Saturday, June 18, 2016

இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [2]

இன்னம்பூரான் பக்கம் [6] 
பெண்ணியம்: புதிய பார்வை [2]



பிரசுரம்: http://www.vallamai.com/?p=69673
Saturday, June 18, 2016, 19:01
இன்னம்பூரான்
ஜூன் 16, 2016

கொள்ளிவாய் பிசாசு, பேய், குட்டிச்சாத்தான் ஆகியவை கண்டு அஞ்சுபவர்கள் ஆண் வர்க்கத்தைக் கண்டு நடுங்கவேண்டியதில்லை. ஆண்வர்க்கம் பேய்,பிசாசுகளுக்கு விலக்கு. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆண்வர்க்கம் கிறங்குவதுடன் சரி.

சில வருடங்களுக்கு முன் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பு வரவே, எனக்கு செல்லமான அந்த சிறுமிக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று புரியவில்லை. தருணம் கிடைத்த போது, அவளையே கேட்டேன். ‘… உங்களிடம் கேட்க எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை. கொஞ்சம் கிலியாகக் கூட இருக்கிறது. அம்மா ஏதோ கொஞ்சம் சொன்னாள். சரியாக புரியவில்லை. இதையெல்லாம் விளக்கிக் கூறும் புத்தகம் ஒன்றும், ஷீலா அணிந்திருக்கும் நெளி (ஒரு அழகிய வகை மோதிரம்) போல ஒன்று வாங்கி வரவும்…’ என்றாள். [‘பெரியவளான‘ அவள் ஒரு சிறுமி.] 

அவளை, சந்தேகங்கள் மட்டுமல்ல. இனம் தெரியாத பயம் ஒன்றும் சூழ்ந்திருந்தது. அது சில பழைய உண்மை சம்பவங்களை முன் கொணர்ந்தது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு கர்நாடகமான குடும்பத்து சிறுமி ஒருவள் பூப்படைந்ததும், குடும்பமே ஒன்று திரண்டு, அந்த நிகழ்வை மறைத்து, உடனடியாக கிடைத்த மாப்பிள்ளைக்கு அவளை வரித்தார்கள்; அவனும் அற்பாயுளில் மறைந்தான். இது எந்த தெய்வத்துக்குப் பிரீதி என்று இன்று கூட எனக்கு புரியவில்லை. அது போகட்டும். அந்த காலகட்டத்து மற்றொரு செய்தியும் கிடைத்தது. பூப்படைந்தவுடன் தனிமை படுத்தப்பட்ட சிறுமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அச்சமும், பயமும், பீதியும் அவளை ஆட்கொண்டன. ஒரே உதறல். நோ ஆறுதல். பெற்றோர்களுக்கு பட்டு வாங்கவும், புட்டு அவிக்கவும் தான் நேரம் இருந்தது. பாவப்பட்ட அந்த ஜென்மம் துணைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியை தழுவியவாறு தூங்கினாளாம். இதற்கும் முந்திய இங்கிலாந்து கதை ஒன்று உளது. பூப்படைந்ததை, யாரும் விளக்காததால், ஒரு மர்மமான விகாரமாகக் கருதி ஒரு சிறுமி தன்னையே மாய்த்துக்கொண்டாள். அந்த சோகமான நிகழ்வு ஒரு நன்செயலுக்கு வித்திட்டது. ‘Befrienders International’ என்ற புனிதமான தன்னார்வ அமைப்பு உருவாகி, எத்தனையோ மன சஞ்சலங்களை நிவர்த்தி செய்து, பலரின் வாழ்க்கையை சீர்படுத்தியுள்ளது. அதன் மறுபதிப்பாகத் தான் ‘ஸ்நேஹா’ என்ற அமைப்பு சென்னையில் அற்புதமான சேவை செய்து வருகிறது. சரி, விஷயத்துக்குத் திரும்பி வருவோம்.

