Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29: ரிக்கார்டு மனிதர்!

GmailInnamburan Innamburan

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29: ரிக்கார்டு மனிதர்!
42 messages

Innamburan Innamburan Tue, Feb 28, 2012 at 6:56 PM

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29:
ரிக்கார்டு மனிதர்!
இன்றைய தினம் ஜனித்தவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான், ஜன்மதினம். அதுவே ஒரு ரிக்கார்டு. ஸ்வபாவமோ, பாவனையோ, அவரது ‘ராஜரிஷித்துவம்’ மற்றொரு ரிக்கார்டு; ‘நான் தான் ‘எவெர்’ ரைட்டு’ சுயச்சான்று மற்றொரு ரிக்கார்டு; கடிவாளமில்லாத, இடை விடாத, பிடிவாத எவெரஸ்ட் இவர் என்பது மற்றொரு ரிக்கார்டு; ‘வாக்கு சுத்தம்’ என்றால், வெட்டு ஒன்று: துண்டு பனிரண்டு! அதுவும் இடம், பொருள், ஏவல் பொருட்படுத்தாமல். இவர் பிரதமர் பதவி ஏற்றவுடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வாழ்த்துக்கூற வந்தார். தலைமை நீதிபதி பிரதமரை காண வருவது முறையன்று என்று மொழிந்தார்,இவர்.  இதுவும் மற்றொரு ரிக்கார்டு; உள்குத்து பகைவர்களால், ‘இது ஒரு கிறுக்கு/ நூறாம் பசலி/குரங்கு பிடி/... என்று அன்றாடம் சகஸ்ர நிந்தனை செய்யப்பட்டது, மற்றொரு ரிக்கார்டு; ‘சிறுநீராமுதம்’ பருகுவது மற்றொரு ரிக்கார்டு; படித்தது விஞ்ஞானம்; அவருக்கு பிடித்தது மெய்ஞ்ஞானமும், யோகமும். அதுவும் மற்றொரு ரிக்கார்டு; 21 வயதில் பிரிட்டீஷ் சர்க்காரின் உயர்பதவி -33 வயது வரை; அதையும் மற்றொரு ரிக்கார்டு என்று சொன்னால் மிகையாகாது. ஒரு காந்தியை நம்பி, அந்த பதவியை தொலைத்ததும், இன்னொரு காந்தியை நம்பி(?) அண்டி வந்த அரசியல் பதவியை தொலைத்ததும், மற்றொரு ரிக்கார்டு. இந்தியாவின் உயரிய விருது ‘பாரத ரத்னா’; பாகிஸ்தானின் உயரிய விருது ‘நிஷான் எ பாகிஸ்தான்’ இரு விருதுகளையும் பெற்ற பாரதமாதாவின் மைந்தன் இவர் தான் என்பதும் ஒரு ரிக்கார்டே.
உச்சகட்ட ரிக்கார்டு: 1977-79ல் இந்திய பிரதமராக இருந்த போது, உலக தேசீய தலைவர்கள் எல்லாரையையும் விட வயதில் மூத்தவர்் என்பதே. அந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விமான விபத்து. எதோ அன்றாட சம்பவம் போல் பாவித்து, இறங்கி வந்து விட்டார். ஒரு நிருபர் கேட்டதற்கு பதில்: பல் செட் உடைந்து விட்டது! (பேராசிரியரை நினைத்துக்கொண்டேன்!) இத்தனை சாதனை படைத்த ரிக்கார்டு மனிதர், நழுவ விட்ட ரிக்கார்டு: நூற்றாண்டு! இவருடைய பிறந்த தினம் 29 02 1896. மறைந்த தினம் 10 04 1995. பத்து மாதம் பொறுக்க மாட்டாரோ! இந்த மாஜியினால், அரசுக்கு செலவு, மாளிகை உபயம், தண்டச்செலவு ஒன்றும் இல்லை. வேலை போன பின், மும்பையில் மகனில் அபார்ட்மெண்டில், எளிமையாக வாழ்ந்தார். அது கூட ஒரு ரிக்கார்டு தான்.
எனக்கு இவரிடமிருந்து ஒரு ஏகலைவ பாடம். இவர் உதவி பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், நான் குஜராத் அரசு பணியில். இவரின் ஆளுமைக்கு அடியிலிருந்த சுங்க இலாக்காவோடு லடாய்.  இவருடைய பரம சிஷ்யரான ஹிது பாய் தான் எங்களுடைய முதல்வர். அவர் ஒரு நாள் என்னை கூப்பிட்டார். கையில் உதவி பிரதமரின் இரு வரி கடிதம். ‘ இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. உமது வழக்குக்கு வெற்றி. வாழ்த்துக்கள்’ அதன் பின்னணி, சுங்க இலாக்காவின் மீது நான் தொடுத்த தர்மயுத்தம்.  அது வெற்றி பெற்றால், எல்லா மாநிலங்களும் கோடிக்கணக்கில் பயன் அடையும். வழக்கோ இழுத்தடிக்கப்பட்டது. இவருக்கு, முதல்வரிடமிருந்து அனுப்புவதாக, ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போய், முதல்வரிடம் போய் நின்றேன், சில மாதங்களுக்கு முன். ‘வேறு வினை வேண்டாம். சிபாரிசா கேட்கிறாய் என்று என்னை கோபிப்பார். நீ இலாக்கா-யுத்தம் நடத்து,ராஜா.’ என்றார், 'இ'ங்கிதமாக! அப்படியே நடந்தது. ஆறு மாத தாமதம். கெலித்த பின் தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய் ( இப்போது தான் பெயர் வருகிறது) வாழ்த்து அனுப்பினார். நோ சிபாரிசு என்றால் காந்திஜி, ராஜாஜி, மொரார்ஜி. இப்போதெல்லாம் 2ஜி! சிபாரிசு கந்தரகூளம். ஆண்டவா! எங்கள் நாட்டை இப்படி உருக்குலைத்து விட்டாயே. சிபாரிசு என்பது சர்வசாதாரணம். ஆனால், அது விஷவித்து. முதலில் குமாஸ்தா வேலைக்கு சிபாரிசு. அதுவே காலப்போக்கில் 2ஜி பகல் கொள்ளையாயிற்று. சிபாரிசுகளை தவிர்ப்பதில் மொரார்ஜி தேசாயின் கறார் பாலிசியில் ஒரு பின்னம் கூட மற்றவர்களால் காப்பாற்ற முடிவதில்லை. 
ஐயா குஜராத்தின் பதேலி என்ற கிராமத்தின் மண். தந்தை பள்ளி ஆசிரியர். பலமுறை சிறை என்றவர். பழைய பம்பாய் மாகாணத்தில் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவர். மத்திய அரசில் வணிகம் & தொழில் இலாக்கா அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும்  இருந்து, கட்சித்தொண்டுக்காக, பதவியிலிருந்து விலகி இருந்து, பிரதமர் பதவிக்கு 1964லிலும் 1966லும் போட்டியிட்டு தோல்வியுற்றார். எமெர்ஜென்சியின் போது கைதும் செய்யப்பட்டார். அது காலாவதியான பின் 1977ல் ஜனதா கட்சி பிரதமரானார். உள்குத்து, அவரை 1979ல் விலக வைத்தது. அவருடைய மகனால் இவருக்கு கெட்ட பெயரும் வந்தது. ஆதாரத்துடன் குற்றச்சட்டுக்கள் வந்ததாகத் தெரியவில்லை. இவருக்கும், அமெரிக்க வேவுத்துறைக்கும் தொடர்பு இருந்ததாக, ஸேமூர் ஹெர்ஷ் என்ற பிரபல இதழாளர் கூறினார். அதை ‘பைத்தியக்காரத்தனம்’ என்ற மொரார்ஜி ஒரு மிலியன் டாலருக்கு நஷ்ட ஈடு வழக்கு ஒன்று தொடர்ந்தார், அமெரிக்காவில். இருதரப்பிலும், உருப்படியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.
இவருடைய டாப் ரிக்கார்ட்: 1966லியே திருமதி.இந்திரா காந்தி ஆளுமை புரிய லாயக்கு இல்லை என்று சொன்னது. நின்னா ரிக்கார்ட்! உக்காந்தா ரிக்கார்ட்! அது  தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய்!
இன்னம்பூரான்
29 02 2012
Inline image 1
உசாத்துணை: 

Geetha SambasivamTue, Feb 28, 2012 at 7:08 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஆஹா, இது, இது இதைத் தான் நானும் எழுத எண்ணினேன். இந்தியா கண்ட ஒரே நாணயமான பிரதமர். உண்மையாக நாட்டு மக்களை முன்னேற்ற நினைத்த பிரதமர்.  இவரின் ஆட்சிக் காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறேன். நாம் நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரே பிரதமர்.  தன் சொந்தக் குழந்தைக்குக் கூட சிபாரிசு செய்யாத ஒரே மனிதர். தன் பதவியை எந்த விதத்திலும் துர் உபயோகம் செய்யாத ஒரே மனிதர்.  இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.   உண்மையான தேனாறும் பாலாறும் இவர் பிரதமராக இருந்த ஒன்றரை வருடங்களில் ஓடின.  கேட்பார் பேச்சைக் கேட்டுச் செளத்ரி கெடுத்தார் எல்லாவற்றையும்.   எளிமை, பொறுமை, பணிவு, எதற்கும் கலங்காத திட சித்தம். மொத்தத்தில் ஸ்தித ப்ரக்ஞர் என்பதற்குத் தகுதியான ஒரே நபர்.

எங்கு காண்போம் இவரைப் போல் இனி??

