Saturday, April 20, 2013

சென்னைப்பட்டின உலா




சென்னைப்பட்டின உலா

Innamburan S.Soundararajan Sun, Apr 21, 2013 at 6:12 AM

சென்னைப்பட்டின உலா
Inline image 1i

வீ.ஆர். கிருஷ்ணையர் ராகுல் காந்திக்கு ஹிந்து பத்திரைக்கையில் கடிதம் வரைந்த்தது போல,
இக்கடிதம் எனது ஆப்தநண்பர் ஒருவருக்கு, மின் - தமிழ் தொடரில் வரையப்பட்டிருக்கிறது. எனக்குரிய தன்னடக்கத்துடன் சொன்னால், மயில் ராவணன் கதையைப் போல, ‘பத்து தலைகளை சுற்றி மூக்கை தொட்ட’ காதையாகும்; உண்மை விளம்பினால் ‘ஆயிரம் தலைகளை சுற்றோ என்று சுற்றி மூக்கை தொட்ட அபூர்வ சிந்தாமணி’ யின் காப்பியமாகும்.

இன்னம்பூரான்
(தொடரும்)

June 31, 2009

சென்னைபட்டின உலா


நேற்று, நாடு கடந்து, காடு கடந்து, வரை கடந்து, திரை கடந்து வாழ்ந்த நான், சென்னை நகர வலம் வரும் அரிய வாய்ப்பை பெற்றேன். நானும், நண்பரும் ரோஜா முத்தையா மன்றத்தில் ஒரு அரிய நிகழ்ச்சிக்காக, தனி தனியே வெவ்வேறு பேட்டைகளிலிருந்து பயணித்தோம். ஒருவரை ஒருவர், முன்னும் பின்னும் பார்த்திருக்கவில்லை என்பதால் (அதனால் தான், நாம் யாவரும் சந்திக்கவேண்டும் என முன்பு கூறியதை நினைவு கூர்க.), நாங்கள் தடுமாறியது சுவையான கதை.
ஒரு சமூக சேவைக்கு, முன்கூட்டியே ஒரு வீ.ஐ.பியின் அலுவலகத்தில் சந்திப்பதாக முன்னேற்பாடு. அங்கு ஐயாவைக்காணாமல், மற்றொருவரிடம், நான் கேட்கப்போய், அவர் தான் ‘முனைவர் முத்தைறையானார்’ என பதிலளித்து, மீசை படபடக்க முறைத்தார். சளைத்தவனா, என்ன? முடியா வழக்காகிய, ‘வாலிவதம் நியாயமானதா?’ என்று வினவினேன். அவரோ, ‘எனது 1962ம் ஆண்டு ஆய்வு “சங்ககாலத்திற்கு முந்திய தமிழும், மெஸபடோமியாவின் பழகு ஆங்கிலமும்” என்று பகர்ந்து, ‘வாலி தற்கால கவிஞராமே’ என்றார். உமது ‘கிணறு’ எந்த ஊரிலிருக்கிறது? என்று கேட்க தயங்கி, நானும் லாகவமாக ஜகா வாங்கினேன். நிகழ்ச்சியில் சில சலசலப்புக்களுக்கு பிறகு, இருவரும் இனம் கண்டு கொண்டோம். இது நிற்க.
நிகழ்ச்சியும் இனிதே நிறைவேற, வீடு திரும்பும் நல்லெண்ணம் மேலோங்க, நான் போட்ட தப்புக்கணக்கு யாதெனில், ‘8.73 கிலோமீட்டர் வருவதற்கு, பஸ்ஸில் 37 நிமிடம் பிடித்தது; ஐயாவோ புத்தம் புதிய காரில், இருக்கை அளித்தார், தோதான இடத்தில் இறக்கிவிடுவதாக. சத்திய பிரமாணம் செய்தார். 21 நிமிடத்தில் வீடு என்று இறுமாந்தேன்.
உலா தொடங்கியது, கம்பராமாயணத்தில், இராம-இலக்குவனர் ஆச்சா மரங்களும், ஏலமரங்களும், சந்தனமலர்களும், பூகுன்றங்களும், ஊசலாடும் வானர அழகிகளும் நிறைந்த கிட்கிந்தை மலையில், தேன் வழுக்கிய தடங்களில் நடந்த்து போல! முதல் தோதான இடத்தில், மின்பாடி வண்டி தடுக்க, அதற்கு பின், ஒன்றன்பின் ஒன்றாக, தடுப்பு சுவர்களும், மொஹஞ்சதாரோ-ஹாரப்பா அகிழாய்வு போன்ற அரைகுறை மேல்/கீழ்/பக்கவாட்டு/எதிர்பக்க/அடையாளமற்ற/குழப்பும் பாலங்களும் பயமுறுத்த, சிக்னல்கள் மின்னலடிக்க, மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், உப்பரிகைகள், சேரிகள், இல்லாத நடைபாதையிலும் வசிப்பவர்கள், நெய்யும் துணியின் பாவு போல ஓடியாடும் ஆட்டோக்களும் படுத்திய பாட்டில், ஐயாவால், வண்டியை நிறுத்தமுடியவில்லை. இடைவிடாத பேச்சினால், சில இடங்களை கோட்டை விட்டோம். நான் அமைதி காத்தால், அவரது கைப்பேசி பேசித்தீர்த்துவிடும். கிண்டி பார்த்தோம்; கண்டு கொள்ளவில்லை. கத்திப்பாராவில், நான் கத்தவில்லை, இறக்கிவிடு என்று; ஈக்காடு தங்கலில், யாம் தங்கவில்லை; அஷோக் பில்லரில், வழி தவறினோம்; ஐயா இல்லை என்பார்; கோயாம்பேட்டில் கோட்டை விட்டோம்; ‘டக்’ என்று ஒரு பொறி தட்ட, ‘சட்’ என்று நிறுத்தினார். கைலாகு கொடுத்து, என்னை ரோடு கடத்தினார். இரு பஸ்கள் மாறி வீடு சேர்ந்தேன் - 47 கிலோமீட்டரை 274 நிமிடங்களில் விரைவாக கடந்த அனுபவம் புதிது.


