Google+ Followers

Saturday, July 27, 2013

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:அன்றொரு நாள்: ஜூலை 27


அன்றொரு நாள்ஜூலை 27

     I. மஹாகவி பாரதியார் மடையின் கதவு. கரை புரண்டு கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடும் பெரு வெள்ளம், மடை திறந்த வினாடியே. பாவேந்தர் கோட்டைக் கதவு. படை வகுத்து விரைந்தோடி வரும் சொல்லின் அணிகள். நாமக்கல் கவிஞர் நகர் வாயில். நகரா ‘கத்தியின்றி, ரத்தமின்றி...’ என்று ஒலிக்கிறது.  கவிமணி சாளரமாயிறு. ஆசிய ஜோதி ஒளி விசுகிறது. சாக்யமுனியின் துறவு பற்றிய ஆங்கில ஆன்மீக கவிதை (Sir Edwin Arnold”s The Light of Asia:1879) ஒன்றை தமிழ்க்கவிதையாக்கமாக ஒரு சாளரம். ஒப்பில்லா உமர்காயாம் கவிதைகள் கொஞ்சும் தமிழிலொரு சாளரம். ‘மருமக்கள்வழி மான்மியம்’என்ற வரலாற்று சாளரமொண்று. ‘கதர் பிறந்த கதை’ ஒரு காந்தி ஜன்னல். ‘மலரும் மலையும்’ முன்னதாகவே திறக்கப்பட்ட (1938) திட்டி வாயில் ஜன்னல். பக்தியென்றொரு சாளரம், இலக்கியமென்றொரு ஜன்னலும், வரலாற்று கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள். 1922லேயெ தொடங்கி விட்ட ஆய்வுகளின் முதல் ஜன்னல்: 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரை. ஜன்னல்கள் எத்தனையடி பாப்பா! 
     சிரிக்க வைக்கவும் மறக்கவில்லை, கவிமணி அவர்கள், ஜன்னலின் இரண்டு கம்பிகளை லேசாக வளைத்து, நகர்த்தி விட்டு, அவரும் சிரிக்கிறார். 
‘... ஒரு நீதிமன்றம்... அதில் ஒரு குற்றவாளி... ஒரு வழக்கறிஞர்... நடுவில் நீதிபதி. அவர் குற்றவாளியை நோக்கிக் கேட்பார்... 'ஓடுகிற குதிரையின் உச்சியில் இருந்த கொம்பு ஒன்றா... இரண்டா?’ குற்றவாளி, 'குதிரைக்கு ஏது கொம்பு?’ என்பார். நீதிபதியோ, 'நான் கேட்டது குதிரைக்குக் கொம்பு ஒன்றா, இரண்டா?’ என்றே கேட்பார்...’
     ஆம். இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் ஜென்மதினம்: ஜூலை 27, 1876. விருதுகள் பல பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய கவிமணி அவர்களை செப்டம்பர் 26, 1959 அன்று இழந்தோம்.
வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு, யாராவது நெய்க்கு அலைவார்களா? உசாத்துணை இருப்பது  தமிழ் மரபு அறக்கட்டளையிலும், மின் தமிழிலும். எனவே, தன்னடக்கமாக, இத்துடன் நிறுத்தி, உசாத்துணைகளை சுட்டுகிறேன்.
II. பசங்களை ஆட, பாட, ஆடிப்பாட, பாடி ஆட, சொல்லி, அதை கண்டு, களித்து, வீட்டுக்கு வந்த மஹாஜனங்கள், ஆனந்த சாகரத்தில் முத்துக்குளிக்கவேண்டும் (அலுத்து போய் ஓட முயன்றால், நடக்காது ஓய்!) என்பது பெற்றோர்களின் அநியாய ஆசை. என்னுடைய அத்தான் ஜகதலபிரதாபனுக்கு, மதுரை புஷ்பவனம் போல் இனிய குரல் என்ற மாயையில், கறிகாய்க்காரி பொன்னம்மா வந்தாக்கூட, அவனை பாடச்சொல்லுவாள், அத்தை. ‘அம்பா! நீ இரங்கலாகாதா...’ என்று அவன் ஆலாபனை செய்ய ஆரம்பித்தால், பொன்னம்மா கூட ஒரு கட்டு கொத்தமல்லி கொசுறு கொடுத்துட்டு ஓடப்பார்ப்பாள்! அப்றம், அவரு ஒரு ஸ்லோகவாதி. ரகுவீர கத்யம், ‘கடபுட’ என்று பதினேழாம் வாய்ப்பாடு மாதிரி, தப்புத்தப்பாக, ஒப்பிக்கிறான். நிஜமாவே ஒரு லாங்கூலர் வந்து நிற்கிறார்!எதித்தசாரி கோடியாத்து பட்டு ஸ்வாமிகளே, ஹனுமத் விஜயம் என்று கேலி செய்கிறார்.நம்பளோடதெல்லாம் நாட்டுப்பாடல். தனித்தமிழ்! ‘பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய்? பனைமரமே!’ என்று ஆரம்பிக்கிறேன், ஒரு அருகம்புல் வளர்கிறது! என்ன தான் ‘மாயம்ம...’ என்று சுதா தரங்கிணியில் பாடினாலும், இந்த மழலையின்ப சுகம் வருமோ? தற்செயலாக, நண்பர் ஒருவரின் தனிமடலுக்கு, நேற்று யான் அளித்த பதில் இது:
[1. மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா
     வாங்கித் தந்த மாம்பழம்
மாம்பழம் இது காணக் காண
    வாயி னிக்கிற மாம்பழம்

மாம்பழ மிவை கிடைத்த படியால்
   மகிழ்வி னோடு வருகிறேன்
தீம்பழ மிதைச் சீவி வெட்டிச்
   சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்

தின்னுவோம் வா தின்னுவோம்
   சீவிச் சீவித் தின்னுவோம்
பொன்னு ருண்டை போல
   புதுமை யான மாம்பழம்.

-  சோமசுந்தரப்புலவர்  (1955)சிறுவர் செந்தமிழ்: ‘கடவுள்‘
--------------------
என் சம்பத்தி பேத்திக்கு சொல்லிக்கொடுத்ததில் ஒரு பகுதி:

இந்த மாம்பழம் இனிய ஜாதியாம்;
எந்தன் தந்தையார் எனக்கு தந்தது;
மேலிருக்கும் தோல் மிக கசக்குமே
மெல்லிய கத்தியால் சீவ வேண்டுமே.

