Google+ Followers

Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி: 3: ஜக்கம்மா
அன்றொரு நாள்: ஜனவரி: 3: ஜக்கம்மா
9 messages

Innamburan Innamburan Tue, Jan 3, 2012 at 2:33 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan , Muruga poopathi
அன்றொரு நாள்: ஜனவரி: 3
ஜக்கம்மா
“ போர்தேவதையின் கோயிலில் பூசாரியே பலி கடா; பலிகடாவே பூசாரி.”
~ கார்ல் மார்லண்டே(2011) ‘போருக்கு செல்வது எப்படி இருக்கிறது?’:கார்வெஸ் பதிப்பகம்.

இந்த நூலுக்கு மதிப்புரை எழுதிய பிரபல இதழாளர், மாக்ஸ் ஹேஸ்டிங்க்ஸ்: ‘போரிலிருந்து திரும்பிவரும் சிப்பாய்களில் பலர் மனதளவில் தோற்றவர்கள் ’ என்கிறார். போர் என்றால் இரு தரப்புகள்; இரண்டும் ஆவேசம் கொள்ளும்; நியாயம் பேசும்; வரலாறு எழுதும். ~மஹாபாரதப்போரிலிருந்து தற்கால லிபியா எழுச்சி வரை. இது நிற்க.

இன்று தமிழ்நாட்டின் வீரத்தின் சின்னமாக திகழும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள். அவர் ஜனித்த தினம்: ஜனவரி 3, 1760. ஆற்காட்டு நவாப்பின் ஆடம்பர செலவுகளுக்கு கடன் கொடுத்து, அரசு ஆளுமையை பறித்துக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் கை ஓங்கியிருந்த காலகட்டம். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து 33 பாளையங்களில் ஒன்றான பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக ஃபிப்ரவரி 2, 1790ல் பதவி ஏற்று, கும்பனியாருடன் இடைவிடாத போர் நடத்தி, எதிரிகளால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரமரணம் எய்தவர். இந்த மாவீரரின் வரலாறு எழுதுவது கடினம். இணைய தளத்தில் அவரை பற்றிய கட்டுரைகளை படித்தால் தலை சுற்றும். சில நூல்களிலும் அப்படியே. அந்த அளவுக்கு புனைவுகள், கற்பனைகள், ஒரு தலை பக்ஷ இன வாதங்கள், தமிழ் வாணனின் ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்’ கருத்துக்கள் போன்றவை, சுவை மிகுந்த நாட்டுப்பாடல்கள், அவற்றில் புதைந்திருக்கும் உண்மைகள், சில ஆவணங்கள், அவற்றை சுழட்டி அடித்து, நிலை நாட்டப்படும் அபிப்ராயபேதங்கள். கலைக்டர் ஜேக்ஸனுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் உள்ள பகை, செப்டம்பர் 10, 1798 அன்று ராமநாதபுரத்தில் வெடித்தது. அந்த நிகழ்வும், பதவியிலிருந்து ஜேக்ஸன் விலக்கப்பட்டதும், ஆவணங்களிலிருந்த போதும், அந்த முக்கியமான திருப்புமுனையை பலவிதமாக, கம்பளத்தார் இனமும், தேவர் குலமும், வரலாற்று முரண்கள் பல புகுத்தி, பதிவு செய்துள்ளனர். சொல்லப்போனால், எட்டையபுரத்து மறுபக்கம் பற்றி சீதாலக்ஷ்மியும், சுபாஷிணியும் விவரமாக எழுதாவிடின், அந்த வரலாற்று செய்திகள் மக்கிப்போயிருக்கும். ஆய்வு செய்யும் ஆவலுடன் பல உசாத்துணைகளை தேடிய எனக்கு, நா. வானமாமலை அவர்கள் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, கட்டபொம்மன் கதைப்பாடல் (நாம் தமிழர் பதிப்பகம்) ஆகியவை இங்கு கிடைக்காததால், தமிழ்நாட்டு வரலாற்றின் சில முக்கியமான நிகழ்வுகளை பற்றி இன்று ஆதாரபூர்வமாக எழுத இயல வில்லை.  எனவே ஒரு மரபு சார்ந்த செய்தியை  மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு உச்சிகால பூஜையின் போது அடிக்கப்படும் மணியோசை  கேட்டபின் தான், பக்திமான் ஆகிய வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு அருந்துவார் என்று படித்திருக்கிறேன். அந்த மணி அவருடைய தந்தை திக்குவிஜய கட்டபொம்மனால் வழங்கப்பட்டது என்றும், கடந்த நூறு வருடங்களாக அது ஒலிக்கவில்லை என்றும், ஜூலை 2, 2009 அன்று,   திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, அந்த மணி ஒலிக்கப்பட்டது என்றும், அதையொட்டி, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன என்ற செய்தி (உபயம்: திரு.அண்ணாமலை சுகுமாரன்) மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான வரலாறுகளும் ‘கிண்’ என்று மணி ஒலித்த வண்ணம் வருகை புரியவேண்டும். எனவே, வாசகர்கள், கூடிய சீக்கிரம், ஆதாரபூர்வமான செய்திகள், செவி வாய் செய்திகளும், அவற்றின் நம்பகத்தன்மை பற்றியும், இவ்விழையில் எழுதினால், ஃபிப்ரவரி 2, 2012 அன்று தொடர இயலலாம்.
இன்னம்பூரான்
03 01 2012
P1060064.JPGஉசாத்துணை:
 1. த.ம. அ: http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=359&Itemid=472
 2. மின் தமிழில்: ஸுபாஷிணி: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்;
 3. மின் தமிழில்: சீதாலக்ஷ்மி: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
 4. மின் தமிழில்: அண்ணாமலை சுகுமாரன்: மின்செய்தி மாலை (ஜூலை 7, 2009)
 5. மின் தமிழில்: கே.சரவணன்:ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்
 6. http://ta.wikipedia.org/wiki/ேச்சு:வீரபாண்டிய_கட்டபொம்மன்
 7. http://www.thevarthalam.com/thevar/?p=1472
 8. http://rajakambalam.com/kattabomman%20tamil.htm
 9. த. ஸ்டாலின் குணசேகரன் : தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில் தமிழகம்:: வே.மாணிக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆ.மோஹன் தாஸ்: தளபதி சுந்தரலிங்கம், இல, செல்வமுத்து குமாரசாமி: ஊமைத்துரை.

