Google+ Followers

Saturday, August 31, 2013

அன்னை தெரஸா:அன்றொரு நாள்: ஆகஸ்ட் 26
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 26

Innamburan Innamburan Fri, Aug 26, 2011 at 12:52 AM

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 26
 1. ஆகஸ்ட் 26, 1910 அன்னை தெரஸா அவதரித்த தினம். சில இடங்களில் அது ஆகஸ்ட் 27, 1910 என்று இருக்கலாம். அது கிருத்துவ சடங்கில் அவர் பெயரிடப்பட்ட தினம். 12 வயதிலேயே அவருக்கு தெய்வ ஈடுபாடு. 1931ல் இந்தியா வந்த தெரஸா 17 வருடங்கள் பள்ளி ஆசிரியை. பிறகு சாகும் தருவாயில் தெருவில் கிடந்த ஏழை பாழைகளையும், குஷ்டரோகிகளையும் பராமரிக்கத்தொடங்கினார். 1950ல் தொடங்கிய அவரது ‘நீலப்புடவை’ ‘நிர்மல ஹ்ருதயம் இயக்கம்’ ஒரு சர்வதேசப்பணியாக, போப்பாண்டவரால் 1965 இல் அறிவிக்கப்பட்டது. பரிசில்கள் ஓடோடி வந்தன ~ 1971: போப்பாண்டவர் மெடல்; 1972: நேரு மெடல்; 1979: பல்சன் மெடல்: பின்னர் டெம்பிள்டன் பரிசில், மாக்ஸேஸே அவார்ட்; 1979: நோபல் மெடல். 1980 இல் பாரத ரத்னா. அன்னை தெரெஸா ஏசு பிரானுள் உறங்கிய தினம், செப்டெம்பர் 5, 1997. ‘அருளாளர்’ என்ற சமயம் சார்ந்த உயர்நிலை அளிக்கப்பட்டுள்ளது; கத்தோலிக்க மரபு படி அவரை ‘முனிவராக’ பிரகடனப்படுத்தும் நாள் நெருங்குகிறது.
பணிவுடன் பகிர்ந்து கொள்ளும் சில நினைவலைகள்:
~ மால்கம் மக்கரிட்ஜ் என்ற நிருபர் (ஓரளவுக்கு நாத்திக மனப்பன்மையுடன் எனலாம்.) 1970 இல் இவரை பார்க்க வந்தவர். ஒரு உரையாடல்.
மக்கரிட்ஜ்: இதெல்லாம் தினசரி பணிகளா”
அன்னை: ஆம். இது என் லக்ஷியம். இறைவன் தொண்டு.
ம: எத்தனை மாதங்களாக இதை செய்து வருகிறீர்கள்? 
அ: மாதம்! 18 வருடங்களாக.
ம: தெருத்தெருவாக 18 வருடங்களா? 
அ: ஆம். இது என் கொடுப்பினை. இவர்கள் எங்கள் மனிதர்கள். ஆண்டவன் அருளிச்செயலிது.
ம: களைத்தது இல்லையோ, நீங்கள்? வயதாகிறதே. யாரிடமாவது கொடுத்து விட்டு விலகலாம் என்று தோன்றியது உண்டோ?
அ: இல்லை. இது இறையாணை. எனக்கு மகிழ்ச்சி அளிப்பது. யெளவனாமாக இருக்கிறேன். எல்லாம் அவன் செயல்; என் பாக்கியம்.
ம: (தனி மொழி):‘என்னால் இந்த மாதரசியை மறக்க முடியாது ~ அந்த முகம், ஒளி, கண்கள்: அவை பிரதிபலிக்கும் கனிவு, கருணை, அன்பு. ஒரு தேவதை முன் நிற்பதை உணர்ந்தேன். நான் பழைய ‘ம’ அல்ல. மாறி விட்டேன். அதை வருணிக்க இயலாது.
1971 இல் அவர் எழுதிய ‘கடவுளுக்கு ஒரு எழில் அர்ப்பணம்: அன்னை தெரெஸா’ என்ற நூலை படித்தபோது, அன்னையின் அறையில் ஒரு பரிபூரணானந்த வெளிச்சத்தையும், அன்னையின் ஒளிவட்டத்தையும் தான் பார்த்ததாக எழுதியிருந்ததை படித்த ஞாபகம். அவர் கிருத்துவராகவும் மாறி விட்டார். இதை சொல்வதின் காரணம், அன்னை பெற்ற நன்கொடைகளை பற்றி, மத மாற்றம் செய்வது எல்லாம் பற்றி பிற்காலம் சர்ச்சைகள் எழுந்தது என்பதையும் குறிப்பிடுவதால்.
~ ஹைதராபாதில், வஸந்தாவும் நானும் நிர்மல் ஹ்ருதயத்தில் அநாமதேயப்பணி செய்யும் போது, அதிகாரி ஒருவர் அடிக்கடி வருவார். யாருடனும் பேசாமல், வயோதிகர்களுக்கும், அநாதைகளுக்கும் நகம் வெட்டி, குளிப்பாட்டுவது போன்ற அணுக்கத்தொண்டு செய்வார். அவருக்கு முன் துரும்புகளாக எங்களை நினைத்துக்கொள்வோம். அடுத்த படியாக, கல்கத்தாவில் அன்னையை தரிசிக்க போனபோது, தரிசனம் கிடைக்கவில்லை. ஒரு பணி செய்ய எதிர்பாராத தருணம் கிடைத்தது. 