On Tue, Feb 28, 2012 at 12:56 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29:
ரிக்கார்டு மனிதர்!
இன்றைய தினம் ஜனித்தவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான், ஜன்மதினம். அதுவே ஒரு ரிக்கார்டு. ஸ்வபாவமோ, பாவனையோ, அவரது ‘ராஜரிஷித்துவம்’ மற்றொரு ரிக்கார்டு; ‘நான் தான் ‘எவெர்’ ரைட்டு’ சுயச்சான்று மற்றொரு ரிக்கார்டு; கடிவாளமில்லாத, இடை விடாத, பிடிவாத எவெரஸ்ட் இவர் என்பது மற்றொரு ரிக்கார்டு; ‘வாக்கு சுத்தம்’ என்றால், வெட்டு ஒன்று: துண்டு பனிரண்டு! அதுவும் இடம், பொருள், ஏவல் பொருட்படுத்தாமல். இவர் பிரதமர் பதவி ஏற்றவுடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வாழ்த்துக்கூற வந்தார். தலைமை நீதிபதி பிரதமரை காண வருவது முறையன்று என்று மொழிந்தார்,இவர்.  இதுவும் மற்றொரு ரிக்கார்டு; உள்குத்து பகைவர்களால், ‘இது ஒரு கிறுக்கு/ நூறாம் பசலி/குரங்கு பிடி/... என்று அன்றாடம் சகஸ்ர நிந்தனை செய்யப்பட்டது, மற்றொரு ரிக்கார்டு; ‘சிறுநீராமுதம்’ பருகுவது மற்றொரு ரிக்கார்டு; படித்தது விஞ்ஞானம்; அவருக்கு பிடித்தது மெய்ஞ்ஞானமும், யோகமும். அதுவும் மற்றொரு ரிக்கார்டு; 21 வயதில் பிரிட்டீஷ் சர்க்காரின் உயர்பதவி -33 வயது வரை; அதையும் மற்றொரு ரிக்கார்டு என்று சொன்னால் மிகையாகாது. ஒரு காந்தியை நம்பி, அந்த பதவியை தொலைத்ததும், இன்னொரு காந்தியை நம்பி(?) அண்டி வந்த அரசியல் பதவியை தொலைத்ததும், மற்றொரு ரிக்கார்டு. இந்தியாவின் உயரிய விருது ‘பாரத ரத்னா’; பாகிஸ்தானின் உயரிய விருது ‘நிஷான் எ பாகிஸ்தான்’ இரு விருதுகளையும் பெற்ற பாரதமாதாவின் மைந்தன் இவர் தான் என்பதும் ஒரு ரிக்கார்டே.

Geetha Sambasivam Tue, Feb 28, 2012 at 7:30 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
http://sivamgss.blogspot.com/2012/02/blog-post_29.html
[Quoted text hidden]

Dhivakar Wed, Feb 29, 2012 at 5:29 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
உண்மையானவர்
நேர்மையானவர்
எளிமையானவர்
அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர்
பண்பானவர்,
கண்டிப்பானவர்
பொறுமையானவர்
எதற்கும் கலங்காதவர்
சரி, ஸ்தித பிரக்ஞர்..

மொத்தத்தில் இவர் தெய்வப்பிறவியாகவே இருந்து விட்டு போகட்டும், என்றாலும் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவராயிற்றே.. இந்த நாட்டின் பிரதமர் பதவி என்பது நேருவின் (இந்திராவின்) குடும்பச் சொத்தாயிற்றே.. அதற்கு போய் ஆசைப்படலாமோ.. ஏதோ அவர்களாக போனால் போகின்றது என முன்வந்து பிச்சை போட்டால்தான் உண்டு என்பது தெரியாமல் போட்டி போட்டால் எப்படி? 

நியாயம் கேட்கிறேன் சார்.. பதில் சொல்லுங்கள்..

செல்வன் Wed, Feb 29, 2012 at 6:05 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/28 Dhivakar <venkdhivakar@gmail.com>
உண்மையானவர்
நேர்மையானவர்
எளிமையானவர்
அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர்
பண்பானவர்,
கண்டிப்பானவர்
பொறுமையானவர்
எதற்கும் கலங்காதவர்
சரி, ஸ்தித பிரக்ஞர்..
இதெல்லாம் பர்சனல் க்வாலிட்டி. அவர் பொருளாதார விஷயத்தில் இந்திராவை விட இடதுசாரி. அவர் ஆட்சி காலத்தில் ஐ.பி.எம், கோக்கை இந்தியாவை விட்டு ஓட்டினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தயவால் தொழிற்சங்கங்கள் வளர்த்து விடபட்டன. பன்னாட்டு கம்பனிகள் அனைத்தும் இந்திய கம்பனிகளுட பார்ட்னர்ஷிப்பில் மட்டுமே இயங்கவேண்டும் என ஒரு சட்டம் போட்டார். அவர் ஆட்சி காலம் முழுக்க விலைவாசி உயர்வு, தொழில்வளர்ச்சி நலிவு என்றே இருந்தது.18 காரட் தங்கம் என்ற காமடி கூத்து நடந்ததும் அவர் ஆட்சியில் தான்.

நேரு, மொரார்ஜி, இந்திரா, மூவர் ஆட்சிகாலமும் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இவர்கள் போட்ட கோட்டில் ரோடு போட்ட பின்னாளைய விபி சிங்கையும்,குஜ்ரால்,கவுடாவையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம்.இந்த அறுவரும் ஸ்டாலின் லைட்.

--
செல்வன்

[Quoted text hidden]

Tthamizth Tthenee Wed, Feb 29, 2012 at 6:42 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

நியாயம் கேட்கிறேன் சார்.. பதில் சொல்லுங்கள்
அதானே! 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/29 Dhivakar <venkdhivakar@gmail.com>
நியாயம் கேட்கிறேன் சார்.. பதில் சொல்லுங்கள்
[Quoted text hidden]

Ramalakshmi RajanWed, Feb 29, 2012 at 7:58 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
எத்தனை ரிக்கார்டுகள்!!! பகிர்வுக்கு நன்றி சார்.

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

திவாஜி Wed, Feb 29, 2012 at 9:45 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நன்றாக நினைவிருக்கிறது.
தொடருங்க!
'இ'ன்னாமா எளுதராரு இவரு!

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விமான விபத்து. எதோ அன்றாட சம்பவம் போல் பாவித்து, இறங்கி வந்து விட்டார்.

--

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 11:29 AM
To: mintamil@googlegroups.com, தமிழ் வாசல் , Innamburan Innamburan

அவர் ஆட்சி காலத்தில் ஐ.பி.எம், கோக்கை இந்தியாவை விட்டு ஓட்டினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தயவால் தொழிற்சங்கங்கள் வளர்த்து விடபட்டன. பன்னாட்டு கம்பனிகள் அனைத்தும் இந்திய கம்பனிகளுட பார்ட்னர்ஷிப்பில் மட்டுமே இயங்கவேண்டும் என ஒரு சட்டம் போட்டார். அவர் ஆட்சி காலம் முழுக்க விலைவாசி உயர்வு, தொழில்வளர்ச்சி நலிவு என்றே இருந்தது.18 காரட் தங்கம் என்ற காமடி கூத்து நடந்ததும் அவர் ஆட்சியில் தான்.//

இது குறித்து எழுத நிறைய இருக்கிறது.  உள்நாட்டுக் குளிர்பானங்களை நசித்துப் போகவிட்டது மத்தவங்க ஆட்சி.  இவங்க நாட்டு மக்களுக்காக உண்மையாகக் கவலைப் பட்டாங்க.  சொந்த நாட்டு உற்பத்தியை மக்கள் பயனுக்குக் கொண்டு வர நினைச்சாங்க.  அதன் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரம் சீராக இருக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை சரியானதே.  கோக்கையும், பெப்சியையும் உள்ளே வரவிட்டு நாட்டுக்குத் தீமை செய்தவர்கள் இவர்களுக்குப் பின்னால் வந்த தலைவர்களே. அதனால் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பு நம் நாட்டு நிலத்தடி நீரையும் சுரண்டுகிறது.  இன்னும் எழுத நிறைய இருக்கு. அப்புறமா வரேன்.  காலங்கார்த்தாலே ஐந்தரை மணி இப்போ.  யோகப் பயிற்சிக்குப் போகணும். 

தங்கம் அவர் காலத்தில் விலைக்கட்டுப்பாட்டோடு விளங்கியது.  18 காரட் தங்கமெல்லாம் கொண்டு வரலை.  14 காரட் கொண்டு வந்தார்.  அதனால் என்ன?  இங்கே யு.எஸ்ஸில் 14,காரட், 18 காரட் தான் தங்கம் பயன்படுத்துகின்றனர்.   இது குறித்துப் பின்னர். 
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 29, 2012 at 12:34 PM
To: Geetha Sambasivam 
போடுக! போடுக! அழுத்தம் திருத்தமாக பகர்ந்து செல்வனை உய்விக்க. காத்திருக்கிறோம்.
இன்னம்புரான்
2012/2/29 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
அவர் ஆட்சி காலத்தில் ஐ.பி.எம், கோக்கை இந்தியாவை விட்டு ஓட்டினார். 

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 3:42 PM
To: Innamburan Innamburan
வந்துட்டேன்.  நம்ம பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியதே இந்த சுதந்திரப்பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளை ஊடுருவ விட்டது தான்.  நம்ம ஊரில் இல்லாத சோடாக்களா? குளிர் பானங்களா?

மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா, கலர், ஜிஞ்சர் பீருக்கு ஈடு இணை உண்டா?  இன்னிக்கு எத்தனை பேருக்கு அது குறித்துத் தெரியும்?

காளி மார்க், வின்சென்ட் சோடா, காஞ்சீபுரம் பன்னீர் சோடா இவற்றின் சுவை எத்தனை பேருக்குத் தெரியும்?  அல்லது இந்தப் பெயர்களாவது யாருக்கானும் தெரியுமா?  மூத்தவர்களுக்கு நினைவில் இருக்கிறதா?

இதன் மூலம் பிழைத்துக் கொண்டிருந்த எத்தனை தொழிலாளர்கள் பெப்சி, கோகா கோலாவினால் சந்திக்கு வந்தார்கள்னு தெரியுமா யாருக்கானும்?? 

மலேசியப் பிரதமர் ஒருத்தர்( முன்னாள்)  பெயர் நினைவில் இல்லை.  கோகா கோலாவையும் பெப்சியையும் உள்ளே வர அனுமதித்ததன் மூலம் அவங்க பொருளாதரம் மட்டுமில்லாமல், கலாசாரம், பண்பாடும் சீரழிந்துவிட்டதாய்க் குறிப்பிட்டார்.  நம் நாட்டில் எத்தனை குடிசைத் தொழில்கள் இந்தப் பன்னாட்டுப் பொருளாதாரம் மூலம் சீரழிந்து இன்று இருக்குமிடமே தெரியாமல் போய்விட்டது எனத் தெரியுமா?

நில உச்சவரம்புத் திட்டம் விவசாயத்தை அழித்துக் குட்டிச் சுவராக்கியதைப் போல் இந்தப் பன்னாட்டுப் பொருளாதாரமும், வெளிநாட்டு இறக்குமதிகளும் நம் நாட்டை, அதன் பண்பாட்டை, கலாசாரத்தைப் பொருளாதாரத்தைச் சீரழித்துக்கொண்டு வருகிறது.