Dhivakar Tue, Jan 3, 2012 at 4:06 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ம்ம்

நீங்கள் வைத்த தலைப்பு சூபர்

மற்றபடி வீரபாண்டிய கட்ட பொம்மு கடைசியில் ஆங்கில கும்பனியரால் தூக்கிலிடப்பட்டது உண்மை. ஆனால் சில அசைக்கமுடியாத சரித்திர ஆதாரங்கள் (ராஜாமுகம்மது எழுதிய கட்ட பொம்மனின் உண்மை சரித்திரம்) அதிலும் பிரிட்டிஷ் ட்ரெஷரியில் கிடைத்திருக்கும் 'கட்டபொம்முவின் மன்னிப்புக் கடிதங்கள்' வேறு விதமாக கட்டபொம்முவின் சரிதத்தை எடுத்துச் செல்கின்றன. சினிமா வந்ததும் வந்தது, அதிலும் ஆவேசமும் கூட சேர்ந்து கொண்டதால் உண்மைகள் மங்கிப் போய்விட்டன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கட்டபொம்முவின் உண்மைச் சரிதம் மறுபடியும் நேர்மையாக ஆராயப்பட்டு எழுதப்பட்டால் மட்டும் போதாது.. ஏதாவது சினிமா எடுத்து வெற்றி கண்டால்தான் மக்கள் அறிந்துகொள்வர். அதுவரை யார் கட்டபொம்முவைப் பற்றி எதிர்முகத்தைக் காண்பித்தாலும், அவர் தமிழனின் எதிரியாகக் கருதப்படவும் வாய்ப்பு உள்ளது.

புதியதோர் உண்மை உலகம் செய்வோம்!!

