Saturday, November 2, 2013

ஜனோபகாரம்:நவம்பர் 3:அன்றொரு நாள்




அன்றொரு நாள்: நவம்பர் 3 ஜனோபகாரம்

Innamburan Innamburan 3 November 2011 15:58


அன்றொரு நாள்: நவம்பர் 3
ஜனோபகாரம்
ராஜ்யபாரம் வகிப்போர் பொது ஜன அபிப்ராயத்தை மதித்து இயங்கவேண்டும் என்ற கோட்பாட்டை ராமராஜ்யமும் மதிக்கும்; ஜனநாயகமும் மதிக்கும். முகமூடி யாதாயினும், கொடுங்கோலாட்சி அதை உதைக்கும். முன்னதற்கு செய்தியும் வேண்டும்; செய்தி விமர்சனமும் நல்வரவு. பின்னதற்கு செய்தி ஒரு கருவி; விமர்சனம் பிரச்சாரத்துக்கு ஒரு உபகரணம்; மட்டுறுத்தல் ஒரு ஆயுதம். கூடன்பெர்க் என்ற ஜெர்மானியரின் அச்சு இயந்திரம் வந்த பிறகு தான், இதழ்களுக்கு நல்ல காலம் பிறந்தது. அச்சுத்திறன் கூட, கூட, இதழியலும் செழித்தது. தற்காலம் இணைய தளத்தில் அவை பீடுநடை போடுகின்றன. 
நவம்பர் 3, 1838 ம் தேதி ஜனித்தது, உலக அளவில் அதிக விற்பனையாகும் Times of India என்ற புகழ் வாய்ந்த இந்திய நாளிதழின் பூர்வாசிரமம் ஆன The Bombay Times and Journal of Commerce. உலகின் முதல் நாளிதழ் The Daily Courant 1702 ல் இங்கிலாந்தில் வந்தது. அதற்கும் முன்னால் அமெரிக்காவில் 1690 ல் வந்த Publick Occurrences both Foreighn and Domestick ஒரு நாள் தான் வாழ்ந்தது எனினும், ஒரு துணிச்சலான வழியில் வாசகர்களின் கருத்துக்களுக்கு அடி கோலியது. வாசகர்கள் தன் கருத்தை எழுதி, மற்றவர்களுக்கு அனுப்ப வழி. அப்போதே லைசன்ஸ் பிரச்னை. மூடு விழா. இந்தியாவில் ஒரு கல்கத்தா இதழாசிரியருக்கு நடந்தது போல, பிரிட்டீஷ் துரைத்தனத்தாரை கடுமையாகக் குறை கூறியதற்காக, 1735ல் ந்யூ யார்க்கில், பீட்டர் ஸெங்கர் கைது செய்யப்பட்டார். தான் எழுதியது உண்மை என்று நிரூபணம் செய்து, அவர் விடுதலை பெற்றார். அன்று தான் பேச்சுரிமை பெற்ற இதழிலக்கியம் ஈன்றெடுக்கப்பட்டது எனலாம். (தற்காலம் ‘காசுரிமை’ இதழிலக்கியம் கோவாவில் பேசப்படுகிறது!). The Bombay Times and Journal of Commerce பிறந்து 13 வருடங்களுக்கு பிறகே, 1851ல் இதழியலின் உச்சஸ்தானத்தில் இருக்கும் ந்யூ யார்க் டைம்ஸ் பிறந்தது. இனி, ஊர் சுற்ற வேண்டாம். மும்பைக்கு வருவோம். 
வாரம் இருமுறை என்று தொடங்கிய இந்த இதழ் 1850ல் நாளிதழாக மாறியது. 1861ல் தற்கால நாமம் பூண்டது. நிறுவனரும், முதல் ஆசிரியருமான ராபர்ட் நைட் 1857 வருட ‘சிப்பாய் கலகத்திற்கு’, பிரிட்டீஷ் ராணுவத்தை குறை கூறினார். அத்துடன் நிற்காமல், பிரிட்டீஷாரின் நிர்வாஹத்திறனின்மை, பேராசை, நாடு பிடிப்பு, வரிப்பளு, இந்திய மரபை மீறிய கல்விக்கொள்கை இவற்றையெல்லாம் சாடினார். அவர் இதழியல் உரிமை மறுக்கப்படுவது, அச்சுறுத்தல், அரசும், வணிகமும், மற்ற சக்திகளும் இதழியலை ஏறி மிதிப்பது ஆகியவற்றை எதிர்த்தார் என்று அந்த இதழின் இணைய தளம் கூறுகிறது. அது, தற்காலம் 70 லக்ஷம் மக்கள் அவ்விதழை படிப்பதாகவும், இணைய தளத்திலும் அது சக்கை போடு பாடுவதாக, சான்றுகள் அளிக்கிறது. தொலை & தொல்லைக்காட்சிகளிலும் இது பிச்சு உதறுவதை பார்க்கிறோம். இப்போதெல்லாம், ஒவ்வாரு இதழாயலயமும் லாயமாக (stable) கருதப்படுகின்றன.
இதோ டைம்ஸ் ஆஃப் இந்தியா லாயம்;
http://www.timesofindia.com (The Times of India)
http://www.economictimes.com (Economic Times)
http://www.syndication.indiatimes.com (Times Syndication Service)
http://www.educationtimes.com (Education Times – A comprehensive education portal)
http://www.timesascent.in (Times Ascent – A HR community portal)
http://www.timesjobs.com (Times Jobs.com – A job portal)
http://www.simplymarry.com (Simply Marry.com – A matrimonial portal)
http://www.magicbricks.com (Margi Bricks – A real estate portal)

கொஞ்சம் போர் அடிக்கிறது இல்லை. விஷயம் அப்படி. அதான், ஹால்ட் போட்டுட்டேனே.
இன்னம்பூரான்
03 11 0211

Times--I-B--V-8078-40_b.jpg

உசாத்துணை:

Friday, November 1, 2013

லக்ஷதீபம்:நவம்பர் 2 :அன்றொரு நாள்

I


அன்றொரு நாள்: நவம்பர் 2 லக்ஷதீபம்

Innamburan Innamburan 2 November 2011 19:03

அன்றொரு நாள்: நவம்பர் 2
லக்ஷதீபம்
.நூறு ஒத்தையடி பாதைகள் (’śatapatha brāhmaṇa:शतपथ ब्राह्मण) என்ற ஷுக்ல யஜுர்வேத சம்பிரதாய/சடங்கு தத்துவ போதனையின் 211 வது ஸ்லோகத்தை என்னால் இயன்ற அளவு, எளிய தமிழில்: ஒரு உரையாடல்: மனம், சொல், குருநாதர்(பிரகஸ்பதி).
ம: யானே உன்னதம்!
சொ: யானல்லவோ உன்னதம்!
ம: எனக்கு புரியாததை நீ பேசமாட்டாய்; என்னை பிரதிபலிக்கத்தான் உன்னால் இயலும்; என் வழி நடப்பது உன் இயல்பு. யானே உன்னதம் என்பது திண்ணம்.
சொ: என்ன பேச்சு இது? நீ அறிந்ததை, நானல்லவோ சொல்லி பரப்புகிறேன். நானில்லாமல் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லை. யானே உன்னதம் என்பது திண்ணம்.
[இருவரும் பிரகஸ்பதியிடம் மத்யஸ்தம் நாடுகின்றனர்.]
பி. (சொல்லை நோக்கி) மனம் உன்னை விட உன்னதமானது.’நீ வெறும் கண்ணாடி; விளக்கு அன்று. மேலும் மனம் போன போக்கில் தான் பேசுவாய்.’ (இது என் எழுத்து: மொழிபெயர்ப்பு அல்ல). நீ தாழ்ந்தவன் தான். ஐயமே இல்லை.
[இனி வேறு விஷயம். எதற்கும் பின் குறிப்பு நோக்குக].
*
நினைவிலிருந்து: ஆந்திராவில் திவி என்ற இடத்தில் கடல் கொந்தளித்தது;புயல்;வெள்ளம்; நூற்றுக்கணக்காணவர்கள் துர்மரணம்; அங்க அடையாளங்கள் கூட கிடைக்கவில்லை. கலவை என்ற குக்கிராமத்தில் இருந்த மஹா பெரியவா, நடு இரவில், தீடீரென்று நடக்கத்தொடங்கினார். மற்றவர்கள், அடித்துப்பிடித்துக்கொண்டு கூடோடி வர. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் லக்ஷதீபம் ஏற்றி துவக்கினார். துர்மரணம் அடைந்தோரின் சாந்திக்கு விளக்கேற்றினார் என்றார்கள்.
*
தர்ப்பணம் ஒரு நீத்தோர் கடன். அதில், முன்பின் தெரியாதவர்களுக்கும், தனது மூதாதையர்களுக்குப் போல, மந்திரம் ஓதி தொழுகை. வருடாந்திர சடங்கு, திதி, ச்ரார்த்தம், தெவசம், திருவத்யானம், கல்லறை வணக்கம், கீழவெண்மணி சாராயப்படையல், நினைவாஞ்சலி எல்லாம் பன்முகம் கொண்ட ஒரே முகம்.
*
‘யோக மந்திரம்’ ஸ்தாபகரும், தற்கால யோகாப்பியாச குருநாதரும், 101 வருடம் வாழ்ந்த சான்றோன் திரு. கிருஷ்ணாமாச்சாரியார், சாங்கோபாங்கமாக, சம்பிரதாயம் தழுவி, இம்மி அளவும் பிசகாமல், தாராளமாக செலவு செய்து தன் பெற்றோர்களுக்கு திருவத்யானம் செய்வார். ஸர் அஷுதோஷ் முக்கர்ஜியின் அணுகுமுறையை பற்றி சொல்லியிருக்கிறேன். மற்றொரு வைணவ சான்றோன், தன் உடலை, தானம் செய்து விட்டார். பகவத் கீதையில் சொன்னபடி பார்த்தால், அது தவறாகப்படவில்லை. தற்காலம், இந்த நீத்தோர் கடன் வணிக மயம். 
*
இவ்வுலகில் பிறந்து, மறைந்தவர்களில் பெரும்பாலோருக்கு எந்த விதமான நினைவாஞ்சலியும் கிடையா. அவர்களோ, அவர்களின் சந்ததியோ எதையும் இழந்ததாகத் தோன்றவில்லை.
*
இந்த பீடிகை எதற்கு என்றால்?
நவம்பர் 2ம் தேதி, உலகின் பல பாகங்களில், நீத்தார் தொழுகை தினமாகக் கருதப்படுகிறது; வணங்குதல், விழா,படையல் எல்லாம். சைனாவில் ஆவிகளுக்கு விருந்தும் விழாவும்;ஜப்பானில் ‘உல்லம்பன’ (சம்ஸ்க்ருதத்தில் ‘தலைகீழ்’) விழா; ரோமானியர்களின் ‘லெமூரியா” (‘ நிம்மதியிழந்த ஆவிகள்) சடங்கு; டைரால் பகுதியில், கேக் செய்து வைக்கிறார்கள்;பிரட்டனியில் கல்லறைக்கு பாலபிஷேகம்; பொலீவியாவில் கல்லறையில் படையலை வைத்துச்செல்வது; பிரேசில் புஷ்பாஞ்சலி; மால்டாவில் சொந்தபந்தம் என்று மட்டுமில்லாமல் மயானங்களுக்கு யாத்திரை. கிருத்துவ மதம் ‘புனிதர்கள் தினம்’. ‘ஆவிகள் தினம்’ என்று உண்டு. அன்று ஆவிகள் சுற்றத்துடன் விருந்துண்ண வருவதாக ஐதீகம். வழி காட்ட மெழுகுவர்த்திகள் ஏற்றி வைப்பார்கள். ஆனால், மெக்சிகோவில் நடப்பதே வேறு.
*
மெக்சிகோவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் தாக்கம் அதிகம். அவர்கள் நவம்பர் 1 & 2 Día de los Muertos என்ற நீத்தோர் தினம் கொண்டாடும் விதம் அலாதி: தனி தனி பிரார்த்தனை கருவறைகள், சர்க்கரையில் உருவாக்கிய மண்டையோடுகள், அரளிப்பூ மாலைகள், படையல் இத்யாதி. ‘கலகாஸ்’ எனப்படும் மரக்கட்டையால் செய்யப்பட்ட மண்டையோடுகளை அணிந்து, நீத்தார் அருமை சாற்றி நடனம், அவற்றை பூஜிப்பது, சர்க்கை மண்டையோடுகளை உற்றார் உண்பது என்றெல்லாம் சடங்குகள் நடக்கின்றன. அமெரிக்காவில் அரிஸோனா பல்கலைக்கழகத்தில் கூட இவையெல்லாம் காணலாம்.
விஷயத்துக்கு வருகிறேன். சைனாவில் டாவோயிஸ்ட், பெளத்த சமயங்கள், ஜப்பானில் ஷிண்டோ, பெளத்த சமயங்கள், இந்தியாவில் சனாதனம், புராணம், கூடவே வளர்ந்த ஹிந்து மதம், கிருத்துவ மதம், தாஜ் மஹால் அஞ்சலியையும், ஆஜ்மீர் தர்கா, ஹாஜ் தொழுகையையும் போற்றும் இஸ்லாமியம் ஆகிய சமயம் சார்ந்த நீத்தார் சடங்குகளுக்கு, பல்லாயிரம் வருடங்கள் முன்னாலிருந்து பழங்குடி மக்கள், இந்த ‘பன்முகம் கொண்ட ஒரே முகமான’ நீத்தார் பொருட்டான சடங்குகளை, விமரிசையாக, அற்புதமாக ‘மனம் போன போக்கில்’
நேர்த்தியாக, அதீத அழகுடை கற்பனையோடு நடத்தி வந்திருக்கிறார்கள் என்று இந்த மெக்சிகொவின் Día de los Muertos விழா கூறுகிறது. கிருத்துவ சமய வெறியுடன் அங்கு வந்த ஸ்பானியர்கள், மரணத்தை வாழ்வின் முடிபு என்றனர். மெக்சிகோ பழங்குடிகளோ அதை வாழ்வின் அடுத்த படி என்று தழுவினர். ஆக மொத்தம், கிருத்துவ மதம் இந்த விழாவை தத்து எடுத்துக்கொண்டு, தந்திரமாக, விழா நாளையே கிருத்துவ விழா தினத்தில் பொருத்திக் கொண்டது. பேராசிரியர் கான்ஸாலவஸ் சொல்கிறமாதிரி, பழங்குடிகள் வலியிலிருந்து மரணத்தை, செல்வத்தை ஏழ்மையிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. எல்லாமே ஒரு தொடர்கதை தான். மூவாயிரம் வருடங்களுக்கெல்லாம் முன்னாடியே, ‘‘மீக்-டெகா-கீ-வாடி’ என்ற கொற்றவையை வணங்கினார்கள், அவ்விடத்து அஸ்டெக் பழங்குடி மக்கள். அவள் தான் நீத்தார் எலும்புகளை பாதுகாப்பவள். விழாத்தலைவி அவளே. அவளுடைய சிலையில் சதைப்பற்று இல்லை. விண்மீன்களை விழுங்குபவள். எனவே திறந்த வாய். ஒரு ஐயம். நம்மூர் பச்சைக்காளி, பவளக்காளி, ஹிந்து மதத்திற்கு முந்தியவளா?
இன்னம்பூரான்
02 11 2011
பி.கு: இம்மாதிரி விஷயங்களை பேச நிறைய படிக்க வேண்டும். எழுத வேண்டும், பக்கம் பக்கமாக. இன்று அந்த தொடர்கதையின் ஒரு துளி தான் சொட்டியது. சில நாட்களாக தொன்மை (Mythology, Myths, ‘சிந்தனை செய்யாதே, மனமே’) என்னை ஆட்கொண்டு விட்டது. இயன்றவரை, மற்றவர்களுக்கு ஆர்வமிருந்தால் பகிர்ந்து கொள்கிறேன். கற்றுக்கொண்டே எழுதுவதால் ‘மானஸ தோஷ க்ஷந்தவ்யஹ’. தவறு இருந்தால், திருத்துங்கள். திரு. தேவ் படிக்க நேர்ந்தால், அவரிடமிருந்து शतपथ ब्राह्मण பற்றி மேலதிக விஷயதானம் கிடைக்கலாம்.
tumblr_lmpwviSh841qzp3reo1_400.jpgtanjai-kodiamman460.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 2 November 2011 19:34