~சென்னையில் அவரை பார்க்க விழைந்தோம். ஒரு முறை முன்னறிவிப்பு கிடைத்து ராயபுரம் சென்றோம். அச்சமயம் வஸந்தா மிக பலவீனமாக இருந்தாள். அன்னை தெரஸா எப்படியோ அவளை கூப்பிட்டு, பூமாலையை வாங்கி அணிந்து கொண்டு, ‘குழந்தாய்’ என்று அழைத்து, சிரம் மீது கை வைத்து ஆசியளித்தார். இதெல்லாம் சொல்வது கிடையாது, சொல்ல நேரிட்டால், தடுத்து நிறுத்தவும் இயலாது. என்ன சொல்கிறீர்கள்?
2.‘கை சுத்தம் கிருமி நாசனம்’ என்ற லிஸ்டர் பிரபுவின் அறிவுரையிலிருந்து மருத்துவ சாதனைகள் பலவற்றை யாம் அறிவோம். ஒவ்வொன்றும் மைல்கற்கள் என்க. ஆகஸ்ட் 26, 1994 அன்று மின்கலத்தால் இயங்கும் இதயம் ‘லப் டப்’ அடிக்கத் தொடங்கியது, இங்கிலாந்தில் உள்ள உலக பிரபல பாப்வொர்த் ஆஸ்பத்திரியில். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த டிட்டானியம்-ப்ளாஸ்டிக் கருவியின் பெயர்: Left Ventricular Assist Device (LVAD). இது ஒரு மின்சார பம்ப். இதன் விலை 40 ஆயிரம் பவுண்டு. இங்கிலாந்தில் 1979லியே முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் ஸர் டெரன்ஸ் இங்க்லீஷ் தலைமையில் ஒரு 11 பேர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை நான்கு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒன்பதே மாதங்களில் சிறுநீரகக்கோளாற்றினால் அந்த நோயாளி இறந்தார் என்றாலும், ஆறே வருடங்களில் இந்த மின்சார பம்ப் ஒரு நீண்டகால பணி செய்யும் திறனுடன், ஒரு ஆக்ஸ்ஃபோர்ட் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டது.
3.‘சாக்கா? சபைனா?’ பட்டி மன்றங்களும், கசப்பான விதண்டா வாதங்களும் மருத்துவ உலகுக்கு புதிது அல்ல. இளம்பிள்ளை வாதம் ஒரு கொடிய வியாதி. பரவலாக அது இருந்ததையும், அது கிட்டத்தட்ட மறைந்து போனதையும் நாம் அறிவோம். அதற்கான தடுப்பு மருந்துகளில் செத்தது (Salk) ஒரு வகை; சாகாதது (Sabine) ஒரு வகை. முதல் வகையை ஊசியால் செலுத்தவேண்டும். இரண்டாவது சொட்டு மருந்து. அதை 20 வருட ஆராய்சிக்கு பின் கண்டுபிடித்த டாக்டர் ஆல்பெர்ட் ப்ரூஸ் சபைன் போலந்தில் பிறந்த தினம், ஆகஸ்ட் 26, 1906. 25 வயதிலேயே நியூ யார்க் நகரை தாக்கிய இளம்பிள்ளை வாத தொடர் நிகழ்வினால், இந்த் ஆராய்ச்சியில் இறங்கிய சபைனின் முதல் பிரச்னை, அவருடைய ‘உள்ளது உள்ளபடி உரைப்பது’. தன்னுடைய 86 வயதில், மார்ச் 3, 1993 இல் இறக்கும் வரை இடை விடாத ஆய்வு, உலகெங்கும் புகழ், இடை விடாத சர்ச்சை. சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த சபைன் அந்த தடுப்பு மருந்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும் கொடுத்து ஆய்வு செய்த பின்னரே சம்மதித்த கைதிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு சோவியத் ரஷ்யாவில் லக்ஷக்கணக்கான மக்கள் பயன் அடைந்தனர். இவர் சீண்டாத அரசு இல்லை எனலாம். ஆனால், இவர் எப்போதும் உண்மை பேசுபவர். டெங்கு போன்ற பல வைரல் (viral) வியாதிகளின் பரம வைரியான டாக்டர் ஆல்பெர்ட் ப்ரூஸ் சபைன் அவர்களை போற்றுமோவாக.
“... நம்மிடம் உள்ள அறிவு/ஆய்வு/ திறன் மக்களின் இன்னல்களை குறைக்குமானால், மனிதநேயம் கொண்ட எந்த விஞ்ஞானியும் அதை பூட்டி வைக்க மாட்டான்...”
 டாக்டர் ஆல்பெர்ட் ப்ரூஸ் சபைன்
இன்னம்புரான்
26 08 2011mt8.jpg

