Saturday, April 6, 2013

நோபெல் திருவிழா ~1




நோபெல் திருவிழா ~1
18 messages






நோபெல் திருவிழா ~1
இன்னம்பூரான்
08 10 2012
Inline image 2


2012 வருட நோபெல் பரிசு திருவிழா இன்று தொடங்கியது. இனி சில நாட்களுக்கு, நாள்தோறும் களை கட்டும். வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இவ்வருட பரிசுகளிலிருந்து ஆரம்பித்து, நோபெல் மஹாத்மியத்தை, சுருக்கமாக, கூறுவதாக உத்தேசம். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்கு விஷயம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று ஒரு அசரீரி கூறுகிறது. வாசகரோ ரக்ஷது.

இவ்வருட மருத்துவ/உடலியல்(Physiology or Medicine) பரிசு இருவருக்கு:  டாக்டர்  ஸர் ஜான் பி.கார்டன் (கேம்ப்ரிட்ஜ்: இங்கிலாந்து) & டாக்டர் ஷின்யா யாமானகா (க்யோட்டோ: ஜப்பான் & க்ளாட்ஸ்டன் நிறுவனம், சான் ஃப்ரான்சிஸ்கோ)  மூன்றாவது பங்கு கொடுக்கப்படவில்லை. முன்னோடிகளான ஜேமி தாம்சனையும், ரூடி ஜேய்னிஸ்சையும் ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வரும் முன் காப்போன் சிக்கனமாக இருக்கலாம். காலம் கெட்டுக்கிடக்கிறது அல்லவா! இந்த பரிசுகளிலேயே ஐந்தில் ஒரு பங்கு குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். வட்டி வருமானம் மிகவும் குறைந்து விட்டதாம். பரவாயில்லை. அப்படி குறைந்தாலும், பரிசின் மதிப்பு $ 1.2 மிலியன். 

ஸர் ஜான் தான் செயற்கையாக உயிரூட்டும் வித்தையின் தந்தை. முதல் படைப்பு ஒரு தவளை. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு, (1962: டாக்டர். யாமனாகா பிறந்த வருடம்) இப்போது பரிசு. அவர் இன்றைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

ஸர் ஜானின் தவளை வந்த விதம் விந்தை. அவர் போட்டது ‘தூபம்’. தாந்தோன்றியாக வளர்ந்தது, தவளை, சுருக்கமாக சொன்னால். அது எப்படி நேர்ந்தது என்பது புரிய 44 ஆண்டுகள் பிடித்தன. 2006ல், டாக்டர் யாமானகா எலிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு, அந்த தவளை வளர்ந்த விதத்தின் சூக்ஷ்மத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அந்த நான்கு மரபணு கண்ட்ரோல் புரதங்கள் (Myc, Oct4, Sox2 and Klf4.). அவை வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றும் பணியை செய்தன. இது ஒரு விஞ்ஞான புரட்சி. 

ஒரு வேடிக்கையான கொசுறு தகவல்: ஸர் ஜானின் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் அவருக்கு சுட்டுப்போட்டாலும் விஞ்ஞானம் வராது என்று கொளுத்திப் போட்டார்! அந்த ஜான் சிறுவனும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ஆழ்ந்து விட்டான். இருந்தாலும், வண்ணத்தி பூச்சிகளின் வண்ண அழகில் மனதை பறி கொடுத்து,1956ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புழு, பூச்சி ஆராய்ச்சியில் புகுந்தார். விஞ்ஞானத்தின் அறைகூவல் அவ்வாறு அவரை பிடித்திழுத்து வைத்துக்கொண்டது. 

டாக்டர் யாமனாகோ ஒரு எலும்பு டாக்டர். டாக்டர் வேலை தனக்கு ஒவ்வாது என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்ட அவர் தன் திறனை இந்தப்பக்கம் திருப்பினார். அமெரிக்கா வந்தார். சாதனை படைத்தார். அவரை ஊக்குவித்தது, டாக்டர் சுசுமு டோனெகவா என்ற மற்றொரு நோபலர் (1987). அவரை பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. நோபெல் பரிசு வந்த விதமே ஒரு காதை. இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

ஸர் ஜான் கர்டனுக்கும், டாக்டர் யாமனாகோ அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

(தொடரும்)
இன்னம்பூரான்



Enlarge This Image


coral shree Tue, Oct 9, 2012 at 5:45 AM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

கொடுமையிலும்கொடுமை நேற்றிலிருந்து இதுவரை தொடர்ந்து 18 மணிநேரம் மின்சாரம் இல்லை...  அதனால் தான் உங்கள் மடல் பார்க்க தாமதம் மன்னியுங்கள். இன்னும் 20 நிமிடத்தில் இதை வல்லமையில் வெளியிடுகிறேன். உடனடியாக அனைத்து குழுமங்களிலும் வெளியிடுங்கள். நாம் ஒரே நேரத்தில் வெளியிடலாம். வெகு சீக்கிரம் உங்களுடைய தனி கணக்கை வல்லமைக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறேன். வேறு ஏதும் ஐடியா இருந்தாலும் சொல்லுங்கள்.

அன்புடன்
பவளா


coral shree Tue, Oct 9, 2012 at 6:08 AM
To: Innamburan Innamburan
http://www.vallamai.com/paragraphs/27325/

அன்பின் ஐயா,
அருமையானதொரு ஆரம்பம் ஐயா.. நல்ல தொடர். வெகு சுவாரசியமான நடை.. பல மாற்றங்கள் தெரிகிறது. தொடருங்கள் ஐயா. வாசகர்களுக்கு நல்லதொரு விருந்து என்பதில் ஐயமில்லை.

அன்புடன்
பவளா
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 6:20 AM
To: 
நன்றி, பவளா. இன்னும் ஐந்த் மணி நேரத்தில் பெளதிக சாத்திரத்துக்கான பரிசு அறிவிக்கப்படும். 
[Quoted text hidden]

coral shree Tue, Oct 9, 2012 at 6:33 AM
To: Innamburan Innamburan
நல்லது சார். அனுப்புங்கள். உடனே போட்டு விடுகிறேன்.

Rishi Raveendran Tue, Oct 9, 2012 at 6:58 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com

>>>>>>>>>>>டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

<<<<<<<<<<<<<<
இது மிகப்பெரும் சாதனை.
இதனை இன்னும் விவரிக்க இயலுமா ? நடைமுறை உலகில் இது சாத்தியமானால் நீரிழிவுள்ளவர்கள் பாங்க்ரியாஸை மாற்றிக் கொள்ளலாம். விழித் திரையில் ஏற்படும் குறைபாட்டினை மாற்றிக்கொள்ளலாம். இப்படி அனைத்து உறுப்புக்களையுமே நாம் சரி செய்ய முடியுமே !