பல புதிய விஷயங்களைத் தாங்கிய அருமையான இடுகை.  தேவ் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கும் காத்திருக்கேன். நன்றி.
2011/11/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 2

Dhivakar 3 November 2011 05:23


>>நினைவிலிருந்து: ஆந்திராவில் திவி என்ற இடத்தில் கடல் கொந்தளித்தது;புயல்;வெள்ளம்; நூற்றுக்கணக்காணவர்கள் துர்மரணம்; அங்க அடையாளங்கள் கூட கிடைக்கவில்லை. கலவை என்ற குக்கிராமத்தில் இருந்த மஹா பெரியவா, நடு இரவில், தீடீரென்று நடக்கத்தொடங்கினார். மற்றவர்கள், அடித்துப்பிடித்துக்கொண்டு கூடோடி வர. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் லக்ஷதீபம் ஏற்றி துவக்கினார். துர்மரணம் அடைந்தோரின் சாந்திக்கு விளக்கேற்றினார் என்றார்கள்.<<


இந்த தீபாவளி சிறப்பிதழில் நான் எழுதின கட்டுரை இந்த முகாந்திரத்தை வைத்துதான்.

கடல் கொந்தளித்து அழித்த திவிசீமைக்கு பத்திரிகையாளன் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தவன். அந்தச் சமயத்தில் வாழ்க்கையின் உச்சக்கட்ட விரக்திக்கு என்னை அழைத்துச் சென்ற நாள் அது. கால்நடைகளும் மனிதர்களும் வித்தியாஸமின்றி மண்ணில், சேற்றில், நீரில் புதைந்து ஒன்றோடு ஒன்று கலந்து அழிந்த அந்தக் கோலம்.. வாழ்நாளில் எப்படி மறக்கமுடியும்?

திவாகர்


Dhivakar 3 November 2011 05:24


மன்னிக்கவும், ’வல்லமையில் எழுதிய’ இந்த தீபாவளி சிறப்பிதழில் என வந்திருக்கவேண்டும்.
[Quoted text hidden]

கி.காளைராசன் 3 November 2011 06:52

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
நமது மஹாலயபட்ச அமாவாசை வழிபாட்டை நினைவு கூர்வதாக அமைந்துள்ளன.  உலக மக்கள் எவ்வாறு நீத்தாரை வழிபடுகின்றனர் என்பதைச் சுருக்கிக் கொடுத்துவிட்டீர்கள்.
தங்களது பதிவு அருமை.


2011/11/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நினைவிலிருந்து: ஆந்திராவில் திவி என்ற இடத்தில் கடல் கொந்தளித்தது;புயல்;வெள்ளம்; நூற்றுக்கணக்காணவர்கள் துர்மரணம்; அங்க அடையாளங்கள் கூட கிடைக்கவில்லை. கலவை என்ற குக்கிராமத்தில் இருந்த மஹா பெரியவா, நடு இரவில், தீடீரென்று நடக்கத்தொடங்கினார். மற்றவர்கள், அடித்துப்பிடித்துக்கொண்டு கூடோடி வர. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் லக்ஷதீபம் ஏற்றி துவக்கினார். துர்மரணம் அடைந்தோரின் சாந்திக்கு விளக்கேற்றினார் என்றார்கள்.

