Saturday, October 12, 2013

பாபா சாஹேப் அம்பேத்கார்:அன்றொரு நாள்: அக்டோபர் 14

பாபா சாஹேப் அம்பேத்கார்:


அன்றொரு நாள்: அக்டோபர் 14
Innamburan Innamburan Fri, Oct 14, 2011 at 11:44 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 14
சில வருடங்களுக்கு முன் எனக்கு சமூகவியலில் ஆய்வு செய்வதில் உதவிய பேராசிரியர் ஆங்கிலேய - பெளத்தர். மனம் மாறி மதம் மாறிய சான்றோர்கள் பல உண்டு. மதம் மாறுவதும் உண்டு; மாற்றப்படுவதும் உண்டு. 14 வயதில் என்னை கிருத்துவனாக்குவதற்கு படாத பாடு பட்டார்கள். ஆனால், உண்மையில் கிருத்துவத்தின் மேன்மையை உணர்த்தியவர் முயற்சிக்கவேயில்லை. இன்று கூட அண்டை வீட்டிலிருந்த அருமை நண்பர் சீனியர் பாதிரி. அவர் ஒரு சொல் கூட சொன்னதில்லை. ஆனால், பக்கத்து சர்ச்சில் இருப்பவர்கள் கனிவுடன் அவர்கள் சமயம் சார்ந்த கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள். 
மேல்நாடுகளில் கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து வந்த மார்ட்டின் லூதர், கத்தோலிக்கத்தை சென்றடைந்த கார்டினல் ந்யூமென், பிரும்மஞானசபைக்கு, பல பாதைகளில் பயணித்த பின், வந்து சேர்ந்த அன்னி பெஸண்ட், சிவப்பழமாய் திகழ்ந்து சமரச சன்மார்க்கம் தழுவிய திரு.வி.க. அவர்கள், சமய ஆர்வம், சம்பிரதாயம், ஹிந்துத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை, வைணவர், பல மதங்களின் உட்கருத்தை புரிந்து கொண்டவர், தொன்மையின் அருமையை வெளிச்சம் போட்டுக் காட்டியவர், மதமாச்சரியத்தை அறவே கடந்தவர், தனக்கென்று தனித்துவ ஆத்மபோதனை படைத்துக்கொண்டவர், உண்மையான செக்யுலர் மனிதர் ஆகியவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ராஜாஜி ஆகியோர் வரிசையில் தான் நாம், அக்டோபர் 14, 1956 ல் நடந்த ஒரு மத மாற்ற நிகழ்ச்சியை நோக்கவேண்டும். அநாவசிய விமரிசனங்கள் பல உண்டு. அதை நாம் பொருட்படுத்தலாகாது. ஏனெனில், நம்மால் மற்றவர் மனதில் புகுந்து அதி நுட்ப விஷயங்களை ஆராய இயலாது.
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக, ஹிந்து மதத்தின் மீது தன்னுடைய ஈடுபாடு குறைந்து கொண்டே வருவதை கவனித்து வந்த பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள், இடை விடாமல், மதமாற்றம் பற்றி சிந்தித்திருக்கிறார். மே 22, 1936 லக்னெளவில் நடந்த ஒரு தலித் மகாசபையில் இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், பெளத்தர் எல்லாம் கடை விரித்திருக்கின்றனர். ஜகஜீவன் ராம் வந்திருந்தார். பாபா சாஹேப் வரவில்லை. எனினும்,  இருபது வருடங்களுக்குப் பிறகு, அவர் 1956ல் மதம் மாறிய போது, 380 ஆயிரம் தலித் சமுதாயத்தினரை அவரே மதம் மாற்றியதில், அரசியல் கலவையோ, சமுதாய திருப்புமுனையோ இல்லை என்று சொல்லமுடியாது என்றாலும்,. 1937லியே, இவருடைய பெளத்தத்துறவி நண்பர் லோகநாதர் ‘பெளத்தம் உன்னை விடுவிக்கும்’ என்ற நூலை எழுதி, அதை தலித் மக்களுக்கு சமர்ப்பணம் செய்ததை நோக்கினால், அந்த பார்வை உறுதி படும் என்றாலும், ஒரு விசாலமான பார்வையில் நோக்கினால் நாம் குற்றமும் குறையும் காணமாட்டோம். பல்லாயிரக்கணக்கான வருடங்களின் அடக்குமுறைக்கு இப்படியும் எதிர்ப்பு அமையலாம். நந்தனார் கீர்த்தனை பாடினோம்; ஆனால், வருடம் ஒரு முறை தான் கோயிலுள் வர அனுமதிப்போம் என்றோம். திருப்பாணாழ்வாரை தோளில் சுமர்ந்து, மேளதாளத்தோடு அரங்கனை தரிசிக்க, அழைத்து வந்தார், லோகசாரங்கமுனி. அது ஆண்டவன் கட்டளையாம். அத்துடன் விட்டார்கள். இரட்டை டம்ளரும், கந்து வட்டியும், கட்டப்பஞ்சாயத்தும் இன்றும் நடைமுறையில். 1956க்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ஆதாயம் பல கருதி, பலர் கிருத்துவரானவர்கள், சாதி வேற்றுமையையும் உடன் கடத்தி சென்றார்கள். அதனால் தான், நம்மால் மற்றவர் மனதில் புகுந்து அதி நுட்ப விஷயங்களை ஆராய இயலாது. 
தான் சம்பந்தப்பட்டவரை பாபா சாஹேப், பல வருடங்கள் ஆழ்ந்து படித்து, தெளிவடைந்து, சிந்தித்தபின் தான் பெளத்த மதம் மாறியதற்கு சான்றுகள் உளன. அவரை பின்பற்றுவோர்களில் எத்தனை பேர் இன்று புத்த மதத்தை தழுவியவர்கள், அவர்களில் எத்தனை நபர்கள் 22 பிரமாணங்களையும் கடை பிடிக்கிறார்கள், எந்த அளவுக்கு அவர்கள் அகிம்ஸை, வாய்மை, நேர்மை போன்ற பண்புகளை கடை பிடிக்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. அக்டோபர் 14, 1956 அன்று பாபா சாஹேப் பெளத்தம் தழுவியதும் ஒரு திருப்பு முனை. தலித் சமுதாயத்திற்கும் அது ஒரு திருப்புமுனை, ஓரளவாவது. இந்தியா அரசியல்/சமுதாய தளங்கள் இந்த திருப்புமுனைகளை, பொது ஜன நலம் கருதி, உரிய முறையில் தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல், புறக்கணிப்பதில் ஆதாயம் தேடின என்று நான் நினைக்கிறேன். உசாத்துணையில் இருக்கும் அரிய நூலை படித்தால், நான் சொல்வது சரி என்று படலாம்
இன்னம்பூரான்
14 10 2011
ambedkar-s.jpg
உசாத்துணை:

Geetha Sambasivam Sat, Oct 15, 2011 at 3:31 AM

தெரியாத பல செய்திகளைத் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி ஐயா.  மதம் மாறினால் எல்லாம் மாறிவிடுகிறதா?? எந்த மதத்தில் இருந்து வெளியேறினாலும் அது அந்தக் குறிப்பிட்ட தாய் மதத்திற்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்றே படுகிறது.  இது என் சொந்தக் கருத்து. தவறானால் மன்னிக்கவும். அம்பேத்கருக்கே பின்னர் கருத்து மாற்றங்கள் இருந்திருக்கலாமோ?
2011/10/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 14
14 10 2011
ambedkar-s.jpg
உசாத்துணை:

யுத்த பிரகடனம்:அன்றொரு நாள்: அக்டோபர் 13

யுத்த பிரகடனம்

அன்றொரு நாள்: அக்டோபர் 13


Innamburan

Thu, Oct 13, 2011 at 8:06 PM



அன்றொரு நாள்: அக்டோபர் 13
முயல் திரும்பி ஆக்ரோஷத்துடன் ஓநாயை தாக்குவது, கீரிப்பிள்ளை பாம்பை துரத்தியடிப்பது, காடு கொள்ளாத அளவு சாது மிரள்வது, வணங்கும் தந்தையை எதிர்த்து காதலனை மணப்பது போன்ற வீர தீர செயல்களை, தனி மனிதனோ அல்லது ஒரு அப்புராணி பிராணியோ தான் செய்ய இயலும் என்று நினைக்கவேண்டாம். சமுதாயங்களும், தேசாபிமானங்களும் அவ்வாறு இயங்கியதை தொடர்கதை போல் வரலாறு அளிக்கிறது. நாம் கண்டுகொள்வதில்லை. இன்றைய தலைமுறைக்கு இரண்டாவது உலகப்போரை பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் படையெடுத்தவர்கள் (அச்சு அணி); இங்கிலாந்து, அதை சார்ந்த இந்தியா, கனடா, வகையறா, ரஷ்யாவும் அதன் சுத்துப்படைகளும், அமெரிக்கா ஆகியோர் தடுத்தாட்கொண்டவர்கள் (நட்பு அணி) என்று அநேகர் அறிவர். ஆனால், அக்டோபர் 13, 1943 அன்று, இத்தாலி தடுத்தாட்கொண்டவர்களுடம் சகவாசம் ஆகி, ஜெர்மனி மீது யுத்தப்பிரகடனம் செய்த கதை கேளும். ஜெர்மானிய ஹிட்லரும், இத்தாலிய முசோலினியும் சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள். (ஸ்டாலினும் தான்; கதை வருது.) ஜூலை 1943லியே முசோலினி மக்கள் புரட்சியினால் ஒழிக்கப்பட்டான். அவனது பாசிஸம் மடிந்தது எனலாம். பேருக்கு இருந்த இஸ்பேட் ராஜா விக்டர் இம்மானுவேலுக்கும், முசோலினியின் தளபதியாக இருந்த கீரிப்பிள்ளை ஜெனெரல் படோக்லியாவுக்கும் மவுசு கூடியது. ஸெப்டம்பர் 8 அன்று, ‘கொயட்டா’ நட்புப்படை ஒன்று இத்தாலியின் சலர்னோ என்ற இடத்தில் இறங்கியது. ஹிட்லரும் முறைத்தான். இத்தாலி மீது படையெடுக்க ஆயத்தம் செய்தான்; ரோமாபுரி விஜயம் செய்தான். ராசாவும் ,மந்திரியும் ஓடிப்போய்ட்டாங்க, பிரிண்ட்ஸி என்ற இடத்துக்கு. அங்கிருந்து தான் அக்டோபர் 13, 1943 அன்று தான் மந்த கதியில் இத்தாலி, மக்களின் முழு ஆதரவுடன், ஐசன்ஹோவருடன் சேர்ந்து கொண்டு, ஒரு பாடாக ரோமாபுரியை மீட்டனர். இப்போது வியப்புக்குரிய திருப்புமுனை! என்ன தான் சொன்னாலும்ெ, ஜெனெரல் படோக்லியா முசோலினியின் கைப்பிள்ளை; தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை; பாசிஸ தளபதி. பாசிச ஒழிப்பு முழுமையாக இருக்கவேண்டுமென்று, அவரும் பதவியிலிருந்து விலகினார். 
நம்ம ஃப்ரெண்ட் தேசிகன் கேக்கறாரு? ̀‘நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா? அவருக்கென்ன?
இன்னம்பூரான்45270599.jpg

உசாத்துணை:

பிரமலை கள்ளர்: அன்றொரு நாள்: அக்டோபர் 12:II

பிரமலை கள்ளர்:


அன்றொரு நாள்: அக்டோபர் 12:II

Innamburan Innamburan Thu, Oct 13, 2011 at 2:56 AM

அன்றொரு நாள்: அக்டோபர் 12:II
II. தந்தையின் பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் வழிமுறையில் சிறப்பாக நடத்தி வந்தது. அப்பா ஒரு ஜூனியர் கூட்டுறவுத்துறை அதிகாரி. வீட்டு முகப்பு அறை தான் ஆஃபீஸ். ஆனால், அப்பா தினந்தோறும் முகாம் போய் விடுவார். இரவு பத்து மணிக்கு தான் ஆஃபீஸ். ஒரு தெலுங்கு மாமா கணக்கு எழுத வருவார். அம்மா தான் புதிய இரும்பு கலப்பை, விதை தானியம், மருந்துகள் எல்லாம் கொடுப்பார். மாலை ரேடியோவில் விவசாய அறிவுரை கேட்கக்கூட்டம்.  போலீஸ் கெடுபிடியை தாண்டி, வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கள்ளர் பிரான்கள் கடனை அடைக்க நடு நிசியில் வருவார்கள். அவர்களுக்கு அப்பாவின் ரூல் தடியிடம் பயம். அவருக்கு இருந்த அதிகார பலம், வரவு செலவுக்கு அனுமதிக்கப்பட்டது எல்லாம், இன்று அந்தத்துறைத்தலைவருக்கே கிடையாது. லேபர் கூட்டுறவு சொசைட்டி, விற்பனை கூட்டுறவு சொசைட்டி, லேவாதேவி கூட்டுறவு சொசைட்டி, விவசாய கூட்டுறவு சொசைட்டி, சேமிப்பு கூட்டுறவு சொசைட்டி. எல்லாம் லாபத்தில். அங்கத்தினர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போய் வரும் பிரமலை கள்ளர்கள். அப்பா சர்வாதிகாரி. கட்டுப்படுவார்கள். கோடாங்கி தான் சூத்ரதாரி. டவாலி போட்டுக்கொள்ளாத டவாலி மாயாண்டியும், பெரியாண்டியும் குடும்ப நண்பர்கள். எனக்கு ஒரு பாடி கார்டு உண்டு. ‘...அவர் பெயர் ரவணப்பன்; ஹெட் கான்ஸ்டபிள்; வேங்கையச்சுட்ட வீரன்; எங்கள் ஹீரோ. எனக்கு நிழல் என்ற பணி. அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அவரது சைக்கிளில் டபிள்ஸ்! அவர் கண்ணில் மண் தூவி விட்டு, அருணா ஆசஃப் அலியையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும், பார்த்து விட்டு வந்தேன். நான் காங்கிரஸ்; ஃபார்வேட் ப்ளாக் பக்கம் சாய்வு. அப்போது தான் அப்பா கடைசியாக அடித்தது...’.
இதனுடைய செய்தி: ஆங்கிலேய நிர்வாஹம் ஸர் வில்லியம் ஸ்லீமென் மேற்பார்வையில் வட இந்தியாவில் ‘தக்ஸ்’ (Thugs) என்ற கொள்ளையர் கூட்டத்தை அடக்கியதும், புனருத்தாரணம் செய்ததும் வரலாறு. அதே மாதிரி, 1947 வரை ஆங்கிலே அரசு செய்த ஆக்கப்பூர்வாமான பணிகள் பிரமலைக்கள்ளர்களுக்கு உதவியது போல, பிற்காலம், அரசியல் ஆதாயத்திற்காக எல்லா கட்சிகளும் தீட்டிய தன்னலத்திட்டங்கள் உதவவில்லை என்று நான் கருதுகிறேன். 1960களில், இந்த கள்ளர் புனர்வாழ்வு திட்டத்தைத் தணிக்கை செய்ய சென்றிருந்தேன். என்று அது போலீஸ் + கூட்டுறவு துறைகளிலிருந்து தாசில்தார்களிடம் வந்ததோ அன்றே அரோஹரா. ஜனாப் யாகூப்கான், பெரியாண்டி, மாயாண்டி, ரவணப்பன் ஆகியோரை அவரவர் இடங்களில் போய் சந்தித்தேன். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்பது கண்கூடு. விஜாரித்ததில், 1947க்கு பிறகு அவர்களுக்கு எல்லாமே சுரத்துக்குறைந்துவிட்டது தெரியவந்ததது. இன்று தமிழ்நாட்டில் Kallar Reclamation எப்படி நடக்கிறது என்று படித்தேன். எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.
இனி கள்ளர் இனம் தன்னை பற்றி: சில பகுதிகள்:
‘... கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி-
    முகமதியர் ஆட்சி,
    விஜய நகர ஆட்சி,
    பாமினி சுல்தான் ஆட்சி,
    முகலாயர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி,
    நாயக்கர் ஆட்சி,
    தக்காண சுல்தான் ஆட்சி கடைசியாக
    ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி ஆட்சிகள் ஏற்பட்டதினால், 
இவர்கள் தங்கள் தொழிலாகிய நிர்வாகம், போர்படை தொழில் முதலிய தொழில் நிலைகளை இழக்கும்படிநேறிட்டது. மற்ற வகைத் தொழில் முறையை அறியாததால், வாழ்கையில் பல எதிர்மாறான நிலையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வளமான நீர் வசதியுள்ள பகுதிகளில் வாழ்ந்தோர் விவசாயத்தை ேற்கொண்டனர். மற்ற வறட்சியான பகுதிகளில் வாழ்ந்தோர் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டனர். 
ஆங்கிலேயர்களையும் அவர்களது ஆட்சியையும் எதிர்த்து சுதந்திரத்திற்காக போரிட்டு, தென்னிந்திய அரசர்கள் தங்களது ஆட்சியை இழந்ததினால், தங்களது படைகளை கலைத்து விட்டனர். தென்னிந்திய அரசர்களின் படையில் போர் வீரர்களாகவும், படை தளபதிகளாகவும், பணிபுரிந்த கள்ளர் குலத்தினர் தங்கள் தொழிலை இழந்தனர். போரையே தங்கள் தொழிலாக கொண்ட கள்ளர் குல மக்கள் தங்கள் தொழிலை இழந்ததினால் பிழைக்க வழியின்றி, வயிற்று பிழைப்பிற்காக பலவிதமானதிருட்டு, கொலை, கொள்ளை முதலிய சமுதாய விரோத செயல்களில் ஈடுபட்டு, நெறிமுறை அற்ற வாழ்க்கையை மேற்கொள்ள நேரிட்டு, குற்றப்பரம்பரை சட்டத் (கைரேகை சட்டம்) தினால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இவற்றில் மிகக் கடுமையானவை குற்றப்பரம்பரை சட்டம் 1911 (Criminal Tribes Act, 1911). குற்றப்பரம்பரை சட்டம், (திருத்தியது), 1924(Criminal Tribes Act, Amended, 1924) 1911 வரை ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் (Composite Madras presidency - parts of Kerala, Karanataka, Andhra and the present Tamil Nadu) இருந்து அனைத்து கள்ளர் குலத்தவர் (ஜாதி) ஒன்றாக கருதப்பட்டு, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் தோன்றிய தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. V. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் தன் குல மக்கள் குற்றப்பரம்பரை சட்டம், 1911 ஆல் வார்த்தையால் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருவதைக் கண்டு கொதித்தெழுந்து, 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து தீவிர நடவடிக்கை தளர்த்தப்பட்டது. இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் Denotified Kallar Tribe என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (Esanattu Kallars) அழைக்கப்பட்டனர். அரசு ஆவணங்களிலும் அவ்வாறே ஈசநாட்டு கள்ளர்கள் என்றே குறிக்கப்பட்டனர். தஞ்சை, மதுரை மாவட்டங்களில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1930 வரை CT Act.   பிரகாரம் கள்ளர் இன மக்களை கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாகினார்கள் என்று அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் Block Burn என்பவர் குறிப்பிட்டுள்ளார். 1939 வரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தஞ்சை, திருச்சி, மாவட்டங்களில் செயல்பட்டு வந்திருக்கிறது.
எஞ்சியிருந்த மாவட்டங்களில் இருந்த கள்ளர்கள் 15.08.1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை சட்டப் (Criminal Tribes Act, 1911) பிடியிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இவர்கள் சீர்பழங்குடி கள்ளர் (Denotified Kallar Tribe) என்று அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு இரத்த உறவு முறைகொண்ட (Kinship) கள்ளர் குல மக்கள் ஈசநாட்டுகள்ளர்கள் (Esanattu) என்றும் சீர்பழங்குடி கள்ளர் (Denotified Kallar Tribe) என்று இருபிரிவினர்களாக்கப்பட்டானர். பெரும்பான்மையான விபரமறியாதோறும், தங்களை மேட்டுகுடி மக்கள் (Upper Caste) என்றும் ஜாதிபாகுபாட்டில் மற்ற இனத்தவர்கள் நடுவில் காட்டிகொண்ட ஒரு சிலர் சூழ்ச்சியினாலும், இப்பெயர்கள் அரசு ஆவணங்களில் நிலைபெற்றுவிட்டன.
 மேலும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முதலாவது (1972) மற்றும் இரண்டாவது (1985) பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களால் (First and Second Backward Classes Commissions) கள்ளர் இனம் G.O.No.437 S.W.D. Dated 15.05.1972, G.O.No.1564,1566, 1567 Dated 30.07.1985, G.O.No.242 B.C.W. N.M.P and S.W.D Dated 28.03.1989 -ன்படிகீழ்க்கண்டவாறு, ஒன்றாக இருந்த , கள்ளர் ஜாதியினர் சிதறடிக்கப்பட்டனர்.
ஈசநாட்டு கள்ளர்
கள்ளர் குலத் தொண்டைமான்
பிற்பட்ட வகுப்பினர்
(Backward Class)
தொண்டமான்
மிகவும் பிற்பட்ட வகுப்பினர்
(Most Backward Class)
கந்தர்வகோட்டை கள்ளர்
கூத்தபார் கள்ளர்
(கூத்தபால் கள்ளர் அல்ல)
பெரியசூரியூர் கள்ளர் பிறமலைக் கள்ளர்
சீர் மரபினர்
(Denotified Communities)ெட்டில்மெண்ட் கள்ளர்கள்
எந்தபிரிவிலும் சேர்க்கபடாதவர்கள்
செட்டில்மென்ட் கள்ளர்கள் நான்குவகையாகப் பிரிக்கபட்டுள்ளனர்.