இந்த சாதனை  கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றது இப்பொழுது.  இன்னும் ஒரு 50 வருடங்களுக்குள்ளாகவே இது சாத்தியமாகலாம்

>>>>>>>>>>> இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். <<<<<<<<<

சர்.சி.வி.ராமனும் சந்திரசேகரும்.



--

 

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 7:01 AM
To: vallamai@googlegroups.com
இதனை இன்னும் விவரிக்க இயலுமா ?

~ ரிஷி! நான் கூட நினைத்தேன். நேரமின்மை, உடனடி மொழியாக்கத்தில் சிக்கல். இதோ! பெலதிக பரிசு பற்றி எழுதவேண்டும். மற்றவர் யாரேனும் செய்வதில் எனக்கு ஆக்ஷேபனை இல்லை.
நன்றி,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 12:01 PM

பகுதி-2
இன்னம்பூரான்
09 10 2012 ( 11 மணி 49 நிமிடம் 34 வினாடி 8756.78 துகள்)
Inline image 2

பெளதிக உலகினிலே வினாடித்துளிகளில் அரிய நிகழ்வுகள் நிறைவேறி விடுகின்றன. கண்மூடிக்கண் திறக்கும் வினாடியை தொல்காப்பியம் ஒரு மாத்திரை என்று குறிக்கும். அதற்குள் பல்லாயிரம் வினாடித்துளிகள்! ஆகையினால் தான் க்வாண்டம் ஃபிஸிக்ஸ் எனப்படும் நுண்துகள் பெளதிகம், பழங்கால பெளதிகத்தின் எல்லைகளை, அனுமார் சமுத்திரத்தைத் தாண்டியமாதிரி, ஒரே தாவலில், கடந்து விட்டது. இந்த பீடிகை எதற்கு எனில், இன்றைய விஞ்ஞானம், பெளதிகத்திக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட வினாடியிலேயே, அதை பிரசுரிக்க வழி வகுத்துள்ளதை மெச்சுவதற்குத்தான்.
அந்த பரிசு ஸெர்ஜெ ஹரோஷ் (Serge Haroche) என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானிக்கும், டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் (David J. Wineland) என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கும், தனித்தனி நுண்துகள் படைப்புகளை அளந்து, மாற்றியமைக்கக்கூடிய பரிசோதனை வழிமுறைகளை முன்னிறுத்தியதற்காக, இருவருக்கும் சமபங்கில் அளிக்கப்படுகிறது. (“for ground-breaking experimental methods that enable measuring and manipulation of individual quantum systems”.). அவற்றை விஞ்ஞானத்தின் அடித்தளத்தையே புரட்டியெடுக்கும், வரலாறு காணாத பரிசோதனை வழிமுறைகள் என்று நோபெல் கமிட்டி புகழாரம் சூட்டி வாழ்த்தி இருக்கிறது. அதில் ஆச்சரியம் யாதெனில், இருவரும், அவரவர் போக்கில், அவர் ஒரு புறம், இவர் ஒரு புறமாக, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார்கள். அவர்களின் புத்தம்புதிய வழிமுறை, அந்த நுண்துகள்களை சோதிக்க/கட்டுப்படுத்த/ எண்ண உதவுகிறது. அந்த நுண்துகள்கள் ஒரு வினாடிக்குள் எண்ணற்ற முறைகளில் மாறி வருபவை. அந்த சிக்கலை இவர்கள் இருவரும் கையாண்ட திறன், அபாரம். இருவரின் வழிமுறைகளில் ஒப்புமை மிக இருந்தாலும், அவற்றின் திசைகள் எதிர்துருவங்கள். டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் மின்சாரம் புகுத்தப்பட்ட நுண்துகள்களை, ஒளியின் உதவியால் (‘light or photons’) இற்செறித்து, கட்டுப்படுத்தி, அளந்தார். ஸெர்ஜெ ஹரோஷ், எதிர்மாறாக, இற்செறிக்கப்பட்ட துகள்களை (atoms/ions) ஒரு ‘கூண்டுக்கிளி’ போல் புகுத்தி அடைத்தபின் கட்டுப்படுத்தி, அளந்தார்.
அந்த நுண்துகள்களை அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்து தனித்துக் காண இயலாது. அவை தத்க்ஷணமே, தன்னுடைய அதிசய குணாதிசயங்களை, நம்ப முடியாத வகையில் (bizarre) இழந்து விடுகின்றன. அவை துரிதமாக இப்படி அழிவதற்கு முன்னால், ‘நீ பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம்’ என்ற புதிய பாதையில் சோதிக்கும் வழி மகத்தானது. இங்கு தான் நேற்றைய பெளதிகம் பத்தாம் பசலியாக போய்விட்டது. அதனுடைய விதிகள் இங்கு செல்லாது.
இருவருமே, 1980லிருந்து ஆராயப்படும் நுண்-பெளதிகத்தில் ஆழங்கால் பதித்து அல்லவா, இந்த புதிய பாதையை அமைத்துள்ளனர். அதனுடைய நல்வரவாக, புரட்சிகரமான ஸூப்பர்-கணினி ஒன்றை உருவாக்கமுடியும். அது நமது வாழ்வியலை தடபுடலாக, நாம் தட்டச்சு செய்யும் கணினி நம் வாழ்க்கையை கிட்டத்தட்ட பற்பலமுறைகளில் மாற்றி விட்டது. மாற்றி வருகிறது. அதை விட தடபுடலாக, இந்த ஸூப்பர்-கணினி நம்மை கட்டியாளும் என்பதில் ஐயமில்லை. அதா அன்று. இனி, நாம் மிக மிக துல்லியமான கடியாரங்களை படைக்கமுடியும். நேரத்தை அளப்பதே ஒரு புது விஞ்ஞான துறையாக அமைந்து, நமக்கு உதவலாம். அல்லது பாடாய் படுத்தாலும்.
‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே!
*



vallamai editor Tue, Oct 9, 2012 at 12:56 PM
To: Innamburan Innamburan
http://www.vallamai.com/paragraphs/27365/

Dear Sir,

Published this hot... hot news. Thank you for sharing.

pavala
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 1:23 PM
To: vallamai editor
Thanks. For the coming few days, expect the next one at about this time or a little late.
I
[Quoted text hidden]

Subashini Tremmel Tue, Oct 9, 2012 at 9:36 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: 
நல்லதொரு தொடர். மிக்க சந்தோஷம்.

சுபா

mayakunar Wed, Oct 10, 2012 at 2:12 AM
To: mintamil@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
Nice and interesting as usual.
Gopalan
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Oct 10, 2012 at 6:25 AM
To: 
கோபாலா! கோபாலா! நன்றி பல & ஸுபாஷிதத்திற்கும் நன்றி.




