Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27 ஒரு நூற்றாண்டு விழா

GmailInnamburan Innamburan

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27 ஒரு நூற்றாண்டு விழா
7 messages

Innamburan Innamburan Sun, Feb 26, 2012 at 6:27 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:1
ஒரு நூற்றாண்டு விழா:
இந்த தொடரில் அவ்வப்பொழுது ஜன்மதினங்கள் கொண்டாடப்படுகின்றன. ஒரு நூற்றாண்டு விழாவையே கொண்டாடும் அரிய தருணம் இன்று கிட்டியது. ‘குஸுமாக்ரஜ்’ என்ற புனைப்பெயர் செவிக்கு இனிமையாக தான் இருக்கிறது. பொருளிலும் எழில். விஷ்ணு வாமன் ஷிர்வத்கர் என்ற சாஹித்ய அகாதமி பரிசிலும் (1974), ஞானபீடம் பரிசிலும் (1988) பெற்ற மராத்தி கவிஞரின் புனைப்பெயர், அது. ஃபெப்ரவரி 27, 1912 அன்று பூனேயில், கஜானன் ரங்கநாத் ஷிர்வத்கர் ஆக பிறந்து, தன்னை தத்து எடுத்துக்கொண்டவரின் பெயரை தழுவி, விஷ்ணு வாமன் ஷிர்வத்கர் ஆனார். பள்ளிப்படிப்பும், பிற்கால வாழ்க்கையும், நாசிக் நகரில். சிலகாலம் திரையுலகில், பின்னர் இதழாளராக: ‘ஸ்வராஜ்யா’, ‘பிரபாத்’, ‘நவ்யுக்’,‘தனுர்தரி’.பழங்குடி சிறார்களின் கல்விக்கு உழைத்த ‘குஸுமாக்ரஜ்’, எழுத்தாளர்கள் சமுதாய முரண்களையும், சமத்துவம் குலைவதையும் எதிர்க்கவேண்டும் என்று கூறி, நடந்தும் காண்பித்தவர். வைக்கம் கோயிலில் ஹரிஜன் தொழுகை நடத்தியது போல, 1932ல் காலாராம் கோயிலில் நடத்திக்காண்பித்தவர். அவருடைய கவிதை தொகுப்புக்கள் எல்லாவற்றிற்கும் ~ஜீவன்லஹரி, விசாகா, கின்னரா இத்யாதி, விசிறிகள் பலர். பல நாடகங்கள் எழுதினார். ‘நட சம்ராட்’ க்குத் தான் சாஹித்ய அகாதமி பரிசில். அந்த நாடகத்தில் தலைமாந்தனாக நடிப்பது, இன்றும் கலையுலகில் கெளரதை. ‘ஜான்ஹவி’ போன்ற புதினங்கள், ‘கஹீ விருத்த, கஹீ தருண்’ போன்ற சிறுகதைகள், கட்டுரைகள் என அவரது படைப்பாற்றல் வியக்கத்தக்கது. நமது மஹாகவி பாரதியார் மாதிரி, இவரது கவிதைகளில் பரவசம், ஆவேசம், உத்வேகம், பிரவாஹம் எல்லாம் பொங்கி வழியும். வீர சாவர்க்கரின் கவிதைகளில் தாக்கத்தை இவரின் கவிதைகளில் காணலாம். ‘பாரதமாதாவின் கெஞ்சல்’ என்ற பொருள்பட அவர் எழுதிய கவிதை, மிக உருக்கமானது.
சமுதாயம், தேசாபிமானம், காதல், வரலாறு, ஆன்மீகம், இயற்கை போன்ற பற்பல துறைகளில், அவர் எழுதிய கவிதைகள், இன்றும் கொடி கட்டி பறக்கின்றன. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், அவருடைய கவிதைகளில், கற்பனை, பரவசம், சிந்தினை,நாட்டுப்பற்று, சமுதாய நோக்கு எல்லாம் மிளிருவதை காணலாம். அவரது பாடல்களை கரதலையாக ஒப்பிக்க, இன்றும் ரசிகர்கள் உளனர். அகில உலக மராத்திய மாநாட்டுக்கு 1989ல் தலைமை வகித்தார். அவருடைய பெயரில் ‘குஸுமாக்ரஜ்’ நினவு மன்றம் இன்றும் பணி புரிகிறது. ‘தாத்யா சாஹேப்’ என்று கனிவுடம் மஹாராஷ்டிர்களால் மதிக்கப்படும் ‘குஸுமாக்ரஜ்’ அவர்களின் ஜன்மதினம் (27 ஃபெப்ரவரி) மராத்தி பாஷா தினமாகக் கொண்டாடப்படுகிறது. வி.எஸ்.காண்டேகரின் புதினங்களின் அருமையான தமிழ் மொழிபெயர்ப்புகளை பால்யத்திலேயே படித்திருக்கிறேன். தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பல மொழிகளிலும், ‘குஸுமாக்ரஜ்’ போன்றோர்களின் இலக்கியங்கள் எல்லம் தமிழிலும் படிக்கக் கிடைக்க வேண்டும், பாரத மாதாவே.
‘குஸுமாக்ரஜ்’ அவர்களுக்கு  மின் தமிழர்களின் பணிவன்பை உணர்த்த அவருடைய மராத்தி கவிதை ‘சாகர்’ கீழே: கவிதையாகவோ/ உரைநடையிலோ மொழி பெயர்த்து தரப்போவது யார்?
*
सागर - कवी : कुसुमाग्रज
आवडतो मज अफ़ाट सागर, अथांग पाणी निळे
निळ्या जांभळ्या जळात केशर सायंकाळी मिळे

