்றார். ஏதோ அதிர்ஷ்டவசமாக, எனக்கு கிட்டத்தட்ட எம்ப்ளது வயது வரை யாரும் என்னை குப்பையில் போடவில்லை. பிதான் தா இருந்திருந்தால், யான் இணைய தளத்தில் குப்பை கூளம் ஆனது பற்றி எப்படியெல்லாம் கேலி செய்திருப்பார் என்று நினைத்து, சிரித்து மாளவில்லை. His hearty laughter was infectious.
 நேரு கேட்டுக்கொண்டும், அன்றே கல்கொத்தா திரும்பிவிட்டார். ‘துர்கா பூஜை வருகிறது. நான் தலைநகரில் இருக்கவேண்டும்.’ என்றார். நாளிதழ் செய்தி: பிதான் தா சித்தரஞ்சனிலிருந்து வந்த பின் தான் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும் என்றன. தம்மாத்தூண்டு விஷயமோ, மாபெரும் சிக்கலோ, எல்லாம் பிதான் தா சொல்படி தான் நடக்கும். நான் எத்தனயோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களை பற்றி தெரிந்ததெல்லாம் சொல்வதில்லை. எதற்கு சர்ச்சை! பிதான் தா அவர்களை போன்ற ஆளுமையையும், சக்தியையும், யதேச்சாதிகாரம் செய்யக்கூடிய சூழ்நிலையையும் தார்மீகமாக, நியாயமாக, மக்களுக்காகக் கையாண்ட தலைவரை நான் பார்த்ததில்லை.
எழுதும்போது மனசு அடிச்சுக்கிறது. எப்படி தொலைத்தோம், சான்றோர் வம்சாவளியை என்று?
இன்னம்பூரான்
30 06 2011
உசாத்துணைகள்:
 1. http://www.bangalinet.com/greatmen_bidhanchandra.htm
 2. http://news.in.msn.com/gallery.aspx?cp-documentid=3433120&page=4
 3. http://hubpages.com/hub/DrBCRoy-The-Great-Medical-Doctor-of-Early-India
 4. indianpostagestamps.com
pastedGraphic.pdf

Geetha Sambasivam Fri, Jul 1, 2011 at 6:44 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
எழுதும்போது மனசு அடிச்சுக்கிறது. எப்படி தொலைத்தோம், சான்றோர் வம்சாவளியை என்று?//

தொலைச்சது எங்க தலைமுறையோ?? ஆனாலும் இதை எல்லாம் உங்கள் மூலம் கேட்கக் கொடுத்தாவது வைச்சிருக்கோமே./ முற்றிலும் புதிய, அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி ஐயா.  சித்தரஞ்சன் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதிய கட்டுரையும் படித்திருக்கேன். எவ்வளவு அற்புதமான, அருமையான பெரிய ( I mean this word Periya) மனிதர்களோடு பழகக் கொடுத்து வைத்திருந்திருக்கிறீர்கள். அதனால் அன்றோ இன்று எங்களுக்கு அற்புதமான கட்டுரைகள் கிடைக்கின்றன.  நன்றி ஐயா.

Tthamizth Tthenee Fri, Jul 1, 2011 at 8:31 PM


திரு  இன்னம்புரார் அவர்களே நாங்கள் கொடுத்துவைத்திருக்கிறோம் உங்கள் நட்பு கிடைத்தமைக்கு
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]
.
UPDATE: 01 07 2013: A Tribute on his Birth Day & Remembrance day


