Saturday, December 14, 2013

கஷ்டோபனிஷத்

ஒரு பேக்டேட் & ஒரு அப்டேட்:
பேக்டேட்: கிஞ்சித்து இப்போது. மிஞ்சியது பிறகு.
அப்டேட்:
நண்பர் டோக்ராஜி ஐ.பி.எஸ் என்னமா தமிழ் எழுதுறார்!
இன்னம்பூரான்
14 12 2013


அன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056


அன்றொரு நாள்: டிசம்பர் 27:
ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் இங்கு வந்திருக்கப்போவதில்லை. எனவே, அறிஞர் அண்ணாவை போல் நான் கடுஞ்சொற்கள் வீசாவிடினும், என்னுடைய கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆதாரத்துடன் என் கருத்துக்களுக்கு விமர்சனமும்:கண்டனமும் நல்வரவு, ஆதரவும் நல்வரவு. தாய்மொழியின் ஆளுமை நமது உயிர்நாடி. தயை செய்து, இந்த நீண்ட இழையை கவனமாக படியுங்கள். ஒரு விஷயம். ஆட்சிமொழியை வழி நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு; நற்பெயரும் கிட்டியது. மேலும், 1966ல் நான் குஜராத்தில் பணி செய்ய சென்றபோது, அங்கு இயல்பாகவே குஜராத்தி ஆட்சிமொழியாக பீடுநடை போட்டது. உயர் அதிகாரிகளில் பலர், தமிழர். சரளமாக, குஜராத்தி பேசினர்,எழுதினர். முதலில் தவித்தேன். ஆனால், பொது மக்கள் என்னை விட முக்கியம் என்பதும்,  தாய்மொழி ஆட்சி புரிவது முக்கியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. காந்திஜி முதலில் குஜராத்தியில் தான் எழுதினார். ஓரளவுக்கு, அம்மொழியை கற்று மறந்தேன். இனி கஷ்டோபனிஷத்
சித்திரத்துக்கு நன்றி: http://4.bp.blogspot.com/-tfy951GeksU/UFCdoAnuF8I/AAAAAAAAAcA/8IAxSMwDYe8/s1600/9218_172669097472_5693158_n.jpg

Thursday, December 12, 2013

பொருளியலும் ஆதாரமும்

அப்டேட்: 2013
பணம் மண்டைக்கனம் மாதிரி வீங்கியாச்ச்சு.  ரிஸர்வ் வங்கி தலைவர் தலை சிறந்த பொருளியல் நிபுணர். இருந்தாலும் விலை வாசி பிரமிட் மாதிரி உயருகிறது. வவுத்துலே மண்ணு. நிதி அமைச்சர் 'தாட் பூட் தஞ்சாவூர்' என்கிறார். ஹூம்!!!!!
இன்னம்பூரான்
13 12 2013
அன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்

Innamburan Innamburan 13 December 2011 15:42

அன்றொரு நாள்: டிசம்பர் 13
பொருளும் ஆதாரமும்
நான் கல்லூரியில் பொருளியல் படிக்கும் காலகட்டத்தில் ஒரு உரையாடல்:
*
‘என்ன படிக்கிறெ’
‘எகனாமிக்ஸ் ஆனர்ஸ், சார்.’
‘அப்படி ஒரு சப்ஜெக்ட் இருக்கா? என்ன?’
**
‘அந்த பெரிய பரிக்ஷை பாஸ் செஞ்சுட்டேன். ஆசீர்வாதம் வாங்கிக்க வந்தேன்’
(சேவிக்கிறேன்; அவரும் நெற்றியில் குங்குமமிட்டு ஆசீர்வதிக்கிறார். நானும் தயங்கி, தயங்கி...)
‘சொல்லு.’
‘இல்லெ. இந்த எகனாமிக்ஸ் படிக்காட்டா, பெரிய பரிக்ஷை...’.
‘நீ பாஸ் பண்ணது பாலிடிக்ஸ் படிச்சாதலெ.’.
இது ராஜாஜியின் வேத வாக்கு.
 அவர் சொல்றது யதார்த்தம். எகனாமிக்ஸ் அபிப்ராயபேதத்திற்கு பிரபலமாக அபகீர்த்தி பெற்ற இயல். ஆனாப்பாருங்கோ, டிசம்பர் 13, 2009 அன்று 94வது வயதில் மறைந்த பேராசிரியர் பால் சாமுவேல்சன் எழுதிய ‘பொருளியல்’ என்ற நூல் தான் என்னுடைய சிறிய முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. தெளிவான அலசல். அதனுடைய சாராம்சத்தை நான் எழுதி வைத்திருந்தேன். இடமின்மை காரணமாக, அப்பா, அதை பேப்பர்க்காரனுக்குப் போட்டுவிட்டார். நான் பட்ட பாடு! பொருளியலில் ‘... விஞ்ஞான ரீதியாக பொருளியல் கோட்பாடுகளை விளக்கியதற்கும், பொருளியல் ஆய்வின் தரத்தை உயர்த்தியதற்கும்...’ நோபல் பரிசு வாங்கிய முதல் அமெரிக்கர், இவர். 21 வயதிலிருந்து இத்துறையில் முத்திரைகள் பல பதித்தவர். நோபல் பரிசு பெற்ற ராபர்ட் லூகாஸ் சொன்னார், ‘...நமக்கு கிஞ்சித்தும் புரியாமல் எண்ணற்ற பட்டிமன்றங்களில் நடக்கும் முடியாவழக்குகளை, ‘சட்’ என்று முடிபு கூறி, செம்மையாக திருத்தி அமைத்து, உரிய விடையை அளிப்பதில் (சாமுவேல்சன்) மன்னர்’ என்று.
பொருளியலை ஊடுருவி பார்த்து, நுகர்வோர் தீர்மானங்கள், மக்கள் நலம், உலக வாணிகம், நிதி கோட்பாடுகள், செல்வ கோட்பாடுகள், நுண் பொருளியல், பெரும்போக்கு பொருளியல், பொருளியல் கணிதம் ஆகிய பிரிவுகள் யாவற்றிலும் இவருடைய செல்வாக்கைக் காணலாம். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வாணிகம் அதிகரித்தால், இரு நாட்டிலும் உள்ள கூலி விகிதாச்சார இடைவெளி குறையும் என்று பெர்டில் ஓஹ்லின் என்ற பொருளியல் வல்லுனர் கூறினார். இந்த இடைவெளியை அறவே ஒழிக்க என்ன என்ன இடர்ப்பாடுகள் உள்ளன என்பதை சாமுவேல்சன் பிட்டு பிட்டு வைத்தார். அவருக்கு கட்டற்ற சந்தையின் மீது நம்பிக்கை கிடையாது. மட்டற்ற அரசியல் தலையீட்டையும் அவர் ஆதரிக்கவில்லை. தேச பாதுகாப்பை உதாரணமாக வைத்து, எது எது பொது நலம் சார்ந்தவை, அவற்றிற்கான பொருளியல் நோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கிய புண்யம் இவரை சாரும்.
ஜன்மம் முழுதும் பொருளியல் ஆய்வுக்கும், படிப்பினைக்கும் செலவழித்த இந்த பேராசிரியரின் கீர்த்தி இழைக்க, இதுவெல்லாம் போறாது. ஒரு அறிமுகம் அவ்வளவு தான். சமீபத்தில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமியை பற்றி மின் தமிழில் பேச்சு எழுந்தது. பேராசிரியர் சாமுவேல்சன் அவர்களுக்கு டாக்டர் சுப்ரமணியம் சுவாமி அஞ்சலி செலுத்தி எழுதிய கட்டுரையை, அனுபந்தமாக இணைத்துள்ளேன்.
இன்னம்பூரான்.
13 12 2011
To quote Paul Samuelson (from some time ...
Income%20pyramid.jpg