1653_Cardiac_Surgery.jpg
Stamp_US_1957.jpg
உசாத்துணை:

Theresa Jpg.pages
246K

விஜயராகவன் Fri, Aug 26, 2011 at 1:49 AM


On Aug 25, 9:22 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> அன்றொரு நாள்: ஆகஸ்ட் 26
>
>    1. ஆகஸ்ட் 26, 1910 அன்னை தெரஸா அவதரித்த தினம்.

அவதரித்தாரா??? இந்தியாவிற்க்கு கத்தோலிக்க சர்ச்சால் மிஷனரி வேலைக்கு
அனுப்பப் பட்டார். இடையில் கல்கத்தாவில் ரோடில் இறந்து கொண்டிருந்தவர்
மீது பரிதாபம் ஏற்பட்டது. அவர்களை தன் இல்லத்திற்க்கு எடுத்துச் சென்று,
கண்ணியமாக இறக்க வாய்ப்பு கொடுத்தார்.

1983,4,5 போது நான் கல்கத்தாவில் இருந்த போது, சில நாட்கள் தெரிசா
இல்லங்களுக்கு சென்று அங்கு உதவி செய்தேன்.

அன்னை தெரிசாவை நான் அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ புகழ்கிரவன் அல்ல.

அவரைப்போல் பலர் பல வித சேவைகளில் இருக்கின்றனர்.


விஜயராகவன்

தாரகை Fri, Aug 26, 2011 at 1:53 AM


> அன்னை தெரிசாவை நான் அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ புகழ்கிரவன் அல்ல.

அது சரி, புகழ்ந்துவிட்டால் அகவை குறைந்துவிடுமே:-))

[Quoted text hidden]

Vij Fri, Aug 26, 2011 at 1:57 AM


தாரகை அவர்களே

நீங்கள் நித்ய யுவ பாவத்திற்க்கு புது வழி சொல்கிற்கிறீர்களா?


அன்னை தெரிசா பஜனை புது வயக்ராவா :))


விஜயராகவன்

தாரகை Fri, Aug 26, 2011 at 2:03 AM


> நீங்கள் நித்ய யுவ பாவத்திற்க்கு புது வழி சொல்கிற்கிறீர்களா?

அந்தணர் என்போர் அறவோர்மற்று; எவ்உயிர்க்கும்,
செந்தண்மை பூண்டுஒழுகலான்! (நீத்தார் பெருமை - 30)

[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Aug 26, 2011 at 11:43 AM

நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு,
நன்றி. உங்கள் அணுகுமுறை புரிகிறது. எனக்கும், அன்னை தெரெஸா டுவாலியர் போன்றவர்களிடம் நன்கொடை பெற்றார் என்ற செய்தி கசந்தது. எனினும், மக்கரிட்ஜ் அவர்களின் அனுபவம் சொல்லத்தக்கது. சொந்த அனுபவம் கூட, சொல்ல்ப்பட்ட சூழ்நிலையையும் சொல்கிறது. 'அவதாரம்' என்ற சொல் கிருத்துவ சம்பிரதாயப்படி மிகையல்ல. திரு. நவீன் சாவ்லா அன்னையின் ஆதரவாளர் என்று தெரிந்தாலும், அவருடைய இன்றைய கட்டுரையும் இங்கு அளிக்கிறேன். பொறுத்தாள்க.

