Google+ Followers

Friday, October 9, 2015

நோபெல் விருது: 2015: 5

நோபெல் விருது: 2015: 5இன்னம்பூரான்
அக்டோபர் 9, 2015

சில சமயங்களில் பாரதியாரின் ‘கண்ணன் என் சேவகன்’ எங்கிருந்தோ வந்து
 ‘ எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!’ 
என்று மனமுருக பாடியதைப் போல, இவ்வருட சமாதான நோபெல் பரிசு இந்தியர்களான நமக்கு பாடம் கற்றுக்கொள்ள வகை செய்கிறது. இது ஆனந்தமே. நான் இந்தியாவில் புரட்சி ஏற்படுவதற்கான ஹேதுகள் பல என்று சில வருடங்களாகக் கூறி வருகிறேன். நடந்து முடிந்துள்ள ஒரு மல்லிகை புரட்சியின் (ட்யூனிஷியா: 2011) பின்விளைவாக நிகழ்ந்தது அந்த நாட்டின் கொடுப்பினையே. நான்கு குழுக்கள் (தொழிற்சங்கம், தொழிலக கூட்டமைப்பு, வாணிகம், கைவினைப்பொருள் ஆகியவற்றின் அமைப்பு, ட்யூனிஷியாவின் மனித உரிமை அமைப்பு, வழக்காளர்களின் இயக்கம்) ஆகியவை ஒன்று சேர்ந்து, நாம் கனவு காணாத ஒற்றுமையுடன் Tunisian National Dialogue Quartet என்ற கூட்டணி அமைத்து, இசையின் இலக்கணமாக திகழும் ஒரு ‘தாளவாத்தியகச்சேரி’யை 2013ல் துவக்கி, சக்கை போடு போட்டு, நாட்டின் மேலாண்மையை உன்னதமான நிலைக்கு உயர்த்தி, அரசியல் கொலைகளை கட்டுப்படுத்தி, பரவியிருந்த சமுதாய சீர்கேடுகளை ஒழித்து, உள்நாட்டு யுத்தம் நடக்க இருந்த சூழ்நிலையை விலக்கி, எந்த விதமான பாலியல்/அரசியல் கோட்பாடு/மத நம்பிக்கை பொருட்டு பேதங்களை ஒழித்து, சமாதானம் பேணும் அரசியல் இலக்கணத்தை வகுக்கும் அரசியல் சாஸனத்தை வைர வரிகளால் எழுதியதும் அதற்காக, இரண்டே வருடங்களில் அந்த கூட்டமைப்புக்கு நோபெல் சமாதான விருது கிடைத்ததற்கு, உலகம் முழுதும் விழா எடுக்கவேண்டும். இந்த கூட்டமைப்பு மக்கள், அரசியல் கட்சிகள், மேலாண்மை தளங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து தேசீயம் வளர்க்க வகை செய்தது. சில சாதனைகள்:
  1. வன்முறை, அச்சமில்லாததால், ஆதரவு இல்லாததால், இறங்குமுகம் கண்டது;
  2. இது ஆல்ஃப்ரெட் நோபெலின் இலக்கை அடைவதாக அமைந்தது, குறிப்பிடத்தக்கது;
  3. பென் அலி என்ற சர்வாதிகாரியின் கொட்டதை அடக்கியது;
  4. இஸ்லாமிய அமைப்புகளும், மதசார்பற்ற அமைப்புகள் இணைந்து இயைவதை நிரூபித்துக்காட்டியது;
  5. சமாதான பேச்சுகளின் செயல்பாடுகளையும், நாட்டுப்பற்றையும் இணைத்தது;
  6. மக்கள் இயக்கம், அமைப்புகள், விழிப்புணர்ச்சி, ‘திருமங்கலமற்ற’ மங்களமான தேர்தல்கள், ஆளுமை பகிர்வுகள், எல்லாவற்றையும் நேர்த்தியாக நிகழ்த்திக்காட்டியது இந்த Tunisian National Dialogue Quartet.
  7. மல்லிகை புரட்சி வீணாகவில்லை; ஒரே காரணம்: Tunisian National Dialogue Quartet.
பின், வேறு யாருக்குத் தான் நோபெல் விருது அளிக்கப்படும்?
சொல்லுமையா, சிவனாரே!
பாரத மாதாவே! இந்தியாவுக்கு Tunisian National Dialogue Quartet போன்ற அமைப்பு தலையெடுக்க வரம் அருள்வாயாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://pmchollywoodlife.files.wordpress.com/2015/10/nobel-peace-prize-lead.jpg?w=600