உசாத்துணை:
அனுபந்தம்:
Prof. Samuelson: guru extraordinaire
December 22, 2009
Subramanian Swamy

If anyone can be called the father of modern analytical and scientific economics, it is Paul A. Samuelson, who passed away on December 13 at 94. Anyone who has read economics, even in the most fleeting way, cannot but recognise his perceptive undergraduate economics textbook. Think of analytical economics, and you think of Samuelson.
When I saw him last when he was 92, he was driving his car near his home in Belmont, Massachusetts -- a small elite town in the vicinity of Cambridge which is home to Harvard University and the Massachusetts Institute of Technology -- and as alert as ever. He stopped upon seeing me on the sidewalk, pulled over and chatted about how I was. Since 2000 I have been going back each summer to Harvard to teach two courses in economics, and I had been meeting him over a one-to-one lunch at his favourite restaurant at Harvard Square. That year I had not yet called him, and he was disapproving.
Whenever I met him I was just his student, which I had been in 1962-63. At every meeting with him I had to answer his rapid-fire questions about a series of subjects, and even share delightful gossip. On that summer’s day at Belmont it was no different.
Later I had become his co-author on the Theory of Index Numbers, published our research in the American Economic Review (1974) and the Royal Economic Society’s Economic Journal (1984), but I was still treated as his student, to be cared for, and questioned.
Samuelson’s main contribution to modern economics was the use of advanced calculus to show that economics could be structured on clearly stated or observable behavioural assumptions or axioms or objectives, and then by mathematical deduction deriving economic laws that could be tested on real-life statistical data. He thus made economics a subject of scientific inquiry to be truly called a science, in the sense that propositions in economics could be ‘proved’ with proof, just as theorems in mathematics could be. Mathematical logic and rigour was all; little else mattered. Gone, thus, were the days of John Maynard Keynes’ “Shakespearean” economics and John Kenneth Galbraith’s art of expression. Felicity in English no more mattered; mathematical methods took its place. Samuelson globalised economics by enabling scholars who knew little English to join in international discourse and collaboration in research and teaching. Economics thus exploded on to the international scene, and became fashionable.
Worked in two dimensions
Samuelson worked in two dimensions throughout his life. In one, he spoke in homely English about the most complicated economic issues. He thus authored one of the most widely used college textbooks in the history of American education. The book, titled Economics, first published in 1948, was the globe’s best-selling textbook for nearly 30 years. Translated into 20 languages and updated periodically, it is selling over 50,000 copies a year in its 19th edition half a century after it first appeared.
His second dimension was of mathematical rigour that began with his Harvard Ph.D. thesis-turned-book titled TheFoundations of Economic Analysis. This is a gold mine for research even today. When he defended his thesis before a committee of three Harvard Professors, the story goes that the chairman, Professor Joseph A. Schumpeter, asked his two fellow-members after the viva voce: “Gentlemen, have we passed?”
Between the two books, Samuelson redefined modern economics and made it popular, yet a science. For that he became the first American to win the then newly instituted Nobel prize for economics.
Paul Antony Samuelson was born on May 15, 1915 in Gary, Indiana. After receiving his bachelor’s from Chicago in 1935, he went to Harvard. He earned his master’s from Harvard in 1936 and a Ph.D. formally in 1941. He wrote his thesis in 1937.
In 1940, Harvard offered him an instructorship (the Harvard equivalent of Assistant Professor, which in turn equalled the position of an Associate Professor elsewhere), which he accepted. But a month later the MIT invited him to become an Assistant Professor, that is, the same as Harvard’s Instructor.But jealousy and, some suspect, the anti-Semitism of the late-1930s made Harvard deny him a promotion, even though he had by then developed an international following.
Fresh from India with a B.A. Honours in Mathematics and a Master’s in Mathematical Statistics, I first met Samuelson in his office in September 1962 wanting to be his student, cross-registering in the most advanced mathematical economics course of the MIT. I had arrived in Cambridge on a Harvard scholarship for a Ph.D. Samuelson selected each year only 20 students, out of about 200 who applied, expecting to groom them as scholars. I wondered whether I would be chosen. I was.
Once while lecturing on the theory of consumer behaviour in class, Samuelson wrote on the blackboard a series of equations to derive a theorem. As a student I raised my hand from my desk and said: “You have one equation wrong, so you will not be able to prove the theorem.” There was stunned silence. Samuelson walked to my seat and glowered: “What did you say?” I held my ground and offered to rectify what was a small careless mistake which all geniuses commit on the blackboard in class. He made me go to the blackboard and write out the correct equation -- which I did. Then, sternly he said: “See me after class.” My classmates thought that was the end of me. One asked: “Have you got your return ticket to India?”
But it was, instead, the beginning of me -- and of a relationship. When I saw him after class, he said: “I think you and I should write a joint paper some day.” This we did 10 years later, but he me helped in the interim on a number of papers published in my own name, and thanked me in footnotes of his published papers for having corrected him or given him leads. He, and my thesis adviser Simon Kuznets at Harvard, launched my career. I became a Teaching Fellow as a student, an Instructor soon after, obtaining a Ph.D in the shortest possible time of 18 months, and an Assistant Professor, all at Harvard.
I eventually joined politics because my career was blocked in India. I continued to return to Harvard to teach, and got nothing but warmth and welcome from Samuelson each time. During the Emergency, Henry Rosovsky, the Harvard economist, became the Dean and appointed me Visiting Professor. Indira Gandhi sent an emissary to him to cancel my appointment. But Henry was no pushover. By now Samuelson was convinced that I had responded to a higher call. He encouraged me to fight on. He wrote in Newsweek against the Emergency and even signed a petition along with other Nobel laureates to the U.S. President condemning the jailing without trial of 140,000 persons.
Samuelson remained sympathetic from then on to my choice of a political career over academics. Once I called him my guru and explained the gurukul system of the Indian rishis. He said: “Ah! That’s what the U.S. needs.” Samuelson was already a rishi in the way he treated his chosen students. I shall remember always that I was once his chosen student among the many he nurtured.
(Dr. Subramanian Swamy is a former Union Minister who is the president of the Janata Party.)
Retrieved with thanks on 13th Dec, 2011 from:

Geetha Sambasivam 13 December 2011 15:47

இடமின்மை காரணமாக, அப்பா, அதை பேப்பர்க்காரனுக்குப் போட்டுவிட்டார். நான் பட்ட பாடு!//

இப்படியாகப் பொக்கிஷங்களை இழந்த அனுபவம் எனக்கும் நிறைய உண்டு.  பொருளாதாரம் குறித்துப் பல தகவல்களை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி. 


//அவருக்கு கட்டற்ற சந்தையின் மீது நம்பிக்கை கிடையாது. மட்டற்ற அரசியல் தலையீட்டையும் அவர் ஆதரிக்கவில்லை. தேச பாதுகாப்பை உதாரணமாக வைத்து, எது எது பொது நலம் சார்ந்தவை, அவற்றிற்கான பொருளியல் நோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கிய புண்யம் இவரை சாரும்.//

இது பிடித்த, மிகவும் ரசித்த பாயின்ட்.  எனக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்குக் கட்டற்ற சந்தை சரியாக வராது என்ற எண்ணம் உண்டு. இது போதும்னு நினைக்கிறேன். :)))

2011/12/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: டிசம்பர் 13
பொருளும் ஆதாரமும்
நான் கல்லூரியில் பொருளியல் படிக்கும் காலகட்டத்தில் ஒரு உரையாடல்:
*
‘என்ன படிக்கிறெ’
‘எகனாமிக்ஸ் ஆனர்ஸ், சார்.’
‘அப்படி ஒரு சப்ஜெக்ட் இருக்கா? என்ன?


rajam 13 December 2011 16:21

1. ராஜாஜியின் ஆசி வாங்கியது பெரிய காரியம்! வாழ்க!
2.
 ஆனாப்பாருங்கோ, டிசம்பர் 13, 2009 அன்று 94வது வயதில் மறைந்த பேராசிரியர் பால் சாமுவேல்சன் எழுதிய ‘பொருளியல்’ என்ற நூல் தான் என்னுடைய சிறிய முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. தெளிவான அலசல். அதனுடைய சாராம்சத்தை நான் எழுதி வைத்திருந்தேன். இடமின்மை காரணமாக, அப்பா, அதை பேப்பர்க்காரனுக்குப் போட்டுவிட்டார். நான் பட்ட பாடு!
பல பல பத்தாண்டுகள் ஆகியும் என்னுள் உறங்காமல் துடித்துக்கொண்டேயிருக்கும் உணர்வுகளில் ஒன்று இது! சொல்லிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விருப்பம். ஆனால், personal என்பதால் சொல்லலாமோ என்னவோ தெரியலெ. அதனால் யோசித்து அப்றம் வேணும்-னா சொல்றேன்.

3. எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள் ... "most of us would be within a yard of the ground."

அன்புடன்,
ராஜம்


Innamburan Innamburan 13 December 2011 16:34

அந்த MITயை மூளையின் வாசஸ்தலம் என்று நான் சொல்வது உண்டு. Margaret Mead,Norbert Weiner, Donald Schon, Chris Argyriss, Peter Senge.... Awe-Inspring!
இன்னம்பூரான்





Wednesday, December 11, 2013

11 ~ 12 ~ 13



11 ~ 12 ~ 13

Innamburan S.Soundararajan 11 December 2013 16:20

Inline images 1Inline images 1Inline images 2Inline images 1Inline images 1

11 ~ 12 ~ 13


இத்தகைய வரிசை நூற்றாண்டுக்கு ஒரு முறை தான் வருமாம். என்னை கேட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட அரிது, அரிது, அரிது என்பேன். மூன்று மேதாவிகளின் ஜன்மதினம் கொண்டாடும் தினமிது.  மூவரும் இரத்தினங்கள். வரிசையாக வாரேன்.