இன்னம்பூரான்
26 08 2011

*************

Return to frontpage

Opinion » Lead

Published: August 26, 2011 00:19 IST | Updated: August 26, 2011 00:23 IST

The miracle that was Mother Teresa

Navin Chawla
Mother Teresa attends a Mass celebrating the day of St. Peter and St. Paul in St.Peter's Basilica at the Vatican, in this Sunday, June 29, 1997 file photo.
AP Mother Teresa attends a Mass celebrating the day of St. Peter and St. Paul in St.Peter's Basilica at the Vatican, in this Sunday, June 29, 1997 file photo.
Mother Teresa's path was a unique one. While she never deviated from her faith, she reached out to millions of her special constituency, the deprived and the dying, recognising their faces to be the face of her God.
A few weeks ago I visited one of Mother Teresa's Sisters who was admitted for surgery in the PGI hospital in Chandigarh. Haryana Chief Secretary Urvashi Gulati and the Principal Secretary to the Governor accompanied me that morning to Sister Ann Vinita's bedside. Attending to her in the hospital were two companion Sisters of the Missionaries of Charity. In the course of conversation, one of them said that she was really happy to meet me. She went on to explain that as a young woman in Kerala, she had admired Mother Teresa's work, but it was when she chanced to read my biography of Mother Teresa that she decided to join the Order. That a young Catholic woman should have read a book written by one, who while he was unmistakably close to Mother Teresa yet did not share her faith, stunned me into silence. It made me reflect on a number of issues related and unrelated: of the strength of secular values; and of true compassion knowing no religious, ethnic, caste or geographical boundaries, and indeed being able to transcend altogether the formal contours of religious practice.
Mother Teresa understood her environment acutely. She was no evangelist in the 19th century mould. She remained true to her religion till her last breath, but chose not to impose it on others. Never once during my 23-year-long association with her did she ever suggest that her religion was the only path, or that it was in any way superior. Yet she often reminded those around her of the power of prayer. If I occasionally remarked on some initiative she had taken as a “good idea,” she would reply with a teasing smile that if I learned to pray I would get a few good ideas too! She often urged those who came to her that they must be good Hindus or Muslims or Christians or Sikhs, and in that process must learn to “find God.”
It was indicative of her success that she understood that in an overwhelmingly non-Christian India, her path had to be a unique one. So while she never deviated from her faith, she reached out to millions of her special constituency: the poorest of the poor, the leprosy sufferers, abandoned children or the hungry and dying, recognising their faces to be the face of her God. Their religious persuasion, or even its absence, hardly concerned her. In her ability to have found the middle path in an environment that could have easily become hostile, lay her genius. I once asked the legendary Chief Minster of West Bengal, Jyoti Basu, what he an atheist and a Communist could possibly have in common with a Catholic nun for whom God was everything. With a smile, he replied: “We share a love for the poor.” India revered her and gave her abundantly of its honours, including the Bharat Ratna. On August 26, 2010, a five- rupee coin was released to commemorate her birth centenary.
Over the years I witnessed many incidents that I called “co-incidences” and which others might well call “miracles.” One day in the 1980s at Mother House in Kolkata, a rare medicine was needed to save the life of a child. In those days it was not manufactured in India. When hope was almost lost, and as the Sisters prayed, a carton of assorted leftover medicines was donated by an unknown benefactor. Right on top was the very drug that was needed. The child's life was saved.
On another occasion, Mother Teresa arrived in Delhi from abroad. I was at the airport to receive her. Her flight was late. As she got off, anxiety was writ over her face. “You must get me on the flight to Calcutta. There is a dying child here; I am carrying a new medicine.” I told Mother that was impossible. Her flight had been late, and the last Calcutta-bound Indian Airlines flight was boarding. Mother Teresa's own luggage was also yet to come. But as word spread at the airport, the seemingly impossible happened. The first few items of luggage on the conveyer belt happened to be her cardboard cartons (she never owned a suitcase!). Someone informed air traffic control of Mother Teresa's efforts. The pilot happened to be a Calcutta man. Suddenly I was asked if I could drive Mother Teresa in my car to the tarmac — and she caught her flight. I rang her the next morning. The child had been administered the medicine on her arrival, and was now out of danger. “It is a first-class miracle,” said Mother Teresa.
Far from once not believing in miracles, I am now in little doubt that Mother Teresa's life itself was a miracle. Witness the facts: as a child of 14 in her native Albania, her imagination was stirred by the stories she heard from the Jesuit Fathers of their work in distant Bengal; at 18, still a teenager, her mind was made up. She took leave of her own beloved mother and joined the Loreto Order of teaching nuns, her only means in the year 1928 of reaching India. It was an age when missionaries seldom returned home, and she was embarking on a life in a world of which she knew nothing. She was sent to Darjeeling for training. She learned to speak Bengali fluently. After almost 20 happy years as a teaching nun, she audaciously sought (and finally received) permission from the Vatican to become the first nun in the history of the Church to step outside convent walls, not as a lay person, but as a nun with her vows intact, to start a mission of her own. She had no helper, no companion, and no money to speak of. Imagine the Calcutta of 1948, overflowing with refugees after Partition, homelessness, poverty and disease everywhere. She wore no recognisable nun's habit; instead a sari, akin to that worn by municipal sweepresses, that cost one rupee. This is where she started her life's arduous mission.
We know where she left off. By the time she passed away in 1997, she had created her presence in 123 countries. She ran a multinational run by 5,000 nuns of her Order, without the help of government grants or Church assistance. She had been awarded every conceivable prize of distinction. She was as warmly received in palaces and chancelleries as she was in the slums and streets of the world's cities. People sometimes accuse her of converting others to her faith: surely then there was no need for her to set up a branch in the heart of the Vatican. She cajoled Pope John Paul II to carve out a soup kitchen next to his grand audience chamber. Anyone today can witness the queues of Rome's poor, who are fed their only hot meal every evening. A former British Prime Minister told me not long ago that when Mother Teresa visited him at Downing Street she always managed to get his aides overruled, and got everything she wanted — because it was always for ‘her poor.' In any event, by now it was difficult for Prime Ministers to say ‘no' to her, for she was recognised as the conscience-keeper of her age.
As a Hindu, armed only with a certain eclecticism, I found it took me longer than most others to understand that Mother Teresa was with Christ in each conscious hour, whether at Mass, or with each of those whom she tended. The Christ on her crucifix was not different from the one who lay dying at her hospice in Kalighat. There could be no contradiction in her oft-repeated words that one must reach out to one's neighbour.
For Mother Teresa, to love one's neighbour was to love God. This was what was essential to her, not the size of her mission or the power others perceived in her. “We are called upon not to be successful, but to be faithful,” she explained. Mother Teresa exemplified that faith — in prayer, in love, in service, and in peace.
(Navin Chawla, a former Chief Election Commissioner of India, is the author of Mother Teresa: The Authorised Biography.)

Printable version | Aug 26, 2011 11:35:04 AM | http://www.thehindu.com/opinion/lead/article2397132.ece
© The Hindu

Geetha Sambasivam Sat, Aug 27, 2011 at 1:59 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பூமாலையை வாங்கி அணிந்து கொண்டு, ‘குழந்தாய்’ என்று அழைத்து, சிரம் மீது கை வைத்து ஆசியளித்தார். இதெல்லாம் சொல்வது கிடையாது, சொல்ல நேரிட்டால், தடுத்து நிறுத்தவும் இயலாது. என்ன சொல்கிறீர்கள்?//

உண்மைதான் ஐயா. பிரவாகம்!

மற்றபடி மருத்துவ உலகக் கண்டுபிடிப்புகள் குறித்த உங்கள் கட்டுரைகளும் எப்போதும்போல் அருமையானவை. அதே சமயம் இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் முற்றிலும் ஒழியவில்லை என்பதையும் வருத்தத்துடன் கூற வேண்டி உள்ளது.  

2011/8/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 26
  Thursday, August 29, 2013

  அரசு 12 துரைத்தனம்.


