அப்டேட்: 07 05 2013
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார், அரசின் பிரிதிநிதியாக…’ !
~ இது நடந்த காலகட்டம்: 1963 ~ 65.
ஐம்பது வருடங்கள் கழித்து:
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார், அரசின் பிரிதிநிதியாக…’ !
ஒரு தலித் சிறுவனுக்கு சாதிச்சான்று வாங்க சில வருடங்கள் முன்னால் தாசில்தாரிடன் போனால்: அதே பிச்சை பாத்திரம்.
02. 02 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!’
நான்காவது பத்து தொடங்குகிறது, .
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார், அரசின் பிரிதிநிதியாக…’ !
மெல்ல மெல்ல, தயங்கி, தயங்கி, ஆங்காங்கே சப்பைக்கட்டுக்களுடன், கசிந்து வந்த செய்தி:
மத்திய அரசு, 'வரவு எட்டணா; செலவு பத்தணா' என்று அகலக்கால் வைக்க, அவ்வப்போது,ரிஸர்வ் வங்கியின் அறிவுரைப்படி, கடன் பத்திரங்களை அளித்து, கடன் வாங்குவது உண்டு. தகுந்த வரவேற்பு இல்லையெனில், அரசுக்கே தலைகுனிவு. மத்திய அரசு மாநில அரசுக்களை வற்புறுத்த (அது, அந்த்தக்காலம்!), அவை கலெக்டர், தாசில்தார், ஆசிரியர், கால்நடை மருத்துவர் இந்தமாதிரி, பொதுமக்களின் தேவையை நிறை செய்யும் கடமை உடையோர்களை எல்லாம், ஒரு இலக்கு (டார்ஜெட்) கொடுத்து இற்செறிக்கும்.
ஆந்திர அரசு, அவர்களின் 'இருபக்கமும் அடி வாங்கும் மத்தள நிலை' கண்டு, இரக்கத்துடன் !,ஒரு வழி வகுத்தது. அந்த அலுவலகர்கள் (சொல்லப்போனால், எல்லா அலுவலகர்களும்) வந்து போகும் விண்ணப்பதாரர்களிடம், அரசின் சார்பாக பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காசுகளை சேமித்து, தனியே வைத்து, அதிலிருந்து, கட்ன் பத்திரங்கள் வாங்குபவர்களுக்கு இன்சென்டிவ் பணம் கொடுக்கலாம். (ஏழை டு செல்வந்தன்) அதற்கு விகிதாச்சாரம் வேறு. அரசு ஆணை கிடையாது. வாய்மொழி உத்தரவு. அரசல் பரச்லாக, சில கடிதங்களில் பூடகமான குறிப்புக்கள். மானத்துக்கு மானமும் போச்சு. இப்போ,மேலாவிலேருந்து வசை வேறு கொட்டும், உங்களிடம் சொன்னதிற்காக, என்று அந்த தாசில்தார் (நல்ல மனிதன்) நொந்து கொண்டார். தன் தலை விதியை. சற்று நேரம் கழிந்த பின், 'இது வேறே! அரசுப்பணமே இல்லை. நீங்கள் யார் கேட்பது? என்று விரட்டியும் பார்த்தார். என்க்கு என்னமோ, அவர் மீது இரக்கம் தான் வந்தது. பழி தீர்ப்பது, அதுவும் நாணயஸ்தனிடம், அரசியலர்க்கு கை வந்த கலை. 'ஆமாஞ்சாமி' ஆஃபீஸர்களும் வேறே.
'சட்புட்'னு, ஒரு காரியம் செய்தேன். ஐயா, உம்மை மட்டும் இழுக்கவில்லை. ஒரு மாதத்திற்குள், மேலும் நான்கு தாசில்தார்களை வளைத்து, ஐந்து அலுவலகங்களுக்கும் ஒரே ரிப்போர்ட் அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு, மற்ற மாவட்டங்களிலிருந்து, நான்கு அலுவலகங்களைப்பொறுக்கி, ஒரே ரிப்போர்ட் தயார் செய்தோம். அது நமக்கே வசதியாகப்போய்விட்டது, இந்த 'இது வேறே' வியாதி பரவலாக உள்ளது என்று திட்டவட்டமாகச்சொல்ல முடிந்தது.