i. அசீஸ் நகர் செட்டில்மெண்ட் (Aziz Nagar Settlement) விழுப்புரம் மாவட்டம்.

ii. பம்மல் செட்டில்மெண்ட் (Pammal Settlement)பல்லாவரம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், இது பசும்பொன் நகர் செட்டில்மெண்ட் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

iii. பிரிஸ்லி நகர் செட்டில்மெண்ட் (Brezlee Nagar Settlement)பெரம்பூர், ஓட்டேரி, சென்னை மாவட்டம்.

iv. அந்தமான் செட்டில்மெண்ட் (Andaman Settlement)
இது மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ளது.
இவர்கள் எந்த தொகுப்பிலும் வராமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.

4. 1979 -ல் சீர் பழங்குடியினர் (Denotified Tribe) என்று இருந்த கள்ளர் வகுப்பினரை G.O.No.1310 S.W.D. Dated 30.07.1979 -ன் படி சீர்மரபினர் (Denotified Community) என்று மத்திய அரசின் பரிந்துரைப்படி தமிழக அரசு மாற்றிவிட்டது.
இவையாவும் கள்ளர் ஜாதி மக்களை ஜாதி மக்களை கலந்து ஆலோசிக்காமல் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

5. கள்ளர் ஜாதியினரை திருத்தி நல்வழிப்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என ஆங்கில அரசு இந்திய சுதந்திரத்துக்கு முன்- இந்திய அரசுச்சட்டம், 1919 (Government of india Act, 1919) -ன்படி கள்ளர் சீர்திருத்த திட்டத்தை (Kallar Reclamation Scheme, 1920)-ல் அமல்படுத்தியது அதன்படி தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து , ஆழிவாய்க்கால், ஒரத்தநாடு, பாப்பாநாடு, கோணக நாடு, (கோனூர் நாடு) , ஆதனகோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளின் வழியே புதுக்கோட்டை, விராலிமலை (புதுகை மாவட்டம்) சென்று கொட்டாம்பட்டி, நத்தம், சிறுமலை, செம்பட்டி, திண்டுக்கல், அழகர் கோவில், அலங்காநல்லூர், நிலக்கோட்டை, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி, வாடிபட்டி, திருமங்கலம், ஆண்டிபட்டி, சேடப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய பிரமலை கள்ளர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது. காலபோக்கில் கள்ளர் இனத்தில் வசதிபடைத்தஒரு சில குடும்பங்கள், மற்ற பெரும்பாலான கள்ளர் இன ஏழை மக்களை தங்களின் விவசாய கூலியாகவும், கொத்தடிமைகளாகவும் வைத்திருக்க என்னி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளர் சீர்திருத்த பள்ளிகளையும் கடன் வழங்கும் சங்கங்களையும், மாணவ விடுதிகளையும், மாவட்ட் உயர்நிலை பள்ளிகளுடன் (District Board High Schools) இணைக்க ஏற்பாடு செய்தனர். பிறகு அவைகள் அரசினர் உயர்நிலைபள்ளிகளாக (Goverment High Schools) மாற்றப்பட்டன. எஞ்சியிருப்பது தஞ்சாவூரில் உள்ள செல்வராஜ் உயர்நிலைப்பள்ளி (Selvaraj High School) கணபதி நகர் மட்டுமே. இதுவும் இப்பொழுது தனியார் பள்ளியாக மாறிவிட்டது. இந்த வசதிபடைத்த ஒரு சில கள்ளர் நிலச்சுவான்தார் குடும்பங்களின் இவ்வகை செயல்களினால் பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஏழை கள்ளர்கள் சுதந்திரத்துக்கு முன்பும், பின்னும் அடையக்குடிய அரசு கல்வி சலுகைகளையும், மற்ற முன்னேற்ற சலுகைகளையும் இழக்க நேரிட்டது. ஆனால் (Kallar Reclamation Scheme, 1920) -ன் படி ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள், பிரமலைப்பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் உள்ள உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, வத்தலக்குண்டு பகுதிகளிலும் உள்
ளன. அவை இன்று அரசின் உதவியினை பெறுகின்றன....
மேற்படி கூறுபவர்:
டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H
தலைவர்
தமிழ்நாடு கள்ளர் சங்கம். 
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வை செய்தவரின் பெயர்: டாக்டர் பாண்டியன். அதை பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இதே மாதிரி பிரமலை கள்ளர்களின் மேன்மை கலாச்சாரங்களை பற்றி ஒரு ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் எழுதிய ஆய்வு நூல் ஒன்று படிக்கக் கிடைத்தது. தற்பொழுது காணவில்லை. 
நான் சிறு வயதில் கவனித்து, கணித்து எழுதியதற்கும், அந்த இனத்தலைவர் ஒருவர் இன்று சொல்வதற்கும் ஒப்புமை உள்ளதாக எனக்கு தென்படுகிறது. அப்படியானால், படிப்பினை என்னவென்று நீங்களே சொல்லலாம்.
இன்னம்பூரான்
12 10 2011
உசாத்துணை:

Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:10 AM
மிக்க நன்றி.  பல தெரியாத செய்திகள்.