  அரசு 12 துரைத்தனம்.


  Innamburan S.Soundararajan Fri, Aug 30, 2013 at 9:20 AM

  அரசு 12 துரைத்தனம்.

  Friday, August 30, 2013, 4:57


  இன்னம்பூரான்
  Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.
  என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:
  தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
  குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.
  ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
  இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.
  கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!
  கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!
  அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!
  மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!
  அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”
  “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.
  ‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
  வர்ரேன்…
  சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com
  பிரசுரம்: வல்லமை 30 08 2013


  Sunday, August 25, 2013

  கனம் கோர்ட்டார் அவர்களே! – 20
  கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

  Innamburan S.Soundararajan Sat, Aug 24, 2013 at 9:08 PM


  கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

  இன்னம்பூரான்
  page1
  நானோ! ஒரு அப்பாவி!
  மகா கனம் பொருந்திய கோர்ட்டார் சமூகத்தின் முன்னிலையில் நடை பெற்றதாக ஒரு கற்பனை உரையாடலை செவி சாய்த்து கேட்பீர்களாக. இரட்டை ஜீயும், நிலத்தடி எண்ணை வளமும் உங்களது கற்பனையில் மேய்ந்தால், யான் அதற்குப் பொறுப்பல்ல. ‘நானோ! ஒரு அப்பாவி!’ அது கூட இரவல்.
  இனி உரையாடல்.
  சாக்ஷி (சா), கோர்ட்டார் (கோ), அரசு வழக்கறிஞர். (அ.வ.) கோர்ட்டு குமாஸ்தா (கோ.கு.), டவாலி (ட).
  ட: பராக்! பராக்!! பராக்!!! கோர்ட்டார் வருகிறார்! வந்துகொண்டே இருக்கிறார்! டட்! டட்! டட்!
  எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.
  சாவதானமாக, அலம்பல் யாதும் செய்யாமல், குறித்த நேரத்துக்கு முன்பே, ‘கூஜாக்கள்’ உடனில்லாமல், சமத்தாக வந்து கூண்டேறினார், சாக்ஷி பெருமகனார்.
  கோ.கு: உமது பெயர் என்ன?
  சா: ரிஷ்ய சிருங்கர், மாமுனி மைந்தன், மாமுனி (ஜூனியர்) தம்பி.
  கோ.கு: ‘யான் பேசுவது உண்மையே. பேசுவது முற்றிலும் உண்மையே. உள்ளுறையாகக்கூட பொய் பேசமாட்டேன். இது சத்யம். சத்யம். சத்யம் என்று அடித்துக்கூறும். கடவுளைக்கூப்பிடுவீர்களா? அல்லது உம் நாணயத்தை நம்புவீர்களா?. உடனே பதில் சொல்லும். ஹூம்!
  சா: கடவுளே என் சாக்ஷி. (தனிமொழி: அவர் குரலெடுக்கமாட்டார்.)
  (கோ.கு. பகவத் கீதை நூலை சாக்ஷியின் கையில் கொடுத்தார். அவரும் அதை பவ்யமாக வாங்கி, அதன் மேல் ஒரு ஷொட்டு கொடுத்து, நடுநடுங்கும் குரலில் சத்தியப்பிரமாணம் செய்தார்.)
  கோ:உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா?
  சா: என் பெயரே ரிஷ்ய சிருங்கர், வணக்குத்துக்கு உரிய என் தந்தையோ மாமுனி. மரியாதைக்கு உரிய என் மூத்த உடன்பிறப்போ மாமுனி (ஜூனியர்). எனக்கு பெண்பால் பரிச்சயமில்லை. In fact…
  அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷி வினவிய வினாவுக்கு விடை அளித்தால் போதும். அவர் கேட்டக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. I object…
  கோ: Objection sustained. உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.
  ( ஒரு விசிட்டர்: ‘என்ன இது பெர்ரி மேஸன் கதை போல் போகிறது!’ டெல்லா ஸ்ட் ரீட் வருவாளா அல்லது ‘தரகு’ மாமியா?) நல்ல வேளை அவர் முணுமுணுத்ததால் அது யார் காதிலும் விழவில்லை.)
  சா: யான் அன்னலக்ஷ்மியை அறியேன். அறிந்ததுமில்லை, அறியப்போவதுமில்லை.
  கோ: உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.
  சா: (சுளித்த முகத்துடன்) அறியேன். அறியேன். அறியேன்.
  கோ: உமக்கு எத்தனை தடவை சொல்வது? ஒரு வினா.ஒரு விடை. போதும்.
  சா: என்னுடைய வக்கீல் ஐயா பாரீஸ்டராக்கும். லண்டனில் படித்தவர் அவர் சொன்னபடி கக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே. சத்தியம் ஜெயிக்க வேண்டுமல்லவா, பாரதநாட்டின் இலச்சினையில் கூறிய மாதிரி.
