Google+ Followers

Saturday, September 10, 2016

சிவகாமியின் செல்வன் 8

சிவகாமியின் செல்வன் 8

 " தோழர்கேளஎனக்கோ  வயது  82 ஆகிறது ... இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம்   இரண்டாயிரம்மூவாயிரம் ஆண்டுகளில்  என்றுமே  நடந்தது  இல்லை. .நனது  மூவேந்தர்கள் அடுத்து  நாயக்க மன்னர்கள்மராட்டிய மன்னர்கள் முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை  செய்யப்படவில்லை. .தோழர்களே என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால்  இன்னும் பத்து ஆண்டுகளாவது. காமராசைர விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.. அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் காமராசைர  பயன் படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க  வேறு ஆளே சிக்காது.
 (இராமநாதபுர  மாவட்ட திராவிடக்  கழக நான்காவது மாநாடு. 9.7.1961-ல் தேவக்கொட்டையில் நடந்த பொது  தந்தை பெரியாரின் உரையின் ஒரு  பகுதி -17.7.1961 விடுதலை.
~ இது ஒரு நண்பர் அனுப்பியது. கீழே எனது பதிவு.

~  பெரியார் பெரியவர் காமராஜரை போற்றியது மட்டுமல்லாமல், அவருடைய வெற்றிக்கு அடி கோலியது: 1954லியே, அந்த 'ஏழு வருடங்களுக்கு' முன்பே. முதலமைச்சராக பதவியேற்ற பெரியவர் குடியாத்தம் தொகுதியில் இடைத் தேர்தலில் நிற்க விரும்பினார். யாவரும் அவருடைய வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் நிற்காமல், அவரின் சாதனை: அந்த இடை தேர்தலில் அவரை தோற்கடிக்க நினைத்த தி.மு.க., பெரியாரின் விருப்பப்படி, போட்டியிடவில்லை. பெரியவர்  கிட்டத்தட்ட நாற்பது ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்வு எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. 
இதற்கு பின்னர், பெரியாரின் சீடர்கள் அவருடைய பேச்சை கேட்டதாக வரலாறு இல்லை. காமராஜரை பற்றி அவர்கள் அவதூறுகள் பரப்பியதும் வரலாறு.

இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016


சிவகாமியின் செல்வன் 6

சிவகாமியின் செல்வன் 6

"ஐ ஆம் ஆன் ஆர்டினரி வொர்க்கர். யூ ப்ளீஸ் கோ அண்ட் மீட் மை லீடர்" என்று அடித்துச் சொல்லி விட்டார்.
அவர்களை அழைத்து வந்தவரிடம், "உனக்கு அறிவிருக்கா? போன் செய்துட்டு வரச்சொல்லமாட்டியா?" என்று கடிந்து கொண்டார்.
~ இதன் பின்னணி:

காங்கிரஸ் அலுவலக நிர்வாகியான் திரு. வி.எஸ் வெங்கட்ராமன், பெரியவர் ராஜாஜியை பார்க்க சென்ற நேரத்தில், மிகவும் வற்புறுத்திய ஒரு ஸ்விஸ் நிருபரையும், அவருடைய குழுவையும் அழைத்து வந்து போது நிகழ்ந்தது. பெரியவர் தலைவர் என்ற சொல்லியது திரு நிஜலிங்கப்பாவை பற்றி.பெரியவர் முதலில் சொன்னது, 
"நான் இப்போது காங்கிரசின் சாதாரணத் தொண்டன். எங்கள் தலைவர் நிஜலிங்கப்பா. அவர் தான் உங்களுக்கெல்லாம் செய்தி தரவேண்டுமே தவிர, நான் எதுவும் கூறுவது முறையாகாது.