 Author:DR. TINY NAIR

pastedGraphic.pdf

B.C. Roy. Illustration: Satwik Gade
While the magic of Dr. Long made people numb to undergo painless surgery, Dr. B.C. Roy’s spell made the numbed society wake up from slumber
Two magical doctors in two different continents. Dr. Long’s ‘Ether’ numbed the surgical pain of the patient, while Dr. Roy administered a balm to soothe social injustice.....
Bidhan Chandra Roy, famously known as Dr. B.C. Roy, was born at Bankipore, Patna, on July 1. Losing his mother at a young age of 14, Roy, the youngest of five siblings, wanted to become a doctor. He studied in the Presidency College, Kolkata, and later joined the Calcutta Medical College. After MBBS, he decided to pursue his studies in England. The Dean of St. Bartholomew’s Hospital rejected his application but the persistent young Roy applied and re-applied 30 times and it paid off.
He proved the Dean’s academic doubts wrong by successfully obtaining both MRCP and FRCS in less than two years and confirming his magical proficiency in surgery and medicine, an extremely rare feat. On returning to India, as he started practising medicine, his magical diagnostic skills started making waves.
The news of Dr. Roy’s quick analysis of chronic ailments and simple, affordable treatment spread, transforming the young doctor into a magical angel of health. But he was sucked into the independence struggle and he quickly realised that treating an individual patient may not cure the sufferings of society at large. The ills of society ramified much deeper than the roots of any disease.
Dr. Roy was forced to join politics where he proved that a real leader can stand tall, above the petty bickering for fame and power. He was elected to the All-India Congress Committee in 1928 and nominated to the Congress Working Committee in 1930. In 1948, when the party proposed his name for Chief Minister of West Bengal, a reluctant Roy was forced to don the mantle. Under his leadership, the transformation of West Bengal was magical. He showed that a thorough professional could as well become an able administrator, fulfilling both responsibilities if the job demanded.
Call it magic or sheer chance, Dr. B.C. Roy died the day he was born but became immortal. The nation pays its homage to this great doctor by celebrating July 1 as ‘Doctors Day’ in India.
The magic of Dr. Long made people numb to sail past the crucial hours of surgery without pain. Dr. Roy’s spell woke up a numbed society out of its slumber. Your doctor may not be as great a magician like them, but don’t forget to thank him on ‘Doctors Day’ for treating your kid for that fever or earache.
(The writer is Head, Dept. of Cardiology, PRS Hospital, Thiruvananthapuram. Email: tinynair@gmail.com)
Keywords: Dr. B.C. RoyBidhan Chandra RoyDr. Crawford M. Longpainless surgerymedical achievement

அன்றொரு நாள்: ஜூன் 29
அன்றொரு நாள்: ஜூன் 29
                                                                                                        

இங்கு அடுத்த தெரு; காவண்டிஷ் ரோடு. இதை கடக்கும் போதெல்லாம் சென்னையை நினைத்துக்கொள்வேன். அங்கு தான் 1950 களில் மாணவனாக இருப்பது நல்லதொரு கொடுப்பினை, பிரபலங்களுடன் அநாயசமாக பழக. அணுசக்தி விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ரிலிருந்து நம் நாட்டு பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் வரை. விசாலமான அறிவு தேட்டலுக்கும், தன்னம்பிக்கைக்கும் உரம் போட்ட மாதிரி. கேம்பிரிட்ஜில் உள்ள காவண்டிஷ் விஞ்ஞான பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய விழைந்தாலும், இந்தியாவுக்கு திரும்பிய பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் அவர்களின் ஜென்மதினம், இன்று (ஜூன் 29, 1893). மறைந்த தினம்: 28 June 1972. அவரது பேச்சை சென்னை செர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா மன்றத்தில் கேட்டு, கேள்விகள் கேட்டு துளைத்திருக்கிறேன். மின் தமிழில் ‘தடால், தடால்’ என்று சிலரால் விதிக்கப்படும் ‘தடா’ போல் அங்கு கிடையாது. யாரும் எதையும், குடைந்து, குடைந்து, கேட்கலாம். ஸர்.சீ.பி. ராமஸ்வாமி அய்யர் கூட எங்களிடம் மாட்டிக்கொண்டது உண்டு. இது நிற்க.

விஞ்ஞான ஆராய்ச்சியிலும், ஆசிரியப்பணியிலும் ஆழ்ந்திருந்த மஹலானோபிஸ் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம், இந்தியாவுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சிறிய விஷயமாகப் படலாம், அவர் கார்ல் பியர்சனின் புள்ளியியல் நூலால் கவரப்பட்டது. நாம் எல்லா இயல்களையும் கேலி செய்கிறோம். அரசியல் ஒரு பச்சோந்தி; பொருளாதாரம் என்று ஒன்று இல்லை (பேராசிரியர் ஸ்டீஃபன் லீக்காக்), புள்ளியியல் பொய் சாத்திரம், இத்யாதி. கொஞ்சம் உண்மையுடன், அதீத பொய்கலப்பு. முறையாக கற்றுக்கொண்ட புள்ளியியல், கடந்த காலத்தை கணித்து வருங்காலத்தை ஆருடம் கூறும் திறனுடையது. 1920 வரை, புள்ளியியல் பற்றி இந்தியாவில் அதிகம் தெரியாது. இவரின் வாழ்க்கையின் திருப்பம், இந்தியாவுக்கு புள்ளியியல் ஆய்வுக்கு வழி வகுத்தது. பிரதமர் நேருவும், நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் அவர்களும் ஊக்கமளிக்க, மஹலானோபிஸ் இந்தியாவின் புள்ளியியல் மன்றத்தை 1932ல் தோற்றுவித்தார். வகுப்புக்கு பத்து மாணவர்கள்; எல்லாரும் ரத்தினங்களாக, பிற்காலம் மிளிர்ந்தனர். வருகை தந்து, அந்த மன்றத்தின் மேன்மையை கூட்டினவர்களில், விஞ்ஞானி ஜே.பீ.எஸ். ஹால்டேன் ஒருவர். இந்திய குடியுரிமையை கேட்டு வாங்கிக்கொண்ட ஆங்கிலேயர். அவர் எனக்கு எழுதிய மடலொன்றை, இத்தனை வருடம் காப்பிற்றினேன். அது அவருடைய ஸ்தாபனத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும். அதில் தன் மனைவியை ‘வைஷ்ணவி’ என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், பேராசிரியர் நார்பெர்ட் வீனர். அவரை போல மின்னலை விட பன்மடங்கு வேகத்தில் சிந்திக்கும் திறனை நான் வேறு எங்கும் கண்டதில்லை; கேட்டதில்லை.