फेस फुलांचे सफेत शिंपित, वाटेवरती सडे
हजार लाटा नाचत येती, गात किनाऱ्याकडे

मऊ मऊ रेतीत रे कधी मी, खेळ खेळतो किती
दंगल दर्यावार करणाऱ्या वाऱ्याच्या संगती

ऊन सावळी विणते जेंव्हा क्षितिजावर गलबते
देश दूरचे बघावयाला जावेसे वाटते

तुफान केव्हा भांडत येतो, सागरही गरजतो,
त्या वेळी मी चतुर पणाने दूर जरा राहतो.

खडका वरुनी कधी पाहतो, मावळणारा रवी
धागा धागा ला फुटते तेव्हा, सोनेरी पालवी

प्रकाशदाता जातो जेव्हा जाला खालच्या घरी
नकळत माझे हात जुळोनी येती छातीवरी.

दूर टेकडी वारी पेटती निळे , तांबडे दिवे
सांगतात ते मजला आता घरी जायला हवे 
*
இன்னம்பூரான்
27 02 2012
பி.கு: மின் தமிழர்களிடம் ஒரு சர்வே. தயை செய்து கருத்துக்கூறி, உதவவும். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக, நாள் தவறாமல், இந்த தொடர், உங்கள் ஆதரவினால், வருகிறது. வாசகர்கள், மேலும் தகவல்களை/கருத்துக்களை/ யூட்யூப்களை அளித்து, தொடரை மேன்மை படுத்துகின்றனர். நுணுக்கமான வினா எழுப்புகிறார்கள். ஆனால், பண்டாரவாடை வெற்றிலை போல் அன்றாட இழை ஃப்ரெஷாக அமைக்க முயல்வதில், தொடரை கெட்டிப்பதும், விடை தருவதும் தட்டிப்போகின்றன. தவிர, எந்த ஒரு இழையிலும், 'இது அறிமுகம்' மட்டும் என்று சுருங்கச்சொல்வதால், ஒரு குறை. 
இனி, அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:1/அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:2 என்று தொடராக அமைத்து, குறை தீர்க்கும் முயற்சியில் இறங்கலாமா?, நேரமின்மையால்/ மற்ற வேலைகள் தடை படுவதால்/ தளர்ந்த உடல் நிலையினால், 'அடாது மழை பெய்தாலும் ஆட்டம் நடைபெறும்; தாமதமாயின், பொறுத்தாள்க' என்று, நிதானமாக பதிவு செய்யலாமா?
உதாரணத்திற்கு: நேற்றைய இழையில், சாவர்க்கர் அவர்களை பற்றிய ஜெர்மானியரின் ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி  தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்ய, இழையின் இரண்டாவது பகுதி வரவேண்டும். அது பல நாட்கள் பிடிக்கும். எனினும், தேவை என்று நினைக்கிறேன். And, let this thread be inter-active.
மாபெரும் பி.கு.வுக்கு மன்னிப்பு கோரும்,
இன்னம்பூரான்
26 02 2012