Thursday, September 8, 2016

சிவகாமியின் செல்வன் 11

சிவகாமியின் செல்வன் 11


இன்னம்பூரான்
9 9 2016

வருடம் 1954: என் வாழ்க்கையில் திருப்பு முனை வருடம். அவ்வருடம் காமராஜர் முதலமைச்சரானார். ஏழு அமைச்சர்கள் மட்டும். விருப்பு, வெறுப்பு, ஜாதிக்கண்ணோட்டம் ஆகியவை இடம் பெறவில்லை. இரட்டைமலை சீனிவாசனின் பேரனாகிய திரு.பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தார்.'பறையன்' என்ற முத்திரையை சுமந்த இரட்டைமலை சீனிவாசன் வட்டமேஜை மாநாட்டுக்கு 'எஸ்.சி.' பிரதிநிதியாக சென்ற கல்விமான். ஆங்கிலேயர்கள் கைகுலுக்க வந்தபோது தீண்டாமையின் கொடுமையை அவர்களுக்குப் புரிய வைத்தவர். அவருடைய பேரனாகிய இந்து புது அமைச்சரை பற்றி பேச்சு எழுந்ததாம். ஆன்மீக செம்மல்களையும், பக்திப்பழங்களையும் விட்டு விட்டு... என்று பேச்சாம். பெரியவரிடம் கேட்டும் விட்டார்களாம். "ஆமான்னேன்...பரமேஸ்வரன் எஸ்.சி. என்று தெரிந்து தான் போட்டிருக்கேன்னேன்...எந்த நாலாஞ்சாதியை நீ உள்ளே விடமாட்டேன்னு சொன்னையோ, அதே நாலாஞ்சாதிக்காரனுக்கு பூரண கும்ப மரியாதை காட்டி, பரிவட்டம் கட்டி உள்ளே அழைச்சிக்கிடுப் போவியா இல்லியா? ...பரமேஸ்வரனை மந்திரியக்கி, ஒரு பறையனுக்குக்குப் பரிவட்டம் கட்ட வைக்கிறேன்ன்னேன்..." என்று விளக்கம் கொடுத்தார் என்று சொல்லக்கேட்டவர்?

சித்திரத்துக்கு நன்றி:
http://1.bp.blogspot.com/-neaA7iDSqjQ/TlIf0kJmDII/AAAAAAAAALg/-U-CfuS-m3I/s1600/paari0011.JPG


Tuesday, September 6, 2016

Innamburan S.Soundararajan

தணிக்கையும் நிர்வாகமும் -2

Innamburan S.Soundararajan Wed, Sep 7, 2016 at 9:47 AM


தணிக்கையும் நிர்வாகமும் -2
இன்னம்பூரான்
செப்டம்பர் 6, 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71802

சிறுதுளி பெருவெள்ளம். சில்லரையை நடுத்தெருவில் இறைக்காமல் இருந்தால் தான் நாட்டின் செல்வகளஞ்சியத்தை பாதுகாக்கமுடியும். தணிக்கைத்துறைக்கு இதையெல்லாம் கண்காணிக்கும் பணியை அரசியல் சாஸனம் அளித்திருந்தாலும், குறுக்குச்சால் ஓட்டி தணிக்கையென்ற கண்கொத்தி பாம்பிடமிருந்து ஒதுங்கி, ஓரத்தில் ஆட்டம் போடத்தான் ஆயுள் காப்பீடு கழகம், இந்த தளையிலிருந்து அக்காலத்து நிதியமைச்சர் திரு. சீ.டி. தேஷ்முக் அவர்களால் விடுவிக்கப்பட்டது. இந்தியாவின் ஆடிட்டெர் ஜெனெரலுக்கு பாராளுமன்றத்தில் பேச உரிமை உண்டு. அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் திரு. ஏ.கே.சந்தா அவர்கள், அந்த உரிமையை பயன்படுத்தி, இந்த தளை அவிழ்க்கும் சதியை எதிர்த்தார். ஆனால், அரசியல் அவரது பேச்சை மதிக்கவில்லை; பலன்: முந்தரா ஊழல். நிதி அமைச்சரே ராஜிநாமா செய்ய நேர்ந்தது.