உள்ளே பார் இதோ!
சக்கரை திசை உடனே வாயிலே
போட்டுக்கொள்ளலாம்.
-----------

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்]

குழந்தை இலக்கியத்தின் முன்னோடி எனலாம், ‘தங்கத்தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஈழத்து, நவாலி கிராமத்தில், மே மாதம், 25, 1878  அன்று ஜனித்த சோமசுந்தரப்புலவர் அவர்களை. அவர்களின் நினைவு தினம் இன்று: ஜூலை 27, 1953. அவரின் நினைவார்த்தமாக, சோமசுந்தரப்புலவர்  (1955)சிறுவர் செந்தமிழ் என்ற நூலை இணைக்கிறேன் (கூகிள் மறுத்து விட்டார்.). வயது வந்தவர்களும் படித்து மகிழலாம். பவள சங்கரிக்கு திருப்தி தானே!
இன்னம்பூரான்
27 07 2011

Geetha Sambasivam 
7/27/11
to mintamil
தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய செய்திக்கும், சோமசுந்தரப்புலவர் குறித்த செய்திக்கும் நன்றி.  சோமசுந்தரப் புலவர் குறித்து அறிந்திலேன்.  நன்றி.
தேசிக விநாயகம் பிள்ளை என்றாலே அவர் எழுதிய சைகிள் குறித்த பாடலே நினைவில் வரும். ஆரம்பப் பள்ளியில் படித்தது.
2011/7/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
anantha narayanan nagarajan 
7/28/11
to me
வந்தனம் சொல்லி,
'இந்த மாம்பழம் இனிக்கும் மாம்பழம்
எந்தன் தந்தையார் எனக்குத் தந்தது
மேலிருக்கும் தோல் கசக்குமாதலால்
மெல்லக் கத்தியால் சீவவேண்டுமே'
என்று படித்ததாக நினைவு. கவிஞர் அழ.வள்ளியப்பா என்றும் நினைவு. உறுதிப்படுத்தவேண்டும்
அன்புடன்,
அரவக்கோன்
****
சித்திரத்துக்கு நன்றி: http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jan/64e582fa-7fa1-4e45-b00a-762a1a9b98cb_S_secvpf.gif

காமராஜர்:அன்றொரு நாள்: ஜூலை 15, 1903
அன்றொரு நாள்: ஜூலை 15
சித்திரத்துக்கு நன்றி: 
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/s320x320/533231_375878392480562_1240511761_n.jpg
இன்னம்பூரான்
27 07 2013

Innamburan Innamburan Fri, Jul 15, 2011 at 1:35 AM


அன்றொரு நாள்: ஜூலை 15
தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
 - கண்ணதாசன்
     இன்று பெரும்தலைவர் காமராஜ் அவர்களின் அவதார தினம்: 1903: அவதாரம் தான். நண்பர்களில் அநேகருக்கு அவரை பற்றி என்னை விட அதிகம் தெரியும் என்பதால், எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன் சரி. ஒரு வருத்தம். தமிழ் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் பெரும்பான்மையானவை புகழுரை தொகுப்புக்களாகவும், ‘அரைத்த மா’ மரபில் ஊறியவையாக இருப்பதால், ஆக்கப்பூர்வமான மூலங்கள் கிடைப்பதில்லை. மற்றொரு பிரச்னை இணையதளம். பெரும்தலைவரை பற்றி பொறுப்புடனும், ஆய்வின் அடிப்படையில் எழுந்ததுமான கட்டுரைகள் கணிசமாகத் தென்படவில்லை. அரட்டைக்களங்களில் பல, அவரை பற்றி அரையும் குறையுமாக எழுதியுள்ளன. ஏன்? பாரதரத்ன குமாரசாமி காமராஜ் (15 07 1903 - அவர்களை பற்றி ஆய்வு தொடங்கும் போது தான், அநேக மடலாடற்குழுக்கள் அரட்டையுடன் நின்று விடுவதைக் கண்டு வருந்தினேன். இது நிற்க.
பாரதரத்ன குமாரசாமி காமராஜ் அவர்கள் விருதுநகரில் (விருதுப்பட்டி என்ற பெயர் பிறகு வந்தது. பழைய நாடோடி பாடல்களில் விருதுநகர் என்று தான் பெயர்: நமது தளத்தில் மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்.) ஒரு சில்லரை வணிகக்குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். அம்மை சிவகாமி நகைகளை விற்று தன் ‘ராசா’வை படிக்க வைத்தார். அவருக்கு படிப்பு ஏறவில்லை, நாம் செய்த பாக்யம். சிறு வயதிலேயே, டாக்டர்.வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸஃப் ( தமிழ் நாடு அவரை முற்றிலும் மறந்து விட்டது.) ஆகியோரால் ஈர்க்கப்பட்டு 16 வயதில் காங்கிரஸ்ஸில் இணைந்து தொண்டு பல செய்தார். திருமணம் செய்து கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரஹத்தில் கலந்து கொண்டார். நாளாவட்டத்தில் தேசியத்தலைவர் எஸ். சத்யமூர்த்தி அவர்களின் அத்யந்த சீடரானர், இந்த படிக்காத மேதை. சிவாஜி மஹராஜை போல, ஹைதர் அலி போல, படிக்காத மேதைகள் செவ்வனே அரசு நிர்வாகம் செய்ய முடியும் என்று செய்து காண்பித்தார். அவருடைய சாதனைகளை சொல்லி மாளாது. அது ஒரு பொன்மாரி காலம்.
எப்படி என்று கேளுங்கள்:
{1.இரு ஐ.சீ. எஸ். அதிகாரிகள் என்னிடம் சொன்னது: 
ஐயா கிராம மின்சார இணைப்பு கொடுப்பதில் ஆர்வம் மிகுந்தவர். ஒரு ஜில்லா கலக்டரிடமிருந்து சிபாரிசு வர தாமதம், நான்கு கிராமங்களை தேர்வு செய்யவேண்டும். முதல்வர் ஐயாவே அவற்றின் பட்டியலை முன்மொழிந்தார். விந்தை யாதெனில், தேவை அடிப்படை, அவசரம், மக்களின் நிலைமை, காங்கிரஸ் கட்சியின் நோக்கு என்று எப்படி பார்த்தாலும், இதை விட சிறந்த பட்டியல் தர யாராலும் இயலாது. என்னுடைய தாழ்மையான ஆடிட் கணிப்பு இதை உறுதி செய்தது.
 1. ராஜாஜி ஹால்: மூதறிஞர் ராஜாஜியின் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துடன் கூட்டமாக ஐயா. திரு. மு.க. முதல்வராக இருந்தார். ஐயா தனக்கு என்று ஒன்றும் கேட்கமாட்டார். பிரபலமாக இருந்த போலீஸ் கமிஷனர் ஷெனாய் அவர்கள், தான் ஒரு நாற்காலி கொண்டு வருவதாக சொன்னார். பதில்: அவர் பெரியவர். நான் உட்காரலாமா? நான் அருகில். அந்தக்காலம் பாதுகாப்பு வளையங்கள் கிடையா. ஷெனாய்: ஸெளந்தரராஜன்! நீ ஐயாவை விட்டு நகராதே.
 2. நான் அக்காலம் திருமலைப்பிள்ளை ரோடில் வசித்து வந்தேன். என் சிறிய மகன் இவர் வீட்டு போலீஸ்காரர் துப்பாக்கியை கண்டு அவரிடம் சொந்தம் கொண்டாடுவான். சில சமயம், ஐயா அவர்கள் ஜன்னலோரம் நிற்பார்கள். இரண்டு வார்த்தை பேசுவார்கள். ஒரே ஒரு நாள் உள்ளே அழைத்து, எனக்கு பணி ஒன்று இட்டார். அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செய்து கொடுத்தது என் பாக்கியம்.}
     அடிக்கடி சிறை வாசம் செய்த தலைவர், சிறைலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையும் ராஜிநாமா செய்து கட்சிப்பணியில் ஈடுபட்டார்.1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார், பிறகு நான்கு முறைகள்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். தான் கொண்டுவந்த காமராஜர் திட்டத்தை  (கே பிளான்) செயல் படுத்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிற்காலம், காங்கிரஸ் கட்சியின் ‘கிங் மேக்கர்’ என்று கருதப்பட்டார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
pastedGraphic.pdf
இன்னம்பூரான்
15 07 2011
உசாத்துணை:
P.Kandasamy: The Political Career of K.Kamaraj
(சில நூல்கள் உள்ளன. இது முழுதும் மின்னாக்கம் செய்யப்பட்டு இருப்பதால், விரும்பியவர்கள் படிக்கலாம்).