மஹா பெரியவர்.
எல்லோரையும் தன் சுற்றமாகப் பார்க்கும் மனம். ‘இ‘றை-குணம்.

-- 




எம்.கே.டி. பாகவதர்:அன்றொரு நாள்: நவம்பர் 1: I & II




அன்றொரு நாள்: நவம்பர் 1: I & II

Innamburan Innamburan 1 November 2011 18:38

அன்றொரு நாள்: நவம்பர் 1: I & II

  1. இந்தியாவின் பல மாநிலங்களில் நவம்பர் 1 விடுமுறையும், விழாவாகவும் இருக்கும். கேரள பிறவி தினம்: நவம்பர் 1, 1956. இந்திய விடுதலை தினத்துக்கு முன் திருவிதாங்கூர், கொச்சின் சமஸ்தானங்களும், மலபார் மாகாணமும் இருந்த பிராந்தியம் +/- கொஞ்சம் கொடுக்கல் வாங்கல். அதே தினம் கன்னட ராஜ்யோத்ஸவம். அன்று ராஜ்யோத்ஸவ பரிசில்கள் அளிக்கப்படும். துவஜாரோகணம். கவர்னரும், முதல்வரும் உரை ஆற்றுவர். விழா & விடுமுறை. அதே தினம் ஆந்திரபிரதேசம் உதயமாயிற்று. மூன்று வருடங்களுக்கு சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து வந்த ஆந்திர மாநிலமும், மாஜி ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் தெலிங்கானா பிராந்தியங்களும் இந்த பிராந்தியத்தில் அடங்கின. 1969 லிருந்து ஜெய்-தெலிங்கானா இயக்கம் வலுத்து வருகிறது. தற்காலம் மும்முரமான பிரிவினை சக்திகள் இயங்குகின்றன. ஹரியானா மாநிலம் ஜனிக்கப்பட்ட தினம் நவம்பர் 1, 1966. தலைக்கு -அதாவது - சண்டிகர் நகரத்துக்கு தாவா. ‘உனக்கும் இல்லாமல், எனக்கும் இல்லாமல்’ அது மத்திய அரசின் குட்டி ராஜ்யமானது. 1986ல் பஞ்சாப் மாநிலத்துக்கு போயிருக்கவேண்டும், உடன்பாடுகள் படி. அது நடக்க வில்லை. மே 1960ல் உதயமான குஜராத் மாநிலம், மற்ற பிரிவினைகளை பற்றி இங்கு பேசப்படவில்லை.  எனக்கென்னமோ, நவம்பர் முதல் தேதி உதறல் தேதி. இந்த மொழிவாரி இந்திய பாகப்பிரிவினை, பங்காளி கூறு, தாயாதி கட்டி புரளல் ஆகியவற்றுடன் எனக்கு ஒவ்வாமை. 1954 லிலியே பட்டி மன்றம் நடத்தியாகி விட்டது.
  2. இன்று ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர் அவர்களின் நினைவு தினம். நவம்பர் 1, 1959 அன்று 50 வயது கூட ஆகாத நிலையில், சினிமா உலகில் இறவா புகழ் பெற்று, மறைந்தார். இவரை பற்றி தகவல் தேட தேவையற்று போனது, திரு.இரா. செழியன் அவர்களின் தினமணி கட்டுரையும், லக்ஷ்மணஸ்ருதியின் இசை  பொக்கிஷம் கிடைத்த பின். நன்றியுடன், காப்புரிமையை மதித்து அவற்றை இணைக்கிறேன். நான் படித்த செய்தி ஒன்று இதில் இல்லை. ஆடம்பரப்பிரியனான எம்.கே.டி. பாகவதர் எப்போதும் புனுகு, அத்தர், நகை நட்டுகள், ஜரிகை ஆடை, வெள்ளியும், தங்கமும், வைரமுமாகத்தான் பிரயாணம் செய்வார்.  கூட பிரயாணம் செய்த ஒரு காந்தி பக்தை இவரை கேலி செய்து, மனதை மாற்றியதாகவும், அன்றிலிருந்து எம்.கே.டி. பாகவதர் எளிய உடையில் வலம் வந்தார் என்றும் படித்தேன். அவர் தீரர் சத்தியமூர்த்தியின் அருமந்தப்புதல்வி  திருமதி. லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி என்று ஞாபகம். திரு.நரசய்யா அவர்கள் இதை பார்க்க நேரிட்டால், விவரம் தெரிய வரலாம். எம்.கே.டி. பாகவதருக்கு ஊக்கம் அளித்த ஃஎப்.ஜி.நடேசய்யரின் பாமர கீர்த்தி ஒரு நாள் எழுத வேண்டும்.
*
First Published : 01 Mar 2010 12:48:00 AM IST

pastedGraphic.pdf


தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் (இன்று) தொடங்குகிறது.

மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.

÷தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.

திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி ரசிக ரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார்.

அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.

ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின்  இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.

1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.

1934-ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.

அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.

÷திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.

 ÷அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸôரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், "சினிமா தூது' என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.

÷திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸôர் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்' என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.

 1944 நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

1944 நவம்பர் 27-ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக  மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.

சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

 அதன்மீது மேலும் லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.

அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது: இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.

இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.

முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.

 நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார்.

பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.

எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959-ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.
இன்னம்பூரான்
01 11 2011
220px-India1760_1905.jpg
இந்தியா: 1947
thyagaraja.bmp
உசாத்துணை:
இரா. செழியன், தினமணி, 01 மார்ச் 2010

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடல்கள்
pastedGraphic_1.pdf

Thursday, October 31, 2013

விடாது கருப்பு!

அப்டேட்! லாலுவையும், ஜகுவையும் என்ன செய்யல்லாம்?
இன்னம்பூரான்
31 10 2013



விடாது கருப்பு!

Innamburan S.Soundararajan 11 March 2013 21:57

விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 
விதி வலியது என்பர் சிலர். மதியிழந்தோர் ‘தொப்’ என்று விழுவர் என்பர் சிலர். கதி இது தான், பொய்யும், புனைசுருட்டுமாக வாழ்வோருக்கு, என்பர் சிலர். எது எப்படி இருந்தாலும் நீதி வழுவாது என்பதற்கு ஒரு சான்று, இங்கே.