  (அரசு வக்கீல் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். சாக்ஷியின் வக்கீல் கோர்ட்டார் பார்க்கும் மாதிரி தன் கைகளை விரித்து, முணுமுணுக்கிறார்.
  கோ: அரசு வக்கீலைப் பார்த்து: Go ahead.
  அ.வ.: சரி. விருந்தாந்தத்தை சொல்லவும்.
  சா: அன்னலக்ஷ்மியை லவலேசமும் அறியேன். ‘நம்பிக்கை -1’ கம்பெனி ‘நம்பிக்கை -2’ கம்பெனியில் அடக்கம். நான் ‘நம்பிக்கை -2‘கம்பெனியின் நிர்வாகப்பொறுப்பேற்காதத் தலைவன். ‘நம்பிக்கை -1’ கம்பெனியின் தலைமைக்குழுவில் இருந்தேன். எப்போது? என்ன? என்பதை மறந்து விட்டேன். வெகுதான்ய ௵ அந்த பதவியில் இருந்தேனா என்று சொல்ல இயலாது.
  (இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)
  (அரசு வக்கீல் அவரிடம் ஒரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க, சாக்ஷியும், சாக்ஷிணியும் (ஆஹா! அவர் பெண்பால் அறிந்தவர் என்பது தெளிவாயிற்று. அது ஒரு புறமிருக்க…அந்த தஸ்தாவேஜில் சாக்ஷியும், சாக்ஷிணியும் கையொப்பமிட்டு இருந்தனர். அன்னலக்ஷ்மியின் சித்திரம் வேறே பதிவாகி இருந்தது.)
  சா: அவை எங்கள் கையொப்பம் என்று உறுதி செய்கிறேன். எங்கள் இருவரின் வருமான வரி ஆவணங்கள் அங்கு பதிவு ஆகியுள்ளன. ஸத்யமேவ ஜயதே! ஸத்ய ஸத்யமேவ ஜயதே! மேவ ஜயதே!
  (அரசு வக்கீல் அவரிடம் மற்றொரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் இவரது கம்பேனி ‘அன்னதானம்’ செய்வதை பற்றியது, அது.)
  சா: அது பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே. (ஒரு கூஜா ஓடி வந்து கொடுத்த திருநீரை அணிந்துகொள்கிறார்.)
  சா: (தென்பு திரும்ப) அந்த தஸ்தாவேஜில் என் பெயரும், சாக்ஷிணியின் பெயரும் இருந்தாலும், அது வங்கியின் தஸ்தாவேஜு. அதை பற்றியும், அதன் பொருளடக்கத்தைப் பற்றியும் யான் லவலேசமும் அறியேன் என்பது கண்கூடு, வெட்ட வெளிச்சம், உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடை மலை.
  (கோ: சாக்ஷியின் வக்கீலிடம் ‘உமது கட்சிக்காரர் சொல்லாட்டம் ஆடுகிறார். அதை கட்டுப்படுத்தி வைக்கவும். இது என் ஆணை.)
  (அரசு வக்கீல் சாக்ஷியிடம் அன்னலக்ஷ்மியின் ஊழியர்களான, சித்தார்த், இந்திரன், விஷ்ணு என்ற மூவரின் சித்திரங்களை காண்பித்தார்.)
  சா: ஓ! இவர்களை தெரியுமே. இவர்கள் குழுவினர் ஆச்சே. ஆனால் அவர்களின் பதவி, கையொப்பம் பற்றி யாதும் அறியேன்.
  அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்
  கோ: Granted.
  குறுக்கு விசாரணையின் போது, தான் வேவுத்துறை அதிபதியிடம், இவ்வழக்கு சம்பந்தமாக போனதை ஒப்புக்கொண்ட சாக்ஷி, தான் எழுத்தில் கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை என்று கம்பீரமாக பதிலினார். கோர்ட்டார் கேட்ட வினாவுக்கு பதில் அளிக்கும்போது தனக்கு அச்சுறுத்தல், இற்செறிப்பு ஒன்றும் வரவில்லை என்று திண்ணமாகக் கூறினார். பொய் சொன்னால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிவேன் என்று அடித்துக்கூறினார்.
  (இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)
  மறுபடியும் குறுக்கு விசாரணை:
  சா: அன்னலக்ஷ்மியை எங்களுடன் உறவாட யாம் அழைக்கவில்லை. அவளது வானள்ளும் சாகசங்களை பற்றி கொஞ்சம் கூட எனக்குத் தெரியாது. அவளுக்கு ‘நம்பிக்கை -1’ கம்பெனி எக்கச்சக்கமாகக் கொடுத்த பொன் மோஹராக்கள் பற்றி எனக்கு எப்படித்தெரியும்?நீங்களே சொல்லுங்கள். நானோ! ஒரு அப்பாவி!
  அன்றைய கோர்ட்டுக் கலைந்தது.
  மறுநாள் சாக்ஷிணியும் கிருகலக்ஷ்மி என்ற பீடத்திலமர்ந்து, கம்பெனிகளுக்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்ற தோரணையில் விடையளித்தார். (கம்பெனி ஆவணங்கள் சொலவு வேறானால் என்பது வேறு ஒரு கேள்வியோ என்ற ஐயம்.
  ஹூம்!

  சித்திரத்துக்கு நன்றி
  மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்
  POSTED ON 5:39 PM BY SANKARA RAMASAMY WITH NO COMMENTS

  இன்னம்பூரான்

  http://innamburan.blogspot.co.uk

  http://innamburan.blogspot.de/view/magazine

  www.olitamizh.com

  பிஎசுரம்: வல்லமை: 24 08 2013


  Aadhiraa Sat, Aug 24, 2013 at 10:00 PM
  Reply-To: vallamai@googlegroups.com
  To: vallamai@googlegroups.com
  ம்ம்ம்  கட்டுரை படித்தேன். மிகவும் பயனுள்ளது.தங்களது கட்டுரையை விட பதிலினார், இற்செறிப்பு முதலிய சொல்லாட்சிகளை மிகவும் ரசித்தேன் சார்.