பெண்ணியத்தின் புதிய பார்வைக்கு, பெண்ணினம் செய்யக்கூடிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. இந்த தொடரில் ஆணாதிக்கம், வன்முறை, பெண்ணின் மேன்மை, இருபாலாரும், எதிரும் புதிருமாக நிற்காமல் இணைந்து வாழ்வதின் மகிமை, மேலும் பற்பல விஷயங்கள் பேசப்படும். பட்டியலிட்டு, கோர்வையாக எழுதினால் தான் தெளிவு கிடைக்கும். அதனால், எந்ததொரு பகுதியும் பெண்ணியத்தின் புதிய பார்வையின் முழுமையான புத்தகமாக அமையாது. அந்த எல்லையை புரிந்து கொண்டு வரக்கூடிய கருத்துக்கள் மிகவும் உதவும். அவை தாராளமாகவே மாற்றுக்கருத்துக்களாக இருக்கலாம், வசை பாடாமல்.

சிறார்கள் வளர்வதற்கும், சிறுமிகள் வளர்வதற்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அரும்பு மீசையும், கனத்த குரலும், அலை பாயும் கண்களும், முரட்டுத்தனமும் சிறார்கள் வளரும்போது தோன்றும் சின்னங்கள். அவை நல்வரவுகளே. அவனை அவை பாதித்து அலக்கழிப்பதில்லை. கொஞ்சம் விட்டுப்பிடித்தால் (திட்டமிட்டு) அவர்களை சமாளித்து விடலாம். உடலும், மனமும் நன்கு உரமிட்டு வளர உதவமுடியும். சிறுமிகளின் வனப்பு கூடுவதை கலையுணர்வுடன் பார்த்தால் அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. இறைவனின் வரம். இருபாலாருக்கும் பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது திண்ணம். அது இயற்கை. உடனுக்குடன் பாலியல் கனவு நனவாகுவது எந்த சமூகத்திலும் இயலாது என்பதால், கலக்கம், குழப்பம், சகபாடிகளிடமிருந்து தப்பும் தவறுமான செய்திகள் ஆகியவை இருபாலாரையும் பாடாய் படுத்தும். இது நாம் யாவரும் அனுபவத்தில் கண்டது தான். 

ஆனாலும் பூப்பெய்வது எப்போது நிகழும் என்பது தெரியாது என்பதாலும், சில பெற்றோர்கள் தக்கதொரு ஆலோசனை அளிப்பதைத் தள்ளிப்போடுவதாலும், அதனுடைய உடனடி பாதிப்பு பீதி அளிப்பதாக இருப்பதாலும், இந்த வாழ்வியல் நிகழ்வை பற்றி ஆண்கள் அறிந்து கொண்டதும், அதற்கு அனுசரித்து நடப்பதும் மிக குறைவு. சற்றே ஆங்கிலம் கலப்பதில் தவறு ஒன்றுமில்லை. செய்தி சேரவேண்டும். அவ்வளவு தான்.முன்னோடியாக ஒரு ஜோக். புருஷனும் பொஞ்சாதியும் (ஷிகாகோ சாதி நூல் நினைவுக்கு வருகிறது.)பலமுறை ஒத்திகை (பெண்ணரசியிடம் பேசவேண்டியதை) பார்த்த பின் அம்மாக்காரி மென்மையாக அணுகி, ‘இந்த பாலியல் விவகாரம்…’ என்று ஆரம்பித்தவுடன், பெண் சொன்னாளாம், ‘உனக்கு என்ன தெரிய வேண்டும். ஆண்டவனை – கூகிளாண்டவனை கேட்டு சொல்கிறேன்’ என்றாளாம் !

“…As knowledge has accumulated about human development during puberty and beyond, and about the development of the brain in particular, it has become clear that the notion of adolescence as a stage of sexual maturation is far too simplistic.

1. Many interlinked neuroendocrine changes and processes influence adolescent behaviour, as well as the way young adults think and make decisions.