இன்னம்பூரான்
பி.கு. இடம், பொருள், ஏவல் மாற்றியுள்ளேன்; ஊரும், பேரும் சொல்லவில்லை; ஏன்? மரபு காக்க. எப்படியும், துணிவு இருந்தால், ஐயா குட்டை உடைக்கமாட்டாரா, என்ன?

*
தமிழ்த்தேனீ:


நான்தான்   ஏற்கெனவே   ஹஹஹஹஹஹ் என்று சிரித்து குட்டை உடைத்து விட்டேனே


ஹரப்பா, மொஹஞ்சதாரோ, சீனப் பெருஞ்சுவர்  அனைத்தையும்   சென்னையிலேயே  உங்களுக்கு சுற்றிக் காட்டிய   சிறியேன்  என்னை மன்னிக்கவும்

ஆனால் ஒன்று உங்களுடன் சற்று நேரம்  பேசவேண்டும்   என்கிற பேராவல்   எனக்கும்  என் புதிய காருக்கும் இருந்ததன்

விளைவே  இந்த சுற்றுலா

பி.கு. இடம், பொருள், ஏவல் மாற்றியுள்ளேன்; ஊரும், பேரும் சொல்லவில்லை; ஏன்? மரபு காக்க. எப்படியும், துணிவு இருந்தால், ஐயா குட்டை உடைக்கமாட்டாரா, என்ன


குட்டை உடைத்து விட்டேன்

அஷோக் பில்லரில், வழி தவறினோம்; ஐயா இல்லை என்பார்;

உண்டு என்று ஒப்புக் கொள்கிறேன்

அடிக்கடி வழி மாறிமுட்டுச் சந்துகளுக்கு சென்று  மீண்டும் சமாளித்துக்கொண்டு

பாதயை மாற்றி  வெற்றி கான்பவன் தான்
நான்

மொத்தத்தில்


நான் புதுக் கார் வாங்கி  என் அம்மாவையோ  அப்பாவையோ  அல்லது அண்ணனையோ   பக்கதில் கொண்டு  ஓட்டவில்லையே  என்கிற குறை தீர்ந்ததென்னவோ  உண்மை

அன்புடன்

தமிழ்த்தேனீ


2010/7/9 meena muthu 
seethaalakshmi subramanian 
7/9/10

சின்னஞ்சிறுசுகள் விளையாட்டும் பேச்சும் கேட்க  நன்னா இருக்கு
ஒடிப்பிடிச்சு விளையாடறா
டூயட் பாட்டு உண்டா
தமிழ்த்தேனீக்கு நாட்க அனுபவம் இருக்கே
அதுசை, தம்பி, நாம் எல்லோரும் சேர்ந்து நாடகம் போடலாமா
நகைச் சுவை நாடகம்.
கதை வசனம் இயச்க்கம் நடிப்பு எல்லாம் இ
நாம் நடிப்போம்
அவரவர ஆலோசனை கூறலாம்.
meena muthu 
7/9/10

ha ha ha ha ha......  இந்த பேறு யாருக்கு கிடைக்கும் :))  கொடுத்துவைத்தவர்கள்!
meena muthu 
7/9/10


 
நான் ரெடி !   கையை தூக்கிட்டேன் :)) (நடிக்க வருமாங்கறது இயக்குனரோட வேலை!)
Tthamizth Tthenee 
7/9/10


நானும் தயார்
 
இன்னம்புரான்  கதை வசனத்தில்  நடிக்க 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Tthamizth Tthenee 
7/9/10

- 47 கிலோமீட்டரை 274 நிமிடங்களில் விரைவாக கடந்த அனுபவம் புதிது
குறுக்கு வழியில் விரைவாக  அழைத்துச் செல்கிறேன்  என்று நான் கூறினாலே  என் வீட்டார் பயந்து ஓடுவர்  ,அது உமக்கத் தெரியாததுதான்  என்னுடைய  +
 