2011/10/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 12:II
டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H
தலைவர்
தமிழ்நாடு கள்ளர் சங்கம். 
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வை செய்தவரின் பெயர்: டாக்டர் பாண்டியன். அதை பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இதே மாதிரி பிரமலை கள்ளர்களின் மேன்மை கலாச்சாரங்களை பற்றி ஒரு ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் எழுதிய ஆய்வு நூல் ஒன்று படிக்கக் கிடைத்தது. தற்பொழுது காணவில்லை. 
நான் சிறு வயதில் கவனித்து, கணித்து எழுதியதற்கும், அந்த இனத்தலைவர் ஒருவர் இன்று சொல்வதற்கும் ஒப்புமை உள்ளதாக எனக்கு தென்படுகிறது. அப்படியானால், படிப்பினை என்னவென்று நீங்களே சொல்லலாம்.
இன்னம்பூரான்
12 10 2011
உசாத்துணை:

Friday, October 11, 2013

பிரமலை கள்ளர்:அன்றொரு நாள்: அக்டோபர் 12:I


அன்றொரு நாள்: அக்டோபர் 12:I

Innamburan Innamburan Wed, Oct 12, 2011 at 6:13 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
I. பாமர வரலாற்றில் ஒரு சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை பாரபக்ஷமற்றி, ஒரு நடுவு நிலையிலிருந்து உன்னித்து கவனித்தோமானால்,  ஆழப்புதைந்திருக்கும்/ புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் புதிய படிப்பினைகளை தரலாம். அதற்கு ஆய்வுகள் முக்கியம். நினைவலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவையே. ஒரு சோதனை முயற்சி, இங்கே. பிரமலை கள்ளர் சமுதாயம் தமிழ் நாட்டில் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில், பல உட்பிரிவுகளில், நெடுங்காலமாக, தனித்தும், பெரிய சமுதாயத்துடன் இணைந்தும் வாழ்ந்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில், செக்கானூரணியில் 4-5 வயதுகளிலும், உசிலம்பட்டியில் 9-13 வயதுகளிலும் வசித்ததும், கள்ளர்களுக்கு என்று நடத்தப்பட்ட பள்ளியில் ஓரிரு பிராமண மாணவர்களில் ஒருவனாக இருந்து படித்ததும், என் தந்தை அந்த சமுதாயப்பணியில், ஒரு அரசு உத்யோகஸ்தனாக, இருந்ததும், நினைவில் இருப்பதாலும், பிற்காலம் இன்று வரை அவர்களை பற்றி விருப்பத்துடன் படிப்பதாலும், இன்று பிரமலை கள்ளர்களை பற்றி ~ இரு பகுதிகளில். 
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும், ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம் தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய கிரிமினல் பழங்குடிகள் கட்டுப்பாடு சட்டம் (Criminal Tribes Act 1871) அமலுக்கு வந்த தினம்: அக்டோபர் 12, 1871. விடுதலை வந்த பின் மாஜி கிரிமினல் பழங்குடிகள் (denotified tribes) என்ற நாமகரணத்தால், அவர்கள் பெரிய சமுதாயத்துடன் கலந்து விடமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டனர் அதனால் தான் ‘Habitual Offenders Act 1952 ‘ (மட்டமான தலைப்பு.) அமலுக்கு வந்தது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் 192 பழங்குடி சமுதாயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பிறகு என் கருத்தை சொல்கிறேன்.
கள்ளர் பிரான்கள்: அவர்களின் சொத்து மானம் பார்த்த பூமி. அளவு கடந்த ரோஷம். அதற்கு ஒரு படி மேல், சினம். அதற்கும் ஒரு படி மேல், நகைச்சுவை. யாராவது ஒரு பிரமுகரை பழி வாங்கவேண்டுமானால், கட்டிலோடு அவரை லாகவமாகக் கடத்தி, 20-30 மைல் தொலைவு கடத்தி, ‘தொப்’ என்று கிடத்திவிடுவார்கள். தூங்கினவன் எழுந்திருக்க மாட்டான். அத்தனை லாகவம். ஆட்டுமந்தைகள், இவர்கள் கூப்பிட்டால் வந்து விடும். அத்தனை வசீகரம்!. போலீஸ் போனால் பிரயோஜனமில்லை. ராவோடு ராவாக, கிராமமே விருந்துண்டு, தோல்களை வேறு கிராமத்தில் புதைத்து விடுவார்கள். ஒரு கதை: திருமலை நாயக்கன் ராஜாவுடன் ஒரு கள்ளர் தலைவர் பந்தயம். ராணியை முடியை பின்னிக்கொள்ளாமல் இன்று படுத்துக்கொள்ளச்சொல்லுங்கள். பிறகு பாருங்கள். ராவோடு ராவாக, ஒரு உடும்பின் வாலை பிடித்து மலையேறி ராணியின் முடியை இவர் பின்னிவிட்டதாகச் சொல்வார்கள்.
பள்ளி நினைவுகள்: செக்கானூரணி: த்ரீ ரிங்க் சர்க்கஸ் மாதிரி ஒரே அறையில்/ஹாலில்/திண்னையில்/ மரத்தடியில் (எல்லா வர்ணனையும் தகும்!) ஐந்து வகுப்புகள், ஒரே ஆசிரியை, கூச்சல், பாடம், ஆட்டம், பாட்டம், விளையாட்டு, வானரம், நாய், பூனை, வரத்துப்போக்கு. நான் ஏதோ உயர்பிறவியாக நடமாடியதும், நினைவில் உள்ளது. லீலா டீச்சர் 25 வருடங்களுக்கு பிறகு வந்த போது, நான் விஷமக்காரன் என்று கேலி செய்தார். சமத்துவம் இருந்ததை உணர்த்தினார். 
பள்ளி நினைவுகள்: உசிலம்பட்டி: கள்ளர் இன மாணவர்களுக்கான ஜில்லா போர்ட் பள்ளியில் இனபேதம் துளிக்கூட இல்லை. அவர்களுக்கு, உணவு, ஆடை, தங்குமிடம், கல்வி இலவசம். தாமதமாக பள்ளியில் சேருவதால், எனக்கும் மற்றவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம். பள்ளியில் சுதந்திரதாகம் வலுத்து இருந்தது. ‘...ஜூனியர் வகுப்பில் இருந்தாலும், என்னை அந்த பிரமலை கள்ளர் மாணவர்கள் தலைவனாக, ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்று, இன்னும் புரியவில்லை. ஹெட்மாஸ்டர் யாகூப்கான், அண்டைவீடு; அவருக்கு நான் செல்லப்பிள்ளை. கண்டும் காணாது போய் விடுவார். அன்றாடம், காலைப்பிரார்த்தனைப்பாடல், முதல் நாள் தான், தேர்ந்தெடுப்போம். ஒரு நாள், என் முடிவின் படி, ‘வந்தே மாதரம்’ பாடினான், ஒச்சத்தேவன். ஹெட் மாஸ்டர் ஆட்சேபிக்கவில்லை; அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார், தற்காலிகமாக. அவரிடத்திற்கு வந்த அப்பாவின் நண்பர் சிவசுப்ரமணிய ஐயரை, அவர் வீட்டுக்கு வந்து கெஞ்சிய பிறகும், நாங்கள் எதிர்த்தோம்; பள்ளியில் முதல் முறையாக, ஸ்ட்ரைக் செய்தோம், யாகூப் கான் அவர்களை பதவியில் அமர்த்தும் வரை. எனக்கு டி.ஸி. கொடுக்கவேண்டும் என்ற ஆணையைப் புறக்கணித்தார். இது எல்லாம் தினத்தூது என்ற இதழில் வந்ததாகச் சொல்வார்கள்...’மாணவர்களாகிய நாங்கள் கெடுபிடிகளால் கட்டிப்போடப்படவில்லை. 
என் பாடு வேறு:அம்மா எழுதியது:’...இத்தனை வருஷத்துக்குள் இரண்டாவது யுத்தம் நடக்கும்போது என் பெரிய பிள்ளை காங்கிரஸ் கஷ்ஷி(ட்சி)யில் சேர்ந்து ஸ்கூலில் மீட்டிங் நடத்தினான். பிறகு ஊர்வலம் வந்தார்கள். அப்போது மீட்டிங் பேசினதால், இவன் ஊர்வலம் வர ஏற்பாடு இவன் தான் செய்தான் என்று என் பிள்ளையை அரஸ்டு செய்வதாகச் சொன்னார்கள், அதற்குள் டீ எஸ் பீ  கியாம்பு உசிலம்பட்டி வந்திருந்தார். அவர் உடனே என் புருஷனை வரும்படி எங்கள் வீட்டிற்கு என் புருஷனுக்குத் துணையாக வேளப்பன் என்று ஒரு போலீஸ்கார கான்ஸ்டபிள் இருந்தான். சென்னை பீ சூப்ரண்டு அவனை அனுப்பினார், வீட்டுக்கு. அப்போ உடனே என் புருஷன் டீ எஸ் பீ அவர்களைப் போய் பார்த்தார், அவர் உன் பிள்ளை தான் மீட்டிங்கில் பேசினான். இனி அது நடக்கக் கூடாது என்று உன் பிள்ளையிடம் சொல்லி வை என்று சொல்லி விட்டு உன் பிள்ளை என்று தெரிந்தேன், அரஸ்டு செய்யாமல் விட்டு விட்டேன். உனக்கு தான் வேலை போகும். அதனால் உன் பிள்ளையைக் கண்டித்து வை என்று சொ(ன்)னார்...’
(தொடரும்)
kattpix1.jpgஇன்னம்பூரான்
12 10 2011

கி.காளைராசன் Wed, Oct 12, 2011 at 6:34 PM

ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.