ஆனால் இங்கே நடப்பதே வேறே:  யு.எஸ்ஸில் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பாஸ்மதி அரிசிக்கும், மற்றச் சில குறிப்பிட்ட பொருட்களுக்கும் தடை விதிக்கக் கோரிக் கொண்டிருக்கின்றனர்.  அவை உள்நாட்டிலேயே உற்பத்தி ஆவதால் உள்ளூர்ச் சரக்கு விற்பனையாகாமல் தேங்கி நிற்கிறதாம்.  ஆகையால் முக்கியமாக இந்திய பாஸ்மதி அரிசிக்குத் தடை விதிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  வளர்ந்த நாடு, வல்லரசு நாடு, உலகப் பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடு, வந்தாரை வாழ வைக்கும் நாடு.  அதிலேயே இப்படி எனில் 

பொருளாதாரத்தில் முக்கி, முனகி முன்னேறும் நாம் எவ்வளவு கவனமாகச் செயல்பட்டு அந்நியப் பொருட்களைத் தடை செய்யவேண்டும்.
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 3:43 PM

செல்வன் Wed, Feb 29, 2012 at 3:53 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/29 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
18 காரட் தங்கமெல்லாம் கொண்டு வரலை.  14 காரட் கொண்டு வந்தார்.  அதனால் என்ன?  இங்கே யு.எஸ்ஸில் 14,காரட், 18 காரட் தான் தங்கம் பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில்22 காரட்டும் இருக்கு. 24 காரட் கோல்ட் பிச்கட்டும் இருக்கு.

அமெரிக்காவில் இருப்பது சாய்ஸ். உங்களுக்கு பிடிச்ச காரட்டை நீங்க வாங்கலாம்.

காளிமார்க், பொவண்டோ குடிச்சிருக்கேன். பேட் டேஸ்ட். மத்தபடி பெப்சி,கோக்கின் ஒரு பாட்டலிங் தொழிர்சாலையில் காளிமார்க்கை விட அதிக வேலைகள் உருவாக்கபடுகின்றன.இந்தியா முழுக்க எத்தனை பாட்டலிங் நிறூவனங்கள் இவற்றுக்கு இருக்கு?ஒவ்வொரு மளிகை கடைக்கும் இலவச ப்ரிட்ஜ் கொடுத்துள்ளனர்.இதனால் பல கடைகாரர்களின் பிசினஸ் பெருகும். சோடா குடிக்காதவர்கள் கூட ஜில்லுன்னு இருப்பதால் வாங்கி குடிப்பார்கள். ஆக அந்த தொழிலே பெருகி வேலைவாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்குது.

நமக்கு வேண்டியது இந்த மாதிரி வேலைகள் அதிகரிப்பதா அல்லது காளிமார்க் கம்பனி லாபத்தில் ஓடுவதா?

ஐ.பி.எம்மை துரத்திட்டு எந்த இந்திய கம்பனி ஐ.பி.எம்முக்கு போட்டியா வளர முடிந்தது?
[Quoted text hidden]

Tthamizth Tthenee Wed, Feb 29, 2012 at 4:01 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா, கலர், ஜிஞ்சர் பீருக்கு ஈடு இணை உண்டா?  இன்னிக்கு எத்தனை பேருக்கு அது குறித்துத் தெரியும்?

காளி மார்க், வின்சென்ட் சோடா, காஞ்சீபுரம் பன்னீர் சோடா இவற்றின் சுவை எத்தனை பேருக்குத் தெரியும்?
எனக்கு  நன்றாகத் தெரியும்
அனுபவித்துக் குடித்திருக்கிறேன்
இப்போது  வரும் பானங்கள் குடித்தவுடன்  இருமல் வருகிறது
நிறைய இழந்துவிட்டோம்
இன்னமும் மக்கள் விழிக்கவில்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/29 Geetha Sambasivam
மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா, கலர், ஜிஞ்சர் பீருக்கு ஈடு இணை உண்டா?  இன்னிக்கு எத்தனை பேருக்கு அது குறித்துத் தெரியும்?

காளி மார்க், வின்சென்ட் சோடா, காஞ்சீபுரம் பன்னீர் சோடா இவற்றின் சுவை எத்தனை பேருக்குத் தெரியும்?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 4:08 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com, தமிழ் வாசல்
பெப்சியிலும், கோலாவிலும் கலக்கும் ரசாயனப் பொருட்களால் உடல்நலத்திற்குக் கேடு எனத் தெரியாமல் இருக்க முடியாது.  மேலும் இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகுகிறது என்பதும் உண்மை இல்லை.  அவங்க குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆட்களை எடுப்பதில்லை.  எந்தக் கிராமத்தைச் சுரண்டணுமோ அங்கே போய் ஆசை காட்டி ஏமாற்றுவதோடு சரி.  இதற்கு உதாரணமாகத் தாமிரபரணித் தண்ணீரை ஒட்ட எடுப்பதில் முனைந்துள்ள பன்னாட்டு சோடா கம்பெனியையும், அதை எதிர்க்கும் உள்ளூர் மக்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

நிலத்தடி நீரைச் சுரண்டுவதில் இவர்களைப் போல் கெட்டிக்காரர்கள் யாரும் இல்லை.  தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்த நம் நாடு இன்று தண்ணீரை விற்கும் நிலைமைக்குத் தள்ளப் பட்டது இவர்களாலேயே.  அதேபோல் இந்தியாவிலும் 14, 18, 22, 24 காரட் என அவரவர் சக்திக்கு ஏற்ப வாங்கலாம். பார்க்கப் போனால் நகைக்கடைகளில் கூட்டம் என்னவோ அள்ளுகிறது ஆச்சரியமாவே இருக்கு.

பாஸ்மதி அரிசிக்குத் தடை போடக் கேட்டிருப்பது பற்றி வாயே திறக்கலையே?  இந்தியா ஐபிஎம்முக்குப் போட்டியா வளர வேண்டாம்.  அதன் தனித்துவத்தோடு வளர்ந்தாலே போதும்.  இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகள் மூலம் ஏற்படுவது வளர்ச்சி அல்ல. வீக்கம்.  வீக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் வித்தியாசம் புரியாமல் பேசுகிறீர்கள்.

On Wed, Feb 29, 2012 at 9:53 AM, செல்வன் <holyape@gmail.com> wrote:

அமெரிக்காவில்22 காரட்டும் இருக்கு. 24 காரட் கோல்ட் பிச்கட்டும் இருக்கு.

அமெரிக்காவில் இருப்பது சாய்ஸ். உங்களுக்கு பிடிச்ச காரட்டை நீங்க வாங்கலாம்.

காளிமார்க், பொவண்டோ குடிச்சிருக்கேன். பேட் டேஸ்ட். மத்தபடி பெப்சி,கோக்கின் ஒரு பாட்டலிங் தொழிர்சாலையில் காளிமார்க்கை விட அதிக வேலைகள் உருவாக்கபடுகின்றன.இந்தியா முழுக்க எத்தனை பாட்டலிங் நிறூவனங்கள் இவற்றுக்கு இருக்கு?ஒவ்வொரு மளிகை கடைக்கும் இலவச ப்ரிட்ஜ் கொடுத்துள்ளனர்.இதனால் பல கடைகாரர்களின் பிசினஸ் பெருகும். சோடா குடிக்காதவர்கள் கூட ஜில்லுன்னு இருப்பதால் வாங்கி குடிப்பார்கள். ஆக அந்த தொழிலே பெருகி வேலைவாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்குது.

நமக்கு வேண்டியது இந்த மாதிரி வேலைகள் அதிகரிப்பதா அல்லது காளிமார்க் கம்பனி லாபத்தில் ஓடுவதா?

ஐ.பி.எம்மை துரத்திட்டு எந்த இந்திய கம்பனி ஐ.பி.எம்முக்கு போட்டியா வளர முடிந்தது?

--
செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 29, 2012 at 5:18 PM

To: mintamil@googlegroups.com
Cc: தமிழ் வாசல்
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 29, 2012 at 5:19 PM
To: mintamil@googlegroups.com
அடாது கோடையிடி மழை பெய்தாலும், விடாது ஆட்டம் தொடரட்டும். நானும் ஒத்து ஊதறேன்.

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>

2012/2/29 Geetha Sambasivam
பெப்சியிலும், கோலாவிலும் கலக்கும் ரசாயனப் பொருட்களால் உடல்நலத்திற்குக் கேடு எனத் தெரியாமல் இருக்க முடியாது. 

செல்வன் Wed, Feb 29, 2012 at 6:36 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/29 Geetha Sambasivam
பெப்சியிலும், கோலாவிலும் கலக்கும் ரசாயனப் பொருட்களால் உடல்நலத்திற்குக் கேடு எனத் தெரியாமல் இருக்க முடியாது.
காளிமார்க்கில் மூலிகையும், கந்த மூலமுமா கலக்கபட்டது?

மேலும் இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகுகிறது என்பதும் உண்மை இல்லை.  அவங்க குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆட்களை எடுப்பதில்லை.

ஜோக்குக்கு அளவு இல்லையா? கோக்கிலும், பெப்சியிலும் பணியாற்றூபவர்கள் எண்ணீக்கையிலா காளிமார்க்கில் பணியாளர்கள் பணியாற்றினார்கள்?குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆட்களை எடுப்பதில்லை என்ரால் என்ன அர்த்தம்?அவர்கள் வியாபாரத்துக்கு எத்தனை பேர் வேண்டுமோ அத்தனை பேரை அவர்கள் எடுக்கிரார்கள்.

இதற்கு உதாரணமாகத் தாமிரபரணித் தண்ணீரை ஒட்ட எடுப்பதில் முனைந்துள்ள பன்னாட்டு சோடா கம்பெனியையும், அதை எதிர்க்கும் உள்ளூர் மக்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 

அதெல்லாம் முடிந்த கதை. கோக் பாக்டரிகள் அனைத்தும் தண்ணீர் மேலாண்மையை கையாண்டு வருகின்றன. பூமியிலிருந்து எடுக்கும் நீரை விட அதிக நீரை தண்ணீர் மேலாண்மை மூலம் பூமிக்குள் செலுத்துகின்றன.கோக் பாக்டரிக்கு தேவைபடும் நீர் தாம்பிரபரணியில் வரும் நீருடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.ஆனால் பீதியை கிளப்பி விட்டால் மக்கள் எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்

 அதேபோல் இந்தியாவிலும் 14, 18, 22, 24 காரட் என அவரவர் சக்திக்கு ஏற்ப வாங்கலாம்.

ஆனால் மொரார்ஜியார் அப்படி சொல்லலையெ?14 காரட் மட்டும் தான் வாங்கணும் என்றல்லவா சொன்னார்?நீங்க 14 காரட் நகை போடுவீங்களா?:-)

பாஸ்மதி அரிசிக்குத் தடை போடக் கேட்டிருப்பது பற்றி வாயே திறக்கலையே?