Geetha Sambasivam Fri, Jul 15, 2011 at 9:43 AM

ஏற்கெனவே படிச்ச நினைப்பு. என்றாலும் காமராஜர் மாதிரித் தலைவர்கள் இன்றைய நாட்களில் இருந்தால்????? பெருமூச்சுத்தான் வருது. :(((((( அதெல்லாம் ஒரு காலம். அறுபத்தி ஏழு தேர்தலில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்ற போது, போட்டுக் கொடுக்க மாட்டேன் என நிர்தாக்ஷண்யமாகச் சொன்னார்.  படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு? போம்மா, போய்ப் படிச்சு உத்தியோகம் கிடைச்சால் உடனே ஒத்துக்கோ. அப்புறமா உனக்கெல்லாம் வேலை கிடைக்க்கிறதே கஷ்டமாயிடும்னு சொன்னார். அதுக்கப்புறமா அவரைப் பார்க்கவே இல்லை. :(((((((

அந்தச் சமயம் டிடிகே தான் சிரித்த முகத்துடன் அனைவரையும் அழைத்து, ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தவர். ப..நெடுமாறன் அப்போ இளைஞர் காங்கிரஸில் இருந்தார். காமராஜரின் அணுக்கத் தொண்டர். காலம் தான் எப்படி மாற்றிவிட்டது?
2011/7/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan Fri, Jul 15, 2011 at 10:48 AM

உங்களுடைய அனுபவம் சுவையாக இருக்கிறது. அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும், வரலாறு எழுதுவது தான். இது மின் தமிழில் ஏற்கனவே போட்டது தான். அன்றே, ஒரு ஆரவத்துடன் எழுதியிருந்தாலும், மறதி! இங்கே போட மறந்துட்டேன்.

முகம்மது நபிகள் நாயகம்:அன்றொரு நாள்: ஜூலை 16
அன்றொரு நாள்: ஜூலை 16
2 messages

அன்றொரு நாள்: ஜூலை 16
     ஜூலை 16, 622ம் வருடம் அன்று முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு பயணம் தொடங்கினார். தூய இஸ்லாமிய கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துரைக்கும் நாள் வந்து விட்டது எனலாம். இந்த தினமே இஸ்லாமிய நாட்காட்டியின் தொடக்கம். ஹிஜ்ரா என்று அழைக்கப்படும் இஸ்லாமிய ஆண்டில் சந்திரனின் தொடர்புடைய மாதங்கள் 12. இது சம்பந்தமாக கிடைத்த ஒரு இஸ்லாமிய விளக்கத்தை இணைத்திருக்கிறேன். 
இன்னம்பூரான்
16 07 2011
உசாத்துணை:


Geetha Sambasivam Mon, Jul 18, 2011 at 5:57 AM
முற்றிலும் புதிய தகவலுக்கு நன்றி ஐயா.


2011/7/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Thursday, July 25, 2013

9/11:அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2
அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2
சித்திரத்துக்கு நன்றி: http://coolinterestingstuff.com/wp-content/uploads/2012/09/911-ground-zero.jpg


Innamburan Innamburan Sun, Sep 11, 2011 at 6:52 AMஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2

இந்த 9/11 பயங்கரத்தை தொலைக்காட்சியில் ‘ லைவ்’ ஆக பார்க்க நேரிட்டது, பத்து வருடங்கள் முன்னால். (2001 இன்றைய தேதி). அதை பற்றி பேச்சு எழுந்தால், முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ லொட்டு லொசுக்கு மண்ணாங்கட்டி’ என ‘இது உள்குத்து’, ‘இது வேண்டுமென்று செய்த கட்டிட நாசம்’ ‘பெண்டகனை தாக்கியது ஒரு ஏவு கணை’ போன்ற வதந்திகள், இன்னும் அதனுடைய பின்னணி மர்மங்கள் ஒளிக்கப்பட்டு இருக்கின்றன என்ற கசப்பு உண்மையை மறைக்கின்றன. சில மர்மங்கள் ~சுருக்கமாக:
வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:
 1. அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
 2. பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
 3. அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
 4. இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
 5. பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
 6. புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
 7. ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
 8. ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
 9. ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல். 
 10.  எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
 11.  அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
 12.  9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.
உசாத்துணையில் சுட்டியிருக்கும் நூல் இன்னும் வெளிவரவில்லை. சில பகுதிகள் எட்டிப்பார்க்கின்றன. இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?
இன்னம்பூரான்
11 09 20113mc3p33la5T05Z25X6b71584fc215a1571c9e.jpg
pastedGraphic.pdf
உசாத்துணை:
Summers.A & Swan.R:The Eleventh Day: The Full Story of 9/11 and Osama bin Laden 