அவன் (58) அரசியல்வாதி; மக்களிடையே நன்மதிப்பு. தன் கட்சியின் தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டக்கூடும். அது மட்டுமல்ல. மின்சக்தித் துறையின் திறன்மிகுந்த அமைச்சர். அவள் (60) பிரபல பொருளியல் நிபுணர். இருபது வருட இல்லற வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள். ஒளிமயமான வாழ்க்கை எனலாம். எல்லாம் இன்று குப்புறக்கவிழ்ந்தன. குழந்தைகள் பாவம்.

நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்ததற்காக, இன்று எட்டு மாத சிறை தண்டனை அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டது. உடனே பிரசுரமும் ஆகி விட்டது. முதலில் இழைத்த குற்றம்: அவன் 2003ல்  வேகத்தடையை மீறி காரை ஓட்டினான். அது பெரிய குற்றம். உரிமத்தில் பதிவு செய்து விடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் காரோட்டும் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே, மூன்று முறை பிடிபட்டதால், இந்த தடவை கேமராவிடமிருந்து தப்ப முடியாத அவன், அந்த நிமிட சூழ்நிலையை (கேமராவுக்குக் கிடைத்த பிரகாசம் கம்மி.) குறுக்குப் புத்தியுடன் கணித்து, குற்றத்தை மனைவியை ஒத்துக்கொள்ள வைத்தான். அந்த பினாமி பேத்து மாத்து பெரிய குற்றம். அவள் அதை ஒத்துக்கொண்டதும் குற்றம். நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்தக் குற்றம்.  பல வருடங்கள் ஓடோடி போயின. இருவரும் மேலும், மேலும் பிரபலமாயினர்.

கனம் ஸெளத்வார்க் கோர்ட் ஜட்ஜ் ஸ்வீனி அவர்களின் தீர்வு 5 பக்கம் தான். எளிய ஆங்கிலம். சுற்றி வளைத்து ஒன்றும் பேசப்படவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அவனை (Chris Huhne) பார்த்து அவர் சொன்னது, அவனுக்கு, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருந்திருக்கும்.

~ ‘நீ குறுக்கு புத்தியுடன் மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் கொடியவன்.’

~ ‘நல்லது என்ன நடந்தது என்றால், உங்கள் இருவரின் மாயாஜாலம் வெட்ட வெளிச்சத்தில் வந்து விட்டது.’

~’ எத்தனை பொய்கள்! ‘

~ ‘துர்பாக்கியம் தான். நீங்கள் இருவரும் நெறி தவறாமல் வாழ்ந்திருந்தால் புகழேணியின் உச்சியில் இருந்திருப்பீர்கள். என் செய்வது? நீங்களே தலையில் மண் வாரி போட்டுக்கொண்டீர்கள்.’
~ ‘நீ உச்சாணிக்கிளைலிருந்து வீழ்ந்து விட்டாய். ஆனால், நீ உன் குற்றத்தை மறைக்காமல் இருந்தால், இந்த நிலைக்கு வந்து இருக்கமுடியாது.’ (நீ அதற்கு லாயக்கு இல்லை.)

~’ செய்த குற்றம் பெரிது. உனக்கு சால்ஜாப்புச் சொல்ல ஒன்றுமே இல்லை.’

அவளை (Vicky Pryce) பார்த்து அவர் சொன்னது, அவளுக்கு இரட்டை தண்டனை. ஏனெனில், அவன் கோர்ட்டுக்கு தன்னுடைய புதிய சிநேகிதியுடன் (Carina Trimingham) வந்திருந்தான்!

~’ நீ சூதுவாது நிறைந்தவள். கணவனுக்கு ஆசைக்கிழத்தி ஒருவள் இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், அவனை பழி வாங்கத்துடித்தாய்.’

~’ஆனால், தன் குற்றத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொண்டு, தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்து, நீ போலீசிடம் சொல்லாமல், ஊடகங்களிடம் போனாய்.’

~’ விடாது கருப்பு’ என்பதை அறிந்தும், பேத்து மாத்து செய்தாய்.’

~ முதலில், கணவனுக்காக சட்டவிரோதமாக உதவி செய்ததை நீ பொருட்படுத்த வில்லை. கணவனின் கட்டாயம் என்கிறாய். அது உண்மைக்கு ஒவ்வாத வாதம்.’ 

~’ ஆனால். அவனுடைய ஆசைக்கிழத்தி சமாச்சாரம் உன்னை பழி வாங்கும் பாதையில் இழுத்துச்செல்லும்போது, உன்னையும் மாட்டவைத்துக்கொண்டாய்.

உபரி சமாச்சாரங்கள்:
~ இந்த வழக்கில் அரசு செலவு: £117,558/- அதில் ஓரளவாவது குற்றவாளிகளிடம் வாங்கியிருப்பார்கள் போல. மேலும், £31,000 கேட்கப்போவதாக, போலீஸ் சொல்கிறது.
~ அவனின் கட்சித்தலைமை தண்டனை முடிந்த பின் அவர்களுக்கு நல்ல நேரம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறது.
~ குடும்ப நண்பர் ஓக்ஷாட் பிரபு, ‘இது அவர்கள் இருவருக்கும் பிரத்யேக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு துக்ககரமான சம்பவம்...’ என்றார்.

கொசுறு செய்திகள்:
அவள் பசங்களையே தந்தையை நிந்திக்க வைத்தாள்;
அவனுடைய ஆசைக்கிழத்திக்கு பெண்பாலார் சம்பந்தமும் இருந்தது வெளி வந்தது.
*
சரி. இது இங்கிலாந்து சமாச்சாரம். பொய் சொன்னதுக்காக மற்றொரு பிரபல அமைச்சர் ஜெயிலுக்குப் போனார். தன் சிநேகிதியின் தாதியின் வீசாவை பற்றி தன்னுடைய துறையிலேயே மென்மையாக விசாரித்த அமைச்சருக்கு வேலை போய் விட்டது.

நம் நாட்டில் எழும் வினாக்கள்:

~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:


1633204_efc43155.jpg
102K

sk natarajan 12 March 2013 02:17

சிந்திக்க வைக்கும் பதிவு 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

செல்வன் 12 March 2013 02:28

2013/3/11 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.


அரசு கம்பனிகள் அனைத்தும் தனியார் மயமானால் தான் இந்த பிரச்சனைகள் தீரும்.