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, October 8, 2015

நோபெல் விருது: 2015: 4

நோபெல் விருது: 2015: 4


இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2015

இன்றைய நோபெல் விருதை இலக்கியத்துக்கும் ஆணிவேரான ‘பாமரகீர்த்திக்கு’
பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாததால் ஓரிடத்தில் பிறந்து பற்பல இடங்களில் வளர்ந்து வரும் பாமரகீர்த்திக்குக் கிடைத்த விருதாகத்தான் பேசப்படுகிறது; ஏற்றுக்கொள்ளப்பட்டது; பாராட்டப்படுகிறது. ஒரே விருதாளரான Svetlana Alexievich பேலரஸ் நாட்டைச் சேர்ந்தவர். கடைசி நிமிடம் வரை உலா வந்த ஹேஷ்யங்களில் என்னுடைய வாக்கு இவருக்குத் தான் இருந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. ரத்னச்சுருக்கமான சுற்றறிக்கை இது தான்;

The Swedish Academy, announcing her win, praised Alexievich’s “polyphonic writings”, describing them as a “monument to suffering and courage in our time”.

அதாவது, பல்லாயிரம் மக்களின் துன்பக்கேணியில் இறங்கி அவர்களின் அச்சமின்மையை நேர்த்தியாகவும், உணர்ச்சி பிரவாஹம் தடையில்லாமல் பெருக்கெடுப்பதை மூலாதாரமாக வைத்து பண்ணிசையில் எழுதியிருக்கிறார்,

விருது வந்தடைந்த செய்தி அவருடைய ஸ்தித பிரதிஞ்ஞத்தை அசைக்கமுடியவில்லை. மகிழ்ச்சி என்றாலும், கலங்கினேன் என்கிறார், Svetlana Alexievich. Ivan Bunin, Boris Pasternak போன்ற விருதாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடைச்சல்கள் அவற்றை நினைத்து வருந்தினார். விருது அளிக்கப்பட்ட செய்தி கிடைத்தபோது, சராசரி மனுஷி ஆன இவர் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தாராம்.

நோபெல் அகாதமி சொல்வதை கேட்போம். 

“கடந்த 30/40 வருடங்களாக சோவியத்/ மாஜி சோவியத் மானிடர்களின் உணர்ச்சி, மனவோட்டம், நிழல் மனவோட்டம் எல்லாவற்றையும், நுட்பங்கள் தவறாமல், பொதுமை மறக்காமல், மானிடத்தின் உள்ளே சென்று, ‘ஆவியின் உள்புகுந்து’ அவர் செய்த பதிவுகள், அதுவும்  Chernobyl விபத்து, ஆஃப்கனிஸ்தானில் ஆட்டம் ஆகியவற்றை தனி மனிதப்பார்வையில் பதிவு செய்திருப்பது மாபெரும் சாதனை.

Svetlana Alexievich சொல்வது: நான் மக்களிடம் சோஷலிசம் பேசவில்லை; என்னுடைய ஆயிரக்கணக்கான பேட்டிகளில், சிறார்களிடமும், பெண்களிடமும், ஆடவர்களிடமும் அன்பு, காதல், பொறாமை, மழலை, முதுமை, இசை, நடனம், சிகை அலங்காரம் ஆகியவை பற்றி துளைத்து, துளைத்து விசாரித்தேன். சராசரி மனிதர்கள் அன்றாடம் மன்றாடும் சிக்கல்கள், அவற்றில் கொழுந்து விட்டெரியும், சுட்டுப்பொசுக்கும் உண்மைகள். 

ஒரு சுட்டெரிக்கும் உண்மையை போட்டு உடைக்க வேண்டும் தாய்மார்களே. Svetlana Alexievich எழுதிய U vojny ne ženskoe lico (War’s Unwomanly Face) என்ற நூல் இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான பெண்களை பேட்டி எடுத்ததின் சாராம்சம். குறைந்தது பத்து லக்ஷம் பெண்மணிகள் யுத்தத்தில் பங்கெடுத்தனர். வரலாற்றில் அதை பற்றி சொல்லொன்றும் காணவில்லை. அந்த குறையை மேற்படி நூலில் நீக்கி விட்டார், இவர். அதற்கு இன்னொரு நோபெல் கொடுக்கலாம், மேரி க்யூரிக்குக் கொடுத்தது போல.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://i.ndtvimg.com/i/2015-10/svetlana-alexievich_650x400_71444303070.jpgஇன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, October 7, 2015

