19 02 2010
’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36
இந்த டீ.எல்.டபிள்யூவை எல்.பீ.டபிள்யூ ஆக்கறது தானே, என் கடன், அமல்! அதற்கு, 'லாக்புக் லகான்' அற்புதமா வேலை செஞ்சது. ரயில்வேக்காரனுக்கு இனப்பற்று ஜாஸ்தி. மெகானிகல் எஞ்சினியர் பப்ளிக் ரிலேஷன் ஆஃபீசரோடு பேசறது சொல்பம். ஆடிட்காரன் பஹுதூரம் இல்லையோ? அதோடே, நல்லவேளை, பாலின வேற்றுமை இடம் பெறவில்லை. (எனவே, பிரச்னைகள் வேறு!) இப்போ, 'அப்பாடான்னு பெருமூச்சு விட்டங்களா!; க்ளப்லே முகம் கொடுத்துப் பேச ஆரம்பிசச்சாங்க. 'நல்வரவே ஆகுக' என்று இருந்து விட்டேன். இப்படியாக காலதேசவர்த்தமானம் இருக்கச்சே, காண்ட்ராக்ட்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
இப்போ, பட்டி தொட்டிலே, பேட்டைக்கு பேட்டை, பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து, டவுனுக்கு டவுன், மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் துஷ்பிரயோகம் பண்றாளே, அந்த டெண்டர் முறையின் எளிய பதிப்பு தான், அப்போ ஐம்பது வருடங்களுக்கு முன் தெரிந்த ஏற்பாடு. ஆனா, மாண்ட்வாடிலே கட்றது பெரிய டீஸல் எஞ்சின் தொழிற்சாலை; அமெரிக்கா கம்பெனி ஆல்கோ ஒப்பந்தக்காரார்,கூட்டாளி. ஏற்கனவே, ரயில்வே போர்ட் மன்னாதிமன்னர்களால் முடிக்கப்பட்டவை. 'பொன்னியின் செல்வத்தை' விட தடிமன் ஆன காண்ட்ரேக்ட்கள்;பக்கம் பக்கமாக நுண்ணிய எழுத்துக்களில், ஆங்கிலமில்லாத, ஆனால் ஆங்கில'சொற்கள்; புரியமாதிரி இருக்கும்; புரியாது. எல்லாபக்கங்களிலும், இரு தரப்பினரும் 'டொட்டாய்ங்க்' ந்னு நெடிய கையெழுத்து. நமக்கு தான் வேலை குறைச்சலா! அதையெல்லாம் படித்து, பித்து பிடித்து, பாயைப் பிராண்டி, வினா தொடுத்தபிறகு தான் தெரிந்தது, அவர்களுக்கும் புரியவில்லை என்று!
- எனக்கு ஜவாப் சொல்றதுக்கு ஒரு அமெரிக்கரை அனுப்பினார்கள். கொஞ்சம் அசமஞ்சம். பக்கோடா சாப்டிண்டு பேசறமாதிரி அவர் பேசினாலும், அவரிடமிருந்து உண்மையை கறக்கமுடிந்தது. பரமபதசோபானப்படத்திலே ஏணி காண்பித்த அளவு தான் ஏறும். சர்ப்பத்தின் வாலும் கண்ணுக்கு தெரியும். இவர்களது ('இவா' ந்னு எழுதவில்லை, அமல்.) காண்ட்ராக்ட்டில், இரண்டு ஏறுமுகம் - கூலி உயர்வது, விலைவாசி உயர்வது. சிக்கல் சிக்கலான சூத்திரங்கள், நடைமுறையுடன் ஒவ்வாதவை, இறங்குமுகத்தைப்பற்றி பேச்சே இல்லை. சுருங்கசொல்லின், கேட்டதை கொடுக்கறமாதிரி. நமக்கு இதெல்லாம் ஒத்து வருமோ? 'நீங்கள் கொடுக்க நினைப்பதை தடுக்கவில்லை; சட்டரீதியான பிரச்னைகள் எழலாம். பிறகு தணிக்கை செய்கிறேன்' என்றேன். 'த்ராட்லே மாட்டிட்டுட்டையே' என்றார், ரயில்வே நிதித்துறைத்தலைவர். காசிக்கு பக்கமோல்லியோ. அவர்கள் அதிர்ஷ்டம், இந்த அடிப்படையில் பில் போடுவதற்கு முன், எனக்கு மாற்றல் பூதம் வந்து விட்டது. ஆனால், இந்த பக்கோடாப்படிப்பு, பிற்காலம் எனக்கு உதவியது. இது நிற்க
இந்த மாதிரி காலம் தள்ளிக்கொண்டிருக்கையில், எங்கள் ஆடிட்டர் ஜெனெரல், ஏ.கே.ராய் அவர்கள் கல்கத்தா வந்தார். அருமையான மனிதர்.அவர் அந்த பார்ட்டியில், இந்த ஏறுமுகம் காண்டிராக்டுக்கள் பற்றி சரியான விளக்கம் கொடுத்தார், எனக்கு. பிற்காலம், ஒரு பயணத்தில், அவருடன் சவாரி செய்தேன்; மனிதநேயத்தின் இலக்கணத்தை கண்டேன். வேளை வந்தா சொல்றேன்.