2.A better understanding of these changes and their dynamic extension into early adult life offers not only an opportunity for a new approach to minimising risks to health and wellbeing, but also a moment to engage young people during years that have such far-reaching consequences for their future adult life, and even for future generations…”.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, June 17, 2016

Nine decades, eighty-eight stories The Hindu

Return to frontpage

FEATURES » METROPLUS

Published: June 17, 2016 16:00 IST | Updated: June 17, 2016 16:00 IST  CHENNAI, June 17, 2016

Nine decades, eighty-eight stories

  • Subashree Krishnaswamy and Dilip Kumar Photo: V. Ganesan.
    THE HINDU
    Subashree Krishnaswamy and Dilip Kumar Photo: V. Ganesan.
  • Cover of The Tamil Story
    Cover of The Tamil Story

The Tamil Story, edited by Dilip Kumar and translated by Subashree Krishnaswamy, celebrates regional authors of the short story form

Sometime in 1949, S.V. Vijayaraghavachari, more popularly known to his legion of readers as SVV, wrote about a couple that sits down to calculate the month’s expenditure on milk. They start off having a conversation, bicker, and, finally, the husband walks out in a huff, saying only an accountant would be able to help her. In just about four pages, you get a peek into the life of the man and his wife. The cow and buffalo milk they buy, the people who came visiting, the places they’ve travelled to, what they owe the milkman, their attitude. The story appears on page 81 of the 572-page The Tamil Story — Through the Times, Through the Tides, but you laugh long after you’ve read the tome.
There’s a vein of humour through the book, filled with lovely short stories that have been curated with an affection for the Tamil short story form.
The book follows an earlier attempt (featuring three decades) also edited by Dilip, published in 1999. Its reception made it clear that a book delving into the birth and growth of the form in Tamil would be more than welcome.
Edited by Dilip Kumar and translated by Subashree Krishnaswamy, the book is an attempt to encapsulate in these pages, the works of the pioneering stalwarts of the Tamil short story, and those who have kept it alive over the years. It spans nine decades (from 1913-2000), offering the reader a ringside view of what life used to be. Short stories are geographical indicators and historical pointers to the life and times they are set in, and these stories fulfil that task.
The best part is that the book also features authors who we must read today, simply because of their historical significance in the context of the short story. For instance, the very first story, Ammani Ammal’s ‘Expectation and the Event’ (Sankalpamum Sambavamum, 1913) about a tree that is chopped off. There’s hope, yearning, aspiration, and finally philosophical resignation. A tree also appears as the protagonist in Va Ve Su Iyer’s ‘Peepul Tree by the Tank’ (Kulanthangarai Arasamaram), written in 1915. How will a tree react when it sees a child, who’s played in its shade and walked past as a pretty young girl and bride, dead?
Seated in Dilip’s office near Ramakrishna Mutt, Mylapore, he and Subashree discuss the process that went into creating this treatise, over a period of six years. Their smiles reflect the inner joy of people who’ve read sublime prose, re-read it, and presented it to a whole new audience. “This is a very special book — educative, enjoyable, and we are the richer for it,” says Dilip. As for Subashree, the guiding principle was that the book must do justice to the authors and bring them to the spotlight.
“There was joy, but also a great deal of responsibility. I did not want to do anything that would let them down,” she says.
The stories also speak of a time when it was possible to discuss caste divisions and repression with conviction and present varied perspectives. Did they ever wonder how they will go down now?
“Not really. These are stories that have been written and accepted in that time and era. Today, due to the prevailing circumstances, it is difficult to socially place a character. So, we have ended up sanitising stories, and removed them of all nativity. But, it is important to read these stories that show how people sought emancipation, how they put their point across, how cosmopolitan we were,” says Dilip.
The book is scented with Tamil words, and even some colloquial phrases. “That’s because the language is rich and has varied forms of kinship terms; in Tamil, for uncle, you have a mama, chithappa, periyappa… you have to place them in context. Also, you can’t stick to the formal language structure in a story such as ‘Kannan’s Grand Mission’ (Aa Madhavaiah, Kannan Perunthoothu, 1925) about five Brahmin women walking by chatting after a dip in the Tamaraparani. It has to be informal and chatty to convey the jovial nature of the exchange,” says Subashree.
What amazed both Dilip and Subashree during the process of putting together the compilation was how the early writers had adopted and perfected the short story form. “We stopped with translating; nothing has been added or deleted,” she says.
Another aspect the two of them looked for while choosing the stories — and there was a wealth of them — was the universality of the idea. “They had to provide a new dimension to those receiving it, give them something novel to ponder about,” says Dilip.
The stories, a judicious mix of authors and thoughts, draw from everyday motifs to colour your imagination. There’s an interplay of various things — irony, wry wit, philosophy, acceptance, dignity… “Also, they are layered and nuanced,” says Subashree.
The book is a labour of love, and could not have found better people to handhold it. Dilip, a Gujarati, is self-taught and sought refuge in books as a young boy. Today, he’s an expert curator, culling out gems from a sea of hopefuls. Subashree has been editor and translator for long, and that helped the two of them quickly finish processes that might have taken time. “Each story took us about a week to 10 days. By the end of that, Subashree would have a near-final draft,” says Dilip. But for that, the book would have taken longer, he adds.
But what the book surely does is transport you to a Tamil Nadu of yore, and map its progress and concerns. It’s almost like travelling back to understand better where we stand today.
The book, published by Tranquebar Press, an imprint of Westland, is priced at Rs. 799.




