Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 9: யக்ஷிணி வந்தாள்!

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 9: யக்ஷிணி வந்தாள்!
9 messages


Innamburan Innamburan Thu, Feb 9, 2012 at 7:16 PM
To: mintamil , thamizhvaasal


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 9:
யக்ஷிணி வந்தாள்!
ஆவியுலகை எட்டிப்பார்த்தவர் யார்? என்று நேற்று அதிகப்பிரசங்கித்தனமாய் கேட்ட என்னை, அங்கிருந்து  எட்டிப்பார்த்து, பால் லாரென்ஸ் டன்பார் எள்ளி நகையாடினார் என்றால் மிகையாகாது. இத்தனைக்கும்,  ஃபெப்ரவரி, 9, 2006 அன்றே, ஆனானப்பட்ட அமெரிக்காவில். அவரது நூற்றாண்டு நினைவஞ்சலி தினம், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 27, 1872ல் பிறந்த பால் லாரென்ஸின் தந்தையும் தாயும் நீக்ரோ அடிமைகள். தப்பி வந்தவர்கள். தந்தை அமெரிக்கன் உள்நாட்டுப்போரில் சிப்பாய். பள்ளியில் ஒரே ஒரு நீக்ரோ மாணவன், பால் லாரென்ஸ். அவனே மாணவர் இதழின் ஆசிரியர்; பள்ளி இலக்கிய மன்றத்துக்கும், வகுப்பு மாணவர்களுக்கும் தலைவன். ஒகாயோ மாநிலத்தில் நூறு வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு நடந்தது அவனுடைய ஆற்றல் மட்டுமல்ல. அந்த நாட்டின் தகுதி போற்றும் பண்பு. (இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு நாம் கற்றறிருந்திருந்தால், சமத்துவம் என்றோ வந்திருக்கும்.) ஆறு வயதிலேயே கவிதை எழுதினார், இந்த பிற்காலத்தில் புகழ் பெற்ற இந்த கவிஞர். நீக்ரோ கிளை மொழியிலும், நாட்டின் நடைமுறை ஆங்கிலத்திலும் அமர காவியங்கள் படைத்தார். 19 வயதில் பள்ளிக்குப் முற்றுப்புள்ளி. லிஃப்ட் ஆப்பரேட்டர் வேலை. படைப்பாற்றல் சோறு போடவில்லை. வெள்ளையரினத்தின் ஆதிக்கம் தலை விரித்தாடிய காலத்திலேயே, இவருக்கு அந்த இனத்திலிருந்து விசிறிகள் இருந்தனர். வில்லியன் டீன் ஹோவல்ஸ் என்ற நாவலாசிரியர் இவருக்கு ஊக்கம் மிக அளித்தார். உலகக்யாதி வந்தடைந்தது. ‘அடிமட்ட வாழ்க்கையின் இசைக்கவிதைகள்’ என்ற நூலை வெளியிட்டார். ஜனாதிபதி தியோடார் ரூஸ்வெல்ட் இவருக்கு ஒரு அலங்கரிக்கப்பட்ட பட்டாக்கத்தியை பரிசாக அளித்தார். 26 வயதில், இவர் அமோகமாகக் காதலித்து மணந்த அலைஸ் ரூத் மூர் ஒரு கவிஞர். (ஹி! ஹி! அப்போதெல்லாம் கவிதாயினி என்ற சொல் வழக்கத்தில் இல்லை.) பிற்காலம்  1900ல் க்ஷயரோகம் தாக்கவே, கனிவுடன் டாக்டர் பெருமக்கள் விஸ்கி அருந்தச்சொன்னார்கள். அது பிடித்துக்கொண்டது. ஆனால் மனைவியும் இவரும் பிரிந்தனர். ஆனால், விவாகரத்து வரை போகவில்லை. ஃபெப்ரவரி 9, 1906 அன்று, 33 வயதில் அல்பாயுசில் மறைந்தார்.
அடடா? இது ஏன் ராமலக்ஷ்மி ராஜன் ஸ்பெஷல் என்று சொல்ல மறந்துட்டேனே! நேற்று அவர் மேரி அஞ்செலோவின் I Know Why The Caged Bird Sings என்ற கவிதையின் அருமையான தமிழாக்கத்தை ‘ஏன் பாடுகிறது கூண்டுப்பறவை.. எனக்குத் தெரியும்’ என்ற தலைப்பில் அதீதம் இதழில் எழுதியிருப்பதை நம் இணைய தளத்தில் சொல்லியிருந்தார். அதை பார்க்க் நேர்ந்த வேளையில், நான் டன்பாரிடம் ஈடுபட்டிருந்தேன். என் பின்னூட்டம்: 
இது நல்லதொரு முயற்சி. எனக்கு பால் லாரன்ஸ் டன்பார் (மூலக்கவிதையின் மூலம்), மார்ட்டின் லூதர் கிங்க் இருவரும் நினைவுக்கு வருகிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் பற்றி 'அன்றொரு நாள்' இழையில் எழுதியிருக்கிறேன். இசைப்பதே விடுதலையின் ஒரு பரிமாணம்; தலை வாயில்.~இன்னம்பூரான்’ 
மேரி அஞ்செலாவுக்கு குருநாதர், டன்பார். அவருடைய கீழ்க்கண்ட கவிதையிலிருந்து தான் மேரிக்கு தலைப்பே கிடைத்தது.
...third stanza of his poem "Sympathy
I know why the caged bird sings, ah me,
When his wing is bruised and his bosom sore,
When he beats his bars and would be free;
It is not a carol of joy or glee,
But a prayer that he sends from his heart's deep core,
But a plea, that upward to Heaven he flings –
I know why the caged bird sings
ஒரு வார்த்தை: டன்பாரின் கவிதையும், அஞ்செலாவின் கவிதையும் ஆழமான, மென்மையான, அடிப்பட்டோர் உளம் புரிந்த இறவா இலக்கியங்கள். ஒரு முழு வியாக்யானம் எழுதவேண்டும் என பல நாட்கனவு. பார்க்கலாம்.
இன்னம்பூரான்
09 02 2012
ba2e8aa59e4161ee5807078f7226c405fde751a6.gif
உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Feb 10, 2012 at 12:25 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
But a prayer that he sends from his heart's deep core,But a plea, that upward to Heaven he flings – //

