Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 14 வாய்ப்பூட்டு

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 14 வாய்ப்பூட்டு
4 messages


Innamburan Innamburan Mon, Feb 13, 2012 at 6:32 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 14
வாய்ப்பூட்டு
அமர்நாத் திவாரியை ஒரு கும்பல் தாக்கியது; அதுவே அங்கு வன்முறை ரோந்து சுற்றுகிறது; போலீஸ் அமைதியில்; இது பாட்னாவில். திவாரி பி.பி.சி. நிருபர். லோக்கல் அரசியல் வாதியின் லஞ்சத்தை பற்றி எழுதினார்; அடி, உதை. டாக்டர்.வி.சாந்தா பிரபல புற்றுநோய் மருத்துவர். ஒரு சர்ச்சையில் தன்னுடைய துறை சார்ந்த கருத்தை அவர் சொன்னது பிடிக்காமல், அவர் மீது அபவாதங்கள். தேசாபிமானத்தை பறை சாற்றியதால், ராஜதுரோகி என்ற குற்றச்சாட்டு, அண்ணல் காந்தி மீது.
 சில நிகழ்வுகள் அழியாத கறைகள், பகத் சிங்கை கழுவேற்றியது போல. மட்டுறுத்தல்கள், இற்செறிப்புக்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்வது, நல்ல படிப்பினையே. ஃபெப்ரவரி 14, 1974 அன்று இலக்கியகர்த்தா அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்சனை சோவியத் ரஷ்யா தேசத்துரோகி என்று பழித்தது: ரஷ்யன் கிரிமினல் சட்டம் 64 படி அவரை சுட்டுத்தள்ளலாம் அல்லது சொத்தை பறித்து, பத்து வருட கடுங்காவல். ஒரு நாள் முன்னால், குடியுரிமையை பறித்து, அவரை மேற்கு ஜெர்மனிக்கு நாடு கடத்தியது. ஏற்கனவே ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில், பேச்சுரிமையை நிலை நிறுத்தியதால், பத்து வருடம் சிறை வாசம் அனுபவித்தவர். இப்போதைய குற்றம்: ‘குலாக் ஆர்ச்சிபெலாகோ’ என்ற நூலில்,காவல் முகாம் கொடுமைகளை பற்றி எழுதி மேற்கத்திய நாடுகளில் பிரசுரித்தது. இவர் நோபெல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் 1972ல் நோபெல் பரிசு பெற்ற ஹைய்ன்ரிச் போலி அவர்களின் விருந்தினராக லான்கென்ப்ராய்ச் என்ற குக்கிராமத்தில் அவர் வந்து இறங்கியபோது, 250 நிருபர்கள் காத்திருந்தார்கள். இது எதிர்பாராதது என்றும் தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் சொன்னார். பிறகு,ஸ்விஸர்லாந்து, டென்மார்க், நார்வே எல்லாம் சென்று ‘ஶ்ர்வதேவோ நமஸ்காரோ கேசவம் ப்ரிதிகச்சதி’ என்பது போல அமெரிக்கா போய் சேர்ந்தார். சோவியத் மனித உரிமை பறித்தலை மட்டுமல்ல, முதலாளித்துவத்தையும் கடுமையாக சாடினார், அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்சன். 1991ம் வருட சோவியத் வீழ்ச்சிக்கு பின், இவர் மேல் இருந்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. 1994ல் நாடு திரும்பினார்.
இன்று இவரை பற்றி ஏன்? இந்தியாவில் பேச்சுரிமையின் பாதையில் தனியார்களும், கட்டப்பஞ்சாயத்தும், சமூகமும், அரசும், கல்லும், முள்ளும், குப்பை, கூளங்களும் வீசுகிறார்கள். பேச்சுரிமை விழிப்புணர்ச்சி தேவை.
இன்னம்பூரான்
14 02 2012 
6-22-72.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Mon, Feb 13, 2012 at 7:17 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
இப்போதைய சூழலில் இந்தியாவில் வாய் திறக்க முடியாது.  அதுவும் ஆறாம் தலைமுறை பட்டத்துக்கு வரப்போகும் மகிழ்வில் மக்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறாங்களே. :(

மருத்துவர் சாந்தாவைக் குறித்துச் சொன்ன அபவாதங்கள் மீது முற்றிலும் எனக்கு உடன்பாடு இல்லை. :((((( அவர்களைப் போல் தொண்டுள்ளம் படைத்தவர்களைக் கூட மனிதாபிமானம் இல்லாமல் குற்றம் சொல்கிறவர்கள் சொல்லட்டும்.  அதனால் அவர் பெருமை குறையப் போவதில்லை.