ஒரு இலக்கியச் செம்மலை பக்கத்தில் உடகாரவைத்துக்கொண்டிருக்கிறோம்
அதுவும் பற்றாக்குறைக்கு  புதிதாக வாங்கிய வாகனம்  ஆதலால் பக்கவாட்டில் பார்க்கவே இல்லை,பாதையிலேயே  கண்  இருந்தாலும் பக்கத்தில் இருந்த அறிவுப் பெட்டகத்தின்
ஒலிமட்டும் கேட்டுக்கொண்டே  இருந்தேன்
 
ஓ சென்னையில்  இவ்வளவு இருக்கிறதா  என்று ஆச்சரியம்
 
இன்னம்புரார் எழுதியதைப் படித்தவுடன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
Geetha Sambasivam 
7/9/10

கம்பராமாயணத்தில், இராம-இலக்குவனர் ஆச்சா மரங்களும், ஏலமரங்களும், சந்தனமலர்களும், பூகுன்றங்களும், ஊசலாடும் வானர அழகிகளும் நிறைந்த கிட்கிந்தை மலையில், தேன் வழுக்கிய தடங்களில் நடந்த்து போல!//

அப்பாடி!!!!!!! பிரமிக்க வைக்கும் ரசனை, கண்ணெதிரே எல்லாம் வந்து போகிறது. தேனீ தான்னு முன்னாடியே கண்டு பிடிச்சுட்டேனே!

சித்திரத்துக்கு நன்றி: http://mirahouse.jp/begin/constellation/Gemini02.gif
***

நோபெல் திருவிழா 6 & 7


நோபெல் திருவிழா 6 & 7

Innamburan S.Soundararajan 
8:47 PM (2 minutes ago)
to me, bcc: innamburan88

Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/13/12

Inline image 1நோபெல் திருவிழா
பகுதி-6
இன்னம்பூரான்

இந்த வருட நோபெல் சமாதான பரிசு நம் நிம்மதியை பாதித்து விட்டது.. இவ்விதழில் வருவதற்கு நூற்றுக்கணக்கான தகவல்கள் உளன; இப்போதைக்கு பரிசு பெற்றவர்களின் விவரம் மட்டும் என்றும், பரசளிக்கும் விழா டிசம்பர் மாதத்தில்  நடக்கும் போது மேலதிக விவரங்கள் தருவதாகவும் முதலிலேயே நினைத்தேன். ஓரளவுக்கு சொன்னேன். என்னுடைய கட்டுரையும், அரசியல் பின்னணியை கூறி,வரலாற்றுப்போக்கில் ஒரு தீர்க்கதரிசியை பாராட்டி எழுதப்பட்டது. அதற்குள் திசை மாறிய பயணங்கள்... நம் செல்வனைப் போல் ஆக்ஷேபணை செய்தது லண்டன் எகானமிஸ்ட் என்ற பிரபல இதழ். நடுவு நிலைமை கருதி, அதையும் பிரசுரித்தோம். நடுவு நிலை கருதி, இந்த பரிசை ஆதரிக்கும் வகையில் மேலதிக செய்திகள்:
ஹம்ப்ட்டி டம்ப்ட்டி மாதிரி சுக்குநூறாக உடையும் நிலையில் ஐரோப்பா இருக்கிறது. தெருமுனை போராட்டங்கள், சில நாடுகளில். பிரிட்டீஷார் விலகிப்போக வழி தேடுகிறார்கள். இந்த நெருக்கடியிலா இந்த பரிசு என்பவர்களை சிந்திக்க வைக்க சில குறிப்புகள். ஐரோப்பிய யூனியன் மக்கள் நலத்திற்காக இயற்றிய சாதனைகள்:
  1. இன்றைய காலகட்டத்தில் தேசீயத்தின் மேலாண்மையை பற்றிய நிதர்சனம்;
  2. யான் புகழ்ந்த ராபெர்ட் ஷுமென் தொடங்கிய ‘நிலக்கரி & எஃகு’ ஒத்துழைப்பு ஐரோப்பாவில் பல்லாண்டுகள் நிம்மதி வழங்க வழி வகுத்தது;
  3. ஐரோப்பிய சந்தை அந்த கண்டத்தின் மக்களின் கூட்டறவுக்கு எடுத்துக்காட்டு; மக்கள்/சொத்து பத்துக்கள்/ ஊழியம்/ செல்வம் ஆகியவை தொந்தரவு இல்லாமல் நடமாடுவதால், பிரச்னைகள் குறைந்தன. செல்வம் வளர்ந்தது;
  4. யூரோ கரன்ஸி வந்த பின் பல தடுமாற்றங்கள் குறைந்தன. போக்குவரத்து எளிதானது. செல்வம் வளர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம். உலகில் நல்ல பெயர். ஐரோப்பாவுக்குள் நிதானித்த பொருளியல் போக்கு.
இது ஒரு சுருக்கம். திசை மாற்றாமல் இருந்தால், பொருளியல் பரிசு கொடுக்கப்பட்டபின், எல்லா விஷயங்களையும், க்ளுப்தமாக அலசலாம். அல்லது 15ம் தேதியன்று மங்களம் பாடி விடலாம்.
இன்னம்பூராம்