‘மஹலானோபிஸ் தொலைவு’ (Mahalanobis Distance) என்ற விஞ்ஞானத்தத்துவம் ஒன்று உண்டு. புள்ளியியல் வரமுறைகள் மூலமாக, சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து நம்பகத்தன்மை குறையாத ஊகங்களை அளிக்கவும், பட்டியல்கள் தயாரிக்கவும் இது உதவியது. மேலும், இவரும், இவரது மாணவர்களும், பலதரப்பட்ட புள்ளியியல் ஆய்வுகள் செய்து, இந்தியாவுக்கு புகழ் ஈட்டினர்.

1922ல் வங்காளத்தில் ஒரு வெள்ளம். பொறியாளர்கள் மிகவும் செலவு செய்து கட்டும் தடை அணைகள் பற்றி திட்டமிட, மஹலானோபிஸ் 50 வருட மழை, வெள்ளம் ஆகியவற்றை அலசி, ஒரு எளிய திட்டம் வகுத்தார். அதன் அடிப்படை, அக்காலம் மேல்நாடுகளிலேயே பிரபலம் ஆகாத Operation Research. 1925ல் வேளாண்மைத்துறையில் புதிய சாதனைகளை படைத்தார். இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1956-61 மிக சிறந்தது. அதை வகுத்தவர், இவர் தான். அதற்கு பெயரே மஹலானோபிஸ் மாடல். அதனுடைய அடித்தளம்: சுய நம்பிக்கை, தீர்க்க தரிசனம், வளரும் மாபெரும் தொழிற்கூடங்கள், அரசு தொழிற்கூடங்கள், திட்டமிட்ட மேன்மை வளர்ச்சி. பேராசிரியர் ஸுரேஷ் டெண்டுல்கர் சொல்வது போல, இந்தியாவின் நாடு தழுவிய சர்வேக்கள், ஆதாரம் உள்ள அடிப்படை புள்ளி விபரங்கள் ஆகியவற்றின் தந்தை என்று பேராசிரியர் பத்மவிபூஷன் பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் அவர்களை, அவரது ஜென்மதினத்தன்று போற்றிடுவோம்.
இன்னம்பூரான்
29 06 2011
உசாத்துணை:
Image Credit: http://theindianeconomist.com/wp-content/uploads/et_temp/PCMahalanobisWithJLNehru1946-257521_186x186.jpgGita Sambasivam

அரியதும், புதியதுமான செய்திப் பகிர்வுக்கு நன்றி ஐயா.  இந்த விஷயம் குறித்த அறிவு முற்றிலும் இல்லாததால் இதைக் குறித்துக் கருத்துக் கூற இயலாது.  ஆனாலும் புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி.  பிரசன்ன சந்திர மஹாலானோபிஸ் என்ற பெயரையே இன்று தான் கேள்விப் படுகிறேன்.அன்னாருக்கு அஞ்சலி.
7/1/11
Subashini Tremmel

பற்பல அலைச்சல்களுக்கிடையில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இருப்பினும் சேர்த்து வைத்து இன்று சிலவற்றை வாசித்தேன். வரலாற்றில் ஆர்வம் உள்ள எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்திருக்கின்றது.  

குறிப்பு: பவளா மரபுவிக்கியில் இந்த அரிய தொடரை தொடர்ந்து இனைத்து வருகின்றார்.  அன்றொரு நாள் என்ற பகுப்பில் இக்கட்டுரைகள் உள்ளன.

-சுபா
2011/6/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மிக்க மகிழ்ச்சி, ஸுபாஷிணி. எனக்கும் படிக்க, படிக்க, ஆர்வம் கூடுகிறது. மொழியாக்கச்சுவை கூடுகிறது. சில சமயங்களில், நான் ஆழ்ந்து போய்விடுகிறேன். அடுத்து வரும் தலை மாந்தன் என்னை ரொம்பவும் தான் படுத்தி விட்டான், ஜான்ஸி ராணியை போல.
இன்னம்பூரான்