--
செல்வன்

Nagarajan Vadivel12 March 2013 02:45


//அரசு கம்பனிகள் அனைத்தும் தனியார் மயமானால் தான் இந்த பிரச்சனைகள் தீரும்.//
திரும்பவும் மொதல்ல இருந்தா

அமெரிகா தாங்கும் உசிலம்பட்டி உட்பட தமிழ்நாடு தாங்காது
தனியார் மருத்துவம் தலைதூக்கியபின் கருவில் உள்ள பெண்குழந்தையை அழிக்கும் தொழில் கொடிகட்டிப் பறந்தது
நாங்க  தமிழர்கள்
சட்டத்தைச் சட்டப்படி மீறுவது எப்படின்னும் தெரியும்
சட்டவிரோதமான செயலைச் சட்டப்படி செய்யவும் தெரியும்
நாகராசன்


 

Tulsi Gopal 12 March 2013 03:13

நியூஸிலாந்து நாட்டிலும்  எனக்குத் தெரிஞ்சவரை 'ஏய் நான் யாருன்னு தெரியுமா'ன்னு  சவுண்டு வுட்டுக்கிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து பிரபலங்களு அரசியல் 'வியாதி'களும் தப்பிக்க முடியாது.

சீரியஸ் ·ப்ராடு ஆ·பீஸ்னு ஒண்ணு இருக்கு. அவுங்களுக்கு வேலையே கண்ணுலே விளக்கெண்ணெய்
ஊத்திக்கிட்டுப் பார்க்கறதுதான்.  பாராளுமன்றத்தின் மவொரி இனத்து பெண் அங்கத்தினர், ஒரு குறிப்பிட்ட
செலவுக்காகக் கொடுத்த அரசு நிதியை, தன்னோட உடல் இளைக்கறதுக்கான அறுவை சிகிச்சைக்குச் செலவு
செஞ்சுட்டாங்க. இவுங்களொட அறுவை சிகிச்சையையும், அழகான உடலையும் பாராட்டி, ஒரு பெண்கள்
பத்திரிக்கையில் வந்துச்சு. இது போதாதா? பொதுக் காசைத் தனக்குச் செலவு செஞ்சுக்கிட்டக் குற்றம்
நிரூபிக்கப்பட்டு இப்ப ரெண்டே முக்கால் வருஷம் சிறைதண்டனை கிடைச்சிருக்கு. குற்றத்துக்கு உடந்தையா
இருந்த அவுங்க கணவருக்கு ரெண்டு வருஷம்  ( home detention) ஹ†வுஸ் அரெஸ்ட்.


ஒரு மந்திரி, வீடு மாறிப்போகும்போது அவரோட பூனைகள் ரெண்டை அங்கேயே விட்டுட்டுப்போயிட்டார். 
11 நாள் கழிச்சுத்தான் அதுகளைக் கொண்டு போக வந்தார்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி,
 RSPCA அவர்மேலே மிருகவதைக் குற்றம் சாட்டி அவருக்கு எச்சரிக்கை விட்டுச்சு. இவரே ஒரு சமயம்
குடிச்சுட்டு கார் ஓட்டுனதாக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அடைஞ்சார். இதெல்லாம் மந்திரி பதவியில்
இருக்கும்போது நடந்துச்சு.

பிரதமரின் கார் குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாப் போச்சுன்னு போலீஸ் கேஸ் புக் பண்ணினது, கோர்ட்லே
வழக்கு பதிவாகி ஓட்டுனருக்குத் தண்டனையும், உள்ளெ இருந்த பிரதமருக்கு எச்சரிக்கையும் கிடைச்சது.

ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினர் மகளுக்கும், அவுங்க நண்பருக்கும் நண்பரின் காருக்குத் தீவச்சுட்டாங்கன்னு
குற்றம் பதிவாகி தண்டிச்சதுன்னு சிலதைச் சொல்லலாம்.

 பார்லிமெண்ட் அங்கம் ஒருவர் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டுட்டு  பணம் கொடுக்காமப் போயிட்டார்ன்னு  ஒரு  குற்றம். கடைசியில் ஃபைன் கட்டினார். 

ஏய்...யாருடா அண்ணன் மேலே  குத்தம் சொன்னது. அடிச்சு நொறுக்குங்கடா  ஹோட்டலைன்னு  ஆங்காரமாக வரும் அடிபொடிகள் இங்கே இல்லாமப்போச்சு பாருங்க:-)))))
2013/3/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 

என்றும் அன்புடன்,
துளசி
[Quoted text hidden]

Subashini Tremmel 12 March 2013 05:20



2013/3/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]
இன்னும் கூட இந்தப் பட்டியல் நீளலாம். 

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.
சமுதாயத்தின் நன்மையில் அக்கறை கொண்டோர் குறைவே. சுயநலத்தை மட்டுமே பேணும் சமூகமாக இருக்கும் வரை இன்னமும் பட்டியல் நீளும்.  சிந்தனை  மாற்றம் அடிப்படையில் தேவை.

மதுரையில் ஒரு பேராசிரியரிடமும் தினமலர் பத்திரிகை நிருபரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். இறைவழிபாட்டின் அடிப்படையில் எத்தனை ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என எங்கள் உரையாடல். நம் அறிவிற்கு நம்ப முடியாத ஒரு விஷயம்.. மதுரையில் ”அயல்நாடு செல்ல உதவி  செய்யும் மாரியம்மன்” என்று ஒரு அம்மன் கோயில் வந்துள்ளதாம். இதற்கு பத்திரிக்கையில் விளம்பரமும் தருகின்றார்கள். ஏமறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவருக்கு பலன் தான் என்ற சூழல். என்ன சொல்வது?

சுபா

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:




Innamburan S.Soundararajan 13 March 2013 15:00
To: mintamil@googlegroups.com
நன்றி பல. பேராசிரியர் காஷுவலாக பதில் போட்டிருக்கிறார். அவருக்கு உள்குத்து, ஊமைக்குத்து சமாச்சாரங்கள் நன்றாகவே தெரியும் என்பதால். சுபாஷிணி சொன்னமாதிரி, நமது சமுதாயம், தனது எல்லா பரிமாணங்களிலும், அடிப்படை சிந்தனை மாற்றத்தை அவசரமாக நாடாவிடின், தேசம் குட்டிச்சுவராகி, சரிந்து, உடைந்து விடும். ஒவ்வொருவரும் தன்னை சட்டபரிபாலன வழியில் இயக்கிக்கொண்டால் தான், தலை தப்பும். அது வரை பேசி, பயன் இல்லை. அந்த வழியில் ஒரு சிலராவது கருத்துத் தெரிவித்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கிடையில் டெலீட் சக்கரவர்த்திகள் டெலிட்ட்டு கொம்மாளம் போடலாம்.
இன்னம்பூரான்
13 03 2013

rajam 13 March 2013 15:35
To: "Innamburan S.Soundararajan"

On Mar 13, 2013, at 8:00 AM, Innamburan S.Soundararajan wrote:

நன்றி பல. பேராசிரியர் காஷுவலாக பதில் போட்டிருக்கிறார். அவருக்கு உள்குத்து, ஊமைக்குத்து சமாச்சாரங்கள் நன்றாகவே தெரியும் என்பதால். சுபாஷிணி சொன்னமாதிரி, நமது சமுதாயம், தனது எல்லா பரிமாணங்களிலும், அடிப்படை சிந்தனை மாற்றத்தை அவசரமாக நாடாவிடின், தேசம் குட்டிச்சுவராகி, சரிந்து, உடைந்து விடும். ஒவ்வொருவரும் தன்னை சட்டபரிபாலன வழியில் இயக்கிக்கொண்டால் தான், தலை தப்பும். அது வரை பேசி, பயன் இல்லை. அந்த வழியில் ஒரு சிலராவது கருத்துத் தெரிவித்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கிடையில் டெலீட் சக்கரவர்த்திகள் டெலிட்ட்டு கொம்மாளம் போடலாம். 