செல்வன் 
10/13/12
 
to mintamil
 
2012/10/12 Nagarajan Vadivel
குறை ஒன்றூம் இல்லை செல்வா என்று பாட முடியாது ஆனாலும் இது அடுக்குமா
என்றூ ஒரேயடியாகப் புலம்பவும் கூடாது

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ

குறையில்லாத நோபல் போன்ற இன்னொன்று ஏன் உருவாகவில்லை


குறையில்லாத பரிசு என எதுவும் இல்லை. நோபலுக்கு மாற்று என  மகசேசே விருது மாதிரியான சில ஆல்டர்நேடிவ்கள் இருந்தாலும்  உலக அரங்கில் இம்மாதிரி பரிசுகள் கொடுத்துகொள்வதில் என்னை பொறுத்தவரை எந்த பயனும் இருப்பதாக தெரியவில்லை. பரிசு கொடுப்பதாக இருந்தால் அந்த பரிசுபணம் தேவைபடும் அமைப்புகள் , நபர்களுக்கு பரிசுபணம் வழங்கபடுவது நல்லது. உதாரணம் வாங்கரி மாத்தாய், வங்கதேசத்தின் முகமது யூனுஸ். பராக் ஒபாமாவுக்கு ஒன்ரரை மில்லியன் டாலரை கொடுப்பதால் என்ன பலன்?
Nagarajan Vadivel 
10/13/12
 
to mintamil
 
செல்வன் ஐயா
இன்னும் நீங்கள் பரிசுத் திருவிளையாடல் பற்றி அதிகம் தெரியாதவராக
இருப்பதால் வெள்ளந்தியாகப் பேசுகிறீர்கள்.  சில நேரம் யாருக்குப் பரிசு
கொடுப்பது என்று முன்னமே திர்மானித்து அதற்கேற்ப முழு நாடகமும் நடக்கும்
நோபல் பரிசு ஒரு பெரிசல்ல என்று சொல்லும் பலர் அந்தப் பரிசைப் பெற்றவர்கள்தான்
பெறாதவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்
பெற்றவர்களை மற்றவர்கள் தப்பு தப்பென்று ரத்த காயம் படத் தப்பிவிடுவார்கள்
Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/13/12
 
to mintamilthamizhvaasalvallamaiதமிழ்megopalan1937
 
நோபெல் திருவிழா
பகுதி-7
இன்னம்பூரான்
Dear Dr.Gopalan,
I searched for you and located these videos; I hope you enjoyed Shrodinger’s Cat and find these six videos rewarding.
Regards,
Innamburan
Nature Video presents five debates from the 2012 Nobel Laureate Meeting in Lindau:
  1. Confronting the Universe
  2. A Golden Age?
  3. The Energy Endgame
  4. Is Dark Matter Real?
  5. Beyond the Class Room
  6. Betting on the Cosmos
*************
GOPALAN VENKATRAMAN <gopalan1937@gmail.com>
10/13/12
 
to me
 
அன்பிற்கு உரிய ' இ ' சார் ,
    ரொம்ப ரொம்ப நன்றியும் , மகிழ்சியும் . வீடியோக்களை மெதுவாக பார்த்துவிட்டு சொல்கிறேன் .உங்களின் வேகமும் பரந்த அறிவும் என்னுள் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது .   Shrodinger’s Cat  புரிந்தும் புரியாமலும் இருந்தது   
கோபாலன் 
Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/13/12
 








புனர் தரிசனம்




புனர் தரிசனம்

Innamburan S.Soundararajan Sat, Apr 20, 2013 at 5:27 PM

புனர் தரிசனம்
Inline image 1

இன்றைய விகடனில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், பொள்ளாச்சியிலிருந்து, கு,மணியரசன் என்பர் ''இளைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை?'' என்று வினவிய வினாவுக்கு அளித்த பதில்:

“1894-ம் வருடம் நவம்பர் 30-ம் தேதியன்று நியூயார்க் நகரத்திலிருந்து, சென்னையில் இருந்த தனது தொண்டர் அளசிங்கப் பெருமாளுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் இருக்கும் இந்த அறிவுரைகளைக் காட்டிலும் இளைஞர்களுக்கு நான் பெரிதாகச் சொல்ல ஏதும் இல்லை!''

அது:
''என் வீர இளைஞர்களே...
அன்பு, நேர்மை, பொறுமை - இவை மூன்றும் இருந்தால்போதும். வேறு எதுவும் தேவையில்லை. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே. பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. என் குழந்தைகளே... உணர்ச்சிகொள்ளுங்கள். உணர்ச்சிகொள்ளுங்கள். ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம். இந்தியாவை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு உணவு தர வேண்டும். கல்வியைப் பரப்ப வேண்டும். புரோகிதத்துவத்தின் கொடுமைகளை அகற்ற வேண்டும். இவற்றைச் சாதிக்க உன்னில் ஊக்கத் தீ பற்றட்டும். பிறகு, அதை எல்லா இடங்களிலும் பரப்பு. வழி நடத்திச் செல்லும்போது பணியாளனாகவே இரு. சுயநலமற்றவனாகவே இரு. ஒரு நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்காதே. எல்லையற்ற பொறுமை யுடன் இரு. உனக்கு வெற்றி நிச்சயம்!”