இதே தேதியில் 1920ல் பிறந்த பாரதரத்னா ரவி சங்கர் அவர்கள் புவனமெங்கும் பயணித்து பாரதத்தின் இசை செல்வத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் சிதார் வாத்தியம் வாசிப்பதை கேட்க அஹமதாபாத்தில் தருணம் கிட்டியது. மாலை ஆறு மணிக்கு சபை நிரம்பியது. எட்டு மணி சுமாருக்கு மீட்ட ஆரம்பித்தவர் மீட்டி, மீட்டி moodக்கு லாகிரி மூட்டினார். தபேலா மாஜிக் அல்லா ரக்கா தட்டினார். நாகரீகமாகவே தட்டினார். அவரது புன்னகையும் சேர்ந்து எம்மை மயக்கி விட்டது. ஒரு பாடாக நடுநிசி மவுனத்திலே ஜங்கார ஸ்ருதி நர்த்தனமாடியது. விடிவெள்ளி மறையும் வேளை.காலை மணி மூன்று. சிதாரும், தபேலாவும் இணைந்ததாலே புஷ்பமாரி பொழிந்தது. மோன நிலை கலைந்து வீட்டுக்கு செல்லும் போது கார் விட முடியவில்லை. மனம் பறி போய் விட்டதே!


இதே தேதியில் 1922ல் பெஷாவர் பழக்கடை வியாபாரிக்கு பிறந்த தாதா சாஹேப் சாதனையாளர் விருது பெற்ற அழகு ராஜா திலீப் குமாருக்கு பாகிஸ்தான் அரசு நிஷானே இம்தியா என்ற விருது கொடுத்து தன்னை கெளரவப்படித்துக்கொண்டது: 1998. கார்கில் போர் நடந்த போது அந்த விருதை விரைவாக விரட்டிவிடவேண்டும் என்றது மும்பை கண்ட்ரோலர் சிவ சேனா. ‘ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ததற்கும், இரு நாடுகளின் உறவை மேன்படுத்த நான் உழைத்ததற்கும் அளித்த விருது, அது. கார்கில் போருக்கும் அந்த மனித நேயப்பணிக்கும் சம்பந்தம் இல்லை’ என்று விளக்கம் அளித்து மறுத்து விட்டார். நீடுழி வாழ்க.


இதே தேதியில் 1935ல் பிறந்த ப்ரணாப் முகர்ஜி இந்தியாவின் ஜனாதிபதி. அரசியல் இலக்கணத்தை இலக்கியமாகவும், இலக்கியத்தை இலக்கணமாகவும் ரசவாதம் செய்த நூற்றுக்கு நூற்றொரு பங்கு அரசியல் விற்பன்னரான பாலிடிக்ஸ் மாயாஜாலி ப்ரணாப் முகர்ஜியின் மாமா நம்ம ஃபெரண்ட். அது போகட்டும். இந்திய ஜனாதிபதிகளில் வரலாறு படைத்த பெருமை இவரை சாரும். காரணம் யாதோ? பின்னணி என்னவோ? ராகுலு சொல்லல்லையோ?என்றெல்லாம் சண்டைக்கு வராதீர்கள். குற்றம் சாற்றப்பட்ட பிரதிவாதிகள் ( அச்சுப்பிழை: ‘பிரதிநிதிகள்’) தேர்தலுக்கு நிற்பதை பற்றி உச்ச நீதி மன்ற தீர்ப்பை வளைத்துக்கட்ட அரசியல்வாதிகள் முயன்றபோது அந்த பலூனின் காற்றை பிடுங்கிவிட்ட சாதனை நிச்சயமாக ‘பாரத ரத்னா’ வாங்கப்போகும் திரு. ப்ரணாப் முகர்ஜியோடது தான். நீடூழி வாழ்க.


அடடா! சீனியாராட்டி மறந்துட்டேனே. இதே தேதியில் கொம்மாளம் போட்டு மறு நாள் நடந்த டில்லி தர்பார்: 1911

'... ஆம்பளையெல்லாம் பொம்பளெ மாதிரி ஜரிகையும், பட்டுமா, கவுனு. நம்ம பேட்டை ரவுடி மாதிரி ஜ்வெல்லரி ~ சங்கிலிகள், தோடா, தோடு, பதக்கம், தலைப்பாலெ வைரம், வைடூர்யம். கும்பிடு போடத்தானெ வந்திருக்காஹ. எதுக்குன்னு கத்தியும் கப்டாவும்! எல்லாம் ஃபில்ம்லெ காட்றாஹ. ஆனாப்பாரு...' என்று நேற்று நான் எழுதியதை, அன்றே நம்ம ஏகேசி ஃபில்ம் எடுத்திருக்காரு!  பரோடா மவராசா மட்டும் கொஞ்சம் 'தில்லா' இருந்தாரு.அந்த படத்தை போட்றேன். இந்த மண்டியிட்ட மன்ன்ர் பிரான்கள் எல்லாருமா சேந்து, பாடியாலா மவராணி மூலமாக, அகில இந்திய மாதர்கள் சார்பில் (?) ஒரு இம்மாம் பெரிய நகையை பட்டமகிஷிக்கிட்ட தானம் வாத்தாஹ. தர்பாரில் முதல் பதக்கம் 'ஸ்டார் ஃஃப் இந்தியா'! அதை மவராசா பட்டமகிஷிக்கு, கன்னத்தில் முத்தமிட்டு, சூட்ட, அவளும் 'அண்ணலின்' கன்னத்தில் முத்தமிட்டாள். காணாது கண்டது போல, சபையோரும் ஆரவாரம் செய்தனர்….'


சுபம்.

    நாம தான் பாவம்! இதே தேதியில் பாரதரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களை 2004ல் இழந்தோம்.

இன்னம்பூரான்

11 12 13









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, December 10, 2013

ஒளி படைத்த கண்ணினாய்!:அன்றொரு நாள்: டிசம்பர் 11

அப்டேட் 2013:
இந்த வருடம் புதுச்சேரி போனபோது அங்கு செல்ல முடியவில்லை.
மராமத்து என்று பூட்டு.


அன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்!

Innamburan Innamburan 10 December 2011 22:59

அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!

இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து, 
‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.
நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ. 
ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான். 

60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள்.  கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன். 

எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
இன்னம்பூரான்
11 12 2011
Subramanya_Bharathi_Signature.jpg


Geetha Sambasivam 11 December 2011 03:11


http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_4723.html


நன்றி. வணக்கம். 

2011/12/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!



Subramanya_Bharathi_Signature.jpg




Subashini Tremmel11 December 2011 09:07


தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் உள்ள

N. Ganesan 11 December 2011 09:57



பாரதியார் எழுதியபடி என்றால்,
ஒளி படைத்த கண்ணினாய்!

அன்புடன்
நா. கணேசன்


Innamburan Innamburan 11 December 2011 10:07

நன்றி பல. சொல்லொன்று கூறினேன். சித்திரங்கள் பல அணி வகுத்து மெருகேற்றின. இவ்விழையும் வரலாற்று பெட்டகம் ஆயிற்று.


N. Ganesan 11 December 2011 10:16


முனைவர் ழானுக்கு கூட இச்சிக்கல் என்றால்
பாருங்களேன். அணங்குடை தமிழ்நாடு - என்பதில்
ஒற்று மிகல் பற்றி எடுத்துரைத்தேன்.

அண்மையில் நாகசாமி அவர்கள் ஐராவதம்
ஆராய்ச்சியில் அணங்குன்னா முருகன் என்பதற்கு
ஐராவதத்தின் விளக்கத்தை நகைச்சுவையாய்ச்
சொன்னார்.

வாழ்க கன்னித் தமிழுடன்,



Innamburan Innamburan 11 December 2011 21:07



நன்றி. உங்கள் தளத்தில் போட்டதிற்கு. ஐந்து பேர் பின்னூட்டம். அதில் ஒருவர் பின்னியூட்டம்? ஆமாம். அங்கு சேர என்னுடைய இன்னம்பூரான் ஈமயிலு கடவுச்சொல்லா. இல்லை இஷ்டப்பட்டதை போடலாமா/ 

[Quoted text hidden]

Geetha Sambasivam 
g mail account irunthal pothumanathu.
[Quoted text hidden]

Monday, December 9, 2013

காசும் கடவளும்:அன்றொரு நாள்: டிசம்பர் 10



அப்டேட்: 10 12 2013
மேற்கத்திய வரலாற்றை மாற்றியமைத்த சாதனையாளர் மார்ட்டின் லூதர். கத்தோலிக்க வழிப்பாட்டின் சடங்கு,சம்பிரதாயம், காசு கொடுத்தால் சுவர்க்கம் போன்றவற்றை உடைத்த கிருத்துவ சமயத்திலும், விவிலியத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்த யுகபுருஷன் அவர். மோக்ஷத்துக்கு இறை நம்பிக்கைத் தான் துணை என்ற மார்ட்டின் லூதர் இல்லறத்தைப் போற்றினார். அதிகப்படி கலகங்களை அவர் விரும்பவில்லை.
500 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஒப்பியல் பார்வை.
போப்பாண்டவர் ஃப்ரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்க வழிபாட்டை சீர்திருத்த சொன்ன கருத்துக்கள்:
மதாலயம் ஒரு ஆஸ்பத்திரி போல. புண் ஆறவேண்டும். இதயங்கள் கனியவேண்டும். கத்தோலிக்கம் தவறான பாதைகளில்  சென்று இழைத்த காயங்களை கழுவவேண்டும்.நமக்கு மேலாண்மை வேண்டியதில்லை. அன்பு செலுத்தினால் போதும். துணிவுடன் மாற்றங்களை மேற்கொள்வோம்.
‘பாவத்தை விடுங்கள். அதை விட பெரியது இறையாண்மை. கருச்சிதைவு, ஓரினச்சேர்க்கை வாதங்களை தள்ளி வைக்கவும். நமக்கு முக்கியம் மனிதர்கள். கருச்சிதைவு செய்து கொண்ட பெண் நம்மடவள் இல்லையா?
ஏசு பிரான் நம்மை கலாச்சார சமர் புரிய சொல்லவில்லை. விவிலியத்தை சம்பிரதாயமாக நோக்காமல், ஏசு பிரானின் இரக்க உணர்வின் வாயிலாக புரிந்து கொள்ளுங்கள்.
கத்தோலிக்க வழிபாடு பெண்ணியத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்வியலின் முக்கிய தீர்வுகள் பெண்கள் இல்லாமல் எடுபடாது. பெண்ணியத்தை நமது வழிபாட்டுட்டன் இணைக்க முயலவேண்டும்.
உசாத்துணை:
http://world.time.com/2013/09/19/the-four-reform-themes-of-pope-francis-in-new-interview/


அன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்
9 messages

Innamburan Innamburan 10 December 2011 17:28




அன்றொரு நாள்: டிசம்பர் 10

காசும் கடவளும்
சடங்கும் சம்பிரதாயமும் சமய வழிபாட்டில் புகுந்து சங்கடம் செய்வது எளிதில் புலப்படாது. அதற்கான விலையை கொடுப்பதில், லெளகிக கண்ணோட்டத்தில், அநேகருக்கு தயக்கமும் ஏற்படுவதில்லை. பொற்றாமரையும், தங்க விதானமும், வைர முடியும், அர்ச்சனை தட்டும் இறையில்லத்தின் அழகை கூட்டலாம். மெருகேற்றலாம். அற்ப மானிடனுக்கு பக்தியை நாட உதவலாம். இறையாண்மையை கூட்டும் தன்மையற்றவை, இவை. இறையாண்மையின் திருவருள் நமக்குக் கிட்டுவதை நீர்க்கும் தன்மை உடையவை, இவை. நாம் இதையெல்லாம் பெரிது படுத்துவது இல்லை. கோயிலுக்கு போனால் நான் நிச்சயமாக அர்ச்சனை செய்வேன். உண்டியலில் காசு போடுவேன். வேண்டுதல்களை பூர்த்தி செய்வேன். அற்ப மானிடனல்லவா! சந்தியாவனம் செய்வது, ஜபதபம், அபிஷேகம், தியானம், யஞ்ஞம் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு சடங்கு, சம்பிரதாயம் என்று அவதானிக்க முடியாது. நமக்கு தெரியாத விஷயங்கள் பல.  பீடிகை முற்றிற்று.