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, June 16, 2016

Hearing loss

This is the Editor's choice article in the latest Issue of Lancet. In view of the widespread prevalence of hearing loss, I reproduce that article below,
as I believe in sharing verified information.
*

Hearing loss: an important global health concern

“Deafness separates people from people”, said the deaf-blind American author Helen Keller. Hearing loss can have profound effects not only on interpersonal communication, but also on health, independence, wellbeing, quality of life, and daily function. In 2012, WHO estimated that 360 million people (5·3% of the world's population) were living with disabling hearing loss, while around 15% of the world's adult population had some degree of hearing loss. Disabling hearing loss is unequally distributed across the world, with the greatest burden in the Asia-Pacific area, southern Asia, and sub-Saharan Africa. Despite the fact that hearing loss can be prevented and treated, many people with hearing loss in both resource-poor and high-income settings do not seek or receive hearing health care, and the current production of hearing aids meets less than 10% of the global need.
Recognising the high unmet need of hearing health care in the USA, on June 2, the American National Academies of Sciences, Engineering, and Medicine issued a new report—Hearing Health Care for Adults: Priorities for Improving Access and Affordability. Establishing hearing loss as an important public health and societal concern is one of the key messages of the report, whereby hearing loss should no longer be regarded as an individual problem, but must be addressed by actions at multiple levels engaging individuals and families, the health-care community, non-profit organisations, industries, and government. The report identifies the major barriers to widespread use of hearing health care, including the high costs of hearing health care, lack of insurance coverage, the stigma associated with hearing difficulties and wearing hearing aids, and limited awareness of hearing health and the range of available options. Notably, nearly all of the costs of hearing health care are covered by the individual in the USA. Navigating the hearing health-care system can be confusing and frustrating for people living with hearing loss, as they can be left with no clear guidance on what will best fit their financial, health, social, and hearing needs, as pointed out by Dan G Blazer, chair of the Committee on Accessible and Affordable Hearing Health Care for Adults.
Accordingly, 12 recommendations to guide and mobilise the efforts of all the relevant stakeholders in the hearing health-care system are highlighted in the report. For instance, all the relevant agencies of hearing health care need to collaborate to improve population-based information on hearing loss and hearing health care, to develop and promote measures to assess and improve quality of hearing health-care services, and to empower consumers and patients in their use of hearing health care. Furthermore, the report acknowledges that evidence on the effectiveness of interventions and outcome evaluation are strikingly absent, and proposes a series of research needs and priorities such as randomised controlled clinical trials evaluating the efficacy of hearing aids and well-designed longitudinal population-based studies that adequately control for confounders to determine the effect of hearing loss on individuals, families, and society.
Although initially developed to inform hearing health care in the context of the USA, the report has global implications in terms of prevention and treatment, particularly when addressing hearing loss as an important global health challenge. However, one extremely important area the report fails to address is the serious health concern of children living with hearing loss. Worldwide, 9% of people living with hearing loss are children younger than 15 years, and the prevalence of disabling hearing loss in children in some low-income and middle-income regions can be several times that of high-income regions. The effect of hearing loss on a developing child is quite different from the effects of hearing loss that occurs in adulthood, with substantial negative influences on children's development and educational achievement. However, hearing loss in children can be mitigated through public health measures such as immunisation, avoiding the use of ototoxic drugs, and early identification and intervention for both acute and chronic ear conditions.
Hearing loss has been ranked as the fifth leading cause of years lived with disability in the Global Burden of Disease Study 2013, higher than many other chronic diseases such as diabetes, dementia, and chronic obstructive pulmonary disease. However, hearing loss receives limited research funding and public awareness. Global multidisciplinary and collaborative efforts are urgently needed to address the health needs of the child and adult with hearing loss. Hearing loss cannot and must not continue to be a silent epidemic.
Thumbnail image of Figure. Opens large image
Science Photo Library