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது.

இன்னம்பூரான்
20 04 2013
சித்திரத்துக்கு நன்றி; http://www.belurmath.org/index/sw_150.jpg

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு"




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு"
1 message

Innamburan S.Soundararajan Sat, Apr 20, 2013 at 4:40 PM

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15:வலையை வீசு" 
Inline image 2

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10
 
 
 தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: வலையை வீசு"லையை வீசு"

தணிக்கைத்துறையின் தணியா வேகம்'அழகர் ஆற்றில் இறங்கிய' மாதிரி நம்மை எல்லாம் அரசு நிர்வாகமும்அதன் குறைகளும் என்ற சர்ச்சையில்அதுவும் மற்றொரு இழையில்அழைத்து சென்றதுநான் எதிர்ப்பார்த்ததுவரவேற்பது. இரண்டு இழைகளும் Interactive Fora.  இது நிற்க (வேண்டாமே).

பல பிரிவுகளில் அனுபவம் தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்எங்களை,அங்கும்,ங்குமிங்குமாக சுழற்றுவார்கள். ஆனால்முருங்கை மரத்து வேதாளம் போல,இந்த ஃபண்ட்ஸ்  4 செக்க்ஷன் என்னுடன் ஒட்டிக்கொண்டு உறவாடியதுபிரமோஷன் ஆகும் வரை. ஒரு நல்ல நாள் பார்த்து (எங்க ஆஃபீஸில் ஜோதிடத்திற்கா பஞ்சம்,அல்லது பஞ்ச்சாங்கத்துக்கா?) ஏ.ஜீ.யிடம் விண்ணப்பித்தேன். அவர் செவி சாய்க்கவில்லை.

சுருங்கச்சொல்லின்எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியாது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். அது அந்த ஆஃபீஸின் மனுதர்மம். நிச்சியமாகஎங்கிருந்தோ வந்து ஆட்சி புரியும் அதிகாரிகளுக்கு சொல்லித்தரமாட்டாது.  இதற்கெல்லாம் மசிவோனாஇன்னம்பூரான்?

 சொல்லிக்கொடுக்கப்படாத பின்க் ஸ்லிப்மிஸ்ஸிங்க் க்ரெடிட்லாடர்,ரெகான்சிலேயஷன் என்ற கண்கட்டு வித்தை ஆகியவை இனி செல்லுபடி ஆகாது என்று முகாந்திரம் இல்லாமல்ஒரு ஆணை பிறப்பித்துஇந்த ஆனானப்பட்ட ஃபண்ட்ஸ்  4. அதன் சுற்றுப்படைகளான செக்க்ஷன்களையும் ஆட்டிப்படைத்துவிட்டேன். பொங்கி எழுந்தனர்தொன்மை காப்போர். உள்ளடி வைத்தியம் செய்யும் பிரிவிடம் (Internal audit) முறையிட்டார்களாம்காதோடு காதாக. இதெல்லாம் ஏ.ஜீ தான் என்னிடம் சொன்னார். உள்ளடி வைத்தியப்பிரிவு நேரடியாக அவரின் கன்ட்ரோலில். அனுபவசாலி அந்த ஸூப்பிரடெண்ட். அவர் இப்போது இல்லை. மன்னிப்பாராக. என் கணிப்பில் அவர் ஒரு தீவிரவாதிதொன்மை போற்றுவதில். காரசாரமாக எனக்கு ஒரு நோட் (ஏ.ஜீ. சுருக்கொப்பத்துடன்) அனுப்பினார்.  அவரைப்போல சுற்றி வளைக்காமல்என்றோ ஏ.ஜீ 'நிர்வாகத்தை எளிதாக மாற்றுவதுஎன்று அனுப்பிய சுற்றறிக்கையை ஆதாரமாககொண்டுஎன் கூற்றை விளக்காமல் அனுப்பிய நோட் (ஏ.ஜீ. சுருக்கொப்பத்துடன்)அவர்களைவழிக்குக்கொணர்ந்தது. எல்லா மர்மங்களயும் சொல்லிக்கொடுத்தார்கள். அனைவரின் சம்மதத்துடன் சீர்திருத்தங்கள் வந்தனஎன் கடைசி நோட்டில் (ஏ.ஜீ. கையொப்பத்துடன்; சுருக்கொப்பத்துடன்  அல்ல !. )
 