“ உண்டியலில் போட்ட காசு குலுங்கும்போதே, இறந்தவரின் ஆவி நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கு பறந்தோடி விடும்.” ~ ஜோஹான் டெட்செல்: கத்தோலிக்க மதகுரு.

“ உலக செல்வந்தர்களில் முதன்மை வகிக்கும் போப்பாண்டவர் புனித பீட்டர் தேவாலயம் கட்ட தன் பணத்தை செலவழிக்காமல், ஏழை விசுவாசிகளிடம் நன்கொடை கேட்பதேன்?”
~ மார்ட்டின் லூதர்: சமய புரட்சி செய்த ஜெர்மானிய மதகுரு

ஒரு சுரங்கத்தொழிலாளிக்கு நவம்பர் 10, 1483 பிறந்த மார்ட்டின் லூதர் சமயநெறியில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அகஸ்டினியன் மடத்தில் 1505ல் சேர்ந்து, 1507ல் தீக்ஷை பெற்று, 1512 ல் சமயநெறி என்ற துறையில் பண்டாரகர் விருது பெற்றார். அதற்கு முன் 1510ல் ரோமாபுரிக்கு சென்ற போது கத்தோலிக்கத் தலை நகரமான வாடிகனில் இருக்கும் ஊழல் கண்டு திகைத்துப் போனார். ஊழலின் ஊற்று: காசு கொடுத்தால் பாவமன்னிப்பு. இறந்தவருக்கும் கிடைக்கும். இருப்பவருக்கும் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷத்துக்கு பசுமாட்டை தானம் கொடுக்கும் பரிகாரம் போல. (ஹிந்து மதத்தினர் கருமாதி செய்யும்போது ‘கோதானம்’ என்று காசு தானம் செய்வது நடப்பு.) அதற்கும் ஜோஹான் டெட்செல் அவர்களின் பட்டியல் வேறு. கிட்டத்தட்ட, ‘வருங்கால பாபிகளே! அஞ்சேல். இனி செய்யப்போகும் அட்டூழியங்களுக்கு அச்சாரம் கட்டினால், பாவமன்னிப்பு உத்தரவாதம்’! என்பது போல. தாங்கொண்ணா சினம் எழ, மார்ட்டின் லூதர், இந்த அவலங்களை கண்டித்து ’95 ஆக்ஷேபணைகள்’ என்ற நூலை 1517ல் எழுதினார். கிருத்துவர்களை காப்பாற்றுவது தெய்வநம்பிக்கை மட்டுமே என்பதில் உறுதியாக இருந்த மார்ட்டின் லூதர், பல நூல்களை எழுத, அச்சு இயந்திரம் வந்து விட்டதால், அவை பிரபலமாகி விட, போப்பாண்டவரின் சினம் தலை தூக்கியது. போப்பாண்டவரின் மடல்களுக்கு ‘புல்’ (Bull) என்று பெயர். அத்தகைய ‘புல்’ ஒன்றில் மார்ட்டின் லூதர் தன் கொள்கைகளில் 41 கொள்கைகளை கைவிடவேண்டும் என்று கட்டளையிட்டு, விதித்த கெடு முடிந்த தினம், டிசம்பர் 10, 1520. மார்ட்டின் லுதரும், ‘ஆண்டவனின் வாய்மையை குலைத்தாய் நீ ( போப்); இன்று அவரு உன்னை குலைக்கிறார்’ என்று மந்திரமோதி, அந்த மடலை அக்னி தேவனுக்கு ‘ஸ்வாஹாஹா’ செய்து விட்டார். 1521ல், போப் லியோ~10 மார்டின் லூதரை வெளியேற்றினார். இவரும் அவர்களின் சொல்லை மதிக்கவில்லை. மன்னன் சார்லஸ் ~5 இவரை நாத்திகன் என்று பிரகடனப்படுத்தி நாடு கடந்து ஓடி ஒளிய வைத்தான். 1522 ல் திரும்பிவந்து ஒரு கன்யா ஸ்திரியை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தினார்.
ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா!குடியானவர்கள் ஒரு கிளர்ச்சி செய்தார்கள். அதன் தலைவர்கள் இவருடைய வாதங்களை திறனுடன் முன்வைத்து கிளர்ச்சியை நியாயப்படுத்தினர். இவரோ ப்ளேட்டை மாற்றி வாசித்தார். அவர்களை ஆதரிக்கவும் இல்லை. அரசாங்கம் கிளர்ச்சியை நசுக்குவதை ஆதரித்தார். அதன் விளைவாக, இவருக்கு ஆதரவு குறைந்தது. போதாக்குறையாக, நியாயமின்றி யூத சமுதாயத்தைத் தாக்கத் தொடங்கினார், தன் இறுதி நாட்களில்.
என்ன தான் இருந்தாலும், அவருடைய இறை நம்பிக்கை, ஊழலெதிர்ப்பு, விவிலியத்தை ஜெர்மானிய மொழியில் எளிமை நடையில் எழுதி, பாமரமக்களின் இறை நம்பிக்கையை வளர்த்தது, ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன், உலக அளவில் சிந்தனையை தூண்டிய கம்பீரம் ஆகியவற்றை போற்றத்தான் வேண்டும்.
இவருடைய சமய புரட்சி ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றின் தடத்தை மாற்றியது.
இன்னம்பூரான்
10 12 2011


Scott2065.jpg
உசாத்துணை:

Geetha Sambasivam 10 December 2011 18:37

இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், :)))))
2011/12/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>




அன்றொரு நாள்: டிசம்பர் 10
காசும் கடவளும்

இவருடைய சமய புரட்சி ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றின் தடத்தை மாற்றியது.
இன்னம்பூரான்
10 12 2011