  சென்னையிலா? பாண்டியிலா?

  2013/8/24 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>


  Innamburan S.Soundararajan Sun, Aug 25, 2013 at 6:56 AM
  To: "vallamai@googlegroups.com"
  பாண்டியில் பாண்டி ஆடி வருகிறேன். மிக்க நன்றி ஆதிரா.

  அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25
  அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25

  Innamburan Innamburan Thu, Aug 25, 2011 at 12:44 AM


  அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25
  என்னத்தை சொல்றது? மெய்ஞ்ஞானமோ, அழிந்து போகும், உடலாகிய மெய்யை பற்றி அல்ல. விஞ்ஞானமோ ‘மெய்யும் பொய்யோ?’ ‘பொய்யும் மெய்யோ?’ என்று வினவியபடி, தேடிக்கொண்டே இருக்கிறது. பாத்தேன்! 2011 ஐ 1835 இல் கட்டிப்போட்டேன், சந்திர மண்டல சித்திரங்களை இணைத்து விட்டு. முழுப்பொறுப்பையும் என் தலையில் சுமக்கிறேன். வினவவும். வினயமாக விடை கூறுகிறேன்.
  ஆகஸ்ட் 25,1835 முதல் ஐந்து நாள் நியூ யார்க் கதிரவன் என்ற இதழில் காலக்ஷேபமாக நிகழ்ந்த வானவியல் கட்டுரைகளின் ரத்னசுருக்கமும், அதை அறிமுகம் படுத்த, ஆகஸ்ட் 21, 2011 இல் லண்டன் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரையின் தலைப்புகளையும், அவற்றை சார்ந்த என் வினாக்களையும் முன் வைத்து, உங்களுடைய மேலான அபிப்ராயங்களை, ஆவலுடன் நாடுகிறேன்.
  ஆகஸ்ட் 21, 2011
  ‘அமெரிக்க ஸ்பேஸ் மையம் மனிதர்கள் வேறுலகங்களுக்கு புலன் பெயர்வதை பற்றி ஆலோசனை கேட்கிறது.’
  ~ கேட்டதா? 
  ‘கடலோடிகள் மாதிரி கிரகமோடிகள் வேண்டும். விண்ணப்பிக்கவும்.’
  ~ விண்ணப்பித்தீர்களா? 
  ‘கருவை உறைய வைத்து, வேறுலகம் சென்ற பின் உயிர்ப்பிப்போம்.’
  ~ உயிர்ப்பித்தார்களா? 
  ‘பிரபஞ்சத்தின் சுரங்கங்களை அறிவோம். அவற்றில் பயணிப்போம்.’
  ~ யாத்ரா பலன் யாதோ?
  ‘அணுசக்தி கூட கொஞ்சூண்டு. பிரபஞ்சப்பயணம் நூற்றுக்கணக்கான வருடங்கள் பிடிக்கும்.’
   ~ உயிருடன் இருந்தீரோ? 
  ‘ஆல்ஃபா சென்சுரி’ விண்மீன் தான் நமக்கு அண்டை வீடு.’.’
  ~ ஆமாம்! அடுத்த வீட்டுத்திண்ணை.
  ‘வாயேஜர் விண்கலத்தில் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்தால்,  ‘ஆல்ஃபா சென்சுரி’ அடைய 70 ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.’
  ~அப்பாடா! 
  ‘இப்புவி ஒரு அங்குலத்தின் ஐந்தில் ஒரு பங்கு விட்டமுள்ள வட்டம் என்றால், ஆல்ஃபா சென்சுரி 800 மைல தூரம்.’
  ~அம்மாம் தூரமா?

  ஆகஸ்ட் 25,1835: தலைப்பு:


  GREAT ASTRONOMICAL DISCOVERIES 
  LATELY MADE 
  BY SIR JOHN HERSCHEL, L.L.D. F.R.S. &c. 
  At the Cape of Good Hope 
  [From Supplement to the Edinburgh Journal of Science]