சரி. தாம் தூம்னு க்ரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் பார்ட்டி. சந்தாவும் அதிகம் .தண்ணியும் ஆறா ஓடித்து. எனக்கும் வஸந்தாவுக்கும் இதெல்லாம் புதிசு. ஃபோட்டோக்குட எங்கயோ இருக்கு; பார்த்தேன். வெள்ளி முளைக்க, பார்ட்டியும் முடிந்தது. எனது மேலதிகாரி திரு. ஹெச்.கே.மைத்ராவுக்கு, நான் பிள்ளை மாதிரி. அவருக்காகவே தனியாக ஒரு கார் கொண்டு வந்திருந்தேன்.
"Sir, You are not driving; it is an order" என்றேன். அவாத்து மாமிக்கு ரொம்ப சந்தோஷம். இதிலே ஒரு பாயிண்ட் இருக்கு ஸ்வாமி. இது சும்மா காக்காப்பிடிக்கிறது இல்லை. அவர் என் மீது அக்கறை காண்பித்தது ஆயிரம்; நான் செய்த யதார்த்த பணீ ஒரு பின்னம். அந்தக்காலத்தில், மேலதிகாரிகள் சின்னப்பசங்களை வழி நடாத்துவதில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள்.
இன்னம்பூரான்
2010/2/18 devoo
கஜ கர்பத்திற்குக் கொசுறு கத்தரிக்காய் ஜோக் !
ஆண்டு விழாவின்போது திவாஜீ மின்னாக்கம் பற்றிக் கூறும்போது ஒவ்வொரு முறையும் பக்கத்தைப் புரட்டி வைத்து எழுந்து நின்றுகொண்டு படம் பிடிப்பதை விளக்கினார்; முட்டு வலித்தால் தடவிக்கொள்ள balm வைத்துக்கொள்ளுமாறும் விளையாட்டாக அறிவுறுத்தினார். இன்னம்பூரான் சார் மெதுவாகப் புகைப்படத்துக்கு அருகில் வந்து நின்றுகொண்டு ‘இங்கு balm bottle ஒன்றையும் காணோமே’ என்று கூறியது சிரிப்பலைகளைக் கிளப்பியது
தேவ்
On Feb 18, 6:07 am, Geetha Sambasivam wrote: > கத்தரிக்காயை விடலை, காசிக்குப் போயும்![?][?][?][?] >
> 2010/2/18 Tthamizth Tthenee
> > > காசிக்குப் போனதே இல்லையோ..? > > > அன்புடன் > > தமிழ்த்தேனீ >
> > 18-2-10 அன்று, Geetha Sambasivam எழுதினார்:
> > >> [?][?][?][?][?][?][?]எனக்குக் கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்! >
> >> 2010/2/15 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > >> 15 02 2010 ____________
இன்னம்பூரான்
11 05 2013
|
|
No comments:
Post a Comment