Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: மார்ச் 2 ஓலை வெடி!
அன்றொருநாள்: மார்ச் 2 ஓலை வெடி!
3 messages

Innamburan Innamburan Thu, Mar 1, 2012 at 6:30 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 2
ஓலை வெடி!
1948: பாளையங்கோட்டை ஜில்லா ஆசுபத்திரி: கிழிந்த நாராக கிடக்கிறேன். ஆத்மபோதனை நடக்கிறது, ஒரு கத்தோலிக்க சான்றோனால். அப்போது, அவர் கொடுத்த Take Courage என்ற கையடக்கமான நூல் தற்செயலாக இன்று பக்கம் 12ல் காட்டிய வரி, ‘He asked for a stone, and God gave him bread.’ யக்ஷிணி வந்து சொன்னது போல்! அடுத்துப்படித்த வரி: 
‘மண்டியிட்டு ரொட்டித்துண்டை இறைஞ்சினேன்; கிடைத்தது என்னமோ ஒரு கல்’ 
- அண்ணல் காந்தி:   அவருடைய  மடலை  வைஸ்ராய் உதாசீனம் செய்ததை பற்றி.  
வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு காந்திஜி விடுத்த ஓலையின் சுருக்கம்:
ஸத்யாக்ரக ஆஶ்ரமம்
சபர்மதி
மார்ச் 2, 1930
அன்பார்ந்த நண்பரே! 
இத்தனை வருடங்களாக நான் வீச அஞ்சிய ஒத்துழையாமை என்ற பாணத்தை கையில் எடுக்கும் முன், தீர்வு காண உம்மை அணுகுகிறேன். என்னுடைய நம்பிக்கை பரிசுத்தமானது. எந்த உயிரனத்திற்கும் என்னால் ஹானி விளைவிக்க இயலாது, அதுவும் மனித இனத்திற்கு. எனக்கும், என் இனத்திற்கும் என்ன தான் அநீதி நீங்கள் இழைத்திருந்தாலும், இது தான் என் நிலைப்பாடு. பிரிட்டீஷ் ஆட்சியை சாபக்கேடு என்று சொல்லும் நான் ஒரு ஆங்கிலேயனுக்கும், இந்தியாவில் அவனுக்கு இருக்கக்கூடும் நியாயமான எந்த ஈடுபாட்டுக்கும் தீங்கு இழைக்கமாட்டேன். தவறாக என்னை எடை போடவேண்டாம். பிரிட்டீஷ் ஆட்சியை சாபக்கேடு என்று சொன்னாலும், ஆங்கிலேயர்களை மற்றவர்களை விட நீசர்களாக, நான் கருதவில்லை. எனக்கு பல ஆங்கிலேய நண்பர்கள் உண்டு. சொல்லப்போனால், துணிச்சலான, திறந்த மனது உடைய ஆங்கிலேயர்களில் படைப்புகள் மூலமாகத்தான், பிரிட்டீஷ் ஆட்சியின் தீமைகளை அறிந்து கொண்டேன்... இந்த மடல் பயமுறுத்தும் கடிதம் அல்ல. ஒரு அமைதியான எதிர்ப்பு; அது என்னுடைய பவித்ரமான கடமை. எனக்கு ஆண்டவன் ஒரு அருமையான ஆங்கிலேய தூதரை (ரேனால்ட்ஸ்: 24 வயதில் காந்திஜியிடம் வந்தவர்; பிறகு அவரை பற்றி.) அனுப்பியிருக்கிறார். அவருக்கு இந்தியாவின் தார்மீக வேட்கை, அஹிம்சை எல்லாம் புரியும். அவர் மூலமாக இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
என்றும் உமது நண்பன்,
எம்.கே.காந்தி.
இந்த மடலின் மின்னாக்கப்பதிவை இணைத்திருக்கிறேன். 
நேற்றைய இழையில் அதிகார நந்தியே ‘விக்கிலீக்’ செய்து, மக்களின் ஆதரவை திரட்டியதை பற்றி பேசப்பட்டது. இன்று பேசப்படும் உத்தி, எழுதிய ஓலையை வெடிக்க வைக்கும் ‘ஓலை வெடி’. அதாவது கையோடு கையாக, குறிப்பிட்ட மடலை பொது மன்றத்தில் வைத்து விடுவது. குட்டை உடைத்து விடுவது. விலாசதாரரால் புறக்கணிக்கப்பட்ட இந்த கடிதம், இந்திய வரலாற்றில் திருப்புமுனை அல்ல. திருகிய முனை. கடலலையும், மக்கள் அலையும் கனிவுடன், கண்ணியமாக, கட்டுக்கோப்பாக தழுவிக்கொண்டன ~பத்தாவது நாள். உலகத்தின் கழுத்து சுளுக்கிக்கொண்டது. அப்படி திரும்பிப்பார்த்த வண்ணமே!
இன்று சரோஜினி நாயுடுவின் அஞ்சலி தினம்: 02 03 1949. அவரின் ஞாபகார்த்தமான சித்திரம். மார்ச் 12ம் தேதி இவ்விழையை தொடருவதாக உத்தேசம். பார்க்கலாம்.
இன்னம்பூரான்
02 03 2012
Inline image 1