தெரியாமல் ஏ.ஜீ. அவர்கள் எல்லா ஆவணங்களிலும் சுருக்கொப்பம்கையொப்பம் இடவில்லை. இது ஒரு நடு நிலை உத்தி. அவருடைய மனப்போக்கை அறிய,மார்ஜினில் அவர் எழுதியதை படித்தால் போதும். இந்த அதிசய முறை எப்பவாவது அரிதாக வரும். யாருடைய மனமும் நோகக்க்கூடாது. (அவர் நினைத்தால் செய்வார்,அடிக்கடி. அது வேறு விஷயம்.) உண்மை வெளிவரவேண்டும். அவ்வளவு தான். ஆனால்,எளிதில் முடியவில்லைஇந்த சர்ச்சை. நான் ஏ.ஜீ.யிடம் ஒரு கன்ஃபெஷன் செய்ய வேன்டி இருந்தது. அகவுன்ட்ஸ் கரன்ட் என்று ஒரு செக்க்ஷன். பாகிஸ்தானிலிருந்து மாதாமாதம் 'சொல்ல ஒன்றுமில்லை' (‘Nil, Nil, Nil’) என்று ஒரு லிகிதம் வரும். நான் ஸ்டாமபை உருவிக்கொண்டு (ஹி.ஹி. தொட்டில் பழக்கம்) செக்க்ஷனுக்கு அனுப்பாமல்ரொம்ப நாள் வைத்திருந்ததைக்காட்டிசெக்க்ஷன் அந்த லெட்டரை தேடாதது ஏன் என்ற காரணத்தை விளக்கினேன். ஸிம்பிள். அந்த கணக்கு என்றோ முடிந்துவிட்டது. 

அவன் அனுப்புறான். இவன் இதற்கு இல்லாத வேலையை செய்யாமல் இருக்கிறான்! இதற்கு ஆள் பலம் வேறு. அது தான் கதை. 'ஓஹோஎன்றார். என் கூற்றை ஆதரித்தார். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்கொண்டதுநான் நிர்வாகத்தை ஒரேயடியாக கேலி செய்யவில்லை. சில நுட்பங்களை பகிர்ந்து கொண்டேன். எல்லா அலுவலகலங்களிலும், ஓம் ஐயா சுட்டிய மாதிரிதலைகீழ் வாய்பாடுகள் உண்டு.
 
இப்பிடி வண்டி சாவதானமாக நடை போட்டுக்கொண்டு இருக்கும் போதுஅப்பாவின் க்ஷேமநிதி சாபம் நினைவுக்கு வந்தது. உடனே அவரை விவரம் கேட்டேன். உன்னால் முடியாதுஇருபது வருடங்கள் கடந்தன. 'எள்என்று விட்டு விட்டேன் என்றார்விவரமும் கொடுத்தார். யாரை தான் நப்பாசை விடும்? நான் விலக்க நினைத்த மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை துளாவிகண்டு பிடித்துக்கொடுத்தேன். மகிழ்ச்சி பொங்கஅவரும் மேலும் பல கேஸ்கள் கொடுத்தார். கண்டு பிடித்தோம்.

மூன்று படிப்பினைகள்:
1. மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை விலக்க நினைத்தது , என் தவறு.

2. ஆனால்அந்த செக்க்ஷன் மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை கையாண்டமுறை தப்பு.எனது தலையீடு பயன் அளித்தது.
 
3. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகுஉத்தர் பிரதேஷ் கும்பமேளாவில்க்ஷேமநிதி மிஸ்ஸிங் க்ரெடிட் புகார்களை கேட்க வசதி நான் செய்தததிற்குஇந்த ஆய்வு தான் கை கொடுத்தது. கணிசமாக தீர்வு காண உதவியது. ரிப்பேர் ஆன பேரை மீட்டுக்கொடுத்தது.
இன்னம்பூரான்
Tirumurti Vasudevan 
1/15/10

இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து?
திவாஜி
Venkatachalam Subramanian 
1/15/10

2010/1/15 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து?
திவாஜி
ஓம்.
பொதுவாக வருவாய்த்துறையில் பயன்படுத்துவது ’டாட்டன்ஹாம் ’முறை .
அலுவலகத்திற்கு வந்த ஒவ்வொரு கடிதமும் அச்சு எண்ணிட்டு திறமை அனுபவமுள்ள ஒருவருடைய கண்காணிப்பில் நிர்வகிக்கப் படும். ’மாவட்ட அலுவலக நடைமுறை நூல்’ என்ற புத்தகம் தபால் வந்தடைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு கண்ட பின்னர் அதனை பதிவுகள் வைப்பறைக்கு செல்வது வரையிலான விளக்கம் அளிக்கும்.

முடிவு செய்யப்பட்ட கோப்புகள் கூட எத்தனை ஆண்டுகாலம் காக்கவேண்டும் என்று கால நிர்ணயக் குறிப்புடன் வைப்பறைக்கு அனுப்பப் படும். அந்தக் காலக் கெடு முடிந்தபின்னர் அவை அழிக்கப்படும்.

கோப்புகள் மிகவும் முக்கியமானவை மட்டுமே மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பப் படும். மிகச் சாதாரணமானவை அந்த அந்த அலுவருக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் ,நேர்முக உதவியாளர்கள் ஒப்புதல் அளித்து தீர்வு காண்பர்.