சாதாரணமாய்ப் படித்தால் சாதாரண விடுதலைக்கான கவிதையாய்த் தெரிந்தாலும் இதன் உள்ளார்ந்த தேடல் மனதை உருக்குகிறது.   சும்மா வெறும் கூண்டுப் பறவையைப் பற்றி மட்டும் பாடாமல் இந்த உடல் கூட்டில் இருக்கும் உயிர்ப்பறவையின் துடிப்பாகவும் புரிகிறது.  நல்லதொரு பகிர்வுக்கு நன்றி உங்களுக்கும், இதை எழுதத் தூண்டுதலான ராமலக்ஷ்மிக்கும். 


2012/2/9 Innamburan Innamburan <innamburan@gmail.com>

...third stanza of his poem "Sympathy
I know why the caged bird sings, ah me,
When his wing is bruised and his bosom sore,
When he beats his bars and would be free;
It is not a carol of joy or glee,
But a prayer that he sends from his heart's deep core,
But a plea, that upward to Heaven he flings –
I know why the caged bird sings
ஒரு வார்த்தை: டன்பாரின் கவிதையும், அஞ்செலாவின் கவிதையும் ஆழமான, மென்மையான, அடிப்பட்டோர் உளம் புரிந்த இறவா இலக்கியங்கள். ஒரு முழு வியாக்யானம் எழுதவேண்டும் என பல நாட்கனவு. பார்க்கலாம்.
இன்னம்பூரான்
09 02 2012

உசாத்துணை:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Subashini Tremmel Sat, Feb 11, 2012 at 7:13 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
இந்தப் பதிவில் திரு.இன்னம்பூரானின் விளக்கமும் அதற்கு திருமதி கீதாவின் பதிலும் உண்மையிலேயே அழகாக ரசிக்கும் படி உள்ளன.

சுபா

2012/2/10 Geetha Sambasivam 

Ramalakshmi Rajan Sat, Feb 11, 2012 at 1:30 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அஞ்செலாவின் கவிதைக்குத் தூண்டுதலாக அமைந்த இக்கவிதை இன்னும் ஆழமாக உள்ளது.

