Tuesday, September 19, 2017

நூறு வருடங்களுக்கு முன்னால்

நூறு வருடங்களுக்கு முன்னால்: 2


[பகுதி 1]


பிரசுரம்: http://www.vallamai.com/?p=79928
Wednesday, September 20, 2017, 5:05


இன்னம்பூரான்
செப்டம்பர் 19, 2017


வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை பற்றிய அறிவிப்பு தாமதமாக வெளிவந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னரே மன்றம் நிரம்பி வழிந்தது. பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூட்டத்தில் பிராமணரல்லாதார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர், தேசபக்தர்களை சிறையில் அடைத்தவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தினரை போல் வாடிய முகமில்லாமல், மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். தலைமை மேஜையில் திருமதி பெசண்ட் அம்மையாரின் படமும், சர்.ரவீந்தரநாத் டாகூர் அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தன. லாஹூரை சேர்ந்த 19 வயது இளைஞனால் அவை வரையப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்:

குறிப்பு: திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பிரம்மஞான சபை ஆலமரத்தடியில் தான், திரு.ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களும் கலந்து கொண்ட அமர்வில் தான் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி பிறந்தது. அதற்கு பின்னர் தான் வரலாற்றில் காங்கிரஸ் பிறந்த மண்ணாக சுட்டப்படும் பாம்பே அமர்வு நடந்தது. ஐயருக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கலாமோ என்ற தாக்கம் தான் வரலாற்றை மாற்றி எழுதியதோ? தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தான் அவரை முனீந்தரர் என்று புகழ் பாடினார். சென்னை செண்டினரி ஹாலின் முன் அவருடைய சிலை நிற்கிறது. கலோனிய அரசை கண்டித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி உட் ரோ வில்சன் அவர்களுக்கு எழுதிய மடலை பிரம்மஞான சபையின் பிரமுகர் ஹென்றி ஹாட்சனர் அவர்கள் தான் மறைமுகமாக எடுத்துச்சென்றார். அது லண்டனையும் அடைந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது; கலோனிய அரசு கண்டிக்கப்பட்டது. கவலையுற்ற கலோனிய அரசு அவருடைய ‘சர்’ பட்டத்தை பிடுங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். அவரோ அதை கடாசிவிட்டார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய அவர் எல்லாவற்றையும் துறந்து முனிவராக வாழ்ந்து வந்தார்.
அடுத்தக்குறிப்பு: பிராமணரல்லாதார் வந்ததை குறிப்பிட்டது இன்று விநோதமாகப்படலாம். அன்றைய காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி, கலோனிய ஆட்சியின் விரோதத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அது பிராமணரல்லாதார் கட்சி. அத்தகையவர்களில் பலருக்கு நாட்டுப்பற்று இருந்ததை, இந்த குறிப்பு சுட்டுகிறது எனலாம்.
சித்திரத்துக்கு நன்றி:




****


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, September 17, 2017

பரிகாரம்

பரிகாரம்

நான் இன்று கிரிக்கெட் பரிகாரம் செய்து கொண்டேன்.
இன்னம்பூரான்