N. Kannan Wed, Oct 10, 2012 at 11:08 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நிச்சயம் நல்லதோர் தொடர்.

ஆசிய வேதிமவியற் கருத்தரங்கில் ஒரு முறை இரண்டு நோபல் விஞ்ஞானிகள் கலந்து
கொண்டனர். அவர்களோடு பேசி, படமெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

நா.கண்ணன்


அன்றொரு நாள்: ஏப்ரல் 7 யார் இந்த ‘ஹூ’ ‘ஹூ’?
4 messages

Innamburan Innamburan Sat, Apr 7, 2012 at 2:25 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஏப்ரல் 7
யார் இந்த ‘ஹூ’ ‘ஹூ’?
உடல் நலம் பேணுவது நலம். மனநலம் பயக்கும். உயிர் பலம் நீளும். தனி மனிதத் தற்காப்பு மட்டும் இயலாத காரியம். சமூகம் இணைந்து இயங்கினால் தான் பயனுண்டு. மருத்துவத்தில் வருமுன் காப்போன் ஆக இருக்கும் துறை: Social and Preventive Medicine. அத்துறை வல்லுனர்கள் குறைவு, வரும்படி குறைவு என்பதால். எனினும், தன்னார்வத்தொண்டு செய்பவர்களுக்கு, இங்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. இனி ஒரு விதி செய்திடுவோம் ~மின்தமிழ், தமிழ்வாசல் சமூகங்களில். திவாஜி தலைமையில், அவருக்கு அதிக வேலை கொடுக்காமல், கீதா சாம்பசிவம், ஸ்வர்ணலக்ஷ்மி, மற்றும் ஆர்வம் தெரிவிக்கும் அன்பர்களில் இருவரும், யானும் உள்ள குழு அமைத்து, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‘ என்ற உபசமூகத்தை நடத்துவோம். அதனுடைய அடிப்படை கோட்பாடுகள் மூன்று: 1. தனக்குத் தெரியாத விஷயத்தை அடித்து பேசலாகாது. 2. மருத்துவ விஞ்ஞானம் தான் ஆணிவேர். அதில் மாடர்ன் மெடிஸின், ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம் பாரபக்ஷம் கிடையாது. 3. ஆதாரங்களையும், அனுபவங்களையும் சரி பார்த்த பின் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். 
வழி நடை: இக்குழுவின் காரியதரிசி: ஸ்வர்ணலக்ஷ்மி. குழுவினர் தமக்குள் ஆராய்ந்து கொண்டதின் சாராம்சத்தை, அவர் வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ வெளியிடுவார். திசை மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள். அப்படி யாராவது புகுந்து விளையாடினால், குழு ராஜிநாமா செய்து விட்டு போய்விடும்.
நான் இப்படி ‘ஹூ‘ ‘ஹா‘ செய்வது சமீபத்தில் ஷஷ்டியப்தபூர்த்தி (மணி விழா) கொண்டாடிய WHO என்ற ஐ.நா.வின் உருப்படியாக இயங்கும் சர்வதேச அமைப்புக்கு, அதனுடைய 64 பிறந்த தினமாகிய ஏப்ரல் 7 தேதியை ‘சுகாதார விழா‘ வாக கொண்டாடி, மகிழ்ந்து, நன்றி தெரிவிக்க.
அதனுடைய சாதனைகளில் சில:
அந்த அமைப்பின் முகவுரையே ஒரு மனித வாழ்வியல் நிர்ணயத்துக்கு முரசொலி; 1980ல்  முதன்முறையாக,உலகெங்கும், ஒரு நோயை (வைசூரி) முற்றிலும் தடை செய்வதில் வெற்றி கண்டது; ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் 2 வியாதியுடன் போராடுவதில் கணிசமான முன்னேற்றம்; உலகெங்கும் துரிதமாக பரவிய சுவாச வியாதிகளுக்கு, சுறுசுறுப்பான நிவாரணம்; தொடக்கத்திலிருந்து, பரவலான சமுதாயங்களில் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள், கண்காணிப்புகள்; அவற்றின் மூலமாகிய 1907ல் பாரிசில் துவங்கிய சர்வதேச சுகாதார மையம், 1922ல் ஜெனீவாவில் துவங்கிய உலகளாவிய ஆரோக்கிய மையம், 1926ல் சிங்கப்பூரில் தொடக்கப்பட்ட தகவல் மையம். மேலும் பல சாதனைகள். தவிர, வருடாவருடம், தேர்ந்தெடுக்கப்பட்டப்பிரிவில், சிறப்பு சேவைகள்.
2012 வருட சிறப்பு பிரகடனம்: “ஆரோக்கியம் தீர்க்காயுசு.” சின்ன சின்ன ஆசை:
  1. அவ்வப்பொழுது, குறைந்தது 8-10 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று தன் உடல் நிலையை பரிசோதித்துக்கொள்வது;
  2. தட்டு, தடங்கல் இல்லாமல் தேகப்பயிற்சி செய்வது. காசு, பணம் செலவு செய்யாமல், கையை, காலை ஆட்டி, உடலை கெட்டியாக வைத்துக்கொள்வது எளிது.
  3. சுத்திகரித்த நீர் பருகும் வழக்கம் தொற்றிக்கொள்ள வேண்டும்.
  4. பால் சாப்பிடு; பழம் சாப்பிடு, டாக்டர் சாம்பசிவம் அவர்கள் 60 வருடங்கள் முன்னால் திருச்சி கண்காட்சிகளில், பிரசாரம் செய்தது படி.
  5. பச்சை கறிகாய்களும் சாப்பிடு. 
என்னுடைய தகுதியென்று ஒன்றுமில்லை. எனக்கு ஆதாரம் உள்ள ஆரோக்கிய செய்தி மையங்களிடமிருந்து ஆய்வின் அடிப்படையில் அறிவுரைகள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை பகிர்ந்து கொள்ள விருப்பம். ஏதோ கர்மவினையாக, வாழ்நாள் முழுதும் தீவிர வியாதிகளுடன், என் சுற்றத்தில், அதி தீவிர சண்டை போட்ட அனுபவமும் உண்டு. நான் ‘நம் ஆரோக்கிய மையக்குழு‘ வின் உறுப்பினர்களை, அவர்களின் அனுமதி கோராமல் வெளியிட்டது ,அவர்கள் மீது யான் வைத்திருக்கும் மரியாதையினால். இந்த இழையை அவர்களுக்கும் தனி மடலாக அனுப்பியிருக்கிறேன்.
யாவரும் நலமுடன் நீடூழி வாழ்க.
இன்னம்பூரான்
07 04 2012
Inline image 1
உசாத்துணை:   

Geetha Sambasivam Sat, Apr 7, 2012 at 2:35 PM
To: Innamburan Innamburan
Cc: mintamil , thamizhvaasal , Innamburan Innamburan , Swarna Lakshmi , Tirumurti Vasudevan
எனக்கும் கெளரவம் கொடுத்தமைக்கு நன்றி.  உங்களுக்கே தகுதி இல்லை எனில் எனக்கு என்ன தகுதி இருக்கு? என்றாலும் என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு மீண்டும் நன்றி.