வங்கிகளை தேசீயமயம் ஆக்கியபோது, அதே நிலைப்பாடு நிலவியது. வங்கிகளை தணிக்கை செய்யும் திறன் வேறு. நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று அவர்கள் கூப்பாடு போட, அதற்கு ரிசர்வ் வங்கி தாளம் போட, அதுவும் நிதியமைச்சரகத்துக்கு சாதகமாக போக, இன்று தலை தூக்கி நிற்பது மல்லையா ஊழல். வாராக்கடன்களுக்கு உறைவிடம் தேசீயவங்கிகள் என்பது உறுதியாச்சு. இது வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, இந்த வாராக்கடன் தேசீயவங்கிகளுக்கு வள்ளலாக இயங்கி, கொடுத்த வரிப்பணம் ₹85,000 கோடி. கடையிலிருக்கும் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு அல்ல, ஆழ்கிணறில் ‘தொப்’ என்று போட்டார்களாம். அதற்கு கேள்வி முறையில்லையாம்!  மேலும்  ₹70,000 கோடி கொடை அளிக்கப்போகிறார்கள். அரசே ஆடிட்டர்  ஜெனெரல் இதையெல்லாம் தணிக்கை செய்யவேண்டும் என்று உதட்டளவிலாவது சொல்கிறார்கள். அவரும் அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார். 2017ம் வருடம் இந்த ஆடிட் ரிப்போர்ட் வரக்கூடும். சில வயிறுகள், இப்போதே கலங்குகின்றன.
-#-
படித்தது: Business Line: September 4, 2016.
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

தணிக்கையும் நிர்வாகமும் -1

Innamburan S.Soundararajan

தணிக்கையும் நிர்வாகமும் -1

Innamburan S.Soundararajan Tue, Sep 6, 2016 at 4:21 PM


தணிக்கையும் நிர்வாகமும் -1

இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71689

அம்மா காண்டீன் என்ற மலிவு விலை சாப்பாட்டுக்கடை தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம். நேற்று தமிழ்நாட்டு சட்டசபையில், நமது அரசியல் சாஸனத்தில் விதித்தபடி தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிர்வாகக்கோளாறுகளால் 3.69 கோடி ரூபாய்கள் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசு அளித்த  விளக்கமும், அதில் அடக்கம்.

‘உகந்த நேரத்தில் சேவை, உத்தமமான அணுகுமுறை, சிக்கனம்’ ஆகியவற்றை இந்த திட்டம் கடைப்பிடிக்காததை ஆவணங்களுடன் நிரூபித்து சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, சென்னை மாநகராட்சி, தான் வாங்கிய சப்பாத்தி மிஷின்களின் தரக்குறைவை ஆய்வு செய்து அறிந்து கொண்டபின்னும், ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்த ரூ1.33 கோடியை இழந்து விட்டதையும், மே 2015ல் கொடுத்த நோட்டீஸுக்கு பின், யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. சில இடங்களில் மலிவு விலையையும், சுத்தமான உணவும் கொடுக்கப்படுவதை எடுத்துரைத்த அந்த அறிக்கை, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சிகளும், ஒன்பது முனிசிபாலிட்டிகளும் தக்கதொரு ஆய்வு செய்யாமல் அம்மா காண்டீன்கள் திறந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்களை பட்டியலிட்டது. கோதுமை மாவு டி.யூ.சி.எஸ் மூலம் வாங்கியதில் அதிக செலவு ரூபாய். 30.85 லக்ஷம் என்றும்.மற்றவகையில் அதிக செலவு ரூபாய் 2.78 கோடி என்றதையும் சுட்டியுள்ளது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதை தவிர, முனிசிபாலிட்டிகளும், மாநகராட்சிகளும் பற்றாக்குறையை ஈடு செய்ய தவித்தன.
அந்த அறிக்கையில் இவை சமூக நல பணி; வணிகம் அல்ல என்ற அரசின் பதில் அடக்கம். ஆனால், ஆடிட் ரிப்போர்ட்டில் அந்த கேள்வி எழவில்லை. அநாவசிய செலவும், பற்றாக்குறையும் தான் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.

உதவி:

TIMES OF INDIA
Mismanagement of Amma canteens cost Tamil Nadu Rs 5.69 crore: CAG
TNN | Sep 3, 2016, 02.16 AM IS
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com