Foot Note. In UK, National Health Service lends hearing aids on long term basis - practically for life time and renders free servicing also.இன்னம்பூரான்

Sunday, June 12, 2016

பெண்ணியம்: புதிய பார்வை [1]இன்னம்பூரான் பக்கம் [6]

இன்னம்பூரான் பக்கம் [6]
 பெண்ணியம்: புதிய பார்வை [1]


Monday, June 13, 2016, 5:12:
பிரசுரம்: http://www.vallamai.com/?p=69579

இன்னம்பூரான்
ஜூன் 11, 2016

பல வருடங்களாக பெண்ணியத்தைப் பற்றி பலர் எழுதுவதைப் படித்து வருகிறேன். எனக்கும் அது பற்றி ஆழமான கருத்துக்கள் உண்டு. சமுதாயத்தின் பல படிநிலைகளில் வாழும் மனிதர்களுடன், குறிப்பாக பெண்பாலாருடன் என்னால் இயல்பாகப் பழக முடிவதால், பெண்பாலாரில் பலரின் கருத்துக்களம், எண்ணவோட்டம், நினைவலைகள், உள்ளக்கிடக்கை, செயல்பாடுகள், அணுகுமுறை, வாழ்க்கை வழங்கிய மர்மங்கள் ஆகியவற்றை, சட்டப்பூர்வமான ஆலோசகன், நண்பன், நேசன், காதலன், கணவன், உடன்பிறப்பு, வாரிசுகள் என்ற பலவித கோணங்களில் ஓரளவு புரிந்து கொள்ளும் வாய்ப்பு பல வருடங்களாக எனக்குக் கிட்டியிருந்ததாலும், தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பேன் என்று மகளிர் என்னிடம் நம்பிக்கை வைத்திருப்பதாலும், என்னுடைய ஆழமான கருத்துகள் அசைக்கப்பட்டுள்ளன, கிளரப்பட்டுள்ளன. முரண் தோன்றி மறைந்ததும் உண்டு. இனியும் மாறலாம், தீவிரமான சிந்தனைகள் பகிரப்பட்டால். என் பேச்சுரிமை தங்கு தடையில்லாமல் இயங்கும்.