மாதுரி தீட்சித்தை கூட தான் பாகிஸ்தானுக்கு கொடுக்க சொல்லி கேட்டார்கள்:-). கேட்பதுக்கு அனைவருக்கும் உரிமை இருக்கு.கேட்பது கிடைக்குதா இல்லையா என்பது வேறு விஷ்யம்.பாஸ்மதி அரிசிக்கு எக்காலத்திலும் தடை வராது. கவலை வேண்டாம்:-)

[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 29, 2012 at 7:34 PM

To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88

நிஜமாகவே ரிக்கார்டு மனிதர் தான் இந்த மொரார்ஜி பாய். இல்லையென்றால், அவரது ஜன்மதின அறிமுகம் பெப்சி, பாசுமதி என்று உருண்டோடி இருக்காது. பெப்சி/கோகோ கோலா மர்மக்கலவைகளை பற்றி அமெரிக்காவிலேயே ஐம்பது வருடங்களுக்கு மேல் சர்ச்சை. காளிமார்க்கில் மூலிகையும், கந்த மூலமுமா கலக்கபட்டது பற்றி ஆதாரமென்ன? அப்படியே இருந்தாலும் அது கோலாவின் மர்மக்கலவையை எப்படி நியாயப்படுத்துகிறது? அவற்றால் இந்தியாவுக்கு என்ன லாபம்? சொல்லப்போனால், காளி மார்க்குடனும், கோலிக்குண்டு சோடாவுடனும் அவர்கள் போட்டியிடவில்லை. லிம்கா புகழ் பார்லேயை ஒழிக்க வந்தார்கள். ஆளெடுப்பு/ஆளுடைப்பு பற்றி ஜோக் அடிப்பது செல்வன். சரி, கோதாவில் இறங்குகிறேன். இந்த இரண்டு கோலாக்களில் ஒன்றை பற்றி எனக்கு சில விஷயங்கள் எனக்கு நேரடியாக தெரியும், அதுவும் உயர் நிர்வாக படிநிலையில். ஆள் எடுப்பதில் பயங்கர கருமி. ஒரு ஆளை வைத்து நாலு ஆள் வேலை, அடிமாட்டுக்கூலியில். எல்லாம் ஒப்பந்தக்கூலிகள். ராக்ஷச கிணறு வெட்டுவதில் எமன்கள். டீலர்களிடம் கூட பம்மாத்து வேலைகள். ‘அதெல்லாம் முடிந்த கதை’ என்பது ஒரு பதிலா? மேலும் அடுத்து செல்வன் சொன்னதற்கு லவலேசமும் ஆதாரமில்லை. கேரட் விஷயம் மற்றொரு நாள் பேசப்படும். ஒரு பெரிய ஃபிராடை தடுக்கத் திட்டமிட்டார், தேசாய்.
பாஸ்மதி விஷயமும் அப்படித்தஅன். சும்மா சொல்றாரு செல்வன். எனக்கு நீண்ட பதிலாடைகள் அளிக்க கை வலிக்கிறது. விஷ்கன்ஷினில் பேசிக்கொள்கிறேன்.
[Quoted text hidden]

செல்வன் Wed, Feb 29, 2012 at 9:00 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
காளிமார்க்கில் மூலிகையும், கந்த மூலமுமா கலக்கபட்டது பற்றி ஆதாரமென்ன? அப்படியே இருந்தாலும் அது கோலாவின் மர்மக்கலவையை எப்படி நியாயப்படுத்துகிறது? அவற்றால் இந்தியாவுக்கு என்ன லாபம்? சொல்லப்போனால், காளி மார்க்குடனும், கோலிக்குண்டு சோடாவுடனும் அவர்கள் போட்டியிடவில்லை. லிம்கா புகழ் பார்லேயை ஒழிக்க வந்தார்கள்.
காளிமார்க்கில் மூலிகை கலக்கப்பட்டது என நான் சொல்லலை. பெப்சியில் ரசாயனம் கலந்தார்கள் என்கிரார் தலைவி. அப்ப காளிமாரிக்கிலும் அதே ரசாயனம் தானே கலக்கபட்டது என்பது என் கேள்வி.

பார்லே, தம்ஸ் அப் எல்லாம் இப்பவும் இருக்கு. கோக் தான் அதன் ஓனர்.

இந்த இரண்டு கோலாக்களில் ஒன்றை பற்றி எனக்கு சில விஷயங்கள் எனக்கு நேரடியாக தெரியும், அதுவும் உயர் நிர்வாக படிநிலையில். ஆள் எடுப்பதில் பயங்கர கருமி. ஒரு ஆளை வைத்து நாலு ஆள் வேலை, அடிமாட்டுக்கூலியில். எல்லாம் ஒப்பந்தக்கூலிகள். ராக்ஷச கிணறு வெட்டுவதில் எமன்கள். டீலர்களிடம் கூட பம்மாத்து வேலைகள்
பார்லேவிலும், காளிமார்க்கிலும் என்ன லட்ச லட்சமாகவா கூலி கொடுத்தார்கள்?

மற்றபடி அடிமாட்டு கூலி என்பது $0 விட மேலானதே. வேலை இன்றி வீட்டில் சும்மா உடகார்ந்து கொண்டிருப்பதுக்கு அடிமாட்டு கூலி மேல்.

 ‘அதெல்லாம் முடிந்த கதை’ என்பது ஒரு பதிலா? 

ஆமாம். காரணம் அந்த போராட்டம் முடிந்து கோக் பாக்டரி ஜம்முன்னு இயங்கிட்டிருக்கு. இப்ப அங்கே ஒரு சத்தமும் இல்லை. அதே கங்கைகொண்டானுக்கு 500 ஏக்ராவில் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் சாங்கஷன் ஆகியிருக்கு. பல பன்னாட்டு கம்பனிகள் வர உள்லன. அதை எல்லாம் வேண்டாம்னு துரத்திட்டு நெல்லை சீமை மக்களை திருபூருக்கு அனுப்பினால் பனியன் கம்பனி முதலாளிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 29, 2012 at 9:40 PM
To: mintamil@googlegroups.com

2012/2/29 செல்வன்

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
காளிமார்க்கில் மூலிகையும், கந்த மூலமுமா கலக்கபட்டது பற்றி ஆதாரமென்ன? அப்படியே இருந்தாலும் அது கோலாவின் மர்மக்கலவையை எப்படி நியாயப்படுத்துகிறது? அவற்றால் இந்தியாவுக்கு என்ன லாபம்? சொல்லப்போனால், காளி மார்க்குடனும், கோலிக்குண்டு சோடாவுடனும் அவர்கள் போட்டியிடவில்லை. லிம்கா புகழ் பார்லேயை ஒழிக்க வந்தார்கள்.

காளிமார்க்கில் மூலிகை கலக்கப்பட்டது என நான் சொல்லலை. பெப்சியில் ரசாயனம் கலந்தார்கள் என்கிரார் தலைவி. அப்ப காளிமாரிக்கிலும் அதே ரசாயனம் தானே கலக்கபட்டது என்பது என் கேள்வி.

~ இதற்கு பெயர் குதர்க்கம். கேள்வியின் லாஜிக் உதைக்கிறது.

பார்லே, தம்ஸ் அப் எல்லாம் இப்பவும் இருக்கு. கோக் தான் அதன் ஓனர்.

~நான் சொன்னது இந்திய பார்லே. கோக்கின் கொக்கி ஷ்றாங்க்! 

இந்த இரண்டு கோலாக்களில் ஒன்றை பற்றி எனக்கு சில விஷயங்கள் எனக்கு நேரடியாக தெரியும், அதுவும் உயர் நிர்வாக படிநிலையில். ஆள் எடுப்பதில் பயங்கர கருமி. ஒரு ஆளை வைத்து நாலு ஆள் வேலை, அடிமாட்டுக்கூலியில். எல்லாம் ஒப்பந்தக்கூலிகள். ராக்ஷச கிணறு வெட்டுவதில் எமன்கள். டீலர்களிடம் கூட பம்மாத்து வேலைகள்
பார்லேவிலும், காளிமார்க்கிலும் என்ன லட்ச லட்சமாகவா கூலி கொடுத்தார்கள்?

~ என்ன கேள்வி இது?  அந்த காலத்து பார்லே ஓனர் செள்ஹான் நியாயமான கூலி கொடுத்தார்.  

மற்றபடி அடிமாட்டு கூலி என்பது $0 விட மேலானதே. வேலை இன்றி வீட்டில் சும்மா உடகார்ந்து கொண்டிருப்பதுக்கு அடிமாட்டு கூலி மேல்.

~ அது உமது அபிப்ராயம். 

 ‘அதெல்லாம் முடிந்த கதை’ என்பது ஒரு பதிலா? 

ஆமாம். காரணம் அந்த போராட்டம் முடிந்து கோக் பாக்டரி ஜம்முன்னு இயங்கிட்டிருக்கு. இப்ப அங்கே ஒரு சத்தமும் இல்லை. அதே கங்கைகொண்டானுக்கு 500 ஏக்ராவில் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் சாங்கஷன் ஆகியிருக்கு. பல பன்னாட்டு கம்பனிகள் வர உள்லன. அதை எல்லாம் வேண்டாம்னு துரத்திட்டு நெல்லை சீமை மக்களை திருபூருக்கு அனுப்பினால் பனியன் கம்பனி முதலாளிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

~ இது கேட்ட கேள்விக்கு பதில் அல்ல.
இன்னம்பூரான் 
--
செல்வன்

செல்வன் Wed, Feb 29, 2012 at 11:01 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
~ இதற்கு பெயர் குதர்க்கம். கேள்வியின் லாஜிக் உதைக்கிறது.
எங்கேயும் உதைக்கலை. கோக் உடலுக்கு கெடுதி என்றால் காளிமார்க்கும் தான் கெடுதி. காபி, டி கெடுதி, டாஸ்மாக்கில் ஆறாய் ஓடும் சாராயம் கெடுதி, வெண்ணெய் கெடுதி, நெய் கெடுதி, கம்மர்கட் கெடுதி, நெல்லை அல்வா கெடுதி. சிகரெட்,பீடி, புகையிலை கெடுதி. சாக்லெட் கெடுதி. இதெல்லாம் நாட்டில் விற்றுகொண்டு தான் இருக்கு.

~நான் சொன்னது இந்திய பார்லே. கோக்கின் கொக்கி ஷ்றாங்க்! 

பார்லே இப்ப கோக் வசம். லேண்ட் ரோவர் இப்ப டாட்டா வசம். ஸோ வாட்?

எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும். - கீதை

~ என்ன கேள்வி இது?  அந்த காலத்து பார்லே ஓனர் செள்ஹான் நியாயமான கூலி கொடுத்தார்.  

எனக்கு அந்த ஒப்பீடு பற்றிய விவரம் தெரியாது. மற்றபடி கோக்கோ, சவுகானோ எந்த முதலாளியோ யாராக இருப்பினும் தம் நலனை மேக்சிமைஸ் செய்வது அவரவர் விருப்பம். அவர்கள் கொடுக்கும் கூலி கட்டுபடி ஆகலை என்ரால் பணிபுரியாமல் இருப்பது தொழிலாளியின் விருப்பம்.