Inline image 1

Read: Reedh: an inspiring poem by Gulzar (Marathi Original by Kusumagraj)உசாத்துணை:

Geetha Sambasivam Mon, Feb 27, 2012 at 4:23 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
இவரை நான் அறிந்ததில்லை; அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

முதலில் நூற்றாண்டு விழானு தலைப்பைப் பார்த்ததும் என்னமோனு நினைச்சுட்டேன். தமிழ்நாட்டில் கொண்டாடறாங்களாமே!  அதானோனு ஒரு வியப்பான எண்ணம். 

மற்றபடி சாவர்க்கர் பதிவு எனக்கும் மன நிறைவைக் கொடுக்கவில்லை. சாவர்க்கரை நிறையப் படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். பார்க்கலாம்.  உங்கள் இரண்டாம் பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கேன். 

ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு என எடுத்துக்கொண்டு அதிலேயே அன்றொரு நாள் பெப்ரவரி 27:1 , 27:2 என ஒரே விஷயத்தையே தொடர எண்ணமா? அல்லது வெவ்வேறு செய்தித் தொகுப்புக்களா?

நேற்றே இந்தப் பதிவு வந்திருந்தது;  ஆனால் ஆஃப்லைன் வேலையில் பிசி என்பதால் படித்துப் பின்னூட்டமுடியவில்லை. என்றாலும் இங்கே இப்போத் தானே 27-ம் தேதி காலை பத்தரை மணி. 

On Sun, Feb 26, 2012 at 12:27 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:1
ஒரு நூற்றாண்டு விழா:

பி.கு: மின் தமிழர்களிடம் ஒரு சர்வே. தயை செய்து கருத்துக்கூறி, உதவவும். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக, நாள் தவறாமல், இந்த தொடர், உங்கள் ஆதரவினால், வருகிறது. வாசகர்கள், மேலும் தகவல்களை/கருத்துக்களை/ யூட்யூப்களை அளித்து, தொடரை மேன்மை படுத்துகின்றனர். நுணுக்கமான வினா எழுப்புகிறார்கள். ஆனால், பண்டாரவாடை வெற்றிலை போல் அன்றாட இழை ஃப்ரெஷாக அமைக்க முயல்வதில், தொடரை கெட்டிப்பதும், விடை தருவதும் தட்டிப்போகின்றன. தவிர, எந்த ஒரு இழையிலும், 'இது அறிமுகம்' மட்டும் என்று சுருங்கச்சொல்வதால், ஒரு குறை. 
இனி, அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:1/அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:2 என்று தொடராக அமைத்து, குறை தீர்க்கும் முயற்சியில் இறங்கலாமா?, நேரமின்மையால்/ மற்ற வேலைகள் தடை படுவதால்/ தளர்ந்த உடல் நிலையினால், 'அடாது மழை பெய்தாலும் ஆட்டம் நடைபெறும்; தாமதமாயின், பொறுத்தாள்க' என்று, நிதானமாக பதிவு செய்யலாமா?
உதாரணத்திற்கு: நேற்றைய இழையில், சாவர்க்கர் அவர்களை பற்றிய ஜெர்மானியரின் ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி  தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்ய, இழையின் இரண்டாவது பகுதி வரவேண்டும். அது பல நாட்கள் பிடிக்கும். எனினும், தேவை என்று நினைக்கிறேன். And, let this thread be inter-active.
மாபெரும் பி.கு.வுக்கு மன்னிப்பு கோரும்,
இன்னம்பூரான்
26 02 2012
Innamburan Innamburan Mon, Feb 27, 2012 at 5:15 PM
To: Geetha Sambasivam
Bcc: innamburan88