>
> இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு
> போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும்,
> ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம்
> தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய

திருச்சியில் இராபர்ட் கிளைவின் குதிரையைக் கள்ளன் ஒருவன் களவு
செய்தததால் இந்தத் தண்டனை?

கள்ளர் கள்வரோ?
அல்லது
கள்ளர் காவலரா?
தாங்கள் அறிந்த நிகழ்வுகளை எங்களுக்கு இன்னும் அறியத்தர வேண்டுகிறேன் ஐயா,

தங்களது நினைவாற்றலுக்கு நன்றி
அன்பன்
கி.காளைராசன்

prakash sugumaran Wed, Oct 12, 2011 at 6:44 PM

அருமையான பதிவு. பிரமலை கள்ளர்கள் தாந்திரீகத்தில் ( மந்திரம், மாயம் இல்லாத ) கை தேர்ந்தவர்கள். அதிகார வர்க்கத்தின் பல அடக்குமுறைகளையும் கடந்து எங்கெங்கோ பிரிந்துள்ள அவர்கள் இன்றைக்கும் செய்யும் செயல்கள் நம்பவே முடியாத, கற்பனைக்கு அப்பார் பட்டவை.

இன்றைக்கு தமிழக காவல்துறையின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அத்தகைய ஒரு நபரின் உறவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குற சிவா என்பது அந்த கள்வனின் பெயர். சென்னை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மற்றும் பெங்களூரு, ஆந்திரத்தின் சித்தூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருப்பவன். இதுவரை அவன் கொள்ளையிட்ட மொத்த மதிப்பை கணக்கிட்டால் சில நூறு கோடிகளை தாண்டும். என்றாலும் அவனது தினசரி இரவுத் தூக்கம் ஏதோ ஒரு மரத்தின் கிளையில். நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளைகளில் இதுவரை ஒருவரை கூட கொன்றதில்லை. சிக்கிக்கொள்ளும் நிலையில் அவனும் அவன் கூட்டாளிகளும் செய்யக் கூடிய அதிகபட்ச செயல் குண்டாந்தடியால் தலையில் தட்டி ரத்த காயம் ஏற்படுத்துவது.

காவல்துறை கணக்கெடுப்புப் படி அவனுக்கு 27  மனைவிகள். இதில் இறந்து போன முதல் மனைவி ஒருத்தியை தவிர மற்ற எல்லாரும் ஏற்கனவே விதவைகள் அல்லது கணவனால் கை விடப்பட்டவர்கள். பல மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் இவனை நம்பியுள்ளன. உண்ண உணவு, உடுக்க உடை, கல்வி, திருமணம் ஆகியவற்றை தவிர வேறு எந்த தேவைக்கும் பண உதவி செய்ய மாட்டான். பல சமயங்களில் களவு போன வீட்டில் உள்ளவர்களுக்கே நீண்ட நாள் கழித்துதான் தெரியும் களவு போன விஷயம். இவனை வளைத்துப் பிடிக்க கிட்டத்தட்ட் 300 தனிப்படை காவலர்கள், மூன்று மாநிலங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் இரவு பகலாக பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். 

இப்போதைக்கு கருநாடக மாநிலம் மங்கலூருவில் உள்ளதாக தகவல்.
]

Innamburan Innamburan Wed, Oct 12, 2011 at 7:28 PM
To: mintamil@googlegroups.com
ப்ரகாஷ் சுகுமாரன் ஸ்பெஷல்: மீள் பதிவு:
***
“தாம் தீம் தூம்’ னு  ராசா  வாராறு! 
                     சுத்துப்பட்ட சனங்கெ எல்லாம் சலாமு
பூம் பூம்ம் னு ஊதறாக, கொம்பு!
                       மத்தப் பட்டணத்து மக்களே, கேளுங்க.”

நேரம் ஆச்சே, தலையை சாய்க்கலாம் என்று விளக்கு அணைச்சேனா, கண்ணின் முன் வந்து நின்றார், சந்தனதேவன். உசிலம்பட்டியில் ஊரோரம் ஒரு காட்டாறு, மணலா ஓடும், வருஷம் முக்காலும். ஆனாலும், மேக்கத்திலே மழை பேஞ்சா, பஞ்சத்தில் அடிப்பட்ட பனாதை போல, ஓடியாரும் தண்ணி. வேடிக்கை பாக்கப்போவோமா? நொறையா பொங்கி பொங்கி போகும். கண்டதையும் அடிச்சிக்கிட்டு போவும். மரமும், செடியும், கிளையும் மொதந்துக்கிட்டே போவும். ஆடும், மாடும் பாத்தானாம், மாயாண்டி.  அடிச்சு விட்றான், பொச்சத்தேவன். பொணம் மிதந்து வந்தது, அப்டீன்னு.

கற்பனை என்றால், இப்படி தான் காதும், மூக்கும் வைத்துக் கொண்டு வரும். வழக்கம் போல, இது நிற்க. சின்ன வயதில், எங்களுக்கு ஹீரோ, சந்தனத்தேவன். வெள்ளைக்காரனுக்கு டேக்கா கொடுத்த கொள்ளைக்காரன். சொத்துக்காரன் வீட்டிலேருந்து கொத்து கொத்தா எடுத்து ஏழை பாழைக்கு கொடுப்பானாம். காட்டிலே இருப்பான்; ஆனையோட குஸ்தி போடுவான், புலியோடு விளையாடுவான், குதிரை சவாரி, ராஜா தேசிங்கு (பாடத்தில் வந்தவர்.) வராப்லே இருக்கும், கம்பீரமா.
இது எல்லாம் ஒரு கூட்டுக்கற்பனை. அவரை பற்றி நாட்டுப்பாடல்கள் பல இருந்தன. ஜாலியாப்பாடுவோம். ஒரு வரி கூட ஞாபகத்தில் இல்லை. அதான், மேலே உள்ள ‘பாட்டு?’ இப்போ இட்டுக்கட்டினது. அதை விடுங்க.

தேவர் என்னமா வாராறு? அதை பாருங்க. உறக்கத்துக்கு, உறுதுணையாக, அகப்பட்ட நூல், கி.வா. ஜகந்நாதனின் ‘மலை அருவி’. நாட்டுப்பாடல் என்றாலே. நா. வானமாமலை, லூர்து, கி.வா.ஜ. போன்றோர் நினைவில் வருவார்கள். பர்சி மாக்வீன் ஐ.சி.எஸ். கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்களை தொகுத்து, சென்னை பல்கலைக்
கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தவரை அறியாதவர் பலர். ( அவை உள்ளனவா என்று அறிய அவா.) அதில் ஒரு பகுதியை சரஸ்வதி மஹால் பிரசுரித்தது. கி.வா.ஜ. 2676 பாடல்களை தேர்ந்து எடுத்தார், ஆய்வு செய்ய. அவற்றில் ஒன்றின் தலை மாந்தர், சந்தனத்தேவன். அது கண்ணில் பட, எங்கள் ஹீரோ, சந்தனத்தேவனை பற்றி ஒரு பாடலை போட துணிந்தேன்.

“எல்லாரும் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடிலேலோ
 சந்தனம் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 சரியான சரிகை வேட்டி - ஏலங்கிடிலேலோ
 
எல்லாரும் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற கோரைப் பாயி - ஏலங்கிடிலேலோ
சந்தனம் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
சரியான ஜப்பான் பாயி - ஏலங்கிடிலேலோ

எல்லோர்க்கும் போலீஸ் என்றால் - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான் - ஏலங்கிடிலேலோ
சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோ
சரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ.”

‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ


நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010
***





Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:14 AM

இதை முதலில் படிச்சிருக்கணும். அருமையான நினைவலைகள்.
2011/10/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
(தொடரும்

Geetha Sambasivam 
ஆச்சரியமான தகவல்.

Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:19 AM

சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ//
 
ஏலங்கிடிலேலோ!