பெண்ணியம் ஒரு மென்மையான சமுதாய சிந்தனை, நடைமுறை, எதிர்பார்ப்பு. மெல்ல, மெல்ல நடக்கும் புரட்சி. உலகெங்கும் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக நியாயம் கிடைக்கவில்லை. என் பாட்டி பள்ளி சென்றதில்லை. ஆனால், அவளுடைய தெளிவு வீட்டு ஆண்மகன்களில் சிலருக்கு சுத்தமாக இல்லை. என் அத்தையை படிக்கவைத்திருந்தால், அவர் கண்டிப்பான நிர்வாகத்தை வழி நடத்தியிருப்பார். ஏன்? தானே பக்கோடா பொட்டல காகிதத்தைப் பின்னர் படித்து வியக்கும் வகையில் விமர்சனம் செய்வார். பல மொழிகள் கற்றுக்கொண்டார். என் தங்கைகளின் படிப்பு படி தாண்டவில்லை. அடுத்த தலைமுறையில் முனைவர்களும், கலைஞர்களும், நிர்வாகிகளும் தலை எடுத்தனர்: என் பாட்டி படித்திருந்தால், நாங்கள் எங்கேயோ போயிருப்போம். சுற்றத்தில் இந்த முன்னேற்றம் குறைவு. ஆனால், காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் உண்டு. யாருமே குற்றம் காணவில்லை.

தலித்துகளில் கடை நிலை எனப்படும் ஆதி அருந்ததி குடும்பம் ஒன்று எங்களுடன் வாழ்கிறது. தலைவியை இந்திரா காந்திக்கு ஒப்பிட்டால், மிகையாகாது. சாக்கடையை துப்புறவு செய்யும் அவரும், அவரது பெருந்தன்மை கணவரும், தங்கள் குக்கிராமங்களிலிருந்து வறுமையான குடும்பங்களை வரவழைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, பற்பல உறவினர் முன்னேற ஏற்பாடு செய்தார்கள். [அவர்கள் இப்போது இல்லை]. பிராமணகுடும்பங்களில் இதைக் கண்டிருக்கிறேன், மிக சொற்பமாக. ஆனால், பெண்கள் பின் தள்ளப்படுவார்கள். அப்படி வந்த இரண்டாம் தலைமுறை வாரிசு, இன்றளவும் எங்களுடன் 40 வருடங்களாக தொடர்பில் இருக்கிறார். அத்தகைய குடும்பங்களில் கணவன்மார் குடிபோதையில் இருப்பார்கள். வீட்டுக்கு சல்லிக்காசு கொடுக்கமாட்டார்கள். மகனும், மகளும் படித்து முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தால் தலித் சான்றிதழ்களை கூட தர மறுத்தான், அவளுடைய கணவன். என்னிடம் செம்மையாக அடி வாங்கின பின் தான் தந்தான். ஒரு பிரபல தலித் உத்தியோகஸ்தர் உதவியுடன், ஒரு ஐயங்கார் வந்து சிறார்களுக்கு சான்றிதழ் வாங்க உதவினார். ஆனாலும் நம் தலைவிக்கு பெண்ணை படிக்க வைக்க ஆர்வமில்லை; கணவன் கிடைக்கமாட்டான் என்ற கவலை. என் மனைவி வஸந்தா அடம் பிடித்து, அந்தப் பெண்ணை படிக்க வைத்தாள். அந்தப் பெண் தடபுடலாக ஆங்கில இலக்கியத்தில் முது நிலை பட்டம் வாங்கியுள்ளாள். சுருங்கச்சொல்லின், பெண்மையை நசுக்க விரும்புவது ஆண் வர்க்கம்; உதவி அந்தந்த தலை முறை பெண் சமுதாயம்.

இன்று கூட, ஒரு மேல்மட்டத்தை சார்ந்த முதிய பெண்மணி ‘பெண்கள் இருக்கும் இடம் தெரியக்கூடாது; வேலைக்கு செல்வது கற்பை குலைக்கிறது என்றார். எனக்கு வேண்டப்பட்ட ஒரு செல்வந்தர், நாயக்கர் இனம். தன் பெண்ணின் திருமணத்துக்கு என்னை அழைக்க வந்தார், குடும்பத்துடன். எல்லாரிடம் அவருடைய நன்கு படித்த மணப்பெண் வேலைக்கு செல்வாள் என்று சொல்லி விடுங்கள் என்ற சத்தியப்பிரமாணம் வாங்கினேன். என்னிடம் சம்மதம் சொல்லி விட்டு, அங்கு திட்டமிட்டு, அதை கோட்டை விட்டார். இது எல்லாம் 2016ம் வருடம். இது நிற்க.