2012/2/27 Geetha Sambasivam
இவரை நான் அறிந்ததில்லை; அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

~மஹா கவி பாரதி மாதிரி வைத்துக்கொள்ளலாம்; மிகையல்ல. குல்ஸார் இவருடைய கவிதையை வாசித்ததை கேட்டீர்களோ? யாராவது 'சாகர்' கவிதையை மொழிபெயர்ப்பார்களோ என்று நப்பாசை.

முதலில் நூற்றாண்டு விழானு தலைப்பைப் பார்த்ததும் என்னமோனு நினைச்சுட்டேன். தமிழ்நாட்டில் கொண்டாடறாங்களாமே!  அதானோனு ஒரு வியப்பான எண்ணம். 
~  நான் வேறு தலைப்பு யோசித்தேன், அதே காரணத்தால். கட்டுரை கிடைத்தாலும், தலைப்பு!

மற்றபடி சாவர்க்கர் பதிவு எனக்கும் மன நிறைவைக் கொடுக்கவில்லை. சாவர்க்கரை நிறையப் படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். பார்க்கலாம்.  உங்கள் இரண்டாம் பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கேன். 
~ வாஸ்தவம் தான். ஒவ்வொரு நாளும் படிக்க, படிக்க, விட்டுப்போனதை பற்றி எனக்கு கவலை. நான் அன்றாடம் தான் எழுதுகிறேன். உதாரணமாக, இன்றைய இடுகை இப்போது தான் திகைந்தது. மேலும், வழக்கமான தளங்கள், நூல்களை படித்து, பிறந்தார், வளர்ந்தார், இறந்தார் என்று சம்பிரதாயமாக எழுதுவதில் நாட்டமில்லை. கண்ணில் காணாத செய்திகளை தேடி பிடிக்கிறேன், அதுவும் தமிழ் நூல்கள் கிடைக்காத ஊரில். அந்த வகையில் இரண்டாம் பகுதி வராவிடின், அது சாவர்க்கருக்கு இழைக்கும் அநீதி. கூடிய சீக்கிரம் செய்வோம். அதனால் தான், அடுத்த பாயிண்ட்.

ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு என எடுத்துக்கொண்டு அதிலேயே அன்றொரு நாள் பெப்ரவரி 27:1 , 27:2 என ஒரே விஷயத்தையே தொடர எண்ணமா? அல்லது வெவ்வேறு செய்தித் தொகுப்புக்களா?  
~  ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு என எடுத்துக்கொண்டு அதிலேயே அன்றொரு நாள் பெப்ரவரி 27:1 , 27:2 என ஒரே விஷயத்தையே தொடருவது சிலாக்கியம் என்றும், நிதானமாக, கட்டாயமாக, அன்றாட டெட்லைன் வைக்காமல் எழுதுவது உசிதம் என்று நினைத்தேன். வாசகர்களின் விருப்பத்திற்கு அதிகமாக எழுத ஆசையில்லை. அதற்கு தான் சர்வே. சில நாட்கள் இரண்டு தலைப்புகள் அமையலாம். இது ஒரு குழு இணைந்து செய்யும் அளவுக்கு ப்ராஜெக்ட் ஆகிவிடும் போல தோன்றுகிறது. குழு அமைவது எளிதில் நடக்கக்கூட காரியமல்ல என்று சிலர் சொல்கின்றனர். என் கடன் பணி செய்து கிடப்பதே; அப்பப்போ படிக்கிறதை விடாமல்.

நேற்றே இந்தப் பதிவு வந்திருந்தது;  ஆனால் ஆஃப்லைன் வேலையில் பிசி என்பதால் படித்துப் பின்னூட்டமுடியவில்லை. என்றாலும் இங்கே இப்போத் தானே 27-ம் தேதி காலை பத்தரை மணி. 
~அதனால் என்ன? நான் கூட அப்படித்தான் நினைத்தேன். 