Nagarajan Vadivel Sun, Sep 11, 2011 at 7:29 AMட்வின் டவரிலும் பெண்டகனிலும் பெற்ற வெற்றி வெள்ளை மாளிகையில் தோற்றுப்போனது
விமானம் வெள்ளை மாளி்கையைத் தாக்கப்போகிறது என்பதை உணர்ந்து உயிரைத் துச்சமாக மதித்து அமரிக்காவின் இறையாண்மைக் காக்க தங்களைக் காவுகொடுத்த அமெரிக்கக் குடிமக்கள் சிந்திய ரத்தம்
அதிபர் ஃப்ளோரிடாப் பள்ளியில் எலி வங்குக்குள்.  இங்கே நாட்டின் குடிமக்கள் போரிட்டு வெள்ளை மாளிகையைக் காப்பாற்றுகின்றனர்
தொலைக்காட்சியின் வெளிச்சத்தில் இரட்டைக்கோபுரம் கதை நாயகனாயிற்று.  உண்மைத் தியாகிகள் இன்றுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை
நாகராசன்
2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

coral shree Sun, Sep 11, 2011 at 8:58 AM
To: Innamburan Innamburan

மனம் கனக்கச் செய்யும் சோக நினைவலைகள்..........

//, முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ // மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் எண்ணி , எண்ணி வீர வணக்கம் செலுத்த வேண்டிய செயல்........

//அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.//

ஆம் ஐயா......கேட்பார் இருந்தால் இன்று உலகம் இப்படி தீவிரவாதம் என்ற அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்காதே.........  நல்ல பகிர்வு . நன்றிகள் பல.

coral shree Sun, Sep 11, 2011 at 9:11 AMமனம் கனக்கச் செய்யும் சோக நினைவலைகள்..........

//, முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ // மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் எண்ணி , எண்ணி வீர வணக்கம் செலுத்த வேண்டிய செயல்........

//அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.//

ஆம் ஐயா......கேட்பார் இருந்தால் இன்று உலகம் இப்படி தீவிரவாதம் என்ற அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்காதே.........  நல்ல பகிர்வு . நன்றிகள் பல.


Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 5:04 PM


இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?//

சலிக்காது ஐயா. விபரங்கள் கொடுங்கள். நம் நாட்டிலும் எப்போது என்ன நடக்குமோ என்ற பீதி தான்! :((((((((  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் மட்டும் கிடைத்தால்!!!!!!!!!!!! கனவு தான்! :(


2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com&gt

செல்வன் Mon, Sep 12, 2011 at 2:55 AM


தமிழ் புத்தாண்டு விஷயத்திலேயே கான்ஸ்பைரசி தியரிகள் ஓயவில்லை.9/11ல் அடங்குமா?

அமெரிக்காவில் ட்ரூத்தர்கள் என்ற இயக்கம் 9/11 பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர போராடுகிறது.பிளாட் எர்த் சொசைட்டிக்கு இருக்கும் வரவேற்பு இவர்களுக்கும் இருக்கதான் செய்கிறது:-)

[Quoted text hidden]
--
செல்வன்


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 3:02 AM

செல்வன்! கம் டு த பாயிண்ட்டு.

செல்வன் Mon, Sep 12, 2011 at 3:08 AM


பாயிண்ட் எளிமை ஐயா

கான்ஸ்பைரசி தியரிகளை நம்பவேண்டாம் என்பதே.


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 3:19 AM


நான் கண்டதையெல்லாம் நம்பச்சொல்லவில்லையே. ஆனால், கேட்டக் கேள்விக்கு பதில் எங்கே?எங்கே?எங்கே?

செல்வன் Mon, Sep 12, 2011 at 4:40 AM

9/11 பற்றி ஆயிரகணக்கில் ரிப்போர்ட்டுகள் இருக்கும்.அதில் எங்காவது இருக்கும்.

மற்றபடி 9/11 இன்சைட் ஜாப் என கருதுகிறீர்களா?இல்லை என்றால் மேட்டர் ஓவர்.
[Quoted text hidden]

Raja sankar Mon, Sep 12, 2011 at 4:47 AM


இரண்டு டவர்களும் இடிந்து விழுந்தது பற்றி பல ஆராய்ச்சி நடந்து பின் அமெரிக்காவின் பெரிய கட்டிடங்கள் கட்டும் விதியை மாற்றி உள்ளார்கள்.

கான்ஸ்பிரசி தியரிக்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எழுதப்படுபவை.

ராஜசங்கர்


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 7:40 AM


அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் சொன்னது/: பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர் சொன்னது/ஒமர் அல் பயொமி இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தது/. அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டது/. அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் முரண் பேசுவது/புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றது/.ஈரான் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்!/9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது/ எல்லாவற்றிற்கும் மேலாக, மட்டுறுத்தப்பட்ட 28 பக்கங்கள்........?!

  ~ உறங்குபவனை எழுப்பலாம். கண்ணை மூடிக்கொண்டு இருப்பவனை எழுப்ப முடியாது.
  இன்னம்பூரான்


  செல்வன் Mon, Sep 12, 2011 at 4:18 PM
  2011/9/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
  அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் சொன்னது/: பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர் சொன்னது/ஒமர் அல் பயொமி இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தது/. அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டது/. அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் முரண் பேசுவது/புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றது/.ஈரான் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்!/9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது/ எல்லாவற்றிற்கும் மேலாக, மட்டுறுத்தப்பட்ட 28 பக்கங்கள்........?!
  இவை எல்லாம் என்ன சொல்கின்றன?வாட் இஸ் தெ பிக் பிக்சர்?ஹூ டிட் 9/11?
  --
  செல்வன்


  Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 5:38 PM
  சில மர்மங்கள் ~சுருக்கமாக:
  வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:

  1. அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
  2. பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
  3. அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
  4. இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
  5. பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
  6. புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
  7. ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
  8. ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
  9. ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல். 
  10.  எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
  11.  அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
  12.  9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.
   