2012/1/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

s.bala subramani B+ve Tue, Jan 3, 2012 at 4:17 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ராஜ முகமது அவர்கள் என்னுடிய சிறந்த நலம் விரும்பி 
அவரிடம்  கட்டபொம்மன் தொடர்பான ஆங்கிலேயரின் பல ஆவணங்கள் இருக்கின்றன 

தொடர்பு என் தேவை என்றால் அனுப்புகிறேன் 

பாலு 


Innamburan Innamburan Tue, Jan 3, 2012 at 5:43 PM
To: mintamil@googlegroups.com
திரு. ராஜா முகம்மது அவர்களின் http://aanipidunganum.blogspot.com/2008/02/blog-post.html படித்தேன், நேற்று. 'டுபாக்கூர்' என்ற சொல் இருந்ததால், 
உசாத்துணையில் குறிப்பிடவில்லை. ஒடிசா பாலு அவர்கள் த்ன்னிடம் இருக்கும் ஆவணங்கள் பற்றி எனக்கு தனி மடலிட்டால், அவருடைய மேற்கோள் கூறி, நன்றியும் உரைத்து, மேலும் எழுத உதவும்.
இன்னம்பூரான்
2012/1/3 s.bala subramani
ராஜ முகமது அவர்கள் என்னுடிய சிறந்த நலம் விரும்பி 
அவரிடம்  கட்டபொம்மன் தொடர்பான ஆங்கிலேயரின் பல ஆவணங்கள் இருக்கின்றன 

தொடர்பு என் தேவை என்றால் அனுப்புகிறேன் 

பாலு 
Nagarajan Vadivel <Tue, Jan 3, 2012 at 6:06 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
kattabomman1.jpg
Panjalamkurichi Azhivu Charithra Kummi and Sivaganga Charitra Kummi copies are available at the manuscript library Chennai
Nagarajan

2012/1/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Jan 3, 2012 at 10:23 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
குறிப்பிடத்தக்க அருமையான இழை ஐயா.  காலையிலேயே என் கண்களில் படாமல் எப்படியோ இருந்திருக்கு! :)))) இருக்கட்டும். 

கட்டபொம்மன் குறித்தும், அவன் வீரம் குறித்தும் எனக்குப் பெரிதாக அபிப்பிராயங்கள் கிடையாது.  ஆரம்பத்தில் சின்ன வயசில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்துவிட்டுக் கட்டபொம்மனிடம் ஒரு மயக்கமும், காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கோபமும் வந்தது என்னவோ உண்மை.  ஆனால் காலம் செல்லச் செல்ல உண்மை புரியப் புரிய அது சுத்தமாய்ப் போய்விட்டது.

பூலித்தேவனின் மரணத்திற்கு/அல்லது மர்மமான முறையில் மறைந்ததற்கே கட்டபொம்மன் பழிவாங்கப்பட்டான். உண்மையில் ஜகவீரபாண்டியனின் நேரடியான வாரிசும் இல்லை கட்டபொம்மன். ஊமைத்துரையே பட்டத்து இளவரசன் என்றாலும் வாய் பேசமுடியாத காரணத்தினால் ஊமைத்துரை பட்டமேறமுடியாமல் சக்களத்தி என்று சிலரும் ஜகவீரபாண்டியனின் ஆசைநாயகி மகன் என்று சிலரும் சொல்லும் கட்டபொம்மன் அரசுக்கட்டிலேறினான். ஆரம்பத்தில் அவனும் மக்களை வரி விதித்துக் கடுமையாக வசூல் செய்தே வந்திருக்கிறான்.  ஆனால் கும்பெனியாரோடு வந்த பிரச்னை முழுக்கமுழுக்கக் கட்டபொம்மனின் தனிப்பட்ட பிரச்னை. சுதந்திரப் போராட்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது.  இது என்னுடைய ஆணித்தரமான கருத்து. 

ஒரு சாமர்த்தியமான விஷயம் என்னவெனில் கட்டபொம்மனாக முக்குலத்தோர் இனத்தவரான சிவாஜியையே நடிக்க வைத்துப் பிரபலம் ஆக்கினது தான். இதன் மூலம் கட்டபொம்மனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்பதும் உண்மை.  கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு இதற்கான ஆதாரங்களைத் தேடிப் பிடிக்கணும்.  

ஜெய் ஜக்கம்மா!!!!!!!!!!!!!


2012/1/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி: 3
ஜக்கம்மா
“ போர்தேவதையின் கோயிலில் பூசாரியே பலி கடா; பலிகடாவே பூசாரி.”
~ கார்ல் மார்லண்டே(2011) ‘போருக்கு செல்வது எப்படி இருக்கிறது?’:கார்வெஸ் பதிப்பகம்.