Geetha Sambasivam Sat, Apr 7, 2012 at 2:35 PM
To: Innamburan Innamburan
Cc: mintamil , thamizhvaasal , Innamburan Innamburan , Swarna Lakshmi , Tirumurti Vasudevan
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்.
[Quoted text hidden]

s.bala subramani B+ve Sat, Apr 7, 2012 at 6:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
என்னுடிய  பிறந்த   அன்று  நீங்கள்  எனக்கு கொடுத்த அறிவுரை 
நன்றி 
இன்றைய கூட்டம் எனக்கு சில நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தது
2012/4/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>

நூறு வருஷங்களுக்கு முன்னால்- 3 : என் அத்தை





Innamburan S.Soundararajan Sat, Apr 6, 2013 at 10:35 AM


7/21/2009 5:29 PM
நூறு வருஷங்களுக்கு முன்னால்- 3
என் அத்தை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRJvbZd5-Kwuqt0lOjvLHysO5JDSpu66iRIm-UdSNQI4WzPqmdQTQywl3z-FayXUg_M0DWyHujF7-klGhddii_FWgTPOSxZnQdAT3VgfG411YZDBZUfV8Ko1R5Mt54HZAWZCQVHt5cVpk/s1600/Grand+Tales.jpg

பின்னோக்கி பயணிக்கும்போது, வருடங்களை துல்லியமாக நிறுவவேண்டுமா, என்ன? நினைவலைகள் கடந்த/நிகழ்/வருங்காலத்துக்கு அப்பாற்பட்டது. அதன் காலத்தின் கண்ணாடிக்கு உயிரோட்டம் உண்டு. அது அலை பாய்ந்து இங்குமிங்குமாக, இப்போதும் அப்போதுமாக, அப்படியும் இப்பிடியுமாகத் தான் திரியும். நாம் என்னவோ வரலாற்று திறனாய்வில் இறங்கவில்லை. மனம் போனபடி போக விட்டு விடுங்கள். உங்களுக்கு புண்ணியம் உண்டு.

ஒரு கீர்த்திமான், சென்னையில் இருந்தார். பிரபலமான வக்கீல்; நீதியரசர். வள்ளல். இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு. பல மொழிகள் அவருக்கு சரளம். தமிழின் மீது காதல் என்றே சொல்லலாம். எக்காலமும், அவரை சுற்றி ஒரு குழாம், ஏன், குழாங்களே இருக்கும். கட்சிக்காரர்கள், சக வக்கீல்கள், புலவர்கள், பண்டிதர்கள், வேதம் ஓதுபவர்கள், நாலாயிர பிரபந்தங்களை, சாங்கோபாங்கமாக இசையுடன் பாடும் கோஷ்டி, சைவத்திருமுறைகளை ஓதுவார்கள் இத்யாதி. இத்தனைக்கும் நடுவில், அவரோடு நிழல் மாதிரி தொடர்ந்தவர், ஒரு தமிழ்ப்புலவர். இருவரின் இணைப்பிரியா உறவு விநோதமனாது என்று கூட சொல்லலாம். பொழுது விடிந்தால், இரவு படுக்கும் வரை வக்கீலுக்கு பல ஜோலிகள். புலவருக்கோ இலக்கியம் மற்றுமே குறி. சாப்பிடுவதும் ஒன்றாக. கோர்ட்டுக்கு போகும் போது, இரண்டாமவர் வழித்துணை; வெளியூர் பயணம் என்றால் கேட்கவேண்டாம். இருவரும் அயராமல் பேசிக்கொண்டே இருப்பார்கள், கம்பராமாயணத்திலிருந்து, கலம்பகம் வரை, சிலப்பதிகாரத்திலிருந்து சிலேடைகள் வரை; அகநானூற்றுலிருந்து அம்மானை வரை. வக்கீலுக்கு இந்த சம்பாஷனைகள் டானிக் மாதிரி.

    இப்பிடியிருக்கும் போது, ஒரு நாள், வக்கீலின் அத்தை போய்விட்டாள், மேலுலகத்திற்கு. மூதாட்டி வயதானவள்; பிராமண வீடுகளில், ‘கல்யாணச்சாவு’ என்பார்கள். அபரக்கிரியைகளெல்லாம், முறைப்படி, கொஞ்சம் தூக்கலாகவே, நடந்தன. வீடு பூரா, உற்றார், உறவினர்கள், சுற்றத்தார்கள் எல்லாரும், விதரணையாக பதிமூன்று நாட்களும் சாப்பிட்டார்கள். குழாங்கள் கூட ‘டேரா’ போட்டன. வைஷ்ணவாளா! சுபஸ்வீகாரத்தன்று பாசுரங்கள் ஒலித்தவண்ணம் இருந்தன. தற்காலம், ‘சுபம்’ என்று சுருக்கமாக சொல்லி, ‘சட்’ என்று முடித்துவிடுகிறார்கள். ஆஃபீஸுக்கு போகவேண்டும் அல்லவா! இந்த நிகழ்வில் ஒரு நெகிழ்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘the mourning period is over’. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமல்லவா! வக்கீலுக்கு என்னமோ உள்ளூர தாங்கொண்ணாத்துயரம். வளர்த்து ஆளாக்கியவள் அல்லவா! அவர் காட்டிக்கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு, ‘இது தாண்டா வாழ்க்கை’ என்ற சமாதானம். அவரைப் பார்க்கும்போதெல்லாம் ‘சூ’ கொட்டுவதுடன் சரி. நாலாயிர திவ்ய பிரபந்தங்களை கோஷ்டி தக்க இசையுடன் பாடிய பிறகு, கவிகள் தாங்கள் எழுதி வந்த வடமொழியில் எழுதி வந்திருந்த ச்ரமஸ்லோகங்களை வாசித்தார்கள். அலங்காரங்கள், தண்டி தோற்றார் போங்கள்; அப்பிடி மிகை, தொகை எல்லாம். கேட்க நன்றாக இருந்தன. பொருளும், கருத்தும் ஆழம். உணர்ச்சியென்னமோ ஆப்ஸெண்ட். இணைபிரியா நண்பர், இறுதியில் வந்து எளிய தமிழில் ‘என் அத்தை’ என்று ஒரு கவிதை பாடினார். பீடிகையெல்லாம் சரி. ஒரு சான்றோரின் வாக்கைப் பார்ப்போம். அக்டோபர் 1937ல் எழுதப்பட்டது.
என் அத்தை
“பித்தை1 தனைக்கோதிப்
                பின்னிப் பெருமணிப்பூ
           கொத்தை முடித்துக்
                குலவத்திலகம் இட்டு
          தந்தை மொழிபயிற்றித்
                தாலாட்டிச் சீராட்டி
          அத்தை தனைப்போல
                ஆதரிப்பார் ஆரேயோ!           1
          முத்தைப் பழித்தொளிரும்
                மூரல்2 முதிரை3வகை
          மத்தைக் கொடுகடைய
                வந்த நறுவெண்ணைய்
          சத்தைத் தரும் நெய்
                தயிர்பால் இவற்றுடனே
          அத்தை தனைப்போல்
                அமுதளிப்பார் ஆரேயோ!         2
          முத்தை மணியை
                முழுக்கனகச் சங்கிலியின்
          கொத்தை அணிந்து
                குழை அணிந்து பட்டுத்திப்
           புத்தைத்4 தடுக்கும்
                புதல்வன்இவன் என்றெண்ணி
           அத்தை தனைப்போல்
                அலங்கரிப்பார் ஆரையோ!         3
          