கி.காளைராசன் Thu, Oct 13, 2011 at 4:31 PM

...வேலை நேரம் ஆச்சே, தலையைத் திருப்பக்கூட முடியவில்லையே என்று கணினியை
போட்டேனா,   கண்ணின் முன் வந்து நின்றார்,
பார்த்தால், சந்தனதேவன்...
--
அன்பன்
கி.காளைராசன்



பாரத ரத்ன லோக் நாயக் ஜெயப்ரகாஷ் நாராயண்: அன்றொரு நாள்: அக்டோபர் 11


இரு வருடங்கள் வீணாயின, அக்டோபர் 11, 2011 லிருந்து. இன்றாவது விழிப்புணர்ச்சி தோன்றட்டும்
இன்னம்பூரான்
11 10 2013


அன்றொரு நாள்: அக்டோபர் 11

Innamburan Innamburan Tue, Oct 11, 2011 at 11:21 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 11
பாரத ரத்ன லோக் நாயக் ஜெயப்ரகாஷ் நாராயண் (11 October 1902 – 8 October 1979)
‘எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்...’ என்று தன் சேவகன் கண்ணனை பாடிய வாயால், மஹாகவி பாரதியார் லோகநாயகன் என்று மக்களால் அழைக்கப்பட்ட சேவகனும், ‘ஒன் மேன்’ புரட்சியான ஜே,பி. அவர்களின் கீர்த்தியை எப்படி உரைத்திருப்பாரோ! நான் அவரது வரலாறு எழுதபோவதில்லை. உசாத்துணையில் உளது அது. திரு.வி.க. அவர்களை போல மார்க்ஸிசம் ~காந்தீயம் கலவையான ஜே.பி. நாடு விடுதலை பெற்று 30 வருடங்கள் என்ற நிலையில், கைது செய்யப்பட்டு, உடல் நிலை குலைந்து, மனமுடைந்த நிலையில் பாட்னா திரும்புகிறார், 1975ல். முழுமையான புரட்சியை பற்றி, மக்களுக்கு அவர் எழுதிய கடிதம், மஹாத்மா காந்தி பற்றிய இணைய தளத்தில் இருப்பது உகந்ததே. அதன் சாராம்சம் கீழே.
‘...துவக்கத்திலிருந்து நான் முழுமையான புரட்சியை வலியுறுத்தி வருகிறேன். அதாவது, சமுதாயமும், தனி மனிதனும் முற்றிலும் புரட்சிகரமாக மாறவேண்டும்...ஓரிரு நாட்களில் இது சாத்தியமன்று. ஓரிரு வருடங்களும் போதாது...இதன் உள்ளடக்கம்: ஆக்கப்பூர்வமான, படைப்பாற்றல் மிகுந்த களப்போர் ஒன்று. அவை மூன்றும் கலந்தால் ஒழிய, புரட்சி நடக்காது...தற்காலம், மக்கள் அச்சத்தில். ஆயிரக்கணக்கில் தலைவர்கள், சிறையில்... எனவே, நமக்கு கை ஒடிந்த மாதிரி தான். எனினும், நீங்கள் எல்லாரும் எழுச்சியுடன், நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும், பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் விண்ணப்பம். உதாரணமாக, கல்வித்துறையின் பலவீனங்களை பாருங்கள்...மாணவர்களின் அதிருப்தி எல்லை கடந்து நிற்கிறது, அடக்குமுறையையும் மீறி...அது வெடித்தால், சர்வ நாசம். அதற்கு முன் நடவடிக்கை சிலாக்கியம்...இன்னும் எத்தனை பிரச்னைகள்? ஹரிஜன், பழங்குடி வறுமை சொல்லி மாளாது. இன்றும் தீண்டாமைப்பேய் தலை விரித்தாடுகிறது. எத்தனை வன்முறைகள்? ஹரிஜன்கள் எரிக்கப்பட்ட கொடுமைகளை நடந்திருக்கின்றன. புரட்சியாளர்களாகிய நாம் ஹரிஜன், பழுங்குடிகளுடன் உறவாடி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவேண்டும். இந்த ஆக்கப்பூர்வமான ஈடுபாடு இல்லையானால், புரட்சி மடிந்து விடும்... அது கெலிக்க நான்கு காரியங்கள் ஆகவேண்டும்: களப்போர் +ஆக்கப்பூர்வமான பணிகள் +பிரச்சாரம்/விழிப்புணர்ச்சி + நிர்வாகம்...முதற்கண்ணாக, நாம் மக்களின்/ இளைஞர்களின் மனதை மதமாச்சரியம், தீண்டாமை, சாதி வேற்றுமை, சீர் செனத்தி தீமைகளிலிருந்து விடுவிக்க வேண்டும்...முழுமையான புரட்சிக்கு ஓய்வு கிடையாது. அதற்கு இடைவேளை கிடையாது. அது நமது வாழ்வியலை நலம் நோக்கி பயணிக்க வைத்தபடி இருக்கும்...காலத்திக்கேற்ப,தேவைக்கேற்ப, அதனுடைய உருவம், ஜாபிதா,நடைமுறைகள் மாறி வரும்.
ஜமீன்தாரி ஒழிந்தது; நில சீர்திருத்தங்கள் அமலில். தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது. ஆனால், கிராமங்களில் மேல்தட்டு மக்களின் ஆதிக்கம் கிடிக்கிப்பிடியாக இருக்கிறது. கந்து வட்டி கொடி கட்டி பறக்கிறது... வங்கிகளை நாட்டுடமையாக்கினார்கள். ஆனால், அரசின் முதலாளித்துவம், வீண் செலவு, மந்த கதி, லஞ்சம் அதிகரித்தது. கால்ப்ரைத் சொல்லும் ‘அதிகார வர்க்கத்தின் ஆளுமை’. இதில் சோஷலிஸம் எங்கே வந்தது? நாட்டுடமை தான் சோஷலிஸம் என்பது மாபெரும் தவறு...வெள்ளைக்காரனின் கல்வித்திட்டம் மாறவேயில்லை...மூடநம்பிக்கைகள் வலுத்து வருகின்றன...விடுதலைக்குப் பிறகு, அரசியல், வணிகம், பொது வாழ்வு எல்லாவற்றிலும் அதர்மம் மிகுந்தது...வறுமை அதிகரித்து விட்டது. பீஹாரில் இல்லாத தாது வளமா? பாசனமா? நிலவளமா? ஆனால், ஏழ்மை. இந்த அட்டவணை பெரிது...ஜனநாயக வழியில் விமோசனம் உண்டா? எதிர்க்கட்சி கெலித்தால், வழி பிறக்குமா? அடித்தளம் உளுத்துப்போய் விட்டதே, ஐயா!...மக்கள் எழுச்சி இல்லையெனில், இளைஞர்களும், மாணவர்களும் விழிக்காவிடில், என்ன சாதனை முடியும்?...என்ன தான் ஆவேசமாக பேசினாலும், சமுதாயத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின், மக்களின் ஜனநாயக பாட்டையின் வழித்தடத்தை குலைக்கக்கூடாது. இதில் மாற்றம் ஒன்றுமில்லை. எனவே, சட்டம் பேசும் ஜனநாயகர்கள், ஜனநாயகம் தேர்தலில்/சட்டமன்றத்தில்/திட்டக்கமிஷனில்/அரசு நிர்வாஹத்தில் மட்டும் அடங்கவில்லை என்பதை ஒத்துக்கொள்வார்கள்... மக்களின் நேரடி நடவடிக்கை வேண்டும்...ஒத்துழையாமை, சமாதனமான எதிர்ப்பு, அக்ரமத்துக்கு பணிய மறுப்பது ~ சத்யாக்ரஹம். அதுனுடைய நுட்பம் யாதெனில், மாற்றம் நாடுவோர் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.
~ மூலம்: ‘சமுதாய சீர்திருத்தம்: ஜெயப்ரகாஷ் நாரயண் நூற்றாண்டு படிப்பினைகள்.
1975ல் சொல்லப்பட்டதை 2011ல் எப்படி நீங்கள் பார்ப்பீர்களோ? அல்லது மறந்தும் பார்க்காமல் விடுவீர்களோ? யானறியேன். ஈஷ்வரோ ரக்ஷது.
இன்னம்பூரான்
Stamp-Rel4.gif11 10 2011

உசாத்துணை:

Geetha Sambasivam Wed, Oct 12, 2011 at 3:21 AM

அடித்தளம் உளுத்துப்போய் விட்டதே, ஐயா!...மக்கள் எழுச்சி இல்லையெனில், இளைஞர்களும், மாணவர்களும் விழிக்காவிடில், என்ன சாதனை முடியும்?...என்ன தான் ஆவேசமாக பேசினாலும், சமுதாயத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின், மக்களின் ஜனநாயக பாட்டையின் வழித்தடத்தை குலைக்கக்கூடாது. இதில் மாற்றம் ஒன்றுமில்லை//
 

இப்படி ஒரு அருமையான தலைமை தான் நமக்குத் தேவை. இறைவன் கருணை புரிய வேண்டும்.