  Wednesday, July 24, 2013

  French Revolution:அன்றொரு நாள்: ஜூலை 14:  அன்றொரு நாள்: ஜூலை 14:


  Innamburan Innamburan Wed, Jul 13, 2011 at 9:31 PM


  அன்றொரு நாள்: ஜூலை 14:

       சித்திரத்துக்கு நன்றி: https://jspivey.wikispaces.com/file/view/French_Revolution.jpg/96673244/French_Revolution.jpg
  24 07 2013
       சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள், காடு மிரண்டதைக் காணாதவர்கள், நாடு மிரட்டப்படுவதை கண்டு கொள்ளாதவர்கள். இந்த அட்டூழியங்களெல்லாம் காலத்தின் கோலமடா!, முன்வினைபயனே!, பெரிய இடத்து சமாச்சாரம் என்றெல்லாம், தனக்குள் கதைகள் பல பேசியே, இப்பவோ, அப்பவோ செத்துச் சுண்ணாம்பா போனவர்கள் என்று உதறப்பட்ட சாது மஹாஜனம் தான், கை கட்டி, வாய் புதைத்து, ‘தெய்வமரபு நாங்கள்’ என்று பொய் பேசிய ஆன அரசவம்சத்துக்கு சில நூறு வருடங்கள் அணுக்கத்தொண்டு செய்து வந்திருந்தாலும், ‘மலை போல் மேனி’ என பொங்கி எழுந்தது, ஒரு நாள். விஸ்வரூபம் எடுத்தது என்று கூட சொல்லலாம். மாதக்கணக்காக கொலை பட்டினி, பஞ்சம், மிலிடேரி மிரட்டல்.
       தற்காலம், உலகின் பல பாகங்களில் புரட்சி நடக்கிறது. இந்தியாவில் என்று என்ன ஆகும் என்று சொல்வதற்கில்லை. மக்களிடையே மனக்கசப்பும், அன்றன்று ஆதவனுடன் கூட உதயமாகும் கருத்துக்கணிப்புக்களும், அதிகார மையங்களில் சலசலப்பும் நம்மை உலுக்குகின்றன. நடக்கப்போவது நடந்தே தீரும். இந்த பின்னணியில், இன்றைய தேதி நிகழ்வு ஒன்றை பார்ப்போம். வரலாற்றில் பெரிதும் பேசப்படும், 10 வருடங்கள் கடுமையாகவும், கொடுமையாகவும், பீதி பரப்பிய ஃப்ரென்ச் புரட்சியின் விசில் அடித்தது இன்று: 14 07 1789. வருடாவருடம் விழா எடுக்கப்படுகிறது இந்த தினம்.
       நடந்தது என்ன? அரசனுக்கும் (லூயி 16) மக்கள் நலனுக்கும் அஜகஜாந்திர தூரம். கொள்ளையர் துணிச்சலுடன் நடமாடினர். பிரபுக்களின் அட்டஹாசம் பொறுக்க முடியவில்லை. அரசனோ படை பலத்தை பெருக்கிய வண்ணம். கொடுத்த வாக்குக்களை காப்பாற்றாமல் சாக்கு போக்கு சொன்னான். அவன் உலகமே வேறு. மான் வேட்டை; பெண் வேட்டை. உலகமே நடுங்கிய அந்த நாளில் அவனுடைய குறிப்பு, ‘ஒன்றுமில்லை!‘ வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லையாம்!  அதற்க்குள், சாம்ராஜ்யத்தின் அடக்குமுறை சின்னமாக இருந்த பாஸ்டீல் கோட்டை தகர்க்கப்பட்டு விட்டது. லியன்கோர்ட் பிரபு அரசனிடன் இந்த செய்தியை கூறினதும், அவன் ‘இது கலவரமா?’ என்றான். அவரோ, ‘இல்லை ஐயா!வெடித்தது புரட்சி’ என்றார்.
       ஜூன் மாதத்திலிருந்தே கொந்தளிப்பு. ஜூலை 12: மக்களுக்கு வேண்டப்பட்ட அமைச்சர் திரு. நெக்கர் நெக்கித்தள்ளப்பட்டார். ஜூலை 13: புதிய பிரதிநிதிகளை ஒடுக்க, அரசன் படையை கூட்டுகிறான் என்ற பலமான வதந்தி. ஜூலை 13/14: அதி காலை தொழிலாளிகளும், நடுத்தர வகுப்பை சார்ந்த வணிக ஊழியர்களும், ராணுவ ஆயுதக்கிடங்கிலிருந்து 28,000 துப்பாக்கிகளை ( ஆளுக்கு ஒரு புள்ளி விவரம்!) கைபற்றுகிறார்கள். ஆனால், தோட்டாமருந்து இல்லை. பாஸ்டீல் கோட்டை அபகீர்த்தியான கொடுங்கோல் சிறைச்சாலை; ஆயுத கிடங்கு. அன்றைய தினம் இருந்ததோ ஏழு கைதிகள்; பேருக்கு மட்டும் பாதுகாப்பு. ஒரு வரலாற்றாசிரியர் கூறியதைப் போல, கோட்டைகாப்பாளனாக இருந்த டெ லானே பிரபு, ‘தலையை இழக்கும் முன், மூளையை இழந்தான்!’ ‘மிரண்டு’ திரண்டு வந்த மக்கட்படையின் வலிமையை புரிந்து கொள்ளாமல், அவன் முன்னுக்கு பின் முரணாக நடந்தான். தன்னிடம் 20, 000 பவுண்டு தோட்டா மருந்து இருப்பதால், அத்துடன் கோட்டைக்கு வெடி வைத்து நாங்கள் சாவோம்’ என்று வீறாப்புப் பேசினான். அவனுடைய சொற்பப்படையும், கிளர்ச்சியாளகளுடன் சேர்ந்து கொண்டது! கடுமையான தாக்குதல். அவனும் கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டான். உதவிக்கு வந்த அரசுப்படையும், மக்களுடன் சேர்ந்தது. இந்த வன்முறைகள் எல்லாம் நடந்து முடிந்த பின், அரசன் படைகளை வாபஸ் செய்வதாக வாக்குறுதி அளித்தான். திரு.நெக்கர் அவர்களை மறுபடியும் பதவியில் அமர்த்தினான். உதயமாகும் புதிய ஃபிரான்ஸின் வெண்மை-நீல சின்னத்தை அணிந்தான், தனது மனம் மாறியதை குறிப்பால் உணர்த்த. அதற்குள் அதிகாரத்தின், கொடுங்கோலின் சின்னமாகத் திகழ்ந்த பாஸ்டீல் கோட்டை உடைத்து நொறுக்கப்பட்டது. இன்றைய தேதி நிகழ்வு மட்டும், சுருக்கமாக சொல்லப்பட்டது. ஃப்ரென்ச் புரட்சியின் முழுமையை எழுதலாம்! ஆனால்....!