“ஆதரித்தாள், அமுதளித்தாள், அலங்கரித்தாள். எப்படிப்புத்திமதி கூறினாள் என்று பார்ப்போம்.”

இத்தைச் செய்யாதே
                இதனை இயம்பாதே
           சொத்தைப் பரிபாலி
                சோம்பித் திரியாதே
           வித்தை விரும்பென்று
                நாளும் விதம்விதமாய்
           அத்தை தனைப்போல்
                அறிவுறுப்பார் ஆரேயோ!          4
“ஆசீர்வதிக்கும்போது ஏற்படுகிற ஆத்திரம் தான் என்ன?”
           வித்தை தலைஎடுக்க
                வேண்டாதார் கண் முன்னே
           மெத்தைப் பெரு வீடு
                கட்டி விபவமுடன்
           சொத்தைப் பெருக்கிச்
                சுகமான வாழ்வைஎன
           அத்தை தனைப்போல
                ஆசிசொல்வார் ஆரேயோ!         5

           வித்தை அளித்து
                விபவம்மிக உண்டாக்கி
           தத்தை மொழியாள்
                தனிமணமும் செய்வித்து
“இந்த இடத்தில் ஆர்வம் துள்ளிக் குதித்துப் பொங்கி வருகிற அதிசயத்தைப் பார்க்கவேண்டும்.”

           எத்தைத் தருவ (து)
                எனஇன்றி, எல்லாமும்
           அத்தை தனைப்போல்
                அருள்செய்வார் ஆரேயோ!        6
“அடுத்த கவிதையில்...எதுகை மாறுகிறது. மாறுகிறதனால் உண்டான பயனும் தெரிய வரும்.”

           “என்னத்தை கண்டாய்
                இளம்பிள்ளை நீயறியாய்
           சொன்னத்தைக் கேளாய்!
“இந்த கோபமெல்லாம் எப்படி இளகி விடுகிறது, அடுத்து வரும்வார்த்தையில்!”
                துரையே” எனக்கொஞ்சிக்
           கன்னத்தை முத்தம் இட்டு
                கட்டி அணைத் (து) எனக்கு
           என்னத்தை போல
                இதம் சொல்வார் ஆரேயோ!       7
“இந்த கவி கடாக்ஷத்தினால் வந்தது. புலவருக்குச் சம்பந்தம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். இனி கடைசிக் கவியில், உற்றாரை எல்லாம் விலக்கி விட்டு இதயத்தில் தனியிடம் அத்தைக்கு அமைக்கிற அழகு தனியான அழகு.”
          
           “முத்தைப் பழிக்கும்
                முளைமுறுவல்க் காதலியும்
           பித்தைத் தரும்செல்வப்
                பிள்ளை களும் பின்னவனும்
           தந்தைக்(கு) இணையாகத்
                தங்கைகள் தாம் இருக்க,
அத்தை தனைப்போல்
     அரியவர்தாம் ஆரேயோ!”         8

----------
1.     தலைமுடி. 2. அன்னம். 3. பருப்பு. 4. புத்திரன் இல்லாதவர் போகும் நரகம். 5.பல். 6. மயக்கத்தை.
-----------
“இந்த பாடல்களைக் கேட்டால் யாருக்குத்தன் மனம் கலங்காது, கண் கலங்காது? அத்தையின் மனதில் தோன்றிய ஆசைகளையும், கிளர்ச்சிகளையும், மலையிலிருந்து விழும் அருவிபோல் எவ்வளவு அழகாகத் துள்ளி துள்ளி இறங்க செய்கிறார் புலவர். ஸ்ரீமான் ஐயங்காரின் இதயத்துக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து விடுகிறார். பாடல்களில் உள்ள எதுகைகள் எல்லாம் ‘அத்தை! அத்தை! என் அத்தை! என்று ஏங்குகின்றன. கதறுகின்றன. நம்முடைய இதயங்கள் போலவே தமிழ்ச்சொற்களும் அத்தையை நோக்கி செல்கின்றன. ஆயிரக்கணக்கான வருஷங்களாக பழுத்தது தமிழ் என்பதைச் சுவைத்தே உணர்ந்து விடுகிறோம்...என்ன எளிமை, என்ன இன்னிசை, என்ன ஆர்வம்! இம்மூன்றும் சேர்ந்தால் தானே கவி...”

“கிரியைகள் முடிவாகும் பதின்மூன்றாம் நாள் சாயங்காலம் வைதிகமுறைப்படி பிரபந்த பாடல்கள் பாடினார்கள். பிறகு அங்கு வந்த சம்ஸ்கிருத பண்டிதர்கள் தாம் பாடியிருந்த சரமசுலோகங்களை வாசித்தார்கள். அவை எல்லாம் முடிந்த பிறகு, பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார் சபைக்கு வந்து, தம் பாடி வந்த ‘என் அத்தை’ என்ற தமிழ் பாடல்களை பாடினார்.அவ்வளவு தான். எல்லோருக்கும், உட்காந்திருந்தவர்,நின்றவர், ஆண் பெண் எல்லோருக்குமே கண்ணிலிருந்து கண்ணீர் துளிக்க ஆரம்பித்துவிட்டது. அத்தையம்மாள் இறந்து போன அந்தத் தருணத்தில் கண்ணீர் வராத எங்களுக்குப் பதிமூன்றாம் நாள் கழிந்த பிறகு மனங் கலங்கிக் கண்ணீர் பெருகிவிட்டது.
அத்தை முறை கொண்டாடதவர்களே கண்ணீர் விட்டார்கள் என்றால், அத்தை கொண்டாடும் உரிமையுடைய எங்கள் பாடு இன்னதென்று சொல்லவேண்டியதில்லைதானே!”... பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியாருக்குத் தமிழ்ப் பாஷையே வந்து பாடும்படி தூண்டி உதவியும் புரிந்த்தது என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு எளிமை, அவ்வளவு பாவம், அவ்வளவு சொல் வாய்ப்பு.
  