/But a prayer that he sends from his heart's deep core,
But a plea, that upward to Heaven he flings –/
டன்பாரின் கவிதைக்குப் பின்னால் இருக்கும் சரித்திரம் உருக்கம். கீதா மேடம் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.
/டன்பாரின் கவிதையும், அஞ்செலாவின் கவிதையும் ஆழமான, மென்மையான, அடிப்பட்டோர் உளம் புரிந்த இறவா இலக்கியங்கள். ஒரு முழு வியாக்யானம் எழுதவேண்டும் என பல நாட்கனவு. பார்க்கலாம்./

காத்திருக்கிறோம். அவசியம் பகிர்ந்திடுங்கள். தாமதமான வருகைக்கு மன்னியுங்கள்.

@ கீதா மேடம், /
இதை எழுதத் தூண்டுதலான ராமலக்ஷ்மிக்கும். /

அஞ்செலாவின் கவிதையை மொழிபெயர்க்கத் தேர்வு செய்து தந்த வகையில் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஜீவ்ஸுக்கு இங்கு என் நன்றி.
[Quoted text hidden]
--
அன்புடன்
ராமலக்ஷ்மிInnamburan Innamburan Sat, Feb 11, 2012 at 1:52 PM

நன்றி, ராமலக்ஷ்மி! இந்த ஜீவ்ஸ் எக்கட உன்னாரு? நம்பளை கண்டுக்கமாட்டேங்க்றாரு!


2012/2/11 Ramalakshmi Rajan <ramalakshmi.rajan@gmail.com>
அஞ்செலாவின் கவிதைக்குத் தூண்டுதலாக அமைந்த இக்கவிதை இன்னும் ஆழமாக உள்ளது.

Ramalakshmi Rajan 
டன்பாரைப் பற்றி அவரும் அவசியம் அறிந்தாக வேண்டும். இந்த இழையை அனுப்பியுள்ளேன்:)! தற்போது வெளியூர் சென்றுள்ளார்.

நன்றி சார்.

அன்புடன்
ராமலக்ஷ்மி


[Quoted text hidden]
[Quoted text hidden]

Ramalakshmi Rajan 
மார்ட்டின் லூதர் கிங் குறித்த இழையை எனக்கு அனுப்புங்களேன். தேடியெடுக்க பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. க்ரூப் மடல்களுக்கென்று தனியாக இந்த மெயில் ஐடி வைத்துள்ளேன். ஒவ்வொரு க்ரூப்புக்கும் ஃப்ல்டர் என பிரிக்க முயன்றதில் குளறுபடியாகி விட்டுள்ளது. சரி செய்கிறேன் விரைவில்.

அதுமட்டுமின்றி மற்ற இரண்டு ஜிமெயில்கள் ரீடர் சார்ந்த ஒன்றும், பெர்சனல் ஒன்றும் இரண்டு ப்ரெளசர்களில் திறந்திருக்க , 3-வதாக் இதை முழுநேரம் திறந்து வைக்க இயலாது போகிறது. எனவேதான் பதில்களில் கால தாமதம். பொறுத்தருள வேண்டும்.
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Feb 14, 2012 at 6:41 AM
To: 
Dear Rama Lakshmi,

Thanks for your query. I wish for young people getting the enquiring mind. Do spread that idea. Here are some links that occur to me. Not to worry about delay. I am also struggling.
Regards,
Innamburan
14 02 2012

  1. Authoritative. You can get all Nobel Laureates
  2. Run by his family. Good.
  3. Crusading, Not all that good.
  4. Single good article
  5. As above
  6. You get his books.

[Quoted text hidden]

Ramalakshmi Rajan Tue, Feb 14, 2012 at 1:40 PM
To: Innamburan Innamburan
புரிதலுக்கும் கொடுத்திருக்கும் இழைகளுக்கும் மிக்க நன்றி சார். அன்றொரு நாள் இழையிலும் எழுதியிருந்தாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது அதிகமாகவே, கொடுத்திருக்கும் சுட்டிகள் மூலம் அறிந்து கொள்வேன். மீண்டும் நன்றி.
[Quoted text hidden]