ஆகா, அப்படியே செய்துவிடலாமே!! :-) உங்கள் அனுமதியும் கிடைத்துவிட்டது! :-)







Innamburan S.Soundararajan 13 March 2013 15:40
To: rajam
ஒரு திருத்தம். டெலீட் மஹராஜிகளும்.


rajam 13 March 2013 15:48

பின்னே, மஹாராஜிகள் இல்லாமெ கொம்மாளம் போடமுடியுமா?!!! 

Monday, October 28, 2013

கறுப்பு செவ்வாய்:அன்றொரு நாள்: அக்டோபர் 29




அன்றொரு நாள்: அக்டோபர் 29 1 & 2 & 3

Innamburan Innamburan Sun, Oct 30, 2011 at 7:34 PM



அன்றொரு நாள்: அக்டோபர் 29
1 & 2 & 3
  1. அக்டோபர் 29, 1929
பொருளியல் பற்றி நான் எழுதுவதில்லை. அதை பொருளாதாரம் என்றும் சொல்கிறார்கள். அந்த ஆதாரம் எனக்குத் தென்படுவதில்லை. நான்கு பொருளியல் வல்லுனர்கள் இருந்தால் ஐந்து கருத்துக்கள்! யாருடைய அபிப்ராயங்களையும் மாற்றுவது கடினம். பொருளியல் என்றால் மெத்தக்கடினம். ‘அமேரிக்கா’, அமேரிக்கா’ எனப்படும் செல்வக்களஞ்சிய நாட்டில் அக்டோபர் 29, 1929 தினம் ‘கறுப்பு செவ்வாய்’ என்று நிந்திக்கப்படுகிறது. பங்குச்சந்தை என்ற பரமபத சோபனப்படத்தில், அரவம் தலைவழியாக பங்குகள் அன்று அதலபாதாளத்தில் வீழ்ந்தன. சில நாட்களில் 30 பிலியன் டாலர்கள் ‘மறைந்துப்’ போயின. மார்ச் 30 வாக்கில் 32 லக்ஷம் மக்களுக்கு வேலையில்லாத்திண்டாட்டம். திகைத்துப்போன மக்கள் நவம்பர் வாக்கில் தெருக்கோடியில் ஆப்பிள் விற்கத் தொடங்கினர். ஃபெப்ரவரி 1931ல் மினியாபொலீஸில் சோத்துப்புரட்சி. அடுத்த மாதம் ஃபோர்ட் மோட்டார் கம்பெனியில் 3000 தொழிலாளிகள் வேலை நிறுத்தம். டிசெம்பரில் ந்யூ யார்க் அமெரிக்கன் வங்கி திவால். $ 200 மிலியன் டமால்! ஜனவரி 1932 ல் கோடீஸ்வர பூஜை. வங்கிகளுக்கும், காப்பீடு நிறுவனங்களுக்கும், ரயில் கம்பெனிகளுக்கும் கடனளிக்க ஒரு அரசு கம்பெனி. ஏப்ரல் 1932 வந்த போது, 750 ஆயிரம் மக்கள், அரசின் மான்யத்தில். தொங்கலில் மேலும் 160 ஆயிரம் பேர். ஆளுக்கு $8.20 மாதத்திற்கு பஞ்சப்படி. ஜூன் 1932 வந்ததா? 15 -25 ஆயிரம்  இந்த கோடீஸ்வர பூஜை அரசு கம்பெனி மாநிலங்களுக்கும் கடன் உதவி ~ பஞ்ச நிவாரண திட்டங்களுக்காக. மாஜி ராணுவவீரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகை. மாஜி ராணுவ வீரர்களை விரட்ட, பிற்கால ஜப்பான் புகழ் ஜெனெரல் மக் ஆர்தர் தலைமையில் துரத்தல் படை! அமெரிக்காவில் மாஜி ராணுவ வீரர்கள் இப்போது கூட இரண்டாம் பக்ஷம். ஹூம்!
வந்தாரையா புது ஜனாதிபதி ரூஸ்வெல்ட், நவம்பர் 1932ல். மார்ச் 1933ல் மக்களை உற்சாகமூட்டி பேசிய அவர், அம்மாதம் 6ம் தேதி, நான்கு நாட்களுக்கு வங்கிக்கதவுகளை மூடி, ஒரு புரட்சிகரமான திட்டம் வகுத்து 12ம் தேதி ‘அச்சம் தவிர்’ என்ற புகழ்பெற்ற உரையாடலை துவக்கினார், மக்களுடன் நேருக்கு, நேராக. ஏப்ரல் மாதத்தில்  உலக அளவில் நடைமுறையிலிருந்த ‘தங்க அளவுகோலிலிருந்து’ விலகினார். ஒரு மக்கள் சக்தி தன்னார்வ பட்டாளத்தை தொடங்கினார். 1935ல் 500 ஆயிரம் இளைஞர்கள், அந்த பணியில். மே 1933ல்  ஹாரி ஹாப்கின்ஸ் ( அவரை பற்றி ஒரு நாள் எழுதவேண்டும்.) தலைமையில் மத்திய நிவாரண நிறுவனம் விறுவிறுப்பாக ஆக்க்ப்பூர்வமான வேலையில் இறங்கியது. மே 1933ல் டென்னஸி பள்ளத்தாக்கு அணைகள் அணி என்ற துணிவான திட்டம் வகுக்கப்பட்டது. ஜூன் 1933ல், இன்று வரை பேசும்படும் க்ளாஸ் ~ஸ்டீகல் சட்டம் (சேமிப்பு+ கடனளிக்கும் வங்கிகளையும், முதலீடு வங்கிகளையும் பிரித்து) இயற்றப்பட்டது. மற்றும் பல திட்டங்கள். ‘மோட்டார் தொழில் வளர்ச்சியில், வீழ்ச்சியை மறந்தோம்’ என்று ஒரு வணிக இதழ் எழுதியது. ஆகஸ்ட் 1935ல் ஊதியவரி ஒன்று விதித்து, அதன் மூலம் சமுதாய நிவாரணமளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கென்னெத் டேவிஸ் என்ற வரலாற்றாசிரியர்: ‘...இது அமெரிக்காவின் வரலாற்றின் பெரிய திருப்புமுனைகளில் ஒன்று. இனி வணிக லாபத்திற்கு மட்டும் அரசு தகுந்த சூழல் அமைக்கவேண்டும், இந்த லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் மக்களின் நலனுக்கு அரசு பொறுப்பல்ல என்று முதலாளித்துவத்தின் தனித்துவம் பேச முடியாது’ என்றார். 2007-08 வீழ்ச்சியின் போது நான் அமெரிக்காவில் இருந்தேன். மின் விகடனில் அது பற்றி ஒரு தொடர் எழுதினேன். உரியவேளை வந்தால், அதை மீள்பார்வை செய்யலாம். நிச்சியமாக கென்னெத் டேவிஸ்ஸின் கருத்துக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். நல்லது தானே.