ஸ்ரீமான் ஐயங்கார்: ஸ்ரீ. வி.வி. ஸ்ரீனிவாஸ ஐயங்கார்(1871-1954)
கவி:            ஸ்ரீ. பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார்  
சான்றோர்:       ஸ்ரீ. டி.கே.சி. சிதம்பரநாத முதலியார் (1881-1954)
ஆதாரம் & நன்றி: தீப.நடராஜன், காவ்யா சண்முகசுந்தரம்: (தொகுப்பு): ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் (2006): சென்னை: காவ்யா: ப. 304-310
பின் குறிப்பு: இந்த சிறு கவிதையை ஃபிரேம் போட்டு வைத்திருந்த வி.வி.எஸ், டி.கே.சி.க்கு வாசித்து, கண்ணீர் உகுத்தார். இந்த தொகுப்பை விட்டால், மின் - தமிழை விட்டால், இது வேறு எங்கும் கிடைப்பது அரிது.
(என் அத்தையும் வருவாள்)
இன்னம்பூரான் 
Geetha Sambasivam  
7/21/09
to minTamil
அற்புதமான பகிர்வு. நன்றி. அத்தை தொடர்ந்து வரக் காத்திருக்கேன்.
N. Kannan 
7/21/09
to minTamil
அற்புதமான பதிவு!

எனக்கு உண்மையில் அத்தை இல்லை. ஆனால், பூவணநாதர் கோயில்தான் அத்தைவீடு.
அத்திம்பேர் ஆதரவிற்கு சொல்ல வேண்டாம்;-) அத்தைமடி மெத்தையடி என்று
சௌந்தர்யநாயகி. கேட்பானேன்!!

வாழ்க அத்தைமார்கள் (நல்லவேளை, என் பெண்ணிற்கு நிறைய அத்தைகள் இருந்து
அன்பைப் பொழிகின்றனர்).

கண்ணன்

2009/7/21 Innamburan Innamburan <innamburan@googlemail.com>:
Innamburan Innamburan 
7/21/09
to minTamil
"...நேரத்துக்கு நேரம் பதமாகி, மெதுவாகி, மிருதுவாகி, உணர்ந்து உருகி,அன்று சொன்னதுதான் இன்றுவரை, என்றுமே நம்மைக் காக்கும் மந்திரம், தாங்கும் தென்பு, ந்ம் தஞ்சம் என்று தெரிகிறோம்."

         - லா. ச. ரா: 'பாற்கடல்'
இன்னம்பூரான்
2009/7/21 N. Kannan <navannakana@gmail.com>

சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRJvbZd5-Kwuqt0lOjvLHysO5JDSpu66iRIm-UdSNQI4WzPqmdQTQywl3z-FayXUg_M0DWyHujF7-klGhddii_FWgTPOSxZnQdAT3VgfG411YZDBZUfV8Ko1R5Mt54HZAWZCQVHt5cVpk/s1600/Grand+Tales.jpg

Friday, April 5, 2013

Friends,
Commenting made easier. You are welcome.
Innamburan

அபூர்வ சகோதர்கள்




அபூர்வ சகோதர்கள்
4 messages

Innamburan Innamburan Fri, Oct 26, 2012 at 2:10 PM

To: mintamil , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com

அபூர்வ சகோதர்கள்

நகமும் சதையும் போல இணை பிரியாத தோழர்கள், அவர்களிருவரும். லாரா சொல்கிற மாதிரி,
‘அவர்களின் அன்யோன்யம் மற்றவர்களுக்கு முழுதும் புரிய வாய்ப்பில்லை. இவனுக்கு அவன், அவனுக்கு இவன் என்று தான் இவர்களின் படைப்பின் சிறப்பு.’ ஜேன் டஃப்ஃபி சொல்கிறார்,
’இருவரும் சேக்காளிகள். இவனில்லாமல் அவன் வேலை ஆகாது. அவனில்லாமல் இவன் வேலை ஆகாது.’ மாத்யூ ஜோன்ஸ், ‘தியோ லியாமுடன் இணைந்ததே தெய்வச்செயல். லியாம் இன்று நடப்பதைக் கண்டு மிகவும் உவகை கொள்வான். எதையும் செம்மையாக செய்யவேண்டும் என்று எப்போதும் விரும்பும் அவனுக்கும், தியோவுக்கும், இந்த கெளரதை ஏற்புடையதே.’ என்று இருவரையும் புகழ்ந்து பேசினார்.

ஆம். லியாம் டஸ்கரும் தியோவும் அபூர்வ சகோதர்கள் தான். மார்ச் 1, 2011 ஒரு துக்க நாள். என்ன கொடுமையடா?  மறைந்திருந்து சுட்டுத்தள்ளுவது. நிழல் யுத்தம். பகைவன் யார் என்பது கூட குழப்பம். ஆஃப்கனிஸ்தானில், கண் முன் தோன்றாத ஒரு கயவாளியால், லான்ஸ் கார்ப்பொரல் லியான் டஸ்கர் சுட்டுக்கொல்லப்பட்டான். சில மணி நேரத்துக்குள், காக்காய் வலிப்புப் போன்ற இனம் தெரியாத கடுமையான வலியினால் துடித்து, துடித்து, தியோ இறந்து விட்டான்.

