Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:23 அங்கொரு மருது!

GmailInnamburan Innamburan


அன்றொரு நாள்: ஜனவரி:23 அங்கொரு மருது!
3 messages

Innamburan Innamburan Mon, Jan 23, 2012 at 2:13 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
அன்றொரு நாள்: ஜனவரி:23
அங்கொரு மருது!

வீர சுதந்திரம் வேண்டி நிற்கவேண்டிய அவலநிலைமை அரசகுமாரனுக்கே ஏற்பட்ட வரலாறு இது. ஒரிய மக்கள் சமுதாயத்தின் இன்றைய வரலாற்றுப்பகுதி, நம் இலக்கிய கர்த்தா திரு.வெங்கட் சுவாமிநாதனுக்கும், ‘கடலாழம்’ ஒரிசா பாலுவுக்கும் பிடிக்கும் என்று தோன்றுகிறது. நான் ஒடிஷா மாநிலத்தில் டெங்கனால் என்ற ஊரை கடக்கும்போது, ஒரு ‘ஏக்தாரா’ காரின் எதிரில் வந்தார். ‘ஏக்தாரா’ என்றால் ஒரு மீட்டு. அதாவது தம்புரா மாதிரியான எளிய நாட்டுப்புறத்து இசைக்கருவி. பாணர்கள் போல எனலாம். நாடோடி பாடல்கள் அவர்களிடம் மட்டுமே. அவரை நிறுத்தி குசலம் விசாரித்தப்போது, மனமுருக, ஸுரேந்திரசாயியின் கீர்த்தி பாடினார். அப்போது அவ்வளவாக, அந்த ‘அங்கொரு மருது’ பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில்  ஆங்கிலேயர்களின் கலோனிய ஆட்சிமுறையின் முக்கிய நடவடிக்கை, சிற்றரசர்களை குலைப்பது. சாம தான பேத தண்ட தந்திரங்களால் (உடன்படிக்கைகள், லஞ்சம், பிரித்தாள்வது, சிறையில் தள்ளுவது) நாடு பிடிப்பது; காடு பிடிப்பது. அந்த வகையில், நாலாவது உபாயத்தால், 37 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ராஜகுமாரன் ஸுரேந்திரசாயின் ஜன்மதினம் இன்று (ஜனவரி 23, 1809). இவர் சம்பல்பூர் செளஹான் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். 1827ல் இவர் தான் வாரிசு. நமக்குத் தெரிந்தவரை, கலோனிய அரசு இந்த 18 வயது வாலிபனின் துணிச்சல், மக்களிடையே அவருக்கு இருந்த அன்யோன்யமும், ஆதரவு, சுதந்திரப்போக்கு ஆகியவற்றை கண்டு அஞ்சியது (மருது கதை தான்). அவரது அரசுரிமையை மறுத்து, அவரை 1827லியே சிறையில் தள்ளியது. இருந்தும் 1857ம் வருட முதல் சுதந்திரப்போராட்டத்தில், இவருடைய பங்கு இருந்தது. 1858லிருந்து நான்கு வருடங்கள் ஆங்கிலேயருடன் போரிட்டார். திறமை வாய்ந்த மேஜர் ஃபோர்ஸ்டர், கேப்டன் ஸ்மித், மேஜர் இம்பே போன்ற ராணுவ அதிகாரிகளை, வேறிடங்களிலிருந்து, இவருடம் சமர் புரிய, தேர்ந்தெடுத்து அனுப்பியது, அரசாட்சி. யாது பயன்? அவர்களும் தோல்வியுற்றார்கள். மூன்று வருடம் முயன்று தோற்ற மேஜர் ஃபோர்ஸ்டர், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். முற்றுகையிட்டு, பட்டினி போட்டும், மக்கள் ஸுரேந்திரசாயின் பக்கம் இருந்ததைக் கண்ட மேஜர் இம்பே, ஒருநாளும் ஸுரேந்திரசாயியை வெல்லமுடியாது என்று வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார். சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நாடினார். ஸுரேந்திரசாயியும், அதை நம்பி, சரணடைந்தார். மேஜர் இம்பே இறந்து விடவே, மற்ற அதிகாரிகள், ஒரு கற்பனை சூழ்ச்சியை முன்வைத்து,ஸுரேந்திரசாயியையும், ஆறு உதவியாளர்களையும் மறுபடியும் கைது செய்து, அசீர்கர் கோட்டையில் அடைத்தனர். அங்கு, அவர் மே 23. 1884 அன்று விண்ணுலகம் ஏகினார்.
நாம் மறந்து போன ஸுரேந்திரசாயிகளின் எண்ணிக்கைக் கணக்கில் அடங்கா. அந்த பட்டியலில், ஜனவரி 23, 1897 அன்று (நிர்ணயமாகத் தெரியவில்லை) ஒடிஷாவில் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸும் அடக்கம். இன்று கூட நாடாளும் மன்றத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அதுவல்ல பாயிண்ட். காங்கிரஸ் கட்சிக்கு அவர் இரண்டாம் பக்ஷம் தான். அவரை பற்றி எழுத நினைத்தேன். வேறு யாராவது எழுதுவார்களோ என்ற ஆர்வத்தில் காத்திருக்கிறேன். 'நேதாஜிக்குப் பாரத ரத்னா விருது 115 வய்திலாவது தரப்படுமா?' என்ற இழையில் கூறியதற்கு ஆதாரம் சுட்டுமாறு சீராசை சேதுபாலாவை கேட்டுக்கொள்கிறேன். 

 

இன்னம்பூரான்
23 01 2012
1986-Veer_Surendra_Sai.jpg

உசாத்துணை:
Dr. N.K. Sahu: (1985) Veer Surendra Sai: புபனேஸ்வர்: Department of Culture, Government of Orissa.

Subashini Tremmel Sat, Jan 28, 2012 at 7:20 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

கேளிவிப் படாத பெயரும் தகவலும். பகிர்வுக்கு நன்றி.

பொதுவாகவே உலகம் உமுழுதும் அரச சாம்ராஜ்ஜியத்தையும், சிற்றரசர்களை தள்ளி காலணித்த்டுவ ஆட்சியோ, மக்கள் ஆட்சியோ என்ற ஒன்றும் தோன்றுகிற போது மக்கள் மனதில் பெறும் எதிர்பார்ப்புகள் இருப்பதும் அதில் பல நேரங்களில் ஏமாற்றம் பெறுகுவதும் இன்றும் நிகழும் காட்சியாகத்தான் இருக்கிறது.

சுபா

2012/1/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>

s.bala subramani B+ve Sat, Jan 28, 2012 at 8:12 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மிகவும் சிலிர்த்தது 

ஒரிசாவின் விடுதலை போர்  மிகவும் மகத்தானது 


என் வீட்டில் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உள்ளது 

ஒரிசாவின் விடுதலை போராடங்களை பற்றி எழுத எனக்கும் ஆர்வம் இருக்கிறது ஆனால் நேரம் தான் இல்லை

இன்றும் VSS Nagar என்று சுரேந்திர சையின் பேரால பல இடங்கள் இருக்கின்றது 


மிக்க நன்றி இது குறித்த நினைவை ஏற்படுத்தியதற்கு 

விடுதலை கிடைத்த பிறகு மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் அதன் நினவு சின்னம் இன்றும் அங்கும் உள்ளது

பாலு