எனவே, வாசகர்கள், கூடிய சீக்கிரம், ஆதாரபூர்வமான செய்திகள், செவி வாய் செய்திகளும், அவற்றின் நம்பகத்தன்மை பற்றியும், இவ்விழையில் எழுதினால், ஃபிப்ரவரி 2, 2012 அன்று தொடர இயலலாம்.
இன்னம்பூரான்
03 01 2012
உசாத்துணை:
 1. த.ம. அ: http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=359&Itemid=472
 2. மின் தமிழில்: ஸுபாஷிணி: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்;
 3. மின் தமிழில்: சீதாலக்ஷ்மி: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
 4. மின் தமிழில்: அண்ணாமலை சுகுமாரன்: மின்செய்தி மாலை (ஜூலை 7, 2009)
 5. மின் தமிழில்: கே.சரவணன்:ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்
 6. http://ta.wikipedia.org/wiki/ேச்சு:வீரபாண்டிய_கட்டபொம்மன்
 7. http://www.thevarthalam.com/thevar/?p=1472
 8. http://rajakambalam.com/kattabomman%20tamil.htm
 9. த. ஸ்டாலின் குணசேகரன் : தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில் தமிழகம்:: வே.மாணிக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆ.மோஹன் தாஸ்: தளபதி சுந்தரலிங்கம், இல, செல்வமுத்து குமாரசாமி: ஊமைத்துரை.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

s.bala subramani B+ve Wed, Jan 4, 2012 at 1:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
the site is not belongs to raja md.

will collect details from . iam allready having all the books written
by raja md sir.

iy u need i can air mail the books sir
[Quoted text hidden]
>>    1. த.ம. அ:
>>
>> http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=359&Itemid=472
>>    2. மின் தமிழில்: ஸுபாஷிணி: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்;
>>    3. மின் தமிழில்: சீதாலக்ஷ்மி: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
>>    4. மின் தமிழில்: அண்ணாமலை சுகுமாரன்: மின்செய்தி மாலை (ஜூலை 7, 2009)
>>    5. மின் தமிழில்: கே.சரவணன்:ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்
>>    6. http://ta.wikipedia.org/wiki/ேச்சு:வீரபாண்டிய_கட்டபொம்மன்
>>    7. http://www.thevarthalam.com/thevar/?p=1472
>>    8. http://rajakambalam.com/kattabomman%20tamil.htm
>>    9. த. ஸ்டாலின் குணசேகரன் : தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில்
>>    தமிழகம்:: வே.மாணிக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆ.மோஹன் தாஸ்: தளபதி
>>    சுந்தரலிங்கம், இல, செல்வமுத்து குமாரசாமி: ஊமைத்துரை.
>>

Suresh sundaresan Wed, Jan 4, 2012 at 2:28 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அய்யா
வணக்கம்  ஒரு மாதம் அலுவல் சுமையால் பெங்களூர் தங்கும் நிலைமை
 
தங்கள் கட்டபொம்மன் கட்டுரை படித்து மிகவும் மகிழ்தேன்
 
என்றும் இன்னம்புரன் நண்பன்
2012/1/4 s.bala subramani B+ve <sunkenland@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Jan 4, 2012 at 6:25 AM
To: mintamil@googlegroups.com
கருத்துக்கள் சேர்வதைக் கண்டு மகிழ்ச்சி. நான் இது வரை கட்டபொம்மனின் வரலாற்றை
ஆழ்ந்து கவனித்தது இல்லை. இந்த 'அன்றொரு நாள்' இழைக்காகத் தேடினேன். அரசியல் விளம்பரங்களின் 'பிரதிபலன்' கண்டு அச்சமாக இருக்கிறது. ஒடிஷா பாலுவுக்கு மிகவும் நன்றிக்கடன். நான் புத்தகங்கள் சேர்ப்பதை விட்டு விட்டேன். இருந்ததை கொடுத்து விட்டேன். முதலில், ஒரு பட்டியல் அனுப்புங்கள், மற்ற அலுவல்கள் முடிந்து, நேரம் கிடைத்த போது. நூல்களை எனக்கு அனுப்பும் சிரமம் வேண்டாம்.  இந்த ஸுரேஷ் (நாளை, எப்போது பேசலாம், ஸுரேஷ்? ஸுரேஷ்: இன்று அண்டோ பீட்டர் நடத்தும் மீட்டிங் செல்லவும். ஸுப்ஆஷிணி, கண்ணனை பார்க்கவும்.) இடம் கொடுத்தால் போதும் அவர் அனுப்பித்தருவார். தனிமடல் மூலம், அப்படி செய்து கொள்ளலாம் .
இன்னம்பூரான்
[Quoted text hidden]