உசாத்துணை & இணைப்பு: க்ளிக்கவும்.

Geetha Sambasivam Thu, Mar 1, 2012 at 7:15 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
வழக்கம் போல் அருமையான இழை.  பைபிளின் வரிகளும் அட்டகாசம்.  சரோஜினி நாயுடுவுக்கும் அஞ்சலி.  காந்தியின் கடிதம் உருக வைக்கிறது.  (என் மனதைத் திடப்படுத்திக்கொண்டு காந்தியின் மேல் நான் கொண்டிருக்கும் மனவேற்றுமைகளை நினைவு கூர வேண்டியதாயிற்று.)

ஓய்வு எடுத்துக் கொண்டு தொடருங்கள்.

On Thu, Mar 1, 2012 at 12:30 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 2
ஓலை வெடி!

இத்தனை வருடங்களாக நான் வீச அஞ்சிய ஒத்துழையாமை என்ற பாணத்தை கையில் எடுக்கும் முன், தீர்வு காண உம்மை அணுகுகிறேன். என்னுடைய நம்பிக்கை பரிசுத்தமானது. எந்த உயிரனத்திற்கும் என்னால் ஹானி விளைவிக்க இயலாது, அதுவும் மனித இனத்திற்கு. எனக்கும், என் இனத்திற்கும் என்ன தான் அநீதி நீங்கள் இழைத்திருந்தாலும், இது தான் என் நிலைப்பாடு. பிரிட்டீஷ் ஆட்சியை சாபக்கேடு என்று சொல்லும் நான் ஒரு ஆங்கிலேயனுக்கும், இந்தியாவில் அவனுக்கு இருக்கக்கூடும் நியாயமான எந்த ஈடுபாட்டுக்கும் தீங்கு இழைக்கமாட்டேன். தவறாக என்னை எடை போடவேண்டாம். பிரிட்டீஷ் ஆட்சியை சாபக்கேடு என்று சொன்னாலும், ஆங்கிலேயர்களை மற்றவர்களை விட நீசர்களாக, நான் கருதவில்லை. எனக்கு பல ஆங்கிலேய நண்பர்கள் உண்டு. சொல்லப்போனால், துணிச்சலான, திறந்த மனது உடைய ஆங்கிலேயர்களில் படைப்புகள் மூலமாகத்தான், பிரிட்டீஷ் ஆட்சியின் தீமைகளை அறிந்து கொண்டேன்... இந்த மடல் பயமுறுத்தும் கடிதம் அல்ல. ஒரு அமைதியான எதிர்ப்பு; அது என்னுடைய பவித்ரமான கடமை. எனக்கு ஆண்டவன் ஒரு அருமையான ஆங்கிலேய தூதரை (ரேனால்ட்ஸ்: 24 வயதில் காந்திஜியிடம் வந்தவர்; பிறகு அவரை பற்றி.) அனுப்பியிருக்கிறார். அவருக்கு இந்தியாவின் தார்மீக வேட்கை, அஹிம்சை எல்லாம் புரியும். அவர் மூலமாக இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
என்றும் உமது நண்பன்,
எம்.கே.காந்தி.உசாத்துணை & இணைப்பு: க்ளிக்கவும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tthamizth Tthenee Fri, Mar 2, 2012 at 1:29 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கவிதைக் குயில் சரோஜினி நாயுடு என் சிறு வயதிலேயே  
என் மனதில் பதிந்த  ஒரு நற்சித்திரம்
அது ஏனோ தெரியவில்லை  படிக்கும் காலத்தே  இவர்கள் என் மனதில் ஒரு இடம் பிடித்துவிட்டார்கள்

வாழ்க  கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]