  இன்னம்பூரான்
  14 07 2011
  உசாத்துணை:

  pastedGraphic.pdf       pastedGraphic.pdf
  The Storming of the Bastille and the Arrestation of Governor de Launay. Source: Anonymous.
  Geetha Sambasivam Thu, Jul 14, 2011 at 3:23 AM


  A Tale of Two Cities மீண்டும் எடுத்துப் படிக்கத் தூண்டும் இடுகை. மக்கள் விரோத அரசு எந்நாளும் ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்து நிலைக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  Innamburan Innamburan Fri, Jul 15, 2011 at 6:54 AM
  To: thamizhvaasal

  I forget to mail this. You may enjoy this lovely book.

  BARONESS ORCZY (THE  SCARLET PIMPERNEL)  நன்றி, வணக்கம்.
  [Quoted text hidden]

  Tuesday, July 23, 2013

  ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர்:அன்றொரு நாள்:ஜூலை 13
  அன்றொரு நாள்:ஜூலை 13

  அப்டேட்: திசை மாறுவதில்லை. அதை மாற்றுபவர்களின் மாயமது.
  சித்திரத்துக்கு நன்றி: http://www.heritagewiki.org/images/7/72/Navalar.jpg

  இன்னம்பூரான்
  24 07 2013
  Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 9:07 PM  அன்றொரு நாள்:ஜூலை 13

       கல்வி அறிவை வளர்க்கும். என்ன புதிசா மஹாவாக்யம் சொல்லிவிட்டீர்கள், புல்லட்டீன் போர்டில் போடுவதற்கு? ஒரு தாரதம்யம் வேண்டாம்? என்றெல்லாம் எள்ளி நகையாடுகிறீர்களா? அது உங்கள் உரிமை. எனினும், யான் சொல்லத்துணிவது யாதெனில், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்று ஏகோபித்த அபிப்ராயமாக பகர்ந்துவிட்டு, கல்வியை மட்டம் தட்டுவதில் -அதாவது, அதை வளரவிடாமல், ‘மொழி வெறி’ என்ற த்வம்சுக்கட்டையால் மட்டம் தட்டி, மார் தட்டிக்கொள்கிறார்களே சமூக மார்க்கபந்துக்கள், அது நல்லது அன்று, என்பதே.
  சான்றாக, இன்றைய தேதியில், 1869 நடந்த நிகழ்வு ஒன்று.
       அவர் ஒரு சிவப்பழம். ஆசாரசீலர். சைவ சமய/ தத்துவ விசாரனையிலும், போதனையிலும், சைவ சம்பிரதாயங்களை கண்ணின் மணியென  போற்றியவருமான அந்த சான்றோனின் தமிழ்பற்று, தமிழறிவு, தமிழ் ஞானம், தமிழ் படைப்பாற்றல்  கரை கடந்தது. மூலநூல்களை பரிசோதித்து, ஒப்புமை ஆராய்ந்து, களையெடுத்து, பதிப்பாசிரியாக பேரும், புகழும் படைத்த அன்னாரின் மாணவர் ஶ்ரீல ஶ்ரீ.நா. கதிரைவேற்பிள்ளை அவர்களும், அவரது சீடரும், என்னுடைய மானசீக குருநாதருமான தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், அன்னாரின் வழியை பின்பற்றியதும், நம் கொடுப்பினை. பேசப்படுவது, ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் (18 12 1822 - 05 12 1879) என்பது வெளிப்படை. அவரை பற்றி முழு விவரமும் அறிய, நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிவு செய்துள்ள கட்டுரையை சுட்டியிருக்கிறேன். அந்த கலோனிய காலத்து கட்டாயங்கள், வழக்கங்கள், நடைமுறைகளை புரிந்து கொண்டால், நாவலரின் விவிலிய மொழிபெயர்ப்பு பற்றியும், அவரது ‘சைவதூஷணபரிகாரம்’ போன்ற நூல்களின் தாக்கமும் புரிந்து கொள்வது எளிது. அவரது ‘போலியருட்பா மறுப்பு‘ என்ற நூலை பற்றி பேசும் இடமிது இல்லை.  நான் சொல்ல வருவது நான்கு விஷயங்கள், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்றுணர்ந்து ்ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள் இயங்கிய விதம்:
  1. அவரது 60 நூல்களில் பாலபாடம் என்ற நான்கு தொகுப்புக்கள் நம்மை வியக்கவைக்கின்றன, எளிமையான, பளிங்கு நீர் போன்ற திண்ணைப்பள்ளிக்கூட தமிழ். சமச்சீர் கல்வி சர்ச்சையாளர்களே. சற்றே, அவற்றை பார்க்கவாவது பாருங்கள்.
  2. ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள்  பல சமயங்களில் சொந்தச்செலவில் பள்ளிகள் நடத்தியிருக்கிறார். யாசகம் வாங்கத்தயங்கவில்லை.
  3. தமிழில் நிறுத்தக் குறியீடுகளை, ஆங்கில முறையைப் பின்பற்றி, இடமறிந்து முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே என்று சொல்லப்படுகிறது.
  4. 13 07 1869: வண்ணார் பண்ணையில் ஒரு ஆங்கிலேயர் நடத்திய ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் வீபுதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை நிறுவி நடத்தினார். ( ஒரு இடத்தில், இது நடந்தது 1872 தை மாதம் என்ரும் குறிப்பும் உள்ளது.) எந்த தேதியாக இருந்தாலும், நாவலர் அவர்கள் ஆங்கிலப்பாடசாலை நிறுவியதின் நோக்கத்தை, தீர்க்க தரிசனத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

  ஆங்கில ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தெலுங்கை பரிஹசிப்பது, மலையாளத்தை குறை கூறுவது, கன்னடதை உடைப்பது என்று பேச்சுப்படினின்...