2011/10/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 11
பாரத ரத்ன லோக் நாயக் ஜெயப்ரகாஷ் நாராயண் (11 October 1902 – 8 October 1979)
இன்னம்பூரான்

Thursday, October 10, 2013

இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ




இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ

Innamburan S.Soundararajan Thu, Oct 10, 2013 at 9:52 PM


இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ

சிறுகதை ராணி என்று உலகபுகழ் பெற்ற திருமதி. அலிஸ் மன்றோ(82) அவர்களுக்கு இன்று கிடைத்த நோபெல் பரிசு ஓரளவு எதிர்ப்பார்க்கப்பட்டது தான். போன வருடம் ஹேஷ்யங்களைக்கூட பகிர்ந்து கொண்ட நான் இலக்கியபரிசை பற்றி மட்டுமே எழுதக்காரணம், வாசகர்களுக்கு அலுப்பும் சலிப்பும் தட்டவேண்டாமே என்ற எண்ணம்.
கனடாவுக்கு இந்த பரிசு 1976க்குப் பிறகு, இப்போது தான் கிட்டுகிறது. இப்பரிசை பெறும் 13வது பெண்மணி, இஅவர். 19 வயதிலேயே (1950) கதை எழுத ஆரம்பித்த இவருக்கு புகழாரங்கள், ஆண்டாண்டுதோறும் குவிந்த வண்ணம். சிறுகதை மன்னர் ஆண்டன் செக்காவுடன் ஒப்பிடப்படும் இவருக்கு செம்மையாக, மனதார நேசத்துடன், மன்னித்தருளும் மனோபாவத்துடன் எழுதுபவர் என்ற நற்பெயர் உண்டு. இன்று ஒரு வேடிக்கை. நோபெல் மையம் பரிசு பெறுபவர்களை வாழ்த்திய பிறகு தான், பிரகடனம் செய்வார்கள். இவரை தொடர்பு கொள்ள முடியாததால் அறிவிப்பு மட்டும் வைத்து விட்டு, பிரகடனம் செய்தார்கள்.
தனக்கு மற்ற திறன் யாதும் இல்லாததால், கதாசிரியராக வலம் வரமுடிந்திருக்கலாம் என்று தன்னடக்கத்துடன் தன்னையே கேலி செய்து கொள்ளும் இவருக்கு சர்வதேச விசிறிகள் உண்டு. அவருக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லும் பி பி சி கலை ஆசிரியர் வில் கோம்பெர்ட்ஸ், இவருடைய மனிதாபிமானத்தை உற்று நோக்கும் பண்பை புகழ்கிறார்.
‘வாழ்வே! இன்ப வாழ்வே (2012) இவரது கடைசி நூல். தனிமை நாடும் இவருக்கு இதய சிகிச்சை (பை பாஸ்) நடந்திருக்கிறது. புற்று நோய் பிரச்னையும் இருந்திருக்கிறது.
பெண்மையை மென்மையாக ஆனால், உள்ளது உள்ளபடி, கையாளுவது தான் இவருக்கு பிடித்தது. வாசகர்களுக்கு ஆர்வம் இருப்பின், நாளை, அது பற்றி பேசலாம்.
உதவிய தளங்கள்:
  1. B B C
  2. New Yorker
  3. Salon
{ all dated 10 10 2013}
இன்னம்பூரான்
10 10 2013

பளிஞ்சாடிரடி குடு குடு…




பளிஞ்சாடிரடி குடு குடு…

Innamburan S.Soundararajan Thu, Oct 10, 2013 at 4:32 PM



பளிஞ்சாடிரடி குடு குடு...
இன்னம்பூரான்
10 10 2013
பிரசுரம்: வல்லமை: 10 10 2013
windowslivewriter8cae7123c029-14583india-electricity-shortage10என்றோ ஒரு நாள், ஜம்பூத்வீபத்தின் தென் பிராந்தியத்தில் சடுகுடு சாம்ராஜ்யத்தை ‘ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர தைர்ய மதன காம மஹராஜா’ எனப்படும் மைனர் பையன் கிச்சு கிடுக்கிப்பிடி நிர்வாஹம் செய்து கொண்டிருந்தான். அந்தப்புரத்து அந்தரங்கத்தில் அடாவடி செய்யுமவன், அமைச்சர் அறிவுரையை அறவே அழிப்பதில் குறியாக இருப்பான். கேளிக்கை என்று இறங்கி விட்டால், இஞ்சி தின்றவுடன் தேறல் குடித்த குரங்கு மாதிரி தொம் தொம் என்று குதிப்பான். அவனுடைய துள்ளலோசை உலகெங்கும் எதிரொலிக்கும். எதிராளி போர்க்கொடிதூக்கினால், ஓடி ஒளிவான், அந்த பயந்தாங்கொள்ளி. அவனது நிர்வாகத்திறனின்மை பகிங்கிர ரஹஸ்யம் என்றாலும், அதை பற்றிய விமர்சனம் மட்டுறுத்தல் செய்ய்ப்பட்டிருந்தது. இத்தனைக்கும் மேதாவிலாச ராஜ்யபாரம் வகித்த அவனுடைய அப்பன் நிஜமாகவே ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர ‘வாகை சூடி’ மஹராஜா தமிழரசர். எதுவும் மிதம் அவருக்கு. ஜனோபகாரம் தான் அவருக்கு இலக்கு. அதனால் தான் தாராளமாகவே ராஜ்ய பரிபாலனம் பற்றிய செய்திகளை, ஆணைகளை, அவற்றின் பின்னணி, பிரதிபலன்களை கோட்டை வாசல் ராஜபேரிகை மூலம் ஒலிக்கவேண்டும்; ஒளிவு, மறைவு கூடாது; தர்பார் ஹாலில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டிருந்தார். வரலாற்றை போற்றி பணிந்து பின்பற்றும் பாரதவர்ஷத்தில், அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று மார் தட்டிக்கொள்கிறார்கள், தற்கால சாணக்கியர்கள். கறுப்புப்பணாதிபதிகள், லஞ்ச வாவண்ய பிரபுகள், ஹாய் ஹவாலா ஹைஸ்ட்ரீட் கொள்ளையர், பினாமி சுனாமிகள் ஆகியோரின் பட்டியல் கேட்டாலே, கோபாவேசத்தில் ரோமம் சிலிர்த்து, முகம் சிவந்து, கண் துடிக்க, செவி மடங்க, உதடுகள் ஆட, தகவல் மறுக்கும் Official Secreteers ஆகிவிடுகிறார்கள் மேலாண்மை பிரமுகர்கள்.
இப்போது அந்த black listல் சேர்ந்து விட்டது தமிழ்நாட்டு மின்சார வாரியம். தமிழரசரை உதறிவிட்டு கிச்சு பரமஹம்சாதிபதியின் சிஷ்யகோடி ஆயினர் தமிழ்நாட்டு மின்சார வாரியம்.
Point at issue: மின்சாரம் திருடுபவர்களின் பட்டியல். வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி, வருடாவருடம் மின் திருடுகள் அதிகரித்து வருகின்றன. 2007-8ல் 3746 திருட்டுகள்; 2012-13ல் 8166. ஏப்ரல் 2013: 699. பேஷ். கெடுவுக்குள் மின்கட்டணம் கட்டத்தவறிய மின்வெட்டு பலியாடுகள் ஆகிய சராசரி சிறு நுகர்வோர்களுக்கு கணிசமான கறார் அபராதம். திருடனுக்கு மறைமுக ஆதரவா? அதனால் அந்த அபராதிகளின் பட்டியல் தர மறுக்கிறார்களோ?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) என்ற குடையின் கீழ் குளிர் காயும் மின்வாரியம் அந்த பட்டியல் அளிக்க மறுப்பது ஜனநாயக்கு முரண். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) பட்டியல்தாரர்களுக்கு அபாயமோ அல்லது விசாரணைக்குத் தடங்கல் ஆக இருந்தால் தான் உகந்த  வழிமுறை. அதன்படி விவரம் அளிக்க மறுப்பது பிணம் தின்னும் சாத்திரம் போல்.உண்மை யாதெனில், பரம்பரை மின் திருடர்கள் அரசியல் கட்சிகள். கோடிக்கணக்கில் கந்து வசூல் செய்து, அலங்கார பந்தல் போடும் அரசியல் கட்சிகள் ஒளி திருட தயங்குவதில்லை. அவர்களை காட்டிக்கொடுக்க அஞ்சுகிறது மின் வாரியம். அப்படியானால், கோடிக்கணக்கான அந்த செலவை ஏற்றுக்கொளவது, வோட்டுப்போடும் மக்கள்.
மின் வாரியம் மக்களுடன் தம் பிடித்து பளிஞ்சாடிரடி குடு குடு… விளையாடுகிறது, கிச்சுவின் கேளிக்கைப் போல. உருப்பட்டமாதிரி தான்!
Image Credit: Google

இன்னம்பூரான்

'உயிரும், உடம்பும், பஜனையும்...'



