Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 2 கணக்குப்புலி: ஊத்தங்கரை ஸ்பெஷல்


அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 2 கணக்குப்புலி: ஊத்தங்கரை ஸ்பெஷல்
6 messages

Innamburan Innamburan Wed, Feb 1, 2012 at 6:27 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 2
கணக்குப்புலி
இடை விடாமல் பெய்யும் மழையும் நின்றுவிடும். இது ஊகமன்று. நிச்சயம் நடக்கப்போவதே. ‘ஆடுதன் ராஜாவை இறக்குடா’. சீட்டாட்டத்தில், இது போட்ட கணக்காகவும் இருக்கலாம்; ஊகமாகவும் இருக்கலாம்; சவுடாலாகவும் இருக்கலாம். நாளை பங்கு மார்க்கெட் சரியவும் சரியலாம்; கூடினாலும் கூடலாம். இது இரண்டுங்கெட்டான் ஹேஷ்யம். உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை: இது ஆசி, ஆருடம், 50% சாத்தியக்கூறு எனலமோ? இதற்கு மேல் சரடு விட்டால், நான் எந்த அளவுக்குக் கணக்கு எலி என்று தெரிந்து விடும்!
கணக்கு சாத்திரத்தில் பல பிரிவுகள் உண்டு. இந்தியாவில் ஆர்யபட்டர், வராஹமிஹிரர் போன்ற கணக்கு மேதைகள் இருந்திருக்கின்றனர். ‘சுலப சூத்திரங்கள்’ வகுத்த போதாயனரின் காலம் 2800 வருடங்களுக்கு முன்னால் எனப்படுகிறது. லீலாவதி என்ற பாடபுத்தகம் (பாஸ்கரர் II எழுதியது.) மிகவும் பிரபலம். இனி தற்கால கணக்குப்புலி ஒருவருக்கு வருவோம். அவர் ஒரு சாத்தியக்கூறு (probability theory) மன்னன். தற்செயலாக நடக்ககூடிய நடப்புகளில் எது எது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கணிக்கும் சாத்திரமொன்று உண்டு. அதை 18ம் நூற்றாண்டில் அலசி ஒழுங்குபடுத்தி உரைத்தவர் ஜேகப் பெர்னொலி. ஒரு காசை சுண்டினால், ‘தலையா? பூவா?’ என்பதை ஊகிக்கமுடியும் என்று அவர் சொன்னாலும், எதிர்பாராததும் நடக்கிறது. அன்றாட வாழ்க்கையில், ஒரு வங்கி எத்தனை ரிசர்வ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கணக்கு அத்யாவசியம். அந்த வகையில், ஹெரல்ட் கிரேன்மர் என்பவர் 1937ல், பழங்கணக்கெல்லாம் தவறாக உள்ளன என்று நிரூபித்தார்.  முப்பது வருடங்களுக்கு பிறகு ஒரு கணக்குப்புலி, 1966ல் ஏற்புடைய சித்தாந்தங்களை நிறுவி, ஒரு பழைய கணக்கு புதிரை அவிழ்த்து, எதிர்பாராத மாற்றங்கள் அமைவதின் இலக்கணத்தை உரைத்து, ஹேஷ்யம், ஆரூடம், ஊகம் ஆகியவற்றை தவிர்த்து, சாத்தியக்கூறுகளை ‘வருமுன் காப்போனாக’ கூறும் கணக்கு சாத்திரத்தை படைத்து, கணக்குலகை அசத்தினார். நோபல் பரிசிலை ஒத்த ஏபல் பரிசில் ($ 875,000/-) அவருக்கு 2007ல் வழங்கப்பட்டது. அவர் யார்? ஊருன்ன? பேரன்ன?