டஸ்கர்-தியோ டீம் இருவருடங்களாக ஆஃப்கனிஸ்தானில் ஒளித்து வைத்த வெடிகள்,வழியில் புதைத்து வைத்த வெடிகள், குண்டு தயாரிக்கும் இடங்கள் ஆகியவற்றை தேடி கண்டுபிடித்து ஒழிக்கும் அரும்பணியில் ஈடுபட்டிருந்தனர். தியோவின் அசாத்திய திறனால் 14 தடவை கணக்கற்ற படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதை விட பெரிய சாதனை அங்கு நிகழ்ந்ததில்லை. இன்று லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் தியோ கெளரவிக்கப்பட்டான்.  அமரனாகி விட்ட தியோவுக்கு விக்டோரியா க்ராஸ் என்ற மெடலுக்கு சமானம் எனப்படும் PDSA Dickin Medal வழங்கப்பட்டது. அவன் தரப்பில் பெற்றுக்கொண்டவள் க்ரேஸ் என்ற ராணுவ வீராங்கனையாகிய நாயும், அவளது இணை பிரியா தோழன் மாத்யூ ஜோன்ஸும். 1943 லிருந்து  வழங்கப்படும் இந்த மெடல் பெறும் 2010லிருந்து 2012 வரை யாருக்கும் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மையத்தின் தலைவரும், ராணுவத்துறை அதிகாரியும், இது தங்களுக்குத் தான் கெளரவம் என்று சொல்லிக்கொண்டனர்.

ஆம். தியோ ஸ்ப்ரிங்கர் ஸ்பேனியல் இனத்தை சார்ந்த ராணுவ வீரனாகிய நாய். இது வரை இந்த மெடல் பெற்றவர்கள்: 28 நாய்கள், 32 புறாக்கள், மூன்று குதிரைகள் & ஒரு பூனை. மனித நேயமிருக்கிறதோ இல்லையோ, மிருகங்களும், பறவைகளும் மனிதநேயர்கள்.  அவர்கள் எல்லாரையும் பற்றியும், மற்றும் பல விலங்கினங்களின் மேன்மையை பற்ரியும் எழுத ஆவல். பார்க்கலாம். 
இன்னம்பூரான்
25 10 2012
உசாத்துணை:Inline image 1


Geetha SambasivamFri, Oct 26, 2012 at 3:15 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
அறியத் தந்தமைக்கு நன்றி.

கி.காளைராசன் Sat, Oct 27, 2012 at 2:53 AM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.


2012/10/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
தியோ ஸ்ப்ரிங்கர் ஸ்பேனியல் இனத்தை சார்ந்த ராணுவ வீரனாகிய நாய். இது வரை இந்த மெடல் பெற்றவர்கள்: 28 நாய்கள், 32 புறாக்கள், மூன்று குதிரைகள் & ஒரு பூனை. மனித நேயமிருக்கிறதோ இல்லையோ, மிருகங்களும், பறவைகளும் மனிதநேயர்கள்.  அவர்கள் எல்லாரையும் பற்றியும், மற்றும் பல விலங்கினங்களின் மேன்மையை பற்ரியும் எழுத ஆவல்.
இந்தத் தியோவின் மோப்பஅறிவு அபாரமானது. ஆப்கானித்தானில் அமெரிக்கர் பலரைக் காப்பாற்றியது.

ஐயா, நான் இதுவரை புறாக்கள் பற்றி அதிகம் அறிந்திலேன்.  
தன் உயிரைப் பணயம் வைத்து மனித உயிர்களைக் காத்த உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
புறாக்களின் மேண்மை பற்றி எழுத வேண்டுகிறேன். 
தட்டச்சு சிரமம் என்றால் தங்களது பேச்சினைப் பதிவு செய்து வெளியிட்டாலும் கேட்டுப் பயனறுவேன்.
அன்பன்

கி.காளைராசன்


வேந்தன் அரசு Sat, Oct 27, 2012 at 5:17 AM

To: tamizhsiragugal@googlegroups.com
Cc: thamizhvaasal@googlegroups.com, mintamil , Innamburan Innamburan
பாவமா இருக்கு


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Thursday, April 4, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 5 லிபியானந்தம்




அன்றொரு நாள்: ஏப்ரல் 5 லிபியானந்தம்
4 messages

Innamburan Innamburan Fri, Apr 6, 2012 at 12:03 AM


அன்றொரு நாள்: ஏப்ரல் 5
லிபியானந்தம்
ஒலி, ஓசை, ஓவியம், அசை,இசை, சங்கேதம், சின்னம், படம், லிபி எனப்படும் எழுத்து எல்லாம் ஒரு மொழியின் வளர்ச்சியின் படி நிலைகள். ‘ஆம்பல்’ என்ற இதழில்,’... தமிழ்மொழியானது 2400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து வரியெழுத்து நிலையாகிய நான்காவது நிலையை அடைந்திருந்தது. இதனை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது...’ என்று படித்தேன். பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், தேவநாகிரி, பாலி என்ற சர்ச்சைகளில் புகாமல், எழுத்து என்ற சொல் ஏற்கனவே பழக்கத்தில் உள்ள பொருள் செறிந்த ஒலிகளை குறிக்கிறது என்றும், அவற்றிற்கு உரிய வரி வடிவத்தை இயக்குகிறது என்றும், அந்த வரி வடிவம் மேற்படி கூறப்பட்ட நான்காவது நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான முறைமை நாளாவட்டத்தில் இலக்கண நூல்களில் வகுக்கப்படுகிறது. தமிழ் இலக்கண நூல்களில் அந்த முறைமை, விதிகள், வழுவமைதி, அணி ஆகியவை அருமையாக பதிவாகியுள்ளன.
‘...கி.மு நான்காம் நூற்றாண்டளவில், வணிகத்தினதும், நிர்வாகத்தினதும், சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிரல்)...’ என்று இரண்டு நாட்களுக்கு முன் திருத்தப்பட்ட விக்கிபீடியா இதழ் கூறுகிறது. யானையின் பிளிரல் என்ன? குழவியின் மழலை ஒலிகளுக்குக்கூட எழுத்து இல்லை. 
எனக்கு இந்த ‘எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.’ என்ற கருத்துடன் உடன்பாடு இல்லை. எழுத்தும், எண்ணும் என்றோ தோன்றிவிட்டன, பரிவர்த்தனை வணிகம் ஆவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால். சான்றாக, 112 வருடங்களுக்கு முன் ஏப்ரல் 5, 1900 அன்று லீனியர் பி (Linear B) என்ற பட எழுத்தை (hieroglyphic) கிரேக்க நாட்டில் உள்ள ஒரு பகுதியில் (Knoss, Crete) தொல்லியல் நிபுணர்கள் களிமண் பலகைகளில் பதித்திருப்பதைக் கண்டு ஆய்வு செய்தனர். அந்த பட எழுத்து கிரேக்க எழுத்துக்களை விட பல நூற்றாண்டுகள் முந்தியது. (தற்கால நூற்றாண்டுக்கு 3500 வருடங்கள் முந்தியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த காலத்துக்கு மைசீனியன் கிரேக்கம் என்று பெயர். அதற்கும் முந்திய லீனியர் ஏ, மினோவன் மொழியை சார்ந்தது. 1961 ஆண்டில் விஸ்கன்ஸில் நிகழ்ந்த ஆய்வு மாநாட்டிலும், 2011 வரை நிகழ்ந்த ஆய்விலும், அந்த லீனியர் பி எண்களும், எழுத்துக்களும் படஎழுத்துடன், கருத்தெழுத்தையும் தெரிவிக்கன்றன என்றும், பொருட்களை பற்றிய எழுத்துக்களும், சொற்களும் உபயோகத்தில் இருந்தன என்று கூறப்படுகிறது.
ஒரு உபரி செய்தி: உங்களுக்கும் ‘லிபியானந்தம்’ ஏற்படவேண்டும் என்ற நினைக்க நான் யார்? உமக்கு அலுப்பு தட்டலாம். ஆனாலும், என் பிடிவாதத்தின் காரணம், ஸர் ஆர்தர் ஈவான்ஸ் அவர்களுக்கு நன்றி செலுத்த. அவர் தான் லீனியர் பீ நிபுணர். 1884லியே, உலகப்புகழ் வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் ம்யூசியத்தின் பொறுப்பு வகித்தவர். 1998ல் அங்கு சென்று, ஒரு நாள் கழித்தோம். அவருடைய மகத்தான பணியை கண்டு வியந்தோம். மறுபடியும், சில நாட்கள் முன்னால் அங்கு போனபோது, மின் தமிழர்களுக்கும், பேசாமடந்தை தமிழ்வாசகர்களுக்கும் போர் அடித்தாலும், இதை எழுதி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். இப்போதைக்கு, உங்களுக்குத் தற்காலிக விடுதலை.
இன்னம்பூரான்.
05 04 2012
Inline image 1