2012/2/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 14
வாய்ப்பூட்டு
அமர்நாத் திவாரியை ஒரு கும்பல் தாக்கியது; அதுவே அங்கு வன்முறை ரோந்து சுற்றுகிறது; போலீஸ் அமைதியில்; இது பாட்னாவில். திவாரி பி.பி.சி. நிருபர். லோக்கல் அரசியல் வாதியின் லஞ்சத்தை பற்றி எழுதினார்; அடி, உதை. டாக்டர்.வி.சாந்தா பிரபல புற்றுநோய் மருத்துவர். ஒரு சர்ச்சையில் தன்னுடைய துறை சார்ந்த கருத்தை அவர் சொன்னது பிடிக்காமல், அவர் மீது அபவாதங்கள். தேசாபிமானத்தை பறை சாற்றியதால், ராஜதுரோகி என்ற குற்றச்சாட்டு, அண்ணல் காந்தி மீது.

இன்னம்பூரான்
14 02 2012 


உசாத்துணை:



s.bala subramani B+ve Tue, Feb 14, 2012 at 1:52 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கடலில் மூழ்கிய நிலங்களை தேடி அலைந்த போது மீனவர்களுடன், பாய் மர கப்பலில்  நான் சென்ற பல நாள்கள் கடலில் நடக்கும் பல தகவல்களை எடுத்து சொன்னதால் அதனால் லாபம் அடைபவர்கள் என்னை படுத்திய பாடு எனக்கு தான் தெரியும் 

இப்பொழுது தமிழகத்தில் நடக்கும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைக்கு மூலகாரணமான நிலக்கரி  தொடர்பாக உண்மை தகவல்களை ஒரிசா நிலகரி , இந்தோனோசிய ,ஆஸ்திரேலிய மற்றும் அதை கொண்டு வரும் கப்பல் தொடர்பான செய்திகள் அதற்கான நிகழ்வுகளும் கூடங்குளம் பின்னணிகளும் 

அதே போல் மீனவர்கள் கடலில் தாக்க படுவதற்கும், கடலை பணமாக பார்க்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் 

உலகில் மிக சிறந்த மீன் வளமான wadge பேங்க் இன்று அணு மின்சார தொழிற்சாலைகளால் அழிவு பெறுவதற்கும் 

கடலில் 200 மீட்டர் வரை வாழும் கடல் உயிர் இனங்களுக்கு ஆறு கொண்டு வரும் நீர் தான் அதற்கு  plankton என்ற உணவை கொண்டு வருகிறது என்ற அடிப்படை அறிவியலை மறந்து ஆறுகளை கழிவு பாதையாக மாற்றி , கடலை கழிவு தொட்டியாக மாற்றி வரும் சமுதாயத்தையும் 

என் போன்றவர்களின் ஆய்வுகள்
 

 காந்திய வழியை பின் பற்றும் என்னை போன்றவர்களை பல சமுக சிக்கல்கள் தாக்கலாம் 

காந்தி சுதந்திரம் வாங்கிய போது  பணம் மற்றும் சுகம் சூழ்ந்த அரசியல் குறித்து பேசியது ,
 விடுதலையை கொண்டாட மறுத்து வங்களாத்தில் இருந்தது எதனால் என்று என் பாட்டி நான் பள்ளி படிக்கும் போது  சொன்ன போது புரியவில்லை அந்த வயதில் 

இப்பொழுது புரிகிறது 

இன்றைய மடல் அருமை 


No comments:

Post a Comment