  சுருக்கம்:
  புதிய தொலை நோக்குக்கருவியும் ,நவீன விஞ்ஞான கோட்பாடும் இங்கே...சந்திர கிரஹத்தில் கானகங்களும், மாபெரும் ஏரிகளும், பிரமிடுகள் உளன. காட்டெருமைகள் மேய்கின்றன. நீலமேக யாளிகளை மலை மேல் காண்கிறோம். வட்டவடிவம் கொண்ட அதிசயப்பிராணிகள் நடக்கவும் நடக்கின்றன; நீந்தவும் செய்கின்றன. இருகால் பிராணிகள் வசிக்கும் குடில்கள் கண்டோம்; அவை அக்னி பிரயோகம் செய்வதையும் கண்டோம். கோயில்களில் தங்க விமானம் பளபளக்கிறது.; பறக்கும் மனிதர்கள் (வெஸ்பர்டில்லியோ~ஹோமோ) வேறு.  அறுபது அடி நீளமான எங்கள் தொலை நோக்கியின் உதவியால், சந்திரனின் மலைகளையும், மடுக்களையும், சமவெளிகளையும் தெளிவாகக் காணமுடிந்தது. சர்வே செய்து, அளவுகளை, இது வரை விஞ்ஞானத்தின் வரலாறு காணாத வகையில், சரி பார்க்க முடிந்தது...என்ன தான் தொலை நோக்கினாலும், ஒளி தர சூர்யன் வேண்டுமே. அதையும் சரிக்கட்டினோம். சொல்லி மாளாது. விஞ்ஞானிகளில் ஒட்டு மொத்தமான கூட்டு ஆராய்ச்சிகளினால், ஒளிமயமான தொலைநோக்கு திறன் அடைந்தோம்...ஜலவாயு~ பிராணவாயு நுண்~ஆராய்ச்சி கருவியின் மேன்மையும், உபயோகமும் விலை மதிப்பற்றவை...எங்கள் லென்ஸ்ஸெ 14,826 இராத்தல் எடை. 42 ஆயிரம் மடங்கு பெரிதாக்கிக்காட்டும் சக்தி யுடையது. இந்த புவியில் இல்லாத சந்திரனின் அதிசயம், அங்குமிங்கும் அலையும் மலைகள்! மலைத்து விட்டோம், ஒரு ஆழமான, விஸ்தாரமான ஏரியை பார்த்து. ஏனெனில், அது மரண ஏரி! எண்டோமியான் எரிமலைகளை கண்டோம். க்லோமெடீஸ் மலைத்தொடரில் எத்தனை குழிகள், பள்ளங்கள்!
  மிக ஆர்வத்துடன் நாங்கள் கண்டுபிடித்த இரு பெரிய வளையங்களை பற்றி: ‘அவை சூரியமண்டலத்திலிருந்து பிரிந்து போன இரு துருவங்களில் அமைந்த பூலோக அமைப்புகளின் துண்டங்கள். அவை சந்திரமண்டலத்தில் சரணடைந்த விந்தையை, மர்மத்தை என்னவென்று சொல்வது?

  மேலும் சில தகவல்கள்: ஐரோப்பியநாடுகள் எல்லாம் தமது விஞ்ஞானிகளை அனுப்பினார்கள்; இங்கிலாந்து வரப்போகும் வெள்ளி கிரஹம் இடம் மாறும் வைபவத்தை ஹெர்ஷல் அவர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது. அவரும் ஒத்துக்கொண்டு ஒரு வருடம் முன்பே செய்யவேண்டிய திட்டங்களை அறிவித்தார். 
  புகழ் வாய்ந்த யேல் கல்லூரியில்: மாணவர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள், ஆன்மீக/தெய்வீக/சட்ட மேதைகள் யாவரும் தினந்தோறும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களிடையே, ‘சர் ஜான் ஹெர்ஷலின் ஆய்வுகளை கண்டீரோ? சூர்யக்கதிர் இதழ் படித்தீர்களோ? சந்திரனில் மனித நடமாட்டம் பார்த்தீர்களோ?’ போன்ற கேள்விகளால், ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டு இருந்தனர்.
  இது தான் சாக்கு என்று நானும் ஓடி வந்து விட்டேன்.
  இன்னம்பூரான்
  25 08 2011

  Moon Jpj.pages
  76K

  coral shree Thu, Aug 25, 2011 at 6:31 AM

  அன்பின் ஐயா,
  அருமையான வினாக்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். எத்துனை ஆழ்ந்த சிந்தனை.........பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியலில் நானும்............
  சந்திர மண்டலம் குறித்த தகவல்கள் என்றுமே சுவாரசியமானவை.  அங்கும் மக்கள் தொகை பெருகப் போகிற காலம் வெகு தொலைவில் இல்லையோ?
  [Quoted text hidden]
  --

                                                                
                   

  anantha narayanan nagarajan Thu, Aug 25, 2011 at 4:49 PM

  என்னத்தச் சொல்றது?அட்சரம் புரியல்லை.
  அரவக்கோன்
  [Quoted text hidden]

  Geetha Sambasivam Sat, Aug 27, 2011 at 1:53 PM

  படங்களைப் பார்த்தேன். கட்டுரையும் படித்தேன்.  முற்றிலும், முற்றிலும்னா சுத்தமாத் தெரியாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி. ஓடி வந்தா எப்படி?? கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டாமோ? 
  2011/8/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>


  இது தான் சாக்கு என்று நானும் ஓடி வந்து விட்டேன்.
  இன்னம்பூரான்
  25 08 2011


  Innamburan Innamburan Sat, Aug 27, 2011 at 10:17 PM


  சுத்தமாத் தெரியாத தகவல் தான். 420! டுபாக்கூர்! தற்கால செய்தி.உண்மை. என் வினாக்களின் அதிகப்பிரசங்கம் வெளிப்படை. நானே பொறுப்பு என்றதெல்லாம், குறிப்பால் உணர்த்த! ந்யூயார்ல் சன் என்ற இதழ் ஹெர்ஷல் என்ற புகழ் பெற்ற விஞ்ஞானியின் பெயரை சும்மா கலாட்டா செய்ய எடுத்துக்கொண்டு பிஃல்ம் காட்டிற்று. அவர் கோபிக்கவில்லை, முதலில். ஆனால், யேல் முதற்கொண்டு, ஏமாந்த சோணகிரியான போது, அவருக்கு பிடிக்கவில்லை. ஆனா பாருங்கோ! இன்று வரை அந்த இதழ் தான் செய்த கிருத்திரமத்தை ஒத்துக்கொள்ளவில்லை. தமிழ்த்தேனி என்ன சொல்றாரு?
  இன்னம்பூரான்