Subashini Tremmel 10 December 2011 19:11

மார்ட்டின் லூதர் செய்த புரட்சியில் மகத்தான ஒன்று மக்கள் பேசும் மொழியிலேயே புனித நூல்களும் இருக்க வேண்டும் என்று நினைத்து அதனை சாதித்தது. மார்ட்டினுக்கு முன்னரே வேறு சிலர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்திருந்தாலும் சிறப்பான வகையில் மக்களைச் சென்றடையும் வகையில் இந்த நூலை ஜெர்மானிய மொழியில் வடித்தவர் என்ற பெருமை இவரைச் சேரும். புனித நூலை ஜெர்மன் மொழியிலேயே பாமரர்களும் படித்து தெரிந்து கொண்டமையால் மக்கள் சிந்தனையில் அதீத மாற்றங்கள் உருவெடுத்தன. போப் என்ற சாம்ராஜ்ஜியத்தின் மேல் இருந்த பயம் ஜெர்மானிய மக்கள் மத்தியில் குறைந்தது. திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் இருந்தவாறு இறை பணி செய்யலாம் என்ற சிந்தனை லூதரேனியன் சிந்தனையில் நிஜப்படுத்தப்பட்டது. பல மூட நம்பிக்கைகள் களைந்தெடுக்கப்பட்டன. 

ஜெர்மன் மொழியின் சீரமைப்பிலும் மார்ட்டின் லூதரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல வழக்குகளைக் கொண்ட கடின மொழி ஜெர்மன் மொழி. அதனை சாக்ஸன் வகை வழக்கின் அடிப்படையில் எழுத்து மொழியாக சீர்படுத்திய பெருமை இவரைச் சாரும்.

நீங்கள் குறிப்பிடுவது போல பிற்காலத்தில் இவர் யூதர்களுக்கு எதிர்ப்பாக நடந்து கொண்டவை மனித நேயத்திற்கு எதிர்ப்பான ஒன்றே. அதனை மறுக்க முடியாது.

சுபா


Subashini Tremmel 10 December 2011 19:37


மார்ட்டின் லூதரின் 95 தீஸிஸ் - லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இதனை இவர் விட்டன்பர்க் தேவாலயத்தின் (Castle Church in Wittenberg) முன் பக்கக் கதவில்  மாட்டி வைத்தார் என்பது பலர் அறிந்த விஷயம். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த தேவாலயத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் ( 7 ஆண்டு போரில் பெரும் சேதம் அடைந்தது இந்த தேவாலயம்) இந்த முன் பக்க கதவை செம்பில் உருவாக்கி அக்கதவிலேயே இந்த 95 வாசகங்களையும் வடித்திருக்கின்றனர்.

Castle+Church.jpg



இந்த காசல் தேவாலயத்தைப் பார்க்கவும் இதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இங்கே செல்க. இங்கே தான் மார்ட்டின் லூதரின் சமாதியும் உள்ளது.

xti_8226p.jpg


ஜெர்மனிக்கு விஜயம் செய்பவர்கள் பார்க்க வேண்டியவற்றில் இந்த தேவாலயம் முக்கியம் வாய்ந்த ஒன்று.

சுபா


Innamburan Innamburan 10 December 2011 19:44

இருவருக்கும் நன்றி. சுருக்கி, சுருக்கி, எழுதுவதால், மார்ட்டின் லூதர் அவர்கள் ஜெர்மானிய மொழிக்குச் செய்த சேவையை,'...ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன்...' என்றதுடன் நிறுத்தி விட்டேன். கீதா சொல்கிற படி இன்னும் எழுதியிருக்கலாம். உரிய தருணத்தில் Fill up the blanks செய்கிறேன். அன்றன்று சுடச்சுட எழுதுவதாலும், பதிவு செய்ய வேண்டிய கெடு நெருங்கும் வரை ஆய்வு செய்வதாலும், இப்படி. கொஞ்சம் ஓய்வும் தேவை. படிக்கறதே இல்லை.
இன்னம்பூரான்


Innamburan Innamburan 10 December 2011 19:48
To: mintamil@googlegroups.com
மிக்க நன்றி, ஸுபாஷிணி. நான் கொடுத்த உசாத்துணையில் இவருடைய 'இறை நம்பிக்கை' பற்றிய கட்டுரை உளது. எல்லா சமயத்தினரும் உடன்பாடு காண்பார்கள்.


Subashini Tremmel 10 December 2011 19:52




2011/12/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இருவருக்கும் நன்றி. சுருக்கி, சுருக்கி, எழுதுவதால், மார்ட்டின் லூதர் அவர்கள் ஜெர்மானிய மொழிக்குச் செய்த சேவையை,'...ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன்...' என்றதுடன் நிறுத்தி விட்டேன். கீதா சொல்கிற படி இன்னும் எழுதியிருக்கலாம். உரிய தருணத்தில் Fill up the blanks செய்கிறேன். அன்றன்று சுடச்சுட எழுதுவதாலும், பதிவு செய்ய வேண்டிய கெடு நெருங்கும் வரை ஆய்வு செய்வதாலும், இப்படி. கொஞ்சம் ஓய்வும் தேவை. படிக்கறதே இல்லை.
சுருக்கி சுருக்கி சொன்னாலும் அன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவிஷயத்தை கொஞ்சம் நினைத்துப் பார்க்க முடிகிறதே. நீங்கள் இப்படி தொடருங்கள். ஏனையோர் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தகவல் வளமடையும் இல்லையா?

சுபா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan 10 December 2011 20:02

Exactly. அது தான் என் இலக்கு. நாளை பிரசுரிக்க நேர்ந்தால், உரிய முறையில் நன்றி செலுத்த வேண்டும் என்று விழைகிறேன். இப்பவே 500/600 பக்கங்கள் தாண்டியாகி விட்டது. எடிட் செய்ய துவங்கவும் வேண்டும். நன்றி, இன்னம்பூரான்


Geetha Sambasivam 11 December 2011 22:03


நல்ல சுறுசுறுப்பு.