மற்றபடி அடிமாட்டு கூலி என்பது $0 விட மேலானதே. வேலை இன்றி வீட்டில் சும்மா உடகார்ந்து கொண்டிருப்பதுக்கு அடிமாட்டு கூலி மேல்.
~ அது உமது அபிப்ராயம். 

அபிப்பிராயம் அல்ல. உஅதான் உண்மை

அடிமாட்டு கூலி $1 என்றால் சுமம உட்கார்ந்திருப்பதால் கிடைக்கும் $0வை விட அது உயர்வானதே. $1  > $0 என்பது கணிதவியல் உண்மை. என் அபிப்பிராயம் மட்டும் அல்ல:-) 
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 11:09 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
http://www.nutritionresearchcenter.org/healthnews/what-happens-to-your-body-if-you-drink-a-coke-right-now/

http://www.mindconnection.com/library/health/softdrinks.htm
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 11:12 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நல்ல வேளையா எங்க வீட்டிலே பெண்ணுக்கோ,பையருக்கோ அவங்க குடும்பத்துக்கோ இந்த பெப்சி, கோக் பைத்தியம் இல்லை.  எல்லாருமே ஃப்ரெஷ் ஜூஸ்தான் விரும்புவாங்க.  நாங்க எப்போவுமே குடிச்சதில்லை. வீட்டிற்கு வரவங்களுக்கும் வாங்கி வைச்சுக் கொடுப்பதில்லை.  எங்க குளிர்சாதனப் பெட்டியில் குளிர்பானம்னு இருந்தால் நாங்க வாங்குவாது Rooh Afza  மட்டுமே.

காதியில் கிடைக்கும் நன்னாரி சர்பத், வில்வப் பழ சர்பத் வாங்குவோம். எலுமிச்சை ரசம் வீட்டிலேயே தயார் செய்து இவற்றில் ஏதேனும் ஒன்றோடு குடிப்போம். அல்லது புத்தம்புதிய பழச்சாறோ, இளநீர், நுங்கு போன்றவையோ தான். 
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 29, 2012 at 11:15 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மற்றபடி செல்வனின் வழவழா(சமாளிப்பு)பதில்களுக்கு இன்னம்புராரே பதில் கொடுத்துவிட்டதால் நான் எதுவும் சொல்லலை. 

On Wed, Feb 29, 2012 at 5:12 PM, Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com> wrote:
நல்ல வேளையா எங்க வீட்டிலே பெண்ணுக்கோ,பையருக்கோ அவங்க குடும்பத்துக்கோ இந்த பெப்சி, கோக் பைத்தியம் இல்லை.  எல்லாருமே ஃப்ரெஷ் ஜூஸ்தான் விரும்புவாங்க.  நாங்க எப்போவுமே குடிச்சதில்லை. வீட்டிற்கு வரவங்களுக்கும் வாங்கி வைச்சுக் கொடுப்பதில்லை.  எங்க குளிர்சாதனப் பெட்டியில் குளிர்பானம்னு இருந்தால் நாங்க வாங்குவாது Rooh Afza  மட்டுமே.

காதியில் கிடைக்கும் நன்னாரி சர்பத், வில்வப் பழ சர்பத் வாங்குவோம். எலுமிச்சை ரசம் வீட்டிலேயே தயார் செய்து இவற்றில் ஏதேனும் ஒன்றோடு குடிப்போம். அல்லது புத்தம்புதிய பழச்சாறோ, இளநீர், நுங்கு போன்றவையோ தான். 

[Quoted text hidden]

செல்வன்Thu, Mar 1, 2012 at 2:40 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/29 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
நல்ல வேளையா எங்க வீட்டிலே பெண்ணுக்கோ,பையருக்கோ அவங்க குடும்பத்துக்கோ இந்த பெப்சி, கோக் பைத்தியம் இல்லை.  எல்லாருமே ஃப்ரெஷ் ஜூஸ்தான் விரும்புவாங்க.  நாங்க எப்போவுமே குடிச்சதில்லை. வீட்டிற்கு வரவங்களுக்கும் வாங்கி வைச்சுக் கொடுப்பதில்லை.  எங்க குளிர்சாதனப் பெட்டியில் குளிர்பானம்னு இருந்தால் நாங்க வாங்குவாது Rooh Afza  மட்டுமே.
டாஸ்மாக் ஆறாய் ஓடும் நாட்டில் கோக்குக்கு தடை. ஜோக் நல்லாருக்கு

சிகரெட், சர்க்கரை, நெய் எல்லாத்தையும் தடை பண்ணினா கோக்கையும் தடை செய்யலாம்.
[Quoted text hidden]

செல்வன் Thu, Mar 1, 2012 at 4:21 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மொரார்ஜி தேசாய் மாதிரி தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருக்கும் மனிதர்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் குப்புற கவிழ்கிறது.

நரசிம்மராவ் மாதிரி ஊழல் பெருச்சாளிகள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் பாய்ச்சல் வேகம் எடுக்கிறது.

எப்படி?

காரணம்..கம்யூனிசம்.

கம்யூனிசம் நல்ல ஆட்சியாளர்கள் ஆட்சியையும் பயனற்ரதாக்குகிறது. மோசமான ஆட்சியாளர்கள் கையிலும் முதலாளித்துவம் சிறப்பாக செயல்படுகிறது.மொரார்ஜி மாதிரி நல்லவர்கள் கையில் முதலாளித்துவம் இருந்தால் நாடு எத்தனை சிறப்பா இருந்திருக்கும்?
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Mar 1, 2012 at 5:38 AM
To: mintamil@googlegroups.com
அதிகம் சிரிக்காத சீரியஸ் மனிதர், மொரார்ஜி. கம்யூனிசத்தை அறவெ வெறுத்து, முதலாளித்துவத்தின் ஆதரவளராக இருந்த அவருக்கே இந்த முத்திரை சிரிப்பை வரவழைக்கும்.

நாய் கடிக்கிறது என்று கல்லை கடித்தால், என் செய்யலாம்?
சுபம்.

செல்வன் Thu, Mar 1, 2012 at 5:52 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மொரார்ஜி. கம்யூனிசத்தை அறவெ வெறுத்து, முதலாளித்துவத்தின் ஆதரவளராக இருந்த அவருக்கே இந்த முத்திரை சிரிப்பை வரவழைக்கும்.
கோக்கையும், ஐ.பி.எம்மையும் துரத்தியவர் முதலாளித்துவவாதி என்றால் அப்புறம் எனக்கு தான் சிரிப்பு வருது.அப்புறம் யார் தான் சோஷலிஸ்டு?:-)

சரி..விஸ்கான்ஸின் வாங்க.ரிப்பன் நகருக்கு கூட்டி சென்று ஞானஸ்னானம் செய்விக்கிறேன்:-)
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Mar 1, 2012 at 6:03 AM
To: mintamil@googlegroups.com

2012/3/1 செல்வன் <holyape@gmail.com>

2012/2/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மொரார்ஜி. கம்யூனிசத்தை அறவெ வெறுத்து, முதலாளித்துவத்தின் ஆதரவளராக இருந்த அவருக்கே இந்த முத்திரை சிரிப்பை வரவழைக்கும்.

கோக்கையும், ஐ.பி.எம்மையும் துரத்தியவர் முதலாளித்துவவாதி என்றால் அப்புறம் எனக்கு தான் சிரிப்பு வருது.அப்புறம் யார் தான் சோஷலிஸ்டு?:-)

சரி..விஸ்கான்ஸின் வாங்க.ரிப்பன் நகருக்கு கூட்டி சென்று ஞானஸ்னானம் செய்விக்கிறேன்:-)

ஆஹா! அப்போது ஓதுவதற்கு, அமெரிக்காவின் டாரிஃப் பாலிசையை பற்றி ஒரு வரலாற்றுக்குறிப்பு தயார் செய்து வைத்துக்கொள்ளவும். இருவரும் சிரித்து மகிழலாம்.
ஆர்டிச்சோக் அன்புடன்,

இன்னம்பூரான் 

செல்வன்Thu, Mar 1, 2012 at 6:06 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2012/3/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஆர்டிச்சோக் அன்புடன்,
என்னென்ன பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டு குடுங்க:-). கலக்கிடலாம். எப்ப வர்ரீங்கன்னும் தெரிஞ்சால் சொல்லுங்க
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Mar 1, 2012 at 8:47 AM
To: mintamil@googlegroups.com
என் பொண்ணும் மாப்பிள்ளையும் இங்கே வராஹ. ரொம்ப பிசியாய்டும். அப்றம் மார்ச் 27 அகில உலக ஜகஜ்ஜால ஜாஜ்வல்ய எண்ணெய் நப்பாசை அமேரிக்காவுக்கு. அங்கே வந்து போன் அடிக்கிறேன். தங்கமணி எது கொடுத்தாலும் ஆசையா சாப்பிடுவேன். இந்த கோலா/பீலாவெல்லாம் வேண்டாம். நோட்டுக. கோலா/பீலாவில் எல்லாம் டெக்கிலா சேக்கலே. ஏன்னா அது புவர் மெக்சிகோ.
முழுகலாமா?
இன்னம்பூரான்
2012/3/1 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Mar 1, 2012 at 8:48 AM
To: mintamil@googlegroups.com
I mean மகிழலாமா?

[Quoted text hidden]

Nagarajan Vadivel Thu, Mar 1, 2012 at 2:17 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

வந்தனம் வந்தனம் அவைக்கு வந்தனம்
பொருளாதாரம் என்றால்
பொருளாதாரம் பற்றிப் பேசுவது ஒன்று அதை நடைமுறைப் படுத்துவது வேறு.  இந்த ஞானம் பேராசிரியராக இருந்து பின்னர் நலிவுற்ற தொழில்களை மீட்பது என்று கிளம்பிய பின் வந்தது

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார்
நல்லவனாக நடப்பதைவிட நல்லவனாக இருப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது மேல்.  சொல்லிக் கொடுப்பது எளிது அதில் சிக்கல் ஒன்றும் இல்லை என்பதுபோல் பேராசிரியர்கள் மாணவர்களுக்குப் பொருளாதாரத்தை  நேற்று இன்று நாளை என்று மூச்சு முட்டச் சொல்லிக் கொடுப்பது எளிது
எழுதியவன் எழுத்தைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்

அன்மையில் நிகழ்ந்த அமெரிக்கப் பொருளியல் சுனாமியில் பாதிக்கப் பட்டவ்ர்களில் நானும் ஒருவன்.  சாமானியர்கள் துக்க சாகரத்தில் மூழ்க முதலீட்டு வங்கிகள் மோட்டார் கம்பெனி முதலைகள் பெரும் பணம் ஈட்டியதும் பொருளதார வல்லரசை உருவமில்லாது அழியக் காரணமாக இருந்தவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்த மாணவர்கள் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூக்குரல் எழுந்தபோது அந்த மாணவர்கள் கைகாட்டியது அவர்களுடைய பொருளாதாரப் பேராசிரியர்களை.