On Sun, Feb 26, 2012 at 12:27 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:1
ஒரு நூற்றாண்டு விழா:

பி.கு: மின் தமிழர்களிடம் ஒரு சர்வே. தயை செய்து கருத்துக்கூறி, உதவவும். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக, நாள் தவறாமல், இந்த தொடர், உங்கள் ஆதரவினால், வருகிறது. வாசகர்கள், மேலும் தகவல்களை/கருத்துக்களை/ யூட்யூப்களை அளித்து, தொடரை மேன்மை படுத்துகின்றனர். நுணுக்கமான வினா எழுப்புகிறார்கள். ஆனால், பண்டாரவாடை வெற்றிலை போல் அன்றாட இழை ஃப்ரெஷாக அமைக்க முயல்வதில், தொடரை கெட்டிப்பதும், விடை தருவதும் தட்டிப்போகின்றன. தவிர, எந்த ஒரு இழையிலும், 'இது அறிமுகம்' மட்டும் என்று சுருங்கச்சொல்வதால், ஒரு குறை. 
இனி, அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:1/அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27:2 என்று தொடராக அமைத்து, குறை தீர்க்கும் முயற்சியில் இறங்கலாமா?, நேரமின்மையால்/ மற்ற வேலைகள் தடை படுவதால்/ தளர்ந்த உடல் நிலையினால், 'அடாது மழை பெய்தாலும் ஆட்டம் நடைபெறும்; தாமதமாயின், பொறுத்தாள்க' என்று, நிதானமாக பதிவு செய்யலாமா?
உதாரணத்திற்கு: நேற்றைய இழையில், சாவர்க்கர் அவர்களை பற்றிய ஜெர்மானியரின் ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி  தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்ய, இழையின் இரண்டாவது பகுதி வரவேண்டும். அது பல நாட்கள் பிடிக்கும். எனினும், தேவை என்று நினைக்கிறேன். And, let this thread be inter-active.
மாபெரும் பி.கு.வுக்கு மன்னிப்பு கோரும்,
இன்னம்பூரான்
26 02 2012
Innamburan Innamburan Mon, Feb 27, 2012 at 5:16 PM
To: mintamil , thamizhvaasal
[Quoted text hidden]

Nagarajan VadivelMon, Feb 27, 2012 at 5:27 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
//யாராவது 'சாகர்' கவிதையை மொழிபெயர்ப்பார்களோ என்று நப்பாசை//

http://www.youtube.com/watch?v=5yKu1lOvMeA&feature=related

Nagarajan.

2012/2/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan Mon, Feb 27, 2012 at 5:30 PM
To: mintamil@googlegroups.com
நன்றி அமோகமாக. இது வீர சாவர்க்கரின் சாகரம்.   இழைக்கு மேன்மை அளித்தீர்கள், ஐயா.
இனி சர்வே ப்ளீஸ்.
[Quoted text hidden]

Nagarajan Vadivel Mon, Feb 27, 2012 at 6:12 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இது வீர் சவார்க்கர் திரைப்படத்தில் இருந்து
சர்வேக்கான என் பதில்
1. அன்றொரு நாள் என்பது இழையாக தேதி குறிப்பிட்டே தனிததனி இழையாகத் தொடருங்கள்
2. பகுதி எண் குரிப்பிட்டுப் பின்னர் புதிய தகவலை இணைக்கவும்
3. இப்போதுள்ள மடலாடல் பின்னுட்டத்தை வரிசைப் படுத்துவதால் பின்னூட்டம் இடுபவர் இழை, தேதி பகுதி குரிப்பிட்டுப் பின்னூட்டம் இட்டால் பின்னர் தொகுப்பதற்கு எளீஆக இருக்கும்
எ.கா.

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 27 ஒரு நூற்றாண்டு விழா- பகுதி 1

பின்னூட்டம் சாகரம் பாடல் - வீர சவார்க்கர் திரைப்படத்தில் இருந்து

http://www.youtube.com/watch?v=HD7Yt3lNpvI

நாகராசன்
[Quoted text hidden]