இப்படிச்சேர்த்த பணம் ஒரு லக்ஷம் ரூபாய், ஒரு கலெக்டரிடம் முடங்கிக்கிடந்தது.(அந்தக்காலத்தில் அது செல்வம்.) எங்களுடன் விதண்டாவாதம் பலநாட்களுக்குப்புரிந்த அரசு,கடைசியாக அரைமனதுடன், அந்த நிதியெல்லாவற்றையும் கஜானாவில் செலுத்த சம்மதித்தது. எவ்வளவு தூரம் கடைப்பிடித்தார்கள் என்று என்னால் சொல்ல இயலாது, மாற்றல் பூதம் காரணமாக. அது நல்ல பூதம். குஜராத் அரசு கட்டிவரும் ஒரு பெரிய அணைக்கட்டு அலுவலகத்துக்கு நிதி ஆலோசகனாக மாற்றப்பட்டேன். அங்கு தான் பல நெளிவு சுளிவுகளை அறிய வாய்ப்பு கிட்டியது. நான் செய்த பணிகளில், எனக்கு மன நிறைவைக்கொடுத்த பணி அது.
இன்னம்பூரான்
பி.கு.
1. கோயில் உண்டியில் பணம் போடும்போதோ, யாராவது உண்டியிலைக்குலுக்கி வரும்போதோ, நாம் கணக்கு கேடபதில்லை. சான்றோர்களிடம் கணக்கு கேட்காமல் இருப்பது ஒரு பண்பு என்று கூட கருதப்படுகிறது. 'காந்திக்கணக்கு' ஒரு தமிழ் சொலவடை என்றாலும், அதைப்பற்றி, அதன் இழிச்சொல் பொருளைப்பற்றி காந்திஜிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். கணக்குத்தணிக்கையில் கடுமையான விதிமுறைகளை கட்டாயப்படுத்தின அவர், தான் பெற்ற நிதிக்கு ரசீது கொடுத்ததாக தெரியவில்லை. ஆரம்பகாலத்திலேயே,ஆட்டோக்ர்ஃப் போட பத்து ரூபாய் வாங்குவார். பெண்குழந்தைகள் மாட்டிக்கொண்டால்,நகைகளை கேட்டு வாங்கிவிடுவார். ஒரு பெண்மணியிடம், ஹார்ஸ்லி மலைக்குண்றில் தங்கியிருந்தபோது, அவரது மகனை கேட்டு வாங்கிக்கொண்டார். நாம் எப்படி சுகபிரம்மரிஷி ஆடையுடுத்தவில்லை என்று கவலைப்படுவதில்ல்லையோ, அவ்வாறு காந்தியின் கணக்கு கேட்கவேன்டியதில்லை என்று அக்கால சான்றோர்கள் முடிபு செய்தனர். அது வேறு யாருக்கும், திருமலை தேவஸ்தானம் உள்பட பொருந்ததாது. இது தெரியுமோ. தினந்தோறும் காலை திருமலையில், பெருமாளுக்கு கணக்குவழக்கு சொல்லப்படுகிறது.
2. கீதா: நன்றி. நாலு பேர் படிக்கிறா என்றால் எழுத ஆர்வம். ஒரு ஸெர்வரில் எழுதி, மற்றொரு ஸெர்வரில் பதித்து, கணிணியை ஒரு வகையாக பைபாஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்து போய் விடுகிறது.. பரவாயில்லை. மின் தமிழில் பலவிஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. தெரிந்ததை எழுத முடிகிறது. தண்டியலங்காரமும், டால்ஸ்டாயும், நேற்று வந்த ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டியிருப்பதால் (quadratic equations also, for Rukmini) இனி கொஞ்சம் இடை வெளி விட்டு எழுத முடியும் போல தோன்றுகிறது, தினந்தோறும் எழுதாமல். கீதா சொல்படி கேட்டு, சற்று பின்னோக்கி, சித்தரஞ்சன் கலாட்டா பற்றி எழுதுகிறேன், பிறகு,பாதுகாப்பு அமைச்சரகம். சரியா?
3. நான்காம் பத்து, இன்று புது இழையில்.
4. உங்கள் கருத்துக்கள் என் பெட்டியில் விழவில்லை. ஏன்? தேனியார் அனுப்பிய பிறகு தான்,பார்க்கமுடிந்தது.
No comments:
Post a Comment