பொருளாதாரம் ஒரு காலத்தில் நீதி நெறியாகப் பல்கலைக்கழகங்களில் தத்துவத் துறையில் ஒண்டுக்குடித்தனம் இருந்து பின்னர் ஆங்கிலப் பல்கலைக் கழகங்களால் பொருளியல் விஞ்ஞா்னம் என்று அழைக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவில் கணிதம் கணினி வயப்பட்டு மோடிமஸ்தான் கண்கட்டி வித்தையாக மாறிப்போனது. 
பொருளியல் மந்திர தந்திர யந்திர சூக்குமங்களில் புகுந்து விளையாட அமெரிக்கா பயன்படுத்திய இந்திர ஜாலம் (சு)தந்திரப் பொருளாதாரம் என்ற தாரக மந்திரம்.  யந்திரம் ஐ.எம்.எஃப்
Inline image 1

செல்வ வளம் மிக்க நாடு (இந்தியா) தரித்திர நாராயணர்கள் வாழும் இடமாகவும் ஏழ்மையில் உழன்று அயோத்தி குப்பம் வீரமணி, மாட்டாங்குப்பம் சேகர், வெள்ளை ரவி பங்க் குமார் போன்ற மாஃபியோசாக் குற்றவாளிகள் கும்மாளமிட்டுக்கொண்டிருந்த அமெரிக்கா பொருளாதார வல்லரசானதும் (சு)தந்திரமா அல்லது தந்திரமா?

போரில் ஈடுபடாமல் களங்கண்ட கவிஞனாக போரிடும நாடுகளுக்கு தங்கத்தைப் பெற்றுக்கொண்டு ஆயு்தம் அளித்த வகையில் உல்கில் உள்ள பல நாடுகளின் தங்கக் கையிருப்பைக் கவர்ந்தும் இந்தியா போன்ற போரிடத் தெரியாத நாடுகளைச் சுரண்டியும் 65% விழுக்காடு தங்கக் கையிருப்பைக் கைப்பிடித்து உலகப் பொருளாதாரத்தை கோல்ட் ஸ்டேண்டர்டில் இருந்து டாலர் ஸ்டேண்டர்டுக்கு மாற்றியது (சு)தந்திரப் பொருளாதாரம் அல்லவா

நாங்கள் ஏழைகள் உலகின் படித்த ஏழைகளே அமெரிக்கா வாருங்கள்.  ஆராய்ச்சி செய்யுங்கள் புதியன படையுங்கள் செல்வம் சேர்த்துங்கள்.  முடிந்தவரை ஆயுதத் தயாரிப்புக்குக் ஆய்வு செய்து கைகொடுங்கள் பெரும் பணக்காரர் ஆகலாம் என்று பொருள் தயாரிப்பதைவிட்டு புதியன கண்டுபிடித்து அதன் தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் விற்று அவ்வாறு உருவாக்கும் பொருட்களை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட டாலர்  நோட்டுகளுக்குப் பண்டமாற்றம் செய்தது (சு)தந்திரப் பொருளாதாரமா?

அமெரிக்கா சொந்த நாட்டின்  கனிம எண்ணெய் வளங்களின் மீது கைவைக்காமல் வேற்று நாட்டு உற்பத்தியை இறக்குமதி செய்து உலகின் மிகப்பெரிய நுகர்வோர் குமுகத்தை வெற்றிகரமாக நடத்துவது (சு)தந்திரப் பொருளாதாரமா?

இந்தியாவில் சிதம்பர ரகஸ்ய கொகா கோலாவும்  கார்டு விற்ற ஐ.பி.எம்மும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேவைகளைக் கொள்ளை லாபம் சம்பாரிக்க சந்தையில் உலவவிட்டு அதில் கிடைத்த லாபத்தை உள்ளூரில் முதலீடு செய்யாமல் அமரிக்காவுக்கு நிலைபெயர்த்ததைத் தடைசெய்ய ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முன்வைத்த தொழிற்கொள்கை 1977-ல் அவை இந்தியாவில் வாணிகம் செய்வது லாபகரமானதல்ல என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்கள் வெளியேறினார்கள். 
அவர்களிடம் வேலை பார்த்த இந்தியர்கள் பல நிறுவனங்களில் வேலைக்க்ச் சேர்ந்தும் நிறுவனங்களை நடத்தியும் வாழ்ந்தனர்.  1970-ல் நான் டில்லியில் வேலைபார்த்தபோது இண்டியா இண்டர்நேஷ்னல் செண்டரில் கொகா கோலா சப்சிடியில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக விற்றது.  1976 வரை கொகாகோலா மேட்டுக்குடி மற்றும் அமரிக்காவிலிருந்து திரும்பிய அறிவுஜீவிகளும் குடித்த பானம்.  ஒன்றைக்கு மதுரைப்பக்கம் இளநீர் விறூக்கொண்டே கிழவிகள் குடிக்கும் நிலைக்குக் காரணம் பொரு்ாதாரச் (சு)தந்திரமா?

மன்மோஹன் அவர்களின் தளைநீங்கிய பொருளாதார்க் கொள்கையின் மூலம் கொல்லைப்புற வழியாக இந்திய நிறுவனங்களின்மீது உப்புமூட்டை ஏறி இந்தியா வந்தவ கொகாகோள ஐபிஎம்முக்கு வந்ததே வாழ்வு. இந்தியாவில் மட்டரகச் சிகரெட் விளம்பர்்களில் வரும் இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் இப்ப கொக்காகோலா குடிக்கக் குடிக்க இன்பம் என்று மாரிப்போச்சு
யோக்கியன் வர்ரான் சொம்பைத் தூக்கி உள்ளே வைங்க
Inline image 3

குடிக்கும் நீர் இயற்கையின் வரம் அதை திருடி வாணிபம் செய்வது நீதி நெறிக்கு எதிரானது.  உள்ளூரில் இருந்த சிறு நிறுவனங்களை விழுங்கி ஆறுகளையும் நதி நீர் வளங்களயும் வாடகைக்கு எடுத்து வணிகம் செய்து பொருள் ஈட்டுவது தர்ம அடிப்படையிலான (சு)தந்திரப் பொருளாதாரமா?
இந்தியாவில் திட்டங்களுக்குக் கடன் கொடுத்து இந்தியாவைக் கடனாளி என்று கூறும்போது இந்தியா போன்ற நாடுகளின் சுற்றூச் சூழலைக் கெடுக்கும் கரிவிகளையும் கார்களையும் விற்கும் கடன்காரர்கள் கொடுக்கவேண்டிய வட்டியும் இழப்பீட்டுத் தொகையும் கொடுக்காமல் இருப்பது (சு)தந்திரப் பொருளா்தாரமா  கோகாகோலா தயாரித்து இந்தியாவுக்கு்் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யாமல் உள்ளூர் நதி நீர் நிலத்தடி நீர் ஆதாரங்களைக் கொள்ளையடிப்பது (சு)தந்திரப் பொருளாதாரமா?
இந்தநாட்டின் சுவையான கணிரசங்களை மேலை நாட்டுக்கு வழங்கி ரசாயனப் பொடிகலந்த ரசனா போன்ற விஷ நீரைக் குடிக்கச் சிறு குழந்தைகளை விளம்பரம் மூலம் வசியப் படுத்தியது (சு)தந்திரப் பொருளாதாரமா? இந்தியாவின் பருத்தி ஆடைகள் அமெரிக்காவுக்கும் அவர்கள் கண்டுபிடித்த சிந்தடிக் இந்தியாவுக்கும் என்றிருப்பது (சு)தந்திரப் பொருளாதாரமா?
 கொங்குநாட்டுக் கிணத்தில் குதித்தால் அமெரிக்காவுக்குப் போகலாம் என்று அதலபாதாளக் கினறுகள்
Inline image 2
பவானி ஆற்றியே தாமோதர சாமி நாயுடு மூலம் 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்தது (சு)தந்திரப் பொருளாதாரமா?
Inline image 8

பாலக்காடு அருகில் பிளச்சிமடா நிலநீர் ஆதாரங்களை அடியோடு துடைத்தெடுத்தது (சு)தந்திரப் பொருளாதாரமா
 Inline image 10
குடி குடியைகெடுக்கும் என்பதுபோல் குளிர்பானம் குடித்தால் நோய்வரும் என்ற ஆதாரங்களைத் தொடர்ந்து மறுப்பது (சு)தந்திரப் பொருளாதாரமா
 Inline image 11
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைக் கடனாக நினைத்த தமிழகத்தில் பாலுக்கும் அதிக விலையில் இயற்கையின் வரமான தண்ணீரை விற்பது (சு)தந்திரப் பொருளாதாரமா?
 Inline image 12
அமெரிக்காவின்  நீர் ஆதாரத்தைப் பயன்படுத்தி எங்கே கொஞ்ச நாளைக்கு இந்தியாவுக்குக் கோகாகோலா ஏற்றுமதி செய்யுங்கள் பார்க்கலாம்.  பனிப்பொழிவு குறைந்தால் நீர்வரத்துக் குறைந்துவிடும் என்ற ஞானம்மெரிக்காவுக்குமட்டும் என்பது (சு)தந்திரப் பொருளாதாரமா?
Inline image 14 

இது தொடர்பாக என்னுடன் சென்னைப் பலகலையில் பணிபுரிந்த பேராசி்யரின ஆய்வுக் கட்டுரைக்காக உருவாக்கப்பட்ட படப்பக்கங்கள் இணைப்பில்
பொருளாதாரம் அறநெறியுடன் மக்கள் துயர் துடைக்கும் விஞ்ஞானமாக இருந்தால் மட்டுமே சுதந்திரப் பொருளாதாரம் இல்லையேல் அது (சு)தந்திரப் பொ்ருளாதாரம்

நாகராசன்

2012/3/1 செல்வன் 
[Quoted text hidden]
[Quoted text hidden]

Ecospiritual Theosophy.ppsx
1472K

Geetha Sambasivam Thu, Mar 1, 2012 at 3:14 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
//பொருளியல் மந்திர தந்திர யந்திர சூக்குமங்களில் புகுந்து விளையாட அமெரிக்கா பயன்படுத்திய இந்திர ஜாலம் (சு)தந்திரப் பொருளாதாரம் என்ற தாரக மந்திரம்.  யந்திரம் ஐ.எம்.எஃப் 

குடிக்கும் நீர் இயற்கையின் வரம் அதை திருடி வாணிபம் செய்வது நீதி நெறிக்கு எதிரானது.  உள்ளூரில் இருந்த சிறு நிறுவனங்களை விழுங்கி ஆறுகளையும் நதி நீர் வளங்களயும் வாடகைக்கு எடுத்து வணிகம் செய்து பொருள் ஈட்டுவது தர்ம அடிப்படையிலான (சு)தந்திரப் பொருளாதாரமா?
இந்தியாவில் திட்டங்களுக்குக் கடன் கொடுத்து இந்தியாவைக் கடனாளி என்று கூறும்போது இந்தியா போன்ற நாடுகளின் சுற்றூச் சூழலைக் கெடுக்கும் கரிவிகளையும் கார்களையும் விற்கும் கடன்காரர்கள் கொடுக்கவேண்டிய வட்டியும் இழப்பீட்டுத் தொகையும் கொடுக்காமல் இருப்பது (சு)தந்திரப் பொருளா்தாரமா  கோகாகோலா தயாரித்து இந்தியாவுக்கு்் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யாமல் உள்ளூர் நதி நீர் நிலத்தடி நீர் ஆதாரங்களைக் கொள்ளையடிப்பது (சு)தந்திரப் பொருளாதாரமா?