'உயிரும், உடம்பும், பஜனையும்...'
இது பாபநாசம் சிவன் அவர்களின் வாக்கு. இன்று அவரது மகவுகள் முனைவர் ருக்மணி ரமணியும், திரு.அசோக் ரமணியும், இன்று பொதிகை தொலைக்காட்சியில், 'பிறவா வரம் கேட்டு, இறவா வரமும் பெற்ற அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். எனக்கு மீள்பதிவு செய்வதற்கு லஜ்ஜையாக இருக்கும். அதை பொருட்படுத்தாமல், மீள்பதிவு அஞ்சலி செலுத்துகிறேன்.
இன்னம்பூரான்
10 10 2013



அன்றொரு நாள்: அக்டோபர் 10

Innamburan Innamburan Mon, Oct 10, 2011 at 11:16 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 10
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973)

கையேந்தி பவன்களில் உணவருந்தி, மச்சு, குச்சுக்களில் குடக்கூலி இருந்து, காலேஜில் படியாமல் இருந்து வந்த காலகட்டத்தில், கபாலி கோயில் சுத்து வட்டாரத்தில் அஞ்ஞாத வாசம் செய்ததுண்டு. மார்கழி மாதம் அதிகாலையில் குளத்தாண்டே ஜிலு ஜிலு மாருதம் வீச, படா படா பெட்டி ஆர்மோனியம் ஒலிக்க பஜனை இசைத்து வரும் பாபநாசம் சிவன் அவர்களுக்கு, ஜால்ரா போட்டதுண்டு. அது அந்தக்காலம். திரு. கிருஷ்ணன் வெங்கடாசலம் பெரியவரை பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து சில துளிகள். முழுதையும் படிக்க உதவியாக, உசாத்துணை.

“...பாபநாசம் சிவன்: அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவைகள் சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன... தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப்பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை...தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890-ல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது...் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு... பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது...1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த 'சீதா கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன்...ைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதான பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி, கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்...பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரன் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன...இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடப் 'சந்திரசேகரா ஈசா', இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை...இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939ல் சேவசதனம். 1943ல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் 'தியாகபூமி'. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது...1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு 'சிவபுண்ணியகானமணி' என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.
மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ - அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் - அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே - ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி - சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே - சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ - சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு - திருநீலகண்டர்

பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:அசோக்குமார் - 1941லிருந்து செஞ்சுலட்சுமி - 1958 வரை.

திரு. தி. ரா. ச ஒரு நிகழ்வை நினைவுறுத்துகிறார்~ ‘... அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது... அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான். கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை."என்ன மாமா கார் வரவில்லயா" என்றேன்."இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்...  அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னம்பூரான்
10 10 2011
sivan_strtbhajanai.jpg


உசாத்துணை:

‘அம்பா நீ இரங்காயெனில்...’ எம்.எஸ். பாடியது.


Nagarajan Vadivel Mon, Oct 10, 2011 at 11:42 PM

Papanasam Sivan: The Tamil Tyagarajar (I)

http://www.youtube.com/watch?v=5iCs9P8G3zs

Papanasam Sivan: The Tamil Tyagarajar (II)

http://www.youtube.com/watch?v=ArXiNLluD50

Papanasam Sivan: The Tamil Tyagarajar (III)

http://www.youtube.com/watch?v=Od4Ji_al1D0

Papanasam Sivan: The Tamil Tyagarajar (IV)

http://www.youtube.com/watch?v=VrSP2nsBWIw&feature=results_video&playnext=1&list=PLE9E3012936A1BEE2

Papanasam Sivan: The Tamil Tyagarajar (V)

http://www.youtube.com/watch?v=MOrxIRFnh5s

Nagaraja
n



Innamburan Innamburan Tue, Oct 11, 2011 at 12:37 AM

ஆங்கிலத்தில் 'என்ரிச்மெண்ட்' என்றதொரு சொல் உண்டு. நான் எழுதும்போதே நினைத்துக்கொண்டேன், யூட்யூப் உபயம் பேராசிரியரிடமிருந்து வரும் என்று. அது மட்டும் 'என்ரிச்மெண்ட்' அன்று. பழைய நண்பர் சங்கரமேனோன் அவர்களில் குரல் கேட்டது 'அண்ட்யூ 'என்ரிச்மெண்ட்''!  என்னுடைய மகனின் திருமண பத்திரத்தில் அவரது சாக்ஷிக்கையொப்பத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டேன்.
நன்றி.


Subashini Tremmel Tue, Oct 11, 2011 at 1:20 AM

இவரது சாகா வரம் பெற்ற கீர்ர்த்தனைகள் சிலவற்றை நான் எந்து சங்கீத ஆசிரியரிடமிருந்து கற்றிருக்கின்றேன்.

என்ன தவம் செய்தனை..
மால் மருகா - வஸந்தா ராகம் :-)
இடது பதம் தூக்கி ஆடும்
கஜவதானா கருணா
சரவணபவ எனும் திருமந்திரம்
மூலாதார மூர்த்தி
தேவி நீயே துணை

பாடல் வரிகள் இசையுடன் சேரும் போது நம்மை மறக்கலாம்.

இப்படி சில .. இன்னமும் ஞாபகத்தில் இருப்பவை!


சுபா

 
 
விஜயராகவன் Tue, Oct 11, 2011 at 4:37 AM

100 வருடங்களுக்கு முன் , அக்டோபர் 10, 1911 ல், சீனாவில் பெரும் புரட்சி
ஏற்பட்டது. அன்று சீனத்தில் 3000 ஆண்டுகளாக அரசாண்ட ராஜ வம்சங்கள்
முடிக்கப்பட்டு சீனம் குடியரசு ஆயிற்று. கடந்த 100 வருடங்களாக சீனம்
குடியரசாகத்தான் இருக்கின்றது.

அந்த குடியரசு இயக்கத்தின் மாபெரும் தலைவர் சுன் யாட் சென்
http://en.wikipedia.org/wiki/Sun_Yat-sen

ஆனால் சீனத்தின் நல்லகாலம் அந்த புரட்சியோடு பிறக்கவில்லை. கடைசி ராஜ
வம்சமான சிங் பதவியில் இருந்து தள்ளப்பட்டு, , அதன் பேரரசர் பு யி
வெளியேற்ரப்பட்டாலும், அந்த நாடு இன்னும் பெரிய சமூக கலகங்களுக்கும்,
கலவரங்களுக்கும், உள்நாட்டுப் போர்களுக்கும், குரூரமான ஜப்பானிய
ஆக்கிரமிப்பிற்க்கும் ஆளாயிற்று. கடைசியில் உள்நாட்டுப் போர் 1949ல் மா
சே துங்கின் கம்யூனிஸ்டுகளின் வெற்றியில் முடிந்தது.

1911 சீனப்புரட்சி பற்றியும், அதைத் தொடர்ந்து வந்த கலகங்கள், ஜப்பானிய
படையெடுப்பு பற்றியும்

http://www.youtube.com/watch?v=fRkKKRdiTBc
http://www.youtube.com/watch?v=teFlwPZ9H1c&feature=related
http://www.youtube.com/watch?v=zl2s0gZNg8w&feature=related
http://www.youtube.com/watch?v=Z53E7YqjpJE&feature=related
http://www.youtube.com/watch?v=ZChIGT8O660&feature=related
http://www.youtube.com/watch?v=fSrsHQqieGQ&feature=related
http://www.youtube.com/watch?v=v2A_MUFYi-s&feature=related

http://www.youtube.com/watch?v=A01xpLfWfwE&feature=related
http://www.youtube.com/watch?NR=1&v=teFlwPZ9H1c
http://www.youtube.com/watch?NR=1&v=fToi4c3NFFE


கடைசி பேரரசர் பு யின் வாழ்க்கை `த லாஸ்ட் எம்பெரர்` என்ற படமாக 1987ல்
வந்தது

last emperor
http://www.youtube.com/watch?v=nq6hjpzksoU&NR=1

http://www.youtube.com/watch?v=W140Pb6TERc&feature=related
http://www.youtube.com/watch?v=msKoLuc0Ovw&feature=related
http://www.youtube.com/watch?v=ZH2JdgKxFcc&feature=related
http://www.youtube.com/watch?v=CfPbt2UdyxM&feature=related
http://www.youtube.com/watch?NR=1&v=d7YwquOxkPg
http://www.youtube.com/watch?v=vVznw-KtQx0&NR=1


விஜயராகவன்


Innamburan Innamburan Tue, Oct 11, 2011 at 10:37 AM

நல்வரவு. நன்றி, விஜயராகவன்,
நான் சன் யாட் சென் அவர்களின் பிறந்த தினம் இதை எழுதுவதாக இருந்தேன். நீங்கள்
நல்ல ஆவணங்களை இணைத்து இருக்கிறீர்கள்.
இன்னம்பூரான்


seshadri sridharan Tue, Oct 11, 2011 at 1:25 PM

அரவம் அத்தவானம் என்ற  இழிநிலை போக்கி தம் தமிழ்ப் பாடல்காளால் தமிழர்  மானமுடன் நெஞ்சுயர்ந்தச் செய்தவர் திரு  பாபநாசம் சிவன்
சேசாத்திரி
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 11, 2011 at 11:23 PM

நன்றி, திரு. சேசாத்திரி.
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Oct 12, 2011 at 3:16 AM

அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?இன்னம்பூரான்//
 
சரியாப் போச்சு போங்க,
 
 
2011/10/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 10
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973)

 




Innamburan Innamburan 


2011/10/11 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னம்பூரான்//
 
சரியாப் போச்சு போங்க,
 
 
அதெல்லாம் விட்றுமுடியுமா? என்ன?
இ