 அதான் சாத்தமங்கலம் பையன். சாத்தியக்கூறு பேசுகிறான்! நம்ம பொன்னேரி போர்டு ஹை ஸ்கூல் விஞ்ஞான ஆசிரியராக இருந்து, தலைமை ஆசிரியராக பணிபுரிந்த திரு. ரங்க ஐயங்காரின் திருமகன், பத்மபூஷண் ஶ்ரீநிவாச வரதன் தான் இந்த கணக்குப்புலி. சென்னை மாகாண கல்லூரியிலும், கொல்கொத்தாவின் புள்ளிவிவர கலாசாலையிலும் (அதன் நிறுவனர் மஹாலானோபீஸ் பற்றி எழுதியாச்சு.) படித்து, அமெரிக்காவின் புகழ் வாய்ந்த கொராண்ட் கணக்கு மையத்தில்  முனைவர் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மார்க்க பந்துவாக திகழ்கிறார். அவரது சிஷ்யகோடிகளின் பட்டியல் ஒரு சிற்றுலகமாகவே உளது. ஒரு முக்கியமான விஷயம். இவருடைய ஆசான் டாக்டர் சி.ஆர்.ராவ், இவருடைய ஆய்வுகட்டுரையை பரிசோதிக்க ஒரு வெளி நாட்டு மேதையை தருவித்தார். அதன் அருந்தவ விளைவே இவரது சாதனைகள்.
அவருடைய ஜன்ம தினம் ஜனவரி 2, 1940. எனினும், அவரை பற்றி இன்று எழுதுவதின் காரணம்: இது ஊத்தங்கரை ஸ்பெஷல். அங்கிருந்து ஒரு மாணவன் ஏன் ஒரு மேதையாக வர முடியாது? நிச்சயமாக முடியும்.
இன்னம்பூரான்
02 02 2012
பி.கு. எனக்கு புரியாதது, உங்களுக்குப் புரியலாமோ! அதான் இரண்டாவது படம். என் ஃபேவரைட் கணக்கு சிம்மம் நார்பெர்ட் வீனரை சிறப்பித்து ரகு (அது தான் பத்மபூஷண் ஶ்ரீநிவாச வரதன்) நிரூபித்த ‘வீனர் கூட்டுக்கறி’.
prisvinner_2007_lite.jpg

220px-WienerSausage.jpg
Wiener Sausage

உசாத்துணை: 

கி.காளைராசன் Wed, Feb 1, 2012 at 8:22 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஒரு கணக்குப்புலி, 1966ல் ஏற்புடைய சித்தாந்தங்களை நிறுவி, ஒரு பழைய கணக்கு புதிரை அவிழ்த்து, எதிர்பாராத மாற்றங்கள் அமைவதின் இலக்கணத்தை உரைத்து, ஹேஷ்யம், ஆரூடம், ஊகம் ஆகியவற்றை தவிர்த்து, சாத்தியக்கூறுகளை ‘வருமுன் காப்போனாக’ கூறும் கணக்கு சாத்திரத்தை படைத்து, கணக்குலகை அசத்தினார். நோபல் பரிசிலை ஒத்த ஏபல் பரிசில் ($ 875,000/-) அவருக்கு 2007ல் வழங்கப்பட்டது.
இவரைப் பற்றி புள்ளியியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

நல்லதொரு கல்விசார்ந்த பகிர்வுக்கு நன்றி ஐயா.

--
அன்பன்
கி.காளைராசன்




யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Thu, Feb 2, 2012 at 3:27 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ சார்

ஊத்தங்கரை எங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர்தான்.

எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம்.

இந்த மாவட்டத்தில்  இன்னோரு கணக்கு மேதையும் உண்டு.

அது பியுசி யில் கணக்கில் நான்கு மார்க் வாங்கியது.

இப்போது டெல்லியில் நஷ்டத்தில் பத்திரிகை நடத்தி வருகிறது.

இப்போதும் நிறைய தப்புக் கணக்குகள் போட்டு நண்பர்கள் என்று நினைத்துப் பழகியவர்களிடம் துரோக செருப்படிகள் வாங்கிக் கொண்டிருக்கிறது,.

 

அன்புடன்
பென்

--------------------------------------------------------------------------------------------------------------------





2012/2/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 சார்அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 2


Innamburan Innamburan Thu, Feb 2, 2012 at 4:20 PM
To: thamizhvaasal@googlegroups.com
பென்,
இண்டர்மீடியட்டில் இரண்டு கணக்கு பேப்பர். ஒன்றில் 71/75; மற்றொண்றில் 4/75; கணக்கு வாத்தியாரின் சினம், வகுப்பு போகவில்லை. அதான். முதல் வகுப்பில் பாஸ்.


2012/2/2 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Feb 2, 2012 at 10:30 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஊத்தங்கரையும் விஞ்ஞானிகளைத் தோற்றுவிக்கட்டும்.  வாழ்த்துகள். ஊத்தங்கரை சிறப்புப் பதிவு அருமை. ஊத்தங்கரையைச் சிறப்பானதொரு கல்வி நகராக மாற்றி வரும் நம் குழுமத்து ஆசிரியப் பெருந்தகைக்கும் வாழ்த்துகள்.

2012/2/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 2
கணக்குப்புலி
இடை விடாமல் பெய்யும் மழையும் நின்றுவிடும். இது ஊகமன்று. நிச்சயம் நடக்கப்போவதே. ‘ஆடுதன் ராஜாவை 
Wiener Sausage

உசாத்துணை: 
-- 

Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 6:37 AM
To: ??????? ??????
[Quoted text hidden]

No comments:

Post a Comment