அமெரிக்காவின்  நீர் ஆதாரத்தைப் பயன்படுத்தி எங்கே கொஞ்ச நாளைக்கு இந்தியாவுக்குக் கோகாகோலா ஏற்றுமதி செய்யுங்கள் பார்க்கலாம்.  பனிப்பொழிவு குறைந்தால் நீர்வரத்துக் குறைந்துவிடும் என்ற ஞானம்மெரிக்காவுக்குமட்டும் என்பது (சு)தந்திரப் பொருளாதாரமா?//

ஐயா, தாங்கள் நேரில் இருந்திருந்தால் கட்டாயமாய்க் காலில் விழுந்திருப்பேன்.  ஆதாரங்களைத் தேடிச் சேகரித்துக் கொண்டிருந்தேன்.  வலுவான ஆதாரங்களோடு வந்துவிட்டீர்கள்.  எனக்குப் பெரிய அளவில் நிம்மதி.  தேடவும் வேண்டாம்.  நீங்கள் கொடுத்திருப்பதை விடவும் வலுவான ஆதாரங்களுக்கு நான் எங்கு போவேன்?  எங்கே செல்வன் வந்து இதற்கும் சப்பைக்கட்டு கட்டட்டும்.

ஏற்கெனவே பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கு உள்ளூர் விளைச்சலைப் பயன்படுத்திக்கொண்டு இறக்குமதிக்குக் கொடுக்கும் பணம் உள்நாட்டுக்கே போகவேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தேன்.   அவர்கள் எப்படி நம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு அதே பாஸ்மதியை விளைவிக்கின்றனரோ அப்படியே அவர்களின் நுணுக்கங்களை மட்டும் நாம் தெரிந்து கொண்டு எல்லாவிதத்திலும் சுயமாகத் தொழிலில் காட்டவேண்டும்.  விவசாயத்தில் காட்ட வேண்டும்.  இன்றைக்கு விவசாயம் இப்படி அதலபாதாளத்திற்குப் போயிருப்பதன் காரணமே இந்த மாதிரியான சுதந்திரப் பொருளாதாரக் கொள்கையும், உள்நாட்டுச் சந்தை மிக மோசமாக இறங்கியதும் , நில உச்சவரம்புச் சட்டமுமே காரணம்.
On Thu, Mar 1, 2012 at 8:17 AM, Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com> wrote:

வந்தனம் வந்தனம் அவைக்கு வந்தனம்
பொருளாதாரம் என்றால்
பொருளாதாரம் பற்றிப் பேசுவது ஒன்று அதை நடைமுறைப் படுத்துவது வேறு.  இந்த ஞானம் பேராசிரியராக இருந்து பின்னர் நலிவுற்ற தொழில்களை மீட்பது என்று கிளம்பிய பின் வந்தது

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Mar 1, 2012 at 3:15 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: தமிழ் வாசல்

---------- Forwarded message ----------
From: Geetha Sambasivam
Date: Thu, Mar 1, 2012 at 9:14 AM
Subject: Re: [MinTamil] Re: [தமிழ் வாசல்] அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29: ரிக்கார்டு மனிதர்!

On Thu, Mar 1, 2012 at 8:17 AM, Nagarajan Vadivel  wrote:

வந்தனம் வந்தனம் அவைக்கு வந்தனம்
பொருளாதாரம் என்றால்
பொருளாதாரம் பற்றிப் பேசுவது ஒன்று அதை நடைமுறைப் படுத்துவது வேறு.  இந்த ஞானம் பேராசிரியராக இருந்து பின்னர் நலிவுற்ற தொழில்களை மீட்பது என்று கிளம்பிய பின் வந்தது

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

-- 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Innamburan Innamburan Thu, Mar 1, 2012 at 3:25 PM
To: thamizhvaasal@googlegroups.com
1. வெர்ச்சுவலா சேவித்தால் கூட 'வந்தனம்!வந்தணன்! என்று ஆசிகள் பல கூறுவார், பேராசிரியர்.
2. இனி தகரியமாக விஷ்கன்ஷின் போகலாம்.
3. படிச்ச உடனேயே, கை வலி தேவலை.

[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Mar 1, 2012 at 3:39 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
வேறொரு குழுமத்தின் செய்தி ஒன்றைப் படித்தேன்.  ஹரியானா ஹிசாரில் ஒரு ஏழை மாணவன் நன்றாய்ப் படித்து முதலில் வருகிறான் என்பதற்காக அவனுடைய சக மாணவர்கள் இருவர் அவனைக் கொன்றுவிட்டனராம். இதைப் படித்தபோது படிப்பு முறையின் மேலும் சந்தேகம் இருக்கிறது.   ஏனெனில் வெறும் ஏட்டுப்படிப்புத் தான் கற்பிக்கப் படுகிறது. நம் படிப்பு முறை என்று மாறியதோ அன்றிலிருந்து ஆன்மிகப் பாடம் என்பதே இல்லாமல் போனது.  ஏட்டுப்படிப்புப் பெரும்பாலோரை நாத்திகமே பேச வைக்கிறது.  தப்பு எனக் கூறவில்லை.

அதோடு கற்பிக்கையில் மனிதனையும் பாலூட்டும் மிருகங்களில் ஒன்றாகவே கற்பிக்கப் படுகிறோம். இதன்மூலம் மாணவர்களுக்குத் தங்கள் மிருக குணங்களே மிஞ்சிப்போகின்றனவோ என்றும் தோன்றுகிறது.  ஆன்மதாகத்தை நிறைவேற்ற முடியாத, ஆன்மாவின் இருப்பை அறிய மாணவர்களுக்குச் சொல்லித்தராத படிப்பு படிப்பு என்றே ஒத்துக்கொள்ள முடியவில்லை.  :(((((

படிப்பு முறை மாறினால் அனைத்தும் மாற வாய்ப்பு இருக்கிறது.  அப்போது தான் நாம் எவற்றை இழக்கிறோம் என்பதும் புரியும். இழந்தவைகளை மீட்கவும் ஆரம்பிப்போம். 

கை வலி சுத்தமாய் இல்லாமல் போகவும் பிரார்த்திக்கிறேன்.

On Thu, Mar 1, 2012 at 9:25 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
1. வெர்ச்சுவலா சேவித்தால் கூட 'வந்தனம்!வந்தணன்! என்று ஆசிகள் பல கூறுவார், பேராசிரியர்.
2. இனி தகரியமாக விஷ்கன்ஷின் போகலாம்.
3. படிச்ச உடனேயே, கை வலி தேவலை.

[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Mar 1, 2012 at 3:39 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்

---------- Forwarded message ----------
From: Geetha Sambasivam 
Date: Thu, Mar 1, 2012 at 9:39 AM
Subject: Re: [MinTamil] Re: [தமிழ் வாசல்] அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29: ரிக்கார்டு மனிதர்!
To: thamizhvaasal@googlegroups.com

வேறொரு குழுமத்தின் செய்தி ஒன்றைப் படித்தேன்.  ஹரியானா ஹிசாரில் ஒரு ஏழை மாணவன் நன்றாய்ப் படித்து முதலில் வருகிறான் என்பதற்காக அவனுடைய சக மாணவர்கள் இருவர் அவனைக் கொன்றுவிட்டனராம். இதைப் படித்தபோது படிப்பு முறையின் மேலும் சந்தேகம் இருக்கிறது.   ஏனெனில் வெறும் ஏட்டுப்படிப்புத் தான் கற்பிக்கப் படுகிறது. நம் படிப்பு முறை என்று மாறியதோ அன்றிலிருந்து ஆன்மிகப் பாடம் என்பதே இல்லாமல் போனது.  ஏட்டுப்படிப்புப் பெரும்பாலோரை நாத்திகமே பேச வைக்கிறது.  தப்பு எனக் கூறவில்லை.

அதோடு கற்பிக்கையில் மனிதனையும் பாலூட்டும் மிருகங்களில் ஒன்றாகவே கற்பிக்கப் படுகிறோம். இதன்மூலம் மாணவர்களுக்குத் தங்கள் மிருக குணங்களே மிஞ்சிப்போகின்றனவோ என்றும் தோன்றுகிறது.  ஆன்மதாகத்தை நிறைவேற்ற முடியாத, ஆன்மாவின் இருப்பை அறிய மாணவர்களுக்குச் சொல்லித்தராத படிப்பு படிப்பு என்றே ஒத்துக்கொள்ள முடியவில்லை.  :(((((

படிப்பு முறை மாறினால் அனைத்தும் மாற வாய்ப்பு இருக்கிறது.  அப்போது தான் நாம் எவற்றை இழக்கிறோம் என்பதும் புரியும். இழந்தவைகளை மீட்கவும் ஆரம்பிப்போம். 

கை வலி சுத்தமாய் இல்லாமல் போகவும் பிரார்த்திக்கிறேன்.

On Thu, Mar 1, 2012 at 9:25 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
1. வெர்ச்சுவலா சேவித்தால் கூட 'வந்தனம்!வந்தணன்! என்று ஆசிகள் பல கூறுவார், பேராசிரியர்.
2. இனி தகரியமாக விஷ்கன்ஷின் போகலாம்.
3. படிச்ச உடனேயே, கை வலி தேவலை.