Sir Arthur Evans' Transcription of Linear A from Minoan Cup Interior
உசாத்துணை: 
http://ta.wikipedia.org/wiki/ழுத்து

s.bala subramani B+ve Fri, Apr 6, 2012 at 3:07 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


மிகவும்  அருமை 

 ஸர் ஆர்தர் ஈவான்ஸ்  பற்றி தனியாக எழுதுங்கள் 

உங்கள் வயதில் என்னால் பணி செய்ய முடியுமா என்று தெரியவில்லை 
நலமாக இருக்க என் வேண்டுதல்கள் 

தற்பொழுது  முக நூலில் தொடர்ந்து எழுதி வருகின்றேன் 
அதை தமிழ் மரபு கட்டளை தொகுத்து வைக்கலாம் 

ஒரிசா பாலு என்ற பெயரில் 






எனக்கு இந்த ‘எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.’ என்ற கருத்துடன் உடன்பாடு இல்லை. எழுத்தும், எண்ணும் என்றோ தோன்றிவிட்டன,

பரிவர்த்தனை வணிகம் ஆவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால். சான்றாக, 112 வருடங்களுக்கு முன் ஏப்ரல் 5, 1900 அன்று லீனியர் பி (Linear B) என்ற பட எழுத்தை (hieroglyphic) கிரேக்க நாட்டில் உள்ள ஒரு பகுதியில் (Knoss, Crete) தொல்லியல் நிபுணர்கள் களிமண் பலகைகளில் பதித்திருப்பதைக் கண்டு ஆய்வு செய்தனர். அந்த பட எழுத்து கிரேக்க எழுத்துக்களை விட பல நூற்றாண்டுகள் முந்தியது. (தற்கால நூற்றாண்டுக்கு 3500 வருடங்கள் முந்தியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த காலத்துக்கு மைசீனியன் கிரேக்கம் என்று பெயர். அதற்கும் முந்திய லீனியர் ஏ, மினோவன் மொழியை சார்ந்தது. 1961 ஆண்டில் விஸ்கன்ஸில் நிகழ்ந்த ஆய்வு மாநாட்டிலும், 2011 வரை நிகழ்ந்த ஆய்விலும், அந்த லீனியர் பி எண்களும், எழுத்துக்களும் படஎழுத்துடன், கருத்தெழுத்தையும் தெரிவிக்கன்றன என்றும், பொருட்களை பற்றிய எழுத்துக்களும், சொற்களும் உபயோகத்தில் இருந்தன என்று கூறப்படுகிறது.
ஒரு உபரி செய்தி: உங்களுக்கும் ‘லிபியானந்தம்’ ஏற்படவேண்டும் என்ற நினைக்க நான் யார்? உமக்கு அலுப்பு தட்டலாம். ஆனாலும், என் பிடிவாதத்தின் காரணம்,



ஸர் ஆர்தர் ஈவான்ஸ் அவர்களுக்கு நன்றி செலுத்த. அவர் தான் லீனியர் பீ நிபுணர். 1884லியே, உலகப்புகழ் வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் ம்யூசியத்தின் பொறுப்பு வகித்தவர். 1998ல் அங்கு சென்று, ஒரு நாள் கழித்தோம். அவருடைய மகத்தான பணியை கண்டு வியந்தோம். மறுபடியும், சில நாட்கள் முன்னால் அங்கு போனபோது, மின் தமிழர்களுக்கும், பேசாமடந்தை தமிழ்வாசகர்களுக்கும் போர் அடித்தாலும், இதை எழுதி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். இப்போதைக்கு, உங்களுக்குத் தற்காலிக விடுதலை.
இன்னம்பூரான்.
05 04 2012
Inline image 1

Sir Arthur Evans' Transcription of Linear A from Minoan Cup Interior
உசாத்துணை: 
http://ta.wikipedia.org/wiki/ழுத்து

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam Fri, Apr 6, 2012 at 4:10 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பல தெரியாத செய்திகளைத் தொடர்ந்து தருகிறீர்கள்.  இதற்குப் பின்னூட்டம் வரலைனால் படிக்கவில்லை என நினைக்கவேண்டாம். சில விஷயங்கள் முற்றிலும் புதியதாகையால் என்ன சொல்வது என்று புரியாமல் எதுவும் சொல்வதில்லை.  உங்கள் பணி சிறக்கவும், உடல் நலம் சீராக இருக்கவும் பிரார்த்தனைகள்; வாழ்த்துகள்.

On Fri, Apr 6, 2012 at 4:33 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொரு நாள்: ஏப்ரல் 5
லிபியானந்தம்
. இப்போதைக்கு, உங்களுக்குத் தற்காலிக விடுதலை.
இன்னம்பூரான்.
05 04 2012
Inline image 1

Sir Arthur Evans' Transcription of Linear A from Minoan Cup Interior
உசாத்துணை: 
http://ta.wikipedia.org/wiki/ழுத்து
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Fri, Apr 6, 2012 at 10:11 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நானும் கீதாம்மா கட்சி.  அம்புட்டுத்தேன்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005 
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com
[Quoted text hidden]