  எதற்கும், சிந்தனைக்கு ஒரு கருத்து:

  “எந்த எல்லை வரை நாம் சமூகத்தின் விதிகளை பின்பற்றவேண்டும்? அதாவது, ‘ஊருடன் ஒத்து வாழ்வது’ எப்போது ஒவ்வாத செயல் ஆகி விடுகிறது? இதற்கு விடை காணும் போது தான், மனசாட்சி வாய்மையுடன் இயங்குகிறது.”
  கென்னெத் டைனன், விமரிசகர் & எழுத்தாளர் (1927 -1980)
  இன்னம்பூரான்
  13 07 2011
  pastedGraphic.pdf


  உசாத்துணை:
  http://ta.wikipedia.org/wiki/றுமுக_நாவலர்  Geetha Sambasivam Wed, Jul 13, 2011 at 3:06 AM


  எல்லாம் மொழியை வைத்துப் பிழைக்க வந்தவர்கள் செய்த கூத்து. ஆங்கிலேயன் வியாபாரம் செய்ய வந்து விட்டுக் கலாசாரத்தையும், மதத்தையும் மாற்றினான் என்றால் இங்கே உள்ளூர்க்காரங்க வேறே விதமாய்! :((((( இதைக் குறித்து எழுதினால் எழுதித் தள்ளலாம்.  வேறு மொழிகளைக் கற்றால் என்ன தப்பு?? புரியலை!

  இதைச் சாக்காக வைத்தே ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை நவோதயா பள்ளிகளை வரவிடவில்லை.  இதனால் நஷ்டம் அடைவது கிராமங்களில் மிகக் கஷ்டப்பட்டு ஆற்றையும், ஏரியையும், காட்டையும், மேட்டையும் கடந்து சென்று படிக்கும்/ அல்லது படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் குப்பனும், சுப்பனும்.  அரசியல் வியாதிகள் அல்ல.


  seshadri sridharan Wed, Jul 13, 2011 at 3:29 AM


  எல்லாம் மொழியை வைத்துப் பிழைக்க வந்தவர்கள் செய்த கூத்து. ஆங்கிலேயன் வியாபாரம் செய்ய வந்து விட்டுக் கலாசாரத்தையும், மதத்தையும் மாற்றினான் என்றால் இங்கே உள்ளூர்க்காரங்க வேறே விதமாய்! :((((( இதைக் குறித்து எழுதினால் எழுதித் தள்ளலாம்.  வேறு மொழிகளைக் கற்றால் என்ன தப்பு?? புரியலை!
  கட்டாயத்தின் பெயரில் பிற மொழிகளை அரசோ அல்லது ஒரு அமைப்போ கற்கச் சொல்லக் கூடாது. தமிழகத்தில், சென்னையில், RSS  ஏற்பாட்டால் இயங்கும் விவேகானந்தா கல்வி நிறுவனப் பள்ளிகளில் இந்தியுடன் சமற்கிருதமும் ஒரு கட்டாயப் பாடம். இது எதற்கு இதனால் மாணவர் நேரம் வேறு மொழியை கற்பதில்  வீணாகிறது, தனிக் கல்விக்கு (Tution) தண்டமாக பணச் செலவு வேறு.
  இதைச் சாக்காக வைத்தே ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை நவோதயா பள்ளிகளை வரவிடவில்லை.  இதனால் நஷ்டம் அடைவது கிராமங்களில் மிகக் கஷ்டப்பட்டு ஆற்றையும், ஏரியையும், காட்டையும், மேட்டையும் கடந்து சென்று படிக்கும்/ அல்லது படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் குப்பனும், சுப்பனும்.  அரசியல் வியாதிகள் அல்ல. 

  நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்திக் கல்வியை ஊக்கத் தான் என்பது அதன் படத் திட்டத்தால் புரியும். ஏழைகள் படிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதல்ல. இது அரசியல் வியாதிகளின் சதி.
    
      சேசாத்திரி  2011/7/13 Innamburan Innamburan 

  .

   ஆங்கில ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தெலுங்கை பரிஹசிப்பது, மலையாளத்தை குறை கூறுவது, கன்னடதை உடைப்பது என்று பேச்சுப்படினின்...

   எதற்கும், சிந்தனைக்கு ஒரு கருத்து:

   “எந்த எல்லை வரை நாம் சமூகத்தின் விதிகளை பின்பற்றவேண்டும்? அதாவது, ‘ஊருடன் ஒத்து வாழ்வது’ எப்போது ஒவ்வாத செயல் ஆகி விடுகிறது? இதற்கு விடை காணும் போது தான், மனசாட்சி வாய்மையுடன் இயங்குகிறது.”
   கென்னெத் டைனன், விமரிசகர் & எழுத்தாளர் (1927 -1980)
   இன்னம்பூரான்
   13 07 2011
   pastedGraphic.pdf


   உசாத்துணை:
   http://ta.wikipedia.org/wiki/றுமுக_நாவலர்   LK Wed, Jul 13, 2011 at 4:41 AM


   /நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்திக் கல்வியை ஊக்கத் தான் என்பது அதன் படத் திட்டத்தால் புரியும். ஏழைகள் படிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதல்ல. இது அரசியல் வியாதிகளின் சதி.//

   நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டது குறைந்த செலவில் தரமானக் கல்வியைத் தர.  இந்திக் கல்வியை ஊக்குவிக்க அல்ல. இன்றும் கேந்திர வித்யாலயாவில் கல்விக் கட்டணம் குறைவு . இது தெரியுமா உங்களுக்கு,

   இப்படி எல்லாவற்றையும் சதி சதி என்று உங்களை புலம்பவைததுதான் தமிழக அரசியல் வியாதிகளின் சதி 


   --
   Thanks and Regards
   Karthik L

   Geetha Sambasivam Wed, Jul 13, 2011 at 5:34 AM


   நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்திக் கல்வியை ஊக்கத் தான் என்பது அதன் படத் திட்டத்தால் புரியும். ஏழைகள் படிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதல்ல. இது அரசியல் வியாதிகளின் சதி.