செல்வன் Thu, Mar 1, 2012 at 5:36 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

பேராசிரியர் ஐயா,

சும்மா புகுந்து கலக்கீருக்கீங்க:-)..ஆபிசுக்கு போயிட்டு சாயந்திரம் வந்து பதில் எழுதறேன்..மன்னிக்கவும் தலைவி பாஷையில் சப்பைகட்டு கட்டறேன்:-))

-- 
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்

செல்வன் Fri, Mar 2, 2012 at 8:13 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

பேராசிரியர் ஐயா

வணக்கம். மடலை ரசித்து படித்தேன். பல இடங்களில் சுதந்திர பொருளாதாரத்தையும், அமெரிக்கா செய்வதையும் ஒன்றாக கருதி எழுதி உள்ளீர்கள். உதா: கோல்ட் ஸ்டாண்டர்டில் இருந்து டாலர் ஸ்டாண்டர்டுக்கு மாறியது. சுதந்திர பொருளாதாரத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடுத்து உங்கள் புகார்கள் பலவும் கோக்கின் பிளீச்சிமடா ஆலையை சுற்றி வருகின்றன. முதலில் நீர் ஆதாரத்தை கெடுத்துகொண்டு கோக் பாக்டரியை கட்டுவது சுதந்திர பொருளாதாரம் என யாரும் கூறவில்லை. அடுத்து அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சியை குறைபாடாக கூறியுள்ளீர்கள். பங்கு ஏறினால் விற்பவருக்கு நல்லது, குறைந்தால் வாங்குபவருக்கு நல்லது. இதில் யார் பாதிக்கபட்டவர்? பங்கு சந்தை என்றால் ஏற்றம், இறக்கம் எல்லாம் தான் இருக்கும்.அது தான் அதில் முதலீடு செய்வதில் உள்ள த்ரில்லே.

"சந்தையில் விலை குறைகிறது" என்றால் நுகர்வோர் வருத்தப்படவேண்டுமா, மகிழ்ச்சி அடையவேண்டுமா?மகிழ்ச்சி தானே அடையவேண்டும்?பிறகு ஏன் வருந்துகிறார்கள்?நீங்கள் ரெகுலராக தக்காளீ வாங்குகிறீர்கள்.தக்காளி விலை குறைந்தால் உங்களுக்கு நல்லது, இன்னும் நிறைய தக்காளி வாங்கலாம். இத்தனை நாள் வாங்காத விலை உயர்ந்த வகை தக்காளிகளை வாங்கலாம்.பங்குகளுக்கும் அதே விதிதான். ரியல் எஸ்டேட் சரிந்தால் அதேபோல் வீடு வாங்க இயலாமல் இருக்கும் நிறைய பேர் சந்தையில் வீடு வாங்கி ஹவுஸ் ஓனர்கள் ஆகலாம்.

எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் 150 ரூபாய்க்கு ஒரு பங்கு நல்ல விலை என்று வாங்கும் மக்கள், அடுத்த அரைமணிநேரத்தில் அதன் விலை 100 ரூபாய் என்று ஆனால் மேலும் அதிகமாகத்தானே வாங்கவேண்டும்? 100 ரூபாய் என்பது நூற்றைம்பது ரூபாயை விட நல்ல விலைதானே?நாளை அது ஐம்பது ரூபாயானால் இன்னமும் அதிகமாக அல்லவா அந்த பங்கை வாங்கவேண்டும்?இரண்டு நாளில் கம்பனியின் லாபம்,விற்பனை என்று எதுவும் மாறியிருக்க போவதில்லை.பங்கின் விலை தான் மாறுகிறது.
பங்கு சந்தையை சூதாட்டமாக கருதி ஓண்ணு, ரெண்டு நாளில் காசு பார்க்கும் சூதாடிகள் தான் பங்கு சந்தை வீழ்கிறது என வருந்தவேண்டும்.நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்கள் இதனால் மகிழ்ச்சி தான் அடையவேண்டும்.
நீங்கள் ஒரு வீட்டை பத்து லட்சத்துக்கு வாங்குகிறீர்கள்.அதன்பின் அந்த வீட்டின் விலை சந்தையில் தினமும் மாறும்.ஒரு வாரம் கழித்து 9.5 லட்சம் தான் அதன் விலையாக இருக்கும்,அதன்பின் 9 லட்சம், 8 லட்சம்,11 லட்சம்,12 லட்சம் என விலை மாறிக்கொண்டே இருக்கும்.விலை ஏறும்போதும் இறங்கும்போதும் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களா?இல்லை வீட்டைத்தான் விற்பீர்களா?
மாட்டோம்..பங்குசந்தைக்கும் அதே விதிதான்.
பங்குசந்தை முதலீடு நீண்டகால முதலீடு.நீண்டகால முதலீட்டாளர்கள் விலை குறைந்தால் மகிழ்ச்சியே அடையவேண்டும்.மேலும் அதிகமாக வாங்கவேண்டும்.
வாரன் பஃப்பட் இதை மிக அழகாக சொன்னார்.
Think of yourself as owning a share in a business in partners with others. One of your partners, say Mr Market, is somewhat of a neurotic who on any given day will offer to buy your share or sell you his at a specific price. His moods can fluctuate anywhere between incredible optimism and overwhelming depression. One day he will nominate a higher price to buy or sell, the next day he might increase it, lower it, or even appear uninterested in whether he buys or sells.
Mr Market’s judgment is formed more by mood swings that by rational thought and that this gives the wise investor buying and selling opportunities. If Mr Market’s price is unreasonably high, then wise investors have the opportunity to sell. On the other hand, if it is unreasonably low, then they have the opportunity to buy.
But the point to note is "Mr.markets purse should interest you, but not his moods and behaviors"
முதலீட்டாளன் என்ற முறையில் பங்குசந்தை, ரியல் எஸ்டேட் வீழ்ச்சியை ஆவலுடன் வரவேற்கிறேன்.
பங்கு சந்தையில் ரத்த ஆறு ஓடட்டும்.Who cares? Happy investing.

கோக்கின் பிளிச்சிமடா ஆலையை பற்றி கிளப்பி விடபட்டதெல்லாம் வதந்தி.கோக் பிளிச்சிமடாவில் நீர் ஆதாரங்களை உறிஞ்சுகிறதா என சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான பிரகாஷ் காராட்டின் கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் செய்புதீன் ஷேக் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் பின்வருமாறு:
மத்திய நீர்வளத் துறை பிளாச்சிமடை தண்ணீர்ப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிளாச்சிமடை உள்ளிட்ட பெருமாட்டிப் பஞ்சாயத்திலுள்ள நிலத்தடி நீரில் 92 விழுக்காட்டையும் அங்குள்ள விவசாயிகளின் குழாய்க் கிணறுகள் தாம் உறிஞ்சியெடுக்கின்றன. சரியாகச் சொன்னால் பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 17.4 மில்லியன் கன மீட்டர் நீர் இன்று உள்ளது. இதில் 16.12 மில்லியன் கன மீட்டர் நீர் விவசாயப் பாசனத்துக்கும் 1.08 மில்லியன் கன மீட்டர் நீர் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 0.2 மில்லியன் கன மீட்டர் நீரைத்தான் கொக்கோகோலா தொழிற் சாலையும் பிற மதுத் தயாரிப்பு ஆலைகளும் பங்கிட்டுக் கொள்கின்றன. பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 508 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அவற்றில் கொக்கோகோலாவுக்கு உரிமையானவை ஐந்து. சாராய ஆலைக்குச் சொந்தமானது இரண்டு.
பொய்களை சொல்லி மக்களை ஏய்த்த மேதா பட்கரும், வந்தனா சிவாவும் இதுபற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை, மயான அமைதியில் ஆழ்ந்துவிட்டார்கள்.
கோக் இப்போது பிளாச்சிமடாவில் இல்லை. ஆதிவாசிகளுக்கு இப்போதும் நீர் கிடைப்பது இல்லை. அவர்களுக்கு எப்போதும் நீர் கிடைத்தது இல்லை. காரணம் இருக்கும் நீரை அரசு அவர்களுக்கு ஒழுங்காக வழங்கியதே இல்லை. கோக் இருந்திருந்தால் வேலையாவது கிடைத்திருக்கும். அதுவும் அம்போ.

கோல்ட் ஸ்டாண்டர்ட் காலபோக்கில் இயல்பாக சரிந்துவிட்டது,. உலகில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு நானூறு பில்லியன் டாலர் மட்டுமே. மொத்த பண சப்ளைக்கும் இதற்கும் துளி சம்பந்தம் இல்லை. இன்று டாலர் ஸ்டாண்டர்ட் என பெரிதாக ஒன்றும் இல்லை. ஐரோப்பிய நாடுகள் யூரோவில் இயங்குகின்றன. மற்ற நாடுகள் தாம் விரும்பிய கரன்சியை பயன்படுத்தி சந்தையில் பொருளை வாங்கலாம். இந்தியாவை ரூபாயை கொடுத்து அரேபியாவிடம் எண்ணை வாங்க சொல்லுங்கள். அரேபியர்களுக்கு ரூபாய் தேவை என்றால் வாங்கி கொள்கிறார்கள்."இல்லை எங்களுக்கு டாலர் தான் தேவை,ரூபாய் மதிப்பு சரியும் என பயமா இருக்கு" என அவர்கள் சொன்னால் அது டாலரின் குற்றமா, ரூபாயின் குற்றமா?

அமெரிக்காவிலிருந்து கோக்கை எக்ஸ்போர்ட் செய்வார்களா என கேட்டுள்ளீர்கள். அது கோக்கின் விலையை கட்டுபடியாகாத அளவு உயர்த்தும். நீரை கோக்குக்கு தருவதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் லட்சகணகான லிட்டர் கோக்கை 20,000 மைல் கன்டெய்னரில் கொண்டுவருவது கோக்கை மூட நல்ல வழி:-)
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Mar 2, 2012 at 3:07 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram

2012/3/1 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
நல்ல வேளையா எங்க வீட்டிலே பெண்ணுக்கோ,பையருக்கோ அவங்க குடும்பத்துக்கோ இந்த பெப்சி, கோக் பைத்தியம் இல்லை.  எல்லாருமே ஃப்ரெஷ் ஜூஸ்தான் விரும்புவாங்க.

நானும் அதே.. கோக் குடித்து 13 வருடங்களுக்கு மேலாகின்றது.  எலுமிச்சம் பழச்சாறும் காரட் சாறும் ஆரஞ்சு ஆப்பிள் சாரும், இல்லையென்றால் வெறும் தன்னீர்.. இது தரும் சுவை கோலாவின் சர்க்கரை கலந்த சுவையை விட மேல். என்பது என் அபிப்ராயம். என் தாக்கத்தினால் என் வீட்டுக்காரரும் என் நாத்தனாரும் தினமும் இப்போது எலுமிச்சம் பழச்சாறு குடிக்கின்றனர். :-)

சுபா
[Quoted text hidden]

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
[Quoted text hidden]

No comments:

Post a Comment