நோபெல் விருது : 2015: 3


நோபெல் விருது: 2015: 3

இன்னம்பூரான்
அக்டோபர் 7, 2015

இன்று அறிவிக்கப்பட்ட வேதியியல் நோபெல் விருது Tomas Lindahl, Paul Modrich, Aziz Sancar எனப்ப்டும் மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. உயிரணுக்களின் விநோதமான வாழ்வியலை அறியவும், ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்   (DNA) எவ்வாறு உயிரணுக்களால் பராமரிக்கப்படுகிறது என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியடைந்த மேற்காணும் விஞ்ஞானிகளை பாராட்டுவது நலமே. புற்று நோய் சிகிச்சைகளுக்கு, இந்த ஆராய்ச்சிகள் மிகவும் உதவும். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்   (DNA) அழுகி, அழிந்து போகும் வேகத்தைப்பார்த்தால், புவியில் வாழ்க்கை அமைந்து வளர்வது சாத்தியமில்லை என்ற கூற்றை முதன்முறையாக நிரூபித்த Tomas Lindahl, அடுத்த கட்டமாக அந்த அழிவை எவ்வாறு மூலக்கூறு (molecular machinery) அடிப்படை மராமத்து செய்யும் விந்தையை  base excision repair எடுத்துக்கூற  nucleotide excision repair என்ற நுட்பத்தை Aziz Sancar விவரித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, mismatch repair என்று காரணப்பெயர் எடுத்த (ஒரு விதத்தில் அறுவை சிகிச்சை போன்ற) ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்  உயிரணுக்கள் பெருகும்போது ஏற்படும் ஆயிரக்கணக்கான சிக்கல்களை அவிழ்ப்பதை நிரூபணம் செய்தார். 

சுருங்கச்சொல்லின், இவ்வருட முக்கூடல் நோபெல் விருது உயிரணுக்களின் நடைமுறை,அந்த இயல்பை உபயோகம் செய்வது, குறிப்பாக புற்று நோய் நிவாரணம் ஆகியவற்றை பற்றி அடிப்படை நுட்பங்களை பாராட்டியுள்ளதை நாமும் பாராட்டவேண்டும்.
-#-
உசாத்துணை: பல தளங்கள்.
சித்திரத்துக்கு நன்றி: http://pbs.twimg.com/media/CQtKEK7UsAAITh5.jpg

Tuesday, October 6, 2015

நோபெல் விருது: 2


நோபெல் விருது: 2

இன்னம்பூரான்
அக்டோபர் 6, 2015
துகள் இயற்பியல் (Particle Physics) முற்காலத்து பெளதிக ஏணியின் உயரமான நிலையில் உன்னதமாக மிளிரும் படிகளில் ஒன்று. NEUTRINO - நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்களை அந்த இயலில் உள்ள/ இன்று பாராட்டப்பட்ட ஆராய்ச்சிகள் நம்மை வியக்கத்தக்கவை. இந்த வருட பெளதிக நோபெல் விருது Arthur McDonald, a professor emeritus at Queen's University in Kingston, Ontario என்பவருக்கும் (17வது கனடிய நோபெல் விருதாளர்) Takaaki Kajita of the University of Tokyo என்பவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கண்டு பிடித்து நிரூபித்த உண்மை: இந்த நுண்நொதுமிகள் தமது நீண்ட பயணங்களில், எப்படியோ தன் தன்மைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த மாற்றம் ஏற்பட அவைகள் MASS - திணிவு, நிறை ஆக இருக்கவேண்டும். இதனால் சகலமானவர்களுக்கும் நோபல் கமிட்டி சொல்வது: MATTER - பொருண்மை, பருப்பொருள் எனப்படும் பெளதிக பொருண்மையை பற்றி நாம் அறிந்து கொண்டது எல்லாம் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ஆக மாறிவிட்டன. துகள் இயற்பியல் (Particle Physics) மேலும் உச்சாணிக்கிளையை பிடித்து விடும் போல தோன்றுகிறது. 1998லியே ஜப்பானில் இந்த நுண்நொதுமியின் ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனிடமிருந்து புறப்பாடு செய்யும் நுண்நொதுமிகள் கூடு விட்டு கூடு பாய்வது கனடாவில் 2001ல் திண்ணமாக நிரூபிக்கப்பட்டது. இது ஒரு யுரேகா மூமெண்ட் என்று இன்று McDonald சொல்வது ஒரு மயிர் சிலிர்க்கும் நிகழ்வு என்று நான் நெகிழ்ந்து போகிறேன். நீங்கள் எப்படியோ?!