இவ்வாறு என்னை எழுதத் தூண்டியது சில மணி நேரம் முன்னால் வந்த ஒரு நாளிதழ் செய்தி. டாடா உலகளாவிய ஒரு மாபெரும் தனியார் மூலாதார நிறுவனம். அதன் பிரிவுகள் பல. ஒவ்வொன்றும் பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல், மற்றும் பற்பல. அந்த மூலாதார கம்பெனியில் 1.45 லட்சம் பெண்கள் ஊழியத்தில் இருந்தும் உயர்ந்த பதவிகள் அவர்களுக்குக் கிட்டுவது அரிது. பலர் பொறுப்பான பதவிகள் வகிக்கிறார்கள், ஒரு எல்லைக்கு உட்பட்டு. ஒரு ஆணுக்கு அந்த எல்லையில்லை. ஒரு நிறுவனத்திலாவது தலைமை பொறுப்பு பெண்ணினத்துக்குக் கொடுக்கப்படவில்லை.

இது மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல. தற்காலம் முதன்மை பொறுப்பு ஏற்று இருக்கும் திரு.சைரஸ் மிஸ்திரி அவர்கள் 2020ம் ஆண்டுக்குள் ஆயிரம் மேலாண்மை பொறுப்பு பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, இப்போது 300 பெண் அதிகாரிகளுக்குத் தீவிரபயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதன் நுட்பம் யாதெனில், எல்லாவிதமான துறைகளின் தலைவர்கள் பயிற்சி அளிப்பதால், இந்த பெண்ணரசிகள் எல்லாத் துறைகளிலும் துரிதமாக முன்னேற முடியும் என்பதே. திரு.சைரஸ் மிஸ்திரி அவர்களின் கனவு நனவு ஆகட்டும் என வாழ்த்துவோம்.

சீரும் சிறப்புமாகவும் முன்னோடியாகவும் திகழும் டாடா நிறுவனத்திலேயே இந்த கதி. மற்றவர்களை பற்றி கேட்கவேண்டாம். ஆண் சுவபாவத்தை பற்றி ஒரு உண்மை விளம்பல். எங்கள் தணிக்கைத்துறையில் அல்லி ராஜ்யம் என்று சொல்லலாம். பெண் அதிகாரிகள் தான் அதிகம். நான் 1955ல் சேர்ந்த போது பெண் அதிகாரிகள் பத்து பேர்கள் கூட இல்லை. ஆரம்பகாலத்தில் பெண் அதிகாரிகளிடம் வேலை செய்வதை நான் தட்டிக்கழிக்கப் பார்த்தேன். ஆனால், பெண் அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைத்தது. பெண்ணினத்தின் திறன் புரிந்தது. 25-30 வருடங்கள் முன்னால், ஆணாதிக்கம் கொடி கட்டி பறந்த ஒரு அலுவலகத்தில், ஒரு இக்கட்டான நிலையை சமாளிக்க ஒரு பெண்ணதிகாரிக்கு நான் கொடுத்தப் பொறுப்பு மிகுந்த பக்குவத்துடன் கையாளப்பட்டது. அதனால், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது பெரிய கதை. யாராவது கேட்டால், பார்த்துக்கொள்ளலாம்.
பல காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை நான் இணைத்து வழங்கியதின் காரணம்: 

பெண்ணியம் தலையெடுக்க சமுதாயம் திருந்த வேண்டும். மேலும் திடுக்கிடும் அட்டூழியங்களைப் பற்றி எழுத விருப்பம். பார்க்கலாம். வெறும் பேச்சு வீண்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com