எடுத்துக் காட்டாக புதியதாக ஒரு சாலை ;ரிங் ரோடு’  புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிடுகின்றது என்போம்.  உரிய புலத் தணிக்கை மேற்கொண்டு எந்த எந்த சர்வே எண்கள் அடங்கிய நிலங்கள், தனியாருக்கு பாத்தியப்பட்டவை, அரசுப் புறம்போக்கு நிலங்கள் முதலானவை பரிசீலிக்கப் படவேண்டும். புறம்போக்கு நிலங்கள் இருந்தால் அவை சர்வே செய்து சரிபார்க்கப்பட்டபின்னர் நில எடுப்புக்குத் தேவையான அளவு மட்டும் சப்-டிவிஷன் செயப்படும். புலப்படங்கள் தயார் செய்து கொண்டபின்னர் தனியாரிடம் தகவல் தந்து எவ்வளவு நிலம் அரசு கையகப்படுத்த விருக்கின்றது என்பதைக் காட்டி அரசின் கொள்முதல் விலையாக இவ்வளவு தர உத்தேசம் என்பதைத் தெரிவிப்பார்கள். ஏற்றுக் கொண்டு விலையைப் பெற்றுக் கொள்வோர் சம்மதம் தெரிவிப்பர். அரசின் விலை பற்றாக்குறை என்பவர் மேல் முறையீடு செய்து காம்பென்சேஷன், ‘இழப்பீடு க்கு போதிய தொகை பெற்றுக்கொள்வார்கள்.’ திட்டத்திற்கு ஆகும் தொகையைப் பொருத்து கையகப்படுத்தும் அதிகாரம் தனியே அரசாணைமூலம் இன்ன அலுவலர் என்பதை அரசு அங்கீகாரம் செய்யும்.
குறைந்த அளவிலான சிறிய கையகப்படுத்தும் திடத்திற்கு வட்டாட்சியர் நிலையில் நியமனம் செய்வார்கள்.. அதிக அளவில் நிலத்தேவை ஏற்பட்ட நிலையில் துணைக் கலக்டர் அந்தஸ்தில் கையகப் படுத்தும் அலுவலரை நியமனம் செய்வார்கள்.

கையகப்படுத்துதல் பற்றிய விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எந்த ஒரு பிசகும் இன்றி எந்த ஒரு விடுதலும் இன்றி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நிலம் கையகப்படுத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கப் படவேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்ட அதிகாரி பொருப்புடையவர் ஆவார்.

கையகப்படுத்தும் திட்டம் முன்வடிவு தந்து நெடுஞ்சாலைத் துறை வேண்டுகோள் விடுத்துக் கோரிய முதல் கடிதம் தபாலில் வந்த உடன் மேலாளர் அந்தக் கடித்த்தைப் பிரித்துப் படித்தவுடன் கையகப்படுத்தும்  பிரிவுக்கு அந்தக் கடிதத்தின் தலைப்பில் இடது ஓரத்தில் எண் அச்சிட்டு அனுபுகிறார். அந்தப் பகுதியின் தலைவர் அதனை சம்பந்தப்பட்ட எழுத்தரின் பதவிப் பெயருக்கான எல்.1. எல்2  எழுத்தர்க்கு அனுப்பி அவர்கள் பெற்றுக்கொண்டமைக்காக அந்த தபால் பதிவேட்டில் சுருக்கொப்பம் செய்கிறார் எழுத்தர். அந்தக் கோப்பு அந்தக் கடிதத்தின் எண்ணின் பெயரால் அழைக்கப்படும். 2345/10 எல்.1 என்பது அந்தக் கோப்பின் பெயராகும்.
எல்.1 அந்தக் கடிதத்தை வாங்கி அவர் கையாளும் தன் பதிவேடு (Personal Register) -இல் பதிந்து கொள்வார். அதாவது அந்தக் கடிதத்தின் பொருள்- ”நிலம் கையகப் படுத்துதல்- மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கிராமம்- புல எண் 13-4 , 6, 9. ,14/2, 3, 5,  19/1 ஆகிய நிலங்களில் 12-கெக்டேர் 12 ஆர்ஸ். கையகப் படுத்துதல்
தொடர்பாக” என்று தன்பதிவேட்டில் பதிவு செய்வர். கோரியிருக்கும் அலுவலரின் பதவிப் பெயர் அவருடைய அலுவலக் கடித எண் நாள் ஆகியவற்றைப் பதிந்து கொண்டு அந்த கோப்பு எண் அருகில் தன் பதிவேட்டின் வரிசை எண்ணையும் எழுத்திவைப்பார் .

கடிதம் கைக்குக் கிடைத்த மூன்று நாட்களுக்குள் அந்தக் கோப்பினை அலுவலரின் பார்வைக்கு வைக்கவேண்டும். 