உசாத்துணை: நோபெல் ஆங்கில ஆவணங்கள்.

சித்திரத்துக்கு நன்றிள் http://static.dnaindia.com/sites/default/files/2015/10/06/382711-nobel-physics-prize.jpg

நோபெல் விருது 2015: 1

நோபெல் விருது 2015: 1
இன்னம்பூரான்

அக்டோபர் 6 ,2015


இன்று 2015 மருத்துவம் சார்ந்த நோபெல் விருது அறிவிக்கப்பட்டது. ஒரு காலத்தில் இது பற்றி எல்லாம் கடை விரித்தேன்; கேட்பார் இல்லை. மறுபடியும் கடை விரிக்கிறேன். சில வியாதிகள் தொக்கி நிற்பவை. மலேரியா அந்த வகை. புலி, சிங்கம், முதலை ஆகியவற்றை வம்சத்துடன் அழிக்கும் மனிதன் தன்னை தாக்கும் கொசுவை நசுக்கமுடியவில்லை. உச்சரிப்பு தவறாமல் இருக்க ஆங்கில எழுத்துக்கள், விருது பெற்றவர்களின்/ மருந்துகளின் பெயருக்கு மட்டும். Tu Youyou என்ற 84 வயது மூதாட்டி சைனாவில் ஒரு ரகசிய ஆய்வில் பணி புரிந்த போது கண்டு பிடித்த artemisinin என்ற மருந்து மலேரியாவுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். Mao Zedong சைனாவில் சர்வாதிகாரியாக இருந்தபோது, இந்த பெண் விஞ்ஞானிக்கு மலேரியாவை ஒழிக்கும் ஆராய்ச்சி ஒதுக்கப்பட்டது. வடக்கு வியட்னாமில் விட்டில் பூச்சி மாதிரி மக்கள் செத்து விழுந்தனர், மலேரியாவில். அங்கெல்லாம் சென்று எல்லாவற்றையும் கண்டு கொண்ட பின் ஊருக்கு வந்தால், 1600 வருடங்களுக்கு முந்திய நூல் ஒன்றில் Artemisia annua என்ற மூலிகை வைத்தியம் தெரிய வந்தது. அதை ஆதாரமாக வைத்து ஆராய்ச்சி செய்தவர் Tu Youyou. Plasmodium falciparum என்ற மலேரியா மூளையை தாக்கி ஆளை கொல்லும். Plasmodium vivax கொல்லாவிடினும், குலை நடுங்கச்செய்யும். பல சோதனைகளுக்கு பிறகு இவரால் தயாரிக்கப்பட்ட artemisinin என்ற மருந்து சஞ்சீவினி போல் ஆயிற்று. இரண்டு வகை மலேரியாவையும் முறியடித்தது. நோபெல் பரிசு ரொக்கத்தில், பாதி இவருக்கு.


William C Campbell உம் Satoshi Ōmuraவும்  [Ireland, Japan] ஆகிய இருவரும் மனித வயற்றில் குடித்தனம் நடத்தும் புழுக்களை ஒழிக்க avermectin என்ற மருந்தை உருவாக்கினர். அவர்களுக்கு மீதம் பாதி. ஹவாலா நாட்டின் மேலாண்மையை தாக்கும். பாரசைட்ஸ் எனப்படும் ஊடுருவி உள்ளே டேரா போட்டு, கூடாரத்துக்கே தீ வைக்கும் இத்தகைய வியாதிகளை குணப்படுத்த உழைத்த இந்த மூவரும் பாராட்டத்தக்கவனரே. William C Campbell, Ōmuraவின் ஆராய்ச்சியின் அடிப்படையில் செய்த ஆய்வின் பயனே இந்த மருந்து. இயற்கை அன்னைக்கு இணையாக நாமும் நுண்ணுயிர்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முரசு கொட்டுவதை நையாண்டி மேளம் என்று இவர் உணர்த்தும் விதமே அலாதி. இது உண்மை தான் என்கிறது Ōmuraவின் ஆய்வுகள்.

-#-
Image Credit: http://www.cbc.ca/gfx/topvideo/2015/nobel-medicine-niles-100515.jpg
Sources: Many.