*
  1. அக்டோபர் 29,2011: முல்லைப்பெரியார் அணையின் 125 வது ஆண்டு விழா:
அன்றொரு நாள் திருவிதாங்கூர் சமஸ்தானம் 8000 ஏகரா நிலத்தை சென்னை மாகாணத்துக்கு
நீண்ட குத்தகையில் கொடுக்க, 1887-1895ல் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஒரு பொறியல் துணிச்சலாகக் கட்டப்பட்டு, மதுரை-ராமநாதபுரம் ஜில்லாக்களின் 70 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு நீர் வார்த்தது. சொல்லப்போனால், வருஷ நாடு செழித்ததற்கு இது தான் காரணம். 1850க்கு முன்பே தோன்றிய கருத்து. மேஜர் ரைவ்ஸ்ஸும், கர்னல் பென்னிக்யுக்கும் 84.71 லக்ஷம் செலவில் கட்டினார்கள். நம் வருசநாட்டு மக்கள் எளியவர்கள், ஐயா. நன்றி மறவாதவர்கள். கர்னல் ஐயாவுக்கு சிலைகள். இன்றும் அவருக்கு நினைவாஞ்சலி. கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் கொடுத்த உபசரிப்பில் மயங்கிவிட்டார், அவருடைய கொள்ளுப்பேரன் ஸ்டூவர்ட் சாம்ப்ஸன். அது அன்று. கடந்த 40 வருடங்களாக லடாய். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், சென்னை மாகாணத்தின் வாரிசுதார்கள் மும்முரமாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கர்னல் ஐயாவின் சிலையின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. காலத்தின் கோலமடா, மாயாண்டி!
*
  1. அக்டோபர் 29: உலக பக்கவாத தினம்.
இப்போதெல்லாம் அடிக்கடி ஆஸ்பத்திரி விஜயம். நேற்று ஸைண்ட் மேரிஸ் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டி ஆகிவிட்டது. அங்கு, ஒரே இடத்தில் நான் பார்த்தவை: அவசரசிகிச்சை உபகரணங்கள், ரத்தப்பரிசோதனை கூடம் (ஒரே ஒரு நர்ஸ்.), அவசரம், அவசரமாக இதயத்தை சரி செய்து அடிக்க வைக்கும் கருவிகள், அங்கும், இங்கும், பக்கவாதம் சம்பந்தமான ஆலோசனைகள் (ரத்த அழுத்தம் அளவுடன் ப்ளீஸ்: 110/70 பெட்டர்.), கை, கால், நீட்டி, மடக்க சொல்லித்தரும் தாதிகள், பேச்சு வர பயிற்சி. சுளுவாகச்சொன்னால், மூளையின் செல்கள் பாதிப்பால் இந்த வியாதி ஏற்படுகிறது.60 வயதுக்கு மேல், அதிகம். இப்போது, வயதில் சிறியவர்களுக்கும். உலகில் 6 வினாடிக்கு ஒரு பக்கவாதமாம். வருடத்தில் 15 மிலியனுக்கு. பாதி காலி. முதல் காரணம் கட்டுப்பாட்டில் இல்லாத நீரழிவு நோய். சமீபத்தில் இன்ஸுலின் மிகவும் மாறி விட்டது. மேலும் ஒன்று சொல்லலாமா? தவறாக நினைக்க மாட்டீர்களே. மிகவும் சிக்கனமாக, சமுதாய நலனை பாதுகாக்க முடியும். சென்னையில் உலக பிரசித்தி பெற்ற டாக்டரொவர், குறைந்த செலவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளம் பெண்களின் உதவியுடன், ரத்த அழுத்தமும், சிறு நீரகபாதிப்பும் குறைக்க ஒரு புரட்சியே நடத்தி வருகிறார். அதே மாதிரி சங்கர நேத்ராலயா  செய்யும் பணி உன்னதம். மற்றொரு டாக்டர் சிறார்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி செய்கிறார். கான்ஸர் இன்ஸ்டிட்யூட் தெய்வத்திற்கு அடுத்த படி. சரி, விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
30 10 2011
78075346-9812.jpg
Regulating-Reservoir-Section-1899-300x300.jpg



உசாத்துணை:

Geetha Sambasivam Mon, Oct 31, 2011 at 8:32 PM



பொருளாதாரம் எல்லாம் சரியாகக் கணிக்க இயலாது.  வாச்சான், பொழைச்சான் என்பார்களே அப்படி!  என்னதான் திட்டமிட்டாலும் எங்கானும் காலை வாரும். தவிர்க்க முடியாது.
முல்லைப்பெரியாறு அணை குறித்துக்கவலையாய்த் தான் இருக்கிறது.  கேரளா அட்டூழியம் செய்கிறது. தட்டிக் கேட்பார் இல்லை.  என்ன ஆகப் போறதோ!
யார் அந்த மருத்துவர் காஞ்சீபுரத்தில் சேவை செய்பவர்?  மற்ற இருவர் சங்கர நேத்ராலயாவும், அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரி குறித்தும் அறிவேன்.


Innamburan Innamburan Mon, Oct 31, 2011 at 9:06 PM
To: Geetha Sambasivam

Dr.M.K.Mani, World-renowned Nephrologist. A most extraordinary ethical person.

Dr.C.V.Krishnaswamy~Juvenile diabetes,

Innamburan