கோப்பு இரண்டு பகுதியாகக் கையாளப்படுகின்றது.. ஒன்று கரண்ட் ஃபைல், ஒன்று நோட் ஃபைல். எழுத்தர் நெடுஞ்சாலைத் துறைக்குத் தேவையான நிலங்கள் எவை கோரப்பட்டுள்ளன என்பதையும் அந்த நிலங்கள் தொடர்பான விவரங்களையும்(அந்தப் புல எண் நிலத்தின் மொத்த அளவில் எவ்வளவு தேவை, அவை எந்த வகையைச் சார்ந்தவை,அவற்றில் புறம்போக்கு எவை எவ்வளவு, தனியார் பட்டா நிலங்களின் எண், பரப்பு, அதில் தேவை எவ்வளவு) எடுத்து எழுதி மேல் அலுவலருக்கு கோப்பினை அனுப்புவார். மேல் அலுவலருக்கு அனுப்புகையில் எழுத்தர் ஒரு தனித் தாளில் ’குறிப்பு’ (Note) என்று தலைப் பிட்டு கோரிக்கைக்கடிதத்தில் எழுதப்பட்ட விவரங்களின் மேல் விளக்கம் எழுதி இடது ஓரத்தில் (லாண்ட்ரி மார்க்) போன்று தன்னுடைய சுருக்கொப்பமிட்டு, பல கைகள் மாறி ஒவ்வொருவருடைய மெற்குறிப்புடன்  செல்லும். அலுவலர் அதைப் பார்த்து தன்னுடைய கருத்தியும் கூறி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அந்த நோட்ஃபைலில் எழுதி அதே வரிசையில் திரும்பவும் எழுத்தருக்கு வரும் .

எழுதியதைத் திரும்ப எழுதாமல் எழுத்தர் எழுதியிருக்கும் குறிப்பில் சம்பந்தப்பட்ட வரியை அடிக்கோடிட்டு மார்ஜினில் இரத்தினச் சுருக்கமாக ‘சரி- அப்படியே செய்யவும்’ அல்லது ‘இதை மாற்றி இவ்வாறு செய்யவும்’ என அலுவலர் எழுதுவார். அவருடைய அங்கீகாரம் சுருக்கொப்பத்தின் மூலம் உறுதியாகி மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் புலத்தணிக்கைக்கு உரிய துறைப் பதிவேடுகளின் சகிதம் இடப்பார்பை நடக்கும்.. அங்கு அவர் புலத் தணிக்கை செய்தவற்றையும் தன் அறிவுரையையும் நோட்ஃபைலில் எழுதி சுருக்கொப்பம் இட்டு எழுத்தருக்கு மீண்டும் வரும். அந்த நிலம் கையகப் படுத்தப்பட்டு நிலம் நெடுஞ்சாலைத் துறையினரின் கணக்கிலிருந்து பணம் பெற்று உரியநபர்களுக்குப் பணம் பட்டுவாடா ஆகி, நிலத்தை ஒப்படைக்கும் வரை அந்தக் கோப்பு தொடர்ந்து இருக்கும்.   முழுக் கையொப்பம் (Fair copy) யில் மட்டுமே இருக்கும்.அதாவது வெளிச்செல்லும் கடிதங்களில் மட்டுமே முழுக்கையொப்பம் இருக்கும். அந்தக் கடிதத்தில் அப்ரிவியேஷன்ஸ் எதுவும் இருப்பதில்லை.

ஒரு நிகழ்வில் நோட்ஃபைலில் குறிப்பு எழுதி மேல் அதிகாரிக்கு அனுப்பப் பட்டது. கீழே யிருந்து ’சரிகம பதநி’  என்று கீழ் வரிசையின் அனைத்து அலுவலர்களும் சுருக்கொப்பம் செய்திருந்தனர். வ்ருவாய் அலுவலர் அந்தக் குறிப்பின் முக்கியமான கோரிக்கையை அடிக்கோடிட்டு மார்ஜின் ஓரத்தில் (Not approved)  என்று எழுதி சுருக்கொப்பம் செய்துவிட்டார்.

மலையென நம்பிக்கை வைத்துக் காத்திருந்த மனுதாரர் நொந்து போய் அலுப்வலகத்டின் முன்வரிசை அலுவலர் ஒருவரைச் சந்தித்து கையூட்டுக் கொடுக்க முன்வர அவர் அந்தக் கொப்பினைப் பெற்று (Not approved) என்று எழுதியிருப்பதை (Note approved) என ஒரு ‘e’ சேர்த்து மனுதாரரைத் திருப்திப் படுத்திவிட்டார்.

அந்த கோப்பினை வழக்கு மன்றமோ அல்லது மேல் முறையீட்டு அலுவலரோ  தணிக்கை செய்யக் கேட்பதுண்டு. அவ்வாறு அனுப்பப் படும் போது நோட்ஃபைல் அனுப்பப் படமாட்டாது. கரண்ட் ஃபைல் மட்டுமே போகும்.

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம். 


Geetha Sambasivam 
1/15/10

அருமையா இருக்கு. அதுவும் தமிழக அரசுத்துறையில் புழங்கும் பல தமிழ்ச்சொற்களைக் கண்டேன். நன்றாகவே புரிகிறது. 

சித்திரத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/-aQT00iUrg5U/T6dvqKraY_I/AAAAAAAAEUU/KYpNA9AyT94/s640/azhagar+2.jpg
இன்னம்பூரான்
20 04 2013