நோட்டோலை



நோட்டோலை

Innamburan S.Soundararajan 9 December 2013 18:24


முன் குறிப்பு: கொதிக்கக் கொதிக்க சூப்பு குடித்தால் தனி ருசி. வல்லமை என்றால் சும்மாவா? அனுப்பிய பத்து நிமிடங்களில் பிரசுரம் செய்து விட்டார்கள்.
பிரசுரம்http://www.vallamai.com/?p=40569 

நோட்டோலை

Monday, December 9, 2013, 23:00

இன்னம்பூரான்
2
சாக்கு சாக்கா காசு பணம் டோய்!
கோக்கு மாக்கா சிக்கன் குருமா டோய்!
நோக்கும் நேக்கும் நாக்குக் கேட்டாலும் டோய்!
வாக்குக் கேக்கறான்னு மசியாதே டோய்!
மகா கனம் பொருந்திய மகாஜனங்களே!
விடுதலை வாங்கியது நன்நிமித்தமேயாயினும், வாக்களிப்பது ஜனநாயக உரிமையாயினும், குடிசை போட இடம் கேட்டு, அங்கு மனையொன்று அமைத்து, அடுத்த மனையை ‘லபக்கி’ மாடமாளிகை கட்டி, ஊரை வளைத்து கோட்டை கொத்தளம் எழுப்பி, உம்மை நடுத்தெருவில் விட்ட பிரதிநிதிகள் சிலரால் ஜனநாயகத்தின் நாயகம் எண்டேஞ்சர்ட் லிஸ்டில். களிம்போ! கட்டெறும்போ! வந்து குதித்தது நோட்டோலை ( NOTA). 2013 புள்ளி விவரம் கேளும். புள்ளி விவரம் ஒரு புதிய இலக்கிய தரவு! ஆமாம். புள்ளியில் விவரம் கொடுத்து சேதிக்குத் திரை போடலாம். விவரத்தில் புள்ளி போட்டு கதி கலங்க அடிக்கலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ஒட்டகத்தில் போடலாம். கயிறை மணலாக பிரிக்கலாம். யான் அந்த மாயாமாலங்கள் செய்ய தகுதியற்றவன். கொஞ்சம் உண்மையை கண்டு நடுங்குவோம்.
மக்கள் மன்றத்தில், இந்த தேர்தல் கமிஷன் நோட்டோலை வாசிக்கிறது. ஷரத்து 158 படி(Representation of the People Act, 1951)இவை செல்லாத ‘நோ’ வாம்; நோவு தான்! இத்தனைக்கும் காத்த வீர்யனுக்கும், வீராயிக்கும் வாக்களித்தவர்கள் எந்த கவனத்தில் செய்திருக்கலாம் என்பது ஊகம். நோட்டோலை முத்திரை போட்டவர்கள் கவனம் செலுத்தித் தான் ‘ஒண்ணுமே உருப்படாது’ என்று தீவிரமாக சிந்தித்து இயங்கியவர்கள் எனலாம். நடக்கவேண்டியது, வேண்டாதது எல்லாம் நடந்து முடிந்த பின் இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், டிபாசிட் இழந்தவர்களின் முகத்திரை கிழியலாம்.
ஒன்று மறக்கலாகாது. ஒரு வாக்குச்சாவடியிலாவது இந்த நோட்டாலை முத்திரையாளர்கள் இல்லாமல் இல்லை. அதாவது, மக்களுக்கு புரிந்து விட்டது, இந்த பாணத்தின் மகிமை. மத்திய பிரதேசத்தில் பான்செமால் தொகுதி பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு நோட்டோலை போட்டவர்களின் எண்ணிக்கை தோற்றவர், கெலித்தவருக்குள்ள வித்தியாசத்தை விட அதிகம். அதாவது அவர்களில் பெரும்பாலோர் தோற்றவருக்கு வாக்களித்திருந்தால், அவர் கெலித்திருப்பார்! சர்வ அசக்தி படைத்த வாக்காளர்களே! கவனிக்கவும். இது பழங்குடி தொகுதி. போட்டி இருவர் மட்டும். இருவருக்கும் உள்ளூரில் நல்ல பெயரோ, கெட்ட பெயரோ, இரண்டுமோ இருந்திருக்க வேண்டும். பழங்குடி மக்கள் சக்திக்கு சலாம்! கவார்தா, கைராகர், கல்லாரி, டோங்கர்காவ்ம் தொகுதிகளிலும் இதே கதி. நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பஸ்தார்-சர்குஜா பகுதிகளில் நோட்டோலை அலை, அலையாக: சித்ரகூட்: 10848; தந்தேவாடா-9677, கேஷ்கல்-8381, கொண்டகாவ்ம்-6773.ரஜிம்-5673, பாதால்காவ்ம் 5533. அரசு இதன் பின்னணியை நோக்கினால், பல உண்மைகள் கதவு திறக்கும்.
வம்சாவளிக்கு ஆதரவு இல்லையோ? சர்ச்சைக்கு அப்பாற்படாத அஜீத் ஜோகியின் மகனுக்கும், மனைவிக்கு நோட்டோலை 7115, 1074. பின் தங்கிய பிராந்தியம் எனப்படும் சட்டீஸ்கரில் தான் நோட்டோலை அதிக. மெத்த படித்த டில்லியில் குறைவு. 460 வாக்காளர்களுக்கு ஷீலா தீக்ஷித் மேலும் நம்பிக்கையில்லை; அர்விந்த் கெஜ்ரிவால் மேலும் நம்பிக்கையில்லை. மத்ய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் செளஹான் மீது 4112 பேருக்கு நம்பிக்கையில்லை; ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது 3729 பேருக்கு நம்பிக்கையில்லை.
போறப்போக்கைப் பார்த்தால் நான் தேர்தலுக்கு நின்றால், என் பெயரை NOTA என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு,
நோட்டா இன்னம்பூரான்
09 12 2013
உசாத்துணை:
இன்றைய ஹிந்து இதழ்.
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-5XCyte3dQZ0/UnNMi2PIEHI/AAAAAAABcvc/p9F9u1CshuY/s1600/2.jpg