   சேஷாத்ரி, இந்திக்கல்வியை ஊக்குவிக்காத அரசுகளின் தொலைக்காட்சி சானல்களின் இயக்குநர்கள் தனித்தமிழர்கள் இல்லையா?? சரத்குமார் ரெட்டி, ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இது போல் இன்னும் எத்தனை உதாரணம் வேண்டும்????? அவர்களின் சினிமா கம்பெனிகளின் பெயர்கள் தெரியும் இல்லையா??? கொஞ்சமாவது நியாயமாய்ச் சொல்லுங்கள்.  ஏற்கும்படியாய்ச் சொல்லுங்கள். சட்டமன்றக் கட்டிடம் ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் கட்டியது முழுக்கவும் தனித்தமிழர்கள், இல்லையா??
   [Quoted text hidden]

   seshadri sridharan Wed, Jul 13, 2011 at 8:46 AM


   ஐயா கார்த்திக்,
   நவோதயா பள்ளிகளில் இந்தி வழிக் கல்வி என்பது எதைக் காட்டுகிறது இந்தித் திணிப்பை.  மாணவர்க்கு குறைந்த செலவாக இருக்கலாம் ஆனால் ஒரு மாணவர்க்கு அரசு செலவிடும தொகை என்ன என்று அறிந்து கொண்டால் இவ்வளவு செலவில் இப்படி ஒரு கல்வி வழங்குவது எதன் பொருட்டு என்பது விளங்கும்
   சேசாத்திரி


   seshadri sridharan Wed, Jul 13, 2011 at 8:55 AM   சேஷாத்ரி, இந்திக்கல்வியை ஊக்குவிக்காத அரசுகளின் தொலைக்காட்சி சானல்களின் இயக்குநர்கள் தனித்தமிழர்கள் இல்லையா?? சரத்குமார் ரெட்டி, ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இது போல் இன்னும் எத்தனை உதாரணம் வேண்டும்????? அவர்களின் சினிமா கம்பெனிகளின் பெயர்கள் தெரியும் இல்லையா??? கொஞ்சமாவது நியாயமாய்ச் சொல்லுங்கள்.  ஏற்கும்படியாய்ச் சொல்லுங்கள். சட்டமன்றக் கட்டிடம் ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் கட்டியது முழுக்கவும் தனித்தமிழர்கள், இல்லையா??
   அம்மணி, கல்வி மக்கள்  படிப்பது. தொலைக்காட்சி  முதலாளிகளாக உள்ள அரசியலாளரால் இயக்கப்படுவது. இரண்டையும் ஒன்றாகப் பார்த்து  குழப்பிக் கொள்வது ஏனோ? சரத்குமார் ரெட்டியால் செமினி, தேஜா தொ.கா வருவாய் வரவில்லையா?  முதலாளிகளுக்கு  யாரால் இலாபம கிட்டுமோ அவரை அமர்த்துவர்.  கல்வி அப்படியா?

   சேசாத்திரி


   Geetha Sambasivam Wed, Jul 13, 2011 at 9:46 AM


   அப்படி வாருங்கள், இன்று கல்வி மூலம் வருவாய் ஈட்டும் எத்தனை அரசியல் வியாதிகளின் பெயர் உங்களுக்குத் தேவை?? நான் சொல்ல வேண்டியதில்லை.  செய்திகளை முறையாகப்பரப்ப வேண்டிய ஊடகங்களில் இருந்து எல்லாவற்றிலும் வியாபார நோக்குத் தான், தங்கள் வியாபாரத் தேவைக்கு, பொருள் ஈட்டுவதற்கு அவர்கள் வடமாநிலமா, வடவரா, தென்னவரா என்று பார்க்க மாட்டோம், யாரால் லாபமோ அவர்கள் தேவை வடவராகவே இருந்தாலும்.  அப்போது நாங்கள் ஆரியர், திராவிடர் என்றா வேறுபாட்டைக் களைந்துவிடுவோம்.  ஆனால் கல்வி கற்பது என்றால் ஆரியர், திராவிடர் என்று பாகுபாடு பார்ப்போம்;  அது தானே நீங்கள் சொல்வது?

   ஆனால் நம்முடைய தேவைக்கு நம் கல்விக்கு என மற்றொரு மொழியைக் கற்க நம் பிள்ளைகளை விடமாட்டோம்.  இது என்ன நியாயம்?? ஏற்கெனவே தமிழில் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் திண்டாடும் தமிழர்கள் இப்படி வடமாநிலத்தவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில் பெரிய பெரிய பொறுப்புக்களை ஏந்திப் பெரிய மனிதர்களாக விட்டுக் கொடுத்துவிட்டுத் தமிழை மட்டும் படித்துவிட்டுத் தமிழ் நாட்டிலேயே இலவசத் தொலைக்காட்சியில் மானாடிக்கொண்டு, மயிலாடிக்கொண்டு, இலவச அரிசியை இலவச எரிவாயுவில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, டாஸ்மாக்கில் மூழ்கிக் கிடக்க வேண்டும்.   இன்று அது தான் நடந்து வருகிறது.

   எந்த வேலைகளுக்குப் போனாலும் இன்று தமிழ்நாட்டில் பிஹார், மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலத்தவர்கள் தான்.  திராவிடர்கள் கட்டும் கட்டிடங்களைக் கட்டியதும் வெளி மாநிலத்தவர்கள் தான்.  தமிழ்ப்பற்றை நம் நாட்டுத் தமிழரிடம் காட்ட வேண்டுமானால் இங்கேயல்லவோ தகுதியான ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும்? சந்தர்ப்பவாதி என்பதை நன்கு காட்டிவிட்டீர்கள். 

   [Quoted text hidden]

   Innamburan Innamburan Wed, Jul 13, 2011 at 10:15 AM

   To: mintamil@googlegroups.com
   Bcc: innamburan88
   போடு! போடு! அப்டிப்போடு! நான் சொல்லலை. ஆறுமுகநாவலர் சொல்றார்!
   நன்றி, வணக்கம்.


   இன்னம்பூரான்
   LK Wed, Jul 13, 2011 at 12:31 PM

   Reply-To: mintamil@googlegroups.com
   To: mintamil@googlegroups.com
   //வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் திண்டாடும் தமிழர்கள் இப்படி வடமாநிலத்தவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில் பெரிய பெரிய பொறுப்புக்களை ஏந்திப் பெரிய மனிதர்களாக விட்டுக் கொடுத்துவிட்டுத் //

   உண்மை உண்மை உண்மை. 

   [Quoted text hidden]
   Thanks and Regards
   Karthik L